privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!

-

வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்.  அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.  ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.

வாச்சாத்தி வன்கொடுமையை அறிந்த பழங்குடி மக்கள் சங்கமும் அதன் அரசியல் தலைமையான சி.பி.எம். கட்சியும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றத்திடம் மன்றாடிய பிறகு, பழங்குடி ஆணைய விசாரணைக்கும் அதன் அறிக்கை அடிப்படையில் நட்டஈட்டுக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் வழிபிறந்தது. சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு 269 சீருடைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, முதலில் கோவை, கிருட்டிணகிரி, பிறகு தருமபுரி அமர்வு நீதிமன்றங்களில் வழக்கு நொண்டியடித்தது. ஜெயலலிதா ஆட்சியின் முட்டுக்கட்டை, கருணாநிதி ஆட்சியின் அக்கறையின்மை காரணமாக 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, கடைசியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் தீர்ப்பு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்து போக, மீதி 85 போலீசார், 125 வனத்துறையினர் 6 வருவாய்த்துறையினர் என 215 பேரும் குற்றவாளிகள் என்றும், பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர்களுள் பாலியல் குற்றவாளிகள் 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் உடனே பிணையில் விடப்பட்டனர். வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகிறது.

வாச்சாத்தி கிராம மக்களும், குறிப்பாக பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், வெளியிலுள்ள அரசியலற்ற படித்த பாமரர்களும் இத்தீர்ப்பை வரவேற்று மனநிறைவு தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால், வாச்சாத்தி வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.  வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் தண்டனைகளும் மீண்டும் வச்சாத்திகள் நடக்காமல் தடுக்கக் கூடியவை அல்லவென்று அறிந்தும் சி.பி.எம். கட்சி மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவிப்பதோடு, நட்டஈடு தொகையைக் கூட்டி கேட்பதோடு அடங்கிக் கொள்வது நியாயமான அரசியலா?

“வாச்சாத்தியில் வன்கொடுமை எதுவும் நடக்கவே இல்லை. நட்டஈடு தொகைக்கு ஆசைப்பட்டு, போலீசார் மீது பாலியல் வன்முறை புகார்களைப் பெண்கள் கூறுகின்றனர்” என்று சொல்லி போலீசு கிரிமினல் குற்றவாளிகளை அன்று பாதுகாத்த ஜெயலலிதா இப்போதும் முதலமைச்சர். வாச்சாத்தி, சின்னாம்பதி போன்ற பல பாசிச அரச பயங்கரவாதக் குற்றங்களைத் தானே அரங்கேற்றிய ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சகபாடிகளாகக் கொண்டிருப்பவர்;  இந்த அரசியல் பாசிசப் பண்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்று அறிந்தும், மாறி மாறி அவருடன்  அணிசேருகின்றனர் போலி கம்யூனிஸ்டுகள்.

வாச்சாத்தி மக்கள் மீது தாக்குதல் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துக் கொண்டார்கள். வாச்சாத்தி குற்றவாளிகள் 19 ஆண்டு காலம் சுதந்திரமாக இருந்ததோடு, மேலும் மேல்முறையீடு என்று தண்டனையின்றித் தப்பித்து வாழ்வார்கள். குற்றமிழைத்துவிட்டு இயல்பாக செத்துப் போனார்கள் 54 பேர். இதையும், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவிக்காமல் 15 ஆண்டுகளாகியும் இழுத்தடிக்கப்படும் சொத்துக் குவிப்பு வழக்கால் பாதிக்கப்படாமல் ஜெயலலிதா பதவி சுகத்தை அனுபவிப்பதையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது. ஜவ்வாது ஏலகிரி மலைப்பகுதியிலும், மாதேசுவர மலையிலும் அரச பயங்கரவாத வெறியாட்டம் போட்ட தேவாரம், விஜயகுமார் போன்ற அதிகாரிகள் விருதுகளும், வெகுமதிகளும் பெற்றதையும் எண்ணிப் பாராமல் இருக்க முடியாது.

போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011 (தலையங்கம்)

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 

  1. வாசாத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 19 வருடங்களாக் தொடர்ந்து பாடுப்பட்டவர்கள், உங்களால் ‘போலிகள்’ என்று இகழப்படும் சி.பி.எம் தோழர்கள் தான். முக்கியமாக மகளிர் அணியினர். உருப்படியாக இந்த விசியத்தில் நீங்க ஒன்னும் செய்யாமல், இப்ப வந்து அவர்களை இழிவாக பேசுவது மிக தவறு.

    நரேந்தர மோடியுடன் ஜெ வின் அதிமுக உறவு கொள்ள முயல்கிறது தான். ஆனால் குஜராத் படுகொலைகள் நடந்த போது, 2002இல் அதே பி.ஜெ.பியுடன் தி.மு.க கூட்டணி. முரசொலி மாறன் அன்று மத்திய அமைச்சர். தி.மு.காவும் அப்ப அன்று partners in this crime தான். அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. ஜெ கூட்டணி வைத்தால் மட்டும் அது ‘பார்பானிய கூட்டணி’ !!

    • அதியமான்,

      இதில் நீங்கள் சொல்ல வரும் நீதி என்ன?

      ஜெயலலிதாவின் பார்ப்பன பாசிசதனத்தை குற்றம் சொல்லவே சொல்லாமல்… கருணாநிதியை மட்டும் வசதிக்கு திட்ட வேண்டுமா?

      2002இல் பாஜக கூட்டு வைத்திருந்த திமுக, மதிமுக, பாமக அனைவரும் குஜராத் இனபடுகொலையின் பங்காளிகளே… ஆனால் ஜெயலலிதா மோடியுடன் சேர்ந்து கொலை முழு மனதோடு இனபடுகொலை செய்பவர்… மோடியும் ஜெயலலிதாவும் ஒன்றே… இந்த கொலைகாரர்களுடன் தேவைபடும் போது பிழைப்புவாதிகள் கூட்டணி வைத்து கொண்டு கொலைகார பங்காளி ஆவார்கள்…

      1992இல் ஜெயலலிதா செருப்பால் அடித்த போது வழக்கு போட்ட சிபிஎம், பின்னர் 1999, 2000 என பல தேர்தல்களில் ஜெயலலிதாவின் காலை நக்கி கொண்டு இருந்தது… அப்போது எல்லாம் வாச்சந்தி படுகொலை பற்றி இந்த போலிகள் மறந்தும் கூட வாய் திறக்க மட்டார்களே?

      பொதுவுடமையை எதிர்க்கும் நீங்கள் இப்போது போலிகளான சிபிஎம் கட்சிக்கு சப்பை கட்டுவதை பார்க்கும் போது… எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது கேட்க தோன்றுகிறது…

      • தமிழ் குரல்,

        வழக்கம் போல நான் சொல்ல வந்த்தை ‘புரிந்து’ கொள்ளாமலேயே, திரிக்கும் வேலையை தொடர்கிறீக. ஜெ வின் செயல்களை ‘நியாயப்படுத்த’ என்றும் முயன்றதில்லை. ஜெ வை மட்டும் திட்டும் பெரியாரியவாதிகள், தி.மு.க மோடி கூட்டணி பற்றி வாயே திறக்காத இரட்டை வேடத்தை தான் சுட்டி காட்டினேன். அன்று 2002இல் அத்தனை நடந்தும், தொடர்ந்து, பி.ஜெ.பி யோடு தி.மு.க 2004 வரை கூட்டணி வைத்திருந்தை பற்றி பேசாமல், தொடர்ந்து பார்பானிய ஜெயலைதாவை ‘மட்டும்’ தான் விமர்சிப்பீக. ஏன் ?

        பொது உடைமை கொள்கையை நான் எதிர்ப்பவன் தான். ஆனால் வாசாத்தி கொடுமைகளுக்காக தொடர்ந்து போராடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாராட்டுவது தான் முறை. பொது உடைமையை எதிர்ப்பதால், மனித உரிமைகளை, லிபரலியத்தை ‘எதிர்பது’ என்று அர்த்தம் ஆகிவிடாது. சமூக விரோதிகளை, பல குண்டர்களை தொடர்ந்து எதிர்த்து ம.க.இ.க தோழர்கள் இடைவிடாது போராடுவதால் தான் அவர்களையும் மதிக்கிறேன். தொடர்ந்து இங்கு உரையாட முற்படுகிறேன். ஆனால் உம்மை போன்ற பண்பாடு மற்றும் அடிப்படை பகுத்தறிவற்ற, எளிமைபடுத்தும் போலி பெரியாரியவாதிகளிடம் வாதட எமக்கு ஒன்றும் இல்லை.

        //பொதுவுடமையை எதிர்க்கும் நீங்கள் இப்போது போலிகளான சிபிஎம் கட்சிக்கு சப்பை கட்டுவதை பார்க்கும் போது… எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது கேட்க தோன்றுகிறது…
        /// இப்படி கீழ்தரமாக பேசும் உங்களிடம் பேசுவது வீண் வேலை. தி.க சீரழிந்ததை விட சிபிஎம் சீரழியவில்லை. ஆனால் நீர் இன்னும் வீரமணியை போற்றும் ’பகுத்தறிவுவாதி’ தானே. என்னமோ உமக்கு மட்டும் தான் ‘பகுத்தறிவு’ பற்றி எல்லாம் தெரியும் என்பது போலவே தொடர்ந்து உமது தொணி. அதை நான் அறவே வெறுக்கிறேன். ஒரு நாள் உம்மிடம் நேரில் பேசுகிறேன். சில விசியங்களை இங்கு விளக்க முடியாது.

        • //* இப்படி கீழ்தரமாக பேசும் உங்களிடம் பேசுவது வீண் வேலை. தி.க சீரழிந்ததை விட சிபிஎம் சீரழியவில்லை. ஆனால் நீர் இன்னும் வீரமணியை போற்றும் ’பகுத்தறிவுவாதி’ தானே. என்னமோ உமக்கு மட்டும் தான் ‘பகுத்தறிவு’ பற்றி எல்லாம் தெரியும் என்பது போலவே தொடர்ந்து உமது தொணி. அதை நான் அறவே வெறுக்கிறேன். ஒரு நாள் உம்மிடம் நேரில் பேசுகிறேன். சில விசியங்களை இங்கு விளக்க முடியாது. *//

          அதியமான்,

          நீங்கள் என்னை தி.க.வில் சேர்த்து விட்டதை பார்த்து சிரித்து… சிரித்து… நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்பதே உண்மை…

          உங்களை போல் அல்லாமல் சிபிஐ, சிபிஎம் போன்ற போலிகளுடன் சேர்ந்த வேலையும் செய்துள்ளேன்… அப்புறம்தான் அவர்கள் போலிகள் என தெரிந்தது விலகி விட்டேன்… நீங்கள் பேப்பரிலும், இணையத்திலும் மட்டுமே முதலாளிதுவம் பேசி இயங்குவதை போல் அல்லாமல்… இளம் வயதிலேயே இரண்டு தேர்தல்களில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு வேலை செய்திருக்கிறேன்…

          முடிந்தால் ஆதரத்தோடு பேசலாமே? நான் எங்காவது திகவையோ, வீரமணியையோ அநியாயமாக ஆதரித்ததை காட்ட முடியுமா? பார்ப்பனீயத்தை எதிர்ப்பதால் மட்டுமே திககாரன் என சொல்லும் உங்களின் பொது புத்தி… பார்ப்பனீயத்தின் மீதான உங்கள் மோகத்தையே காட்டுகிறது…

          சிபிஎம் இன்னும் சீரழியவில்லை என்னும் உங்கள் சான்றிதழ் ஒன்று மட்டுமே போதும்… சிபிஎம் எவ்வளவு கேடு கெட்ட கட்சி என்பதற்கு… முற்றும் முழுதாக முதலாளிதுவத்தை ஆதரிக்கும் நீங்கள் ஒரு பொதுவுடமை கட்சியை பற்றி சான்றிதழ் வழங்குவது… போலிகளை ஊக்குவிக்கும் முதலாளிதுவத்துவ ஆதரவாளரின் செயல்…

          இங்கே இவ்வளவு கேள்வி கேட்கும் முன் இந்த கட்டுரை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கவும்… இந்த கட்டுரையில் கருணாநிதியையும் கழட்டி அடித்திருக்கிறார்கள்… 19 ஆண்டு கால இழுப்பிற்கு காரணம் கருணாநிதியும் ஒரு காரணம் என சொல்லி இருக்கிறார்களே?

          நேரில் பேச வேண்டும் என்றால் எனது மின்னஞ்சல் இருந்தால் தொடர்பு கொள்ளவும்…

          • தமிழ்குரல்,

            //பார்ப்பனீயத்தின் மீதான உங்கள் மோகத்தையே காட்டுகிறது…

            சிபிஎம் இன்னும் சீரழியவில்லை என்னும் உங்கள் சான்றிதழ் ஒன்று மட்டுமே போதும்… ///

            தொடர்ந்து உளர்கிறீக. பார்பனீயத்தின் மீது எனக்கு மோகம் என்றெல்லாம் பேசுவது தான் உமது பகுத்தறிவோ ? அறிவுகெட்டதனமான செயல்.

            சி.பி.எம் இன்னும் சீரழியவில்லை என்று எங்கே சொன்னேன் ? ஒப்பிடளவில், தி.க அளவுக்கு சீரழியவில்லை என்று தான் சொன்னேன். உடனே கண்டபடி ‘அர்த்தப்படுத்துகொள்வது’ தான் உமது ’மேதமை’.

            நீங்க சி.பி.எம் உடன் களத்தில் இறங்கி வேலை செய்த பின் தான் அவர்கள் ‘சீரழிந்துவிட்டனர்’ என்று ‘புரிந்து’ கொண்டீர்கள். எங்களுக்கு அந்த ‘புரிந்தல்’ பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. :)))

            //இந்த கட்டுரையில் கருணாநிதியையும் கழட்டி அடித்திருக்கிறார்கள்///

            ஆனால், 2002இல் மோசி – தி.மு.க உறவை பற்றி யாரும் பேசுவதில்லை. அந்த ‘உறவை’ பற்றி பெருசா அலட்டிக்காமல், ஜெ பி.ஜெ.பி கூட்டணி உருவானால் மட்டும் கடுமையாக சாடுவதை தான் கேட்டேன். அன்று படுகொலைகள் நடந்து போது, தி.மு.க கண்டுக்காமல், தொடர்ந்து பதிவியை பிடித்துக் கொண்டு, கூட்டணியில் கடைசி வரை நீடித்தது. அதை பற்றி இத்தனை ‘அறச்சீற்றம்’ ஏன் இல்லை ?

            சரி, இந்த விசியம் திசை திரும்புகிறது. இறுதியாக ஒன்று : வாசத்தியில் நடந்ததது கொடுமையான மனித உரிமை மீறல்கள். மனித உரிமைகளை பேணுவது தான் மிக மிக மிக முக்கியமாக கருதுகிறேன். எமது ‘புனித பசு’ இது தான். 1948 UN declarations of universal human rights தான் எனது பைபிள். அதில் பல இதர அடிப்படை உரிமைகளில், சொத்துரிமையும் ஒரு உரிமை. பொது உடைமை சித்தாந்தம் அந்த உரிமையை மறுக்கிறது. மேலும் பொது உடைமை சித்தாந்தந்த்தை நடைமுறை செயல்படுத்தும் போது பல அடிப்படை மனித உரிமைகளை மீறாமல் சாத்தியமில்லை. எனவெ தான் பொது உடைமை சித்தாந்தத்தை ‘எதிர்க்கிறேன்’. மனித உரிமைகளை மீறும் எந்த சித்தாந்தத்தையும் எதிர்க்கிறேன். முதலாளித்துவம் என்ற பெயரில் அவை மீறப்பட்டாலும் மிக தவறு தான்.

            முதலாளித்துவத்தை இரு வகை படுத்தலாம். மனித உரிமைகளை மீறும் வகை (காலியானிதிக்க, ஃபாசிச பாணி முதலாளித்துவம்); மனித உரிமைகளின் அடிப்படையில் செயல்படும் சுதந்திர சந்தை பொருளாதார பாணி முதலாளித்துவம். இரண்டாவது வகையை தான் லிபர்டேனேனிசம் என்று சொல்வார்கள். அதை தான் நானும் முன்மொழிகிறேன். மனித உரிமைகளே அனைத்துக்கும் அடிப்படை. லிபரல் ஜனனாயக பாணியில் உள்ள சுதந்திர சந்தை பொருளாதார அமைப்பே எமது ஆதர்சம்.

            • மொதலாளி, ரெண்டு நாளாக முதலாளித்துவத்தின் டவுசரை அவிழ்த்துப் போடும் இரண்டு கட்டுரைகளை சுத்தமாக கண்டு கொள்ளாமல் இங்கே வந்து டீ ஆத்தும் ‘தொழில் இரகசியம்’ என்னாங்கோ…

            • மொதலாளி., இன்னொரு சந்தேகம்..

              எல்லா மனிதரும் சமம் என்று ஒரு நிலை வராமல் எல்லாருக்கும் சமமான மனித உரிமையை எப்படி அமல் படுத்த முடியும்

              அல்லது

              ஏற்றத்தாழ்வான சமூகத்துல அனைவருக்கும் சமமான மனித உரிமையை எப்படி நிலைநாட்டுவது

              அல்லது

              லிபர்டேனோனிய ஜிலேபியை கொஞ்சம் விளக்கி அதுல எப்படி மனசனும் உரிமையும் சமமாக இருக்க முடியும்னு சொல்லுங்க

              • //லிபர்டேனோனிய ஜிலேபியை கொஞ்சம் விளக்கி அதுல எப்படி மனசனும் உரிமையும் சமமாக இருக்க முடியும்னு சொல்லுங்க///

                இதெல்லாம் உமக்கு ‘விளக்க’ முடியாது. அப்படி நான் மெனக்கெட்டாலும், brain washed and closed mindsகளிடம் ‘புரிதல்’ சாத்தியமல்ல. எனவே தான் மிக சில பதிவுகளுக்கே பின்னூட்டம் இடுகிறேன். வேறு தளங்களில், நவராட்டிஸ் மற்றும் வறுமை அளவு பற்றி விவாதங்களில் கலந்துகொள்கிறேன்.

                இஸ்லாமிய அன்பர்கள் ஆவேசத்துடன் கலந்து கொள்ளும் பதிவுகளின் பக்கமே நான் செல்வதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். அவர்களுடன் விவாதிக்கவே முடியாது. waste of time. அதே தான் உங்களை போன்ற ‘தோழர்களுக்கும்’ பொருந்தும். ஓகே.

                • மொதலாளி, பதில் தெர்லேன்னா, தெரியாதுபான்னு உண்மையை சொல்லுங்க, சும்மா எதுக்காக இப்பிடி டகில்பாச்சா சீனெல்லாம்?

                • அந்த பதிவுகளின் பக்கம் முதலாளி அய்யாவ பார்க்க முடியலன்னு இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரே வருத்தம்..
                  போங்க தம்பி… !!! ஹி ஹி ஹி !!!

    • nan kalandukollathathirku varundukiran anal mr. vinavu eithil kalanthukondriyirupar athil ayyam illai. Anal BJP yudan DMK kuttani oru parpaniya udanthai, ithil jayalalithavai niyayappaduthuvathu aniyayam eanenil J vidam sila parpaniyathai advani kadrukkolle veandum

    • இருவரும் எதனடிப்படையில் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. கருணாவிடம் இருப்பது பிழைப்புவாதம். ஜெயாவிடம் இருப்பது சாதிப்பாசம்.

  2. “வாச்சாத்தியில் வன்கொடுமை எதுவும் நடக்கவே இல்லை. நட்டஈடு தொகைக்கு ஆசைப்பட்டு, போலீசார் மீது பாலியல் வன்முறை புகார்களைப் பெண்கள் கூறுகின்றனர்” – முட்டையடி சு.சாமிதான் இது போன்ற பொன் மொழிகளைக் கண்டுபிடித்து வெளியிடுவான். இவனையே ஜெயலலிதா முந்திவிட்டார். பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்களைப் பற்றி ஒரு ‘அம்மாவின்’ வாயிலிருந்து தெறித்து விழுந்த வாசனையான வார்த்தைகள். என்ன ஒரு மனிதாபிமானி? தங்கத் தாரகை வாழ்க!!

  3. \\சி.பி.எம். கட்சியும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றத்திடம் மன்றாடிய பிறகு, பழங்குடி ஆணைய விசாரணைக்கும் அதன் அறிக்கை அடிப்படையில் நட்டஈட்டுக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் வழிபிறந்தது\\

    சி.பி.எம் மின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் முதல் படி…

    \\மீதி 85 போலீசார், 125 வனத்துறையினர் 6 வருவாய்த்துறையினர் என 215 பேரும் குற்றவாளிகள் என்றும், பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர்களுள் பாலியல் குற்றவாளிகள் 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்\\

    சி.பி.எம் மின் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.. பாராட்டுக்கள்…

    \\சி.பி.எம். கட்சி மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவிப்பதோடு, நட்டஈடு தொகையைக் கூட்டி கேட்பதோடு அடங்கிக் கொள்வது நியாயமான அரசியலா\\

    அய்யா இன்னும் வேற என்னையா செய்ய சொல்லுறீங்க… தானும் படுக்க மாட்டீங்க தள்ளியும் படுக்க மாட்டீங்க….????

  4. manithan,

    அப்படியே சி. பீ. எம். கிட்ட சொல்லி நந்திக்ராம் சிங்கூர் வன்கொடுமைகளுக்கும் நீதி வாங்கித் தரச் சொல்லி ரெக்கமன்ட் பண்ணுங்க பாஸ். அப்படி செஞ்சா சி. பீ. எம். பொலிட் பீரோவையே தூக்கி உள்ள போட வேண்டியது தான்.

    வாச்சாத்தியில் போராடிய தோழர்கள் இருக்க வேண்டிய இடம் சி. பீ. எம். அல்ல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க