privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!

ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!

-

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஒன்றை போட வைத்திருக்கிறார்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள். ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல. அதை ஒட்டி பு.ஜ.தொ.மு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக தொழிலாளர்களிடம் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தை இங்கே வெளியிடுகிறோம்

– வினவு


ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி! பொதுக்கூட்டம்!!

அன்பார்ந்த தொழிலாளர்களே,

ஓசூரில் செயல்படும் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சென்ற மார்ச் மாதம் 33 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் பெறுவதற்கும், சங்கம் வைக்க அங்கீகாரம் பெறுவதற்கும் நாங்கள் மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இன்று பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் ரூ. 11000 நேரடி ஊதிய உயர்வு பெற்றுத் தந்துள்ளோம். மேலும், மூன்று வகைக் காப்பீடுகள் மற்றும் கிப்ட் என்ற வகையில் ஆண்டு தோறும் ரூபாய் 5000, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் 2400 மதிப்புள்ள ஜெர்கின், நல்லெண்ணத் தொகை என்ற வகையில் ரூபாய் 5500 மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளோம். இது ஒரு மாபெறும் வெற்றி! ஓசூரில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களும், “ஒசூர் வரலாற்றிலேயே இந்த ஒப்பந்தம் மாபெறும் சாதனை, இப்படி ஒரு ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றிப் பார்த்ததில்லை. தொழிலாளி என்ற வகையில் பெருமையாக இருக்கிறது.” எனப் பாராட்டுகிறார்கள், வியக்கிறார்கள்!

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வரும் எங்களுக்கு ஒரு பன்னாட்டுக் கம்பெனி நிர்வாகத்தைப் பணிய வைத்தது என்ற வகையில் இது மாபெரும் வெற்றியே!  அதாவது பணி நிரந்தரத்திற்காக கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்க்ளின் வெற்றி ஓசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு விழுந்த முதல் அடி என்றால், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் வெற்றி என்பது அதன் அடுத்த படி!

கமாஸ் வெக்ட்ராவில் இதற்கு முன்பு இரு முறை சங்கம் கட்ட முயன்று தொழிலாளர் தலைமையில் இருந்தவர்களின் துரோகத்தால் கலைந்து விட்டது. இதனால், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் கட்டுவதிலேயே நம்பிக்கையின்றி இருந்தனர். எமது தோழர்களின் கடுமையான முயற்சியால் மட்டுமே தொழிற்சங்கம் கட்டப்பட்டது. தொழிற்சங்கம் கட்டியது முதல் இன்று வரை நிர்வாகத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளோம். பணி நிரந்தரம் செய்வதற்காக நாங்கள் சட்டத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை. அரசையும், ஆலை நிர்வாகத்தையும் நிர்பந்திக்கும் வண்ணம் பல போராட்டங்களை நடத்தினோம். எங்களது முதல் கட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றோம்.

அடுத்து, ஊதிய உயர்வு ஒப்பந்தம், நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தவுடனேயே நிர்வாகம் ஒப்பந்தத்தை எளிதாக முடித்துவிடவில்லை. “2500 ரூயாய்தான் ஊதிய உயர்வு தரமுடியும், வேணும்ணா நீங்க ஸ்ட்ரைக் பண்ணிக்கங்க.” என்று அடாவடித்தன் செய்தது நிர்வாகம். தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. தினமும் ஒரு காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிப் போட்டது. இவற்றை எதிர்கொண்டு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைமையின் வழி காட்டுதலின்படி செயல்பட்டோம். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஐந்து மாதத்திலேயே பேசி முடித்தோம். நிர்வாகத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து வெற்றி பெற்றோம்!

நிரந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிப்பதோடு நாங்கள் நின்று கொள்ளவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனசு வழங்கக் கோரி நிர்வாகத்திடம் போராடி வருகிறோம். தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ.4500 லிருந்து ரூ.6000 ஆக ஊதியத்தை பேசு முடித்துள்ளோம். ஆலையில் புதிதாக ஆள் எடுப்பு செய்வதாக இருந்தால் இவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை பேசி முடித்துள்ளோம்.

__________________________________________________

“நக்சல்பாரிகள் என்றால் தீவிரவாதிகள்; குண்டு வைப்பவர்கள்; அவர்களுடன் சேர்ந்தால் நாளைக்கு உங்களுக்கு நல்லதல்ல; இப்பப் பிரச்சினை இல்லைன்னாலும் என்னைக்கும் பிரச்சினைதான்” என்று கமாஸ் தொழிலாளர்களுக்கு உபதேசிக்காதவர்கள் இல்லை. உண்மையில் யாரை தீவிரவாதிகள், யாருடன் சேர்ந்தால் வாழ்க்கை பறிபோகும் என்றெல்லாம் பேசினார்களோ, அந்த நக்சல்பாரிகளாகிய எங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ளதால்தான் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களின் வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்பட்டது. நிரந்தர வேலை, எல்லோரும் மெச்சும்படியான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இதுதான் உண்மை!

நக்சல்பாரிகளாகிய நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். நாங்கள் முதலாளிகளுக்கு அழிவு சக்தி! உழைக்கும் மக்களுக்கு ஆக்க சக்தி!  அதனால்தான் முதலாளிகள் எங்கள் பெயரை கேட்டவுடனேயே ஓங்கிக் கூச்சலிடுகிறார்கள்.

உற்பத்தியை சீர்குலைப்பவர்கள் நக்சலைட்டுகள் என்று முதலாளிகள் சொல்கிறார்கள். உற்பத்தியை சீர்குலைப்பதல்ல, எங்களது நோக்கம்.முதலாளித்துவ உற்பத்தி தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளுகிறது என்பதைதான் எதிர்க்கிறோம்! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளால் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்படுவதையும் விவசாயம் அழிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம். மக்கள் அனைவருக்கும் இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் பொது என்பதே எங்கள் கொள்கை. இதனால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெறவேண்டித்தான் போராடுகிறோம்.

நாங்கள் எப்போதும் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்வதில்லை. நாங்கள் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக செயல்படுபவர்கள்.“அட்ஜெஸ்மெண்ட் இல்லாம தொழிற்சங்கத்தை நடத்த முடியாது” என்று எங்களுக்கு பிழைப்புவாதத் தலைவர்கள் உபதேசிக்கிறார்கள்.ஆனால்முதலாளிகளுடன்சமரசம்செய்துகொள்வது தொழிலாளர்களுக்கு துரோகத்தில்தான் முடியும் என்பது கண்முன்னே நாம் காணும் அனுபவம்!

“எப்பப்பார்த்தாலும் போராட்டம்  பொதுக்கூட்டம்னு கூப்பிட்டுகிட்டே இருப்பாங்க!” என்று எங்களுக்கு எதிராக எங்கள் சங்கத்தில் இணைந்தவர்களிடம் பேசி தீர்த்தார்கள். சங்கத்தைவிட்டு வெளியே வரச்சொல்லி அழைத்தும் பார்த்தார்கள். இவ்வாறு பேசுபவர்கள் வேறுயாரும் அல்ல.முதலாளிகள் பரப்பும் கலாச்சார சீரழிவுகளையே வாழ்க்கையாகக்கொண்ட சுயநலவாதிகள், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ ஊடகங்கள்.

ஆம்,நாங்கள் அடிக்கடி போராட்டம், பொதுக்கூட்டம் நடத்துபவர்கள்தான். யாருக்காக? இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால் நமது நாடு மீண்டும் அடிமையாக்கப்படுகிறதே அதற்கு எதிராக! தினம்தோரும் என்னற்ற தொழிலாளர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு பலியாகிறார்களே அதற்கு எதிராக! விவசாயிகளின் வாழ்வு பறிக்கப்படுகிறதே அதற்கு எதிராக! நீதிமன்றம்,சட்டமன்றம், போலீசு என்ற பெயரில் உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே அதற்கு  எதிராக!  இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் படைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு விடியவேண்டும் என்பதற்காகத்தான் போராடுகிறோம்.

எங்களது அமைப்பின் தலைவர்கள் புகழையும் பணத்தாசையையும் விரும்பாதவர்கள்! சுகபோகத்தை விரும்பாதவர்கள்; எளிமையானவர்கள்; கட்டுப்பாடானர்வர்கள் எங்களை பாராட்டி விளம்பரங்களை நாங்களே செய்துகொள்வதுமில்லை! பிறர் எங்களுக்கு தனி நபர் விளம்பரங்கள் செய்தால் அதனை நாங்கள் அனுமதிப்பதுமில்லை! தலைமை முதல் கீழே உள்ள அணிகள் வரை துதி பாடும் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். ஏனென்றால், நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள். கம்யூனிசம் எங்களது கொள்கை!

நாங்கள் மக்களை நேசிப்பவர்கள்; மக்கள் மட்டும்தான் வரலாற்றைப் படைக்கும் மாபெரும் உந்து சக்தி என்பதை நம்புகிறவர்கள்; உழைக்கும் மக்களின் ஒற்றுமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; எங்களுடைய எல்லாப்  போராட்டங்களையும் நாங்கள் மக்களிடம் கொண்டு செல்பவர்கள். அதனால்தான் எங்களின் போராட்டம் வெற்றியடைகிறது.

நாங்கள் எங்கள் அமைப்புக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டவர்கள். உண்மையான ஜனநாயகத்தை நீங்கள் எங்கள் அமைப்பில் மட்டும்தான் பார்க்க முடியும். அதனால்தான், ஒரு முன்னுதாரணமிக்க ஒப்பந்தத்தை எங்களது அமைப்பின் தலைமையின் கீழ் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களால் சாதிக்க முடிந்தது.

_________________________________________________

நாடு இன்று மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது. அன்னியப் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக் கம்பெனிகளும் நமது நாட்டை ஒட்டச் சுரண்டுகின்றனர். தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற பெயரில் நமது நாட்டின் பொதுச் சொத்து சூறையாடப்படுகிறது. கனிம வளங்கள், காடுகள், கடல் என எல்லாமே முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. விவசாயம், நெசவு, சிறு தொழில்கள், வியாபாரம் மற்றும் வர்த்தகம் என எல்லாமே ஒழிக்கப்பட்டு முதலாளிகளின் நலனிற்கேற்ப மறுவார்பு செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் போராடிப் பெற்ற  உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர் என அரசியல் சாசனத்தில் சொலப்பட்ட எல்லா அடிப்படை உரிமைகளும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சங்கம் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வைத்தால் சங்கம் வைக்க முயற்சிப்பவர்கள் வேலையை விட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆலை மூடல் செய்து ஆட்டம் போடுகிறது முதலாளித்துவம். இதற்கு சட்டமும், நீதியும் சேவை செய்கிறது. அரசோ வாழ்த்தி வரவேற்கிறது.

இன்றுள்ள பிழைப்புவாத தொழிற்சங்க தலைமையோ முதலாளிகளின் வாதத்தையே தொழிலாளர்களுக்கு உப்தேசிக்கிறார்கள். போராட்டம் செய்யக் கூடாது என்று வழி நடத்துகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்று தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த தொழிலாளி வர்க்கத்தை புழுக்களைவிட கேவலமாக நடத்துகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் எதிர் திசையில் போராட வேண்டிய கடமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ளது. தொழிலாளர்கள் ஓரணியில் திரளவேண்டியுள்ளது. அந்த வகையில் போராடும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழிக்கு அனுப்புவோம்!
  • ஓசூரை தொழிலாளர் வர்க்கக் கோட்டையாக்குவோம்!
  • நாட்டின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைகளை மீட்பதற்காகவும் போராடுவோம்!
  • புதிய ஜனநாயகக் குடியரசமைப்போம்!
  • 19-12-2010

    மாலை 3 மணிக்கு

    இரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம்

    தலைமை: தோழர் சங்கர் மாவட்டச் செயலர், கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.30 மணிக்கு

    ராம்நகர் அருகில் பொதுக்கூட்டம்

    தலைமையுரை;

    தோழர்.பரசுராமன்.மாவட்டத்தலைவர்,கிருஷ்னகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.45 மணிக்கு வாழ்த்துரை;

    தோழர்.மாதையன்.செயலர்,ஏடிசி தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜி.விஜயகுமார்,செயலர்,எக்சைடுதொழிலாளர்சங்கம்,ஓசூர்,

    தோழர்.முரளி,துணைத்தலைவர்,பேட்டாதொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.மாதையன், துணைத்தலைவர்,டிடிகே தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.அகஸ்டின்,வெக்ட்ராஅசாத்  கம்பெனி,அத்திப்பள்ளி,கர்நாடகா,

    தோழர்.சம்பங்கி ராமப்பா,தலைவர்,குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜெயராமன்,ஒப்பந்தத் தொழிலாளி,ஓசூர்,

    தோழர்.கண்ணன்,செயலர்,பு.ஜ.தொ.மு கிளை,ஜிடிபி கிரானைட் தொழிலாளர் சங்கம்,சேலம்,

    தோழர்.செல்வராசு,ஓட்டுனர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,

    தோழர்.ம.சி..சுரேஷ்குமார்,மாவட்டச் செயலர்,பு.ஜ.தொ.மு.திருவள்ளூர்,

    தோழர்.ராஜன்,எஸ்.ஆர்.ஐ,பு.ஜ,தொ.மு,கோவை,

    தோழர்.கலை.பு.ஜ.தொ.மு. புதுவை,

    மாலை 6.15 மணிக்கு

    ஏற்புரை:தோழர்.முருகன்.தலைவர்,கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    மாலை 6.30 மணிக்கு சிறப்புரை;

    தோழர்.சுப.தங்கராசு, மாநிலச் செயலர்,பு.ஜ.தொ.மு,தமிழ்நாடு,

    மாலை 7.45 மணிக்குபுரட்சிகர கலைநிகழ்ச்சி

    மையக்கலைக்குழு,மகஇக தமிழ்நாடு,

    மாலை 8.40 மணிக்கு நன்றியுரை;

    தோழர்.முரளி,செயலர்,கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,புஜதொமு,ஓசூர்.

    ______________________________________

    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

    தொடர்புக்கு;செல்-9788011784,ஓசூர்.
    ______________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்

    1. ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி! பொதுக்கூட்டம் !!…

      தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வைத்திருக்கிறார்கள், ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல….

    2. ம்ம்ம்…..கிளப்புங்கள்…….

      எந்திரங்களின் ஓசையை பறையோசை வீழ்த்தட்டும்.

      புரட்சிகர வாழ்த்துக்கள்!!!

    3. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!! https://www.vinavu.com/2010/12/18/hosur-kamaz-ndlf-victory/ […]

    4. • கமாஸ் ஆலைத் தொழிலாளர்களின் வெற்றி!
      ஓசூர் முதலாளித்துவத்திற்கு விழுந்த முதல் அடி!
      • மறுக்கப்பட்ட தொழிற்சங்க உரிமைக்கான அங்கீகாரத்தை நிலைநாட்டினோம்!
      • வரம்பற்ற சுரண்டலுக்கு முடிவுகட்டினோம்!
      • உற்பத்தி போடுவது தொழிலாளர்கள், அதை தீர்மானிப்பதும் தொழிலாளர்களே என்ற நிலையை உருவாக்கினோம்!
      • தனி மனித தலைமையைப் புறக்கணித்தோம்; புரட்சிகர தலைமையின் கீழ் அணிதிரண்டோம்!
      • தொழிற்சங்கம் தொடங்கி ஓராண்டிலே காப்பீடுகள், பல்வேறு நிதி பயன்களுடன் ரூ. 11,000 ஊதிய உயர்வை அடைந்தோம்!
      • பல்வேறு அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தொழிலாளர்களின் சொந்த பலத்தில் நிர்வாகத்தை பணியவைத்து ஊதிய உயர்வை அடைந்தோம்!
      • கமாஸ் ஆலைத் தொழிலாளர்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தோம்!
      • நாங்கள் சட்டத்தை மட்டும் நம்பவில்லை; புரட்சிகர அரசியலின் கீழ் ஓசூர்வாழ் மக்களிடம் சென்றோம்!
      • எங்களின் வெற்றி என்பது ஓசூர் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு முன்னோடி என்பதில் பெருமை கொள்கிறோம்!

    5. உலகமயத்தின் கீழ் தொழிற்சங்கங்களை செயலிழக்கச் செய்வதும், தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுப்பதுமாய் நடந்து வரும் இன்றையச் சூழலில் பு.ஜ.தொ.மு. தலைமையில் ஒரு பன்னாட்டுக் கம்பெனியை தொழிலாளர்கள் பணியவைத்திருக்கிறார்கள் என்றால் இதுவல்லவா உண்மையான தொழிலாளர் இயக்கம்! தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்!

    6. நக்சல்பாரிகளாகிய நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். நாங்கள் முதலாளிகளுக்கு அழிவு சக்தி! உழைக்கும் மக்களுக்கு ஆக்க சக்தி! அதனால்தான் முதலாளிகள் எங்கள் பெயரை கேட்டவுடனேயே ஓங்கிக் கூச்சலிடுகிறார்கள்.

      உற்பத்தியை சீர்குலைப்பவர்கள் நக்சலைட்டுகள் என்று முதலாளிகள் சொல்கிறார்கள். உற்பத்தியை சீர்குலைப்பதல்ல, எங்களது நோக்கம்.முதலாளித்துவ உற்பத்தி தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளுகிறது என்பதைதான் எதிர்க்கிறோம்! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளால் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்படுவதையும் விவசாயம் அழிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம். மக்கள் அனைவருக்கும் இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் பொது என்பதே எங்கள் கொள்கை. இதனால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெறவேண்டித்தான் போராடுகிறோம்.

      ஓரணியில் ஒன்றுபட்டு நின்று போராடி ஜெயித்த அத்தனை தொழிலாளர் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    7. Hi,

      The doctor of ESI Dispenary at Bagalur, Hosur Taluk comes to work only 2 or 3 days a week. Mostly the staff nurses or ANMs give the treatment to the patients. When I inquired, I came to know that she is preparing for Civil Services Exam, thats why she is not regular to work and also her father-in-law is a politician from PMK.

      Could your trade union takes this issue and get justice for the labours and their family who are covered under ESI?

    விவாதியுங்கள்

    உங்கள் மறுமொழியை பதிவு செய்க
    உங்கள் பெயரைப் பதிவு செய்க