privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

-

கருணாநிதி அவர்களே, நீங்கள் வாய் திறக்கவில்லை என்று யார் அழுதார்?

மூவர் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யுமாறு போர்க்குணமிக்க போராட்டங்களை தமிழக மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த போராட்ட உணர்விற்கு பொருத்தமில்லாத கோழைகளாக, துரோகிகளாக, காட்டிக் கொடுப்பவர்களாகத்தான் பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர்.

சட்டமன்றத்தில் தூக்குதண்டனையை ரத்து செய்வதற்கு தனக்கு அதிகாரமில்லை என்று பாசிச ஜெயா கூறியிருப்பதும், அதில் கருணாநிதி இரட்டை வேடம் ஆடுவதாக சொல்லியிருப்பதும் நீங்கள் அறிந்ததே. உள்ளூர தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆசை கொண்டிருக்கும் ஜெயலலிதா ஒரு புறம் என்றால் மறுபுறம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அரசியல் நியாயத்தை தூக்கிலேற்றுகிறார் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தால் கூட அவர்களை மன்னித்திருப்பார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையை தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.”

கருணாநிதி அறிக்கையின் பின்னே பல மறைபொருள் விசமத்தனங்கள் மறைந்திருக்கின்றன.

முதலில் அவர் ஆட்சியில் இருந்த போது 2000ஆம் ஆண்டு கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது அவர்தான். அப்போது இந்த அறிக்கை வாசகங்கள் அவருக்கு நினைவில் வரவில்லை போலும். அப்போது கருணாநிதி ஏன் அப்படிச் செய்தார்? உண்மையிலேயே அவருக்குத் தமிழுணவர்வு இல்லையா? அப்படி இல்லை என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்.

ஜெயலலிதா, சோ, சுப்ரமணிய சாமி, தினமலர், இந்து முதலான பார்ப்பனக் கும்பலுக்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி அப்படிச் செய்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏற்கனவே இந்தக்கும்பலின் சதியால் ஆட்சியிழந்த அனுபவம் அவருக்குண்டு. அதுவும் கூட அவர் அக்கும்பலை எதிர்த்து நடந்ததல்ல. என்றுமே கருணாநிதியை பார்ப்பனக் கும்பல் ஏற்றுக் கொண்டவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு அத்தகைய ஜென்ம பகை அந்தக் கும்பலோடு கிடையாது. தன்னை ஏன் அவர்கள் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி அவருக்கு இப்போதும் உண்டு.

கொள்கையை விட தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம் என்ற வகையிலும் கருணாநிதி அப்படி ஒரு முடிவை எடுத்து கருணை மனு நிராகரிக்க காரணமாக இருந்திருக்கிறார். இது திராவிட இயக்கத்தின் பிழைப்புவாதப் பாரம்பரியம் தந்திருக்கும் மரபுச் சொத்து.

சரி, இப்போது ஆட்சியில் இல்லையே, தற்போதாவது கொள்கையை வெளிப்படையாக சொல்லி மரண தண்டனையை ரத்து செய்யக் கோரலாமே? யார் தடுத்தது? அதிலும் பிரச்சினை இருக்கிறது. காங்கிரசு கூட்டணி அரசின் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் கருணாநிதி, 2ஜி ஊழலில் செருப்படி பட்ட பிறகும், கனிமொழி, ராஜா சிறையில் நீடித்திருந்தாலும் காங்கிரசு அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஜெயா அரசின் கைது நடவடிக்கைகளால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் நிலையில் காங்கிரசின் தயவு என்பது கொள்கையை விட மதிப்பு வாய்ந்த விசயம்.

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தாலும் அவர் தூக்குத் தண்டனையை விரும்பியிருக்க மாட்டார் என்று சோனியா மனக் குளிர உளற வேண்டிய அவசியம் என்ன? இதே கருணாநிதிதானே கொலைகார அமைதிப்படையை வரவேற்க செல்லமாட்டேன் என்று செய்து காட்டியவர்? அந்த அமைதிப்படையை அனுப்பி கொலைக்கணக்கை ஆரம்பித்தவர் அந்த ராஜீவ்தானே? அந்த வகையில் போர்க்குற்றவாளி என்றாலும், போர்க்குற்றத்திற்கு தண்டனை என்ற முறையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜீவ் காந்திதானே?

சரி நேரடியாக ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லாமலே அவரது  கொலை என்பது அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான எதிர்வினை என்றாவது சொல்லலாமே? அதுவும் கடினம் என்றால் இருதரப்பிலும் தவறுகள் நடந்திருக்கின்றன, அதை மறப்போம் என்றாவது சொல்லலாமே? இத்தனை சந்து பொந்து இருந்தும் அதையெல்லாம் விடுத்து இப்படி அப்பட்டமாக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அப்பாவிகளை ஏன் இழிவு படுத்த வேண்டும்?

பாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும்? ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா? அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன?

கருணாநிதி அவர்களே, நீங்கள் மூவர் தூக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால் சற்று அமைதியாக இருங்கள். நான் வடிப்பது முதலைக் கண்ணீர்தான் என்று அந்த அரசியல் நியாயத்தை இழிவுபடுத்தாமலாவது இருங்கள். அதுவே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு செய்யும் மகத்தான தொண்டாக இருக்கட்டும். மேலும் உங்கள் வாரிசுகள் சிலர் சிறையில் இருக்க, அவர்கள் ‘சம்பாதித்த’ சொத்துக்களை காப்பாற்றும் அவஸ்தையில் சிறை செல்லாத வாரிசுகள் இருக்க, நீங்கள் வாரிசுகளை காப்பாற்றும் அரசியலை மட்டும் கவனியுங்கள். தூக்குத் தண்டனை ரத்து குறித்து தமிழக மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. இது மக்களின் முயற்சி, மக்களால் மக்களாகவே இணைந்து நடத்தும் போராட்டம், திராவிடர் கட்சி என பீற்றி கொள்ளும் தி.மு.காவாட்டும், அ.தி.மு.காவகட்டும், எதற்கும் உதவாது என்று மக்கள் உணர தொடங்கிவிட்ட காலமிது. இனியும் மக்கள் முன் கபட நாடகமாடி பிழைப்பு நடத்த முடியாது என்று போலி அரசியல் வியாதிகளுக்கும் மணி அடிக்கப்பட்டுவிட்டது. வாழ்க மக்கள். வளர்க சமுதாயம்!

  2. //பாசிச ஜெயாவை எதிர்ப்பதற்குத்தான் துப்பில்லை என்றால், செத்துப் போன ராஜிவ் காந்தி ஆவிக்காக இப்படியா பயப்பட வேண்டும்? ஈழத்தின் வில்லி ஜெயாவிடமே தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோருவதுதான் தமிழினித் தலைவரின் இத்தனை ஆண்டு அரசியல் சாதனையா? அதனால்தான் கருணாநிதியின் பித்தலாட்டம் என்று பாசிச ஜெயா பிட்டு பிட்டு வைக்கிறார். அதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்ல முடியுமா என்ன?//
    I agree. They are thinking people are fools.

  3. ஜெயலலிதாவாகட்டும் கருணாநிதியாகட்டும், அவர்கள் குறிக்கோள் ஒன்றுதான். மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது …மக்களை மூடர்களாக வைத்திருப்பது. மற்றபடி யார் இருந்தா என்ன? யார் செத்தா என்ன? நல்ல பிழைப்புவாதிகள்.

  4. உண்மைதான் வினவு அவர்களே…

    கலைஞர் இப்போது அழாவிட்டால், முதலை கண்ணீர் வடிக்காவிட்டால் தமிழக மக்கள் அவருக்காக அழத் தொடங்கும் நேரம் வந்து விடும். தனது மகள் சிறையில் வாடும்போது கூட , தன் கட்சியினர் மீது நில அபகரிப்பு புகார்கள் வந்திருந்த போது கூட தன் பங்கிற்கு மூவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கவிதை படித்து விட்டேன் என்று சொல்லி சுவரொட்டி அடித்து இதற்க்கு கூட பாராட்டு விழா நடத்துவார்கள். அதற்கு கவிஞர் வைரமுத்துவும், ராமனாரயணனும் வாழ்த்து படிக்க வாய்ப்புகள் இருக்கின்றதே?

    சகோதரி செங்கோடிக்கு எனது குடும்பம் சார்பாக வீர வணக்கம் மற்றும் அவரது சித்தப்பாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை காணிக்கையாக்குகின்றேன்…

  5. Well said.. But, who else lost power for Sri lankan tamils?
    But, people simply have thrown MK. Even they don’t have courtesy to thank MK.

    For them JJ has become saviour. Useless people.

    But, nobody can deny one point. MK is far better than JJ, but people never respected him.

  6. கருணாநிதிக்கு பார்ப்பான் பகைன்னு காமெடி பண்ணாதீங்க!!அவர் ஆட்சியில் இருந்தப்போ அவருக்கான அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பார்ப்பனர்கள்தான்!!

  7. ஈழத் தமிழர் போராட்டம்தான் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் என்றால் வை கோ எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார்…. வினவுக்கு பயம் அன்னா அசாரே மாதிரி யாராவது வந்து – சீமான் போன்றோர்- நல்ல பெயர் வாங்கி விடுவார்களோ என்று…..

    தோலுரித்தல் முகமூடி கிழித்தல் இதையெல்லாம் விட்டு விட்டு செங்கொடி மாதிரி இளம் தலைமுறையினர் மனவலிமை இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதில் இருந்து காப்பாற்றுங்கள்……

  8. என்ன பண்றது அந்த ஆளு அவரோட தினசரி பொழப்ப பாக்குறாரு.. இன்னும் இவர இந்த ஊரு நம்பிட்டுத்தான் இருக்கும்…?

  9. ஐயா நீங்க உங்க கதை திரக்கதை வசனம் எல்லாம் இங்க காட்டாதிங்க..

  10. கருணாநிதி… இந்த மானங்கெட்ட பொழப்புக்க்கு…

    இதே கருணாநிதி 1987இல் ராஜிவ் கற்பழிப்பு படையை ஈழத்திற்கு அனுப்பிய போது… அந்த சிங்கள பேரினவாதத்திற்கு ஏவல் செய்ய போகிறது என அம்ப்லபடுத்தி… நெடுமாறன், வீரமணி போன்றவர்களுடன் சேர்ந்து மனித சங்கிலி நடத்தினார்… அந்த கற்பழிப்பு படையில் ஆக்கிரமிப்பை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைக்க கேட்டவர்… 1990இல் ராஜிவ் அனுப்பிய படை கொலை… கற்பழிப்பு செய்தது என சொல்லி சென்னை துறைமுகத்திற்கு செல்ல மாட்டேன் என்றவர்… ராஜிவ் செத்த போது இவரைதான் கொலையாளி என ஜெயலலிதாவும், வாழபாடி ராமமூர்த்தியும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர்… இவரது கட்சிகாரர்கள் தெருவில் இழுத்து உதைக்கபட்டனர்… ஜெ… கட்சி மற்றும் காங்கிரஸ் ரவுடிகளால்… நளினியின் மரண தண்டனையை குறைத்த போது… குறைக்க கூடாது என்றவர் ஜெயலலிதா… 2006 தேர்தலில் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணாநிதி கண்ணாம்மா எனும் படம் எடுத்து உதவி செய்தார் எனவும் பிரச்சாரம் செய்தார்… சுப.தமிழ் செல்வன் மறைவுக்கு கவிதை எழுதிய போது ஜெயலலிதா இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றார்…

    இவ்வளவு நடந்த பின்னும்… குடும்பத்திற்காகவும்… குடும்பத்தினரின் சொத்து பணத்திற்காகவும்… கட்சியை காங்கிரஸ் பொறுக்கிகளுக்கு அடகு வைத்து இருக்கும் கருணாநிதி… இப்போது சோனியாவின் காலை மன்றாடி விடும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்…

    ராஜாஜி, காமராசர், பெரியார், ஜெயபிரகாஷ் நாராயன், வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால், கிருஷ்ணாகாந்த் போன்றவர்களுடன் அரசியல் செய்தவர் என பெருமையாக சொல்லி கொள்ளும் கருணாநிதிக்கு… பல நாடுகளுக்கு சென்று எதையும் ஒழுங்காக படிக்காத மடையன்… உலக பொறுக்கி ராகுலுடன் அரசியல் செய்வது இழிவாக தெரியாது… பணமும், பதவியும் படுத்தும் பாடு…

    குடியரசு தினத்தில் அண்ணாவின் ஆணைகினங்க 1965 கருப்பு கொடி ஏற்றிய கட்சிகாரர் கருணாநிதி… இழிவான ஹிந்திய கொடியை ஏற்றும் வெறியில் இந்த ஆண்டு அண்ணா அறிவாலயத்தில்… கேடு கெட்ட ஹிந்திய கொடியை ஏற்றி அண்ணாவையும் இழிவுபடுத்தியுள்ளார்…

    இப்போது அப்பாவிகளை கொலை செய்ய போகும் சோனியா-ராகுல் அரசின் முடிவை பற்றி கருணை மனு எழுதும் போது ராஜிவ் ஆவியை கூப்பிட்டு இருக்கிறார்…

    ராஜிவ் ஆவி கூட என்ன சொல்லும்…

    பதவி ஏற்றவுடன் 8500 சீக்கியர்களை கொலை செய்த ரத்த வெறியை தொடங்கிய ராஜிவுக்கு… அடுத்த மாதம் போபாலில் 15000 மக்களை கொலை செய்த ஆண்டர்சனை தனி விமானத்தை அனுப்பி அந்த கொலையிலும் பங்கெடுத்து கொண்ட ரத்த வெறிக்கு… அசாமில் போடோக்களை தூண்டிய ரத்த வெறிக்கு… ஈழத்தில் ஆயிரகணக்கான கொலை கற்பழிப்பு செய்த ராஜிவின் ரத்த வெறிக்கு… மாலதீவிற்கு ராணுவத்தை அனுப்பி கற்பழிப்பு கொலை நடத்திய ரத்த வெறிக்கு… இந்த 3 உயிர்களும் வேண்டும் என கேட்கத்தான் செய்யும்…

    ராஜிவ் காந்தி போன்ற ரத்த காட்டேறியை துணைக்கு கூப்பிட்டு கருணாநிதி தன்னை தானே இழிவுபடுத்தி கொண்ட கேவலத்தைதான்… 65 ஆண்டு அரசியல் வாழ்வில் கற்று கொண்டதோ?

    அண்ணா… அன்பழகன், நாஞ்சில் மனோகரன், செழியன், இராசாராம் போன்றவர்களை டெல்லிக்கு அனுப்பினார்… அவர்கள் கட்சிகாக வேலை செய்தனர்…

    அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்… டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு… மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி… மாறனுக்கு போட்டியாக வந்த அண்ணாவிற்கு பிறகு அன்பழகன், இராசாராம் இருவரும் மாநில மந்திரியான பின்… டெல்லிக்கு சென்ற நாஞ்சிலையும், இராசாராமையும் கட்சியை விட்டு அனுப்பி விட்டு… மருமகன் மாறனை டெல்லி தூதர் ஆக்கிய கருணாநிதி… மாறனுக்கு போட்டியாக வந்த டாக்டர் கலாநிதியை… வை.கோபாலசாமியை வளர்த்து ஒரம் கட்டி… வைகோ கைமீறி போன பின்… ஜெயலலிதா போலிசு கொடுத்த அறிக்கை கொண்டு வைகோவை கட்சியை விட்டு விரட்டி… மாறனுக்கு பிறகு தயாநிதியை டெல்லி அனுப்பிய… அந்த கேடி குடும்பத்திற்கும்… கட்சிக்கும் துரோகம் செய்தது கண்டு… கேடி தயாநிதியை கட்டம் கட்டி விட்டு… கனிமொழியை அனுப்பி… இப்போது ஆள் கிடைக்காமல் காங்கிரஸ் அயோக்கியர்கள் சிறை போட்ட பிறகு… சோனியாவின் பாதத்தை விடாமல் கட்டி கொண்டிருக்கும் கருணாநிதியின் மானங்கெட்ட பொழப்புக்கு…

    மாறன் கருணாநிதிக்கு நேர்மையாக டெல்லியில் தூதர் வேலை பார்த்தார்… தயாநிதி சொந்த வியாபாரத்திற்கு கருணாநிதியை காட்டி கொடுத்த கேடி… கனிமொழி காங்கிரசிடம் மாட்டி கொண்ட கொண்ட பலி ஆடு… இப்போது காங்கிரசை கழட்டி விட்டால் கருணாநிதி குடும்பத்தை சோத்துக்கு வழியில்லால் யாரும் நிறுத்தி விட போவதில்லை… ஆனால் குடும்ப பாசமும், பதவி வெறியும்.. கருணாநிதியை காங்கிரசோடு சேர்த்து வைத்துள்ளது… இதுதான் கருணாநிதி 60 ஆண்டுகள் சேர்த்திருந்த மானமுள்ள தலைவர் எனும் நிலையை இடித்து விட்டது… தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு… மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறக்கும்… கருணாநிதி செய்யும்… இந்த மானங்கெட்ட பொழப்புக்கு…

    .

  11. கடைசி பாப்பானும்,கடைசி பாப்பாத்த்யும்
    விரட்டம்படும் வரை மற்ற இனங்கள் நிம்மதியாக வாழ முடியாது!

  12. சு.சாமியை ராயபுரம் போலிசு நிலையத்தில் வைத்து நொறுக்கினால்
    உண்மையை கக்குவான்!

  13. அய்யா தலைவரே உங்கள் குடும்ப விவகாரத்தை கவனிக்கவே நேரமில்லாத இந்த கடுமையான சூழலில் தமிழ் சொந்தங்களுக்காக அறிக்கை விட்டமைக்கு மிக்க நன்றி.தொடரட்டும் உங்கள் அஞ்சல்காரர் பணிகள் வாழ்த்துகள்.

  14. முருகன் உள்ளிட்டோருக்கு தவறான தீர்ப்பு வழங்கியமையை திருத்தி, உண்மையை வெளிக் கொண்டுவருவதில் கருத்து வேறுபாடில்லை. மூன்று மாணவகளை உயிரோடு எரித்துக் கொன்றவர்களுக்கும் கருணையா எம் நண்பர்களே!. செங்கொடி மட்டும்தான் நம் உறவா. ஜெயலலிதாவிற்கு தீர்ப்பினை தவறாக வழங்கியமை காரணம் காட்டி எரிக்கப்பட்ட கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோரும் நம் உறவுகள்தானே. ஒட்டுமொத்தமாக தூக்கினை ரத்து செய்யும் போராட்டத்திற்கு முன் சற்று சிந்தியுங்கள்.

  15. //ஈழத் தமிழர் போராட்டம்தான் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் என்றால் வை கோ எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார்//
    ஈழப் போராட்டம் என்பது ஓட்டுவங்கிகள் என்று சொல்லப் படும் மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கப் பட்டால்/படவிடப் பட்டால், கண்டிப்பாக வைகோவோ,ராமதாஸோ,திருமாவோ தான் முதல்வராக இருப்பார்.

  16. செருப்படி பட்ட பிறகும் கருணாநிதிக்கு தான் திருந்தவே மாட்டேன் என சொல்லி கொண்டு… மக்களை ஏமாற்றும் அறிக்கைகளை சோனியாவின் அல்லக்கைகள் கூட கண்டு கொள்ளமாட்டார்கள்…

  17. 90 வயது காணும் திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்களைக் கவர்ந்தது?

    அரசியல் நிபுணத்துவும்
    எழுத்துத்திறமை
    பேச்சுத்திறமை
    இலக்கியப் புலமை
    நிர்வாகத் திறமை
    சாதுரியமான முடிவுகள்
    எதற்கும் அஞ்சாமை
    கொள்கையில் ஸ்திரமாக இருப்பது
    அவரை மொத்தமாகவே எங்களுக்குப் பிடிக்குமே
    ************ தட்ஸ்தமிழ் கருத்துக்கணிப்பு இது***************

    வைரமுத்து, அப்துல் ரஹ்மான் என அடிமைகள் வரிசை நீண்டு கொண்டு செல்கிறது என்பதை தவிர என்ன சொல்ல இந்த கருத்துகணிப்பு குறித்து.

  18. மீரான் அய்யா .., கருணாவின் அரசியல் பேடிதனத்தை தோலுரிக்கும் வினவு கட்டுரை இது. எப்படிபட்ட சந்தர்பவாதி கருணா என்று வினவு தெளிவாக விளக்கியுள்ளது. இங்கு நான் கருணாவை பற்றிய விவாதத்தை தொடங்கியுள்ளேன்….நீங்கள் தொடருங்கள் மீரான் அய்யா ….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க