privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைதோழருக்காக ஒரு உதவி...

தோழருக்காக ஒரு உதவி…

-

ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.

மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ….ழ….ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.

அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.

மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
‘தேவர்மகன்’ பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.

தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.

‘நானொரு பாப்பாத்தி’ என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு
மதச்சார்பற்ற…ஜனநாயக….முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
” மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல”

__________________________________________

துரை.சண்முகம்
புதிய கலாச்சாரம் செப் 2003

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. தோழருக்காக ஒரு உதவி…

    தோழர் உங்கள் கனவு என்னாயிற்று என்றேன். தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது என்பது போல கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்…….

  2. இவ்ளோ பிரிவு இருக்க உங்களுக்குள்ள ? எல்லா கம்யுனிஸ்ட் முட்டாப் பசங்களும் ஒண்ணுதான்னு நினச்சுக்கிட்டிருந்தேன்…

  3. இந்தியாவுல உங்களை தவிர வேற நல்லவர்கள் இல்லைன்னு எங்களுக்கு தெரியும் வினவு.

  4. தோழர், பேஸ்புக், கூகிள், வோர்ட்பிரஸ், இன்டர்நெட் என்று பெரும் முதலாளித்துவ நிறுவனங்களின் கொட்டைகளை பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடலாமா என்று கேட்டேன்…’வினவு’ ஒரு வர்க்க நிறுவனம் அல்ல என்றார்…

    • ஏசி ரூமிலே ஒக்கந்துகிட்டிருகரவங்களுக்கு வெளிய இருந்து என்னதான் தொண்ட கிழிய கத்தினாலும் கேக்காது…ஏசி ரூமுக்குள்ள வந்துதான் சொல்லணும்.

      கொட்டையை பிடிச்சு தொங்கிகிட்டிரவங்களுக்காகத்தான் நாங்களும் கொட்டையை பிடிச்சு தொங்கிட்டு, அடேய் முட்டபய புள்ளைகளா இப்படி தொங்காதிங்கடான்னு சொல்லிகிட்டிருக்காங்க.

      நாம் கொட்டையைதான் பிடிச்சு தொங்கிட்டிருக்கொம்னு தெரியாமலே நெறைய பேர் தொங்கிட்டிருக்காங்க…நானும் அப்படித்தான் இருந்தேன்…வினவு-ன்ற ஒரு தளம் இருந்ததால் தான் நானும் நடக்குற அநியாயங்களையெல்லாம் தெரிஞ்சுக்க முடிஞ்சது. எது அசல் எது போலி-ன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது.

      இதுவும் ஒரு தந்திரம்-ந்னு கூட சொல்லலாம் இல்லையா…அவங்க கைய வச்சி அவங்க கண்ணையே குத்துராப்போல…

      • எப்பிடி எப்பிடி, ரேட்டு பொம்பளைய வெச்சு பிசினஸ் பண்ணிட்டு, அவ கிட்ட வார சின்னப் பசன்கலத் திருத்தப் போறோம்னு சொல்றப்புல இருக்கே…நல்ல சால்ஜாப்பு அப்பு !!

        • அட தமிழ் வலதுகொட்டைசாரி சார் ..

          நீங்க சொல்லுற கூகுள், ஃபேஸ்புக் கருமாதி எல்லாம் முதல் போட்ட முதலாளினால வளரல … அதுக்கு பின்னால பலரோட உழைப்பு இருக்கு. பல பொதுஜனங்கள் சேர்ந்து தான் அவ்வளவு மதிப்பு இந்த இணைய தளங்களுக்கு எல்லாம் வந்துச்சு.

          நீங்க சொல்லுறதப் பாத்தா கம்பெனியில வேலை பார்த்துட்டே அங்க தொழிற்சங்கம் வைக்கக்கூடாதுன்னு சொல்லுவீங்க போல ..

          அண்ணே … கொட்டை அண்ணே … தமிழ் பேர சொல்லி ஆடுர கொட்டையெல்லாம் கெட்டு புளுத்துப் போச்சுண்ணே .. கொஞ்சம் கண்ண நல்லா தொறந்து பாருங்க ..

          வரட்டுங்களா ?..

        • ஆகா இவருதான் அமேரிக்கா போய் கண்டுபிடிச்சி வன்ட்டாருடா – எல்லாமே சுயம்புவா வந்துச்சாம், ஓனர் எல்லாம் எதுவுமே செய்யலியாம்.

          மாம்ஸ், கொஞ்சம் போய் இந்த கூகிள், பேஸ்புக் பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து பேசுங்க – அதோட ஒனர் எல்லாம் இன்னிக்கி பில்லியனர், ஏன்னா, அவன் அப்பிடி வேலை செஞ்சான். கூட வேல செஞ்சவனுக்கெல்லாம் பங்கு குடுத்தான். அங்க யூனியன் கிடையாது, அதுனால தான் உருப்பட்டுச்சு.

          உங்கள மாதிரி யூனியன் வெச்ச அமெரிக்க கம்பெனி கூட இன்னிக்கி வீணாப் போயடுசுப்பா – ஜெனரல் மொடோர்ஸ், கிரைஸ்லர் கார் எல்லாம் – கம்யுனிசம் எங்க பூந்தாலும் பிரச்சினைதான்.

  5. Before 2 year in their DYFI ALL INDIA MEETING- Chennai they Invited Actor.Mammooty as one of the Chief Guest.

    They proudly announced that Mammooty was once a DYFI Member to inspire the Youths.

    How PIKKALI Thinking These CPM Guys.

    Shame shame DYFI Shame !
    Shame shame SFI Shame !
    Shame shame TA.MU.YE.KA.SA Shame !
    Shame shame CPI-M Shame !

    In DMK Leadership quarrel they attacked Dinakaran office and killed Labors.

    But in CPM killed a compete Leader Varadarajan.

    Be aware of these Social Fascists !

  6. CPM ஒரு வர்க்க ஸ்தாபனமே ஆனால் எந்த வர்க்கம் என்பதே குழப்பம் (CITU தொழிற்சங்க முதலாளிகளை பாரீர் … தொழிலாளி உடல் உழைப்பை செலுத்துகிறான் முதலாளி கூட மூலதனம் இட்டுள்ளான் ஆனால் இந்த தொழிற்சங்க முதலாளிகள் அவர்களின் மூலதனமே செங்கொடியும் புரட்சியாளர்களின் புகைப்படங்களுமே)

  7. வினவு தாசில்தார் அய்யா அவர்களே, ஒரிஜினல் கம்யுனிஸ்டு என்று ஒரு செர்டிபிகேட் வாங்க எவ்வளவு செலவாகும் அதற்க்கு
    வழிமுறைகள் என்ன சார்?

    • எடிசன், அதற்கு எந்த செலவும் ஆகாது. எல்லாத்தையும் கண் மூடித்தனமா எதிர்த்தா போதும். வர்க்கம், ஏகாதிபத்தியம், பாட்டாளி ன்னு தூக்கத்துல கூட உளறணும். நீங்க அக்மார்க் ஒரிஜினல் கம்யூனிஸ்டா ஆகிப்புடலாம்.

    • செலவு ஒன்றும் இல்லை ஜெண்டில்மேன்..உன் மண்டைக்குள் இறக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ, பார்ப்பனிய, ஏகாதிபத்திய கழிசடைத்தனங்களை (உதாரணமாக ‘பாட்டாளிகளுக்கு’ எதிரான கொழுப்பெடுத்த பின்னூட்டங்கள்) அனைத்தையும் கடாசிவிட்டு பாட்டாளிவர்க்க உணர்வோடு சிந்திக்கும்போதும், அதிகாரவர்க்கத்தினைக் கண்டு அஞ்சி நடுங்குவதை உதறும்போதும் ஒரு நல்ல கம்யூனிஸ்ட் உருவாகத் தொடங்குகிறான்..அது ஒரு வளர்ச்சிப்போக்கின் முதல்படி..உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன்னையே கரைத்துக் கொள்பவனே நல்ல கம்யூனிஸ்ட் ஆக முடியும்..

    • எடிசன்,

      வெளியூர்ல இருந்தீங்கன்னா கொஞ்சம் செலவைப் பாக்காம சென்னைக்கு வந்தீங்கன்னா நேரிலேயே பேசி தெரிஞ்சுக்கலாமே? நேரில் பேசுனா ஒரு இரண்டு மணிநேரத்தில உங்கள நல்ல மனிதனாக மாத்தி, அப்புறம் இரண்டு வருசத்துக்குள்ள நல்ல கம்யூனிஸ்டாவும் மாத்தலாம். இல்ல நீங்க முயற்சி செய்து எங்களையும் கம்யூனிஸ்ட்டு கட்சியிலிருந்து விலக்கி நல்வழிப்படுத்தலாம். இதை சவால்ன்னு எடுத்துக்காமா ஒரு நல்ல உரையாடலா எடுத்துக்கிட்டு நேரில வாங்களேன், இதெல்லாம் எழுதித்தீருகிற விசயமில்லை, பேசித்தான் முடிவு செய்ய முடியும்.

      அப்புறம் உங்கள் பேரு கிறித்தவ அமெரிக்க பெயரா இருக்குதே, நம்ம ஜி மாருங்க கோவிச்சுக்குவாங்களே, ஒரு நல்ல இந்து பெயரா மாத்துங்க, பெயருல கூட தேசபக்திய விட்டுக்கொடுக்க முடியாதுல்ல….!

      • பதிலுக்கு மிக்க நன்றி வினவு நண்பர் அவர்களே. நிற்க, உங்கள் கம்யுனிசம் மக்களுக்கு செய்த நன்மை, செய்து கொண்டிருக்கும் நன்மை என்ன. தற்சமயம் கம்யுனிச நல்லாட்சிக்கு எங்கு, உலகின் எந்த பகுதியில் எந்த நாட்டில் நடைபெறுகிறது. அவ்வாறு எங்காவது நடைபெற்றால்? அங்கு மாக்கள் எல்லோரும் சுபிட்சமாக உள்ளநாரா, தெருக்களில் பாலாரும் தேனாறும் ஓடுகிறதா, அட்லீஸ்ட் மக்காள் பசி பஞ்சம் பட்டினி இல்லாமல் உள்ளனரா. அங்கு தனி மனித உரிமை முழுமையாக உள்ளதா. இங்கு நமது நாட்டில் உள்ளது போல் யார் வேண்டுமானாலும் அரசையும், சொந்த நாட்டின் ராணுவத்தையும் ஆட்சியில் உள்ளோரையும் நீங்கள் இங்கு செய்வது போல் எழுதி பேசி வண்டி ஓட்ட முடியுமா. அட்லீஸ்ட் நீங்கள் பிளாகில் செய்வது போல் எழுதுவதற்கு சுதந்திரம் உண்டா.. ( அதற்காக நான் இங்கு நமது நாட்டில் எல்லாமே சரியாக உள்ளது என்று சொல்ல வரவில்லை). அப்படி ஒரு கம்யுனிச தத்துவப்படி நடக்கும் நாட்டை காண்பித்தால் நான் அந்த நொடியே முழுமனதோடு கம்யுனிஸ்டாக மாறுவதற்கும் தயாராக உள்ளேன்.

        • என் முந்தைய பின்னூட்டத்தில் சில எழுத்து பிழைகள் உள்ளன, மன்னிக்கவும். என்னிடம் சரியான தமிழ் பான்ட் இல்லை

        • அன்பு எடிசன் அய்யாவிற்கு, பழைய பார்பனக்கதைகளில் வரும் கம்சன், கண்ணன் பிறந்தால் தனக்கு அழிவு என்று தெரிந்து கொண்டு பிறந்த எல்லா குழந்தைகளையும் கொன்றானாம். அது உண்மைய கதையா என்பதை இங்கு வாதிட விரும்பவில்லை. அனால், இன்று சரியான, உண்மையான கம்யுநிசம் பிறந்தால் தமக்கெல்லாம் அழிவு என்பதை தெரிந்து கொண்டு அனைத்து பாசிச, முதலாளித்துவ கம்சன்களும், அதை தடுக்க எல்லா வித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்கள். பிறந்த சில குழந்தைகளையும் கொன்று புதைத்து விட்டார்கள்.

          சற்று சிந்தித்துப்பாருங்கள்…புரட்சி நடந்து வெகு சில ஆண்டுகளிலேயே, முன்னேறிய நாடான அமெரிக்காவுடன் போட்டியிடும், அதனை பல சாதனைகளில் வென்று விடும் அளவிற்கு இருஷியா முன்னேறியது…தங்களுக்கு நினைவிருக்கலாம் என்று நினைக்கிறேன்…புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதிலும், தொழில் முன்னேற்றத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும், எவ்வாறெல்லாம் வளர்ந்தது என்பதை நான் அல்ல…வரலாறு சொல்லியிருக்கிறது. அதை, அந்த வளர்ச்சியை கண்டு பொறுக்காத அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், அந்த குழந்தையை கொள்வதற்கு துடித்துக்கொண்டிருந்தனர்…கொன்றும் விட்டனர்…

          அப்போ கம்யுனிசம் வெற்றி பெற வழியே இல்லையே…ஏன் இந்த மெனக்கெடல் என்று கேட்கிறீர்களா?? உங்கள் பழைய கதையில் கண்ணன் பிறந்தானே…அந்த நம்பிக்கை தான்…கம்யுனிசம் வெற்றி பெரும்…வெற்றி பெற வேண்டும்…வெற்றி பெற்றால் தானே நன்மை…???

          ஒரு சிறு உளி கொண்டு ஒரு பெரும் மலைய தகர்க்கும் ,முயற்சி…ஒவ்வொரு மணித்துளியும் தகர்த்துக்கொண்டு இருக்கிறோம்…மலை வளர வாய்ப்பே இல்லை…என்றோ ஒரு நாள் மலையை முழுவதும் தகர்த்து விடுவோம்…அப்போது நீங்கள் சொன்னது போல பாலாரும் தேனாறும் ஓடப்போவது இல்லை…அது போல முட்டாள்தனமான பொய்கதைகளை சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் வேதம் எழுத வில்லை…ஆனால் கண்டிப்பாக, மக்கள் அனைவரும் பசி பட்டினியின்றி இருப்பார்கள்.

          தோழர் வினவு சொன்னது போல, இதெல்லாம் எழுதி தெருந்துகொள்கிற விஷயங்கள் இல்லை…தங்களுக்கு உண்மையாகவே மக்கள், தங்கள் பின் வரும் சந்திதியினர் மகிழ்ச்சியோடும் சிறப்போடும் இருக்கவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், ஏன் நேரில் விவாதிக்கக்கூடாது…? நீங்கள் சொல்வது சரி என்று எங்களை ஒப்புக்கொள்ள வைத்தால், நாளையே வினவு தளத்தை மூடி விடலாம்…அதற்க்கு நானும் உடந்தை கொள்கிறேன்…

        • இவர்கள் கூப்பிடும் இடத்திற்கு நேரிலே போகவே போகாதீர்கள், கம்யுநிசத்தின் வழியே வன்முறைதான். Gulag Archipelago என்ற நூலைப் படியுங்கள், இவர்களின் வன்முறை சார்ந்த மூளைச் சலவை புரிய வரும்.

          கம்யுனிசம் ஒழிந்ததே அது தனி மனித உரிமைக்கே எதிரானது என்பதனால் தான். சும்மா மேலை நாடுகள் ஒழித்துவிட்டன என்று ஒப்பாரி வைக்கிறார்கள். ரஷ்யாவில் அறுபது வருடங்கள் மன்றாடிய பிறகே இந்த டுபாக்கூரை எல்லாம் மக்களே ஏறக்கட்டினர்.

          முதலாளித்துவ ஜனநாயகத்தில் தனி மனிதனின் சிந்தனைக்கும் உயர்வுக்கும் உரிமை உண்டு, கம்யுநிசத்தில் மனிதர்கள் சிந்திக்க கூட உரிமை கிடையாது. சிவப்பான வன்முறை இவர்கள் ஆயுதம்.

        • ஆமாம்…நாங்கள் எல்லாம் நேரில் வந்தால்தான் வன்முறை செய்வோம். ஆனால் உங்கள் முதளித்துவ மனித உரிமை அப்பாவி மக்களை கூட்டம் கூட்டமாத்தான் கொல்லும்…எங்கிருந்தாலும்…குழந்தைகளைக்கூட விட்டு வைக்க மாட்டீர்களே அய்யா…

          கம்யுநிசத்தை ஏறக்கட்டிவிட்டுத்தான் இருஷ்யப்பெண்களெல்லாம் உலகெங்கும் விபச்சாரிகளாக உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

          எப்படி மக்களை கொள்ளை அடிக்கலாம், யாரையெல்லாம் கொலை செய்யலாம், எந்த நாட்டின் மீது படை எடுக்கலாம், எந்த மக்கள் நலிந்தவர்கள்…அவர்களை எப்படி துன்புறுத்தலாம்…பிரமாதம் அய்யா உங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தில் தனி மனிதனின் சிந்தனை!!

      • வந்துடாத எடிசன். ஸ்டாலினும் லெனினும் கத்துக்குடுத்த வழியில எங்க்லாவது மூத்திர சந்தில வச்சு உன்னைய அடி பின்னி எடுப்பாங்க வினவு குழுமம். கம்மூனிசம்= அரசபயங்கரவாதிகள்

        • என்ன Lima, Edison திருந்திட்டா எங்க உங்களுக்கு மூதிரச்சந்துல அடி விழுமோன்னுதானே பயப்படுறீங்க.
          Edison, நாங்க எல்லாரும் உங்கள போல என்னன்னு புரியாம இருந்தவங்கதான்…Lima போல ஆட்கள் இருகிறவரைக்கும், கம்யுனிசம்னா என்னன்னே புரியாம, சும்மா எதிர்கனும்னே பேசுறது…

  8. ஓட்டுப்பொறுக்கிகள்
    கூட்டணி, பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு, ஒரு சான்ஸ் கொடுங்க, மக்கள் நலன், ஆட்சியில் பங்கு
    என மக்கள் தலையில் மீண்டும் மிளகாய் அரைக்க கிளம்புற நேரத்தில் சிபிஎம் போலிகளை திரைக்கிழிக்கும் கவிதை மிக பொருத்தும்….

    படம் சுப்பரப்பூ

  9. அது சரி, கம்யூணிஸதிற்கும் கைபிள்ளைக்கும் என்னய்யா சம்பந்தம். இவங்க படத்தை போட்டாதான் எதுவும் விலைபோகும் என்ற முடிவுக்கு நீங்களும் வந்துடீங்களா????

    • கம்யூனிசத்திற்கும் கைப்பிள்ளைக்கும் சம்மந்தம் இல்லைதான் ஆனா அம்மா சத்தியமா நானும் ரௌடி எனும் இந்த கைப்புள்ளைக்கும் கம்யூனிஸ்ட் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இந்த போலிகளுக்கும் சம்மந்தம் இருக்கு

    • கவிதை என்று எங்குமே குறிப்பிடவில்லையே தோழரே…அப்படியே குறிப்பிட்டிருந்தாலும் அது உங்களுக்கு தெரியப்போவதில்லை…ஏன் இந்த வீண் முயற்சி… கழுதைக்குத்தெரியுமா கற்பூர வாசனை….

  10. சிபிஐ(எம்) கட்சி கம்னிசம் மூலம் மக்களை முன்னேற்றும் பணியை செய்ய முயற்சி செய்தது உண்மை என்பதை மறுபதற்கில்லை… சிபிஐ(எம்) பார்வையில் மக்கள் என்றால் அது பார்ப்பனர்கள் மட்டுமே… அதனால் அவர்களை மட்டுமே முன்னேற்ற முயற்சி செய்து வருகிறார்கள்… சிபிஐ(எம்) கட்சியை சிபிஐ(பார்ப்பன) என அழைத்தால் மிக சரியாக இருக்கும்…

    சிபிஎம் கட்சியில் மனுதர்ம படி பி.ராமமூர்த்தி, ஜோதிபாசு போன்ற ஆதிக்க வர்க்கத்தினர் மட்டுமே தலைவர்களாகவும்… ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரான ஜீவா முதல் இப்போது ச.தமிழ்செல்வன் வரை ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஏவல் பணி செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்…

    வினவு தோழர்கள் பார்ப்பன கம்னிஸ்டுனான சிபிஎம் கட்சி பற்றி எழுதி என்ன ஆக போகிறது…

    இந்த பார்ப்பன கம்னிஸ்டுகளை நம்பிய மணலி கந்தசாமி, சுந்தரய்யா போன்றவர்களை 1950களிலும், பின்னர் ஜி.வீரய்யன் இப்போது இருக்கும் ச.தமிழ்செல்வன் போன்றவர்களை வர்ணாசிரம் பார்ப்பன சர்வாதிகாரம் மூலம் அடக்கியே வைத்துள்ளாகள்…

    முதலாளிகளை, மதவாதிகளை எதிர்ப்பதாக வாயளவில் மட்டுமே சொல்லி கொண்டு, சமூக நீதி, தேசிய இனங்களுக்கு எதிராகவே நடந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த சிபிஎம் என்கிற பார்ப்பன கம்னிஸ்டுகள்…

  11. சிலர் மேலே சென்று பின்னூட்டத்தை படிக்க முடியாது என்பதாலும், கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதாலும், மீண்டும் இறுதியில் தருகிறேன்…

    அன்பு எடிசன் அய்யாவிற்கு, பழைய பார்பனக்கதைகளில் வரும் கம்சன், கண்ணன் பிறந்தால் தனக்கு அழிவு என்று தெரிந்து கொண்டு பிறந்த எல்லா குழந்தைகளையும் கொன்றானாம். அது உண்மைய கதையா என்பதை இங்கு வாதிட விரும்பவில்லை. அனால், இன்று சரியான, உண்மையான கம்யுநிசம் பிறந்தால் தமக்கெல்லாம் அழிவு என்பதை தெரிந்து கொண்டு அனைத்து பாசிச, முதலாளித்துவ கம்சன்களும், அதை தடுக்க எல்லா வித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்கள். பிறந்த சில குழந்தைகளையும் கொன்று புதைத்து விட்டார்கள்.

    சற்று சிந்தித்துப்பாருங்கள்…புரட்சி நடந்து வெகு சில ஆண்டுகளிலேயே, முன்னேறிய நாடான அமெரிக்காவுடன் போட்டியிடும், அதனை பல சாதனைகளில் வென்று விடும் அளவிற்கு இருஷியா முன்னேறியது…தங்களுக்கு நினைவிருக்கலாம் என்று நினைக்கிறேன்…புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதிலும், தொழில் முன்னேற்றத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும், எவ்வாறெல்லாம் வளர்ந்தது என்பதை நான் அல்ல…வரலாறு சொல்லியிருக்கிறது. அதை, அந்த வளர்ச்சியை கண்டு பொறுக்காத அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், அந்த குழந்தையை கொள்வதற்கு துடித்துக்கொண்டிருந்தனர்…கொன்றும் விட்டனர்…

    அப்போ கம்யுனிசம் வெற்றி பெற வழியே இல்லையே…ஏன் இந்த மெனக்கெடல் என்று கேட்கிறீர்களா?? உங்கள் பழைய கதையில் கண்ணன் பிறந்தானே…அந்த நம்பிக்கை தான்…கம்யுனிசம் வெற்றி பெரும்…வெற்றி பெற வேண்டும்…வெற்றி பெற்றால் தானே நன்மை…???

    ஒரு சிறு உளி கொண்டு ஒரு பெரும் மலைய தகர்க்கும் ,முயற்சி…ஒவ்வொரு மணித்துளியும் தகர்த்துக்கொண்டு இருக்கிறோம்…மலை வளர வாய்ப்பே இல்லை…என்றோ ஒரு நாள் மலையை முழுவதும் தகர்த்து விடுவோம்…அப்போது நீங்கள் சொன்னது போல பாலாரும் தேனாறும் ஓடப்போவது இல்லை…அது போல முட்டாள்தனமான பொய்கதைகளை சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் வேதம் எழுத வில்லை…ஆனால் கண்டிப்பாக, மக்கள் அனைவரும் பசி பட்டினியின்றி இருப்பார்கள்.

    தோழர் வினவு சொன்னது போல, இதெல்லாம் எழுதி தெருந்துகொள்கிற விஷயங்கள் இல்லை…தங்களுக்கு உண்மையாகவே மக்கள், தங்கள் பின் வரும் சந்திதியினர் மகிழ்ச்சியோடும் சிறப்போடும் இருக்கவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், ஏன் நேரில் விவாதிக்கக்கூடாது…? நீங்கள் சொல்வது சரி என்று எங்களை ஒப்புக்கொள்ள வைத்தால், நாளையே வினவு தளத்தை மூடி விடலாம்…அதற்க்கு நானும் உடந்தை கொள்கிறேன்…

    • சபாஷ் ….1st டைம் ஒரு நல்ல கமெண்ட் படிக்கிறேன்
      யாரவது போட்டிக்கு தயாரா ??????

      @அலெக்ஸ்
      நல்ல வேல நாலு வரில கமெண்ட் முடிந்தது …. மனதிற்கு நிம்மதி

    • எங்களைத்தவிர யார் என்ன சொன்னாலும் அது பிழை என்று சொல்வதுதானே கம்மூனிசம். பிறகு எப்படி? அப்படி இருந்ததாலதான் அழிஞ்சீங்க. அமெரிக்கா ஒன்னும் அழிக்கல. ஸ்டாலின், லெனினின் கட்டுக்கடங்காத அராஜகம்தான் ரஷ்ய வீழ்ச்சிக்குக் காரணம். ஸ்டாலினே மேலானவர் என்று சொல்லி அவர் படங்களை வணங்கிய ஆட்கள்தானே கம்மூனிசுக்கள்

    • நான் கேட்ட எதற்குமே நீங்கள் நேரான அதற்குரிய பதிலை அளிக்கவில்லை, ஆனால், நீங்கள் வழக்கமாக கடைப்பிடிக்கும் மூளைச்சலவை மெத்தடை முயர்ச்சிக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டத்தில் வெற்றி பெறாத பயன் தராத உங்கள் வழிமுறைகள் நாளை என்றோ ஒரு நாள் வெற்றி பெரும் எப்படி நம்பி கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை அய்யா. இன்றைக்குள் உள்ள சிஷ்ட்டதில் உள்ளே வந்து அதை திருத்தி மக்களுக்கு நன்மை கிடைக்க நீங்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது.

      • முதலாளித்துவத்தின் கொடுமைகளை அனுபவித்தறியாதவர் போலும் நீங்கள்…அதுதான் இப்படி அப்பாவித்தனமாகப் பேசுகிறீர்கள். பசி அறியாத பணக்கார வீட்டுக்குழந்தைகள், சில சமயங்களில் பசித்தால், என்னவென்று புரியாமல் ‘வயிறு வலிக்குது’ என்று தான் சொல்லும்…

      • கம்யூனிஸ்ட்டில் ஒரிஜினல், மிக்ஸட், டுயூப்ளிகேட் என்றெல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட் என்பவன் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தனது சுயநலத் தேவைகளும் பூர்த்தியாகவேண்டும் என்று விரும்புபவன். மாறாக உங்கள் போல் முதலாளித்துவ சிந்தனை நிரம்பியவர்கள் உங்கள் தேவைக்குப் பின் மற்றவர்களுக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்படாதவர்கள்.

        உதாரணமாக பம்பாய். பம்பாயின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு சேரிகளில் வாழந்து கொண்டும், மீதமிருக்கிற பங்கான நடுத்தர குடும்பத்தினரில் அநேகமாக எல்லோரும் 10க்கு எட்டு அடி அறைகளில் பகலில் 10 பேர், இரவில் பத்து பேர் வசிக்கும் இடங்களாக உள்ள அபார்ட்மெண்ட்களில் வாழ்க்கையை ஒட்ட, அம்பானி மட்டும் 27 மாடிகள்(ஒவ்வொரு மாடியும் 2 அபார்ட்மெண்ட் மாடி உயரம்..எனவே 44 மாடிகள்) கொண்ட கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டியிருக்கும் வீடு கட்டியிருக்கிறான். இவன் ஸ்பெக்ட்ரமிலும், 1Gயிலும் சல்லிசாக லைசென்களை அள்ளி பல்லாயிரம் கோடிகள் லாபம் பார்த்தவன். இதற்கு எத்தனை பேரை கூட்டிக்கொடுத்து, எத்தனை பேருக்கு குழிதோண்டி, எத்தனை பேருக்கு மேலுலக டிக்கெட் வாங்கிக் கொடுத்தான் என்று சிபிஐ போல் தோண்டிப் பார்த்தால் இவன் தான் மிக மோசமான தீவிரவாதி என்று நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் பாருங்கள் இவன் போட்டிருக்கும் கோட்,டை, மன்மோகன் சிங்குடன் பேச்சு, உங்களுக்கு பேச நிமிஷத்திற்கு 10 பைசா என்று சிம்பிளாக இவனுடைய கொலைகளை, ஏமாற்றுகளை பிசினஸ் போர்வையில் மறைத்துவிடுகிறான்.

        பிஎஸ்என்எல் இவ்வளவு லைசென்ஸையும் இந்த திருட்டுப் பயல்களுக்கு கொடுக்காமல் அதுவே நடத்தியிருந்தால் இன்னும் பல்லாயிரம் குடும்பங்கள் அரசு ஊழியர்களாக ஆகியிருப்பார்கள். இரண்டு லட்சம் கோடிக்கும் மேல் அரசு கஜனாவில் பணம் வந்திருக்கும். பிஎஸ்என்எல் 28 மண்டலங்களாகப் பிரிந்து பெரும் அரசுத் துறையாக மாறியிருக்கும். உங்களுக்கும் பதிவு செய்து இரண்டே நாளி்ல் இப்போது போல தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கும்.

        உலகில் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. சில பல கட்சிகள் பெயரளவில் கம்யூனிசத் தத்துவப் பெயர்களை வைத்துக்கொண்டு முற்றும் முரணான செயல்களும் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றைத் தான் போலி, டுயூப்ளிகேட் என்று விமர்சனம் செய்கிறார்கள். அரசுத்துறையில் லஞ்சம் லஞ்சம் என்று புலம்பும் நீங்கள் அரசு ஊழியர் எவராவது தனியாக பல்லாயிரம் கோடி லவட்டியதாக கேள்விப்பட்டதுண்டா. இந்தத் தனியார் துறைக்காரனுடன் கூட்டுச் சேர்ந்து அவனுக்காக அரசுத்துறையை சீரழித்ததால் தானே இவ்வளவு ஊழல்கள். அப்படி வந்த ஊழல்கள் தானே பெரும்பாலும். அரசுத் துறையை சீரழிக்க மறைமுகமாக தனியார்த்துறை முயன்றுவருவதன் விளைவுதானே இவை எல்லாம்?

        கியூபா கியூபா என்றொரு நாடு உண்டு. 15 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையைத் தாண்டி இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இது இத்தினியூண்டு நாடு. பெரிய வளங்கள் ஏதும் இல்லை. அமெரிக்கத் தடையால் தொழில் நுட்பங்கள் எதுவும் G7 நாடுகள் தருவது இல்லை. ஆனால் இந்நாட்டில் படிக்காதவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம். டாக்டர்களின் எண்ணிக்கை அதிகம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு. இந்த இத்தினியூண்டு நாட்டு அதிபரைத் தான் கொல்ல CIA நூறு தடவைகளுக்கு மேல் முயற்சி செய்து தோற்றிருக்கிறது.

        இன்று அங்கேயும் பொருளாதார நெருக்கடி. அதைச் சமாளிக்க அரசு வேலையிலிருந்து சில லட்சம் பேரை நீக்கியுள்ளனர். நம்ப இந்தியாவில் எத்தனை கம்பெனி இழுத்து மூடினான், எத்தனை லட்சம் பேர் வெளியே போனான், எத்தனை லட்சம் குடும்பம் நாசமாப் போனது என்று எதுவும் சொல்லாமல் கமுக்கமாக விட்டுவிட்டு பொருளாதாரத்தை நட்டுகிட்டு நிப்பாட்ட மன்மோகன் இந்த அம்பானிகூட போய்ப் பேசிக் கிழிச்சு கடைசியில் பொருளாதாரம் படுத்த 2008 லும் அம்பானிக்கு மட்டும் லாபம் 30 சதவீதம். லட்சக் கணக்கான வேலை போன மத்தவங்க எல்லாம் நடுரோட்டுல நின்னுக்கிட்டு அடிவயித்த தடவிக்கிட்டே கத்திகிட்டே இருக்கவேண்டியது தான். இவுங்க கூட ஏற்கனவே வேலை இல்லாம நடு ரோட்டில நிக்கிறவங்களும் சேர்ந்து கத்த தெம்பில்லாம முணங்கிக்கிட்டு இருப்பவங்களும் நிப்பாங்க. பிரச்சனை என்னன்னா இந்த லட்சக்கணக்கான பேரும் அம்பானி மாதிரி ஆட்கள் ஏதாவது சின்ன ‘ரொட்டி’த் துண்டு போடுவானா என்று வாயைப் பிளந்துகொண்டு பார்த்து, அது கிடைத்ததும் உடனே நிறம் மாறி “அம்பானிக்கு ஜே” என்று கோஷம் மாற்றிவிடுவது தான்.

        கியூபால என்ன பண்ணினாங்க? அரசு அறிவிக்கிறது இது போல அரசுத்துறையில் இருந்த சில லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்படப் போகிறார்கள் என்று. இவுங்க எல்லோரையும் அம்போன்னு உடலை. அவர்கள் அனைவருக்கும் சிறு தொழில்கள் செய்ய அரசு உதவி செய்கிறது. இதுவரை தனியார்த் துறையே சிறு ஹோட்டல்கள் அளவில் மட்டும் அனுமதித்த கியூபா இன்னும் வேறு சில தனிமனித விருப்பம் சார்ந்த முதல் பல்லாயிரம் கோடியாகக் குவிய வாய்ப்பில்லாத தொழில்களில், அதாவது ‘சிறு அளவில், கண்காணிக்கப்படும் விதத்தில் சிறு தொழில்களை தனியார் செய்ய வைப்பது’ என்கிற கம்யூனிச முயற்சியின் வெளிப்பாடே அது. இவ்வளவு இருந்தும் நீங்கள் நினைப்பது போல் ‘சோறின்றி யாரும் சாகவில்லை’ அங்கே. ஏன்னா அவை அடிப்படை உரிமைகள். இங்க ஒரு நாளைக்கு சரியா சாப்பிடாம செத்த குழந்தைகள் கணக்கு எடுத்துப் பாருங்க ஐயா அப்போ தெரியும் அம்பானி எவ்வளவு குழந்தைகளை புதைச்சி வீடு கட்டியிருக்கான்னு.

        ப்ளாக் எழுதிக் கிழிக்க முடியுமா என்று சவால் விடும் நீங்கள் ஜூலியன் அசாங்கே விக்கிலீக்ஸில் அமெரிக்க எம்பசியின் கேபிள்களை வெளியிட்டதற்காக இன்டர்போல் வைத்து நாடு நாடாக விரட்டி விரட்டிக் கைது செய்த போது என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்? இருந்தாலும் கம்யூனிச நாடுகளில் பேச்சுச் சுதந்திரம் தடை செய்யப்படவே இல்லை என்றும் நான் கூறப்போவதில்லை. இது நடக்கத்தான் செய்கிறது. அந்தத் தவறு கம்யூனிச நாடுகளில் உண்டு. அதைச் சரி செய்யவேண்டும். என்னதான் துர்ப்பிரச்சாரம் பற்றிய பயம் இருந்தாலும் கம்யூனிசம் அதையும் தாண்டி வளர முடியும் நிலை உருவாகும் நாளில் தான் மக்களை அது உணர்வு பூர்வமாகச் சென்றடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

        மற்றபடி உங்களைப் போல ‘எதிர்காலத்தில் நானும் ஒரு அம்பானி’ என்கிற மனோநிலை தான் அம்பானிக்கும், டாடவுக்கும் ஆதரவாக, உங்களைப் போன்ற ஆட்கள் பீஸ் இல்லாமல் ஆஜராகி வாதாடும் லாயர்களாக உருமாற்றியுள்ளது. இதை எல்லாம் மாற்றுவதற்கு புதிய ஜனநாயகம் போன்ற சிறிய கட்சிகள் தான் தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து வருகிறார்கள். அது ரொம்பக் கடினம் என்கிற போதும்.

  12. உண்மையின் சிறப்பம்சம் என்னவென்றால், அது எப்பவும் போலியை காட்டிக்கொடுப்பதுதான். போலியின் சிறப்பம்சம் என்னவென்றால் அது எப்பவும் உண்மையை காட்டிக்கொடுக்காததுதான். இங்கே ‘காட்டிக்கொடுப்பது’ என்று நான் சொல்ல வருவது அவதூறு ஊடாக அல்ல; விமர்சனத்தின் ஊடாக.

  13. எடிசன், இன்றைக்குள்ள சிஸ்டத்தை வைததுக் கொண்டால் மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அதிகாரத்துவத்துக்கு கீழ்படிவதில்தான் கொண்டு போய்விடும்.

    • கம்யுனிச ஆட்சி வந்துவிட்டா l மக்களுக்கு என்ன அதிகாரம் கிடைத்து விடும். இப்போ உள்ளது கூட போய்விடுமே. சீனா, கியூபா, வடகொரியா நாடுகளில் என்ன வாழுகிறது. அரசுக்கு எதிராக மூச்சு கூட விடமுடியாதே. ராணுவ டாங்கி வைத்து நசுக்குவதை தானே பார்க்கிறோம்.

      • நீங்கள் குறிப்பிட்டவைஎல்லாம் கம்யுனிச நாடுகள் என்று யார் சொன்னது?? முதலாத்துவ நாடுகள் கம்யுனிசம் குறித்து மக்களின் மனங்களின் பயத்தை ஏற்படுத்த இவ்வாறான போலி கம்யுனிச நாடுகளைத்தான் ஊடகங்களின் வழியாக காட்டிக்கொண்டிருக்கின்றன…

        உண்மையில் தோழர் இலெனின் என்ன செய்தார், மார்சியத்தின் தாத்பரியம் என்ன என்பதை தாங்கள் உணராத வரை இப்படித்தான் வாதம் செய்யத் தோன்றும். நானும் உங்களை விட பயங்கரமாக, இன்னும் பல மடங்கு மோசமாக, கம்யுனிசத்திற்கு எதிராக வாதம் செய்தவன் தான்….

        • \\நீங்கள் குறிப்பிட்டவைஎல்லாம் கம்யுனிச நாடுகள் என்று யார் சொன்னது?? //

          அப்ப அங்கேயும் கம்யுனிசம் புட்டுகிச்சா.. அப்ப ஏன் இல்லாத சரக்கை விலை கூவி விற்று கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கே காமெடியாக படவில்லையா. போங்க சார் உருப்படியாக வேறு ஏதானும் பிரயோஜனமாக செய்யுங்கள் சார். உங்கள் பொன்னான சக்தியை விரலுக்கு இறைத்த நீராக வீணாக்காதீர்கள்.

        • மிஸ்டர் எடி
          வெற்றியடையாத வழி என்பது மட்டும்தான் உங்களுக்கு கம்யூனிசத்தின் மீது வெறுப்பு வர காரணமா? அப்படியானால் நீங்கள் கம்யூனிசம் வரவில்லையே என்ற விரக்தியில் இருப்பதாக வைத்துக்கொள்ளலாமா? பொதுவுடமை கொள்கை வெற்றி அடைய வேண்டுமா? இல்லையா? அதன் தேவையிருக்கிறதா இல்லையா என்பதே என்னுடைய கேள்வி? அறிவியல் கண்ணோட்டம் இல்லாத வெற்று சொல்லாடல்களால் ஒரு பயனுமில்லை எலிசன்,

          //வினவு தாசில்தார் அய்யா அவர்களே, ஒரிஜினல் கம்யுனிஸ்டு என்று ஒரு செர்டிபிகேட் வாங்க எவ்வளவு செலவாகும் அதற்க்கு
          வழிமுறைகள் என்ன சார்?//

          கிறுக்குத்தனமான உளரலையெல்லாம் கேள்வியாக எதிர்கொள்ளமுடியுமா எடி?

  14. வினவு தோழர்கள் இது போன்று மேம்போக்காக சிபிஎம் போன்ற ஒத்த கருத்துடைய இயக்கங்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது. காங்கிரஸை விட, பிஜேபியை விட சிபிஎம் மின் நோக்கங்கள் மக்களை மையப்படுத்தி இருப்பது என்கிற காரணம் முக்கியமானது. அவர்களின் வழிமுறைகளில் உங்களுக்கு முரண்பாடு இருப்பது உண்மையெனினும் அதில் நுணுக்கமாக விமர்சனங்களை வைப்பது தேவை.

    ஜெவை ஆதரிப்பது ஏன் என்பதற்கு சிபிஎம் வைக்கும் வாதம் என்ன? அரசியல் பாதையில் தற்போது கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்ட்டுகளாக மாறி விட்ட திமுக, காங்கிரஸ், பிஜேபியை அதிகாரத்திலிருந்து நீக்க தற்போதைய மாற்று மக்கள் சக்தியாக உள்ள அதிமுகவை ஆதரிப்பது ஒன்றே வழி என்பது அவர்களின் வாதம். அதில் ஏதாவது மாற்று உள்ளதா? ஜெவும் ஒரு கார்ப்பரேஷன் ஏஜெண்ட் ஆகக் கூடியவர் தான் என்பது அவர்கள் உணராதது அல்ல. ஆனாலும் அவரை ஆதரிப்பது தவிர வேறு வழி இல்லை. இது இந்த அரசியல் சூழலில் தவறு என்றால் அவர்கள் வேறு எப்படிச் செயல்படவேண்டும் என்று மாற்றுக் கருத்துக்களை நீங்கள் வைக்க முயலவேண்டும். அவர்களின் பாதை வேறாக இருந்தாலும் அப்பாதையிலாவது அவர்கள் சரியாகப் போகிறார்களா என்பதை வினவுத் தோழர்கள் கூர்ந்து விமர்சிக்கவேண்டும். அதுதான் முகமறியா நண்பர்களை வழி நடத்தும் விதம்.

    மற்ற போராட்டங்களில் தேவையான இடங்களில் அவர்களோடு சேர்ந்து போராடவும் வினவுத் தோழர்கள் முன்வரவேண்டும். காங்கிரஸூம், சிபிஎம்மும் உங்களுக்கு ஒன்றே என்றால் அது கண்மூடித்தனமான பார்வை என்பதை நீங்கள் உணரவேண்டும். குறைந்த பட்சம் சிபிஎம் போன்ற கட்சிகள் உங்கள் எதிரிகளல்ல என்றாவது உணரவேண்டும்.

    சிபிஎம், வைகோ, சீமான், பெரியார் திராவிட கழகம் போன்ற கட்சிகள் வெவ்வேறான பாதை கொண்டவை என்றாலும் அவர்கள் ஆளும் சக்திகளுக்கு எதிராகச் செய்யும் செயல்கள் தேவையானவை. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவை. எனவே அவர்களை ‘தூரத்து நண்பர்கள்’ என்றாவது நீங்கள் கருதவேண்டும்.

    இக்கட்சிகளோடு நீங்கள் உட் சண்டையிட்டுக்கொண்டாலும் பொதுத் தளங்களில், மக்களிடத்தில் நீங்கள்(சிபிஎம், புஜ,ஈழப்பிரச்சனையில் வைகோ, சீமான்) எல்லோரும் ‘ஒரே அணி’ என்கிற உணர்வு ஏற்படும்படி உங்கள் எழுத்துக்களும், செயல்பாடுகளும் அமையவேண்டும்.

    இப்படிச் செயல்படுவது தான் உங்களின் அரசியல் மக்களைப் பெருமளவில் சென்றடையும் என்பது என் கருத்து.

    • மிஸ்டர் அம்பேதன், சூப்பர் வாதம் உங்களோடது. இத விட அழகா கம்யுனிஸ்டுகளை தோலுரிக்க முடியாது. அப்பப்ப ஒரு நிலை எடுத்து ஓடற வண்டியில் ஏறிக்கினு கேட்டா அதுக்கு தலைய சுத்துற மாதிரி ஒரு விளக்கம் கொடுத்து நழுவிக்கலாமே. அம்பானிய ஒழிக்க டாடா கூட சேர்ந்துக்கலாம், அதுக்கப்புறம் டாடாவை ஒழிக்க வேதாந்த கூட சேர்ந்துக்கலாம்.. அடடா என்ன ஒரு அருமையான யோசனை..

    • கேட்க மறந்து விட்டேன் நம்ம மரம்வெட்டி பெரிய அய்யா உங்கள் சிநேகிதரா..

    • அம்பேதன் என்ன பேசுகிறீர்கள்
      சிபிஎம்மோடு ஒத்தகருத்தா? யாருக்கு!
      சிபிஎம்முக்கும் வினவுக்கும் எதாவது ஒரு ஒத்தகருத்து இருக்கும் என்று கூட நான் எண்ணவில்லை.

      //அவர்களின் பாதை வேறாக இருந்தாலும் அப்பாதையிலாவது அவர்கள் சரியாகப் போகிறார்களா என்பதை வினவுத் தோழர்கள் கூர்ந்து விமர்சிக்கவேண்டும். அதுதான் முகமறியா நண்பர்களை வழி நடத்தும் விதம்.
      மற்ற போராட்டங்களில் தேவையான இடங்களில் அவர்களோடு சேர்ந்//

      அவர்கள் போகும் பாதை ரத்தகறை படிந்த துரோக பாதை, சிங்கூரிலும் நந்திகிராமிலும் சிபிஎம் குண்டர்கள் செய்த படுகொலைகள் எத்தனை, பாலியல் வன்புணர்ச்சிகள் எத்தனையென்று தெரியுமா? அங்கே இவர்கள் நடத்தும் படுகொலைகளுக்கு பக்கமேளம் வாசிப்பவர்கள்தான் மற்ற மாநில் சிபிஎம் கட்சியினர். இவர்களோடு உடன் படுவது கம்யுனிசத்திற்கு எதிராக நிற்பதாகும்,
      நந்திகிராம் படுகொலைகளை எதிர்த்து ஒத்து போராட கூப்பிட்டால் சிபிஎம் வருமா?

      • Yes I tried once with a CPM- DYFI District Secretary . We spoke lot on principles and activities.
        But suddenly he said TUQLAK SO. is good politician. Then I stopped arguing with him.

        How can we change their direction by advice, when they have such PIKKALI mind set.

        They should learn all principles from Marx, Engels , Lenin , Mao.

        But they learn tactics from DMK, ADMK ! How can we advice.

  15. ஒரு தமிழ் வலதுசாரி, முதலாளித்துவ ஜனநாயகம் என்றால் என்ன? முதலாளித்துவ ஜனநாயகத்தில் வன்முறை இல்லை என்கிறீர்களா? ஆனால் கம்யூனிச சமுதாயத்தில் மட்டும்தான் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அந்த சமூகத்திற்குமான உறவு என்பது சுமூகமாகவும், இயல்பாகவும், வன்முறையற்றும் இருக்கும். அதேசமயம் மனித சமூகத்திற்கும், இயற்கைக்கு மட்டுமே வன்முறை இருக்கும். அதிலும் வர்க்க பேதமற்ற மனித இனமே மேலாண்மை செலுத்தும். விஞ்ஞான வளர்ச்சி அத்தனையுமே மனித இனத்தின் உழைப்பு நேரத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிச சமூகத்தில் மக்கள் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்வதோடு, ஒழுங்குபடுத்திக்கொள்வது, நிர்வகித்துக்கொள்வது என மனித இனம் இது வரை கண்டிராத ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். இந்நிலையை அடைவதற்கு சில இடை கட்டங்கங்களை கடக்க வேண்டும் என்பது முன் நிபந்தனை. என்றாலும் அதற்கான கருத்தியலுக்கு வர பல்வேறு விவாதங்கள் மிக அவசியம். ஏனெனில் இது தொடர்பான விவாதமுறையை முதலாளிததுவமும், போலி கம்யூனிசமும் விரும்பாது. நடத்தாது. அதனால்தான் கம்யூனிசத் தத்துவத்தை தமது கல்வி முறையில் வைக்காமல் மூடி மறைக்கிறது. இவ்வுலகில் கதாநாயகன் என்பது மக்களே என்று பறைசாற்றும் கம்யூனிசத் தத்துவம் ஒன்றே வெல்லற்கரியது.

    • சார், நீங்கள் சொல்வது மார்க்சிய கம்யுநிசத்தின் அடிப்படை ‘தியரி’யின் உயர்வுகளை – அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மார்க்ஸ் சொன்ன உண்மையான தூய கம்யுனிசம் தோன்ற வேண்டுமென்றால் முதலில் ஜனநாயகமும் தனி மனித உயர்வும் நிஜமாக நடைபெறவேண்டும். தயவு செய்து ‘தாஸ் கேபிடல்’ மூன்று பகுதிகளையும் படித்துவிட்டு நான் சொல்வது சரிதானா என்று சொல்லுங்கள்.

      லெனின் ஸ்டாலின் மாவோ முதல் வினவு வரை எல்லா அரை வேக்காட்டு கம்யுனிஸ்டுகளும்ம் இதனை வர்க்க போர் என்றும், தொழிலாளர் உரிமை என்றும் சொல்லி மழுங்கடித்துவிட்டனர். (மீண்டும் சொல்கிறேன் உங்கள் எழுத்தைப் பார்த்து, உங்கள் நோக்கத்தை நம்பி – ஒரு உண்மையான கம்யுனிஸ்ட் என்றால் தயவு செய்து ‘தாஸ் கேபிடல்’ மூன்று பகுதிகளையும் படியுங்கள்).

      சாம்பார் சாதம் செய்ய முதலில் அரிசியை வேக வைக்கவேண்டுமே என்பது என் வாதம். இல்லை வேகாத அரிசியிலேயே வைப்பேன் என்றால் என்ன செய்வது ?

      • இன்னா நைனா டமுல் வல்துசாரே ?..

        மூலதனம் பத்திலாம் பேசுற சாரே … சரி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ப்ட்சிருக்கியா நைனா ?..

        படி .. அப்புறம் பேசு நைனா …

        அய்யா பொதுசனங்களே … டமுல் சாருக்கு அல்லாமே தெரியுமாம் .. டாஸ் காபிடல் மூனும் பட்சிருக்காராம் …

        பெர்ய ஆளு சார் நீ …

        • அய்யா காட்டாரே, நீ மார்க்சை படிக்காத மேதைதான்…அதற்காக அவரைப் படித்தவனை எல்லாம் பழிக்காதே. நான் எல்லா கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையையும் படித்தவன், படித்துவிட்டு கக்கா துடைக்க பயன்படுத்தியவன். நீங்கள் எல்லாம் வைத் திறப்பதே தவறு 🙂

  16. சி.பி.எம். ஒரு ஓட்டுக் கட்சி.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஏழை மக்களுக்கு சேவை செய்ய யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதும்.தொண்டர்களைக் கருதச் செய்யும் ஒரு கட்சி.இப்போது அந்தக் கட்சிகள் விரும்பினாலும் வேறு பாதையில் போக முடியாது.இதை அவர்கள் வாயால் அம்பலப்படுத்துவதைத் தவிர மாற்று பாதை இல்லை.அருமை, எளிமை தோழர் சன்முகம். எடிசன் போன்றவர்கள் னுனிப்புல் மேய்கிற எருமைகளைப் போல இருக்கிறார்கள்.அவர்களுக்கு கம்யுனிசமும் தெரியவில்லை அவர்கள் போற்றுகிற “ஜனனாயகமும்” தெரியவில்லை.அரைகுறையாகத் தெரிந்துகொண்டு எருமையைப் போல சேற்றை வாரிக்கொண்டுவருகிறார்கள்.எதையாவது முறையாகத் தெரிந்துகொண்டு திறந்த மனதுடன் விவாதிக்க வருவதே நல்லது.உலகில் பெரும்பான்மையாக உழலும் உழைக்கும் மக்களின் வாழ்வுக்காகப் போராட அறைகூவும் ஒரு சித்தாந்ததை கேலி செய்ய வருவது சரிஅல்ல.உஙகள் ஜனனாயகத்தின் முகவிலாசம் இதுதானா?இப்படி பேத்துவதற்க்கு ஜெ மோ பணம் தருகிறாரா?

  17. உண்மைதான் புதியவன், ஒரு தேடல் கண்ணோட்டமே இல்லாமல் ஒரு முன் முடிவோடே எதையும் பார்ப்பவர்களாக இந்த எடிசன், லிமா போன்றவர்கள் இருப்பதனால்தான் எந்த சப்ஜெக்ட பத்தி பேச ஆரமபிச்சாலும் கம்யூனிச எதிர்ப்பிலே வந்து நிற்கிறார்கள் அதுவும் தப்பு தப்பாக.

  18. ஒரு தமிழ் வலதுசாரி, முதலில் மனித குல விடுதலை என்பது கம்யூனிசத்தில்தான் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இதற்கு முதலாளித்துவ கட்டமைவை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதை ஏறறுக்கொள்கிறீர்களா? இதற்கு முன்னாள் சோசலிச ரசியா, சோசலிச சீனாவை முன் மாதிரியாக ஏற்றுக்கொள்கிறீர்களா? ………… ஆம் என்றால் உங்கள் விளக்கம் அதை உதாசீனப்படுத்துகிறது. இல்லை என்றால் மாற்றுத் தீர்வை முன் வையுங்கள். உங்கள் தீர்வை நான் பரிசீலிக்க தயார்.

    • இல்லை இல்லை இல்லவே இல்லை ! மார்க்ஸ் சொல்வது இது தான்: தனி மனித உழைப்பையும் உயர்வையும் விழையும் முதலாளித்துவ அமைப்பை பிடுங்க முடியாது, அதன் முன்னேற்றத்திலேதான் மனிதனின் எதிர்காலம் உள்ளது. முதலாளித்துவ அமைப்பு இசைந்து முன்னேறும் பொது கம்யுனிசம் என்ற கனவு தானாகவே மெய்ப்படும்.

      சோசியலிச சீனாவும் ரஷ்யாவும் இந்தக் கனவை சிதறடித்தன – கமிசார் என்ற பேரில் சர்வாதிகாரிகளும் அவர்களின் ரௌடிகளும் ஆட்சியைக் கைப்பற்றி மக்களை அடிமைகளாய் நடத்தினர். கலையும் இலக்கியமும் மனித சிந்தனையும் பாழாக, மக்கள் நடைபிணங்களாக மாறினர். இதுவே கம்யுனிச நாடுகள் எல்லாவற்றிலும் நடந்தது, முடிவில் மக்களின் போராட்டங்களால் வெளியேற்றப்பட்டது.

      கம்யுனிசம் என்ற பேரில் இன்றைய இந்தியாவில் உலவும் வக்கிரம் மிகவும் வெறுக்கத்தக்கது.

      • ஒரு தமிழ் வலதுசாரி, மனித சமூக அமைவின் கட்டமைவு செயற்கையானதாய் வடிவமைப்பின் கீழ் மக்களின் வாழ்வு சுபிட்சமாய் இருக்குமா? அல்லது இயற்கை பூர்வமாய் அமையும் ஒரு சமூக அமைப்பின் கீழ் மனித இனத்தின் வாழ்வு முன்னேறியதாய் இருக்குமா? முன்னது தனிவுடைமை. பின்னது பொதுவுடைமை என்றானப் பிறகு தாங்கள் விளக்கத்தின் படி “தான் ஒரு முதலாளித்துவ ஆதரவாளன்தான்” என்று ஏற்றுக்கொண்டு போங்களேன். இதிலிருந்தாவது நாம் விவாதிக்கலாம்.

        • சார், நீங்கள் இரு முன்முடிவுகளோடு பேசுகிறீர்கள் – (1) கம்யுனிசம் ஒரு இயற்கையான அமைப்பு, முதலாளித்துவ ஜனநாயகம் செயற்கையானது (2) எந்த ஒரு செயற்கையான அமைப்பும் நல்லதல்ல. ஒரு நல்ல கருதியல்வாதத்திற்கு எவ்வகையான முன்முடிவுகளும் நல்லதல்லவே ?

          நான் கண்டிப்பாக முதலாளித்துவ ஆதரவாளனே. இயற்கையில் மனிதன் சுதந்திரமானவன், வேண்டும் நேரத்தில் சமூக அமைப்பாக சேர்பவன் என்பதே எங்கள் தரப்பு வாதம். தேவைகளுக்காக கூடும் சமூக அமைப்பு தனி மனித உரிமைகளை பறிக்கக் கூடாதல்லவா?

        • தங்கச்சி, நான் அறிக்கையை படிதுவிட்ட்டு தான் பேசுகிறேன், நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. நாடு பிழைக்க நீங்களும் உங்கள் தத்துவங்களும் ஒழிய வேண்டும்.

    • தயவு செய்து உங்களது மேற்கோளின் மூல வாசகத்தையோ தமிழாக்கம் உங்கள் சொந்தச் சரக்காக இல்லாத பட்சத்தில் அதைத் தமிழில் வழங்கிய நூலையோ அடையாளம் காட்டுவீர்களாயின் உதவியாயிருக்கும்.

      • 1) Critique of Political Economy: “No social order ever disappears before all the productive forces for which there is room in it have been developed; and new higher relations of production never appear before the material conditions of their existence have matured in the womb of the old society itself. Therefore, mankind only sets itself such tasks as it can solve”

        2) Capital Vol II: “capitalism results in stable growth, possibly for hundreds of years. In essence, there need be no problem of general underconsumption. Capital goods can be shifted to the production of other capital goods, should demand for consumption goods decline. In this model, there are no cycles, no crises, no problems. Capitalism grows forever, without any cycles but in steady-state growth”

        மார்க்சின் சொந்த வார்த்தைகள் (ஆங்கில மொழிபெயர்ப்பை குறை சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்). மேலும் பல உதாரணங்கள் கொடுப்பேன்….எல்லாவற்றிலும் சாரம் ஒன்றுதான் – முதலாளித்துவத்தின் நன்மைகளின் எல்லைகளை அடைந்தபின் தான் கம்யுநிசத்தை பற்றியே யோசிக்க முடியும். 1870ல் மார்க்ஸ் இருந்த புராதன காலத்தில் இருந்த வாழ்க்கை நிலை வேறு, 2011ல் இருக்கும் நிலை வேறு. அன்றைய தொழிலாளரின் நொடித்த நிலையையும் இன்றைய வசதியான வாழ்வையும் ‘கம்பேர்’ செய்யவே முடியாது. இன்று மார்க்ஸ் இருந்தால் இவர்கள் எல்லாரையும் பார்த்து ‘நல்ல இருந்துட்டு போங்கடா’ என்பார்.

        • ஒரு தமிழ் வலது சாரி,
          ஒரு தனி மரத்தின் குணாம்சம் என்பது வேறு; பல தனி மரங்களைக் கொண்ட ஒரு தோப்பின் குணாம்சம் என்பது வேறு. இரண்டையும் அணுகும் முறையில் இரு வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டும். அதே போல் ஒரு தனி மரத்திற்கும், அந்த தோப்பிற்கும் இடையிலான உறவில் இருந்தும் அவைகளை நாம் புரிந்து கொள்ள் வேண்டும். இங்கே நான் தனி மரம் என்று சொன்னது ஒரு தனி மனிதனை. தோப்பு என்று சொன்னது சமூகத்தை. இவற்றில் நீங்கள் தனி மனிதனுக்குரிய பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறீர்கள். தோப்பு என்ற புற நிலை யதார்த்தத்தைய்ம், இவற்றுக்கிடையிலான் உறவையும் கணக்கில் கொள்ள மறுக்கிறீர்கள். அதனால்தான் வல்லரசுப் பாதையில் பயணிப்பதாகச் சொல்லப்படும் இந்தியாவில் எண்பது சதவீத மக்களின் தினக்கூலி வெறும் இருபது ரூபா என்றால் ஏன் இந்த யதார்த்தத்தைக் காண மறுக்கிறீர்கள்? ஒரு முதலாளித்துவ ஆதரவாளரிடம் இதை எதிர் பார்க்க முடியாததுதான். என்றாலும், நீங்கள் முதலாளி கிடையாதே. அநத தனி மனித சித்தாந்த கருத்துக்கு பலியாவர்தானே. இவ்வுலகில் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதியால் ஆளப்படுகிறது என்றானப் பிறகு சமூகம் மட்டும் இதற்கு தலைகீழாக இருக்க முடியுமா என்ன? சந்தைக்கான உற்பத்தி என்னும் முதலாளித்துவ உற்பத்தியை, சமூக(மனித) தேவைக்கான உற்பத்தியாக நேர் படுத்துவதுதான் அந்த அறிவியல் விதி, கம்யூனிச விதி. சூரியனை தனது கையைக் கொண்டு எப்படி மறைக்க முடியாதோ அதே போல் கம்யூனிசத்தை யாரும் த்டுத்து விட முடியாது.அது தியாகப் பூர்வமானது, உணர்வுப்பூர்வமானது. ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியில் மிக உயர்ந்த கட்டமான மனிதன் என்ற பண்பை வந்தடையும் நிலைதான் கம்யூனிசம். ஆனால் உயிரற்ற மூலதனத்திற்குத்தான் முதலாளித்துவ சமூக அமைப்பில் முழுச் சுதந்திரம் உண்டு. மனிதனுக்கு கிடையாது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. சரி, இப்படி அடுக்கினால், வாழ் நாள் முழுவதும் இதைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். மீண்டும் மைய விசயத்திற்கு வருவோம், நீங்கள் மக்களை நேசிப்பவராக இருந்தால், சமூகத்தை நேசிப்பவராக இருந்தால், நாட்டை நேசிப்பவராக இருந்தால் முதலாளித்துவத்தை ஆதரிக்க முடியாது. ஏனெனில் லாபத்தையும் முதலாளித்துவத்தையும் பிரிக்க முடியாது. மீண்டும் பரிசீலியுங்கள்.

        • சரியாக சொன்னீர்கள்.
          அப்படியே, கடந்த நூறு வருடங்களில் உலகம் எவ்வளவு மாறியுள்ளது என்பதற்கு இந்த இரண்டு யூ-டியூப் வீடியோவையும் பார்த்து விடுங்கள்.

          http://www.youtube.com/watch?v=Pf8d4NE8XPw

        • மேக்னாட் தேசாய் என்னும் இலண்டன் பொருளாதாரப் பேராசிரியர் எழுதிய புத்தகத்தில் கக்கிய அபத்தங்கள் இவை….

          குறிப்பாக இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பல்வேறு தளங்களிலும் விரிவாக அளிக்கப்பட்டிருக்கும் பதில்கள் இங்கே. படித்து மேலும் விவாதிக்கலாம்.

          Meghnad Desai has published a book, Marx’s Revenge in which he poses a fundamental question for Marxists – could capitalism go on for ever? The short answer to this is that capitalism will last until such time as it is overthrown through socialist revolution, conscious action by millions of people.

          http://www.marxist.com/revenge-desai-part-one010805.htm

          http://www.revleft.com/vb/desais-marxs-revenge-t81584/index.html?s=a6fe1e85cd9cda27de2c2905d485e470&p=1174415

          http://mises.org/misesreview_detail.aspx?control=214

          அப்படியே தேசாயின் முகம் காண:

          http://www.hindu.com/mag/2009/05/31/stories/2009053150030200.htm

      • தமிழ் வலதுசாரி,
        உங்களது கேற்கோள்கள் எவ்வாறு
        “….(முதலாளித்துவ) அமைப்(பி)ன் முன்னேற்றத்திலேதான் மனிதனின் எதிர்காலம் உள்ளது. முதலாளித்துவ அமைப்பு இசைந்து முன்னேறும் பொது கம்யுனிசம் என்ற கனவு தானாகவே மெய்ப்படும்.”
        என்று வாசிக்கப்படக்கூடும்?

        ஒரு அசட்டுப் பின்னவீனத்துவவாதிக்குக்க் கூடக் கடினமான ஒரு விளக்கத்தையல்லவா முன் வைத்துள்ளீர்கள்.

  19. அம்பேதன்,
    ///கம்யூனிஸ்ட் என்பவன் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தனது சுயநலத் தேவைகளும் பூர்த்தியாகவேண்டும் என்று விரும்புபவன்.///
    இதையே சற்று மாற்றி சொன்னால் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, “சமூகத்தின் ஒட்டு மொத்த நலனில் என்னுடைய நலன் அடங்கியுள்ளது” என்று சிந்திப்பவன்தான் கம்யூனிஸ்ட்.

  20. வினவு
    அப்படியே புதிய கலாச்சாரத்தில் வெளியான “இனி இவர்களிடம் பேச என்ன இருக்கிறது ?” என்ற கவிதையும் மீள் பதிவு செய்யவும்.
    அந்த கவிதையை இணையத்தில் தேடித் பார்த்தேன் எங்கும் காணவில்லை.
    அது வெளியான போது கருணாநிதியாலும் தினமணியாலும் மேற்கோள் காட்டப்பட்டதாக நினைவு.
    பின்பு அதற்கு பதிலடியாக “போலிகளால்” நாய்களின் ஓலம் என்ற கவிதை தீக்கதிரில் வெளியானது என்பதும் நினைவில் உள்ளது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க