privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

-

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!சென்னை, அரக்கோணம் அருகேயுள்ள சித்தேரியில் 13.09.2011 இரவு நடந்த இரயில் விபத்து குறித்து அறிந்திருப்பீர்கள். அதில் பத்து பேர் உயிரிழக்க, 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இயற்கை சீற்றமல்லாது நடக்கும் விபத்துக்கள் இந்தியா போல எங்கும் நடப்பதில்லை. பாசஞ்சர், புறநகர் இரயில்களில் பயணிக்கும் சாதரண மக்கள் பாதுகாப்பாக செல்வார்கள் என்பதற்கு நமது அதிகார வர்க்கம் எப்போதும் கவலைப்படுவதில்லை.

விபத்து குறித்து முறையான விசாரணை நடந்து காரணங்கள் கண்டறியப்படுவதற்கு முன்னரே அமைச்சர்களும், அதிகார வர்க்கமும் புறநகர் ரயிலின் ஓட்டுநரின் தவறென்று கை கழுவதில் அவசரம் காட்டுகின்றனர். அவர்தான் தவறு செய்தார் என்பதை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட்டு அறிவிக்கலாமே? எல்லா விபத்திற்கும் ரயில்வே ஓட்டுநர்கள்தான் காரணமென்றால் அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எந்தப் பொறுப்புமில்லையா?

ஓட்டுநர்களின் தயவில் மட்டும்தான் பொதுமக்களது உயிர் பயணிக்கிறது என்பது உண்மையானால் ரயில்வேயின் பொது மேலாளரது ஊதியத்தை ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர்களின் ஊதியத்தை அதிகாரிகளுக்கும் மாற்றி அமைக்கலாமே? ஒத்துக் கொள்வார்களா, நமது அதிகாரிகள்?

இரவு 9.30 மணிக்கு விபத்து நடக்கிறது. மழையும் பெய்கிறது. எனினும் அருகாமையில் இருந்த மக்கள் உடன் வந்திருக்கிறார்கள். அருகாமை இடத்தில் ஒரு திருமண விருந்திற்கு பிரியாணி சமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த முகமது அலியும் அவரது 20 உதவியாளர்களும் சமையலை நிறுத்தி விட்டு ஓடி வந்திருக்கிறார்கள். இடிபாடுகளுக்கிடையில் உள்ள மக்களை காப்பாற்றியிருக்கிறார்கள். தலையற்ற, கை, கால்களற்ற உடல்களையும் எடுத்திருக்கிறார்கள்.

பின்னர் அந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் பலரையும் வற்புறுத்தி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எல் அன்ட் டி நிறுவனத்தின் தொழிலாளர்களும், லாரி ஓட்டுநர்களும் கூட உடன் வந்து நிவாரண வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அரக்கோணம் பகுதியில் உள்ள அநேக டாக்சி ஓட்டுநர்களும் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேலையினை அவர்களாகவே முன்வந்து இரவு முழுவதும் செய்திருக்கிறார்கள்.

விபத்தில் காயமடைந்தவர்களை சுமந்து சென்றால் பணம் கிடைக்காது, வண்டியையும் கழுவ வேண்டும், பிற சவாரிகளையும் இழக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களை அப்படி செய்யச் சொன்னது எது? திருமண விருந்து வேலையை நிறுத்தி விட்டு சிதறிக்கிடக்கும் மனிதச்சதை கண்டு நிலை தவறாமல், காயம் பட்ட உயிர்களை அந்த சமையல் தொழிலாளிகள் காப்பாற்றியது எதனால்?

ஒரு வேளை சித்தேரி கிராமத்தில் ஏதாவது ஒரு கோயில் குடமுழுக்கிற்காக நூறு புரோகிதப் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நடந்தால் என்ன செய்திருப்பார்கள்? ரத்தமும், எலும்புத் துண்டுகளும் சிதறி, மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கும் நிலை கண்டு மயக்கம் அடைந்திருப்பார்களோ? என்ன இருந்தாலும் சைவ உணவு உட்கொள்ளும் அந்த புனிதர்களுக்கு இந்த வதைக்கூடத்தில் வேலையில்லையே? ஆனால் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் அந்த ‘பாய்’கள்தான் விபத்தில் சிக்கிய மனிதர்களின் உடலை யாரும் சொல்லாமலேயே சுமந்தார்கள் என்பதன் காரணம் என்ன? நமக்குத் தோழன் பாயா, இல்லை புரோகிதப் பார்ப்பனரா?

ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் என்றால் ரவுடிகள் என்று முகத்தை சுழிக்கும் படித்த நடுத்தர வர்க்கம், நாளையே எல் அன்ட் டி தொழிலாளிகள் ஊதிய உயர்விற்காக வேலை நிறுத்தம் என்றால் கரித்துக் கொட்டும் அந்த அன்பர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

காயம்பட்டவர்களை யாரும் அப்பல்லோ மருத்தவமனைக்கு கொண்டு செல்லப் போவதில்லை. அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள். தானாக சரியாகும் சளியென்றாலும் தனியார் மருத்தவமனைக்கு தட்சணை வைக்கும் மேட்டுக்குடியினர்தான் தனியார்மயத்திற்கு ஆதரவாக வெறியுடன் கூச்சலிடுவார்கள். ஆனால் விபத்தில் படுகாயமுற்ற மக்களை காப்பாற்ற அந்த தனியார் மயம் முன்வராது.

ஆம். இந்த உலகில் இயற்கைச் சீற்றமோ, துயரமான விபத்தோ எதுவாக இருந்தாலும், உதவிக்கு ஆண்டவன் வரப்போவதில்லை. உழைக்கும் மக்கள்தான் உதவிக்கு வருவார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. //ஓட்டுநர்களின் தயவில் மட்டும்தான் பொதுமக்களது உயிர் பயணிக்கிறது என்பது உண்மையானால் ரயில்வேயின் பொது மேலாளரது ஊதியத்தை ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர்களின் ஊதியத்தை அதிகாரிகளுக்கும் மாற்றி அமைக்கலாமே? ஒத்துக் கொள்வார்களா, நமது அதிகாரிகள்?
    // :-)))நெத்தியடி!

    • முட்டாள் தனமான வாதம்…ஒரு ஓட்டுனர் ஒரு வண்டிக்கு தான் பொறுப்பு… ஆனால் ஒரு மேலாளர் ஆயிரக்கணக்கான வண்டிகளுக்கு பொறுப்பு… இன்றைக்கு ஒரு வருடத்தில் ஓடக்கூடிய லட்சக்கணக்கான பயணங்களில் 99 .9 % விபத்தின்றி ஓட அந்த மேலாளர் தான் காரணம்… இது போன்ற பொறுப்பற்ற டிரைவர்களை வைத்துக்கொண்டு இப்படி இந்த அளவு விபத்தில்லா இயக்கம் செய்யும் மேலாளருக்கு அதிக சம்பளம் கொடுப்பதுதான் சரி…

      ஒரு டிரைவர் பணியில் குடித்திருந்தால் ஒரு வண்டிதான் காலி…
      ஒரு ஸ்டேசன் மாஸ்டர் குடித்தால் 10 வண்டி காலி…

      இப்ப யாருக்கு அதிக பொறுப்புன்னு சொல்லு

      • ஓஹோ, அதிகாரிகள் குடிக்காமல் இருப்பதற்குத்தான் சம்பளமோ, நல்லாருக்கே!!

        • பொறுப்பு யாருக்கு அதிகம் என்பதை உணர்த்த கோரப்பட்ட உதாரணம் அது… கருப்பொருளை பார்க்காமல் உருப்பொருளை பார்க்கிறீர்…

          • கருப்பொருளில் இல்லை மெய்ப்பொருள், உருப்பொருளில் இருக்குது அதன் உயிர்ப்பொருள்!
            இந்த விபத்து நடந்ததற்கு ஒரு ஓட்டுநர் காரணம், நாட்டில் ஆயிரக்கணக்கான விபத்து நடக்காமல் இரயில்கள் ஓடுவதற்கு அதிகாரிகள் காரணமா?

            • இந்த விபத்து நடந்ததற்கு ஒரு ஓட்டுநர் காரணம் – இது உண்மை…

              ஒரு ரயில்வே பொது மேலாளரின் பனி கடமைகளில் நூறு சதவீத விபத்தில்லா இயக்கமும் அடங்கும்… இது தவிர கேட் கீப்பர் முதல் துணைப்பொது மேலாளர் வரை அனைவரின் பணிகளையும் ஆய்வு செய்வது, கண்காணிப்பது, இலாபம் ஈட்டுவது, புதிய தடங்கள், புதிய இரயில்கள் இயக்குதல், பயணிகளின் வசதி, பயண திருப்தி, இதர புகார்களை கையாள்வது, தேவைகளை அரசுக்கு பரிந்துரை செய்வது, அரசிடமிருந்து தேவையான நிதி பெறுதல் என எண்ணற்ற வேலை பளு உடைய பொறுப்பு அது… எத்தனை மாலைகள், எத்தனை மரியாதைகள், எத்தனை மீட்டிங், எத்தனை ஆலோசனை கூட்டங்கள், எத்தனை விசரானைகள், எத்தனை கடிதங்கள், எத்தனை உத்திரவுகள்.. அப்பப்பா….

              [[ உதராணம் மட்டுமே ]] – ராஜாவுக்கு சவரம் செய்பவன் கத்தியில் தான் ராஜா உயிரே இருக்கிறது… அவனுக்கு ராஜாவை விட அதிக சம்பளம் கொடுக்கணுமோ…

              • ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.பாரம் ஏற்றப்பட்ட ஒரு மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தது.அதை இழுத்துச்செல்லும் மாட்டின் கொம்பில் ஒரு ஈ உட்கார்ந்து கொண்டு இருந்தது.அருகில் பறந்து கொண்டிருந்த மற்றொரு ஈக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.கொம்பில் இருந்த ஈயிடம் மிகவும் பவ்யமாக கேட்டதாம்.”எப்படி நீ ஒற்றை ஆளாக இவ்வளவு பெரிய பார வண்டியை இழுத்துச் செல்கிறாய்”.

                அந்த ஈக்கள் யாரென்று விளக்கத் தேவை இல்லை என நினைக்கிறேன்.

                • நல்ல உதாரணம்… அந்த வண்டியை ஓட்டும் மாடுகள் தான் டிரைவர்கள்… அனால் அவர்களுக்கு பின்னல் இருந்து அவர்களை இயக்குவது கையில் சவுக்கை வைத்துக்கொண்டு மாடுகளை விரட்டி வேலை வாங்கும் வண்டிக்காரன் என்ற மேலாளர்… அப்புறம் அந்த ஈ கூட்டம் தான் தொழிலாளர் சங்கங்கள்… என்னமோ தாங்கள் தான் வண்டியை ஓட்டுவது போல மீட்டிங் போட்டு வெட்டி பேச்சு பேசத்தான் லாயக்கு…

                  • தொழிற்சங்கம் இருந்ததால்தான் பணிப்பாதுகாப்பு கிடைத்தது. 14 மணிநேரம் 12 மணிநேரம் கசக்கிப் பிழிந்த கொடுமை நீங்கி 8 மணிநேர வேலை கிடைத்தது..ஒழுங்காக போனஸ் கிடைத்தது..தானுண்டு தன் வீடுண்டுன்னு கிடந்த தொழிலாளர் வர்க்கம் உலகினை எல்லாம் விழுங்கிக் கொண்டு வந்த பாசிசப் பேயை அதன் இருப்பிடத்திற்கே துரத்திச் சென்று அழித்து ஒழித்தது..இன்று தொழிற்சங்க இயக்கம் இல்லை..8 மணிநேர வேலை எழுத்தில் மட்டும் இருக்கிறது என்பதை மறக்காதீர்

                  • வண்டிக்காரரை மேலாளருடன் ஒப்புமை படுத்த முடியாது.தொடர்வண்டி ஓட்டுனர்கள் தாமாக வண்டியை ஓட்டிச்செல்ல முடியாது.அவர்கள் மூலம் வண்டியின் ஓட்டத்தை சாத்தியமாக்குபவர்கள் பிற தொழிலாளர்களே.சைகை விளக்குகளை இயக்குபவர்கள்,Gate keeper,நிலைய அதிகாரிகள்,பகல்,இரவு வேறுபாடின்றி இருப்பு பாதையின் தகுதி நிலையை உறுதிப்படுத்த ரோந்து செல்பவர்கள் போன்ற தொழிலாளர்களை வேண்டுமானால் வண்டிக்காரர் பாத்திரத்திற்கு பொருத்தலாம்.வண்டியின் இயக்க ஓட்டத்தில் மேலாளருக்கு பங்கு ஏதுமில்லை.

                    இந்த இடத்தில் மேலாளருக்கு வேறொரு பாத்திரம் வழங்கலாம்.அதுதான்,வண்டியில் வரும் சரக்குகளை ஒரு வணிகருக்கோ,நுகர்வோருக்கோ,கை மாற்றி கொடுக்க தரகு தொகை வாங்கும் கழிவு மண்டிக்காரர்.இதைவிட ஈ என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது.தொழிலாளர்களை சுரண்டி கொழுக்கும் நிர்வாகத்தினர் மாட்டின் காயங்களில் இரை தேட வரும் ஈக்கள்தானே..

  2. பாப்பானே திட்டுரதுக்குனே இந்த வெப்சைட் வச்சிருக்கேங்க போல. எப்படியாவது பாப்பான இழுக்களையின்ன விறுவிறுப்பு இருக்காது… நல்லவேளை அந்த வண்டிய ஒட்டின டிரைவர் பாப்பன் இல்லை… இருந்திருந்தா நூறை பேரை கொன்ன பாப்பான்னு டைட்டில் போட்டு இருப்பீங்க… இதில வேற முஸ்லிம் தான் நம்ம பிரண்டுன்னு ஒரு டயலாக் வேற… வெக்கமா இல்லை..

    இந்த சம்பவத்துல உதவிய ஒரேயொரு முகமது அலி தான் பாய்… இந்து ஆளுங்க தான் மீதி எல்லாம்… அந்த எல்.அண்ட்.டி தொழிலாளரில் ஒரு மேல்சாதிக்காரன் கூட கிடையாதுன்னு உன்னால சொல்ல முடியுமா…இறந்ததிலும் , உதவியதிலும் தேவர், மறவர், செட்டியார், பறையர், முதலியார், ரெட்டியார் என அனைத்து சாதியினரும் உள்ளனர் என்பதை மறவாதீர்…

    • இங்கு மறவர்,பள்ளர், என்று எந்த சாதியும குறிப்பிடவில்லை.அவர்களை காப்பாற்றியவர்கள் எந்த சாதியையோ,மதத்தை சேர்ந்தவர்களாகவோ இருக்கட்டும்.ஆனால் அவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கதினர் என்பது உண்மை.30 இலடசம் போட்டு கார் வாங்குன ஒரு பன்னாட்டு கமபெனி முதலாளிக்கோ,ஜ.டி கபெனியில் மேலாளர்களாக வேலை பார்ககும் நபர்களுக்கோ[அந்த பகுதியில் இருந்திருந்தால்] இந்த உணர்வு வந்திருக்குமா?

      தோழர் இந்திரனே,உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அங்கே பார்ப்ப்னியர்கள் யாகம் வளர்த்துக் கொண்டிருக்கும் போது விபத்து நடந்திருந்தால் வந்து காப்பாத்திருப்பார்களா? ஏதோ தெய்வக்குற்றம் உள்ளது,அதனால் தான் யாகத்தை முடிக்க விடாமல்,விபத்து நடந்து உள்ளது.தேவப்பிரசங்கம் பார்த்து அதுக்கு ஒரு பரிகாரம் பண்ணினா சேமம இருக்கும் என்றுக் கூறியிருப்பார்கள்.

      இது போன்ற ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பான் வந்து உதவியதாக ஒரு
      உதாரணம் கூறுங்கள்.எங்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு நாங்கள் ஆயிரம் உதாரணங்கள் கூறுவோம்.

  3. இந்த உலகில் இயற்கைச் சீற்றமோ, துயரமான விபத்தோ எதுவாக இருந்தாலும், உதவிக்கு ஆண்டவன் வரப்போவதில்லை. உழைக்கும் மக்கள்தான் உதவிக்கு வருவார்கள்.

    • நல்லவளை இவ்வுளவு பெரிய விபத்திலிருந்து என்னை ஆண்டவன்தான் காப்பதினாரு
      – 5 வது பெட்டியில் இருந்த அருளானந்தும், 6 வது பெட்டி ஆறுமுகமும், 7வது பெட்டி யாஸ்மின் பேகமும் சொல்றாங்கப்பா…

  4. OK. So ‘pappan’ will not come. What you guys were doing? Arakkonam is about 1&1/2 hrs journey from chennai. You could have gone there and helped right? Stop blabbering like this.

    • ஆங்… நான் அங்கெல்லாம் போக மாட்டேன்… அரக்கோணம் என்ன… என் அலுவலகத்துக்கு அருகிலியே விபத்து என்றாலும், பேப்பர் பேனாவ எடுத்துட்டு ரொம்ப நேரமா அங்க எதாவது ஒரு பாய் உதவிக்கு வரானான்னு பார்த்துட்டே இருப்பேன்… அபப்டியே எந்த பாப்பானும் உத வர கூடாதுன்னு எங்க கடவுளை வேண்டிக்கிட்டே இருப்பேன்… அப்பதானே பாய பாராட்டி எழுத முடியும்…..அப்படியே வராத பாப்பானை திட்டி எழுத முடியும்… எனக்கு மத்த சாதி காரன் வந்தானா, உதவினானணு கவலை இல்லை… பாப்பன் வல்லையே… எடு பேனாவை… எழுது பாப்பானை ஏசி… அதுதான் எங்க பதிவுலக தர்மம்…

      • தோழரே… பளார்னு அறைஞ்ச மாதிரி ஒரு கேள்வி இது… பதில் சொல்லுங்களேன்…

      • அருமை…மிக அருமை…சரியான _____அடி….
        மங்காத்தா மட்டும் மொதனாளே போய் அடிபட்டு ஒப்பனைங் சோ பாத்துட்டு இங்கு வந்து தல புராணம் பாடத்தெரியுது அப்படி மொதநாளே பாத்து விமர்சனம் பண்ண வேண்டிய அவசியம் என்ன?

        அட்லீஸ்ட் விபத்துநடந்த இடத்திற்கு அடுத்தநாளாவது அங்க போயிருக்கலாம்ல…னீ யாரவது சின்னப்பயன்ட கத கேட்டுருப்ப, அவன் சொன்ன ஒரு கதய வச்சு..திரைக்கதை,வசனம் எல்லாம் எழுதி..அடிச்சு விட்டுட்ட…அது என்ன அன்னாவ காமிடி பீசாக்காட்டீடு உங்க தலய மட்டும் ரசிச்சு அழ்கா போட்டுரிக்க..

  5. செத்தவன் கிட்ட இருந்து, பொருளைத் திருடும் கும்பலுக்கும்,இழவு வீட்டில் பெருமையடித்து ஆதாயம் தேடும் கும்பலுக்கும் வித்தியாசம் என்ன?

    இவ்வுலகில் 95 சதம் பிழைக்க உழைக்கிற வர்க்கம்தான்! மீதியிருப்பவனும் சொத்தை,அதிகாரத்தைக் காப்பாற்ற தங்கள் வழியில் உழைத்துக் கொண்டுதான் உள்ளனர்!

    செத்தவனை தூக்கி போடுபவனுக்குப் பாராட்டுகள்! ஆனால் கூலிக்குக் கொலை செய்பவனும் உழைக்கும் வர்க்கம் தானே?

    • \\கூலிக்குக் கொலை செய்பவனும் உழைக்கும் வர்க்கம் தானே?\\

      அவனும் ஒரு கூலித்தொழிலாளிதான் கம்யுனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியாவில் மெம்பெர் ஆக இருந்தால்… 🙂

  6. When seeing people in trouble, regardless of caste/religion, every ‘human’ will help them. If the driver was speeding, then what would you do if you are a railway minister or his supervisor. Lets think about ways to avoid such behaviors in future. Discriminating people on caste/religion by this article is highly objectionable.

  7. //ஒரு வேளை சித்தேரி கிராமத்தில் ஏதாவது ஒரு கோயில் குடமுழுக்கிற்காக நூறு புரோகிதப் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நடந்தால் என்ன செய்திருப்பார்கள்?//

    நெத்தியடி

    • ஒருவேளை சித்தேரி கிராமத்தில் 100 வளைகுடா பணத்தில் உடல் வளர்த்த பணக்கார இஸ்லாமிய ஜமாத்தார்கள் அமர்ந்து ஒரு புனித தலாக் நிஹழ்ச்சியில் ஈடுபட்டிருந்தால், ஓடி வந்து உதவியிருப்பார்களா?

      • உழைத்துதானே வயிறு வளர்தோம். தலாக்கு ஒரு புனித நிகழ்ச்சி கிடையாது. லூசு மாதிரி பேசும் முட்டாளே! சுனாமி நேரத்தில் வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா? இந்த வயிறு வளர்த்த கூட்டம் தான்…..

          • இது அப்பட்டமான பொய் என்றாலும் விவாதத்திற்காக உண்மை என்றே வைப்போம். சரி, மதம் மாற்றுவதை விட மதம் மாறினால் கொன்று போடுவதாக மிரட்டும் பார்ப்பனியம்தான் முதன்மைக் கிரிமினல். அடுத்து இசுலாமோ, கிறித்தவமோ தங்களது கொள்கைதான் மனித குலத்துக்கு நல்லது என்று வெளிப்படையாக சொல்லி மதம் மாற்றுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு கொள்கையைச் சொல்லி இந்து மதம் மட்டும் பிரச்சாரம் செய்ய முடியாது.
            ஏனென்றால் இங்கே மதம் மாறி வருபவரை எந்த சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளதால் அதாவது பார்ப்பன மேல் சாதியினர் தங்களது ஆதிக்கத்தை விட்டுத்தர விரும்பாததால் மதமாற்றம் சாத்தியமில்லை.
            சீனுத்தம்பி வெட்டியாக இணையத்தில் சுற்றுவதை விடுத்து வெரைட்டியாக அம்பேத்தகர் எழுத்தை கற்கலாம். கற்றால் நிச்சயம் கதி மோட்சம் உண்டு. நம்புங்கள் சீனு!

            • இல்லை. நான் சொல்வது உண்மை.

              பரவாயில்லை. சொல்வது நீங்கள் என்பதால் நான் நம்பத் தேவையில்லை, வினவு. உங்களை நம்பி வந்தவர்கள்/வருபவர்கள் தான் பரிதாபத்திற்குறியவர்கள்… 🙂

              //சரி, மதம் மாற்றுவதை விட மதம் மாறினால் கொன்று போடுவதாக மிரட்டும் பார்ப்பனியம்தான் முதன்மைக் கிரிமினல்.//

              இதுக்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

        • “தலாக்கு” – புனித நிகழ்ச்சின்னு கிண்டலா சொல்லப்பட்டதப்பு… இப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்க அது ஒரு பிற்போக்குத்தனமான பெண்ணடிமைக்கு வழிகோலும் ஆணாதிக்க திமிரின் வெளிப்பாடு…

          • இந்து மதம் ஒரு பெண்ணை அடிமையாக நடத்துவதை போல இசுலாம் நடத்தவில்லை. இசுலாம் பெண்ணுக்கு அளித்திருக்கும் உரிமைகள் எல்லா மதங்களிலும் முற்போக்கானது. இசுலாத்தில் ஆணாதிக்கம் இருப்பினும் இந்து மதத்தை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. முதலில் உங்களது வாய் நாற்றத்தை குறையுங்கள், பிறகு மற்றவரது குறையை பேசலாம்.

            • \\இசுலாம் பெண்ணுக்கு அளித்திருக்கும் உரிமைகள்\\
              ஒரு ஆண் நாலு மனைவி கட்டிக்கலாம்னு இஸ்லாம் கூறுகிறது… பிடிக்கலன்னா உடனே வெட்டிக்கலாம்னு இஸ்லாம் கூறுகிறது… இதுதான் பெண்ணுரிமையோ…
              ஏன்பா காமெடி கீமெடி பண்ணலயே…

              • அரக்கோணம் ரயில் விபத்தில் ஒரு இசுலாமிய பிரியாணி மாஸ்டரும், அவரது இசுலாமிய உதவியாளர்கள் இருபது பேரும் உதவிய செயல் ஒரு இந்து மதவெறியருக்கு எத்தனை ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

                  • இசுலாமிய பிரியாணி மாஸ்டரும் அவருடைய 7 உதவியாளர்களும் உதவியதை பார்த்து வந்த ஆத்திரம் அல்ல இது… இதை நீங்கள் எழுதி இருக்கிறீர்களே என்ற கோபம் தான்…

                    பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!
                    https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/
                    – நீங்கதானே எழுதினீங்க…

            • 1. இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்.
              2.த்லாக்- சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும்.
              3.2010ல்- இசுலாமியப் பெண்கள்;மதமும் வாழ்க்கையும்.
              மேற்கணட வினவுக் கட்டுரையிலேயே இஸ்லாம் பெண்களை எந்த அளவு அடிமை படுத்தப்பட்டுள்ளனர் என்பது புரியும்.இன்றும் கருப்பு அங்கிக்குள் ஒழித்துக்கொண்டு தங்கள் உணர்ச்சியை கூட வெளிக்காட்ட முடியாமல் பெண்கள் இஸ்லாம் சமுகத்தில் வாழ்த்துக்கொண்டு உள்ளனர்.காப்பாற்ற வந்தவர் முஸ்லிம் அல்ல ,உழைப்பாளி.பார்ப்பனர்கள் யாகம் வளர்ந்துக்கொண்டிருந்தாலும்,வயிறு வளர்த்த முஸ்லிம் தலாக் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தாலும் வரமாட்டார்கள் என்பது தான் உண்மை.

              • நீங்க என்ன சொல்ல வர்ரிங்க… எல்லா மதத்திலும் உள்ள ஒரு சில சட்டங்கள் எல்லோருக்கும் வெறுப்பை தான் ஏற்படுத்தும். ஏனென்றல் அந்த சட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு சாத்திய படாது. யாரையாவது அது பாதிக்கும். அனால் இஸ்லாத்தில் உள்ள சட்டங்கள் எல்லாமே ஒழுக்கமாக நடக்கும் அனைவருக்கும் பொருந்தும். உதாரணமாக ஆடை குறைப்பு தான் ஒரு பெண்ணினுடைய உரிமை அல்லது உங்களுடைய மொழியில் உணர்வு என்று வைத்து கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், தாங்கி கொள்ளவும் வேண்டும். அனால் அந்த கவர்ச்சி காரணமாக ஒரு பெண் பாலியல் போன்ற குற்றங்களுக்கு உட்படுத்தப்படும் போது மட்டும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் வேண்டும் என்று வாய் கிழிய கத்துறிங்க. ஆனால் பர்தா போட்டு உங்களுடைய உடல் அழகுகளை மறைத்து கொள்ளுங்கள். அதன் மூலம் ஆண்களால் நீங்கள் தொல்லை படுத்த படாமல் உங்களை காத்து கொள்ளுங்கள் என்று சொன்ன அந்த சட்டம் பெண்ணுடைய உரிமையை பறிக்கிறது என்று சொல்லறிங்க…
                அடுத்து //கருப்பு அங்கிக்குள் ஒழித்துக்கொண்டு//
                இதை வைத்து தான் பர்தா சட்டத்தை நாடைமுறை படுத்த வேண்டுமென்பது இல்லை. அதன் நோக்கம் உங்களுடைய அங்க அழுகுகளை மறைத்து கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும்… ஆனால் மறைக்க வேண்டும் அதான் நோக்கம். இஸ்லாமிய சட்டம் என்பது எக்காலத்திற்கும் பொருந்தும் சட்டங்கள். ஆனால் இந்தியாவில் வெறும் 60 வருடத்திற்கு முன்னால் இயற்ற்ற பட்ட சட்டம் கூட இப்போது உள்ள சூழ்நிலைக்கு சரிவர வில்லை என்று ஒவ்வொன்றையும் நூறு தடவை மாற்றி விட்டார்கள். இது தான் மனித சட்டம்.

                • கருப்பு அங்கி அணிந்து கொள்வது மூலம்,ஆண்களின் தவறான பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனக்கூறுகீறீர்கள்!.உங்கள் வாதத்தில் இருந்து ஒரே ஒரு உண்மை மட்டும் வெளிப்ப்டுகிறது.அனைத்து ஆண்களும் தவறான பார்வைக்கொண்டவர்கள் என்று.(உங்களையும் சேர்த்துதான்).உங்கள் ஆண்களின் வக்கீரப்பார்வையில் இருந்து எங்களை காப்பாற்ற கருப்பு அங்கி வேண்டாம்.கல்லும் ,கடப்பாறையும்,கம்மியும்,துப்பாக்கியும் வைத்துக்கொள்ள அனுமதித்தரட்டும்,தந்து பாருங்க அப்புறம் தெரியும்,காயங்கள் வெளித்தெரிந்தால் கேவளமே என்றுக் கருப்பு அங்கி அணிவது ஆண்,பெண்ணா என்று.

                • //ஆனால் பர்தா போட்டு உங்களுடைய உடல் அழகுகளை மறைத்து கொள்ளுங்கள். அதன் மூலம் ஆண்களால் நீங்கள் தொல்லை படுத்த படாமல் உங்களை காத்து கொள்ளுங்கள்//

                  முன்பு ஒருமுறை பதிவர் செந்தழல் ரவி சொன்னது இங்கே நினைவிற்கு வருகிறது. அதாவது, புழுதி காற்றிலிருந்தும், கொடும் வெயிலிலிருந்தும் தன்னை காத்துக்கொள்ள தங்கள் உடல் முழுவதையும் அரபு நாட்டு மக்கள் மூடிக் கொண்டார்கள், காலப்போக்கில் அதுவே மத அடிப்படையிலான உடையாக மாறிப்போனது என்று சொல்லியிருப்பார்.

                  இது முற்றிலும் உண்மை என்பதை அரபு நாட்டில் வாழும் ஒவ்வொரு வெளிநாட்டவரும் புரிந்துக் கொண்டிருப்பார்கள். காரணம், இங்குள்ள புழுதிக் காற்றும், கடுமையான வெயிலும், கடுமையான குளிரும் மாதிரியான எல்லாவித தட்பவெப்ப காலத்திலும் இந்த உடைகள் அம்மக்களை பாதுகாக்கின்றன. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களைப் போல அல்லாமல் அரபு நாடுகளில் பெண்கள் மட்டும் உடலை மூடிக் கொள்வதில்லை; கூடவே ஆண்களும் தலை முதற்கொண்டு உடல் முழுவதையும் மூடிக் கொள்கிறார்கள் என்பதிலிருந்தும் கூட நாம் இதனைப் புரிந்துக்கொள்ள முடியும்.

                  இருப்பினும், இஸ்லாமிய மத அடிப்படையிலான உடை என்று ஏற்றுக் கொண்டு இங்குள்ள இஸ்லாமியர்கள் அவற்றை அணிந்திருப்பார்களானால் இந்தியாவில் ஆண்கள் கூட தங்களை முழுநீள துணிகளால் மூடிக் கொண்டிருப்பார்கள். மூடிக்கொண்டிருக்க வேண்டும்! ஆனால், மூடிக் கொள்வதில்லை (மூடிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை!).

                  நீங்கள் சொல்லுவது போல, இந்தியாவில் “பெண்களுக்கு மட்டுமான” இந்த பர்தா பெண்களின் உடல் அழகை மறைப்பதற்கானது என்று மாறிப்போனது தான் பரிதாபமான உண்மை. ஆகவே, இன்றையகாலகட்டத்தில் அதில் இருக்கும் பிற்போக்குத் தனத்தையும், மிக முக்கியமாக ஆணாதிக்க மனோபாவத்தையும் இஸ்லாமியர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

                  ஒருவேளை,
                  தட்பவெப்ப சூழ்நிலையோ அல்லது மத அடிப்படையோ எதுவாக இருப்பினும் அரபு நாட்டில் ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் படியான உடைகளையே அணிவதால் ஆணாதிக்கம் என்பது இங்கே அடிபட்டுப் போகிறது. அதுபோல இந்தியாவிலும் இஸ்லாமிய ஆண்கள் அரபிகளைப் போல தங்கள் தலை முதல் உடல் முழுவதையும் மறைக்கும்படியான உடைகள் அணிந்துக் கொண்டு பின்னர் தங்களிடம் ஆணாதிக்கம் இல்லை என்பதை நிரூபிக்கலாம்! அதுவரையிலும்…..

            • குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் இஸ்லாம்

              இதற்கு ஓர் எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுவது உசிதமாக இருக்கும்.

              பாலிய விவாக மசோதா ஒன்று 1930ல் மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் புரட்சிகரமான மசோதா அல்ல. இம் மசோதாவில் மணமகளின் திருமண வயது 14 ஆகவும் மணமகனின் திருமண வயது 18 ஆகவும் உயர்த்தப்பட்டது, அவ்வளவுதான். இதையே கூட முஸ்லீம்கள் கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் சட்டத்திற்கு இது முரண்பட்டிருப்பதாக வாதிட்டனர். மசோதாவை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை.

              மசோதா சட்டமானபோது அந்தச் சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். ஆனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆரம்பித்த இந்த ஒத்துழையாமை இயக்கம் அதிர்ஷ்டவசமாக வலுவடையவில்லை. காங்கிரஸ் இதே சமயம் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லீம்களின் இயக்கம் அமிழ்ந்து போய்விட்டது. எனினும் சமூக சீர்த்திருத்தங்களை முஸ்லீம்கள் எவ்வளவு வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதை அவர்களது இந்த இயக்கம் புலப்படுத்துகிறது.

              முஸ்லீம்கள் இவ்வாறு சமூக சீர்திருத்தங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு கேள்வி இங்கு எழக்கூடும்.

              • சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் பணியாற்றிய முஸ்லிம் பெண் ஊழியர் சில மாதங்களுக்கு முன் திருவாரூர் கிளைக்கு மாற்றலாகி வந்தார். அவர் முஸ்லிம் என்பதை அறிந்த உள்ளூர் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் சிலர் சந்தித்து மதக் கோட்பாட்டுப் படி ‘பர்தா’ அணிந்து பணிக்கு வர வேண்டும் என வலியுறுத்தினர். அந்தப் பெண் அதைப் பொருட்படுத்தாததால், ஆத்திரமடைந்த முஸ்லிம் அமைப்பினர், வங்கியில் பணி முடித்துவிட்டு வந்த பெண் ஊழியரை நடுரோட்டில் தாக்கினர்.

                இதுகுறித்து அந்தப் பெண், சக ஊழியர்களின் உதவியுடன் திருவாரூர் போலீசில் புகார் செய்துவிட்டு விடுப்பில் சென்னைக்குச் சென்றுவிட்டார். அதை அறிந்த முஸ்லிம் அமைப்பினர், இரவோடு இரவாக சென்னையில் உள்ள தங்களது அமைப்பினரிடம் பேசினர். மறுநாள் காலை, அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். தற்போது அந்தப் பெண் ஊழியர் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்று விட்டார்.

              • இந்த மசோதாவை எதிர்த்து உயிரை விடவும் தயார்னு சொன்னவர் எம்.கே. ஆச்சாரியார். அப்புறம்..இம்மசோதா எங்கள் தர்மத்தை சிதைக்கப் போகுதுன்னு ஊர் ஊராப் பிரச்சாரம் செய்தவர் மாளவியா..ரெண்டு பேரும் பாய் இல்லைங்கோ

            • இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார். ஒரு இயக்கத்தையே ஆரம்பித்து போராடினார். அதுபோலவே பலர் போராடினர். ஆனால் இஸ்லாத்தில் இந்த நிலைமை உள்ளனவா என்பது பற்றி கூறுகிறார் அம்பேத்கர்:

              இஸ்லாமில் முன்னேற்றப் பார்வை இல்லை

              ‘‘முஸ்லீம்களிடையே இந்தத் தீமைகள் நிலவுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்தக் கேடுகளை எல்லாம் வேரோடு வேரடி மண்ணோடு அடிசாய்க்கக்கூடிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முசல்மான்களிடையே உருவாகவில்லையே என்பது இதைவிடவும் வேதனை தருவதாக இருக்கிறது.

              இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள், தீங்கும் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன?

              இந்துக்களில் சிலர் இத்தீமைகள் இருந்துவருவதை உணர்ந்துள்ளனர், தேர்ந்து தெளிந்துள்ளனர், சிலர் இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னின்று பாடுபட்டும் வருகின்றனர். ஆனால் அதே சமயம் முஸ்லீம்களின் நிலை என்ன?

              இவையெல்லாம் தீமைகள் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இதனால் அவற்றை அகற்றுவதற்கு அவர்கள் முயல்வதில்லை; கிளர்ச்சி செய்வதில்லை. உண்மையில், தங்களது நடைமுறைப் பழக்கவழக்கங்களில் அத்தகைய மாற்றம் ஏற்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

            • Hi Vinavu, I accept most of your points. Not this one. Other religions evolve. Islaam cannot evolve. Quran prohibits any change. Please read Ali Sina’s articles.

              As for Women status in Islam, read the alisina’s article in Tamil
              பெண்கள் – இஸ்லாமிற்கு முன்னும் பின்னும்
              http://tamil.alisina.org/?p=107

              for other articles on Islaam.
              http://www.alisina.org
              http://www.faithfreedom.org.

      • யாராக இருந்தாலும் மனதில் கருணை உள்ளவன் மட்டுமே உதவி செய்ய வருவான். இதில் பார்பன், இஸ்லாமியன், தாழ்த்தப்பட்டவன் அனைவருமே அடக்கம்.

  8. `ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற பழமொழிக்கேற்ப எந்த விபத்து நடந்தாலும் ”மனித தவறு”என்று தொழிலாளர்கள் மீது பழி போடுவது அதிகார வர்க்க யோக்கியர்களின் வாடிக்கையாகி விட்டது.அதற்கு ”ஆமாம் சாமி” போட அம்பிகள் கூட்டம் வேறு.விபத்துகள் நடப்பதற்கு முழு முதற் காரணம் அதிகார வர்க்கம்தான்.

    போதிய அளவு ஊழியர் வலு இன்றித்தான் தொடர்வண்டித்துறை செயல்படுகிறது.தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட 90 களின் துவக்கத்தில் தொடர்வண்டித்துறையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு அதன்படி 1992 முதல் அந்த துறையில் ஆண்டுக்கு இரண்டு விழுக்காடு ஊழியர் வலு குறைக்கப்படுகிறது.
    பார்க்க.http://books.google.co.in/books?id=LxKUSZkEyoIC&pg=PA424&lpg=PA424&dq=inadequate+manpower+in+indian+railways&source=bl&ots=l1hH6_y2cm&sig=4wHDqxks6h6_dLaNVreCmZYWnf4&hl

    ஓட்டுனர்,புள்ளியாளர் [points man ] போன்ற பயணிகளின் உயிருக்கு பொறுப்பான பணியில் இருப்பவர்களுக்கு போதிய அளவுக்கு ஓய்வு கிடைப்பதை துறை விதிகள் உறுதிப்படுத்துகின்றன.அதன்படி இரண்டு பணிநேரங்களுக்கு [shifts] இடையில் போதிய அளவு இடைவெளி இருக்க வேண்டும்.அதற்காக ஊழியர்களுக்கு நிலையங்களில் ஓய்வறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஊழியர் பற்றாக்குறையின் காரணமாக போதிய ஓய்வு தராமல் அந்த தொழிலாளர்கள் பணிக்கு அழைக்கப்படுவதும் நடக்கிறது.

    இந்த நிலையில் விபத்து நடந்தால் யார் பொறுப்பு.நள்ளிரவு நேரத்தில் மழை கொட்டும் காட்டுப்பகுதியில் தூக்க கலக்கத்தில் தனது உயிரையும் சேர்த்து பலி கொடுக்கும் அந்த அப்பாவி தொழிலாளியா,அல்லது அவனை அநியாயமாக பணிக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு போய் குளிரூட்டப்பட்ட அறையில் படுத்து உருளும் அதிகாரி என்ற பெயரில் உலவும் அந்த …………அல்லது அந்த அதிகாரி அப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளிய துறை நிர்வாகத்தை கையில் வைத்துள்ள மனிதர்கள் என்ற பெயரில் உலவும்…………..[புள்ளியிட்ட இடங்கள் இரண்டையும் படிப்பவர்கள் தாங்களே பொருத்தமான சொற்களால் நிரப்பிக் கொள்ளவும்]

    விபத்துக்கள் ஏன் நடக்கின்றன.பார்க்க.
    http://pd.cpim.org/2001/aug26/aug262k1_rlys.htm
    http://www.deccanherald.com/content/176907/we-need-six-sigma-trains.html

  9. கம்யுனிசம் ஏன் இஸ்லாத்தை ஏற்றி பேசுகிறது… இதுதான் பிரித்தாலும் சூழ்ச்சி… அப்பதானே இஸ்லாத்துக்கு எதிரான மறுமொழிகள் நிறைய வரும்… நல்ல அடிச்சுக்குவாங்க…

  10. எந்த event நடந்தாலும் அதில் அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதி நரிகளுக்கு நாங்களும் இணையானவர்கள் என்று சொல்லாமல் சொல்லியாச்சு.
    சாதி மத பித்து உங்கள் தலையிலேறி விட்டது. வேறென்ன சொல்ல…

  11. எல் அன்ட் டி நிறுவனத்தின் தொழிலாளர்களும்//

    அவர்களுள் எல்லா சாதியினரும் இருந்திருக்கலாம்.. அதே போல அனுப்பி வைத்த மேலாளரும் எந்த சாதியாக இருக்கலாம்.. பொருளுதவி தந்தவரும் இருக்கலாம்..

    ஆக நாமே மக்களை பிரிவினைக்குள் தள்ளணுமா?.

  12. னாட்டுல நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, அதுல எப்படி அடுத்தவன குறை சொல்லலாம், கலவரத்த உண்டு பண்ணலாம்னு சிந்திக்கிறது தான் உன் வேலையா… எங்கள் கல்லூரி தேசியநெஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு மோசமான விபத்துநடந்தது…அந்த விபத்தில் அடிபட்ட அடிபட்ட ஒருவரை தொட்டுத் தூக்கி அங்கு வந்த அரசுப்பேருந்தை மறித்து அதில் ஏற்றீ, கூடப் பேயி வைத்தியம் பார்த்தது மாணவர்கள் தான்…அவரை

    உலகில் 2 பிரிவு தான்நல்லவன் கெட்டவன்…அது அனைத்துப் பிரிவிலும் உண்டு…விபத்தில் அடிபட்டவர்களிடம்நகைகளைப் பறிக்கும் மிருகங்களும் உண்டு…அதுக்கு ஜாதி மதம் இனம் எதுவும் கிடையாது…மனுசனா மிருகமா என்பது தான் முக்கியம்…

    • \\ நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, அதுல எப்படி அடுத்தவன குறை சொல்லலாம், கலவரத்த உண்டு பண்ணலாம்னு சிந்திக்கிறது தான் உன் வேலையா…\\

      நெத்தியடி !!!

    • ஜாதி மதம் இனம் எதுவும் கிடையாது …மனுசனா மிருகமா என்பது தான் முக்கியம்.எங்கள் கருத்தும் அதே தான் ,ஆனால் சற்று திருத்தம்.”ஜாதி மதம் இனம எதுவும் கிடையாது… முதலாளிவர்க்கமா(மிருகமா)தொழிலாளிவர்க்கமா(மனுசனா) என்பது தான் முக்கியம்

      பிரச்சனையை கணடு துடிக்கும் வர்ககம் உழைக்கும் வர்க்கமும்,மாணவர்வர்க்கமும் தான்.
      அந்த மாணவர்க்கம் பின்னாலில் எந்த வர்க்க நிலையை தேர்ந்தெடுக்குது என்பதை பொருத்துதான் அவர்களின் உணர்வின் நீட்சி உள்ளது.

    • “உலகில் 2 பிரிவு தான்நல்லவன் கெட்டவன்…அது அனைத்துப் பிரிவிலும் உண்டு…விபத்தில் அடிபட்டவர்களிடம்நகைகளைப் பறிக்கும் மிருகங்களும் உண்டு…அதுக்கு ஜாதி மதம் இனம் எதுவும் கிடையாது…மனுசனா மிருகமா என்பது தான் முக்கியம்…”

      மிக சரியான வார்தைகள்.

  13. வினவின் பதிவுகளிலே அனேகமாக அத்துணை பின்னூட்டங்களிலும் எதிர்ப்பை பெற்றது இந்த பதிவுதான்…

  14. \\வினவின் பதிவுகளிலே அனேகமாக அத்துணை பின்னூட்டங்களிலும் எதிர்ப்பை பெற்றது இந்த பதிவுதான்…//

    சரி பரவாயில்லை மனிதரே,நீங்க முதலில் கட்டுரையின் மைய்யக் கருத்துக்கு பதில் சொல்லுங்கள்.
    நடக்கும் ஒவ்வொரு விபத்துக்கும் ஓட்டுனர் மட்டும்தான் பொறுப்பு எனும் போது என்று ‘மட்டும்’ என்கிற வார்த்தை கட்டுரையில் அழுத்தத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த நாடில் நடக்கும் எதாவது ஒரு விபத்திற்காகவாவது ஓட்டுனரை குறை கூறாமல் இருக்கிறதா ஆளும் வர்கம். அப்படியெனில் இந்திய போக்குவரத்துத் துறைகளில் எந்தவித நிர்வாக குறைபாடும் இல்லையா. அப்படி குறைபாடுகளால் எந்த விபத்தும் நட்ந்தது இல்லையா. நீங்கள் சொல்வது போலவே இந்திய போக்குவரத்து துறைகளில் எந்த குறைபாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்து இதற்கு மேலும் வாகனங்கள் விபத்தில்லாமல் ஓடுவது ஓட்டுனரின் கைகளில் மட்டும்தான் இருக்கிறது எனும்போது அந்த ஓட்டுனருக்கு தானே ஊதியம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் வினவு கூறியதன் பொருள். குறிப்பு: எந்த ஒரு விபத்திற்கும் காரணமாக அதிகார வர்கத்தின் மேல் அனைவரின் கண்கள் திரும்புவதற்கு முன்னால் அதை மழுங்கடிப்பதற்கு ஓட்டுனர் பலிகடா ஆக்கப் படுகிறார் என்று நான் சொன்னால் நீங்கள் ஏறுக் கொள்ள மாட்டீர்கள். ஆனால்தற்போது விபத்து நடந்த அரகோணம் ரயிலின் ஓட்டுனரே தன் மேல் எந்த தவறும் இல்லை என்றும் சிக்னல் கிடைக்காததினால்தான் இந்த விபத்திற்கு காரணம் என்றும் அதிகார வர்கம் தன்னை விசாரிக்காமலே நான்தான் தவறு செய்ததாக தன்னிச்சையாக அறிவித்ததாக கூறி அதிகார வர்கத்தின் முகமூடியை கிழித்துள்ளார். வினவு கட்டுரை இங்கே சிக்னல் கிடைக்காததுதான் காரணம் என்றோ அல்லது ஓட்டுனர்தான் காரணமென்றோ தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்து கட்டுரையை கையாளவில்லை பதிலாக அனைத்து விபத்துக்களுக்கும் ஓட்டுனர்தான் காரணம் என்று அதிகார வர்கம் கூறுவதைதான் எள்ளி நகையாடுகிறது.
    இங்கே அதிகார வர்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு முறையும் ஒரு ஓட்டுனரையோ அல்லது ஒரு தொழிலாளரையோ பலிகடாவாக்குகிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லையா.

  15. இது ஒரு கேவலமான பார்வை கொன்ட கட்டுரை.நான் கட்டுரை பாதுகாப்பு விழிப்புனர்வு பற்றி இருக்கும் என நினைத்தேன் ஆனால் வழக்கம் போல் பார்ப்பானைத் திட்டுகின்றனர். எரிந்து கொன்டிருக்கும் வீட்டில் இருந்து திருடுவதர்க்கும் இந்த கட்டுரைக்கும் பெரிய வித்யாசம் இல்லை.

  16. தனி மனிதன், கட்சி, அரசு எதுவானாலும் வர்க்க சார்பு உடையதாகவே இருக்கும், அப்படியல்லாமல், நான் நடுநிலையாளன் என்று ஒருவன் சொல்வானேயானால் அவன் அதிகாரவர்கத்தின் சார்பாளன் என்றே பொருள். இந்த கட்டூரையின் நோக்கம் ஒரு விபத்தை ஆளும் வர்க்கம் திசைதிருப்பி தொழிலிளியை குறை சொல்வதில் போய் முடிகிறது, என்பதுதான். மற்றபடி இதில் பார்ப்பானை திட்டியதில் தவறேதும் இல்லை, பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் முதலில் பார்ப்பானத்தான அடிக்கனும். வரலாறு தெரியாமலா வாதம் பண்ண வருவாங்க…..

  17. விபத்துநடக்க சற்று முன்வரை, அந்த ஓட்டுனரின் செல்போன் இயக்கத்தில் இருந்துள்ளது என்பதை செய்தித்தாள் தெரிவிக்கிறது! இதுவும் ஒரு பார்ப்பனீய சதியா?

  18. மட்டன் சப்பிடும் பாய்கலுக்கும் மனசு உன்டு. இது சாதார்ன நிகழ்சி. மந்திரம் சொல்லும் பிரமின் கலும் மனிதர்கல் தான்.

    • மட்டன் சாப்பிடுவது, சாம்பார் குடிப்பது என்பதல்ல பிரச்சினை. வினவு சொல்ல வருவது மனிதனை மனிதன் தீண்டத்தகாவதவானாக பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டுதான் அப்படிக் கூறுகிறது. மனிதனைத் தொட்டால் தீட்டு என தீட்டுக் கழிக்கும் பார்ப்பான் எப்படி ஓடோடி வருவான்.

  19. உடற்பாகங்கள் சிதறி கிடந்த நிலையில் அங்கு தத்தமது வேலையினை விட்டு விட்டு விபத்து இடத்தில் உதவியர்கள் அனைவரும் கடவுள்.
    ஏன் நீங்கள் அந்த கடவுள்களையும் (மனிதர்களையும்) பார்பன , இஸ்லாமிய , கிறித்துவ என்று பிரிக்கிறீர்கள்?
    நீங்கள் ஒரு சிறுபான்மை மக்களுக்கு சார்பாக இருங்கள், அவர்களின் நன்மைக்கு பாடுபடுங்கள். நன்று.
    ஆனால் காப்பாற்றிய பாயை மட்டுமே பேசுகிறீர்களே, பாய் அல்லாதோர் யாருமே அங்கு உதவ வில்லையா?

    உங்களது சில கட்டுரைகள் உலகதரமாகவும், இது போன்ற சில கட்டுரைகள் யாரையோ தாக்க வேண்டும் என்று சில்லரை தனமாகவும் இருக்கிறது…

    நீங்க நடுநிலையாளர் இல்லை என்பது நன்றாகவே தெரியும் , இருந்தாலும் உங்கள் மேல் ஒரு மரியாதை இருந்தது
    நீங்களே அதனை இழக்கிறீர்கள்…. வேதனை.

  20. \\நீங்கள் ஒரு சிறுபான்மை மக்களுக்கு சார்பாக இருங்கள், அவர்களின் நன்மைக்கு பாடுபடுங்கள். நன்று.\\

    \\உங்களது சில கட்டுரைகள் உலகதரமாகவும், இது போன்ற சில கட்டுரைகள் யாரையோ தாக்க வேண்டும் என்று சில்லரை தனமாகவும் இருக்கிறது…\\

    வினவு….நான் ஏற்கனவே கூறியதை போல இந்த கட்டுரை அனேகமாக அனைவரது எதிர்ப்பையும் பெற்று விட்டது…
    உலக தரம் வாய்ந்த கட்டுரைகளை எழுதி வந்த வினவின் தரம் சற்று கூட குறைய விட மாட்டோம்… நீ உன் தரத்தை விட்டு விட கூடாது…

    மைனாரிடியை ஆதரித்தல் என்பது மெஜாரிடியை திட்டுவது என்று குறிக்கி விட கூடாது…

    ஒன்று மட்டும் தெரிந்து கொள்…
    என்னதான் மைனாரிடியை நடுநிலையாளர்கள் ஆதரித்தாலும், ஒருபோதும் மைனாரிட்டி நடுநிலையாளர்களை ஆதரித்ததில்லை… உனது முந்தைய பதிவுகளே இதற்கு சாட்சி….

  21. சமையல் செய்து கொண்டிருந்த அகமது அலி வந்தாரே, அங்கே இருந்த முல்லா/மவுல்வி யாராவது வந்தாரா..? அவரும் போன உயிர்களின் சாந்திக்காக தொழுகைதான் நடத்தியிருப்பார்.. புரோகிதர்கள் சாந்தி ஹோமம் நடத்தியிருப்பார்கள்.. பாயிக்கும் பாப்பானுக்கும் சிண்டு முடியும் வேலையை எப்போது விடப் போகிறீர் ?

    உதவிக்கு வந்த தொழிலாளர்கள் உங்கள் “புரட்சிகர” தொழிலாளர்களா.. இல்லை “ஓட்டுப் பொறுக்கி” களா??

Leave a Reply to comrade பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க