privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!

-

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள்  முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு  சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால்  50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர்.  “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை!  வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28  அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை  உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்! | வினவு!…

    நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?…

  2. //நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.//
    தலித்துகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்,என்பது உண்மை! ஆனால், முஸ்லிம்கள்,தங்கள் மத அடையாளங்கள்/ மதம் சார்ந்த பழக்க வழக்கங்களை காக்கும் பொருட்டு, தாங்களே ஒதுங்கி கூட்டமாக வாழுகிறார்கள்!வெளியேறும் முஸ்லிம்களை கண்டிக்கின்றனர்!

    • //மதம் சார்ந்த பழக்க வழக்கங்களை காக்கும் பொருட்டு, தாங்களே ஒதுங்கி கூட்டமாக வாழுகிறார்கள்!//

      இதுதான் அவதூறு என்பது. பொருளாதார ரீதியில் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள ஏழை முஸ்லீம்கள் தலித் மக்களுடன் இணைந்தே வாழ்கின்றனர். பரவலாக நாட்டின் அனைத்து இடங்களிலும் காணப்படும் நிலை இது. இது பற்றிக் இக்கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே மதமாக இருந்தாலும் பணக்கார முஸ்லீம்கள் இவர்களுக்காக ஒன்றும் புடுங்குவது கிடையாது.
      ரம்மி! நீங்கள் உங்கள் மோடி முகமூடியைக் கழட்டிவிட்டுப் பாருங்கள்.

  3. கேரளத்தில் இஸ்லாமிய வங்கி துவக்கம்.
    http://in.news.yahoo.com/241/20101019/1272/top-banking-on-sharia-in-kerala_1.html

    வட்டி கொடுப்பதோ வாங்குவதோ இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது.
    ஆயுள் காப்பீடு இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது.
    மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் பெரும்பாலான இந்திய இஸ்லாமியர்கள் ஹவாலா முறையில் தான் பண பரிவர்த்தனை செய்கிறார்கள்.

    இந்த பிரச்சனைக்கு இஸ்லாமிய வங்கிகள் தான் தீர்வாக இருக்க முடியும்.

    • லோன் கேட்டு விண்ணப்பிக்கிற முஸ்லீம்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது-ங்கிறதுதான் இங்க விவாதம். அவங்க இங்கெல்லாம் வர மாட்டாங்க-ன்னு சொல்ற மொக்கைத்தனமான நியாயங்களை சொல்வதற்கு உங்களுக்கு எப்படித்தான் உறுத்தாமல் இருக்கிறதோ.. ச்சே…

    • http://www.hindu.com/2010/07/30/stories/2010073054531100.htm

      “The committee was also able to bust the myth that Muslims were against banking. Muslims held a 12 per cent share in PSA bank accounts which was rather low considering the high concentration of Muslims in socially and economically deprived sections. Nonetheless, as Mr. Shariff points out, the figure established that given a chance Muslims opened bank accounts.”

    • இஸ்லாமில் வட்டியில்லையென்று, இவர்கள் அல்லாவுக்கே அல்வா கொடுக்கிறார்கள். ICICI வாங்கும் வட்டியை விட அதிகம்(இருமடங்கு) வசூலிப்பார்கள். ஆனால் வட்டி (usury) என்று மட்டும் சொல்லமாட்டார்கள். போர்த்திட்டு படுத்தாலும், படுத்துட்டு போர்த்தினாலும் ஒன்றுதான். ஏன் தான் இப்படி உலகத்தையே ஏமாற்றுகிறார்களோ?? சொல்வதெல்லாம் வேதம். செய்வதெல்லாம் பாவம்.

      • இசுலாமியர்கள் வட்டி வாங்குகிறார்களா,இல்லையா,என்பது இங்கு விவாதப் பொருளில்லை.அவர்கள் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் கணக்கு துவங்கவும் அனுமதி மறுக்கப்படுவது பற்றியே கட்டுரை பேசுகிறது.இசுலாமியர்கள் வங்கிகளால் புறக்கணிக்கப்படுவதை ”தி இந்து”நாளிதழ் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.

        பார்க்க;
        http://www.thehindu.com/opinion/op-ed/article540507.ece
        இதைத்தான் மதசார்பின்மை பேசும் அரசின் வங்கிகள் மத வெறுப்பு கொண்டு முசுலிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாக கட்டுரை குற்றம் சாட்டுகிறது.அதற்கு பதில் சொல்லாமல் வேறு பொருட்களை பேசுவது அறிவு நாணயம் உள்ள செயலா.

  4. It is very shocking if this is true. Is this happening even in Kerala where Muslims are almost 1/3rd of the population ?. Please give reference URLs/Materials for further understanding of the issue.

  5. […] This post was mentioned on Twitter by karthick, சங்கமம். சங்கமம் said: முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!: நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் … http://bit.ly/aSopVl […]

  6. இதன் மூலம் தெரிவது இந்த நாட்டில் வங்கிகள் இன்னும் பார்ப்பனர்களின் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி ஓநாய்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    வங்கி பணிகளில் அதிகார வர்க்கத்தில் 90% அதிகமாக பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

    தமிழ் நாட்டில் இருக்கும் பாங்க் ஆப் பரோடாவில் பெரும்பாலும் ஐயங்கார்களே அதிகமாக இருப்பார்கள்.

    இந்த நிலையெல்லாம் மாற வேண்டும் வங்கி தேர்வாணயங்களில் இருந்து பார்ப்பன ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்.

    • இதோ இன்னொரு கும்மி.

      இந்து ஃபாஸிஸம், பார்ப்பணிய சாதி வெறி, ஆர்.எஸ்.எஸ் ஓநாய்கள், என்று இழவு வீட்டு பிலாக்கணம் பாடும் கும்மி.

      தேசிய வங்கியான செண்ட்ரல் வங்கியின் சமீபத்திய ப்ரொபேஷனரி ஆஃபீஸர் தேர்வுக்கான விளம்பரத்தின் இணைப்பை கொடுத்திருக்கிறேன்.
      https://www.centralbankofindia.co.in/site/MainSite.aspx?status=1&menu_id=17

      500 பதவிகளுக்கு, SC-75 இடங்கள், ST-40 இடங்கள், OBC-135 இடங்கள் பொது-250 இடங்கள். இந்த ரிஸர்வேஷன் முறை வந்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று என்பதை வினவுகாரர்களிடமே வினவிக்கொள்ளுங்கள்.

      மேலும் பாப்பான் பாப்பாத்திகளெல்லாம், அமெரிக்கா ஐரோப்பா என்று பறந்து பறந்து பல லட்சங்கள் வாரி குமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிசாத்து பாங்க் வேலையெல்லாம் யாருக்கு வேண்டும்.

      பாப்பார செத்த பாம்பை இன்னும் எத்தனை காலம்தான் அடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்.
      எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின் – விவேகானந்தர்

      • //’எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்’//

        என்ன எளவுக்குடா சூத்திரனோட பொன்மொழியை மட்டும் இப்ப தூக்கிப் புடிச்சுகுனு அலையிரே!

        மொதல்ல..இதுக்கு இன்னா அர்த்தமின்னு சொல்லு மொதல்ல!
        (எந்திருச்சு விரப்பா ஒரு காக்கி டவுசர மாட்டிக்கிட்டு கலவரம் செய்ய வாடா.. அதானே அர்த்தம்!!)

        • பொறாமை….பொறாமை….
          சிக்காகோவிலே உரத்து முழங்கியதால் இன்னும் அந்த வெம்மை தீரவில்லை போல….தண்ணிய ஊத்துங்கப்பா………..

      • \\மேலும் பாப்பான் பாப்பாத்திகளெல்லாம், அமெரிக்கா ஐரோப்பா என்று பறந்து பறந்து பல லட்சங்கள் வாரி குமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிசாத்து பாங்க் வேலையெல்லாம் யாருக்கு வேண்டும்//
        சாதி வாரி மக்கட்தொகை கணக்கெடுப்பை நீங்கள் வலியுறுத்த முன் வருவீர்களா.அப்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் ”இந்த பிசாத்து இந்திய வேலைகளை”நீங்கள் எப்படி எந்த அளவுக்கு ”யாருக்கு வேண்டும்”என உதறி தள்ளியதை நாடு அறிந்து கொள்ளும்.

    • திரு தமில் குரல், நீ எதுக்கு பார்பனியம், ஹிந்துயிசம் என்று அவர்களை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிராய்? இன்று பார்பனர்கள் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிரார்கள், அவர்களுக்கு கல்வியும், அரிவும்தான் மூலதனம். உனக்கு அது இல்லாததால், காழ்புனர்சியால் பொறாமையால்
      வெந்து சாகிறாய். முடிந்தால் உன்னை வளர்த்துக்கொள்.

      • 5000 ஆண்டுகளாக, நாங்கள் மட்டுமே படிப்போம் என்று விதி/சதி செய்து, பிழைப்பு நடத்திவிட்டு, ‘கல்வியிலும், அறிவிலும் நாங்கள்தான் நெம்பர் 1’ என்று இன்னும் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே; உங்கள் ‘நெஞ்சுரம்’ ‘போற்றப்பட’ வேண்டியதுதான்.

        உங்களின் 5000 ஆண்டுச் சதியை, வெறும் 50 ஆண்டுகளில் நாங்கள் முறியடித்துவிட்டதே போதும், உண்மையான திறமை யாருக்கு உள்ளது என்பதை உலகம் உணர.

        • “உங்களின் சதி” “எங்களின் திறமை”
          உன் பாட்டன்,முப்பாட்டன் யாராக இருந்தானுகள் என யோசித்து பார்..
          முன்பின் யோசித்து வார்த்தைகளை வெளிவிடு முட்டாளே…..

      • \\இன்று பார்பனர்கள் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிரார்கள்,//
        நீங்கள் மேலே உள்ள பின்னூட்டத்தை படித்து பாருங்கள்.
        \\மேலும் பாப்பான் பாப்பாத்திகளெல்லாம், அமெரிக்கா ஐரோப்பா என்று பறந்து பறந்து பல லட்சங்கள் வாரி குமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிசாத்து பாங்க் வேலையெல்லாம் யாருக்கு வேண்டும்//

  7. What about all the muslims who work for government or private sectors? Their salary is credited to their bank accounts. All of my muslim friends have bank account. They range from illiterate cobbler to educated Government officials. They mingle with everyone freely and never complain of such things. I think people like vinavu is spreading lies to create a victim mentality in muslim community.

    At one side you spread hatred against islam, on other side, you pretend that you are saviors of muslim community. Even if that is the real case, muslims have the political and people force to fight for their rights through proper channel.

    Now let us discuss about the condition of muslims in Communist countries. In China, millions of muslims are harassed in Xinjiang. Also vinavu is a supporter of LTTE, who mercilessly harassed muslims. First write about your own mistakes and then criticize others

  8. வங்கி கணக்கு துவக்குவதில் வங்கிகள் கோரும் ஆவணங்களை/சான்றுகளை தருவது என்பது ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ் செய்யப்படுகிறது.வங்கிகள் கடன் வழங்கும் போதும் ஆவணங்களை/சான்றுகளை கேட்கின்றன.பாமரர்கள் பலரால அவற்றை தர முடிவதில்லை.இதுதான் முஸ்லீம் மாணவர்களுக்கும் நடந்திருக்கும்.கல்வி கடன் பெற மாணவர்கள் சில சான்றுகளை
    தர வேண்டும்.இருப்பிட முகவரிக்க்கு சான்று,
    பெற்றோரின் வருமானம்/தொழில்,முகவரி போன்றவற்றிற்கு ஆதாரம், கல்லூரியிலிருந்து கட்டணத்திற்கு சான்று என்று பலவற்றை கோருவது தவறா.கடன் தராததால் தற்கொலை செய்து கொண்ட இந்து மாணவியை காரணம் காட்டி வங்கிகள் இந்து விரோதிகள் என்று எழுதிவிடலாமா.

    வங்கி கடன் கொடுத்து ஒரு பகுதியில் உள்ளவர்களில் 90% திருப்பி தரவில்லை என்றால் அதே பகுதியில் உள்ள பிறரும் தர மாட்டார்கள் என்று வங்கி நினைக்கலாமே.அவர்கள் வங்கியில் சேமிப்போரின் நலன்களையும் பேண வேண்டுமே.கடன் கொடுத்து வங்கி போண்டியானால் மருதையனும்,வினவும் ஒடி வந்து காப்பாற்றுவார்களா என்ன.

    “நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன.”
    இதற்கு ஆதாரம் என்ன. குறைந்த பட்ச தொகை கணக்கில் இல்லாதபோது வங்கிகள் கணக்குகளை மூடச் சொல்கின்றன. இது பொதுவான விதிதான்.வங்கிகளில் கடன் வாங்கும் முஸ்லீம் தொழிலதிபர்கள் இல்லையா இல்லை சேமிக்கும் முஸ்லீம்கள் இல்லையா.பல வங்கிகளில் முஸ்லீம்கள் கிளை மேலாளர்களாக இருக்கிறார்கள்.

    ” சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது”
    இப்படி எழுதி இந்து-முஸ்லீம் பகையை வினவு ஊட்டி வளர்க்கிறது. இந்து சமூகத்தில் முஸ்லீம் விரோத உளவியல்
    இருக்கிறதா என்ன.அப்படியானால் மக்கள் தொகையில் 80% இந்துக்கள் உள்ள நாட்டில் 13% உள்ள முஸ்லீம்கள் மீது தினசரி தாக்குதலா நடக்கிறது.

    • //இந்து சமூகத்தில் முஸ்லீம் விரோத உளவியல்
      இருக்கிறதா என்ன.// ஏதாவது பாம் வெடிச்சிருச்சுன்னா உடனே என்ன நினைக்குது இந்த சமூகம்? முஸ்லிம் தீவிரவாதிதான் வச்சிருப்பான். என்றுதானே கொஞ்சமும் விசாரிக்காது சொல்கிறது? காவல் துறை மட்டும் என்னவாம்? தேடப்படும் ‘முஸ்லிம்’ தீவிரவாதிகள் என்றுதானே அறிவிக்கிறது! கலவரங்களாகட்டும், நந்தேடு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பாகட்டும் பல இடங்களில் இரத்தவெறியோடு மக்களைக் கொன்றுகுவித்த இந்து பயங்கரவாதிகளை காவல் துறையோ மக்களோ அவ்வாறு ‘இந்து பயங்கரவாதிகள்’ என விளிக்கிறார்களா?

      ஆகஸ்டு 15, ஜனவரி 26, டிசம்பர் 6 ஆகிய தேதிகளை ஒட்டி பொது இடங்களில் கூடும் மக்களைக் கேட்டுப் பாருங்கள்.. அத்வானிக்கு உடப்பிறந்த்வங்க மாதிரியே பேசுவாங்க..’பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவல்’னு… இதுதான் நஞ்சூட்டப்பட்ட பொதுப் புத்திங்கறது..

    • \\இருப்பிட முகவரிக்க்கு சான்று,
      பெற்றோரின் வருமானம்/தொழில்,முகவரி போன்றவற்றிற்கு ஆதாரம், கல்லூரியிலிருந்து கட்டணத்திற்கு சான்று என்று பலவற்றை கோருவது தவறா//

      இவையெல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட பின்னர்தான் அரசு கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு அனுமதிக்கிறது.இந்த சான்றுகளை வங்கிகள் ஏற்றுக்கொண்டு கணக்கு துவங்க அம்மாணவர்களை அனுமதிப்பதை தடுப்பது எது.

      \\மக்கள் தொகையில் 80% இந்துக்கள் உள்ள நாட்டில் 13% உள்ள முஸ்லீம்கள் மீது தினசரி தாக்குதலா நடக்கிறது//

      மொராதாபாத்.மீரட் மலியான,கான்பூர்,பாகல்பூர்,ரத யாத்திரை,மும்பை, குசராத்,என முசுலிம் இனப்படுகொலைகளை பாசிச வெறியர்கள் நடத்திவருவதும்.அதை தெகல்கா தொலைக்காட்சி படப்பிடிப்பு கருவியின் முன் பகிரங்கமாக அறிவிப்பதும் இதை எழுதும்போது உங்களுக்கு எந்த உறுத்தலையும் ஏற்படுத்தவில்லையா.

  9. THis is true. Even in Bangalore if you live in certain areas though you are non muslim it is difficult to get credit card. My friend’s credit card request got rejected by a MNC bank (he was working in No1 Software company) because he was living in that area.

  10. எனக்கு தெரிந்து ICICI வங்கியில் கடன் விண்ணப்ப படிவத்தில் சாதி கேட்டு ஒரு கட்டம் இருக்கிறது.அங்கே வேலை செய்த என் நண்பர் இன்னொருவருக்கு ஸாதியை மாற்றி குறிப்பிட்டு தான் கடன் வாங்கி தந்தார்.தலித் என்றால் கடன் மறுக்கப்படும் வாய்ப்பு உண்டு என்றும் கூறினார்.மற்ற வங்கிகளில் எப்படி என்று தெரியவில்லை. இந்தியா சிலரை மட்டுமே முன்னேற்றி கொண்டு இருப்பது கண்கூடு. இஸ்லாமியாரும் தலித்களும் இணைந்து ஒரு பொருளாதார மைய்யம் உருவாக்கினால் நான் ஒரு லட்சம் தர தயார்.மேலும் பல லட்சங்கள் நண்பர்கள் மூலம் பெற்று தர முடியும் கிராமீன் வங்கி போல செயல்பாடு இருந்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்.அதற்கு இந்த பின்னூடடம் தொடக்கமாக அமைந்தால் மகிழ்ச்சியே.

    • //எனக்கு தெரிந்து ICICI வங்கியில் கடன் விண்ணப்ப படிவத்தில் சாதி கேட்டு ஒரு கட்டம் இருக்கிறது.அங்கே வேலை செய்த என் நண்பர் இன்னொருவருக்கு ஸாதியை மாற்றி குறிப்பிட்டு தான் கடன் வாங்கி தந்தார்.//

      மிஸ்டர் அகமது புளுகன் (சாரி) அழகன்,
      ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லோன் விண்ணப்பத்திற்க்கான இணைப்பை தந்திருக்கிறேன்,
      http://www.icicibank.com/Personal-Banking/pdf/form-center/Agreement_PL.pdf
      இந்த விண்ணப்ப படிவத்தில் சாதியோ மதமோ குறித்த விவரங்கள் எங்காவது கேட்கப்பட்டுள்ளதா என்று சுட்டிக் காட்டவும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையில் வினவு வெளியிடும் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளுக்கெல்லாம் கூடி நின்று கும்மி அடிப்பதை விடுத்து, நீங்கள் சொன்னது போல் லட்ச ரூபாய் உதவியை நன்றாகப் படிக்கும் ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு செய்யுங்கள்.

      //கிராமீன் வங்கி போல செயல்பாடு இருந்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்//

      மைக்ரோஃபைனான்ஸ் எனப்படும் நுண்கடன் வழங்கும் அமைப்புகளால் ஆந்திராவில் நிகழ்ந்த தற்கொலைகள் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியாதா?

      பேராசையும் துராசையும் மனிதனை வழி நடத்தும் வரை எளியவர்களையும் ஏமாளிகளையும் ஏமாற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கும்.

      எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின் – விவேகானந்தர்

      • திரு ராம் காமேஸ்வரன்,

        //வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையில் வினவு வெளியிடும் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளுக்கெல்லாம்…//

        டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை
        http://timesofindia.indiatimes.com/city/lucknow/Muslims-unable-to-take-advantage-of-bank-facilities/articleshow/6216516.cms

        “Muslims are discouraged from opening bank accounts and denied bank loans to improve their economic condition. Such complaints are being received by the Minority Commission. The number of complaints has doubled as compared to that of last year. In Andhra Pradesh, 90,000 Muslims could not utilise the grants sanctioned to them because they did not have bank accounts. The number of Muslims accounts, says the commission, have halved in Kerala and Assam.”

        தி இந்து ரிப்போர்ட்
        http://hindu.com/2010/08/13/stories/2010081355671500.htm

        “At a meeting with Minority Affairs Minister Salman Khursheed, SVP convener Mohammad Adil Hasan placed the number of students turned away by banks in Bihar at “not less than 50,000.”

        தி இந்து கட்டுரை
        http://www.thehindu.com/opinion/op-ed/article540507.ece

        “The committee’s third major finding was that Muslims did not easily get loans. The community’s share of outstanding PSAs was pathetic — only 4.6 per cent as against a population share of 13.4 per cent. The ratio of loans to population was even worse in the Minority Concentration Districts. In 44 such districts, where the Muslim share of the population was 33 per cent, their share of PSAs was an abysmal 7.9 per cent. The share of other minorities, who together constituted two per cent of the population, was 3.7 per cent. In 11 of these districts, where the Muslim share of the population was 51.4 per cent, their share of PSAs was 12.9 per cent. With a 1.2 per cent share of the population in the same districts, other minorities received 3. 4 per cent of PSAs while Hindus, who formed 47.4 per cent of the population, got a PSA share of 63.1 per cent. Over all, other minorities fared twice as well as Muslims in the priority sector.”

        பி.பி.சி செய்தி
        http://www.bbc.co.uk/news/world-south-asia-10718243

        “The National Commission of Minorities says that there has been a 100% increase in the number of complaints it has received over the past year from Muslims who say they are being prevented from opening accounts in state-run banks.”

        இந்திய டுடே செய்தி

        http://indiatoday.intoday.in/site/Story/106106/India/muslims-face-bank-profiling-barrier.html

        “”The number of accounts decreased by the end of March 2009 by 47 per cent in Assam, which has about 32 per cent Muslims, 17.44 per cent in West Bengal, 46.2 per cent in Karnataka and 6.99 per cent in Kerala,”

        மேலும் தகவல்களுக்கு…
        http://www.minorityrights.org/?lid=5653&tmpl=printpage
        http://www.aicmeu.org/Financial_Exclusion_of_Indian_Muslims.htm

      • வினவு தோழர், moderate பண்ணிட்டீங்களே !!! 🙂

        மேலே ‘அகமது புளுகன் (சாரி) அழகன்’ என்று அவர் விளித்ததால் தான், நானும் அப்படி இட்டேன். ஆனாலும் தேவையில்லாததை நீங்கள் மட்டுறுத்தியது சரிதான் என்று படுகிறது. நன்றி.

      • 6 ஆண்டுகளுக்கு முன்னால், ஐ சி ஐ சி ஐ வங்கி நடத்திய போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் பதவிக்கு அமர்த்தப்பட்ட அம்பிகள் 4000 பேருக்கு மேல். காலி இடங்கள் அதிகமில்லை..4200 பக்கம்தான். இதனைக் கண்டித்து ‘ஐ சி ஐ சி ஐ வங்கியா, அய்யர் அய்யங்கார் வங்கியா?’ ‘பொதுமக்களே! ஐசி ஐசிஐ ஐ புறக்கணிப்பீர்!’ என்று பெரியார் திக ஒரு போராட்டம் நடத்தியது.. சே.. என்ன கொடுமை இது! பார்ப்பனர் அல்லாதோரில் அறிவாளிகளே இல்லாமல் போச்சுதே…அம்பிகள் மட்டும் திறமையா இருந்திருக்காளே!

  11. ” வங்கி கணக்கு துவக்குவதில் வங்கிகள் கோரும் ஆவணங்களை/சான்றுகளை தருவது என்பது ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ் செய்யப்படுகிறது.வங்கிகள் கடன் வழங்கும் போதும் ஆவணங்களை/சான்றுகளை கேட்கின்றன.பாமரர்கள் பலரால அவற்றை தர முடிவதில்லை.இதுதான் முஸ்லீம் மாணவர்களுக்கும் நடந்திருக்கும். ”
    நீங்கள் சொல்லுவது மிகவும் தவறு.
    நீங்கள் ஒரு முறை முஸ்லிம் பெரயருடன் சென்று ஒரு லோன் கேட்டு பாருங்க அப்ப தெரியும்.

  12. //ICICI வங்கியில் கடன் விண்ணப்ப படிவத்தில் சாதி கேட்டு ஒரு கட்டம் இருக்கிறது.அங்கே வேலை செய்த என் நண்பர் இன்னொருவருக்கு ஸாதியை மாற்றி குறிப்பிட்டு தான் கடன் வாங்கி தந்தார்.//

    100% சதவீதம் பொய் , நிச்சயம் அபப்டி எந்த கட்டமும் இல்லை .

    அந்த விண்ணபத்தை ஸ்கேன் செய்து இங்கே தர முடியுமா ?

    ஐசிஐசிஐயில் லோன் வாங்கி வருத்தப்படுபவன் நான் ,:)

  13. அதுதான் எல்லாம் வல்ல இறைவன் கொடுப்பாரே…..பிறகேன் லோன் …….?
    மெக்காவில் போய்…கேட்க வேண்டியது தானே….எதற்கு இந்த புலம்பல்?
    இந்து மத வெறியர்களின் தீவிரவாதம் இந்தியாவில் மட்டும் என்றால் இசுலாமியர்களின் தீவிரவாதம் உலகெங்கும்…இப்படி இருந்தால் உலக மக்கள் islamophobia ஆகாமல் என்ன செய்வது….

    • @smart : dont talk like a stupid… this is not a discussion about religious beliefs and facts… dont criticize any religion and their belief.

      if u have any facts or proof against this article produce it.. or else keep quiet…

      u r not even criticizing .. u r throwing mud on them…. its not gonna help in any way… except to show ur hatred against them….

      • I strongly disagree with you mister Suresh….because muslims always try to approach any social problem ONLY THROUGH THEIR RELIGION.this fact is only possible in islamic countries…BUT INDIA IS NOT AN ISLAMIC REPUPLIC…..they always forgetting that….I spit no hatred on them..just trying to make them understand. if my any of my words disturbed someone….i feel sorry for that.

  14. அரசு வங்கிகள் கேட்கும் ஆவணங்களை சிறுபான்மை முஸலீம் மக்களால் கொடுக்கமுடியாததற்கு யார் காரணம் இந்திய மதச்சார்பற்ற அரசா? அல்லது வினவா? “ஆமாம் இது பார்ப்பன இந்து வெறி சார்பு அரசுதான்” என்று ஒததுக்கொண்டு போக வேண்டியதுதானே இதுக்கு எதுக்கு மதச்சார்பற்ற பில்டப்பு?

  15. eppa paathaalum endha subject-a eduthaalum ippadi ‘paapaara aaadhika mudhalaalithuva indu veriyan’ paint-a eduthu elaarukkum appi vidareengaley.. olagathuley idhu illama vera velaiyey nadakkaadhaa?

    vinavu, ungal ennam pala samayam nalladhaaga ulladhu. aanan indha paint-a ellarukum adikkaradhaala oru solution ungalaala thara mudiyaama poidudu.

  16. ICICI வங்கியில் சிறு நகரங்களில் லோன் ஸெக் ஷன் இல் வேலை பார்க்கும் உங்கள் நண்பர்கள் யாராவது இருந்தால் விசாரித்து பாருங்கள் அகமது புளுகவில்லை.நிச்சயம் சாதி கேட்கிறான்.மேலும் அவர் சொல்வது போல் அரசாங்கத்தை நம்பவே தேவை இல்லை வசதி உள்ள ஒரு ஆயிரம் தலித்களும் ஆயிரம் இஸ்லாமியர்களும் இணைந்து ஒரு நிதியத்தை ஆரம்பித்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கையை அவர்களே மாற்றி கொள்ள முடியும்.நானும் அதில் பங்களிக்க தயார்.

  17. நான் ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் எனது எந்த உரிமையும் பறிக்கப் படவில்லை என்பதை தற்போது உணர்கிறேன். ஆனால் சில வருடங்களுக்கு முன் ஒரு இடதுசாரி மாத இதழின் தூவிர வாசகனாக இருந்தேன். அதில் வரும் கட்டுரைகள் என்னை மதவெறி கொள்ள செய்தது. இந்துக்களும் இந்தியாவும் எங்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டு இயங்குவதாக புரிந்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடைமுறையில் அப்படியில்லை என்பதே உண்மை…

    • well said nadheem. All Indians are my brothers and I will fight for them in proper channel and stand by them if injustice is done to them. These communists are widening the gap between muslims and other indians for their own benefits.

      As a atheist I have no problem with hindus/muslims/christians. But I have problems with “false-atheists” like dk, dmk, communist etc. All these people use atheism as a tool for their exploitation. If they want, they will attack islam or christianity or, for that case, any religion.

      We all know how violence against orissa christians started. These communist terrorists killed a hindu terrorist. Then hindu terrorists (NOT ALL hindus though) killed hundreds of Christians and raped many. Did these communists who started this problem came for the support of christians? They used that chance to recruit more people in to their terror camp.

      India needs liberation from religion (I dream of 100% atheist india). But that will not happen sooner (even later). But at least India should guard itself from communism. then we can destroy all other religions which are lesser evils.

    • நதீம்,
      ஒரு முஸ்லிமாக இந்தியாவில் நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை தைரியமாக தெரியப்படுத்தியதற்கு நன்றி. முஸ்லிம் என்பதால் உரிமைகள் மறுக்கப்படுவதும், வேறு சில அநீதிகள் இழைக்கப்படுவதும் சில சமயங்களில் நிகழத்தான் செய்கிறது. அதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படவேண்டும்.

      அனால் போலி மதசார்பின்மை மற்றும் போலி நாத்திகம் பேசும் வினவு போன்றவர்கள் செய்யும் விஷ(ம) பிராசரங்களில் மயங்கி விடாமல், விசிறி விடும் மதத்துவேஷம் என்ற நெருப்புக்கு மேலும் நெய் ஊற்றி உசுப்பி விடாமல், உங்களைப் போல் ஒவ்வொருவரும் குரல் கொடுத்தால், வினவின் பாஷையில் சொல்வதானால் “வினவின் டவுசரை உருவி விடலாம்”.

      தாலிபான்களின் பயங்கரவாதமும், ஆர்.எஸ்.எஸ் ஸின் தீவிரவாதமும் எவ்வளவு கொடியதோ, அதற்கு சற்றும் இளைத்ததல்ல வினவு போன்றவர்களின் மதசார்பின்மை, நாத்திகம் என்ற பெயரில் பரப்பி வரும் பிரிவினை வாதம்.

      ஜெய் ஹிந்த், வாழிய பாரத மணித்திரு நாடு.

      • ராம், ஒருவர் நான் இசுலாமியன் என்று பின்னூட்டம் போட்டால் உடனே நம்பி விடுவதா? அந்த பின்னூட்டத்தை வாசித்து பார்த்தாலே புரியும் அது ஒரு போலி என, தவஹீத் ஜமாதும், ஆர்.எஸ்.எஸ் சும் இருக்கும் நாட்டில் ஒரு இடது சாரி தீவிர இதழ் அவரை மதவெறி கொள்ளச்செய்ததாம், இப்படி கிறுக்குத்தனமாக ஒருவர் எழுதியும், உங்கள் கருத்துக்கு ஆதரவாக இருப்பதால் அதை புரிந்து கொள்ளக்கூட முடியாமல் நீங்கள் பாராட்டுவது செம்ம வேடிக்கை.. தயவு செஞ்சு இந்த பின்னூட்டத்தை எழுதுவது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதின்னு நம்பிடாதீங்க 🙂

        போகட்டும், என்னமோ இந்த செய்தியே பொய் எனும் அர்த்தம் வருமளவுக்கு நீங்கள் எழுதுகிறீர்களே, இது டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பத்திரிக்கையில் வந்ததுதானே.. சச்சார் கமிட்டி அறிக்கையை இணையத்தில் தேடிப்பார்த்தால் கூட கிடைக்குமே.. உண்மையை அறிய கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லையே ஐயா நீங்கள்

        ஐசிஐசிஐ பாரம் கொடுத்தா மட்டும் போதுமா? போய் கடன் கொடுப்பதில் உள்ள வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும். ஒவ்வொரு வங்கியும் கடன் கொடுக்க எழுதப்படாத பல விதிமுறைகளை வைத்துத்தான் செயல்படுகிறார்கள். அதுக்கெல்லாம் கடனுக்காக நாயா பேயா அலையனும் அப்பத்தான் புரியும்.. இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் போலீசு, வக்கீல் இருந்தால் கூட கடன் கிடைக்கும் வாய்ப்பு பல மடங்கு குறையும். அது போல தென் தமிழக மாவட்டங்களில் சாதி ஒரு எழுதப்படாத விதி.

        இப்படி யதார்த்த உலகததுடன் தொடர்பே இல்லாமல் நீங்கள் பெற்ற அறிவுதான் போலி. போலி அறிவுடன் இருக்கும் நீங்கள் சமூகத்தில் நிலவும் உண்மைகளை எழுதும் வினவை போலி என விமர்சிப்பது தான் ஹிப்போகிரைசியின் உச்சம்!

      • மை.ம. காமராஜன் படத்துல வர்ற ‘காமேஸ்வரன்’ மாதிரி நெம்ப அப்பாவியா இருக்கீங்க. ஜெய் பஜ்ரங் பலி

        • மதிப்பிற்குரிய போதெம்கின், மற்றும் ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு,
          அய்யராத்து அசட்டு அம்மாஞ்சி காமேஸ்வரன் எழுதிக்கொள்வது,

          சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் இக்கட்டுரையின் மைய விவாதக் கருத்தான ஸ்காலர்ஷிப் பற்றிய அனைத்து விவரங்களும் விண்ணப்ப படிவங்களும் இருக்கின்றன.

          http://minorityaffairs.gov.in/newsite/schemes/scholarship.asp

          இதில் ப்ரீ-மெட்ரிக், போஸ்ட்-மெட்ரிக், மெரிட்-கம்-மீன்ஸ் ஆகிய மூன்று ஸ்காலர்ஷிப்கள் அமைச்சகத்தால் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், பௌத்தர்கள், ஆகிய சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. ஸ்காலர்ஷிப்பில் 30% சிறுபான்மை இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

          ப்ரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் போஸ்ட்-மெட்ரிக் ஸ்காலர்ஷிப் 11-12, கல்லூரி, பல்கலை மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மதிப்பெண் மற்றும் குடும்ப வருமானம் ஆகிய இரண்டிண் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

          வழங்கப் படும் மொத்தம் ஸ்காலர்ஷிப் 20 லட்சம். இதில் ஆந்திர மாநில கோட்டா முஸ்லிம்களுக்கு 73,700.
          விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டிருப்பது போல ஸ்காலர்ஷிப் சாங்ஷன் ஆன பிறகு வங்கிக் கணக்கு விவரம் கொடுத்தால் போதுமானது. Details of bank account of student: (These details would be required only after sanction of scholarship and before disbursement of scholarship amount)

          எனவே ஸ்காலர்ஷிப் சாங்ஷன் ஆன முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையே மொத்தம் 73,700 பேர் தான் என்னும் போது 90,000 மாணவர்களுக்கு வங்கி கணக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பது கட்டுக்கதை இல்லையென்றால் தினத்தந்தியில் வரும் அலிபாபா கதையும் மிகவும் நிஜமான கதையே.

          இப்படி வங்கி கணக்கு அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தால் சிறுபான்மை அமைச்சகம் யாருக்குத்தான் ஸ்காலர்ஷிப் பணத்தை வழங்கியது? குறிக்கோளை எட்டி விட்டதாகவும் 20 லட்சம் மாணவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு விட்டதாகவும் அமைச்சகம் கூறுவது பொய்யா?

          போதெம்கின் சுட்டியுள்ள பத்திரிகை செய்திகள் எல்லாவற்றிலும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பொத்தாம் பொதுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே ஒழிய, ஆதாரங்கள் எங்குமில்லை.

          (இன்னும் வரும்)

        • //மதிப்பிற்குரிய போதெம்கின், மற்றும் ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு,
          அய்யராத்து அசட்டு அம்மாஞ்சி காமேஸ்வரன் எழுதிக்கொள்வது,//

          நடுவுலே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கோங்கோ…

          ஹி… ஹி… இது சும்மா காமெடி. ஆக்சன் ரீப்ளே இனிதான் வரும்.

        • திரு ராம் காமேஸ்வரன்,

          //எனவே ஸ்காலர்ஷிப் சாங்ஷன் ஆன முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையே மொத்தம் 73,700 பேர் தான் என்னும் போது 90,000 மாணவர்களுக்கு வங்கி கணக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பது கட்டுக்கதை இல்லையென்றால் தினத்தந்தியில் வரும் அலிபாபா கதையும் மிகவும் நிஜமான கதையே.//

          தகவலை பொறுமையாக படித்துவிட்டு வரலாமே. அப்படி என்ன ஆத்திரம்? நீங்கள் தந்த ஆதாரங்கள் அனைத்துமே அரைகுறையான சேதாரங்களே …

          நீங்கள் குறிப்பிட்ட 73,700 என்பது ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகைக்கு மட்டுமான இலக்கு (target ). ஆனால் achievement எண்ணிக்கை 1,05,125 .
          ஆதாரம்: http://minorityaffairs.gov.in/newsite/schemes/prematric/PreMatric1011.pdf

          மேலே சொன்ன எண்ணிக்கை ப்ரீ- மெட்ரிக் மட்டும் தான். இன்னும் போஸ்ட்-மெட்ரிக், MCM , இதர உதவித்தொகைகள் என எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். கீழே உள்ள ரிப்போர்டுகளில் இருந்து கூட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
          http://minorityaffairs.gov.in/newsite/schemes/postmatric/PostMatric1011.pdf
          http://minorityaffairs.gov.in/newsite/schemes/scholarships/mcm_sanctionFresh2009-10.pdf

          மேலும் ஆந்திர மாநில சிறுபான்மையினர் ஆணையம் தருகிற உதவித்தொகைகள் வேறு தனிக்கணக்கு.

          நிற்க….
          //விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டிருப்பது போல ஸ்காலர்ஷிப் சாங்ஷன் ஆன பிறகு வங்கிக் கணக்கு விவரம் கொடுத்தால் போதுமானது. Details of bank account of student: (These details would be required only after sanction of scholarship and before disbursement of scholarship amount)//

          இதுவும் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகைக்கான பாரத்தில் மட்டும் தான் உள்ளது (அதுவும் கூட சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்). மற்ற பாரங்களில் இல்லை. அதாவது விண்ணப்பிக்கும் போதே வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்கப்படுகின்றன.
          உதாரணம் கீழே…
          http://minorityaffairs.gov.in/newsite/schemes/postmatric/ApplicationFormat.pdf

          //போதெம்கின் சுட்டியுள்ள பத்திரிகை செய்திகள் எல்லாவற்றிலும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பொத்தாம் பொதுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே ஒழிய, ஆதாரங்கள் எங்குமில்லை.//

          ரிப்போர்டுகளைப் கொஞ்சம் படித்து விட்டுத்தான் வாருங்கள், சார். யாருக்கும் இங்கு அவசரம் இல்லை.

          இந்த 90 ,000 என்ற எண்ணிக்கை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NCM ) மத்திய சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்பிய கணக்கு தானேயன்றி யாரும் கற்பனை செய்ததல்ல. அதனால் தான் ToI , இந்தியா டுடே, தி இந்து , பி பிசி என்று எல்லா நாளிதழ்களும் அதை வெளியிட்டன. இந்து நாளிதழ் இது குறித்து சில விசாரிப்புகளையும் ஆய்வுகளையும் செய்திருக்கிறது. மத்திய அரசும் வங்கிகளிடம் தனது வருத்தத்தை தெரிவித்த செய்தியெல்லாம் கூட பின்னால் வந்தது.

          எல்லாத்தையுமே ஏதோ வினவே கற்பனை செய்து எழுதி விஷம பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் கூறுவது ரொம்ப பழைய டெக்னிக். ஒரே ஒரு வேண்டுகோள். இப்படி தவறான தகவல் கொடுத்து படிக்கிறவங்களோட நேரத்தை வீணடிக்கிற அநாகரீக வேலையைச் செய்யாதீர்கள்.

          //உங்களைப் போல் ஒவ்வொருவரும் குரல் கொடுத்தால், “வினவின் டவுசரை உருவி விடலாம்”.// என்று ஞிங்கள் முக்கி முக்கி உருவிக்கொண்டிருக்கச்சே , திரிபுரசுந்தரியோட பாட்டி ஞிங்ங்களோட லங்கோட்டியை லவட்டிண்டு போயிட்டா, கேட்டேளா?

          //(இன்னும் வரும்)//
          வந்தா போயித்தானே ஆகணும். போனா வந்துத்தானே ஆகணும். 🙂

      • ஆந்திர மாநில சிறுபான்மை நிதி கமிஷனின் வலைத்தளத்தில் மாவட்ட வாரியாக, தாசில் வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக, எந்தெந்த மாணவனுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளது.

        http://www.apsmfc.com/

        இந்த பட்டியலிருந்து 90,000 வேண்டாம் வெறும் 90 பெயரை தேர்ந்தெடுத்து, வங்கி கணக்கு துவக்கியதில் என்னென்ன சிரமங்கள் இருந்தன தெரிந்து கொள்ள போதெம்கின் குறிப்பிட்டுள்ள பத்திரிகை காரர்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

        செய்திகள் குறிப்பிடும் சமூக ஆர்வலர் முகமது ஆதில் ஹஸன் என்பவர் 25 வயதே நிரம்பிய இளைஞர். பீகார் சுன்னி வக்ஃப் போர்ட் தலைவரின் மகன். தற்பொழுது நடக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் லோக் ஜன்சக்தி கட்சியின் (ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சி) பல்ராம்பூர் தொகுதி வேட்பாளர்.25 வயதில் சட்டசபை தேர்தலில் டிக்கெட் கிடைக்கிறது என்றால் எப்பேர்ப்பட்ட ஜகஜால கில்லாடியாக இருப்பார் இவர் என்பதை வாசகர்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.
        http://www.twocircles.net/?q=2010oct04/adil_hasan_youth_icon_balrampur_bihar.html

        இவர் சொல்லுகிறார், “நானே 50,000 விண்ணப்பங்களை டௌன்லோடு செய்து மாணவர்களுக்கு கொடுத்தேன் ஆனால் வங்கி கணக்கு தொடங்க முடியாததால் மாணவர்கள் படிவங்களை மாநில அரசிடம் திரும்ப கொடுத்து விட்டனர்”. விண்ணப்பிக்கும் போது வங்கி கணக்கு விபரம் தேவையில்லை என்பதை மேலே பார்த்தோம். தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு பள்ளிக்கூடங்களை வலியுறுத்தாமல் இவரே கைக்காசைப் போட்டு இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? SIMI க்கு ஆள் சேர்க்கிறாரா?
        இந்த ஒரே தனி மனிதரின் முயற்சியால் வங்கிகளின் கொடூர இந்து ஃபாஸிஸ முகத்திரையும் ஆர்.எஸ்.எஸ் கனெக்ஷனும் அம்பலப்படுத்தப் பட்டுவிட்டது. மை.ம.கா வில் வரும் காமேஸ்வரனைப் போல் “ரெம்ப அப்பாவியாக” இருக்கும் என்னால் நம்ப முடியலைங்க. பொதெம்கின், ஜார்ஜ் புஸ் போன்ற “அதிமேதாவிகள்” தாரளமாக நம்பிக்கொள்ளுங்கள்

        தமிழ்நாடு சிறுபான்மையினர் ஸ்காலர்ஷிப் பெற்ற மாணவர்கள் பட்டியலில் 95% மதிப்பெண்கள் பெற்று குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழாக இருக்கிற மாணவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி கல்வி புகட்டுவதும் வினவு குறிப்பிடும் இந்துவெறி ஃபாஸிஸ அரசு தானே? அவர்களுக்கு கம்யூனிஸ்டு சீனாவிலிருந்து உதவித்தொகை ஏதும் வருகிறதா?

        95% மதிப்பெண் வாங்கி வருட வருமானம் ஒரு லகரத்துக்கும் கீழாக இருக்கும் ஒரு அய்யராத்து அம்பிக்கு, அவன் சிறுபான்மையினத்தை சேர்ந்தவனாக இருந்தும் கூட இந்த அரசு சலுகைகள் கிடையாது. அது கிடக்கட்டும் பரவாயில்லை, அவனுக்கு உதவி செய்ய TVஸ் போன்ற பல அய்யர்கள், அய்யங்கார்கள் இருக்கிறார்கள்.
        http://www.tn.gov.in/bcmbcmw/documents/prematric_renewal_2009_10.pdf

        மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது வினவுக்கும் பு.ஜ வுக்கும் புதியதல்ல. சிறுபான்மையினர் ஸ்காலர்ஷிப், முஸ்லிம்களின் வங்கி கணக்கு, லோன் பிரச்சினைகள் RED ZONE, என்று அழகாக ஜடை பின்னி, பொட்டு வைப்பதில் வினவிற்கு நிகர் வினவேதான்.

        சில முஸ்லிம் மாணவர்களுக்கு கணக்கு துவங்குவது வங்கிகளால் மறுக்கப்பட்டிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் நன்றாக படிக்கும் மாணவன் ஒருவன், அவன் எந்த சமுதாயத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், உதவி என்று கேட்டு வந்தால் அதை செய்வதற்கு பல கோடி இதயங்கள் இன்னும் இந்தியாவில் திறந்துதான் இருக்கிறது.இந்துக்களும் – முஸ்லிம்களும் பகைவர்கள் என்ற விஷ பிரசாரம் செய்யும் இது போன்ற கட்டுரைகள் தான் எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்து.

        பீகார் சுன்னி வஃக்ப் போர்டு தலைவரின் வாரிசுக்கு அரசியல் பிரவேச மஹோத்ஸவத்திற்கு போலி மதசார்பின்மை பேசும் இந்திய ஊடகத்துறையின் அன்பளிப்பு “வங்கிகளெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலாட்படை” என்ற பட்டம். ரோஜனோ ரோஜன சோபனோ சோபன கல்யாண முஹூர்த்தஹ……

        • //வங்கி கணக்கு துவக்கியதில் என்னென்ன சிரமங்கள் இருந்தன தெரிந்து கொள்ள போதெம்கின் குறிப்பிட்டுள்ள பத்திரிகை காரர்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?//

          அந்த நியூஸ் ரிப்போர்ட்டின் மையப் பிரச்சினையான ‘வங்கிகளால் முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவது’ குறித்து இந்து நாளிதழ் சில விசாரணைகளை செய்திருக்கிறது. ஒழுங்காக படித்துவிட்டு வாருங்கள் என்று சொன்னால் அதற்கான நாணயம் உங்களுக்கு இருக்கவா போகிறது?

          வாசகர்களுக்காக லிங்க் கீழே.
          http://www.thehindu.com/opinion/op-ed/article540507.ece

          ” The manager of the branch informally told him (அலி அர்ஷத்) that his passport showed a Patna address and the bank did not accept rent agreement as proof of residence. The Hindu checked the website of the bank and found that the bank did accept house rent agreement as proof of residence. A call placed to the bank confirmed that a passport (proof of identity) and a rent agreement (proof of residence) were enough to start a bank account.”

          “To start with, banks confirmed the existence of “red zones” where they offered minimal services. Says Abusaleh Shariff, who was member-secretary with the committee: “We did not use the term discrimination in the report but we did find banks to be unacceptably insensitive. They accepted that they don’t like to provide services in the red zones. Unfortunately, most of the areas where Muslims live fall in the red zones.”

          //ஆதில் ஹஸன் என்பவர் 25 வயதே நிரம்பிய இளைஞர். பீகார் சுன்னி வக்ஃப் போர்ட் தலைவரின் மகன்…… இவரே கைக்காசைப் போட்டு இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? SIMI க்கு ஆள் சேர்க்கிறாரா?//

          அதில் ஹசன் – 25 வயதேயான இளைஞர், சுன்னி வக்ப் போர்ட் தலைவரின் மகன். எனவே சுன்னிக்கு ஆள் சேர்க்கிற மததீவிரவாதி என்கிறீர்கள். என்னே ஒரு தெளிவான ஆய்வு. முன்முடிவுக்களுக்கெல்லாம் முந்தைய முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பவரா வினவை விஷமம் விதிப்பதாகக் கூறுவது?

          அதில் ஹசனின் தந்தையான அபு ஹசன் பீகாரின் BPSC தேர்வுகளை எழுதி அரசாங்கப் பதவிக்கு வந்த அதிகாரி. சுன்னி வக்ப் போர்டின் CEO பதவி என்பது பிகார் அரசாங்கத்தின் Additional District Magistrate ரேங்க். அவரது மகனான ஆதில் ஒரு படித்த, அரசாங்கப் பணியாளரின் மகன், அவ்வளவே. விட்டால், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரை அல்-கைதா தீவிரவாதி என்று சொல்வீர்கள் போல…
          உங்க உன்மத்தத்தை நெனச்சு கண்ண கட்டறது போங்கோ….

          ஆதில் ஹசனின் அரசியலோ நேர்மையோ பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர் முஸ்லீம் என்பதனாலேயே அன்றி வேறென்ன காரணத்தைக் கொண்டு அவரை ஒரு இஸ்லாமிய தீவிரவாதியாக சித்தரிக்க முயன்றீர்கள் என்பதை இங்கே நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும், நேர்மை நாணயம் இருந்தால். இந்த யோசனையற்ற முன்முடிவைத் (prejudice ) தான் இஸ்லாமோஃபோபியா என்கிறது கட்டுரை.

          ஆனால் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க முயன்ற நீங்களே, மததுவேசத்துக்கு உதாரணமாய் அம்பலமாகி விட்டது தற்செயல் தான்.

        • //மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது வினவுக்கும் பு.ஜ வுக்கும் புதியதல்ல. சிறுபான்மையினர் ஸ்காலர்ஷிப், முஸ்லிம்களின் வங்கி கணக்கு, லோன் பிரச்சினைகள் RED ZONE, என்று அழகாக ஜடை பின்னி, பொட்டு வைப்பதில் வினவிற்கு நிகர் வினவேதான்.//

          வங்கிகளில் RED ZONE பிரிவினைகள் இருக்கிறதென்பதை மத்திய அரசும் ஒத்துக்கொண்டு வங்கிகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. சிறுபான்மை நலத்துறையின் செயலர் மெஹ்ரோத்ராவும் அதை ஒத்துக்கொண்டு ஆவன செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அத்தனைப் நாளிதழ்களிலும் வெளியான இந்தச் செய்தியை ஏதோ வினவே தயார்செய்ததாகக் கூறுவதில் உள்ள விஷமம் என்னவோ?

          நிற்க… போன பின்னூட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டோரின் எண்ணிக்கை புள்ளிவிவரங்களை எல்லாம் கொடுத்த நீங்கள் பீகார் பற்றிய விவரங்களையும் இங்கே வெளியிட்டிருக்கலாமே? ஏன் தயக்கம்? அதற்கும் காரணம் உண்டு.

          ப்ரீ மெட்ரிக் உதவித்தொகைகளுக்கான அரசின் இலக்கு 1,50 ,000 , சாங்க்ஷன் ஆனது வெறும் 40 ,௦௦௦
          http://minorityaffairs.gov.in/newsite/schemes/prematric/Distribution1011.pdf

          போஸ்ட் மெட்ரிக்கில் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
          http://minorityaffairs.gov.in/newsite/schemes/postmatric/Distribution1011.pdf

        • //சில முஸ்லிம் மாணவர்களுக்கு கணக்கு துவங்குவது வங்கிகளால் மறுக்கப்பட்டிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் நன்றாக படிக்கும் மாணவன் ஒருவன், அவன் எந்த சமுதாயத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், உதவி என்று கேட்டு வந்தால் அதை செய்வதற்கு பல கோடி இதயங்கள் இன்னும் இந்தியாவில் திறந்துதான் இருக்கிறது//

          அதாவது காந்தி சொன்னது போல… தாழ்த்தப்பட்டோர் போராடி நீதி கேட்டால், நிலம் கேட்டால் சண்ட வரும் . எனவே சாதி இந்துக்கள் அவர்களாகவே கொடுப்பார்கள், கொடுத்ததை வாங்கிட்டு மூடிட்டு போகணும். நல்லா நியாயம் பெசுறீங்கப்பா .

  18. இஸ்லாமியர்களில் பலர் ஒழுங்காக பணம் திருப்பி செலுத்துவதில்லை. அவர்களிடம் வசூலிப்பது பெரும் கஷ்டமாக இருப்பதால், எங்கள் ஊர் வங்கிகளிலும் இஸ்லாமியர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. ஒரு சிலர் இவ்வாறு செய்தால் பரவாயில்லை. பலர் இப்படி இருக்கிறார்கள். ஐந்து முறை தொழுபவர்களிடம் நீதி, நேர்மை, உண்மை, நாணயம், யோக்கியம் என்கிற ஐந்து குணங்கள் இல்லை. அதனால் தான் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. இது தப்பில்லை. இவர்களுக்கு வாடகைக்கு கூட யாரும் வீடு கொடுப்பதில்லை. உண்மையை எழுதினேன். அவர்களை குறை சொல்லவில்லை.

    • இந்தியாவிலேயே வங்கிகளுக்கு பட்டை நாமம் போட்டதில் போட்டியின்றி முன்னணியில் இருப்பவர்கள் முதலாளிகள்தான். பல கோடிகளை விழுங்கிவிட்டனர். ஆனால், அவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வங்கிகள் பணம் கொடுக்கின்றனவே என்ன காரணம்?

      முஸ்லீம்கள்தான் வாங்கிய கடனைச் சரியாகக் கட்டுவதில்லை என்றால் அது கடன் வாங்குபவருக்குத்தானே? கல்வி உதவித் தொகை என்பது சேமிப்புக் கணக்கு தொடங்குவதுதானே? அதனை ஏன் வங்கிகள் மறுத்துள்ளன?

      என் வங்கியில் நீ பணம் போடக் கூடாது என்று முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டதற்கு நீங்கள் சொல்லும் காரணம் பொருந்தவில்லையே தில்லு துரை? தலித்துக்களுக்கும் கூட கிட்டத்தட்ட இதே நிலைதான், அவர்களுக்கும் வீடு வாடகைக்கு விடப்படுவதில்லை. அதனால்தான் கட்டுரையின் கடசி வரிகள் சொல்கின்றன:

      //முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.//

      • அசுரன் அவர்களே! இஸ்லாமில் வட்டி வாங்குவதும், வட்டி கொடுப்பதும் குரான் படி ஹராம். வங்கிக்கணக்கு தொடங்கினால் அந்த சேமிப்பு பணத்துக்கு வட்டியும் கொடுப்பார்கள். அது அவர்களின் மத கோட்ப்பாடுக்கு எதிரானது. அது அல்லா குத்தம். வங்கி நடைமுறைப்படி வட்டி கொடுக்காமலும் முடியாது. சிலர் வட்டி வேண்டும் என்று சொல்வார்கள். சிலர் வட்டி வேண்டாம் என்று சொல்வார்கள். பிறகு அவர்கள் பிரிவுக்குள் அடித்துக்கொள்வார்கள். போராடுவார்கள். இது எல்லாம் வங்கிக்கு தேவையா? அதனால் தான் மறுத்திருக்கலாம். நடைமுறைக்கு இயலாத ஒரு பழைய மார்க்கத்தை தொங்கிபிடிப்பவர்களிடம் எது சொன்னாலும் புரியாது. அவர்கள் எதார்த்த வாழ்க்கையில் 1400 வருடம் பின்தங்கி உள்ளார்கள். அதனால் இந்த மாதிரி பிரச்சினை வரும் போது வங்கி சும்மா இருந்து விடுகிறது. அதனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவரவர் பிரச்சினைக்கு அவரவரே காரணம். அடுத்தவன் அல்ல.

        • இந்து தர்ம சாஸ்திரத்தில் பார்ப்பனன் உக்காந்த இடத்தில ஒரு சூத்திரன் உக்காந்தா அவன் பிட்டத்தை வெட்டனும். இன்னைக்கு பேங்க் வேலைக்கு வர்ற சூத்திரன் கிட்ட, ‘நீ இந்துவா? அப்படின்னா பிட்டம் பத்திரம்’ -ன்னு சொல்லுவீங்களா?

          கிறிஸ்துவ மதத்தில் விவாரத்து என்பதே கூடாது. அவர்கள் செய்வதில்லையா?

          ஒவ்வொரு மதத்துக்கும் அர்த்தமற்ற கடுங்கோட்பாடுகள் உண்டு. அதை உடைத்துக்கொண்டு தான் வந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் வங்கிக் கணக்கு தொடங்குவதில்லை என்பது ஒரு பொய்யான நம்பிக்கை.

          http://www.hindu.com/2010/07/30/stories/2010073054531100.htm

          “The committee was also able to bust the myth that Muslims were against banking. Muslims held a 12 per cent share in PSA bank accounts which was rather low considering the high concentration of Muslims in socially and economically deprived sections. Nonetheless, as Mr. Shariff points out, the figure established that given a chance Muslims opened bank accounts.”

          இங்கே பிரச்சனை என்னவெனில், ஒரு முஸ்லிம் தானாக முன்வது வங்கிகணக்கு தொடங்க முயலும்போது அதை வங்கி மறுப்பதன் காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு ஏன் லோன் கிடைப்பதில்லை? குறிப்பாக பட்னா, ஒக்லா போன்ற பகுதிகளை அதிகார்வபூர்வம்ற REDZONE களாக பகுத்துவைத்திருப்பது ஏன்?

          //அவர்கள் எதார்த்த வாழ்க்கையில் 1400 வருடம் பின்தங்கி உள்ளார்கள்.//

          சமீபத்திய நிகழ்வுகள், இந்த அரசும், நீதித்துறையும் 17 லட்சம் ஆண்டுகள் பின்னோக்கி போனதையல்லவா நிரூபிக்கின்றன!!

        • //சிலர் வட்டி வேண்டும் என்று சொல்வார்கள். சிலர் வட்டி வேண்டாம் என்று சொல்வார்கள். பிறகு அவர்கள் பிரிவுக்குள் அடித்துக்கொள்வார்கள். போராடுவார்கள். இது எல்லாம் வங்கிக்கு தேவையா? அதனால் தான் மறுத்திருக்கலாம்.//

          அந்தணனும், சூத்திரனும் அருகருகே அமர்ந்தால் ஆகாது என்பான் ஒருவன்; ஆகும் என்பான் இன்னொருவன். அடித்துக்கொள்வார்கள்; எதற்கு வம்பு என்று எல்லா கல்வி நிலையங்களையும் மூடிவிடலாம் என்று ஒரு ‘நல்ல’ ஐடியாவை நீங்கள் ஏன் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தக்கூடாது?

        • //இந்து தர்ம சாஸ்திரத்தில் பார்ப்பனன் உக்காந்த இடத்தில ஒரு சூத்திரன் உக்காந்தா அவன் பிட்டத்தை வெட்டனும்.//
          ப்ராமணாளுக்கு வைஷ்யாள் பாக்கிற பாங்க் வேலை பாக்கலாமோ! தர்மம் கெட்டிடாதோ.. பாப்பான், தொழிலால் பனியா ஆகலாம். சூத்திரனாகலாம். ஆனா அதில் மத்தவா நுழைஞ்சால் குடுமி விடைச்சுக்கும்..இதுவான்னோ ப்ராமணாள் தர்மம்!!

        • \\இஸ்லாமில் வட்டி வாங்குவதும், வட்டி கொடுப்பதும் குரான் படி ஹராம். வங்கிக்கணக்கு தொடங்கினால் அந்த சேமிப்பு பணத்துக்கு வட்டியும் கொடுப்பார்கள். அது அவர்களின் மத கோட்ப்பாடுக்கு எதிரானது. அது அல்லா குத்தம். வங்கி நடைமுறைப்படி வட்டி கொடுக்காமலும் முடியாது. சிலர் வட்டி வேண்டும் என்று சொல்வார்கள். சிலர் வட்டி வேண்டாம் என்று சொல்வார்கள். பிறகு அவர்கள் பிரிவுக்குள் அடித்துக்கொள்வார்கள். போராடுவார்கள். இது எல்லாம் வங்கிக்கு தேவையா? அதனால் தான் மறுத்திருக்கலாம்.//

          வங்கி கணக்கு துவங்க வருபவர்கள் வங்கி செயல்பாடுகள்,வங்கி நடைமுறைகள். வங்கியின் விதிமுறைகள் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் கணக்கு துவங்க அனுமதி தரப்படுமா.

          இந்து மத சாத்திரங்களின்படி பார்ப்பனர்கள் கடல் கடந்து பயணம் செய்யக்கூடாது. அந்த விதியை காட்டி பார்ப்பன சமூகத்தினருக்கு கடவுச் சீட்டு மறுக்கப்பட்டால் அதையும் சரி என்பீர்களா.

    • HELLO haran

      A person has asked something about your religion but you reply something about hinudism. Who cares? He may be a atheist like me or any other religion (shik, buddist, jain, christian) too.

      Now if any muslim is starting a bank and giving loan without interest and no partiality to all religons/atheists, then I will get some 30 laks to buy a house. I will repay it 3000/month in 84 years (approx). Do you think it is practical? The concept of “interest is sin” is itself wrong. It is injustice. I will explain why.

      If I give you 100 rupees today as loan and take no interest, then after 5 years you repay me 100 rupees. If that is the case, can I buy the same things I can buy today for 100 rupees, five years in future?

  19. ஜார்ஜ் புஷ் அவர்களுக்கு,
    என் மத அடையாளத்தை எப்போதுமே அப்பட்டமாக வெளிப்படுத்துபவன் நான். அதற்காக என்றுமே தயங்கியதில்லை. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது சில கல்லூரி மாணவர்கள் என் மத அடையாளத்தை பற்றி கிண்டல் செய்ததை தாங்க முடியாமல் அவர்களுடன் சண்டை போட்டேன். அவர்கள் என்னை தாக்கியதில் காயம் அடைந்தேன். அன்று இரவு முழுக்க தூக்கமில்லாமல் பொருமினேன். அவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென்று துடித்தேன். அவர்கள் மனதில் இருந்தது இந்து பாசிசம் தான் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் மனக் காயங்கள் ஆறிய பின் அந்த சம்பவத்தை மறந்தேனே ஒழிய, அந்த காரணத்தை மறக்க வில்லை.
    ஆனால் நான் இன்று ஓரளவு பக்குவம் அடைந்த பின் புரிந்து கொண்டதென்ன வெனில் … அந்த மாணவர்கள் என்னுடைய மத அடையாளத்தை மட்டுமல்ல எந்த மத அடையாளத்தையுமே செய்யக் கூடியவர்கள் தான். அந்த சம்பத்திற்கு அவர்கள் எந்த நீண்ட செயல் திட்டமும் வைத்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களில் சிலர் என் மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
    ஆனால் நான் அந்த முடிவுக்கு வந்து சேர்ந்ததற்கான் காரணம் என்னவாக இருக்கும் என்று இன்று என்னால் யூகிக்க முடிகிறது. இடதுசாரி பத்திரிக்கைகள் மூலமாக எனக்குள் உருவாகி இருந்த முன்முடிவுகள் தான்.
    அந்த மாணவர்களை இன்று என்னால் மன்னிக்க முடிகிறது.. இதுவே என் மார்கம் எனக்கு அளித்த் கொடையாக கருதுகிறேன்.
    முக்கியமான விஷயம் .. அந்த மாணவர்களுக்கு பின் என் மத அடையாளத்தை எந்தவித விசாரணையும்மின்றி நிராகரித்து கிண்டல் செய்தவர் நீங்கள் மட்டுமே. என் மன பக்குவத்தால் உங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என் மார்கத்தின் வழியாக… நன்றி

    • nadheem!!! மதத்திற்கு எதற்கு அடையாளம். மீசைல்லாத தாடியும், குனிகுல்லாவும் வைக்கவேண்டும் என்று குரானில் சொல்லப்பட்டுள்ளதா? மதத்தில் சொல்லப்பட்டுள்ளதை மட்டும் பின்பற்றுங்கள். மத அடையாளங்களை அல்ல. மார்க்கம் என்று சொல்லி மதத்தில் இல்லாத அனைத்தையும் கடைப்பிடிக்கிறீர்கள். வட்டி வாங்காமல் ஒரு இஸ்லாம் வங்கி உலகில் உண்டா? குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் வட்டி வாங்காமல், பணம் கொடுக்கும் ஒரு வங்கியை உருவாக்கலாமே!! இப்படி எந்த ஒரு விஷயத்தையும் முஸ்லீம்கள் மதப்படி பின்பற்றவில்லை. வெறும் வெற்று அடையாளங்களை மட்டும் செய்கிறார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. மத அடையாளங்களை வைப்பது வேறு. மதப்படி வாழ்வது என்பது வேறு. நீங்கள் எந்த ரகமோ????

      • வட்டி வாங்காத ஒரு இஸ்லாமிய வாங்கியாவது உண்டா? அய்யா டில்லி துறை இந்தியாவில் கேரளா ,ஏன் தமிழ் நாட்டில் கூட வந்து விட்டது .உங்கள் குதிரை பார்வையை சானாத்தை கழட்டி விட்டு பார்க்கவும்

        • இஸ்லாம் வங்கிகளில் வட்டி இல்லாமல் ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கித்தர முடியுமா? நான் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாம் வங்கிகளில் கேட்டு விட்டேன். நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். ஒரு நாள் இஸ்லாம் வங்கிகளில் போய் தெரிந்து எழுதவும். அதுவரை நான் காத்திருக்கிறேன். இந்த வட்டி விஷயத்தில் அல்லாவுக்கே, இவர்கள் புதிய குரானை கொடுக்கிறார்கள்.

    • நதீம்,
      குனூத்துன்னா என்னான்னு தெரியுமா? எங்கே சொல்லுங்க பார்ப்போம்!

  20. The ETA Star groups is a muslim insurance company which is now involved in “kaliangar kapeedu thittam” They show no partiality in giving money to any religions. I apriciate their effort. These fanatics should learn lesson from ETA Star groups.

    But I have a doubt. If ETA group is strictly against interest (as taught by islam) is not providing interest for the money government invested?

    If it gives interest, then it is against islam and why vinavu and muslims are silent about it? Why don’t you conduct a “mutrugai porattam” or “unna viratham” to oppose ETA star groups?

    • ங்கொய்யால..அரசு மருத்துவமனைக்கெல்லாம் ஆப்படிச்சிட்டு ஸ்டார் ஹெல்த்துக்கு ஊர்ப்பணத்தை சூறையாடுது அரசுன்னு அதை எதிர்ப்பாங்களா? ஸ்டார் குரூப் தொப்பிமாட்டிருக்கானா, உள்ளே நூல் போட்டிருக்கானான்னு பாப்பாங்களா? கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பத்தி வினவுல வந்ததைப் படிச்சுப்பார்க்கவும் https://www.vinavu.com/2009/12/09/health-insurance/

  21. Muslim’s have their own civil laws. This complicates if you go and buy or sell a muslim property. Its more than they alienating themselves, than being alienated. can you go and read about the muslim women who fighting for the rights in the religion. Hindus constantly fear to help them, as it complicates…. into religious… will send you the appropriate link

  22. dillu durai நதீமை ஆடைகள் அவுத்து காட்ட சொல்வதற்கு ஒப்பானது.. உங்கள் பின்னூட்டம்

  23. கட்டுரையின் சாரத்தை விடுத்து ”வீண் வாதம்“ செய்யும் வேலையைத்தான் சில பின்னூட்டக்காரர்கள் செய்து வருகிறார்கள். சமூகப் பொறுப்பற்ற முறையில் அரட்டை மடமாக இணையத்தை மாற்றும் முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது.

    எல்லாச் சாதியிலும் மதத்திலும் பணக்காரர்களும் ஏழைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதிக அளவிலான ஏழைகள் தலித்துகளாகவும் இஸ்லாமியர்களாகவும் இருப்பதுதானே உண்மை. ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்று சொல்வார்களே அது உண்மைதான் போலும். ஏழைகளாய் இருப்பவாகளுக்கு வங்கிகளில் என்ன மறியாதை தரப்படுகிறது என்கிற உண்மை தெரியாமல் சிலர் இங்கே பிதற்றித் திரிகிறார்கள்.

    வங்கித் தலைமைப் பதவிகளில் அதிக அளவில் இந்து உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சாதிய மதக் கண்ணோட்டத்திலிருந்தே வங்கிக் கடன் விவகாரத்தில் நடந்து கொள்கிறார்கள். இது தான் எதார்த்தம்.

    இந்தப் புரிதலிலிருந்து இந்தக் கட்டுரையை பரிசீலிக்கும் போது அரசு வங்கிகள் முஸ்லீம் விரோத வங்கிகளே. தலித் விரோத வங்கிகளே. ஏழை விரோத வங்கிகளே.

    ஊரான்.

    • //எல்லாச் சாதியிலும் மதத்திலும் பணக்காரர்களும் ஏழைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

      வங்கிகள் காட்டும் பாரபட்சத்திற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் உள்ள எல்லாவித பாரபட்சத்திற்கும் அடிப்படை பொருளாதாரம்தான். ஒருவன் பணக்காரனாக இருக்கும் பட்சத்தில் அவனது ஜாதியோ மதமோ எதற்கும் தடையாக இருப்பதில்லை. எனவே உலகில் இரண்டு வர்க்கம் தான், ஏழை-பணக்காரன். முன்னேறிய நாடுகளில் இந்த இடைவெளி குறைவாக இருப்பதால் சமத்துவம் பெருமளவில் நிலவுகிறது. இதைஒவர் simplification என்று வேண்டுமானால் நினைத்துக்கொள்ளுங்கள். ஓட்டு வங்கி அரசியல் கட்சிகள் தங்கள் பிழைப்புக்காக ஜாதி, மற்றும் மதத்துவேஷம் என்ற நெருப்பு அணைந்துவிடாமல் அவ்வப்பொழுது விசிறி விட்டுக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற கட்டுரைகளும் அதற்கு துணை செய்வது போல, பெரும்பான்மை இனமான இந்துக்கள் சிறுபான்மை இனமான இஸ்லாமியர்களை நசுக்குகிறார்கள் என்ற தொனியில் பிரசாரம் செய்கின்றன. ஜனத்தொகையில் 50% வறுமைக் கோட்டுக்கு கீழே கிடக்கும் பொழுது வறுமை ஜாதி, மதம், மொழி பார்க்காமல் தாக்குகிறது என்பதுதான் உண்மை. இந்தப் புரிதலிலிருந்து இந்தக் கட்டுரையை பரிசீலித்து பாருங்கள் ஏழ்மை விரோதம் தான் தெரியும், மதவிரோதமோ, ஜாதிவிரோதமோ தெரியாது.

      //சமூகப் பொறுப்பற்ற முறையில் அரட்டை மடமாக இணையத்தை மாற்றும் முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது//

      அவ்வாறு சில பின்னூட்டங்கள் வந்தாலும் பல சிந்தனையை தூண்டும் விவாதங்களும் நடக்கத்தான் செய்கிறது. அதற்கான் ஒரு தளத்தை உருவாக்கி தந்திருப்பதற்காக வினவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். மேலும் தனிநபர் தாக்குதல்களை மட்டுறுத்துவதன் மூலம் மாற்றுக்கருத்து கொண்டவர்களை வசவின் மூலம் சிலர் துரத்தியடிக்காமல் தடுப்பதையும் பாராட்டத்தான் வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க