Wednesday, March 22, 2023
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சமகால அரசியலில் கருப்புப் பணம்!

சமகால அரசியலில் கருப்புப் பணம்!

-

து 2009-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா நேரம்; அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டு நாட்டை அடகு வைக்கும் துரோகத்தனத்துக்கு ஆதரவாக அமர்சிங் போன்ற அதிகாரத் தரகர்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டுகளை வினியோகித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்ட மன்மோகன்சிங் – சோனியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கம் மத்தியிலும். ஈழத்தில் பச்சைத் துரோகம் இழைத்து லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை காவு கொண்ட  சோனியா-சிதம்பரம் + கருணாநிதி-மாறன்கள்-ஸ்டாலின்கள் கூட்டணி தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தன.

‘மக்கள் மத்தியில் இவ்வளவு குமுறலும் கொந்தளிப்பும் இருப்பதால் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை நிலவும், கொள்ளை அடிப்பதற்கான நமது முறை அடுத்து வரும்’ என்று மனப்பால் குடித்தபடி அகில இந்தியா அளவில் ‘ஊழல் எதிர்ப்பு போராளிகளாக’ பாரதீய ஜனதா கட்சியும், தமிழ்நாட்டில் ‘திடீர் ஈழத்தாயாக’ ஜெயலலிதாவும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு களத்தில் குதித்திருந்தார்கள்.

ஆனால், இவர்கள் எதிர்பாராத புரிந்து கொள்ள முடியாத, இன்னொரு உள்நீரோட்டம் மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தது. இது வரை நாடு கண்டிராத புரட்சிப் புனலாகிய கரன்சி பாய்ச்சல்தான் அது.

அழகிரி பார்முலா என்று திமுக கச்சிதப்படுத்திக் கொண்ட ‘வோட்டுக்கு நோட்டு’ நடைமுறை நிறுவனமயமாக்கப்பட்டிருந்தது. கரன்சி நோட்டு வெள்ளத்தின் தாக்கத்தைக் கண்ட அத்வானிக்கு வயிற்றைக் கலக்கியது. எங்கிருந்து இந்த பணம் வருகிறது என்று மோப்பம் பிடிக்கும் போதுதான் சிக்கியது வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்த பல லட்சம் கோடி ரூபாய்கள் விபரம். ‘அந்த பணம்தான் தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் மக்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக் கொடுக்க வந்து குதித்திருக்கிறது’ என்பதை பழம் தின்று கொட்டை போட்ட பழம் பெருச்சாளியான அவர் உணர்ந்து கொண்டார்.

அதிலிருந்து உதித்ததுதான் ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம், இந்தியாவை வளப்படுத்துவோம்’ என்ற அவரது முழக்கம். முழக்கங்களை விட கையில் உரசும் பச்சை நோட்டுக்கு என்றுமே மதிப்பு அதிகம். தமிழ்நாட்டில் உளவுத் துறை புலி ஜாபர் சேட்டைத் தவிர, மற்ற எல்லோருமே ஆச்சரியப்படும் வகையில் திமுக+காங்கிரசு கூட்டாளிகள் பல இடங்களில் கரை சேர்ந்தார்கள். மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடைசி நேரத்தில் சிறப்பு ஆபரேசன் மூலம் கரை ஏற்றி விடப்பட்டார். அந்த நன்றிக் கடன் அவருக்கு இன்றும் இருப்பதை அரசியலை கூர்மையாக அவதானிப்பவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

வெற்றிகரமாக ஐக்கிய முன்னணி – 2 அரசு அமைந்தது. வலது/இடது போலிகளின் முனுமுனுப்பு கூட இல்லாமல், அமர்சிங் போன்ற அதிகாரத் தரகர்களின் முற்போக்கு ஆதரவுடன், தன்னை விஞ்ச ஆளில்லை என்று காங்கிரஸ் ஆளும் கட்சியாக இறுமாந்து அரசாங்கத்தை அமைத்தது.

ஆனால் பூதங்களை வெகுநாட்களுக்கு மூட்டைக்குள் கட்டி வைத்திருப்பது நடைமுறையில் சிரமமாகவே இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் பத்திரிகைகளிலும், நீதிமன்றங்களிலும்,  மக்கள் மத்தியிலும் பேசப்பட ஆரம்பிக்க மத்திய அரசின் அதிகார மையங்களுக்கும் பேச்சளவிலாவது அதில் ஆர்வம் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஜெர்மனி லிச்டன்ஸ்டெயின் நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவரங்களை விலை கொடுத்து வாங்கி தொடர்புடைய நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதில் இந்தியர்களின் பட்டியல் இந்திய அரசு விரும்பாமலேயே அதனிடம் வந்து சேர்ந்தது. ‘விவரங்களை பொதுவில் வெளியிட்டால், உலக அரங்கில் நமது பெயர் கெட்டு போகும்’ என்று இல்லாத நல்ல பேருக்கு சோனியாவின் வழிகாட்டலில் நடக்கும் காங்கிரசு அரசு வக்காலத்து வாங்கியது.

பொருளாதார நெருக்கடியால் திணறிக் கொண்டிருந்த அமெரிக்க அரசு சுவிஸ் வங்கிகளின் கைகளை முறுக்கி அந்நாட்டு சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அங்கு கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டது. அதே போன்று சுவிஸ் வங்கியில் இருக்கும் கணக்கு விவரங்களை கேட்டு வாங்குவதற்கான தைரியத்தையாவது கடன் வாங்கவும் மனம் வரவில்லை மன்மோகன் சிங் என்ற ‘நல்லவரின்’ தலைமையில் இயங்கும் அரசுக்கு.  இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு, நீதிபதிகளின் கிடுக்குப்பிடி கேள்விகள் என்று அரசாங்கமும், பணமுதலைகளும் வயிறு கலங்கி கொண்டிருந்த நேரம்.

இரண்டாவது இடி இன்னொரு திசையிலிருந்து வந்தது. ‘எந்த துறையில் யார் அறுவடை செய்வது’ என்ற திமுக உள்கட்சி போட்டியில் தயாநிதி மாறனுக்கு தொலைதொடர்பு துறை என்ற கறவைப் பசுவின் மடி மறுக்கப்பட்டு ஆ ராசா பால் கறக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அதனாலோ, அல்லது 1.7 லட்சம் கோடி ரூபாய் வளத்தை கொள்ளை அடித்துக் கொண்ட நிறுவனங்களிடையே இருந்த காய்ச்சலினாலோ, நீரா ராடியா என்ற கார்ப்பரேட்  தரகர் அரசியல் தலைவர்களுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், கார்ப்பரேட் பத்திரிகையாளர்களுடனும் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் ஒட்டுக் கேட்பு பதிவுகளில் சில வெளியாயின. திமுக தொடர்பான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் தொடர்புள்ள உரையாடல்கள் மட்டும் கசிய விடப்பட்டன. (இது எப்படி கசிந்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியாது). நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் மற்ற உரையாடல்களில் என்னென்ன ‘போர்த் தந்திரங்கள்’ வகுக்கப்பட்டன என்பதெல்லாம் தில்லியின் ஏதோ ஒரு நீதிமன்றத்தின் பாதுகாப்பான கோப்பு அறைகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையில் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை மூலம் 2G ஊழல் விவகாரம் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உள்ளானது. 2010-ன் இறுதியில் ஆ ராசா அமைச்சர் பதவி இழந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு சில அரசு அதிகாரிகளும், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளும், கனிமொழியும் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் திடீரென்று மாயத்தினால் கடமையை உணர்ந்து  செயல்பட்டதில், நோட்டு வெள்ள ஓட்டத்துக்கு தடுப்பணைகள் போடப்பட்டு கருணாநிதியும் அழகிரியும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு 5 ஆண்டுகள் கொடநாட்டில் ஓய்வெடுத்து வந்த ஊழல் ராணி ஜெயலலிதா அதிகாரத்துக்கு வருவதற்கான பாதை வகுக்கப்பட்டது.

இப்படி பாரத தேசத்தில் தருமம் கெட்டு அதர்மம் தலை விரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் தேசிய வானில் தோன்றியது ஒரு நம்பிக்கை நட்சத்திரம். மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தி என்ற கிராமத்தில் புரட்சி நடத்தி பூலோக சொர்க்கத்தை நிறுவி விட்டு அதே முறைகளைக் கையாண்டு பாரத தேசம் முழுவதும் காந்தியின் ராமராஜ்யம் நிறுவ முன் வந்தார் அண்ணா ஹசாரே.

2011 ஏப்ரல் மாதம் அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொல்லி தில்லி வந்ததுமே உயர்நிலைக் குழுவில் இருக்கும் மத்திய அமைச்சர்கள் அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அணி வகுத்தனர். (10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளாவுக்கு அத்தகைய கௌரவம் கிடைக்கவில்லை, என்ன இருந்தாலும் அண்ணா நம்ம ஆள் இல்லையா!) பேச்சு வார்த்தை பரபரப்புகளுக்கிடையே இடி முழக்கமென அண்ணா வெளியிட்ட அச்சுறுத்தல்களில் நாடே அதிர்ந்தது. ‘நான் சொன்னபடி கேட்கவில்லைன்னா அழுதுருவேன், ஆமா! ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் நிறைவேத்தலைன்னா சாப்பிடாம இருந்துருவேன்!’ போன்ற அவரது தர்ம ஆவேசங்களில் மக்கள் நெக்குருகிப் போனார்கள்.

அண்ணா உண்ணாவிரதம் – சீசன் 1 வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, சீசன் 2-வுக்கு ஆகஸ்டு 15 என்று நாள் குறிக்கப்பட்டது. சீசன் 1-ன் வெற்றியின் மூலம் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்காக அண்ணா குழுவினரும் அரசாங்க குழுவினருமான ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. (அப்படி ஒரு சட்டம் இல்லாமலேயே நடந்து கொண்டிருந்த 2G வழக்கும், கறுப்புப் பண வழக்குகளும் இந்த உண்ணாவிரத பரபரப்புகளில் மறக்கடிக்கப்பட்டன). 2G ஊழலில் பெரும் பணம் சம்பாதித்த பன்னாட்டுக் கம்பெனிகள் பற்றியோ, உள்நாட்டுத் தரகு முதலாளிகள் பற்றியோ, இதன் மூலம் அடித்த தேட்டையை வெளிநாட்டில் கறுப்புப் பணமாக பதுக்கிய முதலைகள் பற்றியோ அண்ணாவுக்கோ அவரது குழுவினருக்கோ கவலையே இல்லை போல் தோன்றியது. அதைப்பற்றி அவர்கள் பேசவே இல்லை.

இதற்கிடையே அண்ணாவின் மேடையில் போதிய அளவுக்கு ‘போகஸ்’ கிடைக்காத காரணத்தால் கறுப்புப் பண ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பித்த ‘கறுப்புப் பண திலகம்’ பாபா ராம்தேவ் கூட பிரச்சினையைப் பற்றி குறிப்பாக பேசாமால் பொதுவாக பேசி கிச்சு கிச்சு மூட்டினார். கடைசியில் சில போலீசுகாரர்களை ராம்லீலா மைதானம் பக்கமாக காங்கிரசு அனுப்பியதும் ராம்தேவ் சுடிதார் அணிந்து ‘சீதாதேவாக’ உருமாறி க்ரேட் எஸ்காப்பானவர் தான் – இப்போது வரை போன இடமும் தெரியவில்லை மறைந்த தடமும் தெரியவில்லை.

மக்களின் கவனம் அண்ணா அண்ட் கோவின் குணச்சித்திர நடிப்பில் இருந்த இந்த நேரத்தில் இன்னொரு தளத்தில் அதிசயப்படும் இன்னொரு சாதனை நடந்து கொண்டிருந்தது.

1.)     2010-11-ல் எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்தது ($30 பில்லியன் – 1,35,000 ரூபாய்கள்). ஆனால் BSE-500 நிறுவனங்களின் எஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி 11% மட்டும்தான் அதிகரித்திருந்தது ($1.38 பில்லியன் – 6,100 கோடி ரூபாய்கள்).

அதாவது சுமார் 1,29,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி அதிகரிப்பு சிறு-நடுத்தர நிறுவனங்களின் சாதனையால் நடந்து அதற்கான அன்னிய செலாவணியும் நாட்டுக்குள் பாய்ந்து வந்திருந்தது.

2.)     2010-11-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு $22 பில்லியன் (99,000 கோடி ரூபாய்) என்று அரசாங்க புள்ளி விவரங்கள் சொல்ல, உலகளாவிய நிதி பாய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரங்கள் $4.5 பில்லியன் (18,000 கோடி ரூபாய்) மட்டுமே இந்தியாவுக்குள் வந்ததாக சொல்லின.

அதாவது சுமார் 81,000 கோடி ரூபாய் அளவுக்கான ஓட்டை கணக்குகளில் தெரிகின்றது அல்லது புள்ளிவிவரங்கள் பொய் சொல்கின்றன.

3.)  2010-11ல் உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் $13 பில்லியனிலிருந்து (71,000 கோடி ரூபாய்) $29 பில்லியன் (1,36,000 கோடி ரூபாய்) ஆக அதிகரித்தது. இதிலும் BSE 500ல் வரும் 11 நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு $1 பில்லியனுக்கும் குறைவு (3,700 கோடி) என்று தெரிய வருகிறது. மீதி $15 பில்லியன் (68,000 கோடி அதிகரிப்பு எங்கிருந்து வந்தது?)

4.)  2010-11-ல் தாமிர உபகரணங்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் 8,500 கோடி ரூபாய்களிலிருந்து 36,700 கோடி ரூபாய்களாக அதிகரித்திருந்தது. இது இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 2011-12-க்கான ஏற்றுமதியில்  ஏற்பட்ட இந்த வீக்கத்தைக் காட்டி மன்மோகன் கும்பல் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தனர். 2011 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை ஏற்றுமதி 53% அதிகரித்தது, ஜூலை மாதம் மட்டும் 81% அதிகரித்திருந்தது (அன்னா சீசன் 1க்கும் அன்னா சீசன் 2க்கும் இடைப்பட்ட காலம் இது).

வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளால் இந்த பண மழையை நம்ப முடியவில்லை. ‘ஏற்றுமதி எந்த நேரத்தில் குறைந்து விடும். ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 20%ஐ தாண்டாது’ என்று வர்த்தக அமைச்சக செயலர் ராஜீவ் குல்லார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஏற்றுமதி மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் – ஏறக்குறைய புதைமணலில் சிக்குண்டு கிடக்கும் நிலையில் ஆளே இல்லாத டீக்கடையில் இந்திய தரகு முதலாளிகள் மிகப் பொறுப்புடன் டீ ஆற்றியுள்ள சாதனையைக் கண்டு வர்த்தகத் துறை அமைச்சகமே அடிவயிறு கலங்கிப் போய் நிற்கிறது.

இப்படி கடந்த 18 மாதங்களாக இந்திய பொருட்களை வாங்குவதிலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் வெளிநாட்டு மக்களுக்கு எப்படி திடீர் ஆர்வம் ஏற்பட்டு விட்டது? இதற்கும் தில்லியில் நடக்கும் அண்ணா-ராம்தேவ் சர்க்கஸூக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

2G ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், எஸ்பேண்ட் ஊழல், கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் அடிக்கும் கொள்ளை என்று பல்வேறு வகைகளில் சுருட்டப்பட்டு கைமாறிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பதுங்கிக் கிடப்பதாக  மதிப்பிடப்படுகிறது.

வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி நமது வலையுலக பொருளாதார புலிகள் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

சதுர அடி 1000 ரூபாய் வீதம் 2,400 சதுர அடி நிலம் வாங்கும் போது, மொத்த தொகையான 24 லட்சம் ரூபாய்களில் 10 லட்சம் காசோலையாக, வெள்ளைப் பணமாக கொடுக்கப்பட்டு, அதற்கேற்ற முத்திரைத்தாள் வரி, வருமான வரியும் செலுத்தி விட்டு, மீதி 14 லட்சம் ரூபாயைக் கணக்கில் காட்டாமல் கைமாற்றிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமான இந்தப் 14 லட்சத்தை 1000 ரூபாய் கட்டுகளாக ஒரு மஞ்சப் பைக்குள் போட்டு கக்கத்தில் அடக்கிக் கொண்டு சென்று விடுவார்கள். இது தான் கருப்புப் பணம்.

மேலே உள்ளதைப் போல் மிக எளிமையாகவும் மொக்கையாகவும் – சரியாகச் சொல்வதானால் ஷங்கர் பட திரைக்கதை பாணியிலும் – தான் ஐடி துறையில் வேலை செய்யும், பேஸ்புக்கில் இயங்கும், அண்ணா ஷோக்குகள் புரிந்து கொள்கிறார்கள். இது தான் மெழுகுவர்த்தி பிடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் டக்கு.

ஆனால் இது எதார்த்தத்தில் சிக்கலான பல முடிச்சுகள் கொண்டது. ஒரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்,

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 33,000 ஏக்கர் நிலத்தை சதுர அடிக்கு 5 காசு என்ற சலுகை  விலையில் ஒரு கார்ப்பரேட்டுக்கு ஒதுக்குகிறது அம்பிகளின் உள்ளங்கவர் கள்வனான மோடியின் குஜராத் அரசு. ஒரு சில மாதங்களுக்குள் அந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலத்தை சதுர அடிக்கு 120 ரூபாய் என்ற வீதத்தில் “சட்டப்பூர்வமாகவே” விற்று வளத்தைப் பெருக்குகிறது அந்த நிறுவனம். இதற்குப் பெயர் என்னவென்று கேட்டாள் துக்ளக் சோ ‘வளர்ச்சி’ என்பார். நாம் கொள்ளை என்கிறோம். போகட்டும். பல லட்சம் சதுர அடிகள் நிலம் கைமாறும் போது ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் கருப்பில் வாங்கப்பட்டாலும் பணம் பல நூறு கோடி ரூபாய்கள் வரும். இவ்வளவு பணத்தை ரொக்கமாக மஞ்சப் பைக்குள் வைத்தா கையாள்கிறார்கள்? இல்லை.

இங்குதான் வருகின்றன வெளிநாட்டு கருப்புப் பண வங்கிகளின் சேவை. விரல் நுனியில் அழுக்கு படாமல், வாங்குபவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணிலிருந்து விற்பவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டு விடும்.

இப்படி வெளிநாட்டில், கணக்கில் காட்டாமல், நாட்டு அரசுக்கு தெரியாமல் பணம் வைத்துக் கொள்பவர்கள் அடுத்தடுத்த கார்ப்பரேட் வளர்ச்சிக்கு அந்த பணத்தை சுழற்சியில் விட்டுக் கொள்வார்கள்.

இந்தியாவிலிருந்து உப்பு ஏற்றுமதியை அதிகரிக்க அரசு உப்பு ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏற்றுமதி மதிப்பில் 20% ஊக்கம் என்று ஒரு திட்டம் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நம்ம கருப்புப் பணக்காரர் உப்பு நிறுவனம் ஒன்றில் பங்காளியாக சேர்ந்து கொள்வார்.

வெளிநாட்டில் உப்பு வாங்குபவருக்கு ஒரு டன் உப்பு $100க்குப் பதிலாக $500 என்று இன்வாய்ஸ் செய்து 1000 டன் ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டுக்காரருக்கு கூடுதல் தொகையான $4,00,000ஐ தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி விடுவார். $5,00,000 அன்னிய செலவாணி ஏற்றுமதி வருமானமாக நாட்டுக்குள் வருகிறது.

அதற்கான $1,00,000 ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்வார். ஏற்றுமதி வருமானம் என்பதால் வருமான வரியும் கட்ட வேண்டாம். உப்பு நிறுவனத்துக்கு மற்ற செலவுகள் ஏதும் இல்லாததால் பெரும்பாலும் லாபமாக இந்திய வங்கிக் கணக்கில் சேர்ந்து வெள்ளை ஆகி விடும். அந்தப் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு, நிலம் வாங்குவதற்கு என்று நிறுவன வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுடன் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரி விடுப்பு, நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று ஒரு திட்டம் வந்ததும், அந்த திட்டத்திற்கு தனது சுவிஸ் பணத்தை மொரீசியசில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் மூலம் வெளிநாட்டு முதலீடாக கொண்டு வருவார். ஒரே கல்லில் பல மாங்காய்கள்.

கொஞ்சம் திரைப்பட பாணியில் உதாரணம் சொல்லப் போனால், தனது எதிரியைத் தீர்த்துக் கட்ட வாடகைக்குக் கொலையாளியை அமர்த்தி அவருக்கு பணமாக சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தி தன் மீது சுட்டும் தடயங்களை மறைத்துக் கொள்ளலாம்.

இப்படி சட்ட விரோதமாக நாட்டை ஏய்ப்பதற்கு நூற்றுக் கணக்கான கதவுகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கும் பணம் திறந்து விடுகிறது. இந்த பணம் அனைத்தும் சுவிஸ் வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகங்களில் கரன்சியாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள் இல்லை. இந்த பணம் சுழன்று கொண்டே இருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான இணை பொருளாதார நடவடிக்கைகளை செலுத்துகிறது.

இந்தியாவின் இணைப் பொருளாதாரத்தின் அளவு மட்டுமே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கு இருக்குமென்றும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35 – 40 லட்சம் கோடிகள் இதில் புரள்வதாகவும் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண் குமார் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் அப்படியே ஒரு இரகசிய நிலவறைக்குள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்ட பச்சை நோட்டுகள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இதுவொரு இணைப் பொருளாதாரம். நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆப்சைட்டில், ஆண்டுக்கு சில மாதங்கள் ஆன் சைட், மனதை உழப்பும் அலுவலக அரசியல் என்றெல்லாம் போராடி ஒரு ஐடி துறை ஊழியர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதை  சிறுத்துப் போகச் செய்து விடும் சித்து விளையாட்டு இந்த இணை (parallel) நிதி பாய்ச்சல். 40 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கலாம் என்று திட்டம் போட்டால் மேற்படி கருப்புப் பணத்தில் மிதக்கும் ஸ்கார்பியோவில் பறக்கும் அழகிரி பார்முலா அரசியல் வாதிகள் அந்த பிளாட்டின் விலையை 80 லட்சத்துக்கு ஏற்றி விடும் பணப் பாய்ச்சலைக் கொண்டு வந்திருப்பார்கள்.

ஐடி துறையினருக்கே இந்த கதி என்றால் மாதம் முழுவதும் போராடி 6,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த கடலில் எப்படி நீந்தி கௌரவத்துடன் வாழ முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

கடந்த 18 மாதங்களில் ஸ்விஸ் பாதுகாப்பு ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த கணக்குகள் இடம் மாற்றப்படும் பேரலைகளின் தெறிப்புகள்தான் நாம் பார்த்த ஏற்றுமதி அதிகரிப்புகளும், முதலீட்டு அதிகரிப்புகளும். அந்த பெரு வெள்ளத்தின் சில துளிகள் கடந்த 18 மாதங்களில் போர்வைகள் போர்த்துக் கொண்டு சுவிஸ் வங்கிகளிலிருந்தும், மற்ற வரி ஏய்ப்பு மையங்களிலிருந்தும் விடுபட்டு வந்திருக்கின்றன.

அதற்கு ஒரு புகை மூட்ட மறைப்புதான் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் நடத்தி வரும் நாடு தழுவிய ஊழலுக்கு எதிரான போராட்டங்கள். அவற்றில் பெரும்பகுதி இடம் மாற்றப்பட்டு விடுவது வரை அண்ணா சீசன் -2, சீசன் – 3 என்று தொலைக்காட்சி மகிழ்வூட்டல்கள் தொடரும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

ஆக, இந்த முகமூடிகளின் பின்னே கைகட்டி வாய் பொத்தி மெழுகுவர்த்தி ஏந்திச் செல்வதல்ல தீர்வு. மொத்த அமைப்பு முறையையும் மாற்றி அமைக்க உளிகளை கையில் ஏந்துவதே தேவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! உலகமும் அந்த திசையில்தான் செல்கிறது. ரோம், கிரீஸ், அமெரிக்காவென்று உலகெங்கும் இழப்பதற்கேதுமில்லாத மக்கள் தெருவில் இறங்கியிருக்கிருக்கிறார்கள். நாம் எப்போது இறங்கப் போகிறோம்?

______________________________________________________

–              அப்துல்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

 

 1. தமிழகத்தில் பேருந்தை விட தொடர்வண்டி கட்டணம் குறைவு.
  சென்னை – கன்யாகுமரி இரட்டை பாதை எப்பொழுது நிறைவேறும் ???

  சென்னை மெட்ரோ திட்டம் 14 ,500 கோடி ரூபாய். முதல்வரின் கனவுத் திட்டம் மோனோ ரயில் 11,000 கோடி ரூபாய் திட்டம்.

  சென்னை – கன்யாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்கு மாநில அரசு ஒரு தொகை ஒதுக்க முடியாதா ? அல்லது மத்திய அரசை போராடி பெற முடியாதா ?

  தனியார் பேருந்து முதலாளிகளிடம் பொருக்கி தின்னும் ஆட்சியாளர்கள் உள்ளவரை இது நடக்காது. எல்லாவற்றிற்கும் மக்கள் தெருவிற்கு வந்து தான் போராட வேண்டுமா ?? என்ன கொடுமை ?

  நாம் (மக்கள்), கட்சி , தலைவர் என்று யாரும் இன்றி தாமாக முன்வந்து போராடத வரை எதுவும் நடக்க போவதில்லை.

  தோழர்களே உங்கள் கருத்து என்ன ?

  • குமரன்,
   போராட்டம் என்பது இப்போதைக்கு நடக்குற காரியமா என்னக்கு தோன்றவில்லை .. ஏன் என்றல், யாருக்கு என்ன தேவையோ அதை அரசு சரியாக செய்துள்ளது.. ஏழைக்கு டாஸ்மாக், பணக்காரனுக்கு elite டாஸ்மாக் … நடுத்தர மக்களுக்கு savings tax , housing loan , education expense … இதை இவர்கள் சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும்.. எதாவது சனி , ஞாயிறு வந்து கூட்டம் போட்டால் வருவார்கள்… அதுவும் நல்ல படம் ஒன்றும் இல்லையெனில்….அல்லது 24 /7 தொல்லைகாட்சிகள் வந்தால்….
   இவனுகளுக்கு நல்லது நடக்க நாம முயற்சித்தால் வேல வெட்டி இல்லதாவனுகன்னு பெயரு ???போங்க பாஸ் ….

 2. //இந்தியாவின் இணைப் பொருளாதாரத்தின் அளவு மட்டுமே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கு இருக்குமென்றும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35 – 40 லட்சம் கோடிகள் இதில் புரள்வதாகவும்////

  ஆம். ஆனால் இதை விட அதிகமாகவும் இருக்கலாம். வரி ஏய்ப்பு மூலம் தான் அதிகம் உருவாகிறது. ஊழல் பணத்தை விட, வரி ஏய்ப்பு மூலம் தான் அதிகம். எனெனில் வரி விகிதங்கள் ‘அநியாயமாக அதிகம்’ என்று பலரும் நம்புகிறார்கள். விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரிகள், பத்திரம் பதிக்க வரி, வருமான வரிகள் என்று.. ஆனால் 70களைல் இதை விட பல மடங்கு அதிக விகிதம். அன்று மிக அதிகாமன இந்த கருப்பு பொருளாதாரம் இன்றும் தொடர்கிறது.

  • இந்தக் கருப்புப் பொருளாதாரத்தை உடனடியாகக் “கலைத்துவிட வேண்டிய” அல்லது “களையெடுக்க வேண்டிய” கட்டாயமும் கடமையும் நமக்கிருக்கிறதல்லவா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

  • அதியமான்,

   //விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரிகள், பத்திரம் பதிக்க வரி, வருமான வரிகள் என்று.. ஆனால் 70களைல் இதை விட பல மடங்கு அதிக விகிதம். அன்று மிக அதிகாமன இந்த கருப்பு பொருளாதாரம் இன்றும் தொடர்கிறது.//

   1. கருப்பு பண வளர்ச்சி

   அ. 1980களுக்கு முன்பு பெட்ரோலியத் துறையில் கருப்பு பொருளாதார வாய்ப்பே இல்லை. அதற்கு பிறகுதான் அம்பானிகள் கருப்புப் பணத்தை உருவாக்க முடிந்தது.

   ஆ. 1990களுக்கு முன்பு தொலை தொடர்பு துறையில் கருப்பு பணத்துக்கு வாய்ப்பே இல்லை. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக 5 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சுக்ராம் கையால் தாரை வார்க்கப்பட்ட நாட்டு சொத்துக்கள் மூலம் வளர்ந்தவர்கள்தான் ஏர்டெல், ரிலையன்ஸ், ஹட்ச் போன்ற தனியார் நிறுவனங்கள்.

   அவர்கள் மிதக்க விடும் இணை பொருளாதார நடவடிக்கை 1980களுக்கு முன்பு கிடையாது.

   இ. SEZ என்ற பெயரில் விவசாயிகளின், ஏழைகளின் நிலங்களை இலவசமாக பெற்று ரியல் எஸ்டேட் நடத்திக் கொண்டிருக்கும் திட்டம் 1990களுக்கு முன்பு கிடையாது. அது தொடர்பான கருப்பு பணமும் கிடையாது.

   இப்படி 3 உதாரணங்கள் மட்டும்தான். நிலைமை இப்படி இருக்கையில் ஏதோ வரி அதிகமாகப் போடப்பட்டதால்தான் கருப்பு பணம் உருவானது என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான்.

   2. வரி அதிகமாக இருந்தால் ஏய்ப்பு செய்வார்கள், கருப்பு பணம் உருவாகும் என்று சொல்வது’அவள் அப்படி டிரெஸ் போட்டால் இதுதான் நடக்கும்’ என்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சாட்டுவது போன்றதாகும்.

   வரி விகிதம் அதிகம் என்று வரி ஏய்ப்பு செய்பவர்கள் மோசமான சமூக குற்றவாளிகள், ‘அவர்களுக்கு சோப்பு போட படுத்த வரியை குறைத்து மகிழ்விக்க வேண்டும்’ என்று தொடங்கிய பொருளாதார கொள்கைதான் கடந்த 20 ஆண்டுகளின் சீரழிவுகளுக்கு காரணம்.

   இதற்கு பதிலாக ‘எல்லோரும் சோமாலியா போல ஆகி விடலாமா’ என்று rhetoric கேள்வி கேட்டால், அப்படி ஆகி விட மாட்டோம் என்பதுதான் உண்மை. இந்தியாவின் வளங்களும், மக்களின் உழைப்புத் திறனும், உழைக்கும் மக்கள் நிர்வாகம் செய்யும் சோசலிச அமைப்பில் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

   அப்படி சந்தேகமிருந்தால். ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட பக்கத்து நாடு சீனாவை எட்டிப் பாருங்கள். இந்தியாவுடன் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னாட்சி ஈட்டிய சீன நாடு, 1940களின் இறுதியில் உள்நாட்டு போரினாலும், ஜப்பானிய தாக்குதல்களாலும் பெருமளவு அழிந்திருந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி இன்று ஒரு பொருளாதார வல்லரசாக உருவானதற்கு காரணம் ‘பிரீ மார்கெட்’ இல்லை என்பது தெளிவு.

   (1990களுக்குப் பிறகு அதே பிரீ மார்கெட்டை பிடித்துத் தொங்கிய இந்தியாவில் விவசாயிகளும், மாணவர்களும், தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும் தற்கொலை செய்து கொள்ளும் வளர்ச்சிதான் கிடைத்திருக்கிறது),

   • Dear MaSi,

    Sure you are right. but you cannot isolate theis issues from all other issues that has been the product of state soclialism.

    When we discussed in person, you had confessed your inablity to avoid black money or income tax evasion personally due to your circumstances, etc.

    //(1990களுக்குப் பிறகு அதே பிரீ மார்கெட்டை பிடித்துத் தொங்கிய இந்தியாவில் விவசாயிகளும், மாணவர்களும், தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும் தற்கொலை செய்து கொள்ளும் வளர்ச்சிதான் கிடைத்திருக்கிறது),///

    so what is the reason for these farm suicides ? if LPG is the reason, how come TN farmers are not in this list. and non-cotton farmers are not as much affected as cotton farmers. and only Marathwada and AP cotton farmers are badly affected while TN cotton farmers have no such problems ? suppose if India had gone bankrupt in 1991 due to ‘your’ socialistic policies of the past and hyper inflation and falied state had resulted (that was a possiblity then), then would things have been better now ?

    All i can say is you are confused and do not have clear concepts. so what do you propose ? get back to the license raaj and closed economy ? or usher in maoisist revolution ? and you are supposed to be a non-violent Gandhian ? !!

    • //Sure you are right. but you cannot isolate theis issues from all other issues that has been the product of state soclialism.//

     இது எல்லாவற்றுக்கும் காரணம் ஸ்டேட் சோசலிசத்தை விட, அதில் கொள்ளை அடித்த மிட்டல்களும், அம்பானிகளும், டாடாக்களும்தான்.

     //When we discussed in person, you had confessed your inablity to avoid black money or income tax evasion personally due to your circumstances, etc.//

     முற்றிலும் தவறு. நான் இதுவரை என் சொந்த வாழ்க்கையிலோ, நிறுவன செயல்பாடுகளிலோ வரி ஏய்ப்போ, கறுப்பு பணமோ கையாண்டதில்லை. எல்லா பரிமாற்றங்களும் காசோலைகள் மூலம்தான் செய்திருக்கிறேன்.

     வருமான வரி அல்லது கம்பனிகள் சட்டத்தின் எல்லா ஆவண பதிவு தேவைகளையும் தவறாமல் பின்பற்றுவது கஷ்டம் என்று உங்களிடம் சொல்லியிருக்கலாம்.

     //so what is the reason for these farm suicides ? if LPG is the reason, how come TN farmers are not in this list. and non-cotton farmers are not as much affected as cotton farmers. and only Marathwada and AP cotton farmers are badly affected while TN cotton farmers have no such problems ?//

     அரசாங்கமும் திட்டங்கள் வகுப்பவர்களும், பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டும் நோக்கமாக வைத்து செயல் படுவதுதான் இந்த தற்கொலைகளுக்கு காரணம். (அப்படி வளர்ந்த பெரு முதலாளிகள் அடிக்கும் சிறுநீரில் நிறைய சத்து இருக்கும், அதை வைத்து பெரும்பான்மை மக்கள் வாழலாம் என்ற அடிப்படைதான் அவர்களது பொருளாதாரக் கொள்கை – உதாரணம் உதவி : அரசு பாரி)

     // suppose if India had gone bankrupt in 1991 due to ‘your’ socialistic policies of the past and hyper inflation and falied state had resulted (that was a possiblity then), then would things have been better now ?//

     ஒரு மாணவன் சரியாக படிக்காமல் பொழுது போக்கிக் கொண்டிருந்தானாம். நிறைய சினிமா பார்த்தால் மனம் ரிலாக்ஸ் ஆகி தேர்வில் நன்கு எழுதலாம் என்று நினைத்தானாம். தினமும் ஒரு சினிமா பார்த்து விட்டு படிப்பதே இல்லையாம். 10ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் மிகவும் குறைவு.

     காரணங்களை ஆராய்ந்து ஒரு நாளைக்கு ஒரு சினிமா மட்டும் பார்த்ததுதான் மார்க்கு குறைந்ததற்கு காரணம் என்று 11,12ஆம் வகுப்பில் தினமும் 2-3 சினிமா பார்க்க ஆரம்பித்தானாம். 12ம் வகுப்பு தேர்வில் என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

     1990ல் வந்த சிக்கல்கள், அது வரை கடைபிடிக்கப்பட்டு செயல்பட்டு வந்த மக்கள் விரோத கொள்கைகளால். அதை சரி செய்ய அதை விட மோசமான மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி விட்டு இப்போது இப்படி கேட்டால் என்ன சொல்ல முடியும்!

     1947ல், ஆங்கிலேய காலனி ஆட்சி சட்டங்களையும் அமைப்புகளையும் முற்றிலும் ஒழித்து விட்டு உண்மையான மக்கள் ஆட்சி ஏற்படுத்தியிருந்தால் 1990ல் சிக்கல்களும் வந்திருக்காது, விவசாயிகள் தற்கொலையும் நடந்திருக்காது.

     //All i can say is you are confused and do not have clear concepts. so what do you propose ? get back to the license raaj and closed economy ? or usher in maoisist revolution ? and you are supposed to be a non-violent Gandhian ? !!//

     இன்று நாட்டில் 100 கோடி மக்களின் மீது சில ஆயிரம் பெரு நிறுவனங்களின் வன்முறை அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் உழைக்கும் மக்கள், கஷ்டத்தில் இருக்க, விஜய் மல்லையா போன்ற சூதாடிகள் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

     இதற்கு மாற்றாக, விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா போன்றவர்கள் சிறையிலும், பெரும்பான்மை மக்களுக்கு நிறைவான வாழ்க்கையும் என்ற அமைப்பை நான் ஆதரிக்கிறேன்.

     • //1990ல் வந்த சிக்கல்கள், அது வரை கடைபிடிக்கப்பட்டு செயல்பட்டு வந்த மக்கள் விரோத கொள்கைகளால். அதை சரி செய்ய அதை விட மோசமான மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி விட்டு இப்போது இப்படி கேட்டால் என்ன சொல்ல முடியும்!///

      இதுதான் உங்க ‘பதிலா’ மாசி ? பொருளாதாரம் பற்றி பல நூறு கட்டுரை எழுதியவர் சொல்லும் பதிலா இது ? அதென்ன மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் அதை விட மோசமான கொள்கைகள் ? அந்நிய செலவாணி பற்றி விரிவாக பேசியிருக்கிறோம். சரி, அதே சாமினாதான் அங்கலேஸ்வர அய்யர் எழுதிய சில கட்டுரைகளையும் பார்க்கவும் :

      http://swaminomics.org/?p=1807
      India’s great escape from the socialist zoo

      http://swaminomics.org/?p=2080
      Make it simple for millions to start a business

      • //இதுதான் உங்க ‘பதிலா’ மாசி ? பொருளாதாரம் பற்றி பல நூறு கட்டுரை எழுதியவர் சொல்லும் பதிலா இது ?//

       ஆமாம்.

       //அதென்ன மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் அதை விட மோசமான கொள்கைகள் ? அந்நிய செலவாணி பற்றி விரிவாக பேசியிருக்கிறோம்.//

       மேலே சொன்னது போல பெரும்பான்மை மக்களுக்காக அரசாங்கம் நடத்தாமல், சில நூறு பெரு நிறுவனங்களை வளர்க்க உதவி செய்தால், அவர்களிடமிருந்து ஒழுகி ஓடும் நீரில் பயிர்கள் வளரும் என்று நடத்திய லைசன்ஸ் ராஜ், கோட்டா ராஜ்தான் மக்கள் விரோத செயல்கள்.

       // சரி, அதே சாமினாதான் அங்கலேஸ்வர அய்யர் எழுதிய சில கட்டுரைகளையும் பார்க்கவும//

       படிக்கிறேன்.

 3. சரியான நேரத்தில் மிக சரியான பதிவு
  “சில போலீசுகாரர்களை ராம்லீலா மைதானம் பக்கமாக காங்கிரசு அனுப்பியதும் ராம்தேவ் சுடிதார் அணிந்து ‘சீதாதேவாக’ உருமாறி க்ரேட் எஸ்காப்பானவர் தான் – இப்போது வரை போன இடமும் தெரியவில்லை மறைந்த தடமும் தெரியவில்லை”

  இப்படி ஒரு சீரியஸ் ஆன விசயத்தில் இந்த மாதிரி காமெடி எதுக்கு?

 4. excelant article! its indeed a pathatic scene that those who are under the anna illusion are also going to be the first direct victems of the capitalist economical structure and globalization. but, they think/dream to get rid of their problems, social and political by so simple and cheep means as such anna and ramdev like idiots.

  • ஏற்றுமதி வருமானத்திற்கு வருமான வரி கட்டத் தேவையில்லை என்று வினவில் கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் கட்டுரை இப்போதெல்லாம் அப்படி இல்லை.. முன்னர்தான் அவ்வாறு இருந்தது என குறிப்பிடுகிறது. இன்னும் தெளிவு வேண்டும்!!

   ஆனா ஒன்னு மட்டும் புரியுது. ஒரு மூணு மாசத்தில மட்டும் sudden massive hike என்பது நிச்சயம் பொருளாதார ஏற்றம்/ஏற்றுமதி முன்னேற்றம் என்று கருதமுடியாது என்றே நினைக்கிறேன். ராபர்ட் வதேரா சார்ந்திருக்கும் தொழிலிலும் இந்த அபரிமிதமான ஏற்றுமதி காணப்படுகிறது!! பின்வருவனவற்றையும் படித்துப் பார்க்கலாம்.

   http://vimarisanam.wordpress.com/2011/10/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
   http://vimarisanam.wordpress.com/2010/11/13/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

   • 1. ‘அடிப்படை சந்தேகங்களை’ மட்டும் எழுப்பி விட்டு வேறு எந்த விளக்கமும் சொல்லாமல் மழுப்புகிறது அதியமான் தந்துள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரை.

    ஓவர் இன்வாய்சிங் மட்டுமில்லை, வெளிநாட்டு முதலீடு கணக்கீடுகளிலும் இடைவெளிகள் உள்ளன என்பதை பூசி மெழுகவும் செய்கிறார்.

    ஸ்வாமிநாதன் அங்கலேஸ்வர் அய்யரை குறை சொல்ல முடியாது, அவர் பின்பற்றும் பொருளாதார முறையில் இப்படி தர்மசங்கடமான இடங்களை தாண்டிச் செல்வது எல்லோரும் செய்வதுதான்.

    2. ரிஷி சொல்வது போல ஏற்றுமதி வருமானத்துக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை என்ற பிரிவை (section 80HHC) ரத்து செய்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு, பின்தங்கிய பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு, மென்பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் வருமான வரி விலக்கு அளிப்பதாக மாற்றியிருக்கிறார்கள். (http://www.vakilno1.com/bareacts/incometaxact/s80hhc.htm)

    ஸ்விஸ் வங்கிகள் மூலம் கருப்புப் பணத்தை கையாளும் ஒரு ‘புத்திசாலி’ அப்படி வருமான வரி சலுகை பெற்ற நிறுவனமாகவே ஏற்றுமதி செய்வார்.
    (http://siadipp.nic.in/publicat/invpub/taxation.htm)
    அப்படிப்பட்ட ‘நாட்டுக்கு வளம் சேர்க்கும்’ தொழிலதிபருக்கு சேவை செய்யும் அதிகார அமைப்பு அதற்கு ஒத்துழைக்காமலா இருந்து விடும்.

    • //ஸ்வாமிநாதன் அங்கலேஸ்வர் அய்யரை குறை சொல்ல முடியாது, அவர் பின்பற்றும் பொருளாதார முறையில் இப்படி தர்மசங்கடமான இடங்களை தாண்டிச் செல்வது எல்லோரும் செய்வதுதான். //

     wrong. he uses the word ‘crooked bsuinessman’ ; he does not condone frauds which are part of any system in this world.

     so what alternative do you propose nanbaa ?

     • //wrong. he uses the word ‘crooked bsuinessman’ ; he does not condone frauds which are part of any system in this world.//

      businessman என்று சொன்னாலே போதும் crooked என்று சொல்வது superfluous :-). இவங்க எல்லாம் crooked ஆக இருப்பதால்தான், இவங்க கையில் அரசாங்கங்கள் இருப்பதால்தான், நாடு (சமூகம்) சீரழிந்து போயிருக்கிறது.

      //so what alternative do you propose nanbaa ?//

      நேரில் பேசலாம்

      • you too are a businessman MaSi. and so come off your high horse. when we chatted, we had discussed about your future profits, (if any) for which you have to pay taxes, but the govt will not consider your past losses. as of now, you are not in a position to pay IT for many years. sorry for dragging all this personal matters here, but i wanted to clarify that even this 34 % IT is too high for small concerns like yours which are in the brink for many years. you had speacifically talked about the inevitablity of IT evasion if the need be, simply because the price is too high for a struggling concern like yours.

       • 1. I was a businessman. இன்றைய சூழலில் அப்படி இருப்பது அவமானப்பட வேண்டிய ஒன்று. ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பை exploit செய்து நாம் வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு உலாவுவது ஒன்றும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் இல்லை.

        இப்போது அலசிப் பார்க்கும் போது, வருமான வரி கட்ட முடியாத நிலையில் நிறுவனம் நடத்தியது வருத்தப்பட வேண்டிய ஒன்றாக தோன்றவில்லை. அதிலிருந்து தப்பியது குறித்து மகிழ்ச்சி.

        2. முந்தைய ஆண்டுகளின் இழப்புகளை அடுத்த ஆண்டுகளின் லாபத்துக்கு ஈடாக காட்டி வரி கட்டாமல் இருக்கலாம் என்றுதான் எனக்கு எங்கள் கணக்காளர் சொன்னது.

        3. 100% லாபமுமே சமூகத்துக்கு (அரசுக்கு) உரியது என்ற பொருளாதார நடைமுறை இருக்கும் போது 33% வரி உங்களுக்கு அதிகமாக தோன்றுகிறது. நம் வீட்டிலிருந்து கொள்ளை அடித்துக் கொண்டு போகிறவனிடம் பேரம் பேசி அவன் மனமுவந்து மூன்றில் ஒரு பங்கு தர வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும் என்பது உங்கள் நிலைப்பாடு.

        • // I was a businessman. இன்றைய சூழலில் அப்படி இருப்பது அவமானப்பட வேண்டிய ஒன்று. /// what a pity ? and very contradictory. பொருள் செய்ய விரும்பு என்ற பெயரில் பிளாக் உருவாக்கி, தொழில்முனைவோரின் தன்மைகளை பற்றி அருமையாக பல கட்டுரைகளை எழுதியவர் இப்படி பேசிகிறார். இன்றும் உங்க கம்பெனிக்கு நீங்க எம்.டி தான் நண்பரே. கூட்டளிகளும் உண்டு. எதுவும் மாறவில்லை.

         30 ஆண்டுகளுக்கு முன்பு தான் க்ரோனி கேபிடலிஸ்ட் பிஸினஸ்மேன்கள், கூட்டு களவானிகள் காலம். இன்று clean and new businesses நிறைய. நீங்களே ஒரு உதாரணம்.

         சரி, இந்த சுரண்டல் பற்றி நிறையா பேசியாச்சு. இன்னுமா ?

         // 100% லாபமுமே சமூகத்துக்கு (அரசுக்கு) உரியது என்ற பொருளாதார நடைமுறை // அதன் பெயர் சோசியலிசம். அது எப்படி இயங்கியது, என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்று தான் தெரியுமே !!

         உங்க பிளாக் இது :

         http://porulsey.blogspot.com/
         http://porulsey.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AF%8D

         • //தொழில்முனைவோரின் தன்மைகளை பற்றி அருமையாக பல கட்டுரைகளை எழுதியவர் இப்படி பேசிகிறார். இன்றும் உங்க கம்பெனிக்கு நீங்க எம்.டி தான் நண்பரே. கூட்டளிகளும் உண்டு. எதுவும் மாறவில்லை.//

          இன்றும் தொழில் முனைவு பற்றி நிறைய பேசலாம். ஆனால், அனில் அம்பானி ரிலையன்ஸ் பவர் என்ற லெட்டர்பேட் நிறுவனத்துக்கு 11,000 கோடி ரூபாய் பங்குச் சந்தையில் திரட்ட முடியும் சூழலில், சப்பிரைம் கடன் கொடுத்தல் மூலம் பல பில்லியன் டாலர்களை சந்தையில் புழங்க விடும் வங்கிகளின் சூழலில் தொழில் முனைவு என்பது செல்லாக் காசாகவே இருக்கிறது.

          பெரிய பெரிய முதலைகள் வாழும் ஆற்றில், மீன்கள் முனைவு காட்டுவது என்பது பரிதாபத்துக்குரியது. முதலைகள் கண்டதையெல்லாம் விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டு, தண்ணீரைக் கலக்கிக் கொண்டிருப்பதுதான் இப்போதைய அமைப்பின் நடைமுறை. இதற்கிடையில் வீணாக்கலும், பேராசையும், exploitationம் மட்டும்தான் வாழ முடியும்.

          //30 ஆண்டுகளுக்கு முன்பு தான் க்ரோனி கேபிடலிஸ்ட் பிஸினஸ்மேன்கள், கூட்டு களவானிகள் காலம். இன்று clean and new businesses நிறைய. நீங்களே ஒரு உதாரணம்.//

          ஹா! என்னை அந்த உதாரண பட்டியலிலிருந்து அடித்து விடலாம். நான் பணி செய்த நிறுவனங்கள், நான் நடத்தும் லெதர்லிங்க் நிறுவனம், எங்கள் வாடிக்கையாளர்கள் என்று நான் நேரடியாக உறவாடிய சுமார் 60 நிறுவனங்களின் அனுபவ அடிப்படையில் எனது கருத்து: இப்போதைய free market அமைப்பு உழைப்பவர்களின் வாழ்க்கையை கொடுமைப்படுத்தவும், தொழில் முனைவோரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கவும், மிகச் சிறந்த அறிவாளிகள் பங்குச் சந்தை, மூலதனச் சந்தை சூதாட்டத்தில் நேரத்தை வீணாக்கவும்தான் வழி செய்கிறது.

          இதனால் ஏற்படும் இழப்புகள் – சுற்றுப்புறச் சூழல், உற்பத்திப் பொருள் வீணாவது, இயற்களை வளங்கள் அழிக்கப்படுதல் – ஈடு செய்யப்பட முடியாதவை.

          //சரி, இந்த சுரண்டல் பற்றி நிறையா பேசியாச்சு. இன்னுமா ?//

          கொலையும் கொள்ளையும், நாச வேலைகளையும் பற்றி அவை ஒழிக்கப்படும் வரை பேசத்தான் வேண்டும்!

          • சிவகுமார் அவர்களின் தொழில்முனைவு பற்றிய கட்டுரைகள் மெச்சத்தகுந்தவை. ஆனால் அதை நடைமுறைப்படுத்த இன்றைய சூழ்நிலையில், இக்காலகட்டத்தில் இயலாத அளவுக்கு கார்ப்பரேட்டுகளின் மூலதன ஆதிக்கம் சென்று கொண்டிருக்கிறது. நாம் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை வேலை செய்து கொண்டிருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு எதிராக தொழில்முனைய முடியாது.

           இப்போதும் பாருங்கள். அன்னிய மூலதனம் நமக்கு வேண்டுமாம். அதனால் 51% சதவீத அளவுக்கு அன்னிய முதலீட்டை சில்லறை வர்த்தகத் துறையில் நுழைக்கப் போகிறார்களாம். பல கோடி சில்லறை வணிகர்கள் இதனால் சிதறுண்டு போவார்கள். அவர்கள் அன்னிய மூலதனத்தை அதிகரிக்கும் அடிமைப் பணியில்தான் அடுத்து ஈடுபட முடியுமே ஒழிய, சுயதொழில் முனைய முடியாது. எனது புரிதல் சரிதானே?

           வேறுவகையில் பார்ப்பதானால் – பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம், அன்னிய மூலதனம் எனும் பெயரில் வெளிநாட்டு லெட்டர்பேட் கம்பெனிகள் மூலம் உள்நுழைவதற்கும் வாய்ப்பிருக்கிறதுதானே?

          • //முதலைகள் கண்டதையெல்லாம் விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டு, தண்ணீரைக் கலக்கிக் கொண்டிருப்பதுதான் இப்போதைய அமைப்பின் நடைமுறை. இதற்கிடையில் வீணாக்கலும், பேராசையும், exploitationம் மட்டும்தான் வாழ முடியும். ///

           இதெல்லாம் ஆதாரமில்லாத பொதுபடுத்துதல்கள் மாசி. இது உண்மை என்றால் சென்ற 20 ஆண்டுகளில் புதிய பெரும் முதலாளிகள் யாரும் உருவாகி இருக்கவே முடியாது. சாமினாதான் அய்யரின் கட்டுரைகளை படிக்கவே இல்லை என்று தெரிகிறது. எனினும் மேலும் ஒன்று :

           http://swaminomics.org/?p=1227
           Towards egalitarianism of opportunity

           அனில் அம்பானி ஊழல் செய்வதால், எல்லாரும் அப்படி செய்வதாக அர்த்தம் இல்லை. மேலும், rule of law ஒழுங்காக அமலாகும் நாடுகளில் இங்கு போல் ஊழல் செய்ய முடியாது என்பதை ஒப்பிடவும். அமெரிக்க பேங்கர்களை மட்டும் சொன்னா எப்படி ? கனடா, ஜெர்மனி பற்றி பாருங்களேன்.

           and you still do no seem to grasp that roots of our corruption in all sectors (incl corporate sector) can be traced to the license raaj era, and the black economy it had spawned till date. also about the effects of govt intervention in the economy, esp in money markets.

           First go thru all the Swaminomics post fully.

          • // அதனால் 51% சதவீத அளவுக்கு அன்னிய முதலீட்டை சில்லறை வர்த்தகத் துறையில் நுழைக்கப் போகிறார்களாம். பல கோடி சில்லறை வணிகர்கள் இதனால் சிதறுண்டு போவார்கள்///

           இதை பற்றி ஆவேசமான கட்டுரை வினவு எழுதும் முன்பு ஒரே ஒரு கேள்வி : 2006இல் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் மற்றும் வேறு சிலர் இத்துறையில் நுழைய அனுமதி பெற்ற போது, இதை விட கடும் ஆவேசமான எதிர்ப்பு, ஆர்பாட்டங்கள். ஆனால் இந்த 6 ஆண்டுகளில் அவை அர்த்தமில்லாத பயங்கள் என்று தெளிவாகிவிட்டன. சிறு வணிகர்கள் அழியவில்லை. கோயம்பேடு காய்கறி மார்க்டெட் காலி என்றெல்லாம் பயங்காட்டியதெல்லாம் வீண் புரளி என்று தெளிவாகிவிட்டது. ரிலையன்ஸ் மற்றும் மோர் (பிர்லா குழு) செய்ய முடியாததை வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் செய்ய முடியாது. எனவே மீண்டும் வீண் பயம் தேவையில்லை.

          • //இதெல்லாம் ஆதாரமில்லாத பொதுபடுத்துதல்கள் மாசி. இது உண்மை என்றால் சென்ற 20 ஆண்டுகளில் புதிய பெரும் முதலாளிகள் யாரும் உருவாகி இருக்கவே முடியாது. சாமினாதான் அய்யரின் கட்டுரைகளை படிக்கவே இல்லை என்று தெரிகிறது. எனினும் மேலும் ஒன்று :

           http://swaminomics.org/?p=1227
           Towards egalitarianism of opportunity//

           What a load of crap! 36 இந்தியர்கள் பில்லியனர்கள் ஆகி விட்டதால், இந்தியாவில் சமத்துவம் வளர்ந்து விட்டது என்று சிரிக்காமல் நேராக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வதற்கு இந்த புத்திசாலிக்குத்தான் முடியும்.

           அதிகமா படித்து விட்டு ஏசி அறைக்குள் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் எழுதத் தோன்றும், கொஞ்சம் வெளியில் இறங்கி ஒரு ரிக்சா ஓட்டுனரை கேட்டால் ’36 பேர் பில்லியனர் ஆவது என்பது 36 கோடி பேரின் பேரிழப்பின் மீதுதான்’ என்பதை அவருக்குத் தெளிவாக விளக்கி விடுவார்.

           //அனில் அம்பானி ஊழல் செய்வதால், எல்லாரும் அப்படி செய்வதாக அர்த்தம் இல்லை. மேலும், rule of law ஒழுங்காக அமலாகும் நாடுகளில் இங்கு போல் ஊழல் செய்ய முடியாது என்பதை ஒப்பிடவும். அமெரிக்க பேங்கர்களை மட்டும் சொன்னா எப்படி ? கனடா, ஜெர்மனி பற்றி பாருங்களேன்.//

           கனடா, ஜெர்மனி பற்றி சொல்லுங்களேன், நானும் கேட்கிறேன். பார்ப்பதற்கு வித்தியாசமாக எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

           //and you still do no seem to grasp that roots of our corruption in all sectors (incl corporate sector) can be traced to the license raaj era, and the black economy it had spawned till date. also about the effects of govt intervention in the economy, esp in money markets.//

           1990களுக்கு முன்பு லைசன்ஸ் பெற்று கொள்ளை அடித்தார்கள், 1990களுக்குப் பிறகு லைசன்ஸ் தேவைப்படாமல் கொள்ளை அடிக்கிறார்கள் (36 பேர் பில்லியனர் ஆனது அதைத்தான் சொல்கிறது).

           தெருவில் இறங்கி ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் உங்கள் கேள்வியைக் கேளுங்கள், என்னை விடத் தெளிவாக புரியும்படி உங்களுக்கு விளக்குவார்.

           //First go thru all the Swaminomics post fully.//

           dont put me through more such trials please 🙂

          • //இந்தியாவில் சமத்துவம் வளர்ந்து விட்டது என்று சிரிக்காமல் நேராக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வதற்கு இந்த புத்திசாலிக்குத்தான் முடியும். //

           சிவா,

           நீங்க இகழந்தாலும் சரி, trickle down economics மட்டும் தான் வேலை செய்கிறது. இந்தியாவிலும் அதுவே நடக்கிறது. வறுமை அளவு சென்ற 20 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வரும் உண்மையை மறுக்கும் அளவு நீங்க இல்லை என்று நம்புகிறேன்.

           there is no other way to conquer poverty. the recent economic history of Japan, Taiwan, S.Korea and W.Germany stares us in face while N.Korea is starving.

           முன்பு அளித்த சாமினாதன் அய்யரின் சுட்டிகளை படிக்கிறேன் என்று சொன்னதனால் தான் மீண்டும் அளித்தேன். புதிய தொழில் முனைவோர்கள் முன்பு என்றும் இல்லாத அளவு இந்த 20 ஆண்டுகளில் உருவாகிவருவதையே அவர் சுட்டிகாட்டியிருந்தார். உங்க வாதத்தை மறுக்கிறது இது. இதை கிராப் என்பது பேதமை.

           உங்க நிறுவனத்தை மில்லியன் டாலர் கம்பெனியாக மாற்றுவதே லட்சியம் என்றெல்லாம் பேசினீர்கள் !! முதலீடு வேறு செய்ய கேட்டீர்கள் ? மன உளைச்சல் பற்றி எழுதியிருந்தீர்கள். in this issue, you are sibjective mate and not objective. there are thousands of young entreprenuers who had made it good in the past few years. Unfortunately your business model / sector seems not to have worked as per projections.

         • //நீங்க இகழந்தாலும் சரி, trickle down economics மட்டும் தான் வேலை செய்கிறது. இந்தியாவிலும் அதுவே நடக்கிறது. வறுமை அளவு சென்ற 20 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வரும் உண்மையை மறுக்கும் அளவு நீங்க இல்லை என்று நம்புகிறேன்.//

          வறுமை சென்ற 20 ஆண்டுகளில் குறைந்து வருகிறது பச்சைப் பொய் என்று நான் சொல்கிறேன். கொஞ்சம் இணைய அறிக்கைகள், பத்திரிகை செய்திகளிருந்து வெளியே வந்து சாதாரண மக்களிடமும் பேசிப் பாருங்கள்.

          //there is no other way to conquer poverty. the recent economic history of Japan, Taiwan, S.Korea and W.Germany stares us in face while N.Korea is starving.//

          சீனா 1949லிருந்து 1979க்குள் வறுமையை முற்றிலுமாக ஒழித்தது. சமூக வளர்ச்சி குறியூடுகள் அனைத்திலும் (அதே நேரத்தில் வளர ஆரம்பித்த இந்தியாவை விட) பல மடங்கு முன்னிலை வகித்தது.

          1. தாய்வானுக்கு நான் நேரில் போயிருக்கிறேன். பல தாய்வான் தொழிலதிபர்களுடன் நேரில் உறவாடியிருக்கிறேன். நீங்கள் நினைப்பது போன்று பாலும் தேனும் ஓடும் வளர்ச்சி இல்லை அது. அதைப் பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதலாம்.

          2. ஜப்பான், தென் கொரியாவின் வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும். வட கொரியாவுக்கு நான் போனதில்லை, (நீங்களும் போனதில்லை என்று நினைக்கிறேன்).

          அதனால் சும்மா குன்சாக statement விடக்கூடாது.

          //முன்பு அளித்த சாமினாதன் அய்யரின் சுட்டிகளை படிக்கிறேன் என்று சொன்னதனால் தான் மீண்டும் அளித்தேன். புதிய தொழில் முனைவோர்கள் முன்பு என்றும் இல்லாத அளவு இந்த 20 ஆண்டுகளில் உருவாகிவருவதையே அவர் சுட்டிகாட்டியிருந்தார். உங்க வாதத்தை மறுக்கிறது இது. இதை கிராப் என்பது பேதமை.//

          ஏன் crap என்று காரணமும் சொல்லியிருந்தேன். 34 பில்லியனர்கள் உருவானதால் சமத்துவம் அதிகமாகியிருக்கிறது என்று சொல்வது என்னைப் பொறுத்த வரை crapதான். உங்களுக்கு வேண்டுமானால் அது ரோசா மலராக மணக்கலாம்.

          //உங்க நிறுவனத்தை மில்லியன் டாலர் கம்பெனியாக மாற்றுவதே லட்சியம் என்றெல்லாம் பேசினீர்கள் !! முதலீடு வேறு செய்ய கேட்டீர்கள் ? மன உளைச்சல் பற்றி எழுதியிருந்தீர்கள். //

          ஆம். அந்த அனுபவங்களையும், (இன்று காலை கூட வாடிக்கையாளருடன் ஒரு அனுபவம் – நான் சொல்பவற்றுடன் பொருந்தும் அனுபவம்), பிற நிறுவனங்களுடன் நெருக்கமாக உறவாடிய அனுபவங்களையும் சேர்த்துதான், உங்களுக்கு எனது கருத்துக்களைச் சொல்கிறேன்.

          நேர்மையாக, சக மனிதர்களை மதித்து தொழில் செய்யும் தொழில் முனைவர்களுக்கு மன உளைச்சலும், அவர்களை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு பண இழப்பும்தான் மிஞ்சும் என்று நான் சொல்கிறேன். அப்படி இல்லாதவர்கள் (நேர்மை+சக மனிதர்கள் மீது அக்கறை+மகிழ்வான வாழ்க்கை+லாபம் இத்தனையும் ஒரு சேர அனுபவிப்பவர்கள்) உங்களுக்குத் தெரிந்திருந்தால் பெயர்களையும், தொடர்பு முகவரியையும் கொடுங்கள். அவர்களைச் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன்.

          //this issue, you are sibjective mate and not objective. there are thousands of young entreprenuers who had made it good in the past few years. Unfortunately your business model / sector seems not to have worked as per projections.//

          என்னுடைய business modelல் மேலே சொன்ன லாபம் சம்பாதிக்கத் தேவையான உள்ளீடுகள் இல்லை என்பது உண்மைதான். அப்படி இருப்பவர்களின் பட்டியலை தாருங்கள்.

          நீங்கள் அப்படி தொழில் முனைவில் மில்லியன் டாலர் சம்பாதித்திருந்தால் விபரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

          என்னுடைய கருத்துக்கள் – அனுபவங்கள், பொருளாதாரம் பற்றிய வாசிப்பு, சமூக பொருளாதாரம் பற்றி தெரிந்து கொள்ள பெரும் முயற்சி இவற்றின் – தொகுப்பின் மூலமாக உருவானவை. வெறும் ஏட்டுச் சுரைக்காயாக பேசவில்லை.

          • அதியமான்,

           நீங்கள் சுட்டி தருவதால், நானும் ஒரு சுட்டி தருகிறேன் 🙂

           http://www.internationalviewpoint.org/spip.php?article1193

           சீனாவின் வளர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை. எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் பல தகவல்கள் கவனத்துக்குரியவை. இவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக பேச வேண்டும்.

           1. the modernization of Korea and Taiwan has always been state-led. China only adds one more example

           ( கொரியா, தாய்வான் இரண்டு நாடுகளின் நவீன வளர்ச்சி அரசாங்கத்தின் வழிகாட்டலில்தான் நடந்தது. சீனா இன்னொரு உதாரணம்)

           2. “compared to India, Chinese were better ‘socialists’ during the planning era, and better ‘capitalists’ during the reform era.”

           (இந்தியாவுடன் ஒப்பிடும் போது திட்டமிட்ட பொருளாதார கால கட்டத்தில் சிறந்த சோஷலிஸ்டுகளாகவும், சீர்திருத்த கால கட்டத்தில் சிறந்த முதலாளிகளாகவும் சீனர்கள் இருக்கிறார்கள்)

           3. China already out-competed India as far back as 1980 and even earlier in all human development indicators: literacy rate, daily calorie intake, death rate, infant mortality rate, life expectancy, etc.

           (கல்வியறிவு, தினசரி கலோரி நுகர்வு, இறப்பு வீதம், குழந்தை இறப்பு வீதம், சராசரி வயது போன்ற சமூக குறியீடுகளில் 1980க்கும் அதற்கு முன்பும் சீனா இந்தியாவை விட முன்னிலையில் இருந்தது)

           இதற்கு காரணம் இந்தியாவின் தனியார் துறை கொள்ளை அடிப்புதான். சீனாவைப் போல அதைத் தவிர்த்து பெரும்பான்மை மக்களின் ஆட்சியாக அரசுத் துறை முழுமையாக செயல்பட்டிருந்தால், இந்தியாவும் சீனாவைப் போல முன்னேறியிருக்கும்.

          • //வட கொரியாவுக்கு நான் போனதில்லை, (நீங்களும் போனதில்லை என்று நினைக்கிறேன்).

           அதனால் சும்மா குன்சாக statement விடக்கூடாது.
           ///

           இல்லை. நீங்க தான் ஏட்டு சுரைக்காய் கணக்கா பேசறீங்க. வட கொரிய பற்றி படித்து பார்க்கவும். பட்டினி சாவுகள் மற்றும் கொத்தடிமை வாழ்க்கை வாழும் பரிதாபத்துக்குரிய மக்கள்.

           சீனாவின் வரலாறு அறியாதவர் தான் 1950 முதல் 79 வரையில் நடந்த ‘வளர்சியை’ சிலாகிப்பார்கள். 1959 Great Leap Forward என்ற முட்டாள்தனமான முயற்சியினால் உருவான செயற்கை பஞ்சத்தில் மாண்டவர்கள் எத்தனை லச்சம் மக்கள் என்று தெரியுமா ? 1960களின் பிற்பகுதியில் மாவோ (தன் அதிகாரத்தை காத்துகொள்ள, ‘எதிர்களை’ போட்டு தள்ள) தந்திரமாக உருவாக்கிய ‘கலாச்சார புரட்சி’ பற்றி படித்துபார்க்கவும். அல்லது மீண்டும் சீனா சென்று ‘விசாரித்து’ பார்க்கவும். இன்றும் சீனாவில் forced labour camps in ‘prisons’ உண்டு. விசாரிக்கவும். பிறகு தெரியும் யார் ‘ஏட்டு சுரைக்காய்’ என்று.

           உங்களை விட நான் 3 ஆண்டுகள் பெரியவன். விரிவான அனுபவம் உண்டு. வறுமையை பார்த்தவன் தான். குறைந்த சம்பளத்தில் பல இடங்களில், பல வருடங்கள் வேலை பார்த்த அனுபவம் உண்டு. பல இடங்களில் சுற்றியிருக்கிறேன். பல தரப்பட்ட மக்களுடன் பழகுகிறேன்.
           30 ஆண்டுகளுக்கு முன்பை விட வறுமை குறைந்தே உள்ளது. EPW என்பட்டும் ஒரு ‘இடதுசாரி’ பத்திர்க்கை வெளியிட்ட ஆய்வறிக்கையை பலமுறை அளித்துள்ளேன். எதையும் படிக்காமல் சும்மா பேச வேண்டாமே. உண்மையில் வறுமை குறையவில்லை என்றால், கண்டிப்பாக எனது கருத்துக்களை, கொள்கைகளை மாற்றிக்கொள்வேன் தான். வறட்டு பிடிவாதமோ அல்லது பொய்யான நம்பிக்கைகளோ எம்மிடம் இல்லை என்றே கருதுகிறேன்.

           சரி, இதற்க்கு மேலும் நீங்க படிக்காமலே தொடர்ந்தால், ஒரே ஒரு யோசனை தான். தொழிலை விட்டுவிட்டு முழுனேர கம்யூனிஸ்டாக செயல்படலாம். ம.க.இ.க அல்லது மாவோயிஸ்டுகள் அமைப்பில் சேர்ந்து ‘புரட்சிக்காக’ போரட்டலாம். (காந்தி படத்தையும், புத்தகங்களையும் தூக்கி வீசிவிட வேண்டும்).

           //அப்படி இல்லாதவர்கள் (நேர்மை+சக மனிதர்கள் மீது அக்கறை+மகிழ்வான வாழ்க்கை+லாபம் இத்தனையும் ஒரு சேர அனுபவிப்பவர்கள்) உங்களுக்குத் தெரிந்திருந்தால் பெயர்களையும், தொடர்பு முகவரியையும் கொடுங்கள். அவர்களைச் சந்தித்துப் பேச ஆவலாக இருக்கிறேன். ///

           கோவையில் ஒரு பெரிய தொழில் முனைவோர் குடும்பமே இருக்கிறார்கள். பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள். சுழியில் ஆரம்பித்து, 40 ஆண்டுகளில் இன்று பல நூறு கோடி டர்னோவர் செய்கிறவர்கள். மிக மிக நேர்மையானவர்க, எளிமையானவர்கள். கரூரிலும் அதே போல் உள்ளனர். வாங்க நேரில் பேசலாம்.

          • //இல்லை. நீங்க தான் ஏட்டு சுரைக்காய் கணக்கா பேசறீங்க. வட கொரிய பற்றி படித்து பார்க்கவும். பட்டினி சாவுகள் மற்றும் கொத்தடிமை வாழ்க்கை வாழும் பரிதாபத்துக்குரிய மக்கள்.//

           என்னை ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்லி விட்டு அடுத்த வாக்கியத்திலேயே படித்துப் பார்க்கவும் என்று சொல்கிறீர்களே :-). இணையத்தில் சுட்டிகள் தருவது கூடவே நீங்கள் சந்தித்த பேசிய வெற்றிகரமான தொழில் முனைவர்கள் பற்றிய தகவல்கள், தொழிலாளர்களின் வாழ்ப்பை விபரங்கள் என்று பகிர்ந்து கொண்டால் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இணையச் சுட்டிகளைத் தேடித் தருவதற்கு கூகுள் போன்ற தேடு பொறிகள் இருக்கவே இருக்கின்றன.

           //சீனாவின் வரலாறு அறியாதவர் தான் 1950 முதல் 79 வரையில் நடந்த ‘வளர்சியை’ சிலாகிப்பார்கள். 1959 Great Leap Forward என்ற முட்டாள்தனமான முயற்சியினால் உருவான செயற்கை பஞ்சத்தில் மாண்டவர்கள் எத்தனை லச்சம் மக்கள் என்று தெரியுமா ? 1960களின் பிற்பகுதியில் மாவோ (தன் அதிகாரத்தை காத்துகொள்ள, ‘எதிர்களை’ போட்டு தள்ள) தந்திரமாக உருவாக்கிய ‘கலாச்சார புரட்சி’ பற்றி படித்துபார்க்கவும். அல்லது மீண்டும் சீனா சென்று ‘விசாரித்து’ பார்க்கவும். இன்றும் சீனாவில் forced labour camps in ‘prisons’ உண்டு. விசாரிக்கவும். பிறகு தெரியும் யார் ‘ஏட்டு சுரைக்காய்’ என்று.//

           யார் சொன்னார்கள்? நான் சீனாவில் 4.5 ஆண்டுகள் (1997 முதல் 2001 வரை) வசித்து பணி புரிந்திருக்கிறேன். வடக்கே பெய்ஜிங்கிலிருந்து தெற்கே ஹாங்காங் வரை, தாய்வான் முதல் ஹெனான் வரை பல இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான மக்களுடன் பேசியிருக்கிறேன்.

           1. உங்கள் புள்ளிவிபரங்கள், அவதூறுகளை நான் முழுவதுமாக நிராகரிக்கிறேன்.

           2. மாவோ பற்றிய அவதூறுகள் கீழ்த்தரமான மஞ்சள் பத்திரிகை பாணியிலானவை. பதில் சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவை. (சீனா சென்று நான் விசாரித்திருக்கிறேன்)

           3. இன்றும் சீனாவில் உழைப்பு முகாம்கள் இருந்தால் நல்லதுதான். அதே போல நம்ம ஊரில் இருந்தால் ஜெயேந்திர சரஸ்வதி, முகேஷ் அம்பானி, ஜெயலலிதா, அழகிரி, நரேந்திர மோடி, விட்டல், மிட்டல், டாடா போன்றவர்களை அனுப்பி வைத்து உடலுழைப்பின் அருமையை உணர்த்த வசதியாக இருக்கும்.

           //உங்களை விட நான் 3 ஆண்டுகள் பெரியவன். விரிவான அனுபவம் உண்டு. வறுமையை பார்த்தவன் தான். குறைந்த சம்பளத்தில் பல இடங்களில், பல வருடங்கள் வேலை பார்த்த அனுபவம் உண்டு. பல இடங்களில் சுற்றியிருக்கிறேன். பல தரப்பட்ட மக்களுடன் பழகுகிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்பை விட வறுமை குறைந்தே உள்ளது. EPW என்பட்டும் ஒரு ‘இடதுசாரி’ பத்திர்க்கை வெளியிட்ட ஆய்வறிக்கையை பலமுறை அளித்துள்ளேன். எதையும் படிக்காமல் சும்மா பேச வேண்டாமே. உண்மையில் வறுமை குறையவில்லை என்றால், கண்டிப்பாக எனது கருத்துக்களை, கொள்கைகளை மாற்றிக்கொள்வேன் தான். வறட்டு பிடிவாதமோ அல்லது பொய்யான நம்பிக்கைகளோ எம்மிடம் இல்லை என்றே கருதுகிறேன்.//
           //

           இடது சாரி பத்திரிகை வெளியிட்ட ஆய்வறிக்கையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் (இதைத்தான் ஏட்டுச் சுரைக்காய் என்பது), ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களின் ஓலக்குரலைப் பற்றி நான் சொல்கிறேன், அதைக் கேட்பதற்கு நீங்கள் தயாராக இல்லை.

           //சரி, இதற்க்கு மேலும் நீங்க படிக்காமலே தொடர்ந்தால், ஒரே ஒரு யோசனை தான். தொழிலை விட்டுவிட்டு முழுனேர கம்யூனிஸ்டாக செயல்படலாம். ம.க.இ.க அல்லது மாவோயிஸ்டுகள் அமைப்பில் சேர்ந்து ‘புரட்சிக்காக’ போரட்டலாம். (காந்தி படத்தையும், புத்தகங்களையும் தூக்கி வீசிவிட வேண்டும்).//

           நான் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைக்கு நன்றி. கருத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

           //கோவையில் ஒரு பெரிய தொழில் முனைவோர் குடும்பமே இருக்கிறார்கள். பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள். சுழியில் ஆரம்பித்து, 40 ஆண்டுகளில் இன்று பல நூறு கோடி டர்னோவர் செய்கிறவர்கள். மிக மிக நேர்மையானவர்க, எளிமையானவர்கள். கரூரிலும் அதே போல் உள்ளனர். வாங்க நேரில் பேசலாம்.//

           எப்போது போகலாம் கோவைக்கு? டிசம்பரில் எந்த தேதி வசதி உங்களுக்கு? அவர்களை சந்தித்து விரிவாக தகவல்கள் திரட்டி விட்டு விவாதிக்கலாம்.

          • //1. உங்கள் புள்ளிவிபரங்கள், அவதூறுகளை நான் முழுவதுமாக நிராகரிக்கிறேன்///

           :))) join the club masi, with vinavu group. உங்களை ஒரு பகுத்தறிவாளர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன். (இப்பதான் புரியுது ஏன் நீங்க பிஸினஸில் ஜெயிக்க முடியலைன்னு).

           சரி, மேற்கொண்டு பேச ஒன்னுமில்லை. (கோவைக்கு எப்ப வேண்மானாலும் போகலாம். 40 ஆண்டுகால குடும்ப நண்பர்கள் அவர்கள். அலைபேசியில் பிறகு உங்களுடன பேசுகிறேன்).

          • // join the club masi, with vinavu group.//

           நீங்கதான் கிளப் ஓனரா? 🙂

           // உங்களை ஒரு பகுத்தறிவாளர் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டேன்.//

           அவதூறுகளையும், ஏட்டுச் சுரைக்காய்களையும் தூக்கிப் பிடிப்பதுதான் பகுத்தறிவு என்றால் அது எனக்கு இல்லைதான் 🙂

           // (இப்பதான் புரியுது ஏன் நீங்க பிஸினஸில் ஜெயிக்க முடியலைன்னு).//

           இதை ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

           //சரி, மேற்கொண்டு பேச ஒன்னுமில்லை. (கோவைக்கு எப்ப வேண்மானாலும் போகலாம். 40 ஆண்டுகால குடும்ப நண்பர்கள் அவர்கள். அலைபேசியில் பிறகு உங்களுடன பேசுகிறேன்).//

           கேட்டு விட்டு சொல்லுங்க! பிஸினசில் ஜெயிக்க என்ன வேணும் என்று நாமும் கண்டுபிடிப்போம்.

 5. மிக மிக அருமையான கட்டுரை.. படிப்பவர்களுக்கு மிக எளிதாக புரிகின்ற வகையில் அருமையாக எழுதப்பட்டுள்ளது. இதை என்னுடைய தளத்தில் வெளியிட அனுமதி கிடைக்குமா ?

 6. //மக்களின் கவனம் அண்ணா அண்ட் கோவின் குணச்சித்திர நடிப்பில் இருந்த இந்த நேரத்தில் இன்னொரு தளத்தில் அதிசயப்படும் இன்னொரு சாதனை நடந்து கொண்டிருந்தது.

  1.) 2010-11-ல் எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்தது ($30 பில்லியன் – 1,35,000 ரூபாய்கள்). ஆனால் BSE-500 நிறுவனங்களின் எஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி 11% மட்டும்தான் அதிகரித்திருந்தது ($1.38 பில்லியன் – 6,100 கோடி ரூபாய்கள்).

  அதாவது சுமார் 1,29,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி அதிகரிப்பு சிறு-நடுத்தர நிறுவனங்களின் சாதனையால் நடந்து அதற்கான அன்னிய செலாவணியும் நாட்டுக்குள் பாய்ந்து வந்திருந்தது.

  2.) 2010-11-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு $22 பில்லியன் (99,000 கோடி ரூபாய்) என்று அரசாங்க புள்ளி விவரங்கள் சொல்ல, உலகளாவிய நிதி பாய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரங்கள் $4.5 பில்லியன் (18,000 கோடி ரூபாய்) மட்டுமே இந்தியாவுக்குள் வந்ததாக சொல்லின.

  அதாவது சுமார் 81,000 கோடி ரூபாய் அளவுக்கான ஓட்டை கணக்குகளில் தெரிகின்றது அல்லது புள்ளிவிவரங்கள் பொய் சொல்கின்றன.

  3.) 2010-11ல் உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் $13 பில்லியனிலிருந்து (71,000 கோடி ரூபாய்) $29 பில்லியன் (1,36,000 கோடி ரூபாய்) ஆக அதிகரித்தது. இதிலும் BSE 500ல் வரும் 11 நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு $1 பில்லியனுக்கும் குறைவு (3,700 கோடி) என்று தெரிய வருகிறது. மீதி $15 பில்லியன் (68,000 கோடி அதிகரிப்பு எங்கிருந்து வந்தது?)

  4.) 2010-11-ல் தாமிர உபகரணங்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் 8,500 கோடி ரூபாய்களிலிருந்து 36,700 கோடி ரூபாய்களாக அதிகரித்திருந்தது. இது இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்.
  உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 2011-12-க்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட இந்த வீக்கத்தைக் காட்டி மன்மோகன் கும்பல் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தனர். 2011 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை ஏற்றுமதி 53% அதிகரித்தது, ஜூலை மாதம் மட்டும் 81% அதிகரித்திருந்தது (அன்னா சீசன் 1க்கும் அன்னா சீசன் 2க்கும் இடைப்பட்ட காலம் இது).

  // அவ்வப் போது வந்து சாமியாட்டம் ஆடும் அதியமான் அண்ணாச்சி மேற்படி தாரளயமய புள்ளீவிவரம் டவுசர் கழண்ட இடங்களீல் மட்டும் மவுனசசமியாக செல்வதேன்?

 7. //2006இல் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் மற்றும் வேறு சிலர் இத்துறையில் நுழைய அனுமதி பெற்ற போது, இதை விட கடும் ஆவேசமான எதிர்ப்பு, ஆர்பாட்டங்கள். ஆனால் இந்த 6 ஆண்டுகளில் அவை அர்த்தமில்லாத பயங்கள் என்று தெளிவாகிவிட்டன.//

  //When the first Reliance Fresh store opened in Hyderabad last October[citation needed], not only did the company say the store’s main focus would be fresh produce like fruits and vegetables at a much lower price, but also spo