privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.

உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 10

vote-012நான் வீடு என்கிற மிகச்சிறிய வட்டத்திற்குள் இருந்து சற்றே இணையத்தின் மூலம் வெளியுலகை கவனிப்பவள். பெண்கள் பற்றிய என் கருத்துக்களைப் பகிர முல்லை என்னை அழைத்திருந்தார்.

பொதுவாக கணவனும் மனைவியும் சில நேரம் குழந்தைகளும் கூட கலந்தாலோசித்து குடும்பம் நடத்துவதென்பது இக்காலக்கட்டத்தில் அதிகரித்தே வருகிறது. கணவனோ மனைவியோ யாராவது ஒருவருடைய கை ஓங்கி இருக்கும் நிலையும் கூட இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட ஆளுமைத்திறன் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் ஆண் என்பதற்காக ஆதிக்கமோ அல்லது பெண் என்பதற்காக பச்சாதாபமோ அங்கே நுழைகின்ற போது அழகு குலைகிறது.

எப்பொழுதெல்லாம் பெண்கள் குரல் எழுப்புகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை தடுக்க என்று முன்பே கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டம் இருக்கிறது. அது முள்ளை முள்ளால் எடுப்பது என்பது போல பெண்ணைப் பெண்ணால் வீழ்த்துவது என்றும் சொல்லலாம்.
______________________________________________

என் வீட்டில் வேலைக்கு உதவும் பெண்ணை வெளிப்படையாகப் பார்த்தால் அவருக்கு அமைந்திருப்பது நல்ல கணவர்தான். அந்தக் கணவர் அவர்கள் குடியிருப்பில் மற்ற ஆண்களைப் போல குடிக்கவில்லை, சூதாடவில்லை. ஆனால் குழந்தைகள்
சண்டையிட்டுக் கொண்டால், குழந்தைகள் படிக்காவிட்டால் போன்ற குடும்பத்து பிரச்சனைகளுக்கெல்லாம் எட்டி உதைத்து விளையாட மனைவி வேண்டும் அவருக்கு.

கால்கள் வீங்கியோ அடிபட்டோ வேலைக்கு வரும் அந்தப் பெண்ணிடம், ” நல்ல மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் கணவரிடம் கேட்பீர்களா ? ஏன் அடிக்கிறீர்கள், பிரச்சினை தீரவா செய்யும்? குழந்தைகள் முன் இப்படி செய்யலாமா என்றெல்லாம் ஏன் கேட்பதில்லை?” என்று கேட்பேன்.

“கேட்கலாம். ஆனால் அந்நேரத்தில் அடித்துவிட்டு இரவில் அவரே கூட அதிக அழுத்தம் காரணமாக உடல்நிலை முடியாமலோ, ஃபிட்ஸ் வந்தோ சிரமப்படுவார். பலநேரங்களில் சிறு சிறு சலசலப்புக்கே மாமியார் வந்து நின்று அவருக்கு சப்போர்ட்டாக பேசும்போது எதும் சொல்ல இயலாது அக்கா” என்பார்.

பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஒரு நாள் அப்படிக் கேட்டதற்கு, “பெண்தான் சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்கனும். டீவியில், சினிமாவில் வரலையா..அம்மாவை அடித்தால் பிள்ளை சரியான பாதைக்கு வரும்” என்று பதில் சொல்லி இருக்கிறார், அந்தக் கணவர். ஒரு முறை எட்டி உதைத்ததில் கணவருடைய கால் சுளுக்கி பிரச்சனையாக இருந்தபோது அவர் மாமியார் “அடிவாங்கிவிட்டு சபித்திருப்பாள். அதனால்தான் மகன் கால் இப்படியாகியது” என்று புலம்புவதும் நிகழ்ந்திருக்கிறது.

உதைபட்ட பெண்ணின் வலியைவிட உதைத்தவனது வலிதான் அந்த மாமியாருக்கு பிரச்சினை என்பதோடு அதற்கும் உதைபட்டவளேயே கரித்துக் கொட்ட வேண்டுமென்றால் இத்தகைய ஏழைப் பெண்களுக்கு என்ன விமோச்சனம் இருக்கிறது? இதையும் கூட பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்று மடக்கிப் பேசுவதற்கு அநேக ஆண்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

தன் கணவர் 5000 சம்பாதித்தாலும் ஆண் குழந்தை வேணுமென்கிற காரணத்துக்காக இரண்டு பெண்களுக்கு பிறகு பெற்ற பையனுக்குமாக சேர்த்து அவர் சம்பாத்தியம் (குழந்தைகளின் படிப்பு செலவுக்கு) போதாதே என்று வீட்டு வேலைகளைச் செய்து பணம் (ஏறக்குறைய 2500) சம்பாதித்துக் கொடுக்கிறாள் அந்தப் பெண். உழைக்கும் பெண் என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே கௌரவம், “நான்தானே சோறு போடுகிறேன்” என்ற வார்த்தை மட்டும் அவர் கணவனால் கூறமுடியாது என்பதே. தான் உழைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பார் அந்த தங்கை.

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து சொந்த வீட்டு வேலைகளையும், வருமானத்திற்காக மற்ற வீட்டு வேலைகளையும் எந்திரம் போல ஓடியாடி செய்து ஓய்ந்து போயிருக்கும் அவருக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் துன்பத்தையாவது அளிக்காமல் அவர் கணவன் இருக்கலாமே? தமிழ்நாட்டில் சொந்த தோட்டத்தில் உழைத்து வந்த அந்த பெண்ணுக்கு இங்கே இப்படி வேலை செய்ய நேர்ந்தாலும் தன் குடும்பத்தில் தன் நிலையை கொஞ்சமேனும் தன்மானத்தோடு நிலை நிறுத்த இதுவே வழியாகப்படுகிறது. இதுவும் இல்லையென்றால் அவருக்கான சித்திரவதைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கலாம்.

அவர்களின் பெண்குழந்தைகளை கணினி மற்றும் தையல் போன்ற எதாவது தொழில் கற்றுக் கொள்ளச் சொல்லி இருந்தேன். பெரியவள் தையல் சென்றாள். கணினி படிக்கவும் முயன்று வருகிறாள். இவையெல்லாம் எதுவும் மாற்றம் கொண்டுவருமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கும் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகப் போகிறது. அவர்கள் கணவன்மார்கள் குடிக்காமல், சூதாடாமல், அடிக்கிற கையால் அணைத்துச் செல்பவராயும் வரவேண்டும் என்றுமட்டும்தான் அவர்களின் வேண்டுதல் இருக்குமென்று நினைக்கிறேன். மகிழ்ச்சி நிறைந்த வருங்காலக் கற்பனைகளைவிட துன்பம் தரும் நிகழ்கால எதார்த்தங்கள் இல்லாமல் போகவேண்டுமென்பதையே கனவாக கொண்டிருக்க வேண்டுமென்றால் இந்த உலகம் என்பது பெண்களைப் பொறுத்தவரை நரகம்தானோ?
_____________________________________________

இன்னமும் வரதட்சணை இருக்கிறது. சில மணமகன்கள் அது வேண்டாமென்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் குடும்பத்தினர் வாங்குகிறார்கள். நடுத்தர வகுப்புகளில் கல்லூரி முடித்தால் திருமணம் ஆகும், என்ற நிலை மாறி வேலைக்குச் சென்றால்தான் திருமணம் என்ற நிலை வந்திருக்கிறது. சில பெண்கள் திருமணம் ஆக வேண்டிய காரணமாகவே  வேலைக்குச் செல்கிறார்கள். வேலை வாங்கிக் கொடுத்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்களும் உண்டு. ஆக படிப்பும், வேலையும் பெண்ணை விற்பதற்கான தகுதிகளாகத்தான் மாறியிருக்கிறது என்றால் பெண்ணுக்கு என்று எந்த சுதந்திரமான தனித்துவமான வாழ்வும் இல்லை என்றுதானே பொருள்?

ஒரு காலத்தில் நான் விரும்பிய படிப்புகளை பெண் என்ற காரணத்தால் படிக்க இயலாமல் போய்விட்டது. தூர தொலைவுகள், தங்கும் வசதிகள் இன்னபிற காரணங்கள் பெண்களுக்குத்தான் தடைக்கல்லாக இருக்கிறது. அப்போதெல்லாம் பெண்ணாக
பிறந்ததற்காக மிகவும் அழுதிருக்கிறேன்.

நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று வளர்க்கப்படவில்லை. எங்கள் குடும்பத்தின் முதல் வட்டத்தில் யாரும் முன்மாதிரியாக வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் என் தாத்தாவுக்கு நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று ஆசை இருந்தது. விடுமுறைக்குச் சென்ற இடத்தில்  தாத்தவின் வீட்டிலிருந்தபடி 4 மாதங்கள் நான் வேலை செய்திருக்கிறேன். பிறகு திருமணம் ஆகிவிட்டது.

இப்போது இருக்கின்ற ஊரில் எனக்கு மொழிப்பிரச்சனை காரணமாக நான் முயற்சி செய்யவில்லை. குழந்தைகள் காரணமாக பின்னால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஆனால் எனக்கு அடுத்து குடும்பத்தில் பல பெண்கள் முதலில் வேலைக்குச் சென்று விட்டு கல்யாணம் செய்திருக்கிறார்கள். {அழகன் படத்தில் வருவது போல.. கொஞ்ச வருசம்  கழிச்சி பிறந்திருக்கலாம் :)}. காலம் சற்றே மாறி இருப்பதாகவே படுகிறது. அவர்களின் சம்பாத்தியப் பணம் யாரிடம் குடுக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விசாரிக்கவில்லை. ஆனால் என் வீட்டுவேலை செய்யும் பெண்ணின் கதையைப் பார்க்கும் போது இந்தத் துயரம் ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்க பெண்களுக்கும் கூட – என்ன அடிதடி இல்லையென்றாலும் – இருக்கும் என்றே தோன்றுகிறது.

அதேநேரம் என் அத்தை, மாமாவின் இறப்பிற்கு பிறகு அரசாங்க வேலைக்கு பயிற்சி பெற்று தற்போது வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்கிறேன். நிச்சயமாக பெண்களின் நிலையில் வேலையும், வெளியுலகமும், மாற்றத்தையும், தன்னம்பிக்கையும் தரும் என்கிற விசயத்தை அத்தையின் மூலம் ஆணித்தரமாக உணர்ந்திருக்கிறேன்.
______________________________________________

தடாலடியாக வரும் மாற்றம் கலவரப்படுத்தக்கூடியது. இதுவோ மெதுவாக மிக மெதுவாக நிகழ்கிற மாற்றம்.. 100 ஆண்டுகளாக கோரிவருகிற கோரிக்கைகள். அதற்கும் முன்பிருந்து இருக்கின்ற பிரச்சினைகள். உலகம் முழுவதுமே இருக்கின்ற நிலை. தினம் தினம் செய்திகளில் அதுவும் வடநாட்டில் பெண்களை டௌரிக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் வீட்டை விட்டு துரத்துவதும், கொலை செய்து கட்டில் பீரோக்களில் ஒளித்து வைத்த கணவர்களையும் குடும்பங்களையும் பற்றி படிக்கிறேன். குடும்பப் பெயருக்கு ‘களங்கமேற்படுத்திய’ பெண்களை ஊரும் , உறவுகளும் பார்க்கும்போதே கொலை செய்கிற நிகழ்வுகள் நடக்கின்றன.

சிறிது நாட்களுக்கு முன், தில்லியில் ஒரு அப்பா தன் மூன்று மகள்களையும் மனைவியையும், வெளிஉலகம் மிகக் கொடுமையானது என்று கூறி வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டு தான் மட்டும் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். தன் பேச்சைக் கேட்காத மகளை அடித்ததில் அவள் கழுத்து காலத்திற்கும் கோணியே போய்விட்டது. கண்ணாடி  ஜன்னல் கதவுகள் பேப்பர் வைத்து மூடப்பட்ட இருட்டு சிறைகளில் அவர்கள் பல ஆண்டுகள் வசித்திருக்கிறார்கள். ஒளி படாத வெளிறிய பெண்களை ஒரு மகள் தப்பிச்சென்று  என் ஜி ஓ ஒன்றின் மூலமாக வெளியுலகிற்கு கொண்டுவந்தாள்.

ஆனால் அவர்களை மீட்கச் சென்றிருந்த அமைப்பாளர்களில் ஒரு பெண் சொல்கிறார்: ” எத்தனையோ மக்களின் மிக மோசமான குடியிருப்புகளுக்கு உதவச் சென்றிருக்கிறோம். ஆனால் அந்த வீட்டின் நெடி தாக்கி நான் மயக்கமே அடைய இருந்தேன்.”  .. ஒரு நொடி எட்டிப்பார்க்கும் அவருக்கே அந்த நிலை என்றால் அக்குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அப்பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

வாழ்க்கையின் பல நன்மைகளைப் பெற்று நல்ல தகப்பன், நல்ல கணவன், நல்ல சகோதரனைப் பெற்றுவிட்டதால் நாங்கள் சுகமாய் இருக்கலாம். நீங்கள் நல்ல தகப்பனாய், நல்ல கணவனாய், நல்ல சகோதரனாய், நல்ல நண்பனாய் இருப்பதால் மட்டுமே உலகம் சுபிட்சம் அடைந்துவிடவில்லை. “பெண்கள் முன்னேறிவிட்டார்கள் அவர்களிடம் இருந்து ஆண்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள்” என்று தந்திரமாக சொல்கிறவர்களும் இருக்கிறார்களே?

…எண்ணிப்பாருங்கள்.

இப்படிப்பட்ட சைக்கோக்கள் எவ்வாறு உருவாகிறார்கள், யார் உருவாக்குக்கிறார்கள்? பெண்கள் குடும்பத்தின் மானத்தைக் காக்கும் குலதெய்வங்களாக அக்காலத்தில் குழியிலும் உயிரோடு சமாதியிலும் இறக்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் என்ன வித்தியாசம்?
__________________________________________

மாற்றங்களின் முதல் படி நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்து
தொடங்கவேண்டியது என்ற கருத்தோடு செய்யவெண்டியவை என்று பார்த்தால்- அடுத்த தலைமுறை பெண்ணாக என் மகளுக்கு தன்னம்பிக்கையோடு வாழ்வை மேம்படுத்த உதவவேண்டியதும், பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்பர்க்காமல்,பெண் என்பதற்காக பழிக்கப்படும் போது, அடக்கப்படும்போது எதிர்க்க தைரியம் உள்ளவளாக வளர்க்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆண் குழந்தையை ஆண் என்பதால் விளக்கமாற்றை தொடக்கூடாது அல்லது அடுக்களையில் உதவக்கூடாது எனப் பிரித்துப் பார்க்காமல், ஆண் என்கிற அகந்தை இல்லாத  பெண்ணிற்கு நிகரான அன்பும் விட்டுக் கொடுத்தலுமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டியதும் மற்றொரு கடமை. குடும்பத்தில் மட்டும் வாழும் என்னைப் போன்ற பெண்கள் இதை மட்டுமாவது சரியாகச் செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரிந்த கடமையாக கருதுகிறேன்.

கஷ்டப்படும் யாருக்காவோ இறங்கிச் செயல்படமுடியாத தளைகள் என்னை வருத்தமுறச் செய்தாலும் எவருக்கும் நேரடியான துன்பம் இழைக்காத வண்ணம் வாழ முயற்சிக்கிறேன்.

பதிவிட அழைத்த முல்லைக்கும் பதிவினை வலையேற்றிய வினவுக்கும் நன்றி.
_______________________________________

–   முத்துலட்சுமி.

–     “இளங்கலை வேதியியல் மற்றும் விளம்பரத் துறையில் டிப்ளமோ பெற்றிருக்கிறேன். பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளின் தாய்.  தில்லியில் வசிக்கிறேன். கவிதைகள் , புகைப்படங்கள் ,அனுபவக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் ஓவியம் , அனிமேசன் போன்று வாழ்வில் நானெடுக்கும் சிறு சிறு முயற்சிகளை ”சிறுமுயற்சி “ ப்ளாகில் பதிவிட்டு சேமிக்கிறேன்”

–  முத்துலட்சுமியின் வலைப்பூ: http://sirumuyarchi.blogspot.com/

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முத்துலெட்சுமி. வாழ்த்துகள்! நமது வீட்டிலிருந்து தொடங்கப்படவேண்டியவை குறித்து எழுதியிருந்தது பிடித்திருந்தது!

    /“பெண்கள் முன்னேறிவிட்டார்கள் அவர்களிடம் இருந்து ஆண்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள்” என்று தந்திரமாக சொல்கிறவர்களும் இருக்கிறார்களே?/
    இந்த மனோபாவம்தான் உண்மையில் எரிச்சலைத் தருகிறது!

    கருத்துகளை பகிர அழைத்த வினவிற்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்,முத்து. வினவின் அழைப்பை தங்களுக்கு அனுப்பியதைத் தவிர நான் செய்தது ஒன்றுமில்லை. வினவிற்கு நன்றிகள்! 🙂

  2. சில பெண்களுக்கு வேலைக்குப்போறதுனால பெரிதாக ஒன்றும் நல்லது நடப்பதே இல்லை. அழகான பதிவு

  3. மாற்றங்களின் முதல் படி நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்துதொடங்கவேண்டியது என்ற கருத்தோடு செய்யவெண்டியவை என்று பார்த்தால்- அடுத்த தலைமுறை பெண்ணாக என் மகளுக்கு தன்னம்பிக்கையோடு வாழ்வை மேம்படுத்த உதவவேண்டியதும், பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்பர்க்காமல்,பெண் என்பதற்காக பழிக்கப்படும் போது, அடக்கப்படும்போது எதிர்க்க தைரியம் உள்ளவளாக வளர்க்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.ஆண் குழந்தையை ஆண் என்பதால் விளக்கமாற்றை தொடக்கூடாது அல்லது அடுக்களையில் உதவக்கூடாது எனப் பிரித்துப் பார்க்காமல், ஆண் என்கிற அகந்தை இல்லாத  பெண்ணிற்கு நிகரான அன்பும் விட்டுக் கொடுத்தலுமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டியதும் மற்றொரு கடமை. குடும்பத்தில் மட்டும் வாழும் என்னைப் போன்ற பெண்கள் இதை மட்டுமாவது சரியாகச் செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரிந்த கடமையாக கருதுகிறேன்.கஷ்டப்படும் யாருக்காவோ இறங்கிச் செயல்படமுடியாத தளைகள் என்னை வருத்தமுறச் செய்தாலும் எவருக்கும் நேரடியான துன்பம் இழைக்காத வண்ணம் வாழ முயற்சிக்கிறேன்.

    தெளிவான பார்வை..  நம் வீட்டிலிருந்துதான் தொடங்கவேண்டும்.. அழகா சொல்லிட்டீங்க..முத்து…

  4. பெண்களின் மனநிலையின்  உண்மையான பதிவு , இல்லத்தரசிகளும் இவ்வளவு யோசிக்க முடியுமா என்று ஆச்சர்ய பட வைக்கிறது .

  5. பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு நன்றி..
    முல்லை இதுபோன்ற பதிவுகளை பெண்ஈயவாதிகள் என்று கிண்டல் செய்யப்படுவதனால் எழுத ஒரு மனத்தடை வந்துவிடுகிறது. எழுதிப்பயனில்லாத விசயம், என்று பெண்கள் பற்றி எழுதுவதை குறைத்து கொண்டிருக்கிறேன். நீங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றால் எழுதி இருக்கமாட்டேன் .அதனால் தான் நன்றி..:) இல்லையென்றால் இது போன்ற செய்திகளை அறியாத ஆண்கள் உண்டா என்ன..?  

    • குட்டையாக முடி வெட்டி, சட்டை அணிந்து, ஆண்கள் ஒழிக என்று சொல்லிக் கொண்டு, பத்து ஆண்களுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்பவர்கள்தான் பெண்ணியவாதிகள் என்று பொதுபுத்தியில் பதிந்துள்ளதை நீங்கள்,
      //இதுபோன்ற பதிவுகளை பெண்ஈயவாதிகள் என்று கிண்டல் செய்யப்படுவதனால் எழுத ஒரு மனத்தடை வந்துவிடுகிறது//
      இந்த வாக்கியங்களில் பிரதிபலிக்கிறீர்கள். சினிமாக்களும் ஊடகங்களால் பெண்ணியவாதிகள் என முன்னிறுத்தப்படும் உதாரணங்களும் இதுபோன்ற தவறான கருத்து திணிப்பை செய்துகொண்டிருக்கின்றன. அதுதான் உங்களையும் அலறி வைத்திருக்கிறது என நினைக்கிறேன். பெண் குறித்து அக்கறை படுகிற ஒவ்வொருவருமே பெண்ணியவாதிதான். இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை தோழி.
      எழுதிப் பயனில்லாத விஷயம் என்று ஒவ்வொன்றைக் குறித்தும் யோசிக்க ஆரம்பித்தால் உங்களுடைய சிறுமுயற்சிகூட, பயனில்லாத ஒன்றாக இருக்கலாமில்லையா? தொடர்ந்து நீங்கள் அறிந்த பெண்கள் குறித்தும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்தும் எழுதுங்கள். எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடுவதில்லை. மாற்றித்திற்கான சிறு பங்களிப்பாக உங்களைப் போன்ற, என்னைப் போன்றவர்களின் எழுத்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
      பெண்களின் பிரச்சினையெல்லாம் ஆண்களுக்குத் தெரியாத என்கிறீர்கள்…சிலருக்குத் தெரியும், பலருக்குத் தெரியாது. திரும்ப திரும்ப நம்முடைய பிரச்சினைகளை பேசும்போது அது பலருக்கும் போய் சேரும். அதைத்தான் நாம் இப்போது செய்ய வேண்டும்.

  6. //அடுத்த தலைமுறை பெண்ணாக என் மகளுக்கு தன்னம்பிக்கையோடு வாழ்வை மேம்படுத்த உதவவேண்டியதும், பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்பர்க்காமல்,பெண் என்பதற்காக பழிக்கப்படும் போது, அடக்கப்படும்போது எதிர்க்க தைரியம் உள்ளவளாக வளர்க்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    ஆண் குழந்தையை ஆண் என்பதால் விளக்கமாற்றை தொடக்கூடாது அல்லது அடுக்களையில் உதவக்கூடாது எனப் பிரித்துப் பார்க்காமல், ஆண் என்கிற அகந்தை இல்லாத பெண்ணிற்கு நிகரான அன்பும் விட்டுக் கொடுத்தலுமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டியதும் மற்றொரு கடமை. //

    மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

  7. நல்லதொரு படைப்பு.சுய முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்டு , குடும்ப பொருளாதார சிக்கல்களை பகிரும் பொருட்டு, வேலைக்கு செல்லும் எத்தனை பெண்களின் வீட்டில் அவர்களது கணவர் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர்?.இன்னும் ஆணாதிக்க சூழல் இருக்கத்தான் செய்கிறது. அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை காலம்தான் கற்று தர வேண்டும்.

  8. நீங்க சொன்னது போல எழுத ஒரு மனத்தடை இருப்பது உண்மை தான்.. அது பயத்தினால் அல்ல.. சலிப்பினால்.. அந்த சலிப்பும் இனி இருக்க கூடாது.. இது மாதிரி கட்டுரைகள் ஆண்களும் எழுத வேண்டும்… இந்த உணர்வு அவர்களுக்கும் வரவேண்டும்…

  9. நல்ல பதிவு முத்துலெட்சுமி..
    வாழ்த்துக்கள்!
    //எவருக்கும் நேரடியான துன்பம் இழைக்காத வாழமுயற்சிக்கிறேன்//
    நல்ல கொள்கை.

  10. டாக்டர் மற்றும் அனைவருக்கும் நன்றி. முவி.நந்தினி நீங்கள் சொல்வது சரிதான்.. என் முயற்சியை என்றோ சலிப்பினால் நிறுத்தித்தான் இருந்திருக்கிறேன் போல.. என் பழைய பதிவை மீள்பதிவிட்டிருக்கிறேன். மீள்வாசிப்பில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கவேண்டிய விசயம் இவை என்பதை பதிவில் நானும், பின்னூட்டத்தில் நான் வியக்கும் பலபதிவர்களும் சொல்லி இருப்பதை கவனித்தேன். நன்றி உங்களுக்கும்.

  11. அருமையான பதிவு.வினவுவில் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்.பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்தும் கட்டாயம் எழுதுங்கள்.அதற்க்கான ஆற்றல் உங்களிடம் உள்ளது.

  12. //மகிழ்ச்சி நிறைந்த வருங்காலக் கற்பனைகளைவிட துன்பம் தரும் நிகழ்கால எதார்த்தங்கள் இல்லாமல் போகவேண்டுமென்பதையே கனவாக கொண்டிருக்க வேண்டுமென்றால் இந்த உலகம் என்பது பெண்களைப் பொறுத்தவரை நரகம்தானோ?// சரியான வார்த்தைகள் முத்துலட்சுமி!

    மாற்றம் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும், அதே நேரத்தில் நமது மாற்றங்களும் மாற்றங்களுக்குமான முயற்சிகளும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியமல்லவா? தொடர்ந்து எழுதுங்கள்!

  13. சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் பெண்களின் பிரச்சனைகளை ஆழமாக அலசியுள்ளீர். மேலும் பிரச்சனைகளைத் தீர்க்க நம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்வு பாரட்டுக்குரியதாகும்.—புதியவன்—

  14. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களின் பதிவுகளை படித்ததற்கும்… இன்றைக்கு வினவில் படித்ததற்கும் பல மாறுதல்கள். நீங்கள் சொல்ல வந்ததை சரியாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  15. \\மகிழ்ச்சி நிறைந்த வருங்காலக் கற்பனைகளைவிட துன்பம் தரும் நிகழ்கால எதார்த்தங்கள் இல்லாமல் போகவேண்டுமென்பதையே கனவாக கொண்டிருக்க வேண்டுமென்றால் இந்த உலகம் என்பது பெண்களைப் பொறுத்தவரை நரகம்தானோ?//
    கனம் மிக்க வரிகள் 
    மாமியார் மருமகள் பிரச்சனைகளின் இருப்பு ஆணாதிக்கத்தில் தான் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

    செங்கொடி 

  16. எனது பதிவு
    பெண்ணாகிய சக உயிரினமே
    http://www.thiagu1973.blogspot.com
    உங்கள் கருத்தை ஒத்து இருக்கு எனது கருத்தும்

    தொடர்ந்து பெண்களை எழுதவைக்கும் வினவு தோழrசர்களுக்கு வாழ்த்துக்கள்

  17. /////ஆண் குழந்தையை ஆண் என்பதால் விளக்கமாற்றை தொடக்கூடாது அல்லது அடுக்களையில் உதவக்கூடாது எனப் பிரித்துப் பார்க்காமல், ஆண் என்கிற அகந்தை இல்லாத பெண்ணிற்கு நிகரான அன்பும் விட்டுக் கொடுத்தலுமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டியதும் மற்றொரு கடமை. குடும்பத்தில் மட்டும் வாழும் என்னைப் போன்ற பெண்கள் இதை மட்டுமாவது சரியாகச் செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரிந்த கடமையாக கருதுகிறேன்.///////
    …………………………………………………………..
    வணக்கம் தோழர் . மிகவும் அருமையாக சொல்லி இருந்திர்கள் .. இதை
    ஒவ்வொரு தாய்மார்களும் , வருங்கால தாய்மார்களும் உணர்ந்தாலே பெண்ணிருக்கு பெண் எதிரியாக இருக்க மாட்டாள் .. ஆண் என்பதினால் பெண்களே அவர்களை உயர்வாகவும் , பெண் என்றால் சற்று தாழ்த்தியும் பார்ப்பது ஆண்னாதிகதிர்க்கு உண்மையான காரணம்..

    இன்றும் என்னுடுடைய வாழ்க்கையின் அனுபவத்தினாலும் , இன்னமும் அந்த கொடுமையை அனுபவிக்கும் ஒருத்தியை இதை நான் கூறுகிறேன். பெண்ணிர்க்கு எதிரி பெண்களே..
    இந்நிலைமை நிச்சயமாக மாறவேண்டும் .. நன்றி ..

    • ஈழம் வெல்லும் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை…

      எல்லா அம்மாக்களும் தனது ஒவ்வொரு பெண் குழந்தையும் தனது ஆண் குழந்தைக்கு ஈடாக நடத்தினால் தான் இந்த சமுதாயம் மாறும். அம்மாக்கள் உண்டனே அப்பாவைக்காரணம் காட்டி விடுவார்கள். இது தவறு. ஒரு மனைவி நினைத்தால் வீட்டில் எந்த ஒரு policy -ஐயும் செயல் படுத்த முடியும். இது நூற்றுக்கு 90 விழுக்காடு உண்மை.

      திருமணம் ஆகி ஒரு 30 நாள், 90 நாள், ஒரு வருடம் வரை ஆண்கள் வீட்டில் ராஜாக்கள் தான். ஆனால் ஒரு குழந்தை பிறந்த்த பிறகு கணவர்கள் தனது மனைவி குடும்பத்தை நடத்துவதை குடும்பத்திற்காக கஷ்டப்படுவதை பார்த்து மனைவியிடம் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைக்கிறார்கள்.

      அந்த நன்றி எல்லா கணவர்களுக்கும் உண்டு என்று நான் நினைக்கிறன். In other words, wife becomes the de facto home minister. வெளியில் மனைவியிடம் தனது நன்றியை காட்டாதவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எந்த பிரச்னை என்று வந்தாலும் கடைசியில் வெல்வது மனைவியே! ஏனென்றால் எங்களுக்கு நன்றாக தெரியும் மனைவி இல்லை என்றால் எங்களால் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது என்று.

      இதை மனைவி வெல்வது என்று சொல்வது கொஞ்சம் கொச்சைப் படுத்துகிற மாதிரி இருப்பதால் மனைவி சொல்லே மந்திரம் என்று கூறலாம். இதை பெரும்பான்மையான ஆண்கள விரும்பியே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் அப்படித்தான்.

      அம்மாக்களுக்கு ஒரு யோசனை:
      தனது ஒவ்வொரு பெண் குழந்தையும் தனது ஆண் குழந்தைக்கு ஈடாக நடத்த வேண்டும் என்று உங்கள் கணவரிடம் தலையணை மந்திரம் ஒதிப்பாருங்கள். அப்படி செய்தால் அடுத்த தலை முறையாவது ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் என்ற சமுதாயம் உருவாகும்.

      அந்த மாற்றத்தை பெண்கள் தான் செய்ய முடியும். பெண்களே செய்வீர்களா?

      அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க