privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !

கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !

-

அனாதையான வைகோ, அய்யோ பாவம் சி.பி.ஐ, சி.பி.எம் தோழர்கள், சொங்கியான கேப்டன், அப்செட்டான கருணாநிதி இவர்களுக்கான சிச்சுவேசன் பாடல்களை ரீமிக்ஸ் செய்து சுடச்சுட தருகிறோம். கேளுங்கள், சுரணை கொள்ளுங்கள்!

1.’தோழர்’கள் வாங்கிய ‘தங்கத் தாரகைப்’ பதக்கம்

தானாக தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவிக்க,  அதிர்ச்சி கலந்த சோகத்தில் சி.பி.ஐ தோழர். தா.பாண்டியனும், சி.பி.எம் தோழர். ஜி.ராமகிருஷ்ணனும் பாடியது…

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது… மாமி!
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது – அதில்
கூட்டணி ஒரு கால்விலங்கு நான் போட்டது

(சோதனை மேல்..)

அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல
நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள…
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல
ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த
தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல

(சோதனை மேல்..)

விஜயகாந்த்: மாமா! காய்ஞ்சி போன கட்சியெல்லாம்
வத்தாத போயசைப் பார்த்து ஆறுதல் அடையும்…
அந்த போயசே நமக்கு காய்ஞ்சி போனா?
துன்பப்படறவங்க எல்லாம் கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க – அந்த தெய்வமே
நம்மள தெருவுல நிறுத்துனா…

தானாக அறிக்கைவிட்டாள்… சதையாடுது – அது
இடது என்றும் வலது என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் புரட்சி என்பது… அதில்
புரட்சித்தலைவி புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளமிது உன் அறிவிப்பு தாங்குமா
இடி போல தொகுதி வந்தால் மடி தாங்குமா?

(சோதனை மேல்…)

____________________________________________________________________

2. வைகோ பாடுகிறார்…..

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD0747%27&lang=en

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே..
பம்பரத்தைப் பார்த்து இலை சொன்னது என்னைத் தொடாதே..
தாயகத்தைப் பார்த்து போயசு சொன்னது என்னைத் தொடாதே..
அண்ணன் வை.கோ.வைப் பார்த்து அம்மா சொன்னது என்னைத் தொடாதே..

(நிலவைப் பார்த்து..)

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொல்வது
சொன்ன வார்த்தையும் இரவல் தானது – அது
கருணாநிதியின் வாய் சொன்னது

(நிலவைப் பார்த்து…)

முப்பது சீட்டை தராத போதிலே – ஒரு
மூணு சீட்டுக்கும் தகுதி இல்லையா
புரட்சித் தலைவரை நீ தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இல்லையே

(நிலவைப் பார்த்து…)

தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
கூட்டணி வைத்த கை தொகுதி பார்த்ததா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை – அண்ணன்
வைகோ இன்றி உனக்கு அழகேயில்லை

(நிலவைப் பார்த்து…)

__________________________________________________________

3. அம்முவுடன் கூட்டணி செட் ஆகுமா, ஆகாதா ? கன்பீசனில் கறுப்பு எம்.ஜி.ஆர்

அம்மாடி அம்முக்கு தங்க மனசு கொட்டுது இந்த முரசு
ஸ்காட்சுக்கு பண்ணெண்டு வயசு அவ சொல்லுக்கு நாலு கிளாசு

ஓஓஓஓஓஓ

எண்ணையில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைத்தது வியப்பு
என்னவோ நடக்குது நடப்பு – அதில் ஏதோ சுகமும் இருக்கு

யாருக்கு அம்மு கதை தெரியும் எம்.ஜி.யாருக்கு மட்டும் இது புரியும்.
கூட்டணி குழப்பங்கள் இருக்கும் பண்ருட்டியார் கன்னம் சிவக்கும்

(அம்மாடி..)

அடித்தால் அழுவேன் ஒருநாள்
அம்மு அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை ஒரு பகையோ உறவோ இல்லை

அம்முக்கு தமிழ்நாடு சொந்தம்
மிச்சம் மீதி கேப்டனுக்கு சொந்தம்
போயசுக்கு ரெட்ட இலை சொந்தம் – அவ
போட்ட எச்சிலைக்கு இந்த உள்ளம் சொந்தம்

(அம்மாடி…)

______________________________________________________________

4. காங்கிரசின் அடிமை கருணாநிதியின் அங்கலாய்ப்பு…

http://www.raaga.com/player4/?id=27042&mode=100&rand=0.4054366296121451

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காங்கிரஸ்காரன் குழப்பத்திலே

(அண்ணன் என்னடா..)

தங்கபாலுவே ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா..
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
கோஷ்டி சண்டைகள் நூறடா..

(அண்ணன் என்னடா..)

தேர்தல் கமிசனை கொண்டு வந்து
கட்டி வைத்தவன் யாரடா
ஸ்பெக்ட்ரம் கட்டுகள் வைத்திருந்துமே
அவன் போடும் கண்டிஷன் பாரடா
அடித்த கொள்ளையில் கிடைத்த காசுகள்
அமுங்கிக் கிடப்பது வீணடா
பணத்தின் மீதுதான் பாசம் என்றபின்
பயந்து பயந்து ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்க இருக்கிறார்
போய் அழகிரியைப் பாரடா

(அண்ணன் என்னடா..)

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்தான் காங்கிரசு நாயடா – ராசாவை
உள்ளே வைத்தபின் யோக்கியன் போலே
நம்மை மிரட்டிப் பாக்கிறான் பாரடா…
நம்மை மிரட்டிப் பாக்கிறான் பாரடா…

(அண்ணன் என்னடா..)

________________________________________________________

துரை. சண்முகம்

__________________________________________________