privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!

கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!

-

கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
படம் www.thehindu.com

2002 குஜராத் கலவரத்தில் இந்துமதவெறியர்களால் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அகமதாபாத் நீதிமன்றம் குஜராத் இனப்படுகொலை வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்துமதவெறியர்களின் இனப்படுகொலையை, இந்துமதவெறியர்கள் ஆளும் மாநிலத்தில் விசாரித்தால் கொலைகாரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது சிறு குழுந்தைக்கும் தெரியும்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆ.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழுவும் இந்துமதவெறியர்களை குறிவைத்து விசாரிக்கமால் ஏதோ விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜகியா, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் சரிவர விசாரணை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மோடியின் அதிகாரமும், மாநிலமே இந்துமதவெறியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் சோடை போவதில் தவறவில்லை.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஆய்வு செய்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்றத்தின் அமிகஸ் குரியாக (நீதிமன்ற நண்பர்) செயல்பட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதுவும் சொதப்பலாகத்தான் இருக்குமென்பதை இப்போது ஊகிக்க முடிகிறது.

குஜராத் கலவரத்தை ஒடுக்க முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மட்டுமல்ல இனப்படுகொலைக்கும் அவர்கள்தான் தலைமை தாங்கியிருந்தார்கள். இதனால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜகியா கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அமிகஸ் குரியின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றும், இந்த வழக்கை இனிமேலும் தொடர்ந்து கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் கூறி, உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு என்ன காரணமென்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்று நாடு முழுவதுமே பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.

பா.ஜ.க தலைவர்கள் இந்தத் தீர்ப்பை மனமுருக வரவேற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். மோடி தனது ட்விட்டில் GOD IS GREAT என்று தெரிவிக்க அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி முதலான பா.ஜ.க தலைவர்கள் தாங்கள் ஏற்கனவே மோடி ஒரு நிரபராதி என்பதை பல முறை சொல்லி வருவதாகவும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

கணவனை இந்துமதவெறியர்களுக்கு பலிகொடுத்து அதற்காக வழக்கு தொடுத்த ஜகியாவோ இந்த தீர்ப்பு தனக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாகவும், தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். இனி என்ன சட்டப் போராட்டம் நடத்த முடியும்?

கவனியுங்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மோடி குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த முடிவை விசாரித்து எடுக்குமாறு அகமதாபாத் நீதிமன்றத்திடம்தான் கேட்டிருக்கிறது. இதற்கே ஏதோ வழக்கிலிருந்து விடுதலை செய்தது போல பா.ஜ.க தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?

அகமதாபாத் நீதிமன்றம் குஜராத்தில் இருப்பதால், தீர்ப்பை நாமே எழுதிவிடலாம் என்ற திமிரன்றி வேறு என்ன?

டெல்லி குண்டுவெடிப்பில் 12 பேர் இறந்த உடன் எத்தனை எத்தனை கவனிப்புக்கள், விசாரிப்புகள், உளவுத்துறை அமைப்புகள், அமைச்சர்கள், ஐ.எஸ்.சதி, குற்றவாளிகளின் படங்கள் என்று எத்தனை வேகம்? ஆனால் 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த குஜராத் கலவரம் குறித்து தெகல்காவின் நேரடி வீடியோ ஆதாரம் வந்த பிறகும் குற்றவாளிகளை இன்னும் நெருங்க முடியவில்லை என்றால்?

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில் கொலைகார மோடியும் அவரது கொலைகார கூட்டத்தையும் இனி யாருமே தண்டிக்கவோ, சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கவோ முடியாது. உறவினர்களை இழந்த குஜராத் முசுலீம் மக்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்களில் சில இளைஞர்கள் இந்து மதவெறியர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விரக்தியடைந்தால் என்ன நடக்கும்?

இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?

(செய்தி தினமணியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. நாட்டின் பொருளாதாரத்திற்காக பல்வேறு துறைகளில் உள்கட்ட‌மைப்புப்பணிகளுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதில் சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர் என இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு அ‌மெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் , சி.ஆர்.எஸ் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆய்வுக்குழு 94 பக்க அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் நரேந்திரமோடி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவரைத்தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷகுமாரின் நிர்வாகத்திறமையினையும் அக்குழு பாராட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    • சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமே இல்லை… ஆனால் அவருக்கு போலி மதச்சார்பின்மை வேடம் போட தெரியவில்லை….

    • I have complete faith on Supreme court. Everything is decided in court based on evidence. Any murderer escapes if there is no strong evidence for the crime. Like that we do not know whether Modi is innocent or not. But he is not culprit so far until he is convicted. Based on Supreme Court it appears that court the lawyers does not have a strong evidence.

      Now we will come to the guess what would have happened. There was a big violence against Muslims on 2002. Certain papers are analysing and reporting as if Modi well planned and orchestrated the violence and made sure that thousands of people killed. I can completely rule out the possibility as a nature of person unless strong evidence is against him. But he might have failed to act fast and that could result in more death. Does he needs to be punished for that if that is the case? Then many CM’s needed to be punished as there were lot of violences throughout the country. Another thing is after 2002 there were no violence in Gujarat. That means Modi realised his mistake and might have prevented many violences in Gujarat.

  2. தினமணி மற்றும் இந்துவில் வரும் செய்திகளை பார்ப்பன பத்திரிக்கைகள், பா.ஜ. ஆதரவு பத்திரிக்கைகள் என வெகுவாக சாடி பக்கம் பக்கமாக பதிந்துவிட்டு… இப்போது இந்துவில் வந்த கார்டூனையும், தினமணியில் வந்த கட்டுரையையும் பிரசுரித்து இருப்பது எங்கோ நெருடிகிறதே…!!!!

  3. (செய்தி மஞசள் பத்திரிக்கையில் வந்தது)..(செய்தி சிகப்பு பத்திரிக்கையில் வந்தது)..ஏன் உனக்குன்னு சுய புத்தி லேதா??

    • தமிழை தமிழாக முதலில் எழுத கத்துக்கொள் இல்லையென்றால் நீயும், உன் அம்பி கூட்டமும் நேபாளத்திற்க்கு ஓடவேண்டிவரும்,மதவெறியனே

      • முத்துச்சாமி மரக்கலராயரே… என்ன பேசுகிறீர் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா… இந்துக்கள் அனைவரையும் நேபாளத்துக்கு விரட்டி விட்டு இங்கு நீங்கள் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? யாருக்கு வெடி வைப்பீர்கள்… உங்களால் எதிரி இல்லாமல் வழ முடியாது… ஒரு சிறுபான்மை இனம் தனக்கு தனி நாடு கேப்பதும்(ஏற்கனவே கொடுத்தாச்சு பாக்.), பிரிவினை வாதம் பேசுவதும், கிளர்ச்சி, புரட்சி செய்வதும் தான் இயல்பு.. மாறாக பெரும்பான்மை இனத்தை நாடு கடத்த நினைப்பது முட்டாள்கள் கூட யோசிக்காத மூட கனவு…

  4. first let all the muslim community get united and stand against terrorism. India should get rid of communists and muslims who encourage terrorism. There are crores of muslims who were TRUE INDIANS. A few bastards use their religion to make money. Already, INDIA erased communists and there are a few idiots and they’ll be erased in a year or two. Even if they place a thousand bombs all over INDIA, INDIA and INDIANS will never be brought down. Hindus in pakistan behave well and they are not trouble makers, but, these stupid uneducated idiots create all the problem. Muslim religion is the very last religion founded on earth and if they keep on behaving like this, they will be the very first religion to be wiped out of the universe.
    JAI HIND!!

  5. \\இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால்\\

    நாடு – மதசார்பற்ற நாடு
    அரசு – மதச்சார்பற்ற கூட்டணி அரசு.. தலைமை மதச்சார்பற்ற இந்துத்வாக்கு எதிரான காங்கிரசு அரசு.
    நீதிமன்றங்கள் – அணைத்து மதத்தை சார்ந்தவர்களும் உள்ளடக்கியது உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற பெஞ்ச்கள்.
    பின் எப்படி இவை மூன்றும் இந்துத்வாவின் கையில் இருப்பதாக கூறுகிறீர்கள்…

    நீதிமன்றம் ஒன்றும் இந்துதவாவுக்கு ஆதரவான தீர்ப்பை தந்துவிட வில்லையே… கீழ் நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்று தானே உத்திரவு கொடுத்துள்ளது… ஏன் இந்த முந்திரிக்கொட்டை தனம்?

    உங்கள் கூற்றுப்படி எடுத்துக்கொண்டால்…

    நாட்டையும்- அரசையும்- நீதிமன்றங்களையும் – இஸ்லாத்தின் கையில் கொடுத்துவிட்டால் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடுமா?

    • வினவிற்க்கு அ ஆ இலிருந்து கத்துக்கொடுத்தாலும் ஒன்னும் புரியாது…ஏன்னா தூஙுரவன எழுப்பலாம்…ஆனா தூங்குறமாதிரிநடிக்குரவன……..

      • இவன் தூங்கவில்லை… விழித்திருப்பவர்களை தூங்க வைக்க முயற்சிக்கிறான்… அப்பொழுதுதானே இறையாண்மையை திருட முடியும்…

        • //விழித்திருப்பவர்களை தூங்க வைக்க முயற்சிக்கிறான்//

          மக்கள் தூங்காம முழிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு நீங்க சொல்லுதற கேட்டா சிரிப்புதான் வருது.

          அவங்க உண்மையலே முழிச்சிக்கிட்டு இருந்த 5 வருசத்க்கு ஒரு தபா ஓட்டு போடுவாங்களா? எதுவுமே மாறப்போறது இல்லைன்னு தெருஞ்சும்!

          //அப்பொழுதுதானே இறையாண்மையை திருட முடியும்…//

          அது என்னதுங்க இறையாண்மையை? காகிதத்தில் ஒன்னும் நடப்பில் இன்னொன்னும் இருப்பதா?

    • //நாடு – மதசார்பற்ற நாடு
      அரசு – மதச்சார்பற்ற கூட்டணி அரசு.. தலைமை மதச்சார்பற்ற இந்துத்வாக்கு எதிரான காங்கிரசு அரசு.
      நீதிமன்றங்கள் – அணைத்து மதத்தை சார்ந்தவர்களும் உள்ளடக்கியது உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற பெஞ்ச்கள்.
      பின் எப்படி இவை மூன்றும் இந்துத்வாவின் கையில் இருப்பதாக கூறுகிறீர்கள்…//

      நாடு – இந்து மத வெறி பாசிச நாடு அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதத்தை வரையறுத்ததில் இருந்து தொடரும் இந்த பாசிச மோசடிதான் அரசு, நீதிமன்றம் என அனைத்தையும் இந்து மத வெறி பாசிசமாக காபந்து செய்கிறது. ஒரேயொரு கேள்விக்கு முடிஞ்சா பதில் சொல்லிட்டு ஓடிப் போயிரு. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழக்கில் மிஸ்டர் மிருகத்தின் கருத்தில் ‘பெரும்பான்மை’ எனச் சொல்லப்படும் பிற சாதியினருக்கு எதிராக பயன்படுத்தப்படும் அரசியலமைப்புச் சட்டம் என்ன? இந்து மத சாதியத்தை பாதுகாக்கும் அச்சட்டமே இந்தியாவின் ஆன்மா. அதுவே உம்மை போன்ற ஐந்தறிவு ஜீவன்களுக்கு பதில்.

      • அர்ச்சகர் கோயில் போன்றவை இந்துத்வாவின் ஆயதங்கள்… அதை ஏன் பெற துடிக்கிறீர்கள்… அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இருக்கிறது… நீங்கள் அர்ச்சகர் ஆக எந்த தடையும் இல்லை… ஆனால் இந்த நாட்டில் அனைவரும் பள்ளிவாசல் ஓதுவார் ஆக முடியுமா? ஜமாத்தன் ஆக முடியுமா? அனைவரும் பாதிரி ஆக முடியுமா? ஏன் ஒரு கிறித்தவ பள்ளர் பாதிரி ஆக முடியுமா?

        • இந்துமதம் என்ற நான் சார்ந்த, என் மீது திணிக்கப் பட்ட மதத்தில் உள்ள அழுக்குகளை பற்றி பேசும்போது, முஸுலீம் முதுகிலும் தான் அழுக்கு இருக்கிறது என்று சொன்னால் எப்படி? என் மீது திணிக்கப்பட்ட இந்துமதத்தை பற்றி நான் பேசும் போது, எனக்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மதத்தை பற்றி நான் பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? எப்போ எதை கேட்டாலும் ‘பெரும்பான்மை’ என்று கதை அளக்கும் உங்கள் கூட்டம், ‘குற்றம்குறை’ என்று கேள்வி வரும்போது மட்டும் ‘சிறுபான்மை’யை கைகாட்டி தப்பித்துகொள்ள நினைப்பது ஏன்?

          • //இந்துமதம் என்ற நான் சார்ந்த, என் மீது திணிக்கப் பட்ட மதத்தில் உள்ள அழுக்குகளை பற்றி பேசும்போது, முஸுலீம் முதுகிலும் தான் அழுக்கு இருக்கிறது என்று சொன்னால் எப்படி? என் மீது திணிக்கப்பட்ட இந்துமதத்தை பற்றி நான் பேசும் போது, எனக்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மதத்தை பற்றி நான் பேச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?//

            இந்து மதத்தை விமரிசிப்பவர்கள் தங்களை மதச்சார்பற்றவர்கள்/நாத்திகர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்கின்றனர் (வினவு & கோ போல). அப்ப மற்ற மதங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா என்றால் ‘நாங்கள் எல்லா மதத்தையும் எதிர்க்கிறோம்’ என்று போர்வை போத்திக் கொள்கிறீர்கள். ஆனால், அவர்கள் விமரிசிபது பெரும்பாலும் இந்து மதத்தையே. இதைத்தான் ஏன் என்று கேட்கிறோம். கேட்டால் வினவின் பதிவுகளை படித்துப்பார் என்பார்கள். படித்து பார்த்தால் அவர்கள் எந்த அளவு biased பதிவுகளை எழுதுகிறார்கள் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்…

            • //ஆனால், அவர்கள் விமரிசிபது பெரும்பாலும் இந்து மதத்தையே//
              அப்போ இந்து மதம் சிறுபான்மை மதம் என்று சொல்லவருகிறீர்களா?

          • Hindu religion never need people like you.Every religion has its positives and negatives. The worst negative Hindu religion has is people like you who just think to be seen diffrent from the group is to balme the Hindu religion.Blamming is never going to solve the issue. Why don’t you convert yourself to muslim and go and live in pakistan and write your openion then.
            Discreetion of people still exist in the group of other people who has converted to other religons(go on and check various caste bsaed groups amoong christians and muslims) . Why the hell you people don’t realize that social cultrual problems are diffrent from religion.If you can’t understand Hindu religion as a way of living leave it . Don’t blame Hindu religion for clashes between two group of people where both of them doesn’t have a understadning of their religion.

            • நான் என்ன செய்யனும்,செய்யகூடாதுன்னு நீங்க சொல்லவேண்டாம் பாஸ். ‘இந்து’ மதம் பிடிக்கவில்லை என்றால் வேறு மதத்திற்கு மாறவேண்டியது தானே என்று எனக்கு அறிவுரை கூறும்முன், சான்றிதழ்களில் ‘மதம்’ என்ற இடத்தை தூக்க சொல்லுங்கள். இவர்கள் ‘மதத்தை’ கண்டிப்பாக குறிப்பிட சொல்லி கேட்பார்களாம். நான் போட்டுத் தான் ஆகணுமாம்.நான் ‘இந்து’ என்று போட்டால் அந்த மதம் பற்றி எதுவும் கூறமுடியாதாம். என்ன அநியாயம் செய்தாலும் அதை பொறுத்துகொள்ளனுமாம். உங்க நியாயத்தை தான் ‘பாபர் மசூதி’ தீர்ப்பில் பார்த்தோமே? “இந்துவாக இருக்க விரும்பாதவர்கள் எந்த மத்த்தை வேண்டுமென்றாலும் தழுவலாம். அதற்கு சங்பரிவார் உட்பட எவரும் எந்த ஆட்சேபணையும் அளிக்கவோ,எதிர்க்கவோ மாட்டார்கள்” என்று துரை அவர்களே, சங் பரிவாரங்களை சொல்ல சொல்வீர்களா? அப்புறம் அந்த ‘ம்தம்’ காலத்தையும் தூக்க சொல்ல குரல் கொடுப்பீர்களா? அப்புறம் ஏன் பாஸ் வெட்டி பேச்சு.

              • உன் தந்தையும் தாயும் அதன் முந்தையர் ஆயிரமும் இந்துக்கள் தானே… உன் இந்து மத தாக்குதல் அவர்களையும் சேர்த்து தாக்குகிறது என அறிவாயாக…

  6. (செய்தி கீழே கிடந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது) (செய்தி கீழே கிடந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)

    முதலில் உங்கள் மச்சான் காசாபு, மாமா தியாகி அப்சல் குரு அதுக்கப்புறம் குஜராத்தில் ரயிலை கொளுத்தி வன்முறையீ ஆரம்பித்து வைத்த தீவிரவாதிகள்….

    • //குஜராத்தில் ரயிலை கொளுத்தி வன்முறையீ ஆரம்பித்து வைத்த தீவிரவாதிகள்….
      // ஆர்எஸ்எஸ்தானே சொல்றீங்க. கட்டாயம் அவங்களை சுட்டுக் கொல்லனும்ங்க.

  7. //எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?//

    நீங்களே சொல்லுங்களேன். யார் தண்டிப்பது என எனக்குத் தெரியவில்லை.

  8. குஜராத்தில் மோடி என்ற கொலைகாரன்.தமிழ்நாட்டில் ஜெயா என்ற கொலைகாரி.இவர்களுக்கு்ல் யார் முதலாவதாக வருவது என்ற போட்டி. நடத்துங்கப்பு
    நல்லா நடத்துங்க உண்மையாவது.நீதியாவது, நேர்மையாவது.

  9. குஜராத் முதல்வருக்கு முன்பு “விசா” மறுத்த அமெரிக்கா இப்போது மோடி பற்றி கூறுவது என்ன தெரியுமா?
    http://www.ndtv.com/article/india/gujarat-best-example-of-effective-governance-us-congressional-report-133493
    இந்த தகவலை வெளியிட்டுள்ளது பி.ஜெ.பி கட்சிக்கு எதிரான கருத்து கொண்ட NDTV தொ(ல்)லைக் காட்சி.. இதைப்பற்றி நீங்க என்ன feel பண்றீங்க வினவு அண்ணன்?

  10. உலக நாடுகளில் பலவற்றையும் உலகமய வர்த்தகக் கொள்ளையடிக்கும் அமெரிக்காவுக்கு பாய்விரித்து பாயாசம் கொடுக்கும் மோடி போன்ற மோடிமஸ்தானை பாராளுமன்ற ஆய்வுக்குழு ‘சூப்பர் மேன்’ என்று சொல்லியிருக்கும் அதே அறிக்கை தான் மே.வங்கத்தில் 30 வருட கம்யூனிஸ ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் மம்தாஜிக்கு ‘ஒரு ஏழை மாநிலத்தை’ பணக்கார மாநிலமாக மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதாக பிளிறியிருக்கிறதையும் கவனிங்க.

    பணக்கார மாநிலம்னா என்னங்க?
    பம்பாய் இந்தியாவின் தொழில் மாநகரம். எல்லாத் தொழில்களும் கட்டை உடைத்துக்கொண்டு விறுவிறுக்கும் தொழில் மாநகரமுங்க. இன்னைக்கு நேத்தைக்கு இல்லை.ரொம்ப வருஷமா இப்படித்தான் விறுவிறுக்குது. இத்தனை வருஷ விறுவிறுப்புல எவ்வளவு பணக்கார ஊராயிருக்கனும் பம்பாய் ? இல்லீங்களா ! குஜராத்தை விட பத்து மடங்காவது பணக்கார ஊராயிருக்கனும்.
    கேளுங்க. நிஜம் என்னன்னா பம்பாய் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு மேல அதாவது பாதிக்கு மேல தெருவிலயும், சேரியிலயும் இருக்குதாம். கட்டடங்கள்ல குடி இருக்கற மீதிப்பேருல 76 சதவீதம் பேர், நம்ப ஊரில் பணக்காரங்க வீட்டில் இருக்குமே ஒரு அட்டாச்ட் பாத்ரூம், அந்த சைஸ் இருக்கும் ஒரே ஒரு அறையில் 15 பேர் வசிக்கும் ஒற்றை அறை இருப்பிடங்களில் தான் வாழ்கின்றனர்(?!). இதே பம்பாயில் தான் இந்தியாவின் டாப் 49 கோடீசுவரர்களில் 21 பேரும் இருக்கின்றனர். ஸோ… கூட்டிக் கழிச்சிப் பாருங்க பம்பாய் பணக்கார நகரம் தான் இல்லியா.
    இதுக்கு நம்ப ப்ரிதிவிராஜ் சவானுக்கு ஒரு கிமெரிக்க கீராளுமன்றம் ஒரு டவுசர் கிழிச்சான் என்று பட்டம் கொடுத்தா அதை நாம எப்படி வரவேற்கனும்… அதே மாதிரி தான் மோடிமஸ்தானுக்கு அமெரிக்க பாராளுமன்றக் குழு வாசித்திருக்கும் வாசிப்பையும் புரிஞ்சிக்கனும்.
    என்னடா இது. அமெரிக்காகாரனுக்கும் நம்ம மாநிலத் தலைவர்களுக்கும் இன்னாயா தொடர்பு ? அவன் எதுக்கு தேவையில்லாம நம்மளுக்கு சோப்பு போடறான்னு நீங்க கேப்பீங்களேயானால்.. விக்கிலீக்ஸூல வந்த விவரம் சொல்றேன்.

    நம்ப வெளியுறவுத்துறை அமைச்சரா ஒருத்தரு இருந்துட்டு இப்போ அமெரிக்க தூதரா போயிருக்கிறாருல்ல.. எம்கே கேனன். அவரு அப்போயிருந்த அமெரிக்க தூதருக்கிட்டே ஹேட்லிய விசாரிக்க நாங்க கேக்கற மாதிரி கேப்போம். நீங்க மறுக்கிற மாதிரி மறுங்க.. எல்லாம் சும்மனாங்காச்சுக்கும்.. இந்த இனா.வானா. இந்திய மக்களை சும்மா ஏமாத்தறுதுக்குன்னு பேசுனு ரகசிய பேச்சை அந்த அமெரிக்க தூதரு அவுக நாட்டுக்கு கேபுள்ல விலாவரியா சொல்ல.. அதை விக்கிலீக்ஸ் கிராஸ்டாக் பண்ணி லீக் பண்ண..இப்போ இந்தியா,அமெரிக்கா.. ரெண்டு நாடா.. இல்லை.. ரெண்டு மாநிலமான்னு நமக்கு சந்தேகம்.. இதுல அவுக பாராட்டுகிறாகளாம் இவுக சிலிர்த்துக்கிறாகளாம்.

    த்தூ..இந்த லட்சணத்துல இந்தக் கொலைகாரன் தான் அடுத்த ப்ரைம் மினிஸ்டரா வருவாராம்.. பேய்க்கு வயித்து வலி வந்தா குந்திக் குந்திக் கத்துமாம்..

    • \\அமெரிக்காவுக்கு பாய்விரித்து பாயாசம் கொடுக்கும் மோடி\\
      -இதனால்தானோ மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது?

      மும்பை பற்றிய கருத்து தவறு… மும்பையின் மண்ணின் மைந்தர்கள் அனைவரும் நல்ல வசதி வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்… பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்தேறிகள் தான் நலிவுடன் இருக்கிறார்கள்… ஆனாலும் அவர்களை கேட்பின் தத்தமது சொந்த ஊர்களில் வாழும் நிலையை விட எமது மும்பை புறநகர் வாழ்க்கை மேம்பட்டதாக இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள்…

      ஒரு மாநிலமோ நகரமோ பணக்கார தன்மை உடையது என கூறுவது அந்நிலத்தின் உட்கட்டமைப்பு, போக்குவரத்து, கட்டுமானங்கள், கல்வி, மருத்துவ வசதிகள், பாதுகாப்பு, பொருளடமை, அரசு நிதி நிலைமை போன்ற பல காரணிகளால் நிர்ணயிக்கப்ப்டுகிறதேயொழிய அங்கு வாழும் வந்தேறிகளால்(இமிக்ரண்ட்ஸ்) அல்ல…

      • // மும்பையின் மண்ணின் மைந்தர்கள் அனைவரும் நல்ல வசதி வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்…//

        அப்படியா? அப்புறம் எதுக்கு சார் ‘மும்பையில்’ டாக்சி ஓட்டும் அனைவருக்கும் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப் படுகிறது? ஏன் பீகாரிகள்,தென்னிந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள்? ‘மாராட்டிய மாநிலம் மராட்டியர்களுக்கே’ என்று பால் தாக்ரே சொல்லும் அளவிற்கு அவரை எரிச்சலூட்டியது எது?

  11. சமச்சீர்க்கல்வித் தொடர்ப்பான தீர்ப்பில் இது ஜெயலலிதா ஆட்சிக்கு கிடைத்த செருப்படி என்று கூறினோம்.சரியான தீர்ப்பு என்று அனைத்து தரப்பினரும் கூறினர்.பாபர் மசுதி வழக்கு ,மோடி வ்ழக்கில் சரியான தீர்ப்பு வரவில்லை என்றதும் நீதிமன்றம் இந்துத்துவ,பார்ப்பனர் கையில் உள்ளது என்று கூறுவது எப்படி.நமக்கு சாதகமான திர்ப்பு வந்தால் நீதிமன்றம் சரி,இல்லை என்றால் அது இந்துத்துவத்தின் சேவை மையமா?

  12. //சமச்சீர்க்கல்வித் தொடர்ப்பான தீர்ப்பில் இது ஜெயலலிதா ஆட்சிக்கு கிடைத்த செருப்படி என்று கூறினோம்.சரியான தீர்ப்பு என்று அனைத்து தரப்பினரும் கூறினர்.பாபர் மசுதி வழக்கு ,மோடி வ்ழக்கில் சரியான தீர்ப்பு வரவில்லை என்றதும் நீதிமன்றம் இந்துத்துவ,பார்ப்பனர் கையில் உள்ளது என்று கூறுவது எப்படி.நமக்கு சாதகமான திர்ப்பு வந்தால் நீதிமன்றம் சரி,இல்லை என்றால் அது இந்துத்துவத்தின் சேவை மையமா?///

    நீதிமன்றம் சரி என்று எங்கு யார் சொன்னது?

  13. இந்தியா திராவிடனுடைய நாடு. யாரெல்லாம் நான் திராவிடன் என்று பெருமையாக ஒத்துக்கொள்கிறார்களோ அவர்களெல்லாம் இந்தியாவில் இருக்கட்டும். மற்றவர்களெல்லாம் ஓடட்டும்.

      • நான் என்ன செய்வது வரலாறு சொல்லுதே. இந்த இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் தானென்று அதாவது சூத்திரர்கள்தானென்று. மோடியை வேண்டுமென்றால் உச்ச நீதிபதிகள் காப்பாற்ற முயலலாம். வரலாறை திருத்த முடியாதல்லவா!

          • இவரும் பிறப்பால் ஒன்று என்பதை உணரவேண்டும். அதைவிட இருவருமே மனிதர்கள் என்பதை உணர வேண்டும்.

  14. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த ஆர்.கே.ராகவன்… ஐயங்கார்… இவர்தான் ராஜிவ் திருபெரும்புதூரில் செத்த போது பாதுகாப்பு பொறுப்பிற்கு தலைமையில் இருந்தவர்… பின்னர் 1999இல் பாஜக ஆட்சியில் சிபிஐ இயக்குனர் ஆனவர்… 2002 டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில்… பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர்…

    இந்த ராகவன் ஐபிஎஸ் இந்துத்துவா பாஜகா ஆட்சியில் சிபிஐ போன்ற பெரிய பதவியை பெற்றதால்… இப்போது நன்றியை திருப்பி செலுத்தி இருக்கிறார்…

  15. //அவர்களில் சில இளைஞர்கள் இந்து மதவெறியர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விரக்தியடைந்தால் என்ன நடக்கும்?//

    //இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?//

    சூப்பர் வினவு..

    நடத்துங்க..

    இப்படியே சும்மா இருக்குற பசங்களை தூண்டிவிடுங்க. அவனுங்களும் நாலு குண்டை வச்சி அவனுங்க வெறியை தீர்த்துக்கட்டும்..அப்புறம் அதுக்கும் புது புது தலைப்புல கட்டுரை போடலாம்..

    மாக்ஸிமம்

  16. முதலில் செய்தியைப் படித்துவிட்டு எழுதவும். இன்னும் புரியாவிட்டால் HRPC வழக்கறிஞர்களிடம் சட்டம்& குற்றவியல் சட்டவிதிகளை கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
    அதைவிட முக்கியம் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அதன் அடிப்படைகளை தெரிந்து கொண்டு எழுதுவது.
    “Too early to talk of clean chit or indictment”
    It is premature to say Monday’s Supreme Court order asking the Gujarat trial court to take a final decision on “is either a clean chit to Chief Minister Narendra Modi or an indictment,” amicus curiae Raju Ramachandran told The Hindu here.

    It “is an impeccable order which upholds the rule of law. It protects the rights of both the complainant and the potential accused. The law will now take its course.”

    In April 2009, the Supreme Court asked the Special Investigation Team headed by R.K. Raghavan to probe Ms. Jafri’s complaint that Mr. Modi and 61 others orchestrated the post-Godhra riots in 2002. Her husband, Ehsan Jafri, a former Congress MP, was killed in the Gulberg Society carnage in Ahmedabad. The SIT submitted its report in May 2010 and the court asked the amicus curiae to independently review it.

    Mr. Ramachandran submitted his report after examining witnesses and analysing the SIT report. The amicus curiae also went into senior police officer Sanjiv Bhatt’s affidavit that he was present at a meeting Mr. Modi convened on February 27, 2002, where, he alleged, instructions were given to teach Muslims a lesson.

    On Tuesday, Mr. Ramachandran said: “I have handed over my report to the SIT. My report contains an independent assessment of the material on record, which was given after an interaction with relevant witnesses. The SIT report and my report would be before the trial court. I have no doubt that the trial court will act in accordance with the law and that the ends of justice will be met. It is premature to talk of either a clean chit or indictment. That stage can come [only] before the trial court when the law is set in motion.”

  17. http://www.dnaindia.com/india/report_gujarat-riots-supreme-court-order-a-mixed-bag-for-both-parties_1586498

    The Supreme Court’s order in the appeal filed by the wife of Congress MP Ahsan Jafri is a mixed bag for the various parties involved.

    While the report submitted by senior lawyer, Raju Ramachandran, is in conflict with the RK Raghavan-led Special Investigating Team’s findings, there is hope for Jafri’s widow, Zakia.

    According to informed sources, the SIT has stated that Gujarat chief minister Narender Modi’s culpability in the murder of Ahsan Jafri cannot be proved in the 2002 riots.

    However, sources said, Ramachandran’s report that was submitted to the apex court in a sealed cover is based on his interaction with several persons who can provide fresh lead into the case.

    However, when contacted Ramachandran told DNA, it is presumed that the material to be placed before the magistrate would include his reporttoo.

    Ramachandran termed the order “constitutionally and legally perfect’’, pointing out that “it protects the rights of both the complainant as well as the accused. It doesn’t prejudice their conflicting claims.’’

    Noted criminal law expert KTS Tulsi also lauds the order saying it’s in “conformity with the precedents andcomplies with the law in letter and spirit’’.

    Tulsi said the magistrate, who will be looking at the case, can reject the SIT report if it feels it is not adequate. It can order a fresh investigation. It can issue summons to the complainant for recording her statement and also re-examine the entire material before taking a decision.

  18. ஏம்பா வினவு, அசுரன் & பொன்ராஜ் வகையறா, உங்க பங்காளி சீனாக்கார ___________ அப்பப்ப இங்க வந்து குலைசிட்டு போகுதே, அத்தப்பத்தி உனக்கு ஒண்ணுமே அரிக்காதா?

    • இந்தியாவின் இறையாண்மையை தகர்த்தெறிய, வளர்சியையை நிலைகுலைய செய்ய படியளக்கிற முதலாளியை பத்தி ______ சொல்லாத… அந்த வகையறாவுக்கு கோபம் வரும்…

Leave a Reply to ம பொன்ராஜ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க