privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!

-

கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்  சங்கீதா. பட்டதாரியான‌ சங்கீதா தன்னை விட படிப்பில் குறைந்த, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மராஜை சாதி கட்டுப்பாடுகளை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பணி புரியும் இடத்தில் இயல்பாக ஏற்பட்ட இக்காதலை திருமணம் வரை கொண்டு செல்வதற்கு அவர் கடுமையாகப் போராடினார்.

சமூகத்தில் அரதப் பழசாகிப் போன சாதி நம்பிக்கையைத் தூக்கி எறிந்தவருக்கு, தனியார்மயம் தாராளமயம் உருவாக்கிய புதிய சமூகச் சீர்குலைவுகளைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு எளிதாகக் கைவரவில்லை. தன்னுடைய கணவரைப் போல் தன்னுடைய மகன் படிப்பில் சோடை போய் விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய சக்தியை மீறி செலவு செய்து, அந்தப் பகுதியிலேயே சிறந்த பள்ளி என்று கூறப்படும் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில்   சேர்த்துள்ளார் .

அவரது மகன் U K G செல்லும் போது ரூ.12,000 /- கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொண்டு ரூ.5000 /- செலுத்தியுள்ளார். மீதிப் பணத்திற்கு பல இடங்களில் கடன் கேட்டு பார்த்துள்ளார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த சங்கீதா கடைசியாக‌ மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேல் தீ வைத்துக் கொண்டார்.  தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார் சங்கீதா.

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அடைந்த தீக்காயங்களுடன் தர்மராஜ்

ஒரு புறம் தனியார்மயம், தாராளமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் சாதாரண மக்களது மனதை ஊடுருவிச் சீரழிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்கள் பிரதிபலிக்கும் மேட்டுக்குடி வாழ்க்கையைத்தான் உண்மையான வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு, தானும் அதுபோல வாழத் தலைப்படும் முயற்சி பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களிடமும் ஊடுருவி  செல்வாக்கு செலுத்துகிறது. ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம், மறுபுறம் தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளை லாபவெறி.

பிரச்சனைக்குட்பட்ட பள்ளியில் நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் என்னவோ ரூ.3558 தான். ஆனால் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் தொகையோ ரூ.12000. கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் சுமார் 3  மடங்கு அதிகம். குழந்தைகளை கடத்திப் பணம் பறிக்க அவர்களைத் தேடிப்போய், கடத்திப் பணம் பறிக்க வேண்டும். ஆனால்  இந்தக் கல்விக் கொள்ளையர்களிடம் பெற்றோர்களே தமது குழந்தைகளை ஒப்படைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் இந்தக் கல்விக் கொள்ளையர்களின் கையில்தான் உள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர். இந்தக் கொள்ளையர்களின் உத்திரவுக்கு குரங்குகள் போல் ஆடுகின்றனர்.

இந்த நாட்டு மக்களின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ, புதிதாக அரசுப் பள்ளிகள் எதையும் கடந்த 20 ஆண்டுகளாகத்  திறக்கவில்லை. அப்படியே திறந்திருந்தாலும் அது இந்த நாட்டின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும் போது ஒன்றுமேயில்லை.

அரசியலமைப்புச்  சட்டம் 21-4 பிரிவின்படி இலவசக் கல்வி அளிக்க வேண்டிய அரசே உலக வங்கி , உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் உத்திரவின் பேரில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் வேலையையே கந்து வட்டி, லேவா தேவிக்காரர்களிடமும், கருப்புப் பண முதலைகளிடமும், பகற்கொள்ளையர்களிடமும் ஒப்படைத்து விட்டது.

இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ள சில சில்லறை உரிமைகள் கூட  உலகம் முழுவதும் அதற்கு முன் நடந்த‌ மக்கள் போராட்டத்தின் விளைவே ஆகும். மக்களின் போராட்ட குணம் இன்று நீர்த்துப் போய்விட்ட படியால் மக்களின் எதிரிகள், பகற் கொள்ளையர்களின் கை மேலோங்கியுள்ளது.

மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள, மக்களை ஒன்று திரட்டிப் போராடும் முயற்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கல்விக் கட்டணத்திற்கு  எதிராகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டிய பெர்க்ஸ் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளனர்.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடத்தும் கல்விக் கட்டணக் கொள்ளைக்கெதிராகவும், கோவிந்தராசன் கமிட்டியின் கட்டணத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் கடந்த 20.05.2011  அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
ஆர்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்

ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுவான‌ ஜனநாயக ஆர்வல‌ர்களும் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் அபு தாகிர் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார் .

சங்கீதாவின் கொலைக்கு காரணமான பள்ளிக் கொள்ளையர்களின் இலாப வெறியை கோவை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களிடம் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தத்தமது பகுதி தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்து புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சங்கீதாவின் மரணம் அந்த வகையில் ஒரு தீப்பொறியாக பயன்பட்டிருக்கிறது.

__________________________________________________
தகவல் – மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
__________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. // குழந்தைகளை கடத்திப் பணம் பறிக்க அவர்களைத் தேடிப்போய், கடத்திப் பணம் பறிக்க வேண்டும். ஆனால் இந்தக் கல்விக் கொள்ளையர்களிடம் பெற்றோர்களே தமது குழந்தைகளை ஒப்படைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் இந்தக் கல்விக் கொள்ளையர்களின் கையில்தான் உள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர். இந்தக் கொள்ளையர்களின் உத்திரவுக்கு குரங்குகள் போல் ஆடுகின்றனர்.//

    — இம்மாதிரி கொள்ளையர்களிடம் படிக்கும் பிள்ளைகள் நல்ல குணநலன்களையும், நல்லொழுக்கத்தையும் பெறுவது சாத்தியமான ஒன்றா??

  2. தற்கொலைக்கு பதிலா மொட்டையடித்திருந்தால் ( அதிமுக வெற்றிக்கு காணிக்கையாக ) அம்மாவின் பார்வை பட்டிருக்குமோ என்னமோ?..

    கல்வி காசாக்கப்படும் அவலம் நம் நாட்டில்..:(

  3. First of all, this female sangeetha is a stupid. Eppadi oru muttal thanathuku ellam parithaba pada mudiathu. still i suspect the exact reason for her suicide could be something different. I don’t really understand why we are trying to fight against ‘private’ schools and their fees? They are charging so much simply because we are ready to GIVE WHATEVER Is demanded..Instead of fighting them, why don’t we fight against District Educational Officer to improve the standards of Govt. Schools to HIGH Standards !! …many govt. school teachers are highly proficient than pvt. schools teachers. Now-a-days education is also one of the prime ‘business’ and we cannot stop them charging HUGE CHUNK until we STOP GIVING it. Govt. will not support US, simply because many such institutions are run by political party’s relatives !! – so let us try to improve stds. of Govt. School …thats the only solution.

    All of us know the Govt is corrupted. so no point in trying to fight against them, rather STOP/REDUCE our CONSUMPTION in any the fields – starting from higher education fees, buying flats for so high ridiculous price, using tasmac, buying FMCG products, buying in super markets, etc. If we stop/reduce consuption automatically any price should come down irrespective of Govt. Steps. I believe this is the only step we poor people can do at this juncture.

    • Well said Srinivas. I would like the readers to go thru what Gyani says in his recent Kalki article :

      http://gnani.net.in/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

      சமச்சீர் கல்வி மாயை:

      சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்று ஜெயலலிதா அரசு அறிவித்ததை வரவேற்றும் எதிர்த்தும் குரல்கள் எழுந்துள்ளன.

      தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது அசலான சமச்சீர் கல்வியே அல்ல. சமமான வசதிகள், சமமான கல்வி பயிற்று விக்கும் தரம், சமமான கல்விக் கட்ட ணம், சமமான தேர்வு முறை எல்லாம் இருந்தால்தான் சமச்சீர் கல்வி.

      தி.மு.க. அரசு செய்ய முயற்சித்ததெல்லாம் மெட்ரிக், ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.ஈ, ஆங்கிலோ இந்தியன் போர்ட் எனப்படும் பலவிதமான போர்டுகளுக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது மட்டும்தான். அதில் மெட்ரிக்கில் ஏற்கெனவே இருந்ததைக் குறைத்து நீர்க்கச் செய்துவிட்டார்கள் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. மறுபக்கம் பாடப் புத்தகங்களை சி.பி.எஸ்.ஈ முறையில் உள்ளதுபோல, உணர்ந்து படிக்கும் முறைக்கு மாற்றி எழுதியது சிறப்பானது என்பது ஒரு சாராரின் பாராட்டு.

      அசல் பிரச்னை பாடப் புத்தகமோ பாடத் திட்டமோ அல்ல. பயிற்றும் முறையும் தேர்வு முறையும்தான் அசல் பிரச்னைகள். மெட்ரிக், ஸ்டேட் போர்ட் தேர்வு முறைகள் மாணவரின் மனப்பாட சக்தியை மட்டுமே சோதிக்கின்றன. கீவேர்ட்ஸ், கீ டெர்ம்ஸ் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் தரப்படுகின்றன. சி.பி.எஸ்.ஈ. தேர்வு முறை, சிந்தித்து சுயமாக எழுதுவதை சோதிப்பதாக இருக்கிறது.

      கூடவே மாற்றப்பட வேண்டியது பயிற்று முறை. அரசு ஆசிரியரின் சம்பளம் தனியார் ஆசிரியரைவிட பல மடங்கு அதிகமானது எனினும் எந்த தனியார் பள்ளியிலும் குறைந்த பட்சப் பயிற்றுதல் தரம் என்பது அரசுப் பள்ளியின் சராசரித் தரத்தை விட மேலாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. தனியார் பள்ளிகளில் தரம் குறைந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு.

      சமச்சீர் கல்வியை நோக்கிச் செல்வதற்கு அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

      1. எல்லா அரசு அதிகாரிகளும் ஊழியர்களும், குறிப்பாக கல்வித்துறையில் பணியாற்றுவோர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்யாதவருக்கு அரசு வேலை கிடையாது. இதைச் செய்தாலே அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தில் பெரும் மாறுதல் ஏற்படும்.

      2. பாடப் புத்தகங்களும் தேர்வுமுறையும் மனப்பாட அடிப்படையிலிருந்து, சிந்தித்து உணர்ந்து அறியும் அடிப்படைக்கு மாற்றப் படவேண்டும். இது எளிது. இருப்பதிலேயே சிறப்பானது என்று கல்வியாளர்களால் கருதப்படும் சி.பி.எஸ்.ஈ முறையை எல்லாருக்குமாக்கி விடலாம்.

      3. ஆண்டுதோறும் ஆசிரியர்களின் பணிப் பங்களிப்பு மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

      4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கடுமையாக முறைப்படுத்த வேண்டும். கரெஸ்பாண்டென்ஸ் முறையில் ஆசிரியர் பயிற்சி அளிப்பது என்ற அபத்தம் ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தனி நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி இப்போதைக்கு ஒரு மாயைதான். கோடிக்கணக்கான ரூபாய் புத்தகங்களை வீணடிக்காமல், கருணாநிதி ஜால்ரா பாடங்களை மட்டும் ஜெயலலிதா நீக்கியிருந்தால் போதுமானது. ஜெயலலிதா பழையபடி ‘கொண்டதை விடாத’ பிடிவாதம் உடையவராக இல்லை. சொன்னபடி வாரா வாரம் நிருபர்களை சந்திக்கிறார். மாறிவிட்டார் என்று சொல்லப்படுவது இன்னொரு மாயை இல்லை என்று நிரூபிக்க அவருக்கு இது ஒரு வாய்ப்பு. இப்போது கூட, ஒவ்வொரு பாடப் புத்தகத்துக்கும் ஓர் அறிஞர் குழுவை நியமித்து ஒரு வாரத்துக்குள் அந்தப் புத்தகம் தகுதியானதா என்று பரிசீலித்து முடிவு தெரிவிக்கச் சொல்லலாம். சரியானவற்றை இந்த ஆண்டே பயன்படுத்தலாம். மாற்றப் படவேண்டிய புத்தகங்களை மட்டும் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகங்களும், நேரமும் வீணாவதைக் குறைக்கலாம். செய்வாரா?

  4. @Srinivas

    First of all, this female sangeetha is a stupid.///

    we are also stupids,for we vote for same looters over the years!

    If we stop/reduce consuption automatically any price should come down irrespective of Govt. Steps. ///

    கல்விக்கு காசு இல்லாத இந்தப் பெண் தான் எல்லவற்றியும் consume செய்கிறாள் என்கிறீர்களா?

    ஒன்றுமே படிக்காத,கூலி வேலைக்கு செல்கிற தாய் வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், நாக்கை அற்த்து அதிமுக வாழ்க என அரசு வேலை வாங்கச் சொல்கிறீர்களா??

    First put you her shoes and then see the situtation!

    • I did not deny the fact that we are also stupids to vote these looters !! – but not soooo stupid like this female. Tell me why she need to get education for her son in that specific school? why not in neary Govt school? Everyone should assess their present financial status, improve it through hard work. Then think about higher consumption. This female has a stupid thinking that only if her son study in that school, he can shine in future. Utter non-sense. I am working in IT company and when I checked with my colleagues (500+) many of us studied in Municipal/Govt shools & all from south tamil nadu without fluent english.

      Reg. the consumption – pl don’t link to this incident. thats a generic one applicable to many of our problems. Just I added here as a separate paragraph

  5. குழந்தைப் பாராயணம் :

    “கான்வென்டுப் படலம்”

    சோதனை செய்யவும்.

    செய்முறை :

    கை கால்களை உதைத்து பாலுக்கு அழும் கைக் குழந்தையின் முகத்தருகில் சிட்டிக்கையிட்டு இடம் வலமாய் கையை ஆட்டி சோதனை செய்யவும்.
    சிட்டிக்கை யொலிகேட்டு சிந்தனையோடு உங்கள் கை விரல்களையே பார்த்தால்
    கைக் குழந்தை இப்பொழுதே கல்வி பயிலத் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    ஏபிசிடி வடிவில் பிளாஸ்டிக் எழுத்துக்களை வாங்கவும். பன்னாட்டுக் கம்பெனியின் டிரேட் மார்க் ‘நான்-டாக்சிக்’ பொம்மைகளையே வாங்கி அடுக்கவும்.
    எழுத்துக்களைப் படிப்பதற்கு பதில் வாயால் கடித்து விழுங்கினால் கூட அது விஷத்தன்மை இல்லை என்பது அதன் தனிச் சிறப்பு.ஆனால்,
    ஆங்கிலம் தொண்டையிலடைத்துக்கொண்டு, மரணம் நேரிட்டால், கம்பெனி பொறுப்பாகாது.

    அடுத்ததாக, உடனே ஒரு கம்ப்யூட்டர் வாங்கவும். கண்டிப்பாக மல்டிமீடியா இருக்கவேண்டும். தாலாட்டை நிறுத்தி, ட்விங்கிள் ட்விங்கிள்
    லிட்டில் ஸ்டார் முதல் ஹம்ப்டி டம்ப்டி வரை அனைத்து ஆங்கில ரைமிங்ஸ் பாடல் சிடிக்களை ஓடவிட்டு, அதி பயங்கரமாக அலறும்
    ஹெட் போனை அதன் காதுகளில் மாட்டவும்.
    ‘செகண்ட் லாங்குவேஜ்’ என ஒரு நாதாரி சப்ஜெக்ட்டை இந்தக் குழந்தை படிக்க நேரிட இருப்பதால், எப்பவாவது ஒரு முறை, தாயின் மணிக்கொடி, தமிழ்த்தாய் வாழ்த்து,
    வானாகி மண்ணாகி, போன்ற (ஒவ்வொரு தேர்வின்போதும் வரும்) மனப்பாடப் பகுதியை மனப்பாடப்படுத்தவும். எனக்குத் தெரிந்து,
    ஜனகனமண தேவையில்லை. ஏனென்றால் அது கேள்வியாக்கப்படுவதில்லை. அது, பாடப்படும்போது வேறு எழுந்து நிற்க வேண்டும்.
    பாவம், குழந்தையால் நிற்க முடியாது. படுத்தபடியாகவே படிக்கட்டும்.

    காலம் வேகமாக ஓடுகிறது. அதோ இதோ என்று இந்தக் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிட்டது பாருங்கள்.
    இதோ, நீங்கள் சீராட்டி, சிடி போட்டு, மனனம் பண்ணப்பட்ட குழந்தை, உங்கள் ஒரு வருங்கால டாக்டர் அல்லது
    ராக்கெட் விஞ்ஞானி அல்லது ஏஆர் ரகுமான் அல்லது மன்மோகன் அல்லது எம். எஸ். சுவாமினாதன் அல்லது மணிரத்னம் அல்லது
    கல்பனா சாவ்லா அல்லது அம்பானி அல்லது பிர்லா அல்லது குறைந்த பட்ச-பில்கேட்ஸ் அல்லது அதைவிட குறைந்த பட்சமாக நாட்டின் முதல் குடிமகன்(ள்)!

    அந்த நாளும் வாராதோ? வரும். வரும். வந்துவிடும். கலாம் சொன்னது போல கனவு காணுங்கள். உங்கள் நடுத்தரத்திலிருந்து உங்கள் குழந்தை மேட்டுக்குடி வர்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அம்பானி போல அது ஒரு சிறிய வீடுகூட கட்டிக்கொள்ளுமென்றும் கனவும் காணுங்கள்.

    ஏய்… கனவா…? கனவு காணக்கூடிய நேரமா இது? போய்யா போ. ப்ளே ஸ்கூல் நெறம்பிடப் போகுது. நல்ல மாண்டிசரி ஸ்டைல் (வீட்டிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்தாலும் பரவாயில்லை) பள்ளியில் சேர்த்துவிடு. பணத்தைக் கணக்கு பார்த்தால் ‘அம்பானி-சிறிய கனவு வீடு’ உண்மையிலேயே உடைந்து போய்விடும். உஷாராயிருக்க வேண்டும்.

    வாங்க தொரை… வாங்க! இந்த கியூவில் நில்லுங்கள். பாவம் ரேஷன் கடைப் பக்கம் கூட எட்டிப்பார்க்காத நீங்கள்! விதி வலியது. நீங்கள் நிற்பது தரமான க்யூவா என்று பாருங்கள். உங்கள் முன்னால் நிற்பவர்கள் உங்களை விட வசதியானவர்களா என்று ஒரு முதல் பார்வையிலேயே கணித்துவிடுங்கள்.

    “என்ன…ஆ…ஐய்யோ… போச்சா… அப்படியா…. ஐயையோ…சரி…. ஒண்ணு செய், ரிலையன்சிலிருந்து எடுத்து இன்ஃபொசிசில் போடு. தேறும் என்று இ.டி. சொல்லுது.”

    “ஐசிஐசிஐ… செக்கைத் தூக்கி சிட்டில போடு. ஆக்சிஸ்ல ஒரு பத்தாயிரத்தை ட்ராப் பண்ணி ஒரு மணிக்குள்ள கட்டிடு. செக்கு ரிடர்ன் ஆயிடுத்துன்ன நாறடிச்சிடுவான். வெளி நாட்டுக் கம்முனாட்டிங்க… வீட்டுக்கு ஆள் அனுப்பரானுங்க…”

    இதுபோன்ற பேச்சுக்கள் இந்த க்யூவிலிருந்து உங்கள் காதுகளில் விழுந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பதுதான் சரியான க்யூ. அந்த படித்த மேன்மக்கள் சரியான பள்ளியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நீங்கள் தைரியமாக நம்பலாம். இரண்டாவதாக, க்யூவில் டீசன்சி கடைப்பிடிக்கப்படும். ரேஷன் கடையில் மாதிரி யாரும் உங்களுக்கு முன்னால் சந்தில் புகுந்துவிட மாட்டார்கள் – சண்டை சச்சரவும் இருக்காது.

    ப்ரி-கேஜி அப்ளிகேஷன் வாங்கியாச்சா? சரி… நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு, கவனமாக அதை நிறப்புங்கள். நேமாலஜி ஜோதிடப்படி குழந்தையின் பெயருக்கு இடையில் ஏதாவது தெய்வீக எழுத்து சேர்த்திருந்தால் (அகிலேஷ்ஷ், ராஜேஷ்ஷ்), வீட்டில் போன் செய்து கேட்டு நிதானமாக தவறில்லாமல் நிறப்புங்கள்.

    குழந்தையின் பள்ளி இண்டர்வியூவில் நீங்கள் பதற்றமடையத் தேவையேயில்லை. படுத்த படுக்கையிலேயே படித்த ரைம்ஸ் இங்கு கை கொடுக்கும். என்ன, கொஞ்சம் (உங்களைப் பொறுத்தவரை கடன் உடன் வாங்க வேண்டியிருக்கலாம். கனவு ஞாபகமிருக்கிறதில்லையா?) ரசீதில்லாத கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். பிச்சை புகினும் கற்கை நன்றே. அவ்வை சொன்னது.

    இளமையில் கல் என்றும் அவ்வை சொன்னாள். இது முக்கியமான அடிப்படைக் கல்வி. குழந்தை கொஞ்சம் ததிங்கிணத்தோம் போட்டாலும் பேஸ்மெண்டை சரியாகப் போடுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். இந்த ப்ரி-கேஜி, எல்கேஜி, யுகேஜி படிப்பையெல்லம் ஏதோ போண்டா பஜ்ஜி சாப்பிடுவது என்று சுலபமாக நினைத்து விடவேண்டாம்.

    அலாரம் வைத்து காலை ஐந்து மணிக்கே குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடவேண்டும். சும்மணாங்காட்டியும் பல் துலக்கி குளிக்கவைத்து புத்தகத்தின் மூஞ்சியில் உடனே முழிக்க வையுங்கள். மூளை வளர்ச்சிக்கு காலை வெறும் வயிற்றில் திக்காக ஜூனியர் ஹார்லிக்ஸ், அரை மணி நேரங்கழித்து
    குழந்தையின் அபரிமிதமான உயர வளர்ச்சிக்கு காம்ப்ளான் கொடுங்கள். இல்லையென்றால் பள்ளியில் ‘குள்ளன்’ என்ற பேரெடுக்க வாய்ப்புண்டு. அரை மணி நேரங்கழித்து இரண்டு இட்டலி வாயில் திணிக்கப்பட வேண்டும். உடனே ஒரு டம்ளர் 4.5 பால் குடிப்பாட்டுங்கள். கவனம்… இந்த வேலைகளுக்கிடையிலும் குழந்தை புத்தகத்தை படித்துக் கொண்டேதானிருக்கவேண்டும்.

    புத்தக மூட்டையை முதுகில் மாட்டிக் கையில் லன்ச்சு பேக் கொடுக்கும் நேரத்தில் பள்ளி வாகனத்தின் ஹாரன் காதைப் பிளக்கும். தரதரவென்று குழந்தையின் கையைப் பிடித்து இழுத்து வந்து வேனுக்குள் முப்பதாவது ஆளாக திணித்து விடுங்கள். அடுத்த நொடி வேன் சடுதியில் மறைந்துவிடும். இப்பொழுது நீங்கள் சற்று இளைப்பாரலாம்.

    சாலை வாகன நெருக்கடியில் சிக்கித்தவித்து, அந்தி சாயும் நேரத்தில் பள்ளி வாகனமும் சாய்ந்து சாய்ந்து, ஆடியசைந்து வீட்டினருகில் வந்து நின்று உங்கள் குழந்தையை தள்ளிவிட்டுப் போகும். குழந்தையை லாவகமாக காட்ச் பிடித்து, தோளில் வாரி அணைத்துக் கொள்ளுங்கள்.

    “டாடி, ஹி புஷ்ட் மி. சோ…ஐ கிக்ட் ஆன் ஹிஸ் நெக்…!” குழந்தை பேசும் மழலை ஆங்கிலம். கோடி கொடுத்தாலும் ஈடாகுமா? புளகாங்கிதமடையவும்.
    இதோடு நிறுத்தாதேயும். அபாக்கசில் சேர்த்துவிட்டால் – நொடிக் கணிதம். பிறகு சல்ஸா நடனம், கராத்தே, குங்க்பூ, ஸ்கேட்டிங்க்…. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! டபிள்யூ-டபிள்யூ-எஃப் – கண்ணுலயே காட்டாதீங்க. வன்முறை அதன் மனதுக்குள் புகுந்துவிடும். எல்லாம் ப்ளான் பண்ணி செய்யணும்.

    “தூக்கம் வருது” என்று கண்களைச் சொக்கும் குழந்தை. நமக்கு மனம் இளகிப் போகும். என்ன செய்வது? இன்றைய கஷ்டம் என்பது நாளைய சுகம்.
    வேண்டுமென்றால் சிறிது நேரம் போகோ அல்லது சுட்டியைப் பார்க்க விடுங்கள். குழந்தைக்கும் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ என்பது தேவைதானே!

    இப்பொழுது கெல்லாக்ஸ் அல்லது நூடுல்ஸ் நேரம். உடனே ஒரு கிளாஸ் பூஸ்ட். சீக்ரெட் ஆஃப் குழந்தையின் எனர்ஜி. (மேலே கூறப்பட்ட, ஏ.ஆர். ரஹ்மான், கல்பனா சாவ்லா லிஸ்டில், எச்சிலிலேயே புத்தகம் எழுதிச் சாதித்த சச்சின் விட்டுப் போய்விட்டது. உங்கள் கனவு லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி – பூஸ்ட்).

    சல்சா டான்ஸ் ட்ரெஸ், அதற்கு மேலே கராத்தே ட்ரெஸ், காலில் சக்கரம் கட்டி, சுட்டிக் குழந்தையை உங்கள் வண்டியில் அழைத்துச் செல்லும்போது சாலையின் இரு பக்களிலும் திரும்பித் திரும்பி கவனித்துப் பாருங்கள். இன்னும் ஏதாவது குழந்தை கற்றுக் கொள்ளக் கூடிய பயிற்சிக்கான விளம்பரங்கள் கண்ணில் படலாம்.

    எல்லாப் பயிற்சி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்த உடனே ஹோம் வொர்க். அடியாத மாடு படியாது என்பது பெரியோர் வாக்கு. காதைப் பிடித்து திருகியோ, முடியைப் பிடித்து தலையில் நளினமான முறையில் தட்டியோ பாடங்களைச் சொல்லிக் கொடுங்கள். சட்டங்கள் கடுமையாயிருப்பதால் மூன்றாவது வீட்டு மனித உரிமை ஆர்வலர் பார்க்காதவாறும் பதுங்கிப் பம்மி அடிக்க வேண்டும்.

    அதிக பட்சம் எட்டறை மணிக்குள் குழந்தை விரைந்து படிப்பை படித்து முடித்து விடவேண்டும்.பின் கதை சொல்லி தூங்க வைப்பதற்குப் பதில், ‘உன்னால் முடியும் தம்பி’ புத்தக வரிகளைப் படித்துதோ, கலாமின் புத்தக வரிகளைப் படித்தோ குழந்தையை சுலபமாக தூங்கிவிடச் செய்யலாம்.
    நீங்கள் படுக்கைக்குச் செல்லும்முன் ‘அஞ்சு மணி அலாரம்’ வைக்க வேண்டும்.

    ஆங்கிலக் கல்வி வழியில் பயின்றாலும் குழந்தை ஆங்கிலம் பேசத் திணறுவது உங்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கும். நல்ல பள்ளி என்றால் ஒரே வக்குப்பறையில் ஐம்பது குழந்தைகள் கூட படிக்க வாய்ப்புண்டு. அத்தனை குழந்தைகளுக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதென்பது இயலாத காரியம். அத்தனையும் அவர்கள் கட்டி மேய்க்கப் போராடுவதை நீங்கள் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையில் சிந்திதுப் பார்க்கவும். போகப் போக சரியாகி விடலாம் என்று பள்ளி நிர்வாகம் உங்களுக்கு ஆறுதல் சொல்லும். அதனால் ஆறுதல் அடைந்துவிடுங்கள். தமிழ் என்பது வேப்பங்காயாகத்தானிருக்கும். என்ன தமிழ் இது… கொம்பும், காலும், கொக்கியும், நெடிலும், குறிலும்…. குழந்தைகளுக்காக ஆங்கில எழுத்து மாதிரி ஒரு 26 எழுத்துகளிலேயே தமிழைச் சுருக்கிவிட தமிழ் ஆர்வலர்கள் முயன்றாலென்ன? செம்மொழி மானாட்டில் என்னதான் கிழித்தார்கள் என்று தெரியவில்லை.

    இப்படியாக உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மூச்சிறைக்க, நாக்கு வெளித்தள்ள கான்வென்டுப் படலம் முடிந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். கலாம் சொன்னது போல, கனவுதான் முக்கியம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்.

    • “குழந்தைகளுக்காக ஆங்கில எழுத்து மாதிரி ஒரு 26 எழுத்துகளிலேயே தமிழைச் சுருக்கிவிட தமிழ் ஆர்வலர்கள் முயன்றாலென்ன? ”

      அருமையாகச் சொன்னீர்கள் பாமரன். இதே கருத்தை 30 ஆண்டுகளாக எனது கணவரும் சொல்லி நிறைய கருத்தரங்குகளிலும் பொது மேடைகளிலும் வாதிட்டுவிட்டார்.முட்டாள்களை திருத்துவதென்பது வள்ளுவன் சொன்னதுபோல் நீருக்குள் மூழ்கி இருப்பவனை வெளியில் தேடுவது போல்தான்.

      என் கணவர் சொன்ன வழியைத்தான் “ஒலிவழி தட்டச்சு” செய்யும் நீங்கள் எல்லோரும் பல ஆண்டுகளாய் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

      உயிரும் மெய்யும் இருக்கும்போது, உயிர் மெய் எழுத்துக்கள் எதற்கு? 18 மெய்யும் 12 உயிரும் தனித்தனியாக தட்டச்சுகளில் நாம் தட்டும் போது அவை உயிராகவும் மெய்யாகவும் உயிர்மெய்யாகவும் மாறி தோன்றுவதைப் பார்த்திருக்கின்றீர்களா? உயிர்மெய் என்ற புதிய எழுத்தாக மாற்றாமல் ஆங்கிலம் படிப்பதைப்போல் எழுத்துக்களை சேர்த்து படிக்கநீங்கள் பழகிகொண்டால் 216 உயிர்மெய் எழுத்துக்கள் தேவையே இல்லை.

      வகர ஒற்று + ஈகாரம் , ரகர ஒற்று அகரம், “ன்”கர ஒற்று.

      வினவு இணையத் தளத்தில் எழுதும் உங்களில் எத்தனைபேர் மேலே உள்ள எழுத்துக்களை கூட்டினால் என்ன வரும் என்று சொல்லுங்கள்.

      க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள.

      இவை தேவையா? கொடுமையிலும் கொடுமை ஐ, ஒள இரண்டும் உயிர் எழுத்துக்கள் என்று இன்னும் சொல்லிக்கொண்டிருக்கும் முட்டாள்தனம்.

      • தமிழை சீர்திருத்த புறப்பட்டுவிட்ட அறிவுச்சுடர் பிரியா அம்மணி அவர்களுக்கு [பேரறிவு பெருஞ்சுடரான அவரது கணவருக்கும் சேர்த்தே என்றும் கொள்ளலாம்] அறியாமை இருள் மண்டிய தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு தமிழன்பன் எழுதிக்கொண்டது.

        30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துக்களை சீர்திருத்த அதுவும் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அரும்பாடுபட்டு வரும் உங்கள் கணவருக்கு ஒரு எளிய உண்மை தெரியாமல் போய் விட்டதே என பெரிதும் வருந்துகிறேன்.

        அம்மணி,அய்யா,அறிவாளிகளே,தமிழில் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 31 தான்.உயிரெழுத்துக்கள் 12 மெய்யெழுத்துக்கள் 18 ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 31 .உயிரும் மெய்யும் இணைந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள் ஏற்கனவே உள்ள எழுத்துக்களின் ஒலிவடிவம் மட்டுமே.அவை தனித்த எழுத்துக்கள் அல்ல.இதை ஆங்கில எழுத்துக்களின் இயங்குதன்மையை கொண்டு எளிதாக புரிந்து கொள்ளலாம்.

        26 ஆங்கில எழுத்துக்களில் vowels எனப்படும் a,e,i.o,u ஆகிய ஐந்து எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனலாம்.மிகுதி 21 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்.எந்த ஒரு ஆங்கிலச்சொல்லும் vowels இன்றி அமைய முடியாது.அவை இல்லாமல் பிற ஆங்கில எழுத்துக்கள் ஒலிக்கப்படும் தன்மையை பெறமுடியாது.அதாவது உயிரும் மெய்யும் சேர்வது சொல்லாக எழுதப்பட்ட பின்னரே.பாருங்கள்.allotment இந்த சொல்லில் ll என்ற மெய் எழுத்துக்களை ”லா” என என உயிர்மெய் எழுத்தாக அதனுடன் சேரும் o மாற்றுகிறது.இந்த உயிர்மெய் சேர்க்கை தமிழில் சொல் எழுதப்படும் முன்பே எழுத்து அளவிலேயே செய்து முடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.இதை போய் எழுத்துக்களின் எண்ணிக்கை என குழப்பிக் கொள்ளவேண்டாம்.

        இப்படி உயிர்மெய் சேர்க்கை எழுத்து அளவிலேயே செய்து முடிப்பதன் சிறப்பையும் பார்க்கலாம். உயிர்மெய் எழுத்துக்கள் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளதால் தமிழ் சொற்களின் உச்சரிப்பு எப்போதும் மாறுவதில்லை.தமிழை எழுத,படிக்க கற்றுக்கொள்ளும் குழந்தைகளும் வேற்று மொழியாளர்களும் எழுத்துக்களை கற்றுக் கொண்டாலே போதும். எளிதாக தமிழை எழுதிப் படிக்கலாம்.பாருங்கள்.இ ல க் க ண ம்.இந்த எழுத்துக்களை அறிந்துகொள்ளும் குழந்தை தனித்தனியாக சொன்னால் எழுத்துக்கள்.சேர்ந்தாற்போல் சொன்னால் ”இலக்கணம்”என்ற சொல். எவ்வளவு எளிதானது தமிழ் பார்த்தீர்களா.

        உலகின் எந்த மூலையானாலும் தமிழ் சொற்கள் மாற்றி மாற்றி உச்சரிக்கப்படுவதில்லை.ஆனால் உயிர்மெய் சேர்க்கை சொல்லுக்குள் நடைபெறும் ஆங்கில சொற்களின் நிலை என்ன.உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உச்சரிப்பு.[பேச்சு பாணி அல்ல. சொற்களின் ஒலி வடிவம்] தமிழ்நாட்டில் இருந்து போகும் ”லாரி”கேரளாவுக்குள் நுழைந்தவுடன் ”லோரி” ஆகிவிடுகிறது.இந்த குழப்பத்தின் காரணமாகத்தான் ஆங்கிலத்தில் மற்ற சொற்களை எப்படி உச்சரித்தாலும் வினைச்சொற்களை [verb words] ஒரே மாதிரியாக உச்சரிக்க வேண்டும் எனபது ஒரு மரபாக உள்ளது.இதனால் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு கடினமான மொழியாக இருப்பதுடன் நிறைய சொற்களை உச்சரித்து பழகுவதற்கு வெகு காலம் தேவைப்படுகிறது.

        \\குழந்தைகளுக்காக ஆங்கில எழுத்து மாதிரி ஒரு 26 எழுத்துகளிலேயே தமிழைச் சுருக்கிவிட தமிழ் ஆர்வலர்கள் முயன்றாலென்ன?//
        புதிய பாமரன் பின்னூட்டம் முழுவதும் வஞ்சப்புகழ்ச்சியாக எழுதியுள்ளார்.அதை புரிந்து கொள்ளாமல் நேர்மறையாக எடுத்துக்கொண்டு தமிழை சீர்திருத்த ஆவேசமாக கிளம்பி விட்டீர்களே. நீங்கள் ஆசைப்படுவது போல ஆங்கிலத்தின் பாணியில் தமிழை எழுதினால் எப்படியிருக்கும் பாருங்கள். இலக்கணம் என்ற சொல்லை ”இல்அக்க்அண்அம்” என்றுதான் எழுத வேண்டும்.தேவையா இந்த வேண்டாத வேலை.

        \\வகர ஒற்று + ஈகாரம் , ரகர ஒற்று அகரம், “ன்”கர ஒற்று.
        வினவு இணையத் தளத்தில் எழுதும் உங்களில் எத்தனைபேர் மேலே உள்ள எழுத்துக்களை கூட்டினால் என்ன வரும் என்று சொல்லுங்கள்.//

        இந்த அழகில் கலைஞர் தொலைகாட்சி தரத்தில் இப்படி போட்டி வேறா.

        ”வ்ஈர்அன்”இப்படி உளறிக்கொட்டுவதற்கு வீரன் என எளிதாக சொல்லிவிடலாமே.

        இப்போது சொல்லுங்கள்.தண்ணீருக்குள் மூழ்கி இருப்பவனை வெளியில் தேடி அலையும் ”முட்டாள்கள்”என தமிழ் ஆர்வலர்களை ஏசுவது என்ன வகையான செயல்.அதையும் ”அறிவாளிகள்” ஆன நீங்களே சொல்லவேண்டும்.

        • தமிழ் ஆர்வலர்களூம் தமிழர்களும் 20 ஆண்டுகளூக்கு முன்பு எங்கு போணீர்கள்? கணிணியில் 7 பிட் என் கோடிங் முறையில் 18 மெய், 12 உயிர், 1 ஆய்தம், மற்றும் உகர, ஊகார வரிசைகள், ஐகார வரிசைகள் தனி எழுத்துக்களாய் கணிணியின் விசைப்பலகைக்குள் அடக்க முடியாமல் தமிழ் மென்பொருள் எழியநாங்களெல்லாம் தடுமாரியபோது எங்கு போனீர்கள்? இப்போது தமிழ்நூல்கள் 31 எழுத்ட்குகளைக் கொண்டுதான் அச்சிடப்படுகிரறதோ …………….?
          கெர்னிங், ரென்டெரிங் என்றெல்லாம் என்ன வென்று தெரியயுமா? 8 பிட் கணிணி வரை தமிழை எழுத தமிழ் எழுத்துக்களை கணிணிக்குள் அமைக்க எவ்வளவு தொல்லைப்பட்டோம் எனத்தெரியுமா? 16 பிட் வந்ததும் யுனிகோட் வந்ததும் இந்த தொல்லை தீர்ந்ததும் தெரியுமா ………..? அந்தநாளில் என் 10 வயது மகளை கணிணியில் தமிழ் எழுதுக்களை உருவாக்க என் கணவர் பணித்த போது நானும் அவளுக்கு உதவி இருக்கிறேன். மற்றவர்கள் உருவாக்கிய மென்பொருளில் உயிர்வாழும் ………,……… பெற பலநூற்றாண்டாகும்.

          இன்றாவது மேதாவித்தனத்தை யுனிகோட் குழுவிடம் சொல்லி, இனி தமிழில் 31 எழுத்துக்களே போதும், மற்ற வரிவடிவங்களை எடுத்ட்கு விடுவோம். ஒவ்வொரு குழந்தையும் இத்தனை தமிழ் எழுத்துக்களை கற்கும் தேவை இல்லாத் தொல்லையில் இருந்துநீக்கிவிட முடியுமா?. என் கணவர் சொல்லும் திருத்தங்களை மேற்கொண்டால் 10 உய்ர், 18 மெய் 1 ஆய்தம் என 29 தமிழ் எழ்த்ட்கு வடிவமே இருக்கும். அந்த எழுத்ட்குகளை மட்டுமே இனி வரும் தமிழ் குழந்தைகள் கற்கும். மேலும் எழுதுவட்குபோன்றே பேசவும் வேண்டும். பேச்சு தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இருக்கும் வேறு பாடு உலகில் ஒரு சில மொழிகளிலேயே காணப்படுகின்றன. அதிலும் கொடுமை தமிழில்.

          வீரன் என்ற சொல்லை கண்டுபிடிக்க 1வது படிக்கும் ஆங்கிலக் குழந்தைக்கு தெரியும். தமிழகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு தெரியும்?

          Tamil is not the only phonetic language you . Almost all Indian languages are. I do not know about other Asian languages. May be we can find more phonetic languages.

          • ”அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு பண்ணருவா”என்ற தமிழ் பழமொழிக்கேற்ப கணினி தொழில்நுட்ப சொற்கள் சிலவற்றை எடுத்துப்போட்டு அது தெரியுமா இது தெரியுமா என்று எக்காளமாக கேட்கும் நீங்கள் ஒரு எளிய உண்மையை மறந்து விட்டீர்கள்.

            7 பிட் 8 பிட் கணினியில் தமிழ் எழுத்துக்களை எழுத நீங்களும் உங்கள் மகளும் ”திணறிக்கொண்டிருந்த” காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் தட்டச்சு இயந்திரம் வந்து விட்டது.26 எழுத்துக்கள் கொண்ட ஆங்கிலத்தை மட்டுமல்ல ”கொம்பும் காலும்”முளைத்த தமிழையும் தட்டச்சு செய்யமுடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா.

            இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.தொழில் நுட்பம் என்பது தேங்கிய குட்டை அல்ல.அது இடையறாது பாயும் வற்றாத ஆறை போன்றது.அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

            7 பிட் 8 பிட் போய் 16 பிட் கணினி வந்து விட்டதல்லவா.ஆகவே 7 பிட் 8 பிட் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கான தொழில் நுட்ப வளர்ச்சி. 16 பிட் என்பது இப்போதைய நிலைமை.இதுவும் இப்படியே இருந்து விடாது.புதிய உயரங்கள் எட்டப்படும்.இந்த நிலையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிகேற்ப தமிழ் மொழியை மாற்றி அமைத்துக் கொண்டிருக்க முடியாது.அது செருப்புக்கு ஏற்ப காலை வெட்டிக்கொள்ளும் பைத்தியக்காரத்தனத்திற்கு ஒப்பாகும்.நீங்களும் உங்கள் மகளும் சிரமமாக இருக்கிறது என ஒதுங்கிக் கொண்டாலும் தமிழ்த்தாயின் ஆயிரமாயிரம் குழந்தைகள் தமிழுக்கு ஏற்ற கணினி தொழில் நுட்பத்தை உருவாக்கி தருவார்கள்.தமிழுக்கு ஏற்றாற்போல் கணினியை உருவாக்கித்தருவார்கள்.அப்படிப்பட்ட அந்த முகம் தெரியாத அன்பர்களின் கடும் உழைப்பின் பயனாகத்தான் நாம் இணைய ஊடகத்தின் வாயிலாக தமிழில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.அதனை பலரும் படிக்க முடிகிறது.அந்த அன்பர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

            எந்திரவியல் கருவியான [mechanical deevice ] தட்டச்சு இயந்திரத்தை தமிழுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முடிந்திருக்கும்போது அதனிலும் முன்னேறிய தொழில் நுட்பமான மின்னணுவியல்,வன்,மென்பொருள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் கணினியை தமிழுக்கு ஏற்றாற்போல் வடிவமைப்பது முடியாத செயலாகவா இருக்கும்.ஆகவே கணினிக்கு ஏற்றாற்போல் தமிழை வெட்டி சிதைப்பதை விடுத்து தமிழுக்கு ஏற்றாற்போல் கணினியை மாற்றுவதே அறிவுடமையாகும்.

            \\.என் கணவர் சொல்லும் திருத்தங்களை மேற்கொண்டால் 10 உய்ர், 18 மெய் 1 ஆய்தம் என 29 தமிழ் எழ்த்ட்கு வடிவமே இருக்கும். அந்த எழுத்ட்குகளை மட்டுமே இனி வரும் தமிழ் குழந்தைகள் கற்கும். மேலும் எழுதுவட்குபோன்றே பேசவும் வேண்டும். பேச்சு தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இருக்கும் வேறு பாடு உலகில் ஒரு சில மொழிகளிலேயே காணப்படுகின்றன. அதிலும் கொடுமை தமிழில்.
            வீரன் என்ற சொல்லை கண்டுபிடிக்க 1வது படிக்கும் ஆங்கிலக் குழந்தைக்கு தெரியும். தமிழகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு தெரியும்?//

            உங்கள் கணவர் சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் வேத வாக்காக இருக்கலாம்.’ஐ’யும் ‘ஒள’ வும் இல்லாமல் போனால் ‘கை’ ‘பை’ போன்ற சொற்களை எப்படி உருவாக்குவது.சரி,அவை தமிழில் இருப்பதால் யாருடைய குடி முழுகிப் போய்விட்டது.முந்தய பின்னூட்டத்தில் நான் விளக்கியது போல் தமிழ் ஒரு ”நேர்சீரான”தெளிந்த நீரோடை போன்ற மொழி.பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்வாழும் அற்புதமான மொழி.அப்படிப்பட்ட மொழியை உங்களை போன்றோரின் சிறிது கால அற்ப சௌகரியத்திற்காக வெட்டி சிதைத்து ஒட்டுப்போட்டு தைக்க முடியாது.

            பெற்ற தாயின் மீது நாம் வைத்திருக்கும் பாசத்தை போன்று இயல்பானது தாய்மொழியின் மீதான நேசம்.ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் தமிழ் மீது இத்தனை வெறுப்பு.நான் அறிந்தவரை பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் வேறுபாடு இல்லாத மொழி இருப்பதாக தெரியவில்லை.மேலும் அது இயல்பானதுதான்.குறைபாடு என சொல்ல முடியாது.

            veran அல்லது veeran ஐ ஆங்கிலக் குழந்தை எப்போது படிக்கிறதோ அதற்கு முன்பாகவே ”வீரன்”ஐ தமிழ் குழந்தை படித்துவிடும்.தமிழ்தான் எழுத,படிக்க எளிமையான மொழி ஆயிற்றே.இன்னொன்று தெரியுமா,ஆங்கிலக் குழந்தை அந்த சொல்லை வீரன்,வீரேன்,என்று மனம் போன போக்கில் படிக்கலாம்.ஆனால் தமிழ் குழந்தை மாற்றி மாற்றி படிக்காது.எப்போதும் அவன் ”வீரன்”தான்.

            ஆக மொத்தத்தில் தமிழில் குறை ஏதுமில்லை.உங்கள் கவலையெல்லாம் தமிழை கணினியில் எழுதுவது குறித்தே இருக்கின்றது.கவலையே வேண்டாம்.கணினியையே தமிழுக்கு ஏற்ப உருவாக்கித்தர தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்த்தாயின் மடியில் அவளது குழந்தைகளும், அக்குழந்தைகளின் கரங்களில் தமிழும் பத்திரமாக இருக்கிறார்கள்.

  6. மீதி பணம் ரூபாயை கட்ட முடியாமல் ஒரு தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளாள் சமச்சீர் கல்வி எனும் நல்ல திட்டத்தின் பாட புத்தகத்தில் கருணாதியின் கவிதை இருப்பதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் குப்பை கூடைக்கு போகப்போகின்றன சுவர் விளம்பரம் தட்டி விளம்பரத்திற்கு எல்லாம் தடைபோட்ட தேர்தல் ஆணையம் சிறுவர்கள் படிக்கும் பள்ளி புத்தகத்தில் இப்படி சுய விளம்பர கவிதைகளுக்கு தடை விதிக்க முடியாதா? ஜெயலலிதா கருணாதியின் புகழ் பாடும் கவிதைக்காக சமச்சீர் கல்வியை இடை நிறுத்தம் செய்திருக்கிறாரா? அல்லது அவரை புகழ் பாடும் கவிதையை சேர்ப்பதற்காக செய்திருக்கிறாரா ? இவர்கள் ஈகோ சண்டையில் மக்களின் கோடிகணக்கான பணம் சமச்சீர் கல்வி புத்தகத்திலும் தலமைசெயலக கட்டிடத்திலும் வீணாய் போகிறது.இந்த அரசியல்வாதிகளின் கையாள்கள்தான் கல்வி வியாபாரத்தை சீரும் சிறப்புடனும் நடத்துபவர்கள். நேற்று ஒரு பெண் ஜெயா வெற்றிக்காக கட்டை விரல் காணிக்கை கொடுத்துள்ளார் இனி ஆளுக்கொன்றாய் அறுத்துக்கொண்டு போனால்தால் அரசு வேலையும் நிதி உதவியும் கிடைக்கும் போலிருக்கிறது அதைத்தவிர சங்கீதா போன்ற இளம் ஏழை தாய்கள் மன்னேன்னையை ஊற்றிக்கொண்டு செத்தாலும் எதுவும் நடக்காது. சாகும் போது சங்கீதா உயிர் அழுது ஏங்கி விட்ட கடைசி மூச்சு காற்றின் வெப்பமும் வயிற்றெரிச்சலும் இதே காற்றில் உலவிக்கொண்டுதானே இருக்கும்!

  7. கோவை பகுதி மக்கள் பள்ளிக்கல்விக் கொள்ளைக்கு எதிராக போராட மனித உரிமை பாதுகாப்பு மையத்தையே நாடுகின்றனர். அவ்வகையில் சமீபத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களை திரட்டிப்போராடி பெற்றோர்கள் சார்பாக வைக்கப்பட்ட அனைத்து 7 கோரிக்கைகளையும் சிருஷ்டி வித்யாலயம் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது

  8. sir,
    kindly send me the address of sangeetha’s home . i wish to take care of the child’s education further. i am from salem, mother of 2 sons.
    lakshmi

    • லஷ்மி பிரியா உங்களுக்கு தனிமடல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம். பார்க்கவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி

  9. //தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் தற்கொலை செய்து கொண்டார் சங்கீதா.//

    பொறுப்பற்ற தாய், இந்த சின்ன குழந்தையை யார் கவனிப்பது???தாயில்லாத ஏக்கத்தை யாரிடம் சொல்லி அழும்??? அந்த சோகத்தின் வடுவை யாரால் நீக்கமுடியும்????

    இன்றும் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற மாட்டர்களா என்ன????

  10. யாருசெத்தா நமக்கென்ன பாஸ்…நம்ம பிள்ளைகளை கான்வெட் ஸ்கூலதான் படிக்கவைப்போம்..இல்ல ரெண்டு நாள் உச் கொட்டப்போறோம்..next artical plz..add little more mirchi

  11. எங்க ஊரு இப்புடித்தான் இருக்குமுங்கோ!!!!நாங்கெல்லாம் இங்கிலீசு படிக்கோனுமுங்கோ..
    பெர்க்சு பன்னாடைங்க் மாரவே மாட்டானுங்க.

    செத்துப்போன இவலுக்கு அரிவே கெடையாதா ? அப்புடி என்ன ஆடம்பரம் வேன்டயிருக்கு, ஏன் அரசு பல்லியில் படிக்கவைதால் என்ன கொரஞ்சா போயிருவா? பாவமாத்தான் இருக்கு, ஆனா இப்ப என்ன் பன்ன முடியும் அவ புருஷன்..

  12. i am getting pissed off when someone bring their child to me and ask me to talk to them in english. people here have gone crazy and it is impossible to bring them back to reality. even uneducated people who are rich want their children to call them ‘mummieeee’, ‘kedeeeee’ chi ‘dadeeeeee’. ‘unkillll’, ‘aaandeeee’. people here introduce their kin to others as ‘ennoda brothernga’, ‘en sunnunga’, ‘woipunga’, ‘ennoda neiparrunga’, ‘paather in laa’, …..

    CHILDREN NAMES = ponnathal’s daughter- harshitha, aaruchami’s son= Jithesh,
    sinnayan and angammal’s onlu daughter = shreshta.

    mangoose mandaiyans, thirundhave maatanunga!!!

  13. இலவச மிக்சி வேண்டாம்.. தரமான் இலவச கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்று மக்கள் குரல் கொடுக்கும் வரை இது தீருவதில்லை…. பள்ளிநடத்த துப்பில்லாத அரசாங்கம் டாஸ்மாக்நடத்துவதை பார்த்து அனுபவியுங்கள்……..

  14. இதை ஒரு கொலை வழக்காக பதிந்து அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை செய்யலாம். மக்களுக்கு ரசு பள்ளிகள் இருப்பது தெரிவதல்லையா? இந்தியாவின் நோபல் பரிசுபெற்ற அத்தனை விஞ்ஞானிகளும் உலகத்தரத்தில் முதலிடம் வகிக்கும் கார்வார்டு பல்கலையில் பணிபுரியும் என் கணவரும் அமேரிகாவின் பெரிய தொழிலகங்களில் வேலை செய்யும் நானும் இன்னும் எங்களை விட அதிகம் சாதித்த பலரும் அரசு பள்ளியில் பயின்றவர்களே. உயிரியல் தொழில் நுட்பத்தின் தந்தையான டாக்டர் கொரானா என்னிடம் அவர் பள்ளி நாட்களில் எத்தனையோ கிமீ நடந்து 3 குடங்களை சுமந்து நீர் கொண்டு வந்த துயரங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.

    தனியார் பள்ளி நடத்துபவர்களின் செலவை கணக்கிட்டால் பலர் பள்ளி நடத்த முடியாமல் மூடிய கண்ணீர் கதைகளும் வெளிவரும். ஏன் மக்களே சேர்ந்து பள்ளிகளை எளிதாக தங்களுக்கு தாங்களே ட்குவக்கிக் கொள்ளலாமே.நேற்று புதுக்கோட்டையிலிருந்து நண்பர் சபாரத்தினம் என்பவர் என் கணவருடன் பேசினார். இவர் ஈழத்தில் இருந்து திரும்பி வந்த இந்தியத் தமிழர். அங்கு பள்ளியில் கல்வி தொடர முடியாமல் சிங்களர் விரட்டியதால் இந்தியா திரும்பினார். புதுகையில் டிவிஎஷ் நிறுவனத்தில் வேலைக்காரராகப் பணிபுரியும் இவர் அவர் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிறுவி ஒர் ஆசிரியர் 9 மாணவர் என ஆரம்பித்தவர் இன்று 150 மாணாவர்-நடுநிலைப்பள்ளி என வளர்த்து இருக்கிறார். இந்த பணிக்காக அப்துல்க்லாம் முதல் பல்ர் இவரைப் பாராட்டியிருக்கிறாரகள். இன்னும் இவர் அதே டிவிஎஷ் நிறுவனத்தில் வேலைக்காரராகப் பணிபுரிகிறார். முதலாளி ஆகிவிடவில்லை. நாங்கள்நிறுவிய கல்வி நிறுவனக்களுக்கும் நாங்கள் முதலாளிகளல்லர். மக்கள்தாம் முதலாளிகள்.

    வினவு இணையத்தளத்தில் பலர் விடுபட்டு புதிய சிந்தனையில் புகுந்தவர்களைக் காண்கிறேன். உங்களில் படித்தவர்கள் இப்படி பள்ளி, கல்லூரி, பயிற்சி மையங்கள் வைத்து சேவை செய்யும் எண்ணம் இருந்தால் எனக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்.

    வாருங்கள் உறவுகளே, ஆட்டிப்படைக்கும் ஆதிக்க சக்திகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவோம்.

    priyax1990@yahoo.com

  15. anna university mannar javazharukku petti pogum pothu ….school …neethi arasar evan avan ellam petti thaan ….i tell one incident ..konalaikku munnadi oru chennai la oru college job fair vaikkirannu solli kodi kanakkula adichathu ..police students nu porattam ippa petti yala pesama erukkannga anna university illa entha university la um petti thaan pesum poi kollai adichavathu panam kattunga illa paddippu kidippunu solli school pakkama varanthinga..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க