privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம் - வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

-

vote-012வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும்,
ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து,
நடவடிக்கை எடுக்கக் கோரி….

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
சென்னையில் 16.11.09 மாலை 4.30 மணிக்கு
மெமோரியல் ஹால் எதிரில்.

சிங்கள அரசே!
* ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதைமுகாம்களை நீக்கு!
* மக்களை தத்தம் வசிப்பிடங்களில் மீள் குடியமர்த்து!
* அவர்களுடைய விவசாயம், தொழில்களை புனரமைத்துக் கொள்ள நிதி உதவி செய்!
*ஈழத்தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

இந்திய அரசே!
* சிங்கள அரசின் தமிழின அழிப்புச்சதிக்கு துணை நிற்காதே!
* மேலாதிக்க நோக்கத்திற்காக ஈழத்தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்காதே!

ஐக்கிய நாடுகள் மன்றமே!
* ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடு!
* வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடு!

உழைக்கும் மக்களே!
* பிழைப்புவாத ஓட்டுக்கட்சிகளின் வாய்ச்சவடால்களையும், கருணாநிதி அரசின் கபட நாடகத்தையும் முறியடிப்போம்!
* ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் வரை போராடுவோம்!

———————————————————————

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 94446 48879
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – 94451 12675
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 94448 34519
பெண்கள் விடுதலை முன்னணி

—————————————————————–

தொடர்புக்கு: அ. முகுந்தன், 110, இரண்டாவது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24

  1. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,  பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் எங்களின் உறவுகளுக்காய் குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி. 
    அரசியல் மற்றும் ஆதிக்க வர்க்கத்தின் எந்த இடையூறும், திட்டமிடப்பட்ட கைதுகள் ஏதுமின்றி உங்கள் நிகழ்வுகள் வெற்றிபெற வாழ்த்துகள். கருணாநிதியின் கேவலமான அரசியல் நாடகங்களால் வெருப்பெறிப் போய் இருந்த எனக்கு இது சற்றே ஆறுதலாய் உள்ளது. எல்லோரும் உங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வதைமுகாமில் அல்லற்படும் எங்கள் உறவுகளுக்காய் முடிந்தவரை குரல் கொடுங்கள். இது அறிவுரை அல்ல. ஓர் ஈழத்தமிழரின் வேண்டுகோள். மீண்டும் என் நன்றிகள். 

  2. ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி அல்ல. இந்திய அரசே போர்க்குற்றவாளி. ராஜபக்சே அரசு வெறும் அம்புதான். இருந்தும் ஈழத்தமிழருக்காக போராட தமிழகத்தில் தமிழர்கள் ஒன்றுசேர்வதை அறிய மனதுக்கு ஆறுதலாகஉள்ளது. திருமாவளவன் என்றொரு போராட்டவீரன் இருந்ததாக பத்திரிகைகளில் படித்தேன் இப்போ அவர் எங்குள்ளார்.

  3. கருணை பொங்கும் உள்ளங்களுக்கும் ,கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும் நன்றிகள்!-ஈழ தமிழர் சார்பில்.

  4. வினவு,

    //* ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் வரை போராடுவோம்!//

    உங்கள் மனிதாபிமான எல்லை குறுகியதாக இருக்கிறதே. இதைத் தவிர மற்ற வரிகள் நீங்கள் இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையை பற்றியது. அதோடு உங்கள் போரட்டம் ஓய்ந்துவிடுமா.

    அப்படி என்றால் அவர்கள் சம உரிமைக்கான போராட்டம். அதிர்ச்சியாக இருக்கிறது. ஈழமா இல்லையா என்பது இருக்கட்டும். அவர்களுக்க்கு சம உரிமை வரையாவது ஒரு பாதி தூரம் கூட வரை மாட்டீர்களா.

    அதிர்ச்சி, ????, !!!!!!!!!!!!

    • குசேலன், குழந்தை, புலிகேசி ஓரே பெயரில் வந்து விவாதிக்கவும். அதுதான் உரையாடலுக்கு உதவியாக இருக்கும்.

      • உங்களுக்கு பெயர் பிரச்சனை, எனக்கு கருத்து மட்டுமே பிரச்சனை. வினவும் பல்வேறு பெயர்களில் விவாதிப்பதை தவிர்த்தால் பல்வேறு பெயர்களில் நான் விவாதிப்பதை தவிர்க்கலாம்.

        எப்படி இருந்தாலும் இது ஆட்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மோதும் இடம் அல்ல. இது கருத்துக்கள் மோதி ஒரு சரியான கருத்தினை வந்தடைய வாய்ப்பான இடமாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கு கருத்து பிரச்சனையா இல்லை பெயர் பிரச்சனையா.

        இந்த தளத்தில் மொத்தம் எத்தனை பெயரில் என் பெயரில் வந்திருக்கிறது என்பதல்ல பிரச்சனை. இதில் எந்த கருத்து தவறான கருத்து என்பதே தீர்க்கப்படவேண்டியது.

        வினவு என்றில்லாமல் வெவ்வேறு பெயர்களை நீங்கள் கையாளும் போது நாமும் தொடர்வோம் இன்னும் புதுப்புது பெயர்களில் கூட.

        • புலிகேசி, இவ்வளவு நியாயப் பேசும் நீங்கள் ஒரே பெயரில் வந்து தைரியமாக பேசவேண்டியதுதானே, அதற்கு பதில் புனைவு பெயர்களில் மறைந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? அடுத்து இந்த பல அவதார நோயை வினவின் மீதும் சுமத்துகிறீர்கள். வினவு அதன் பெயரிலேயே கருத்து சொல்லி வருகிறது. இந்த ஆள்மாறாட்ட நாடகங்கள் எங்களிடம் இல்லை. முதலில் அடையாளத்தை நேர்மையாக முன்வையுங்கள், விவாதத்தை அப்புறம் பார்க்கலாம்.

        • நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர் போலும்,
          ஐயா வினவு என்ற பெயர் மட்டும் இல்லை, ஏகப்பட்ட பெயரில் பதிலலளிக்கிறீர்கள். அதில் வினவும் ஒரு பெயர். அது போல் இது ஒன்று என் பெயர். என்ன இருக்கிறது. உங்களுக்கு பிரச்சனை உங்கள் கருத்து சரியா தப்பா என்பதல்ல. அடுத்தவனை எப்படி குறைசொல்லலாம் என்பது புரியாமல் வருத்தப்படுகிறீர்கள்.

          நானும் ஒரு ஜனநாயக பிரதிநிதித்தான். இதில் நான் ஒன்றும் உங்கள் பெயரில் ஆள் மாறாட்டம் செய்யவில்லையே. இல்லை எத்தனையோ போராளிகளின் பெயரில் நான் தான் அது என்று ஆள்மாறாட்டம் செய்யவில்லையே. என் பெயர் இது வரையில் வினவில் வந்ததில் ஒரு பெயர். அவ்வளவே. ஒரு புதிய நபராக அறிமுகமாகிறேன்.

          என்ன அடையாளம். நீங்கள் திட்டக் கூடிய நபராக ஒரு இந்து என்று வைக்கவேண்டுமா, இல்லை பார்ப்பனர் என்று வைக்கவேண்டுமா, இல்லை தமிழன் என்று வைக்கவேண்டுமா, இல்லை நானும் (உங்கள் மொழியில் போலி கம்யூனிஸ்டு) கம்யூனிஸ்டு என்று வைக்கவேண்டுமா உங்களுக்கு இது எது பிடித்திருக்கிறதோ அந்த அடையாளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

          இது வரையில் விவாதம் என்பது பெயர் கொடுத்துவிட்டுதான் வரவேண்டும் என்று வினவில் முதலிலேயே குறிப்பிட்டிருந்தால் அப்படியே பங்கேற்றிருப்பேன். அப்படி எதுவும் இல்லாததால் இது கருத்தை விவாதிக்கும் தளமாக கருதி உள்ளே நுழைந்தேன்.

          ஏதோ ஒரு அடையாளம் இருந்தால் மட்டுமே எனக்கு கருத்தை வைக்க உரிமை உள்ளது என்று நினைத்தால் கூறிவிடுங்கள். எனக்கு வாய்ப்பிருந்தால் எனக்கொரு அடையாளத்தை சூட்டிக்கொண்டு வருகிறேன்.

          என் கருத்தை விமர்சனம் படுத்த எந்தப் பெயரை பயன்படுத்தினீர்கள் என்பதை நான் பார்க்கவில்லை. அது சரியான கருத்தா என்று எனக்கு அறிந்தவரையில் நான் விவாதித்தேன். அவ்வளவே. என் கருத்தையும் நீஙக்ள் விமர்சனப்படுத்தியிருக்கிறீர்கள் அதற்காக நான் பதிலளித்தேனே தவிர உங்கள் பெயர் புனைப்பெயராக இருக்கிறதே என்று சொல்லவில்லை. எனக்கு பல்வேறு பெயரில் பதிலளித்துள்ளீர்கள் அதற்காக வருத்தப்படவில்லை. எந்தப் பெயரில் சொன்னாலும் உண்மை எது மக்களுக்கானது எது என்பதுதான் பிரச்சனை. மற்றது எனக்கு தேவையில்லாதது. உங்களுக்கு ஏற்கெனவே ஒரு வரையரை வைத்துக்கொண்டு அதாவது இந்து என்றால் இந்த பதில், முஸ்லீம் என்றால் இந்த பதில், பார்ப்பன சாதி என்றால் இந்த பதில், தாழ்த்தப்பட்டவன் என்றால் இந்த பதில் திமுக என்றால் இந்தபதில் சிபிஎம் என்றால் இந்த பதில் தமிழன் என்றால் இந்த பதில், மலையாளி என்றால் இந்த பதில் என்று வெவ்வேறு பதில் வைத்திருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது என் விருப்பமில்லா அடையாளத்தை சொல்லலாம். இல்லையென்றால் என்னைப் பொருத்தவரையில் உண்மை எது சரியானது எது என்பதை விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

          உங்கள் கருத்தை இப்போது கூறும்.

          • புலிகேசி, பலபெயர்களில் வந்து ஒரு கருத்துக்கு பலர் ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்துவது மலிவான தந்திரம் என்பதை ஏற்றுங்கொள்ளுங்கள். இதையே முன்னர் நெத்தியடியும் செய்தார். அதனால்தான் இருவரும் வினவுக்கு ஆதரவாக பேசும் நண்பர்களை வினவு என்று அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள். வினவின் பெயரில் பின்னூட்டமிடுவதற்கே எங்களுக்கு நேரமில்லாத போது புனைபெயர்கள் சாத்தியமே இல்லை. இதை பலமுறை விளக்கியும் முயலுக்கு மூணுகாலென்று வம்படியாக அவதூறு செய்கீறீர்கள். அடுத்து உங்கள் வாதத்தில் ஒரு சுய முரண்பாடு உள்ளது. வினவு பல பெயர்களில் வந்து உங்கள் கேள்விக்கு பதிலிளிப்பதாக அவதூறு செய்யும் நீங்கள் உங்கள் வாதப்படியே அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திரும்ப வினவு தனியாக பதிலளிக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? கருத்துக்கு பதில் வந்து விட்டது என்று எடுத்துக்கொண்டு விவாதிக்கவேண்டியதுதானே? எனவே வினவு பலபெயர்களில் பதிலளிக்கிறது என்ற உங்களது பொய்யை முதலில் ஒத்துக்கொண்டால்தான் விவாதிக்க முடியும்.

            • இந்த பகுதியில் வந்து பதிலளிக்க நேரமிருக்கும் பிழைப்புவாத வினவுக்கு என்னுடைய கேள்விக்கு பதிலளிக்க நேரமில்லையா அல்லது பதில் சொல்வதற்கான சரக்கு இல்லையா அல்லது ‘கார்ப்பறேட்டுகளின் காலில் சரணடைந்த கம்யூனிசம்’ கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறதா வினவு?

              • பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாமிற்கு வக்காலத்து வாங்கும் மேலூரு சாசகானே நீர் இசுலாமையும் இந்து மதத்தையும் ஒன்றாக வைத்து கேள்விகேட்டால் பதில் சொல்ல முடியும். இசுலாமும் கம்யூனிசமும் ஒன்று போல உளரினால் அதற்கு பதில் சொல்லி உளரலை யாராவுது அங்கீகரிக்க முடியுமா?

            • Dear Mr.VINAVU,
              அப்புறம் இப்போது உங்கள் லேட்டஸ்ட் “பார்ப்பனீயத்தில் சரணடைந்த…”-வில், எதற்காக, அப்துல் என்பவர் அஸீஸ் என்ற பெயரிலும், எழுதவே என் கை கூசும் ஒரு அசிங்கமான பெயரிலும் வருவோரை எல்லாம் ஏன் தாங்கள் குறை கூறவில்லை? அவர்கள் எனக்கு எதிராய் தங்கள் குப்பைகளை கொட்டுவதால்தானே, மவுனசாட்சியாக இருக்கிறீர்கள், திரு.வினவு? வாழ்க வினவிசம் -வினவிஷம்.

              • யோவ் நெத்தியடி , வினவுக்கு சைட்டு நடத்த கிளால் எடுக்கும் நீரு சாதி பாக்குற இசுலாமியருக்கு எதிரா என்னாத்த புடுங்குறீருன்னு தீடீருன்னு யாருன்னா கேட்டுப்புட போறாங்க

        • களத்தில் எங்கேயும் இந்த ம.க.இ.கவினர் தொல்லையென்றால் இணையத்திலுமா? என பலருக்கு பொச்செரிச்சல்… என்ன செய்ய ஊசிப்போன அரசியல் தத்துவங்களை வைத்திருந்தால் புதியவர்களை எங்கே சேர்ப்பது? அதான் இங்கே வந்து வினவு பல பெயரில் எழுதுகிறது என்ற புலம்பல்…… குசேலன் என்கிற புலிகேசி என்கிற அநாமதேயமே இங்கே வந்து ஜல்லியடிக்கும் நேரத்தில் களத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவாக இரண்டு பேரை வென்றெடுங்கள்.

        • ஆனால் ஒன்று இந்த குசேலன் என்கிற புலிகேசி என்கிற குழந்தைக்கு நெத்தியடி தேவலாம். அவருக்கு தான் ஒரு இசுலாமிய பிற்போக்காளர் என்று சொல்க்கொள்ளும் அளவுக்்காவது துணிவு இருக்கிறது. இந்த குசேலன் என்கிற புலிகேசி என்கிற குழந்தைக்கு அந்த துணிவு கூட இல்லை. தூரத்திலிருந்து கல்லெறிந்து விட்டு பின்னங்கால் பிடறியில் பட ஓடும் கோழை போன்ற நடைமுறையை கொண்ட இவரிடம் எதாவது அரசியல் சார்போ கொள்கையோ இருக்குமா என்பது சந்தேகமே… இதை அவரே எழுதினால் அவர் பிரச்சனையை தீர்க்கலாம்

    • யோவ் அநாமதேயம் இந்த போராட்டத்தை நொட்டை சொல்லும் நீ ஈழத்துக்கு இதுவரைக்கும் என்னய்யா புடுங்குன?

  5. அகதியாக இருந்தும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் போராட்டம் வெற்றி பெறவும் ஈழத் தமிழர்களின் எதிர்கால போராட்ட வரலாறு சரியான முன்னகர்தலை ஏற்படுத்தவும் அமையட்டும்.

  6. வினவு குழுவினர்க்கு,

    உங்கள் கோரிக்கைகளுடன் ‘தனித் தமிழீழத்தை அங்கீகரி’ அல்லது ‘உலகத் தமிழர்களிடம் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து’ எனக் கோரி சிங்கள பேரினவாத அரசை இலங்கையில் வாழும் உழைக்கும் மக்களிடமும், இந்திய வல்லாதிக்க அரசை தமிழகம் மற்றும் பிற மாநிலத்திலும், இரட்டை வேடம் போடும் ஐ நா மன்றத்தை புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் வலியுறுத்தக் கோரும் கோரிக்கையையும் சேர்த்துக் கொள்ளலாமே…

    • குசேலன், குழந்தை, புலிகேசி – in what ever name he came, that is not a problem for vinavu.(he came like this in many occasions before but not against vinavu’s basics) The real problem now is, NO ANSWER FOR HIS QUESTIONS.

      If my opinion is correct, YOUR REQUESTS against vinavu also, WILL BE REJECTED.

      Hope vinavu will change my opinion by accepting your requests and prove குசேலன், குழந்தை, புலிகேசி complaints wrong.

      ///வினவும் பல்வேறு பெயர்களில் விவாதிப்பதை தவிர்த்தால்…. : புலிகேசி /// — I have also the same doubt.

      • சுயமோகமது இன்னொரு அநாமதேயத்துக்கு வக்காலத்தா பலே பலே… ஏன்யா அறிவாளிகளா… உங்க கேள்வியை புறக்கணிக்கணுமின்னா அத பிரசுரமே பண்ணாம டெலிட் செய்யலாமே… நாயம் பேசுர நாட்டாமைங்க நேர்மையா ஒரு பேருல வந்து பேசுன்னு சொன்னா ‘நாங்க எந்த பேருல வந்தா என்ன நீ பதில் சொல்லுன்னு’ ரூல்சு போடுறீங்க… எதுக்கு தனியா பல டிராக்கு ஓட்டவா… அந்த கதையெல்லாம் இங்க பலிக்காது. முடிஞ்சா ஒரு பேருலவந்து பேசுங்க இல்லன்னா டப்பாவ சாத்திகிட்டு நடைய கட்டுங்க.

        • Ok…Ok…don’t get BP. You can answer, for Lenin’s requests. Is it not?

          Also, read, ///Hope vinavu will change my opinion by accepting your requests and prove குசேலன், குழந்தை, புலிகேசி complaints wrong.///

    • தோழரே லெனின் இதுபோன்ற இயக்கங்கள் மையமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதுதான் ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் நடைமுறை. உங்கள் ்கருத்தை அவர்கள் பரிசீலிப்பார்கள் என நம்புகிறேன், மற்றபடி நீங்கள் சென்னையிலிருந்தால் ஆர்பாட்டத்தில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

      • நிச்சயம் தோழரே,

        தமிழக மக்கள் ஒரு கட்டத்தில் ஒரு பிரச்னையை அப்படியே மறந்து விடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்குள்ள கருணா மற்றும் அவரின் ஆட்கள் தமிழகம் முழுதும் இலவச தொலைகாட்சி மூலம் இலங்கையில் அமைதியான சூழல் நிலவுகிறது, முகாமிலிருந்து மக்கள் சொந்த இடங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர் என அப்பட்டமான பொய்களை மக்களிடம் திணிக்கின்றனர். தமிழகச் சூழல் இப்படியிருக்க இப்படிப்பட்ட போராட்டங்கள் காலத்தின் கட்டாயமாகிறது.

        போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்.

    • தோழர் லெனின்,

      நாங்கள் எப்போதும் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்தே இயக்கங்கள் எடுக்கிறோம். மற்றவர்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கையாக அரசியல் செய்து வரும் சூழ்நிலையில் குறிப்பான அரசியல் முழக்கங்களை வைத்தே எடுத்துக்காட்டாக இந்தியாவின் மேலாதிக்க வெறியைக் கண்டித்து பிரச்சாரம் செய்கிறோம். தனி ஈழம் வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உரிமைதான் சுயநிர்ணய உரிமை. எமது எல்லாப் போராட்டங்களிலும் இந்த முழக்கம் நிச்சயம் உண்டு. இப்போது வதை முகாம்களை மையப்படுத்தி மக்களை விடுவிக்கும் நோக்கில் இங்கே மைய முழக்கங்கள் வைக்கப்படுகின்றன. மற்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின்போது முழங்கப்படும்.

  7. தங்களின் இந்த அழைப்பு தமிழ் ஜேர்னல் இணையத்தில் (tamiljournal.com)பதிவிடப்பட்டுள்ளது.

    செய்திப்பிரிவு சார்பாக

    தோழமையுடன்
    மொழிவேந்தன்

  8. இன்றைய நிலமையில் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு போட்டுள்ள தடையை நீக்கினால் அன்றி சிறீலங்கா தமிழினத்தை அழித்துவருவதை எவராலும் நிறுத்த முடியாது. சிறீலங்கா அரசபடைகளால் அழிக்கப்படும் மக்கள் அனைவரையுமே விடுதலைப் புலிகளாக அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களாக உலகத்திற்கு காட்டி தனது இன அழிப்பை இன்றும் நியாயப்படுத்தி வருகிறது. இந்திய அரசு தடையை நீக்கினால்
    ஏனைய நாடுகளில் செய்யக்கூடிய சிறியபோராட்டம் தடைகளை முடிவிற்கு கொண்டுவரும். மற்ற எல்லா கோரிக்கைகளையும் விட இந்த ஒரு கோரிக்கையை மட்டும் வைத்து போராடி அது வெற்றிபெறுமாக இருந்தால் தமிழின அழிப்பை நடாத்தமுடியாத நிலமைக்கு சிறீலங்கா அரசு தள்ளப்படும். முள்வேலிகளை நீடிக்கமுடியாத நிலைஏற்படும். இதனை செய்யக்கூடிய சக்தி ஈழத்தமிழர், புலம்பெயர்தமிழரிடம் இல்லை. இந்தியத் தமிழர் கைகளிலேயே உள்ளது.

    இங்கு கருத்தெழுதி போராடுவதை விட்டு தமிழன் உலகில் நிலைத்திருக்க போராடுங்கள்.

  9. நெத்தியடி முஹம்மத், புலிகேசி,

    Dear brothers you two may have conflicting issues with Vinavu but I believe this is not the page to discuss that. I am an Eezham Tamil and a vinavu reader as well. I would love to see comments/opinion pertinent to this post only.  Please, try not to distract or mislead the readers and those who may want to participate in this rally. I know you would understand the pain and agony of Eezham Tamils. Thanks. 

    • // //* ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் வரை போராடுவோம்!//

      உங்கள் மனிதாபிமான எல்லை குறுகியதாக இருக்கிறதே. இதைத் தவிர மற்ற வரிகள் நீங்கள் இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையை பற்றியது. அதோடு உங்கள் போரட்டம் ஓய்ந்துவிடுமா.

      அப்படி என்றால் அவர்கள் சம உரிமைக்கான போராட்டம். அதிர்ச்சியாக இருக்கிறது. ஈழமா இல்லையா என்பது இருக்கட்டும். அவர்களுக்க்கு சம உரிமை வரையாவது ஒரு பாதி தூரம் கூட வரை மாட்டீர்களா. //

      இதுதான் நான் முதலில் குறிப்பிட்ட வாசகம். இன்றுள்ள பிரச்சனைக்கு முழக்கம் வைத்து விட்டீர்கள் ஆனால் ஒரு நீண்ட கால பிரச்சனை ஈழத்தின் அடிப்படை பிரச்சனையே இனப் பாகுபாடுதான். அதாவது அவர்களுக்கான சம உரிமயை பெறும்வரையாவது அவர்களுடன் தோளோடு தோள்நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
      அவர்கள் வாழ்க்கை தொடங்கும் வரை என்பதைவிட சம உரிமை பெறும் வரை வைக்கலாமே என்பது என் கருத்து.
      உண்மையில் அவர்கள் அந்த விவாதத்திற்கு பதிலளித்திருந்தால், இல்லை இன்று இதுவே சரியானது என்றோ அல்லது கவனத்தில் கொள்கிறோம் என்றோ கூறி பிரச்சனையை மையப்படுத்தியிருக்க வேண்டும்.

      ஆனால் அப்படி கூறாமல் இந்தப்பேரில் வந்தீர்கள் அந்தப் பெயரில் வந்தீர்கள் என்றால் ஏன் பெயரை வைத்து விவாதிக்கிறீர்கள் அதில் உடன்பாடு இல்லையா என்பதையே கேட்டேன். பிரச்சனையை தேவையில்லாமல் விவாதிக்க வேண்டாம். மையக் கருத்தை விட்டு விலக வேண்டாம் என்பதே எனது கோரிக்கை.

      உங்களுடைய & இன்று உள்ளே பாசிச பேய்களிடம் மாட்டிக் கொண்ட மக்களின் வலியை அறிந்ததால்தான் அந்த ஆதங்கத்தோடு என் கருத்தை பதிவு செய்தேன். மற்றப்படி இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அதே நேரத்தில் அதை பொழுது போக்கின் அடிப்படையிலும் நான் விவாதிக்கவில்லை.

      மேற்கண்ட எனது வரிதான் எனது தொடக்கமே தவிர வேறு எந்த விசயமும் நானாக விவாதிக்கவில்லை. ஆனால் ஒன்று ஈழமக்களை பாதிக்கும் என்பதாக இருந்தால், ஒரு விசயத்திற்கு வருந்துகிறே, அதாவது அவர்கள் அதை வேறுமாதிரியான விவாதமாக மாற்றும் பொழுது அதற்கு எதற்குமே விடையளிக்காமல் வெளியேறி இருக்கவேண்டும். அவர்கள் போலே நானும் இருந்திருக்கக் கூடாது என்பதற்காக வருந்துகிறேன்.

      மன்னிக்கவும்.

      • //மையக் கருத்தை விட்டு விலக வேண்டாம் என்பதே எனது கோரிக்கை.//

        உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உங்களுடம் விவாதிக்க்வேண்டுமென்றால் நீங்கள் ஒரு பெயரிலேயே வந்து பின்னூட்டமிடுங்கள் என்பது வினவின் கோரிக்கை. அப்பொழுதுதானே வாசகர்களுக்கும் ஒரு நிறைவான விவாத்தை வாசிக்க முடியும். திடீர் திடீரென பெயர்மாற்றி விவாதித்தால் வாசகர்கள் குழம்பமாட்டார்களா? இல்லை குழப்புவதுதான் உங்கள் இலக்கா?

        உங்கள் இலக்கு என்பது வினவு தனிஈழத்துக்கும், ஈழவிடுதலைக்கான போராட்டத்துக்கு எதிரானது என்ற பொய்யை எப்படியாவது உண்மையாக மாற்றவது. அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த புலம்பல் 🙁

  10. //அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திரும்ப வினவு தனியாக பதிலளிக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? கருத்துக்கு பதில் வந்து விட்டது என்று எடுத்துக்கொண்டு விவாதிக்கவேண்டியதுதானே?//

    நான் எதிர்பார்க்கவில்லை. விவாதம்தான் செய்தேன். ஆனால் நீங்கள்தான் பெயரே பிரச்சனையாக இருப்பதாக ஃபீல் பன்றீங்க. கருத்தை அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டீர்கள். இப்பொழுது என்ன விசயத்தை எடுத்தீர்களோ அதைப் பற்றி எந்த விவாதமும் அடுத்தடுத்து வரும் விமர்சனங்களில் இல்லை.

    நான் வழித்தவறியவன் என்றே வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் பிரச்சனையை விவாதிப்பதுதான் உங்களுக்கு அழகு. மீண்டும் பிரச்சனையை விவாதிப்போம். விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வழியை நீங்கள் போங்கள். உங்களுடன் விவாதிக்க விருப்பமில்லை என்பதை சொல்லிவிடுங்கள். அதுதான் முதல் ஒழுங்கு. பெயரை மூட்டை கட்டி வையுங்கள்.

    //புலிகேசி, பலபெயர்களில் வந்து ஒரு கருத்துக்கு பலர் ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்துவது மலிவான தந்திரம் என்பதை ஏற்றுங்கொள்ளுங்கள்//

    ஒரு கட்டுரையில் ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்துவேன். பலப்பெயர்களை பயன்படுத்தும் சின்னபுள்ள விளையாட்டு எனக்குத் தெரியாது. எனக்கு மெஜரிட்டி மைனாரிட்டி என்ற விவாதம் உடன்பாடு இல்லை. ஏனென்றால் கருத்து விவாதத்திற்கு மைனாரிட்டி மெஜாரிட்டி எல்லாம் கிடையாது. நானும் அது போன்ற எந்த விசயத்தையும் என் விவாதத்தில் எங்காவது பயன்படுத்தி இருக்கிறானா என்பதை சுட்டிக்காட்டலாம். அப்படி ஒரு பயம் தேவையில்லை. நீங்கள் கம்யூனிஸ்ட். ஒருவர் உண்மையை வைத்திருந்தாலும் அதை எப்படி மக்களை ஏற்க வைப்பது என்றுதான் யோசிப்பார்கள். ஒரு கட்டுரைக்கு ஒரு பெயரே போதுமானது. இதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம்.

    நீங்கள் சொல்லும் பெயரெல்லாம் வேறுவேறு கட்டுரைகளில் பயன்படுத்தியதுதான். இந்தக் கட்டுரையில் மட்டுமே பயன்படுத்தியது அல்ல.

    //எனவே வினவு பலபெயர்களில் பதிலளிக்கிறது என்ற உங்களது பொய்யை முதலில் ஒத்துக்கொண்டால்தான் விவாதிக்க முடியும்.//

    வினவு, கேள்விக்குறி என்று இதே கட்டுரையில் இரண்டு பெயர்களில் பதிலளிக்கிறீர்கள் என்று படிப்பவர்களுக்கே புரிந்துகொள்ள முடியும். இதைவிட வேறு ஆதாரம் தேவையா. ஆனால் அது என் குற்றச்சாட்டு இல்லை. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என்ன கருத்து முன்மொழிகிறீர்கள் என்பதுதான் பிரச்சனை. சரியானதை வரவேற்பேன். ஆனால் தெளிவில்லாததை பலதடவை கேட்டுக்கொண்டே இருப்பேன், இனிமேல் வினவு உங்களிடம் விவாதிக்க தயாரில்லை என்பது வரையில்.

    • /// வினவு, கேள்விக்குறி என்று இதே கட்டுரையில் இரண்டு பெயர்களில் பதிலளிக்கிறீர்கள் என்று படிப்பவர்களுக்கே புரிந்துகொள்ள முடியும். ///

      இப்ப நான் இல்லேன்னு சொன்னா நீங்க என்ன சொல்வீங்க ‘ இல்லேன்னு நிரூபிக்க’ சொல்லுவீங்க… நான் ஏன்யா நிருபிக்கனும் குத்தம் சொன்ன நீங்கதானே நிரூபிக்குனுமின்னா ஒத்துக்க மாட்டீங்க… இந்த வடிவேலு விளாட்டுக்கு நான் வரல…

      இருந்தாலும் என்னுடைய குரல் மட்டுமல்ல முதல் தலைமுறை, மணி உள்ளிட்ட தோழர்களின் குரலும் உங்களுக்கு வினவின் குரலாகத்தான் ஒலித்திருக்கும். இது எங்கள் அமைப்பின். அரசியிலின் வெற்றி. உண்மையான கம்யூனிஸ்டுகளின் குரல் வேறுவேறாக ஒலிப்பதில்லை….. உங்கள் அவதூறு / பாராட்டுக்கு நன்றி

      • //இருந்தாலும் என்னுடைய குரல் மட்டுமல்ல முதல் தலைமுறை, மணி உள்ளிட்ட தோழர்களின் குரலும் உங்களுக்கு வினவின் குரலாகத்தான் ஒலித்திருக்கும். இது எங்கள் அமைப்பின். அரசியிலின் வெற்றி. உண்மையான கம்யூனிஸ்டுகளின் குரல் வேறுவேறாக ஒலிப்பதில்லை//

        நல்ல அரசியல். அனைவருமே நாங்கள் பிரச்சனையை பேசமாட்டோம். பிரச்சனைக்கு சம்பந்தமில்லாமல் அனைவருமே பேசுவோம் எழுதுவோம். இந்த கட்டுரையில் எதை விளக்க வந்தீர்களோ அதை தவிர வேறு எதை வேண்டுமானாலும் விளக்குவீர்கள். அதில் எல்லோருமே அப்படித்தான் என்று சொன்னதற்கு நன்றி.
        தொடர்க உங்கள் நபர்கள் மட்டுமே எழுதும் கருத்துப் போராட்டம். இனி பிரியோஜனம் இல்லை.
        //இந்த வடிவேலு விளாட்டுக்கு நான் வரல…//
        இனி நான் என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பலை. ஏன் என்றால் இதில் எல்லாம் கருத்து பறிமாற்றம் காண முடியாது. இதில் ஆரோகியமான விவாதமும் நடத்த முடியாது. விவாதத்திற்கு பதில் கொடுக்கும் பழக்கம் கிடையாது. அதை விடுத்து சம்பந்தம் இல்லாமல் பதில் தொடங்குவீர்கள். இதில் நாங்கள் எல்லோரும் அப்படித்தான் என்பீர்கள்.

        ஓ ஓ இதுதான் அரசியலோ!!!!!!!???????????

        இந்த அரசியல் எனக்கு வேண்டாம். இனி எந்த பெயரிலும் வரமேட்டேன் பயப்பட வேண்டாம். உங்கள் புனித யாத்திரையை தொடங்குங்கள்.

        • உங்களைப்போன்ற கழிவுகளெல்லாம் இங்கு நடக்கும் விவாதங்களின் ஓட்டத்தை தடுக்காமல் அடைப்பெடுக்கும் வேலைக்கு என்னாலான பங்களிப்பு செலுத்தியதில் மகிழ்ச்சி.

          சுழ்ச்சி செய்து விவாதத்தில் என்னாளும் முன்னேற முடியாது. அரசியல் நேர்மை தேவை.. அந்த பாடத்தை நீங்கள் கற்றுக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி. இல்லை Tecan அருகில் நீங்கள் எப்போதும் அமர வேண்டியிருக்கும்

  11. Dear Mr.VINAVU,
    “ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி” …..என்ற தங்களின் முந்தய ஒரு பதிவில், இந்த “குசேலன், குழந்தை, புலிகேசி” என்ன செய்தார்?
    Ramesh, ss for christ, kumar, thongadurai, suna pana, unmai, தொங்கதுறை, பாயாசம் என இத்தனை பெயர்களில் வந்து உங்களுக்கு ஆதரவுடன் அல்லது தங்கள் கொள்கைக்கு மாறான கருத்தில் பின்னூட்டம் இடாததாலும், உங்கள் பதிவை எதிர்த்த RV போன்ற பிறரையும் தாளிச்சு எடுத்ததாலும் நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு மௌன சாட்சியாக இருந்தீர்கள்.

    இடையில், “மெயில் ஐடி எழுதாவிட்டால் மட்டுறுத்தலுக்காக தாமதம் ஆகிவிடாமல் இருக்க, ஒருமுறை தொங்கதுரைக்கு ஐடியை மறக்காமல் எழுதுமாறு” அறிவுறைவேறு நீங்கள் -வினவு- கொடுத்தீர்கள். அப்படியெல்லாம் பாலும் பழமும் தேனும் குழைத்து உங்களால் ஊட்டிவளர்த்தபிள்ளை தான் இன்று “குசேலன், குழந்தை, புலிகேசி” என்று வந்து கேள்வி கேட்கிறது. அந்த கேள்விகள் தங்களை ஆழ்ந்த தர்மசங்கடங்களுக்கு ஆளாக்கியதால் “ஒரே பெயரில் வரவேண்டும்” என்ற அறிவுரை.

    அப்படியென்றால், அன்று RV போன்றவர்கள் இளிச்சவாயர்களா?
    உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம். இதுதான் வினவிசம்.

    ஒன்று, உங்களுக்கும் எல்லாருக்கும் எல்லா நிலையிலும் ஒரே அளவுகோலை பயன் படுத்துங்கள். இல்லையேல், தொடர்ந்து மௌனசாட்சியாய் இருந்து விடுங்கள். இவ்விஷயத்தில் இரட்டை வேஷம் வேண்டாம், திரு.வினவு.

    • நெத்தியடி சுயமோகம்மது நீர் ஒரு டுபாக்கூர் அப்படினின்னு எத்தன வாட்டி நிரூபிப்பீரு… நீரே போயி ஈமெயில் ஐடி குடுக்காம ஒரு பின்னூட்டம் போட்டு பாரும் உங்களுக்கும் அதே படம்தான் வரும். என்னமோ பெரீரீரீரீரீசா கண்டு பிடிச்சிட்டமாதிரி பீத்திக்கிரீரே… சுத்த காமேடிய்யா உம்மோட!

      • யோவ், தற்குறி. இப்ப என்ன ஆச்சுன்னு இந்த குதி குதிக்கிறீரு? உமக்கு தெரிஞ்ச ஒரு கோல்மால் எனக்கு தெரியல. ஆனாலும், வினவு செய்த தப்பு சரியாயிடுமா? நானே சாட்சி அதற்கு. உ.போ.ஒ. கமலுக்கு எதிராய் நான் இட்ட கருத்துகள் தேவைப்பட்டது, வினவுக்கு. அதுனால, ஒன்றுக்கு மேற்பட்ட பெயரில் வந்தாலும் வாய மூடிக்கிட்டு இருந்தீக. அனால், திருப்பதி எழுமளையானில் என் கருத்து உங்களுக்கு எதிராய் இருக்கவும், உடனே நீங்கள் “ஏன் தனி ஆவர்த்தனம்” என்று எகிறி குதித்தீர்கள். இதுதான் உங்கள் இரட்டை வேஷ லட்சணம். இப்ப வெடிங்கய்யா உங்க பட்டாசை. கேவலமா இருக்கு.

        • சுய்மோகம்மது நீர் ஆள்மாறாட்டம் செஞ்சது வினவுவோட தப்பில்லை, உம்மோட தப்பு. நீர் அகமதியா கட்டுரையிலேயே பல வந்து பெயர்களில் வினவை திட்டினீர்களே அதை கூடத்தான் வினவு அப்போ எழுதவில்லை. அதை மட்டும் வசதியாக மறந்து போய் உ.பொ.ஒ வை பற்றி பேசுகிற உங்கள் நேர்மை(?) புல்லரிக்க வைக்கிறது. மூடீகிட்டு போங்கய்யா…வந்துட்டாங்க சர்டிபோகேட்டு தூக்கிகினு.

    • வின்வை மட்டம் தட்ட நெத்தியடி எடுக்கும் முயற்சி ஒவ்வென்றும் படுதோல்லவி…. அய்யகோ!!!!!!!!!!!!!!!!!!

  12. தமிழன் என்ற நெடுமரத்தில் படர்ந்திருக்கும் குருவிச்சைகளையும் ஒட்டுண்ணிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்ட உதவிய வினவுக்கு நன்றி.

  13.  புதுச்சேரி பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்திற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களை வழிப்பறி செய்வதாகவும் அதற்கு தானே சாட்சி என்றும் கூறி சுமார் 4 மணிநேரம் காவலில் வைத்து விடுவித்தான் ஒரு லைசன்சு வாங்கிய ரவுடி. 

  14. இசுலாமியர்கள் பலர் தம் ம்தமே முற்போக்கானது எனக் கருதுகின்றனர் அதில் நெ முகமதுவும் ஒருவர் அவ்வளவே

  15. புதிய ஜனநாயகம், தேசிய இன பிரச்சனையில் மார்க்சியத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க