privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழல் மறையுமா? கேள்வி-பதில்

-

கேள்வி :
ஒரு இந்தியன் அவனது வாழ்நாளில் இரண்டு முறைதான் தேர்தலில் போட்டியிட முடியும்” என்று ஒரு சட்டம் அமலுக்கு வந்தால் எல்லா ஊழல்களும் உடனடியாக நிறுத்தப்படும். சமூகவிரோதிகளும் அரசியலுக்கு வரமாட்டார்கள். காரியவாதிகளும் அரசியலை தொழில் போல நினைத்து வர இயலாது.

என்னுடைய கேள்வி, இத்தகைய சட்டம் இந்தியாவில் வருவதற்கு வாய்ப்புண்டா?

– ஜெகன்

அன்புள்ள ஜெகன்,

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த நாராயண மூர்த்தி பதவி விலகிக் கொண்டு வேறு ஒருவரை நியமித்துள்ளார். இதுபோல பல முதலாளித்துவ நிறுவனங்களில் முக்கியமாக மேற்கத்திய நிறுவனங்களில் நடக்கின்றன. நிறுவனத்தை நடத்துவது வேறு ஆளாக இருந்தாலும் நிறுவனத்தின் பங்குகள் என்னமோ முதலாளிகளின் கையில்தான் குவிந்து கிடக்கின்றன. அந்த வகையில் அந்தந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது எல்லாம் இவர்கள்தான்.

அதே போல இந்தியாவில் தேர்தல்களில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை விட அவர்கள் எந்தெந்த வர்க்கங்களுக்கு ஆதரவாக, பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அந்த வகையில் இங்குள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சிகள் அனைத்தும் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், நிலவுடைமை வர்க்கங்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. காங்கிரசும், பா.ஜ.கவும், தி.மு.க – அ.தி.மு.கவும் முதலாளிகளது நலனுக்காகத்தான் கட்சிகளை நடத்துகின்றன.

அடுத்து நமது ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை விட நிரந்தரமாக இருக்கும் அரசின் உறுப்புகளுக்குத்தான் ( அதிகார வர்க்கம், நீதிமன்றம், போலீசு – இராணுவம்) அதிக அதிகாரம் இருக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றத்தான் முடியும். அதை அமல்படுத்துவது அரசு எனப்படும் மையமான உறுப்பைச் சேர்ந்த அதிகார வர்க்கம்தான்.

கருணாநிதி அரசு செய்தவற்றில் மக்கள் நலனுக்கானவற்றைத்தான் இப்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா ரத்து செய்ய முடியுமே அன்றி முதலாளிகளுக்கு பாதகமாக எதையும் செய்ய முடியாது. சான்றாக தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ரத்து என்பது பள்ளி முதலாளிகளின் நலனில் குடிகொண்டிருக்கிறது என்பதால் சாத்தியம். ஆனால் தி.மு.க ஆட்சியில் அனுமதி பெற்று இங்கு வந்து தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுனவங்களை ஜெயலலிதா விரும்பினாலும் ரத்து செய்ய முடியாது.

அதேபோல பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் கனிம வளங்களையும் தனியாருக்கு விற்பது மட்டும்தான் மன்மோகன் அரசு செய்ய முடியுமே அன்றி உல்டாவாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க முடியாது. அமெரிக்கா திணித்திருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத்தான் காங்கிரசு அரசு செய்யுமே அன்றி அதை எதிர்த்து கருத்துக்கூட தெரிவிப்பதற்கு வழியில்லை.

ஆக அரசாங்கங்களின் இலட்சணம் இதுதான் என்றால் பின் ஏன் தேர்தல் போட்டிகள் இத்தனை பிரயத்தனத்துடன் நடக்கின்றன? தெரிவு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் அளவில்லாமல் சம்பாதிப்பதற்கு இந்த அமைப்பு வாய்ப்புகளை நல்கிறது. இதில் எதிர்க்கட்சி என்றால் கமிஷன் கம்மியாகவும், ஆளும் கட்சி என்றால் அதிகமாகவும் இருக்கும். இதை எதிர்பார்த்தே தேர்தல்களில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். ஆளும் கட்சி என்றால் முதலாளிகளிடமிருந்து கணிசமாக கிடைக்கும் என்பது ஒரு யதார்த்தம். இதைத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்க்கிறோம்.

அதே நேரம் அரசியல்வாதிகள் அடிக்கும் ஊழல், கொள்ளைகளை விட அதிகாரிகளும், முதலாளிகளும்தான் கணக்கில்லாமல் அடிக்கிறார்கள். இப்போது கோதாவரி எரிவாயு பேசினில் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் தொகையை அரசுக்கு கொடுக்காமல் கைப்பற்றியிருக்கும் ஊழல் வெளிவந்திருக்கிறது. இப்படித்தான் அனைத்து ஊழல்களிலும் முதலாளிகளே முதன்மையாக இருக்கிறார்கள். ஆனால் இந்த முதலாளிகளே ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதால் அரசியல்வாதிகள் மட்டுமே மக்களிடம் வில்லன்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள்.

இதுதான் நிலைமை என்றால் தேர்தலில் போட்டியிடும் நபர்களின் தனிப்பட்ட பண்பு நலன்கள் எதுவும் பலனளிக்க போவதில்லை. ஒருவர் முழுமையான நல்லவராக இருந்தாலும் இந்த அமைப்பு முறையின் ஊழலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இது போக இப்போதே தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போட்டியிடுவதற்கு தனித்தொகுதிகளை ஒதுக்குகிறார்கள். இதனாலெல்லாம் பெண்களும், தலித்துகளும் பலனடைந்திருக்கிறார்களா என்றால் இல்லை.

புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் இப்போது  காங்கிரசு என்று சுற்றி வரும் செல்வப்பெருந்தகை ஒரு கட்டைப்பஞ்சாய்த்து ரவுடி. அதன் மூலமே கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்தவர். தலித்துகளுக்கான தொகுதியில் இவர் தலித் என்பதால் போட்டியிட்டு வெல்வதால் என்ன பலன்? அது போல இன்று பல பஞ்சாயத்து இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களும் பதவிகளுக்கு வருகின்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் அவர்களது கணவன்மாரே தலைவர்கள் என்று அறியப்படுகிறார்கள், அழைக்கப்படுகிறார்கள். எனவே இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களால் எந்தப் பலனும் இல்லை.

நீங்கள் சொல்வது போல ஒருவர் இரண்டுமுறை மட்டும்தான் போட்டியிட முடியும் என்று ஆக்கினாலும் அது ஊழல்பெருச்சாளிகளின் வாரிசுகளும், குடும்பத்தினரும் போட்டியிடுவார்கள் என்று மாறிவிடும். சான்றாக தங்கபாலு இரு முறை போட்டியிட்டு மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்றால் தனது மனைவியை களமிறக்குவார். மனைவிக்கு இரு முறை முடிந்தால் அப்புறம் வாரிசுகள், பினாமிகள் என்று இந்த ஆதிக்கம் சட்டத்திற்கேற்ப தொடரவே செய்யும்.

இப்போதே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசகளும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். சோனியா, பைலட், முலாயம், லல்லு, சரத்பாவார், கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம், என்று டெல்லி முதல் சேலம் வரை குடும்பங்களே ஆதிக்கம் செய்கின்றன. இதற்கு மேல் நீங்கள் கோருவது போன்ற சீர்திருத்தத்தை இப்போதைக்கு கொண்டு வருவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பும் சாத்தியமில்லை. ஒரு வேளை மக்களுக்கு ஏதாவது ஒரு பொய்மான் மாற்றத்தை காண்பிப்பதற்க்காக கொண்டு வந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

தேர்தல் கமிஷன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் தேர்தல் அரசியலில் இருந்து மக்களின் பங்கேற்பை ரத்து செய்து கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனது. இது குறித்து தேர்தல் நேரத்தில் வெளியிட்ட கட்டுரைகளை பார்க்கவும். பலரும் இந்த தேர்தல் சீர்திருத்தங்களை மாபெரும் வெற்றி என்று பிழையாக பார்க்கிறார்கள்.

இறுதியாக நாம் முற்றிலும் உளுத்துப்போன இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையை தகர்த்துவிட்டு புதிய ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை உருவாக்க போராடுவதே சரி. அதுவரை எல்லா சீர்திருத்தங்களும் விழலுக்கிறைத்த நீர்தான்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. Hi Vinavu,

    I am not able to accept 100% on your “Abolition of present Election structure”.
    Having some doubts/clarifications,

    Why we need to abolish present election structure,
    if a Govt. decided to do things for people like
    1. Stopping subsidy to Special Economic Zone and other tax relaxation to
    business units.
    2. Withdraw/tuning Atomic pact, Globalization, etc for welfare of people.
    3. Corruption less ruling.

    You can say that is not at all possible with present politicians, why not people like you grow your party in a generation or two.
    Once your vision, activities understood by people, they will go for you.
    Then you also can do GOOD THINGS for people.

    This point may not possible immediately, but DEFINITELY possible in two or three generations.
    You are continuously insisting everything cannot happen in overnight.
    The same will apply for your stand point too; even people immediately do REVOLUTION and removed all bad things,
    What is the next step?
    What is the political structure to continue there after?
    Lot many what’s will come.

    Thanks,
    Pamaran

  2. //இறுதியாக நாம் முற்றிலும் உளுத்துப்போன இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையை தகர்த்துவிட்டு புதிய ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை உருவாக்க போராடுவதே சரி. அதுவரை எல்லா சீர்திருத்தங்களும் விழலுக்கிறைத்த நீர்தான்.//
    What is that “புதிய ஜனநாயக அமைப்பு”?

    • நல்ல கேள்வி. நானும் அதையே கேட்கிறேன். பதில் தெரியும் என்றாலும் !

      இவர்களின் ‘புதிய ஜனனாயக’ அமைப்பில் ஒரே ஒரு கட்சி மட்டும் தான் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி. (இதிலும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் நசுக்கப்பட்டிருக்கும்). தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் தான் இருப்பார். அப்படி தான் பழைய சோவியத பாணி !!

      எதிர்கட்சிகள், மாற்று கருத்துகள், பத்திர்க்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், நாட்டை விட்டு வெளியேற உரிமை, நாட்டில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக பயணம் செய்தல், வாழுதல் ஆகிய உரிமைகள் இருக்காது. காரண்ம : இவற்றை அளித்தால் பூஸ்வா சதிகாரர்கள் புரட்சியை குலைத்துவிடுவார்களாம். மக்களுக்கு எது நன்மை தரும், எது சரியான தேவை என்பதை கட்சியின் பொலிட்பீரோ மட்டும் தான் முடிவு செய்யும்.

      இந்தியாவில் பாரளுமன்ற ஜனனாயக முறை சீரழிந்து, கேலி கூத்தாகிவிட்டது. பல காரணிகள். இதை சாக்காக காட்டி, இந்த முறையெ தவறு என்று வாதாடி, சர்வாதிகாரத்தை முன்மொழியும் தந்திரம் இவர்களின் பாணி. இதே பாராளுமன்ற முறை செம்மையாக நடைபெறும் நாடுகளை பற்றி பேச மாட்டார்கள். ஒரு அரசியல் முறை சரியல்ல என்று வாதிடும் போது, உலகெங்கும் உள்ள நாடுகளை ஒப்பிட வேண்டும். மே.அய்ரோப்பா, ஸ்காண்டினேவிய நாடுகள், கனடா, நீயுசீலாந் போன்ற நாடுகளில் உள்ள ஜனனாயக முறை பற்றி பேசவே மாட்டார்கள்.

      ஆனால், இந்த பருப்பெல்லாம் இனி வேகாது. மக்கள் அப்படி எல்லாம் ஏமாந்துவிட மாட்டார்கள் !! ஒரிஸா பகுதியில் சுமார் 200 சதுர மைல்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மாவோயிஸ்டுகளின் முழு கட்டுபாட்டில் தான் இன்றும் உள்ளது.
      பாட்டாளி வர்க சொர்க பூமியான அதற்க்குள் புலம் பெயர அணைபகுதியில் வசிக்கும் எந்த எழையும் தயாராக இல்லை. ஏன் ? அவர்களுக்கு தெரியும் உண்மையில் என்ன நடக்கிறது என்று. இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்றும்..

      • வினவுல எப்போ பதிவு போடுவாங்கன்னு மூக்கு வேர்க்க காத்திருந்து வந்திருக்காரு. யாருனா நம்ம அதி(க)யமானுக்கு பதில் போடுங்கப்பா. அப்புறம் கோச்சுக்கிட்டு போயிடுவாரு.

      • தப்பெண்ணங்கள் நிறைந்த அனுமானத்தோடு கம்யூனிஸ்ட்களை எதிர்க்கும் கீழ்மையான செயலை இங்கு அதியமான் செய்திருக்கிறார். முதலில் இப்போதுள்ள அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள வெவ்வேறு கட்சிகள் மக்களின் வெவ்வேறு பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதே மோசடியான வாதம். காங்கிரஸ், பா.ஜ., தி.மு.க., அ.தி.மு.க., ஜனதா, சமதா etc கட்சிகள் வண்ணத்தில் மட்டுமே வேறுபாடு கொண்டவை. அவை பிரதிநிதித்துவம் செய்பவை முதலாளித்துவ பிரிவையே. எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமாக வாழும் விவசாயிகளை பிரதிநிதித்துவம் செய்ய எத்தனை எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்? அது போன்றே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ற விகிதத்தில் உள்ள பிரதிநிதிகள் இந்திய பாராளுமன்றத்தில் எத்தனை பேர்? மக்களவை என்று இந்திய பாராளுமன்றத்தை அழைப்பதே அரசியல் தற்குறித்தனம். அது இந்திய மேட்டுக்குடியின் coffee house. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் புகழ் பெற்றிருந்த coffee – houses கொண்டிருந்த அரசியல் பரிமாணத்தின் ஒரு சிறிய அம்சத்தை கூட இந்திய பாராளுமன்றம கொண்டிருக்கவில்லை. ஆங்கில உரைநடையே அங்கிருந்து தான் வளர்ச்சி பெற்றது.
        இந்த பாராளுமன்ற அமைப்பு முறை அதியமான் சொல்வது போல் சீரழியவில்லை. மாறாக, காலாவதியாகிவிட்டது. உலகம் முழுவதுமே பெயரளவு ஜனநாயகத்தை கைவிட்டு பாசிசத்தையே கையிலெடுக்கிறார்கள் ஆளும்வர்க்க கட்சிகள். இந்தியாவிலும் பல முடிவுகள் பாராளுமன்றத்தை கூட்டாமலே எடுக்கப்படுகின்றன. இங்கு மக்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள். Participatory democracy என்பது இல்லை. ச்காண்டிநோவிய வகை முதாலாளித்துவ ஜனநாயம் குறித்து அதிகம் சிலாகிக்கிறார். அதற்கு அதியமான் உணமையான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன். ஒரு வேளை அந்த முயற்சி அவருக்கு இந்த முதல்லாத்துவ அமைப்பின் பயங்கரம் குறித்து இலவச பாடம் அளிக்கும். ஒரு லோக்பால் மசாதாவுக்கே எப்படி அடித்துக் கொள்கிறார்கள். சிவில் சொசைட்டி உறுப்பினர்களை கிரிமினல்கள் போல் நடத்துகிறார்கள். மேல் குறிப்பிட்ட முதலாளித்துவ அமைப்புக்கு மாறானதாக புதிய ஜனநாயக அமைப்பை புரிந்து கொள்ளலாம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உள்ளடக்கத்தில், பாட்டாளி வர்க்க ஜனநாயகமே. ஜனநாயகம் என்பது ஒருவகை சர்வாதிகாரம் என்பது அரசியல், சமூகப் பாடம் கற்றோர் அறிந்த உண்மை. சர்வாதிகாரம் மேலிருந்து கீழ் இறக்கப்படுவது. ஜனநாயகம் கீழிருந்து மேலே செல்வது. Bertrand Russel ஆவது தனது கம்யூனிச எதிர்ப்பு நூலான Bolshevism : Theory and Practice என்ற நூலை எழுதுவதற்கு முன்னர் சோவியத் ரஷ்யாவை ஒரு முறை சென்று பார்த்துள்ளார். அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் தோழர்களே செய்து கொடுத்துள்ளனர். இதனை அவரே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதியமான் அப்படி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு தோழரை சந்தித்தவது புதிய ஜனநாயக அமைப்பு குறித்து கேட்கவில்லை. மாறாக எதார்த்தமாக விளக்கம் கேட்ட ஒரு நண்பருக்கு ஷொட்டு கொடுக்கிறார். கம்யூனிசத்தை எதிர்ப்பதில் குருநாதர்களை விட சீடர்கள் அம்மணமாக நிற்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

        • Comrade Sukadev,

          How am i suppose to visit the now defunct USSR ? :)))

          First try to give a straight answer to the basic question : what kind of ‘new democracy’ do you people prescribe as a ‘solution’ ? will there be multi party system and free voting rights ? along with freedom of expression, speech and right to emigration from the country ? or will it be a open air prison from which people who love freedom are not allowed to leave ?

          I had clearly stated the defects in Indian system. but this argument is about your ‘solution’; why do not you people openly declare that all other parties except your group will be BANNED in your new ‘democracy’? and try to answer to the point about your new ‘democracy’..

          • நண்பர் அதியமான்,
            புதிய ஜனநாயக அமைப்பு முறையில் பாசிச்ட்களுக்கு மட்டுமே இடமிருக்காது. மற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் தமது பிரதிநித்துவத்தை பெற்றிருக்கும். புரட்சி என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்களின் விடுதலை முயற்சி. அதில் நிச்சயமாக இன்றைய ஒடுக்கும் வர்க்கங்கள் ஒடுக்கப்படும். சாதி கட்சிகள், மத வெறி கட்சிகள் நிச்சயமாக தடை செய்யப்படும். நீங்கள் யாரை மனதில் வைத்து கேட்கிறீர்கள் என்பதை தயவு செய்து வெளிப்படுத்துங்கள். ஒரு முறை மனுஷ்ய புத்திரன் குறித்து கேட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவரை போன்ற திறமையான கவிஞர்களுக்கு நிச்சயமாக புரட்சி சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றே நினைக்கிறேன். கமல ஹாசன் படத்துக்கு ஒப்பனிங் சாங் எழுதும் இழி நிலைக்கு தள்ளாது என்பது எனது அபிப்பிராயம். கம்யுநிச்ட்களின் பியூட்டியே தமது கொள்கையை வெளிப்படையாக அறிவித்து செயல்படுவது தான். இந்நிலையில் புதிய ஜனநாயகம் குறித்து சொல்ல முடியுமா? என்று நீங்கள் கேட்பது கேலி கூத்தாக உள்ளது. மக்களுடைய சுதந்திர இயக்கத்துக்கு நிச்சயமாக தடை இருக்காது. இன்று புரட்சிகர இயக்கங்கள் சிறு குழுக்கள் தான. உங்களுடைய கருத்துப்படி புரட்சிக்கு பிந்தைய காலகட்டத்தை விடவும் இப்போது தான் கடுமையான கட்டுப்பாடுகள் கட்சியில் இருக்க வேண்டும். அனால் அப்படி இல்லையே. முதலாளித்துவ பத்திரிகைகள் பலவற்றை படிக்க மூத்த தோழர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். காலச்சுவடு போன்ற இலக்கியப் பத்திரிகைகளின் அறிமுகம் எனக்கு தோழர்கள் மூலமே கிட்டியது. தோழர்கள் அறிமுகம் கிடைத்த பிறகு நான் கலந்து கொண்ட முதல் கூட்டம் தலித் எழுத்தாளர் பாமாவின் ‘கருக்கு’ நூல் திறனாய்வு கூட்டம். என்னை அழைத்து சென்றவர்களும் தோழர்களே. நான் எடுத்த குறிப்புகளை மூத்த தோழர் ஒருவர் வாங்கி பார்த்து ஊக்குவித்தார். எனவே தேவையற்ற பீதியை கைவிடுங்கள். So Just come out from the prejudices, biases and pre-conceived notions.

            • ///புதிய ஜனநாயக அமைப்பு முறையில் பாசிச்ட்களுக்கு மட்டுமே இடமிருக்காது//

              ஃபாசிஸ்டுகள் என்றால் யார் என்று அருட்கூர்ந்து ’விளக்குங்களேன்’ ;

              இப்ப உதாரணத்துக்கு நானும், எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து (அட ஒரு பேச்ச்சுகுதான்) , பிரச்சாரம் செய்தால், நாங்களும் ‘ஃபாசிஸ்டுகள்’ என்று முத்திரை குத்தபட்டு ‘தடை செய்யப்படுவோமா’ ? ; மத, சாதி, இனம், மொழி எல்லாம் வேண்டாம்பா. கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் ’தவறுகளை’ விமர்சித்து, அதற்க்கு மாற்றாக நாங்க பிரச்சாரம் செய்கிறோம் என்று வைத்துகொள்ளுஙகளேன். அப்ப நாங்களும் ஃபாசிஸ்டுகளா ?

              மதவாதம் பேசாத செக்யுலார் கட்சிகளும் தடை செய்யப்படுமா ? கம்யூனிசத்த ‘எதிர்த்து; பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டா ?

              சரி, தடையையும் மீறி கட்சி நடத்தினால் என்ன தண்டனை ? எப்படி தருவீக ?
              விளக்கி சொல்லுங்களேன்.

              காலச்சுவடு தடை செய்யப்படாதா ? வினவு தோழர்களிடம் எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன் ? உயிர்மை மற்றும் இதர சிறு பத்திரிக்கைகள் ? சு.ராவின் நூலக்ள் ? எந்தெந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் அனுமதிக்கப்படும் / தடை செய்யப்படும் ? நான் சந்தித்த ‘தோழர்’ ஒருவர், அவற்றை மக்கள் மன்றம் தான் அன்று தீர்மானிக்கும் என்றார். அப்படியானால் தடை செய்யப்பட வேண்டியவை என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது என்று அர்த்தம் தான்.

              சோவியத் ரஸ்ஸியாவில், சீனாவில் அப்படி அன்று தடை செய்யப்பட்ட நூல்கள் உண்டு தான். அதே போல் தான் மீண்டும் ?

              • வினவுத் தோழர்கள் மக்களுக்கான ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இப்பொழுதிருக்கும் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல, ஆளும் வர்க்க முதலாளிகளுக்கானது மட்டுமே. எனவே வினவை (கம்யூனிசத்தை) தடை செய்வதில் அவர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. மேலும் வினவுகள் சிறுபான்மையினராக இருப்பதினாலும், வினவின் கருத்து பரந்துபட்ட மக்கள் உள்வாங்கிக்கொள்ளாததினாலுமே வினவை விட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி வரும்போது அவர்களால் எடுக்கப்படும் நிலைப்படுகளை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

                ரஷ்யாவில் முதலாளித்துவ பத்திரிக்கைகள் மூடப்பட்டது பற்றி உங்களது ட்ராட்ஸ்கி என்ன சொல்றாருன்னு கேளுங்க.
                ”பத்திரிக்கைகள் அவர்கள் கைக்கு கிடைக்கும் ஆயுதங்கள். இந்த நிலைமைகளில் பத்திரிக்கைகள் மூடப்பட்டது நியாயமான தற்காப்பு நடவடிக்கையே..”

              • அதியமான்,
                பாசிசம் குறித்து உங்கள் அபிபிராயத்தை முதலில் சொல்லுங்கள். ஏனெனில் அரசியல் என்றால் விஜயகாந்த், கோமாளி ராம் தேவ், கலர், கலரான கொடிகள் என்று புரிந்து வைத்திருப்பதான தொனி உங்களது மேலே ஒரு பதிலில் வெளிப்பட்டது. எனவே அரசியல். ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற கலை சொற்கள் குறித்த உங்கள் கருத்தை தெரிவியுங்கள். காலச்சுவடு, உயிர்மை பத்திரிக்கைகளை ஒழிக்கத் தான் புரட்சி என்று நீங்கள் பேசுவதிலிருந்து சமூக மாற்றம், சமூக இயக்கங்கள் குறித்த பாமரத்தனமான புரிதலையே கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். //இப்ப உதாரணத்துக்கு நானும், எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து (அட ஒரு பேச்ச்சுகுதான்)// // அப்ப நாங்களும் ஃபாசிஸ்டுகளா ?// — காமடி பீஸ்களை ஒழிக்கத் தான் புரட்சியா? அடக் கடவுளே! இதற்கு வடிவேல் போதாதா?

                • சுக்கதேவ்,

                  பாமரத்தனமான ‘புரிதல்’ யாருக்கு என்று நீங்களே சொல்லிக்க வேண்டாமே. வாசகர்கள் அதை தீர்மானிக்கட்டும். எம்மை கேட்டால், உங்களுக்கு தான் அப்படிபட்ட புரிந்தல் என்று திடமாக சொல்லுவேன் !!! :))

                  ஃபாசிசம் என்றால் லிபரல் ஜனனாயகத்திற்க்கு நேர் எதிரான நிலை. அதாவது அனைத்து வகை அடிப்படை சுதந்திரங்களையும் நசுக்குவது. இதை பற்றி எம் நிலைபாட்டை விளக்கி முன்பு ஆங்கிலத்தில் எழுதிய பதிவு :

                  http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

                  இதற்க்கு மேலும் உங்களுக்கு ‘விளக்க’ முடியாது. யார் காமடி பீஸ் என்பதையும் வாசகர்கள் முடிவு செய்துகொள்வார்கள். ஓகே.

      • அதியமான்,

        உங்களுடைய மேற்குலக மக்கள்நாயக மயக்கம் தெளிய எளிமையானதொரு விளக்கம்.

        இந்த செய்தியை நீங்கள் ஏடுகளில் படித்திருப்பீர்கள்.அண்மையில் காவல்துறையிடம் பிடிபட்ட ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஒரு சேப்படி திருடன் 30 ஆண்டுகளாக சென்னையில் களவு தொழில் செய்துவந்திருக்கிறான். களவு வருமானத்தில் சொந்த ஊரில் அரண்மனை போல் வீடு கட்டி குழந்தைகளை பொறியாளர் முதலான உயர்கல்வி கற்க செய்துள்ளான்.அவன் சென்னையில் ஏதோ தொழில் செய்து வருவதாக அக்கம் பக்கம் உள்ளோர் நம்பும் வகையிலேயே அவன் நடந்து கொண்டான். அந்த திருடன் தன குடும்பத்தை பொறுத்தவரை நல்ல கணவன்,பொறுப்பான தந்தை.ஆனால் அவனிடம் பணத்தை பறிகொடுத்தோரின் நிலை என்ன.தந்தையின் மருத்துவ செலவுக்கான பணம்,மகளின் திருமணத்துக்கு சேர்த்தது,குழந்தைகளின் கல்வி கட்டணம்,உழைத்து பெற்ற ஒரு மாத ஊதியம்,ஏழை வணிகர் கொள்முதல் செய்ய வட்டிக்கு வாங்கிய பணம், இப்படி அவனிடம் பணத்தை பறிகொடுத்து பரிதவித்தவர்களின் சோகம் சொல்லில் அடங்காது.

        இதையே உங்கள் மேற்குலக கனவான்களோடு ஒப்பிட்டு பாருங்கள். குடியேற்ற காலத்திலும் [colonial era] பின்னர் தற்போதைய மறுகாலனியாக்க காலத்திலும் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை கொள்ளையடித்து தங்களது நாட்டை வளப்படுத்திக்கொள்ளும் மேலை நாட்டு அயோக்கியர்களுக்கும் சித்தூர் திருடனுக்கும் என்ன வேறுபாடு. கொள்ளையர்களின் நாட்டில் சனநாயக உரிமைகளை அனுபவிக்கும் மக்களுக்கும் களவுக்காசில் பொறியியல் படிக்கும் மகனுக்கும் என்ன வேறுபாடு.

        அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்க நலன்களுக்காக அந்நாடு நடத்தும் போர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் உங்களுடைய மேற்கத்திய சனநாயக நாடுகள் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த போர்களில் ஈடுபட ஒப்புதல் பெறுகிறார்களா,அல்லது எதேச்சதிகாரமாக நாட்டை போரில் தள்ளி விடுகிறார்களா.அதன்மூலம் அல்காயிதா முதலான தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாத தாக்குதல் இலக்காக தங்கள் நாட்டு மக்களை ஆக்குகின்ற அயோக்கியத்தனம் சனநாயகத்தின் சாதனை என சொல்லலாமா.

        • //அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்க நலன்களுக்காக அந்நாடு நடத்தும் போர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் உங்களுடைய மேற்கத்திய சனநாயக நாடுகள் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த போர்களில் ஈடுபட ஒப்புதல் பெறுகிறார்களா,///

          நண்பர் திப்பு,

          அடியாள் வேலை பார்க்கும் மேற்கத்திய நாடுகள் எவை ? எல்லா நாடுகளுமா ? அல்லது சிறுபான்மை நாடுகளா ? பொத்தாம் பொதுவாக இப்படி வகைபடுத்தினால் எப்படி ? அமெரிக்கா செய்யும் தவறுகளை, ஆக்கிரமப்புகளை கண்மூடித்தனமான ஆதரிக்கவில்லை. உங்களை விட அதிகமாகவே அவை பற்றி அறிந்தவன் என்ற முறையில். ஆனால் அதே சமயம் அமெரிகா செய்யும் அனைத்து காரியங்களையும் கண் மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை. உதாரணமாக 1999இல் செர்பியர்கள், போஸ்னிய முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்த போது, அதை தடுக்க அமெரிக்க தலைமையில் நேட்டோ நாடுகள் குண்டு வீசி செர்பியாவை தடுத்தன. அதை செய்யாமல் இருந்திருந்தால், இன்னும் பல லச்சம் போஸ்னிய முஸ்லீம் மக்கள் அழிதொழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அமெரிகாவின் அச்செயலையும் அன்று பலரும் ‘எதிர்த்தனர்’ ; ஈராக் படை எடுப்பு மிக தவறு மற்றும் புஸ் மற்றும் கூட்டாளிகள் எடுத்த தனிச்சியான முடிவு. அல் கோர் 2000 வருட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றிருந்தால் கண்டிப்பாக இப்படி செய்திருக்க மாட்டார்கள். அமெரிக்க அரசாங்க முறை இன்னும் ஜனனாயகமயமாக்க பட வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். 200 வருடங்களுக்கும் முன்பு அமெரிக்க அரசு அமைப்பை உருவாக்கிய முன்னோடிகள் இப்படி உருவாகும் என்று நினைக்கவில்லை.

          சரி, இதெல்லாம் இந்த விவாதத்ற்க்கு அப்பாற்பட்டது. எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் லிபரல் ஜனனாயக முறை அமைப்பிற்க்கு மாற்றாக அதை விட சிறந்த, நியாயமான அரசியல் முறையை மனிதன் இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்பதே நிஜம். நீங்க கனவு கானும் ‘புதிய ஜனனாயக’ முறை ஏற்கெனவே முயன்று பார்த்தாச்சு. பெரும் அழிவையும், மனித உரிமை மீறல்களையும், சர்வாதிகாரத்தையுமே அது உருவாக்கியது. பேர் என்னவோ ஜனனாயகம் தான்.

          பொருளாதார ஏற்ற தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர செய்ய அது தான் ஒரே வழி என்று நீங்கள் நம்புகிறீர்கள். இல்லை, அது சரியான வழியல்ல என்று நாங்கள் நம்புகிறோம். வரலாறு எது சரி என்று நிருபிக்கிறது.

          • ’நீங்க கனவு கானும் ‘புதிய ஜனனாயக’ முறை ஏற்கெனவே முயன்று பார்த்தாச்சு. பெரும் அழிவையும், மனித உரிமை மீறல்களையும், சர்வாதிகாரத்தையுமே அது உருவாக்கியது. பேர் என்னவோ ஜனனாயகம் தான்.’

            பாட்டாளி வர்க்க சர்வாதிகாரி ஸ்டாலின் காலத்தில் அரசியல் சட்டம் வடிவமைத்த முறை.

            ”அரசு சபை தற்காலிக ஒப்புதல் அளித்த அரசியல் சட்டம் நாடு தழுவிய விவாதத்துக்காக 6 கோடி பிரதிகள் எடுத்து மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 5,27,000 கூட்டங்களில் நடந்த விவாதத்தில் 3 கோடி மக்கள் பங்கேற்றனர்.பல மாதங்களுக்கு அனைத்து செய்தி ஏடுகளிலும் மக்களின் கருத்துக் கடிதங்கள் இடம்பெற்றன. 1,54,000 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. திருத்தங்கள் பலமாதங்களாக மக்களிடம் மீண்டும் மீண்டும் சுற்றுக்குவிடப்பட்டே அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.” இது மாதிரி எந்த லிபரல் ஜனநாயக நாட்டிலாவது நடந்திருக்கிறதா!

            • கலை,

              அன்று சோவியத் ரஸ்ஸியாவில் இது போன்ற பொது ‘விவாதங்கள்’ எப்படி நடந்தன என்று அறிவீர்களா ? எதிர்த்து பேசினால் அல்லது மறுத்து பேசினால் என்ன ஆகியிருக்கும் என்று அறிவீர்களா ? :))

              குருஷேவ் பின்னர் பேசியது :

              ஸ்டாலின் மறைந்த பின் சில காலம் கழித்து குருஸேவ் அதிபரனார். அதன் பின்
              ஒரு மேடையில் ஸ்டாலின் காலத்து கொடுமைகள் பற்றி முழங்கினார். அபோது
              கூட்டத்தில் இருந்து ஒருவர் துண்டு சீட்டில் ஒரு கேள்வி அனுப்பினார் :

              “இதை எல்லாம் ஸ்டாலின் உயிரோடு இருந்த போதே ஏன் பேசவில்லை ? ”

              அதை படித்துவிட்டு கடும் சினத்துடன் யார் இந்த துண்டுச்சீட்டை
              அனுப்பியவர் என்று கர்ஜித்தார். அனுப்பியவர் பயந்து கொண்டு கம்மென்று
              இருந்தார்.

              பிறகு ஒரு கள்ளச் சிரிப்போடு குருஷேவ் சொன்னார் :

              “கேள்வி கேட்ட இந்த் நபர் இப்போது இருக்கும் நிலைமையில் தான் அன்று நான்
              இருந்தேன்.”

              மேலும் பார்க்கவும் :

              http://athiyamaan.blogspot.com/2008/07/blog-post_15.html

              • பல மாதங்களாக துப்பாக்கி முனையில்தான் 3கோடி மக்களும் விவாதங்களில் கலந்துகொண்டனர் என்பது நல்ல நகைச்சுவை. நீங்கள் பெர்னாட் ரஸ்ஸலையும் மிஞ்சிய கோயபல்சு போலும். எதிர்த்துப் பேசினாலே சுட்டுக்கொல்லும் ஒரு அரசு, ஏன் அரசியல் சட்ட வடிவமைப்பை மக்களிடம் சுற்றுக்கு விடவேண்டும்? அதில் மக்களின் திருத்தங்களுக்கு ஏன் மதிப்பு அளிக்கவேண்டும்?

                ஜாரின் கொடுமையான ஆட்சியை கவிழ்க்க போல்ஷ்விக்குகள் ஜார் அரசுடன் சரசமாடிக்கொண்டே நயவஞ்சகத்தனமாக கவிழ்க்கவில்லை. மக்களுடன் இணைந்து நின்று ஜாரை எதிர்த்து போராடி வீழ்த்தினர். குருஷேவ் ஒரு நயவஞ்சகன். தன்னுடைய வர்க்க நலனை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத கிரிமினல் வர்க்கம்தான் முதலாளித்துவம். குருஷேவை இயக்கியதும் இந்த கிரிமினல் புத்திதான். மக்களோடு நின்று ஸ்டாலினை எதிர்க்கமுடியாமல் சோஷலிசத்தை உறவாடிக் கெடுத்தான் இந்த துரோகி. முதல்உலகபோர்,உள்நாட்டுப்போர், இரண்டாம் உலகப்போர் என போரிலேயே 4 கோடி மக்களை இழந்தும் ஸ்டாலின் தலைமையில் சோசலிசத்தை சாதித்துக் காட்டினர் சோவியத் மக்கள். அன்றைய சோவியத் யூனியனின் மக்கள் நிலை பற்றி அன்று அந்நாடுகள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ரோமன் ரோலண்ட் முதல் இரவந்திரநாத் தாகூர் வரையிலும் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். பெர்னாட் ரஸ்ஸலும், கீஸ்லரும் ஜார்ஜ் ஆர்வெல்லும் பதிவு செய்திருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். அவதூறு கூறியவர்கள் கையூட்டு பெற்றதும் அம்பலமாகியிருக்கிறது. அதனையும் படித்துப்பாருங்கள்

                • //அதில் மக்களின் திருத்தங்களுக்கு ஏன் மதிப்பு அளிக்கவேண்டும்?//

                  என்ன ’திருத்தங்கள்’ என்று சொல்ல முடியுமா ? முதலில் அன்று இருந்த நிலை பற்றி பேசலாமே ? நான் பல முறை இந்த பதிவில் கேட்டபடி, எதிர்கட்சி, மாற்றுகருத்துகல், பேச்சுரிமை, பத்திர்க்கை சுதந்திரம் : இவை முற்றாக தடை செய்யப்பட்ட நிலை தான் உங்க ‘புதிய ஜனனாயகம்’ முறை. இதை சர்வசாதாரணமாக நீங்க வேணுமுன்னா நியாயப்படுத்தலாம். ஆனால் எல்லாரும் இங்கு ஏற்க்கவில்லை.

                  அவதூறுகள் பற்றி : இன்றைய ரஸ்ஸிய மக்கள், கிழக்கு அய்ரோப்பிய மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று பாருங்கள். சோல்சென்சைன் போன்ற எழுத்தாளர்கள் பதிவு செய்ததையும். Denial mode இல் உங்கு சிறு குழு மட்டும் தான் உள்ளது. எனக்கு தெரிந்து மார்க்சியத்தை ஏற்க்கும் மற்றவர் அனைவரும் அப்படி கண் மூடித்தனமாக மறுப்பதில்லை. தவறுகள், மீறல்கள் பெரும் அளவில் நடந்தன, ஆனால் எதிர்கால ’புரட்சியில்’ அப்படி மீண்டும் நிகழாமல் செயல்படுத்த முடிய்ம் என்றே ‘நம்புகிறார்கள்’. நம்பிக்கை தான் வாழ்க்கை !!! :)))

          • \\இதே பாராளுமன்ற முறை செம்மையாக நடைபெறும் நாடுகளை பற்றி பேச மாட்டார்கள். ஒரு அரசியல் முறை சரியல்ல என்று வாதிடும் போது, உலகெங்கும் உள்ள நாடுகளை ஒப்பிட வேண்டும். மே.அய்ரோப்பா, ஸ்காண்டினேவிய நாடுகள், கனடா, நீயுசீலாந் போன்ற நாடுகளில் உள்ள ஜனனாயக முறை பற்றி பேசவே மாட்டார்கள்.//

            \\அடியாள் வேலை பார்க்கும் மேற்கத்திய நாடுகள் எவை ? எல்லா நாடுகளுமா ? அல்லது சிறுபான்மை நாடுகளா ? பொத்தாம் பொதுவாக இப்படி வகைபடுத்தினால் எப்படி ? //

            நண்பர் அதியமான்,
            ஆப்கனில் அமெரிக்காவுக்கு அடியாள் வேலை பார்க்கும் நாடுகள் பட்டியல் இதோ.நீங்கள் போற்றி புகழும் சனநாயக நாடுகள் அத்தனையும் அதில் இடம் பெற்றுள்ளன.
            Troop contributors include Romania, Belgium, Bulgaria, Denmark, Canada, the United States, the United Kingdom, Italy, France, Germany,South Korea, Spain, Turkey, Ireland, Poland, Portugal and most members of the European Union and NATO also including Australia, New Zealand, Azerbaijan and Singapore.

            ஈராக்கில் பணியாற்றும் அடியாட்கள் பட்டியல் இன்னும் நீளமானது.நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.சுட்டி.http://en.wikipedia.org/wiki/Multi-National_Force_%E2%80%93_Iraq

            \\1999இல் செர்பியர்கள், போஸ்னிய முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்த போது, அதை தடுக்க அமெரிக்க தலைமையில் நேட்டோ நாடுகள் குண்டு வீசி செர்பியாவை தடுத்தன…… ..அமெரிக்க அரசாங்க முறை இன்னும் ஜனனாயகமயமாக்க பட வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். 200 வருடங்களுக்கும் முன்பு அமெரிக்க அரசு அமைப்பை உருவாக்கிய முன்னோடிகள் இப்படி உருவாகும் என்று நினைக்கவில்லை.//

            ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடு போவாரா.அமெரிக்காவின் செர்பிய தாக்குதலுக்கு பின் மறைந்திருந்த ஏகாதிபத்திய நலன்களை பார்க்க தவறுகிறீர்கள்.உங்கள் பார்வையில் முசுலிம்கள் இனப்படுகொலையை தடுப்பதற்காக செர்பியாவின் மீது குண்டு போட்ட அதே அமெரிக்காதான் கடந்த அறுபது ஆண்டுகளாக பாலசுதீன முசுலிம்களை கொன்று குவிக்கும் யூத வெறி இசுரேலை பாதுகாத்து வருகிறது.கிரோசிமா மீது நடத்தப்பட்ட முதல் அணு குண்டு தாக்குதலிலேயே நிலை குலைந்து போன சப்பான் போரை நிறுத்திக்கொண்டு சரணடைவதாக அறிவித்த பின்னும் இரண்டு நாட்கள் கழித்து நாகசாயி மீது இரண்டாவது அணுகுண்டு போட்ட,வியட்நாம் மக்கள் மீது நாபாம் குண்டு போட்ட அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கு மனித நேய முகமூடி போடுகிறீர்களே நியாயமா.

            என்னை விட அமெரிக்காவை நன்கு ”அறிந்த”நீங்கள் அமெரிக்க மற்றும் உலக அரசியலை நன்கு ”புரிந்து”கொள்ளவில்லை.ஒரு தனி மனிதர் அமெரிக்காவை வேறு பாதையில் அழைத்து சென்று விட முடியும் என்ற உங்கள் நம்பிக்கை பாமரத்தனமானது. சான்று தேடி பெரிதாக சிரமப்பட வேண்டாம்.கடந்த அறுபது ஆண்டுகளாக யானையோ,கழுதையோ யார் ஆண்டாலும் அமெரிக்காவின் சியோனிச ஆதரவில் கடுகளவு மாற்றமும் இல்லை என்பதை நினைவு படுத்திக் கொண்டாலே போதும்.

            • ஆஃப்கன் படை எடுப்பது தவிர்க்க முடியாத செயல். அதுவும் ஈராக் படை எடுப்பும் ஒன்றல்ல. ஒசாமா பின் லேடனும், அல் கொய்தாவும் அமெரிக்க நகரங்களை தாக்கி பல ஆயிரம் அப்பாவி மக்களை கொன்ற பின், அவர்களுக்கு அடைகலம் அளித்து உதவி செய்த ஆஃப்கானின் அல் கொய்தாவை அழிக்க படை எடுத்ததை பல நாடுகளும் ஆதரித்தன. உடனே நீங்க சொல்லுவீக : பின் லேடனை ‘உருவாக்கியதே’ அமெரிக்கா தானே என்று. ஆம். ஆனால் சில முன் கதை சுருக்கங்களை மறைத்து விடுவீக. உங்க முன்னாள் பங்காளி சோவியத் ரஸ்ஸியாவின் திருவிளையாடல்களுக்கான எதிர்வினை தான் அமெரிக்க தலைமையில் சுமார் 45 ஆண்டுகளாலம் நிகழ்ந்தது.

              ///வியட்நாம் மக்கள் மீது நாபாம் குண்டு போட்ட அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கு மனித நேய முகமூடி போடுகிறீர்களே நியாயமா.//

              மனிதனேய முகமூடி எல்லாம் போடவில்லை. எல்லா போர்களையும் ஒரே தட்டில் வைத்து பொத்தாம் பொதுவாக எடை போட முடியாது. போஸ்னியாவில் என்ன நடந்தது என்று நீங்கள் அறியாமையில் இருக்குறீர்கள். படித்து பார்க்கவும். (கடைசியில் நான் அளித்த சுட்டியில்)

              இஸ்ரேல் உருவானதில் உங்க தலைவரான சோவியத ரஸ்ஸியாவின் மார்ஷல் ஜோசஃப் ஸ்டாலிக்கும் முக்கிய பங்குண்டு. 1949இல் சோவியத் ரஸ்ஸியாவும் இஸ்ரேல் உருவாவதற்க்கு முக்கிய ஆதரவு அளித்தது. நியாயமான காரணங்களுக்காக தான். சோவியத் ரஸ்ஸியாவின் அன்றைய ‘அடியாளான’ செக்கோஸ்லோவாக்கியா மூலம் தான் ஆயுதங்களை இஸ்ரேல் முதன் முதலில் பெற்றது. முதலாவது அரேபிய இஸ்ரேல் போரில் வெல்ல அவை மிக முக்கிய பங்கு வகித்தன. அய்.நா அன்று இஸ்ரேலுக்கு அளித்தன் இடங்களை கொண்டு அமைதியாகவே வாழ அன்று இஸ்ரேலியர் விரும்பினர். ஆனால் அரேபியர்கள், பெரும் படை கொண்டு தாக்கி, இஸ்ரேலை முற்றாக அழிக்க பல முறை முயன்றனர். இடையில் பனிப் போர் காலங்களில் ரஸ்ஸிய / அமெரிக்க விளையாட்டரங்காக அப்பகுதி மாறியது. இன்று இஸ்ரேல் செய்வது அநியாயம் தான். ஆனால் அவர்களை செலுத்துவது பெரும் அச்சம் மற்றும் insecurity caused by a bloody and cruel past. கொஞ்சம் விட்டு கொடுத்தாலும், மீண்டும் அரேபியர் துணை கொண்டு தம்மை முற்றாக அழிக்க பாலிஸ்தீனியர் முயல்வார்கள் என்ற (தேவையில்லாத) பயம் அவர்களை பெரும் குரூரங்களை செய்ய வைக்கிறது.

              இவை பற்றி விரிவாக நான் முன்பு எழுதியுள்ள பதிவு இது : (பின்னூட்டங்களில் மேலும் பல முக்கிய விவாதங்கள்) :

              http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

              • அந்த பதிவில் நான் எழுதியதில் ஒரு பகுதி :

                இஸ்ரேலின் வரலாறை படிக்கும் போது, என்னைப் பொருத்தவரை, எந்த துன்பத்தையும் தாங்கி, வாழ்ந்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கிறது.

                அவர்களின் இன்றைய நிலைபாடு மற்றும் தவறுகள் வேறு விசியம். ஆனால் ஆரம்ப வருடங்களில் அவர்கள் எதிர் கொண்ட போர்கள் மற்றும் செய்த தியாகங்கள் ஒரு மகத்தான, மிக மகத்தான வீர வரலாறு.

                An indomitable people with a ‘never say die’ spirit. Valiant courage while facing and defeating powerful enemies. out-gunned and out numbered on all fronts many times…

                They crossed all the limits of human endurance and will power…

                an inspiration for me…

                இந்த‌ புத்த‌க‌ங்க‌ளை முடிந்தால் ப‌டிக்க‌வ‌ம் :

                O Jerusalem!
                by Dominique Lapierre and Larry Collins.
                http://en.wikipedia.org/wiki/O_Jerusalem

                Exodus by Leon Uris
                http://en.wikipedia.org/wiki/Ari_Ben_Canaan

                பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய உழைப்பும், திறமையும் மிக மிக அருமையான சாதனைகள் தாம். அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா வை விட மிக மிக வளமாக 50 வருடங்களில் மாறியது பெரும் சாதனை. எண்ணை வளம் இல்லாமல், ஜோர்டானில் இருந்து இறக்குமதிதான்.

                I salute these brave and determined people..
                Shalom !

                • பாராட்டுகள் அதியமான்,திறமையான திசை திருப்பலுக்கு.

                  சனநாயகம் குறித்த விவாதத்தை உங்களுக்கே உரிய பாணியில் வேறு தளத்திற்கு திசை திருப்பி விடுகிறீர்கள்.அதுவும் மேற்குலக சனநாயகத்தின் யோக்கியதை குறித்து நான் எழுதியவற்றுக்கு விடையேதும் அளிக்காமலே எடுத்துகாட்டுக்காக சொன்ன பாலசுதீன பிரச்னை குறித்து விவாதிக்கிறீர்கள்.

                  பாலசுதீன பிரச்னையில் துவக்க காலத்தில் இசுரேலின் பக்கம் நியாயம் இருந்தது போலவும்,அது ஒரு வீர வரலாறு எனவும் கூறுகிறீர்கள். இல்லை.யூத வெறி இசுரேலின் பக்கம் நியாயம் எள்ளளவும் கிடையாது. அவர்கள் குருதி வெறி பிடித்த ஆக்கிரமிப்பாளர்கள்.அவர்களுடையது வஞ்சக வரலாறு. நீங்கள் சுருக்கமாக சொல்லியிருப்பதால் நானும் சுருக்கமாக.நீங்கள் விரிவாக எழுதும் பட்சத்தில் நானும் விரிவாக எழுத ஆயத்தமாக இருக்கிறேன்.

                  • திப்பு,

                    நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால், உடனே திசை திருப்பல் என்று சொன்னால் எப்படி ? இஸ்ரேல் உருவாக முக்கிய பங்கு வகித்தவர் உங்க ஸ்டாலின். சோவியத் ரஸ்ஸியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் செக்கோஸ்லோவோக்கியா நாடு மூலமே இஸ்ரேலுக்கும் 1948இல் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஏன் ? பதில் சொல்லுங்க பார்க்கலாம். வினவு தோழர்களை கேட்டு சொல்லுங்க. இந்த விசியத்தில் நீங்க ஒரு சராசரி முஸ்லீமா தான் பார்க்கரீக என்றே தோன்றுகிறது.

                    மேற்குலக சனனாயக அமைப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றது தான். 100 சதம் சரியான லிபரல் ஜனனாயக முறை இன்னும் வரலை. சாத்தியமும் இல்லை. ஆனால் அதை விட சிறந்த அமைப்பை மனிதன் இன்னும் கண்டுபிடிக்க வில்லை தான். மேலும் ஸ்விஸ் போன்ற நாடுகளையும் ஒரே தட்டில் வைத்து பொதுதுப்படுதுறீக.

                    சரி, இந்த பதிவின் சாரம் : இந்திய ஜனனாயக முறை சீரழிந்துவிட்டது. அதனால் அதற்க்கு மாற்றாக நீங்க முன் மொழியற ‘புதிய ஜனனாயக முறை’ அதை விட மோசமான கொடுமையான அமைப்பு என்பதே விசியம். பாட்டாளி வர்க சர்வாதிகாரம் என்று சொல்லிகொண்டு ஒரு புதிய அதிகார வர்க சர்வாதிகரமே அதில் உருவாகும். பாட்டாளிகள் இன்னும் கொடூரமாக நசுக்கப்படுவர். அதுதான் வரலாறு காட்டும் உண்மை. Forced labour பற்றி சொல்லி விளக்க முடியாது.

                    • //பாட்டாளிகள் இன்னும் கொடூரமாக நசுக்கப்படுவர்//

                      ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம். அப்புடியிருக்கு உங்க feeling.

                • //மிக மிக வளமாக 50 வருடங்களில் மாறியது பெரும் சாதனை//

                  அமெரிக்காகாரன் கொடுக்குற டாலர மறைக்கிறீங்களே பாஸ்!

                  • //பாட்டாளிகள் இன்னும் கொடூரமாக நசுக்கப்படுவர்//

                    ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம். அப்புடியிருக்கு உங்க feeling./////

                    Nonsense. i can easily call you in similar terms. but it is a waste of time to argue with brain washed idiots.

                  • ///முதலாளித்துவ சந்தை முறையில் : incentive system தான். அதாவது யாருக்கும் நிரந்தர வேலை கிடையாது. ஒப்பந்த அடிப்படையில், வேலை திறன் அடிப்படையில் தான் சம்பளம் மற்றும் சலுகைகள். இதன் மூலமே ஒரு மனிதன் தம் முழு திறமை மற்றும் உழைப்பையும் தான் செய்யும் வேலையில் செழுத்துவான் என்ற கோணம்.///

                    இதைக் கூறியது நீங்கள்தான் என நிரூபிப்பது ஒன்றும் கடினமல்ல. அதாவது அவனை பட்டினி குறித்த அச்சத்தில் வைத்திருப்பதின் மூலமே அவனை முழுமூச்சாய் உழைக்க வைக்க முடியும் என்பதுதான் உங்கள் கருத்து. அதாவது தொழிலாளிக்கு நிரந்தர வேலை கிடையாது. ஆனால் முதலாளிக்கு நிரந்தர லாபம் வேண்டும் என்பதுதான் உமது கோணம். ஆனால் இதை வெளிப்படையாக உம்மால் சொல்ல முடியாது. இது முதலாளிகளின் புத்தி. உமது (முதலாளி) வர்க்க நலனை உம்மால் ஒருக்காலும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. எனவே தான் திறமை, உழைப்பு, தொழில்வளர்ச்சி என பீடி சுற்றுகிறீகள்.
                    ஆனால் கம்யூனிசம் உழைப்பை மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற வேண்டும் என்கிறது. தொழிலாளியை அச்சத்தில் வைத்திருக்கும் முதலாளித்துவத்தின் ஏகபோகத்தை ஒழிப்பதன் மூலமே இது சாத்தியம் என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். தொழிற்சாலைகளை உழைக்கும் வர்க்கத்தின் உடமையாக்குவது என்பதுதான் கம்யூனிசம். ஆனால் நீர் என்ன சொல்கிறீர், பாட்டாளிகள் இன்னும் கொடூரமாக நசுக்கப்படுவர் என்று. அதாவது முதலாளி வர்க்கத்திற்கு நேரும் பாதிப்பை தொழிலாளிக்கு நேரும் என்பதாக கதைக்கிறீர்கள். இதுதான் முதலாளிகளின் குரூர புத்தி. இதற்குத்தான் ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகிறது என்று கூறினேன்.

                    • //அதாவது தொழிலாளிக்கு நிரந்தர வேலை கிடையாது. ஆனால் முதலாளிக்கு நிரந்தர லாபம் வேண்டும் என்பதுதான் உமது கோணம். ///

                      முதல் விசியம் சரி. ஆனால் இரண்டாவது விசியம் தான் தவறு. நிரந்தர லாபம் என்றெல்லாம் எப்போதும் இல்லை. நஸ்டம், திவால் பற்றிய ‘பயங்கள்’ எப்போதும் உண்டு. அது தான் முதலாளிகளை ஒழுங்காக, திறமையாக, professionalஆக தம் நிர்வாகத்தை செய்ய ஊக்கப்படுத்தும் அருமருந்து.

                      மற்றபடி, இந்தியாவில் உள்ள சராசரி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மட்டும் பார்த்து, ஒரு முடிவுக்கு வந்துவிட கூடாது. அய்ரோப்பாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் கண்ட தொழிலாளர் நிலை தான் அவரை உந்தியது. ஆனால் 150 ஆண்டுகளில் அங்கு தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

                      இங்கும் அது சாத்தியம். ஆனால் பல பத்தாண்டுகள் பிடிக்கும். மேலும் ஊழலை ஒழித்து, உண்மையான சந்தை பொருளாதாரத்தையும், லிபரல் ஜனனாயகத்தையும் செவ்வனே அமலாக்கினால் சாத்தியம்.

                      தொழிலாளர்களின் நிலை கடந்த 150 ஆண்டுகளில் எந்த நாடுகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது, அவை எந்த முறையை பின் பற்றின என்று ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

                      இங்கு அரசு ஊழியர்களுக்கு ’நிரந்தர’ வேலை தான். டிஸ்மிஸ் செய்வது அனேகமாக சாத்தியம் இல்லை. அதனால் தான் பொறுப்பில்லாமல், அராஜகமாக, ஊழல் மயமாக, பொது மக்களை ஏய்த்து, அவமதித்து நடக்கின்றனர். அரசு ஆரம்ப்ப பள்ளி ஆசிரியர்கள் வகுப்பே எடுக்காமல் ஓபி அடித்து, பல உப தொழில்கள் செய்து, சீரழிந்த்து விட்டனர்.

                      இங்கு வாசிக்கும் பலரும் தம் வீடுகளில் வீட்டு வேலை செய்ய வேலைகார பெண்களை பணியில் அமர்த்தியிருப்பர். தினமும் ஒரு மணி நேரம் அல்லது அதிகாமக வேலை செய்ய சும்மார் 500 முதல் ஆயிரம் வரை மாத சம்பளம் அளிப்பர். (சம்பள்ம் கம்மி, வேறு சில கொடுமைகள் இதில் உள்ளன என்பது வேறு விசியம்). இவர்களுக்கு ‘நிரந்தர’ வேலை அளிக்க ஏன் யாரும் முன் வருவதில்லை என்று கேட்டு சொல்லுங்களேன். என்ன குற்றம் / தவறு செய்தாலும் வேலை போகாது என்றால் என்ன ஆகும் ? ஒழுங்கா, நேர்மையா வேலை செய்வார்களா ?
                      யோசியுங்கள்..

                    • @@@@@@ உண்மையான சந்தை பொருளாதாரத்தையும், லிபரல் ஜனனாயகத்தையும் செவ்வனே அமலாக்கினால் சாத்தியம் @@@@@

                      இது எப்ப நடக்கும்னு கொஞ்சம் வெத்தலையில மை தடவி பாத்து சொல்லுங்க ஜோசியரே

                    • Adhiyaman, kalai, thippu – I appreciate all your thoughts. Very healthy discussion without any non-sense wordings. Only suggestion is that pl continue your discussion in Q & A format – no indirect answers. This can give more clarity to outsiders like me whose arguments are valid & come to a conclusion.

            • //ஒரு தனி மனிதர் அமெரிக்காவை வேறு பாதையில் அழைத்து சென்று விட முடியும் என்ற உங்கள் நம்பிக்கை பாமரத்தனமானது. ///

              இல்லை. அதுதான் நடந்தது. சில நேரங்களில் வரலாறு ஒரு தனிநபாரால் தான் உருவாக்க்படுகிறது. நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்கள் உருவானது ‘வரலாற்று காட்டாயம்’ என்பது உங்க ஸ்டாண்டர் மார்க்ஸிஸ்ட் வரலாற்று பார்வை. ஆனால் அது மிகவும் பிழையானது தான். 2000 தேர்தலில் அல் கோர் வென்று, ஜனனாயக கட்சியினர் ஆட்சியமைத்திருந்தால் ஈராக் மீது கண்டிப்பாக அமெரிகா போர் தொடுத்திறுக்காது. இன்று அது இமாலைய தவறு என்று உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் புதைகுழியில் சிக்கியுள்ளனர். 2003 போர் துவகத்தின் போது அன்றைய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் காலின் போவல் இதை கடுமையாக எதிர்தார். ஜனனாயக கட்சியினரும், பல இதர மக்களும் எதிர்த்தனர். இதை பற்றி விரிவாக பேச முடியும். வேறு தருணத்தில்

      • //இவர்களின் ‘புதிய ஜனனாயக’ அமைப்பில் ஒரே ஒரு கட்சி மட்டும் தான் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி. (இதிலும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் நசுக்கப்பட்டிருக்கும்). தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் தான் இருப்பார். அப்படி தான் பழைய சோவியத பாணி !!//

        இந்தப் பொய்க்கு பல முறை பதில் சொல்லியாயிற்று. ஆனாலும், பொய்யை நம்பியே புலம்பி வரும் அதியமான் இந்த பொய்யையும் விடுவதாய் இல்லை இப்போதைக்கு. நேபாள கம்யூனிஸ்டுகள் புதிய ஜனநாயக அரசு அமைக்க அங்குள்ள ஜனநாயக கட்சிகள் அனைத்தின் பங்களிப்பைத்தான் கோருகிறார்கள் என்பதே இவரது பொய்க்கு ஒரு சோற்றுப் பதம்.

        • அசுரன்,

          பொய் என்பதற்க்கு உமது அகராதியில் வேறு டிஃபனிசன் போல !! நேபாளத்தில் இன்னும் செம்புரட்சி எல்லாம் வரலைப்பா. கேக்கறவன் கேனையன்னா….
          அங்கு இன்னும் ஒரு மார்க்கமான ‘ஜனனாயகம்’ தான். முழு அதிகாரமும் மாவோயிஸ்டுகளிடம் இன்னும் வரவில்லை. (நல்ல வேளையாக). வந்தா அப்பறம் பேசலாம்.

          நான் சொன்னது சோவியத் ரஸ்ஸியா, சீனா, வியட்நாம், வட கொரியா, கூபா போன்ற ’சோசியலிச’ நாடுகளில் புரட்சிக்கு பின் நிகழ்ந்தவை பற்றி தான்.

          சரளமாக பொய் பேசுவது நீர் தான். இன்று இந்தியாவில் ஆயிரம் அக்கிரமங்கள் இருந்தாலும், உம்மையும், உமது ம.க.இ.க குழுவையும் சுதந்திரமாக செயல்பட இந்த ‘பிற்போக்குவாத, பார்பனீய, ஏகாதிபத்திய, முதலாளித்துவ, போலி ஜனனாயாக’ அரசு அனுமதிக்கிறதுதானே ? இதே போல் மற்றவர்களை, ‘எதிர்கட்சிகளை’ இயங்க, உங்க கையில் அதிகாரம் குவிந்தால், செம்புரட்சிக்கு பின் இயங்க அனுமதிபிகளா ? அல்லது தடை செய்வீகளா ? yes or no ? give a straight answer if you can.

          • அனைத்தும் தெரிந்த உண்மையாளரே! ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் 1924ல் லெனின் காலத்திலும் 1936ல் ஸ்டாலின் காலத்திலும் ருஷ்ய அரசியல் சட்டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதையும் தங்களால் கூறமுடியுமா!

            • 1930களில் ஸ்டாலினால் ‘களை எடுக்கப்பட்ட’ வர்களின் ஆவியை கேட்டு தான் உங்களுக்கு ‘விளக்க’ முடியும். உதாரணமாக நிக்கலாய் புக்காரின். உக்ரேனில் மடிந்த பல ல்ச்சம் மக்களின் வாரிசுகள் இன்றும் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டும் விளக்கம் அளிக்க முடியும்.

              சட்டம், நீதி மற்றும் எவை எல்லாம் குற்றம் என்பதற்க்கு உங்க டெஃபனிசன் வேற, எங்க டெஃபனிசன் வேற. சைபீரிய வதை முகாம்களுக்கு அனுப்பபட்டவர்கள் செய்த ’குற்றங்கள்’ பற்றியும் தான். தண்டனை அளிக்கும் முறை, அப்பீல் பற்றியும் கடுமையான மாற்று கருத்துகள் தான். இன்று இந்திய அரசு செய்யும் மீறல்கள் எல்லாம் சும்மா ஜுஜுபி, உங்க காம்ரேடுகள் அன்று செய்ததை ஒப்பிடும் போது. ஆனால் அவை எல்லாம் வரலாற்று கட்டாயங்கள் என்று நியாயப்படுத்துவீர்கள். ஆனா அறிவுலகம் அப்படி ஏற்றுக்கொள்வதில்லை.

              • புரட்சிக்குப் பின் ட்ராஸ்கியினுடைய ஆவி சொன்னது. “வன்முறையை உபயோகிக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு மட்டும்தான் உண்டு..”

                “முதலாளி வர்க்கத்திற்குள்ள ஏகபோகம் ஒழிக்கப்படவேண்டும். இல்லையேல் ஆட்சியதிகாரத்தை நாம் கைப்பற்றுவதில் அர்த்தமில்லை.” இதுவும் ட்ராஸ்கி சொன்னதுதான்.

                பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுக்கு எதிராக சதிசெய்த முதலாளிகளை களையெடுக்காமல் வெறென்ன செய்வதாம்.

                • //வன்முறையை உபயோகிக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு மட்டும்தான் உண்டு..”//

                  அப்படீன்னு நீங்க நம்பினா, அதை உலகம் ஏத்துக்குமா என்ன ? அல்லது அது அறம் என்று கருதப்படுமா என்ன ? means and ends பற்றி உங்கள் கருத்துகள் தான் சரி என்று நீங்க வேண்டுமானா சொல்லிக்கலாம்.

                  ஒடுக்கப்பட்ட வர்கம் என்ற சொல்லாடல் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரம் உருவாகும் போது, (அது பாட்டாளி வர்க சர்வாதிகாரமாக இருந்தாலும்), அதே ஒடுக்கப்பட்ட வர்கம் மேலும் ஒடுக்கப்படும் என்பதெ வரலாறு தரும் உண்மை. மேலும் பல லச்சம் அப்பாவிகளும் பொய்யான முத்திரை குத்தப்பட்ட ஒடுக்க்படுவது மிக அதிகம் நிகழும்.

  3. இடத்தை விவசாயிகள் இடமிருந்து மலிவு விலையில் வாங்கி கொடுத்து மின்சாரத்தையும் சலுகை விலையில் கொடுத்து அவர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதில் வரிச்சலுகையும் கொடுத்து ஒரு தனி நபரை மேலும் மேலும் பணக்காரனாக்க அரசுகள் போட்டிபோடுவது அவன் கொடுக்கும் அல்ப காசுக்காகத்தான். அரசே அந்த தயாரிப்பில் ஈடுபட்டால் முழுப்பலனும் மக்களுக்கு தானே கிடைக்கும். தினமும் மூன்று ஷிப்டில் வேலை செய்யும் சீனர்கள் உலகம் முழுமைக்குமான நுகர்வோர் சாதனங்களின் உதிரி பாகங்களை பல்வேறு இடங்களில் செய்து ஓரிடத்தில் ஒருங்கிணைத்து அரசுக்கு மற்றும் தனியாருக்கு வழங்க வில்லையா?நேரிடையாக மக்களுக்கு பயன் அளிப்பதன் மூலம் மிகப்பெரும் மக்கள் தொகையையே ஒரு பலமாக மாற்றி உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயரவில்லையா?

  4. எதிர்காலத்தில் தமது சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது கல்வி. அந்த கல்வியைகூட தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளமுடியாத ,அதை சமமாக தம் மக்களுக்கு கொடுக்க வக்கில்லாத, தனது மக்களுக்கு மருத்துவத்தை சரியான முறையில் வழங்கமுடியாத இந்த ஊழல் அமைப்புக்கு பெயர் ஜனநாயக அமைப்பு முறை ? இதில் இவர்கள் ஊழலை ஒழிக்க போகிறார்களாம். ஊழலை ஒழித்துவிட்டால் முதலாலித்துவம் அழிந்துவிடும் ஜாக்கிரதை. ஊழல் இல்லாமல் முதலாலித்துவம் இல்லை, முதலாலித்துவம் நீடித்திருக்க வேண்டுமென்றால் ஊழல் கட்டாயம் இருக்கவேண்டும். இரண்டையும் பிரிக்கவே முடியது. கல்வி,மருத்துவம், மற்றும் மக்களுடய அடிப்படை உறிமைகளுக்காக போறாட வேண்டும். நாம் முற்றிலும் உளுத்துப்போன இந்த போலி (ஜனநாயக?) ஊழல் பொனநாயக, அமைப்பு முறையை தகர்த்துவிட்டு புதிய ஜனநாயக அமைப்பு முறை ஒன்றை உருவாக்க போராடுவதே சரி. அதுவரை எல்லா ஊழல் சீர்திருத்தங்களும் விழலுக்கிறைத்த நீர்தான்.

  5. வினவில் இன்று முதல் மக்கள் இசை!
    ———————————

    அக்டோபர் 2009 க்குப்பின் எந்த பாடலும் பதிவேற்றப்படவில்லை, மாதம் ஒன்றாக

    வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,இதுவரை இல்லை.இனியாகிலும்

    வெளியிடவும்.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  6. கடந்த நூறு ஆண்டு காலமாக நாம் பார்பனர்களை குறை கூறிக்கொண்டு இருக்கிறோம். (தென் இந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட கழகம், பின்னர் எண்ணற்ற திராவிட அரசியல் கட்சிகள் எல்லாம் திட்டி ஆயிற்று)

    என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல், ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

    தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும்.

    கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம், நாற்காலி, கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை.

    மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை, முதலில் அடிப்படை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்தை கேட்டு நம்மால் போராட முடியவில்லை.
    நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால் அதிகாரவர்க்கத்தை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.

    ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் “பிராமண பாஷை” எங்கு இருந்து வந்தது ?
    இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?

Leave a Reply to Sukdev பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க