privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?

நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?

-

  •  நவம்பர் 9-ம் தேதி உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வாரில், ஆசிரமம் ஒன்றில் நடந்த யாக பூஜையில் கலந்து கொள்ளச் சென்ற பக்தர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 பேர் பலி..!
  • 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ராஜஸ்தானின் சாமுண்டா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் பலி..!
  •  ஆகஸ்டு 2008-ல் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள நைனா தேவி கோயில் ஏற்பட்ட நெரிசலில் 160க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலி..!
  • ஜனவரி 2005-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் நடந்த வோய்த் திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 350 பக்தர்கள் பலி…!
  • கடந்த ஜனவரியில் சபரிமலையில் ஏற்பட்ட நெரிசலில் 104 பேர் பலி..!

கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஏற்பட்ட நெரிசல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலிருக்கும் என்கின்றன பத்திரிகைச் செய்திகள். இங்கே மட்டுமல்லாமல் உலகெங்கும் மக்கள் கூடும் பல்வேறு மதத் திருவிழாக்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் சிக்கிச் செத்துப்போனவர்கள் பற்றிய செய்திகளை நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு முறை இவ்வாறான ‘விபத்துகள்’ நடந்த பின்னும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காத அரசை உண்டு இல்லை என்று கிழித்துத் தொங்கப் போடும் ஊடகங்கள், தன்னை நம்பி வந்த பக்தர்களை அம்போவென்று கைவிட்ட கடவுளைக் கேள்வி கேட்டதில்லை. அரசு மருத்துவமனைகளைத் தீராத நோயில் வீழ்த்தி அப்பாவி மக்கள் பலரின் உயிரைக் காவு வாங்கிய அரசிடம், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீர்படுத்த வேண்டுமென்று இது வரை கேட்டேயிராத வாய்கள் தான் ‘சபரிமலைக்குச் செல்லும் சாலைகள் சரியில்லை’ என்று காரணங்களைப் பீராய்கின்றன.

லேசாகப் பெய்த தூரல் மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத சாலைகளை அமைத்து மக்களை பாள்ளத்தாக்குகளுக்குள் பயணிக்க விட்டிருக்கும் அரசு கோயில்களுக்கு ஒழுங்கான சாலைகள் அமைக்க வேண்டுமென்று கேட்கின்றன ஊடகங்கள். மக்களின் வாழ்வியல் அழுத்தங்களையும் துன்ப துயரங்களையும் மக்களை ஆளும் இந்த அரசமைப்பு முறையால் தீர்க்கவியலாத கையாலாகாத்தனம் தானே அவர்களை கோயில் குளங்களை நோக்கி விரட்டியடிக்கின்றன? அவ்வாறிருக்க, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பிரதான கடமை கடவுளுக்கல்லவா இருக்கிறது? கேள்வி கேட்பதானால் முதலில் கடவுளையல்லவா கேட்டிருக்க வேண்டும்.

நாங்கள் ஒன்றும் கடவுளின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடவில்லை. பையனுக்கு என்ஜினியரிங் சீட்டு வேண்டும், பொண்ணுக்கு நல்ல வரன் வேண்டும், ஊருக்குப் போக ட்ரெயின் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதில் தொடங்கி வைகுண்டத்திலோ கைலாயத்திலோ பரலோகத்திலோ துண்டு போட்டு சீட்டுப் பிடித்துக் கொடுக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவர் தான் கடவுள் என்பதை பக்தர்களைப் போலவே நாங்களும் நம்பத் தடையாய் இருப்பது ஒன்று தான். இத்தனை வல்லமையும் ஆற்றலும் சக்தியும் கொண்ட அய்யப்பன் தன்னை நாடி வரும் அப்பாவி பக்தர்களின் உயிர்களைக் ஏன் காப்பாற்ற வரவில்லை? பக்தர்களுக்காவது கல்லும் முள்ளும் கொண்ட நடை பயணம் – அய்யப்பனுக்கோ புலியின் மீதல்லவா பயணம்?

சென்றமுறை சபரி மலை நெருக்கடியில் தனது நெருங்கிய உறவினரை பலி கொடுத்த நண்பர் ஒருவர், செத்துப் போனவருக்கு கட்டாயம் மோட்சத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று புல்லரிப்போடு பேசிக் கொண்டிருந்தார் – இத்தனைக்கும் இறந்தவர் ஏரியாவில் ஒன்னாம் நெம்பர் பொறுக்கி. பொறுக்கியாய் இருந்தாலும் சரி நல்லவனாய் இருந்தாலும் சரி – மலையில் செத்துப் போனால் அவர்களும் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதை நாங்கள் மனதார நம்பவே விரும்புகிறோம்.

ஆனால், லோக்கல் பாமரனுக்கு கூட வாய்க்கும் இந்த பாக்கியம்  மன்மோகனுக்கோ சிதம்பரத்துக்கோ அம்பானிக்கோ வாய்க்காமலிருக்கிறதே என்பது தான் எமது ஆச்சரியம். மகாமகக் குளத்தில் உடன்பிறவா சகோதரிகள் தண்ணீரில் குளிக்க, குளத்தின் கரையில் சாமானிய பக்தர்கள் ரத்தத்தில் குளிக்க நேர்ந்த அவலத்தின் காரணம் யாதோ? ஆன்மீக அன்பர்கள் யாரேனும் இதற்கு பதிலளித்தால் நாங்களும் தெளிவு பெற்றுக் கொள்வோம்.

தேர்தலுக்கு முன் நூற்றுக்கணக்கான யாகங்கள் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்களையும் முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்த ஜெயாவின் வேண்டுதல்களுக்கு செவி சாய்த்து வெற்றியைப் பரிசளிக்கும் கடவுள் தேர்தல் வெற்றிக்குப் பின் அப்பாவி பக்தனிடம் அம்மா அடிக்கும் பிக்பாக்கெட்டைத் தடுத்து நிறுத்த முடியாததன் மர்மம் என்னவோ யாமரியோம் பராபரமே!

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவன் விவசாயம் பொய்த்து கடன் கழுத்தை நெறிக்க மனம் நொந்து பூச்சிக் கொல்லி மருந்து புட்டியைத் திறக்கும் விவசாயி வீட்டுக்குள்ளும் ‘நிறைந்திருப்பான்’ என்று ஆன்மீக அன்பர்களைப் போலவே நாமும் நம்பத் தயார் தான் – ஆனால், அங்கே அவர் அந்தச் சாவுகளைத் தடுக்காமல் எதைக் கழட்டிக் கொண்டிருந்தார் என்பதைத் தெரிவித்தார்களென்றால் நம்புவதற்கு வசதியாய் இருக்கும்.

மனம் கல்லாய்ப் போன மனிதர்களால் கடவுள் கல்லானாரா அல்லது கடவுளே வெறும் கல்லென்பது தெரிந்திருப்பதால் தான் ‘பெரிய’ மனிதர்களின் மனங்கள் கல்லாய்ப் போனதா? கருவறைக்குள்ளேயே கள்ளக்காதலிகளோடு கூத்தடித்த தேவநாதனும் கருவறை முன்னேயே சங்கரராமனைப் போட்டுத் தள்ளிய காஞ்சி சுப்புணியும் பின்னது தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள். நெரிசல்களில் செத்துப் போனது பக்தர்கள் மட்டுமல்ல – கடவுளும் தானென்பதை யாக பலத்தோடு அதிகாரத்தைப் பிடித்து மக்களின் தாலியறுக்கத் துணிந்த ஜெயாவின் நடவடிக்கை காட்டுகிறது.

மதம் மக்களுக்கு அபினி என்ற மார்க்ஸ் அதைத் தொடர்ந்து அதுவே இதயமற்ற உலகின் இதயமாக உள்ளது என்கிறார். தம்மை நாளும் நாளும் வாட்டி வதைக்கும் இகலோகத் துன்பங்களினின்றும் தப்பி ஆறுதல் தேட பரலோகத்தின் அருளை வேண்டிக் கூடும் அப்பாவி பக்தர்களின் ஆன்மீக அவலம் புரிந்து கொள்ளக் கூடியதே. இருளில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடும் அந்தப் பாமரத்தனம் ஒரு கையறு நிலை. ஆனால், அந்த இருளின் சொந்தக்காரர்களாயும் தூதர்களாயும் விளங்கும் இந்த அமைப்பு முறையையும் ஆளும் கும்பலையும் எதிர்த்துப் போராடி முறியடிப்பதே இந்தத் துன்ப துயரங்களினின்றும்  இறுதி விடுதலையைப் பெற்றுத் தருமென்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் நாளில் சபரி மலையை மொத்தமாக இழுத்து மூடச் சொல்லி விட்டு ஊருக்குள் போட்ட ரோடு ஏன் ஒரு மழையில் காணாமல் போகிறது என்கிற குரலை எழுப்புவார்கள்.

இதுகாறும், இனியும் நெரிசலில் சிக்கி இறந்து போகும் பக்தர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் நாம் கடவுளுக்கு கல்லறையை கட்டி விட்டு, கடவுளை விட அதிகாரமுடைய இந்த ஆட்சிமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். புண்ணியத் தலங்களுக்கு போகும் யாத்திரை மறைந்து போராட்டக் களத்துக்கு வரும் பயணம்தான் நமது இகலோக துன்பங்களுக்கு நிவாரணம் தரும். பக்தர்கள் சிந்திப்பார்களா?

______________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. “உசத்தி நல்லெண்ணை ஊத்தி,
    உச்சந்தலையில் சீயக்காய் தேய்ச்சி,
    சந்தனம் ஜவ்வாது தெளிச்சி,
    சனிக்கிழமையும் அதுவுமா
    ஸ்னானம் முடிச்சு,
    சாங்கியப்படியே
    புதுப் பட்டு வேட்டி கட்டி,
    பட்டு சரிகைத் தலைப்பாக் கட்டி,
    நெற்றி நிறைய நாமம் போட்டு,
    கோவிந்தா கோவிந்தா கோஷத்தோடு,
    நல்லபடியா தூக்கி வைச்சா,
    வாழ்ந்து கெட்ட மனுஷன் போகுறது
    நேரடியா வைகுந்தம்தானாம்.
    அதனால சுத்தி நிக்கற யாரும்
    அழுவக் கூடாது.”

    வெட்டியான் நிப்பாட்டி
    ஒரு வார்த்தை சொன்னாரு :

    “அவரு வைகுந்தம் போவட்டுஞ்சாமி,
    ஆரு வேண்டாம்னு சொன்னது?.
    ஆனா ஒண்ணு…
    சனிக்கிழமை போற பொணம்
    துணை கேக்குமாம்.
    ஆரும் கூட போறீங்களா?
    அதனால எங்க சாங்கியப்படி
    கோழிக்குஞ்சு ஒண்ணு கட்டி
    கூடவே தொங்கவிடணும்.
    கொண்டுவாங்க சீக்கிரம்.”

    ஒரேயொரு நொடிதான்…!
    வைகுந்தம் போகிற
    வாய்ப்புக் கிடைத்தது
    கோழிக்குஞ்சுக்கு!

  2. அம்பி டேவனாதனும்,காஞ்சி ஜெயேந்திரனுக்கும் கடவுள் இல்லை
    என்ட்ரு நன்ராகவே தெரியும்…..

  3. அய்யா இந்த கட்டுரை பார்ப்பன இந்து மதம் என்கிற டேக்கில் உள்ளது!ஏன் மெக்க மதினா செல்பவர்கள் நெரிசலில் சாவதில்லையா?போப்பை பார்க்க குவிகிரவர்கள் சாவதில்லையா?இது மதம் சார்ந்ததல்ல!எல்லா மதன்களுளும் இது உண்டு!இதை திருத்தி கொள்ளவும்!

    • அட நீங்க வேற .மற்ற மதங்கள் பற்றி பேசுனா இந்நேரம் நூறு காமன்டு கண்டிச்சு வந்திருக்கும்!எதுக்கு வம்புன்னுதான்!பெரியார் இதைத்தானே செய்தார் கடவுள் இல்லை ன்னு சொல்லிட்டு பிற மதங்களை தாக்க கூடாதுன்னு சொல்லி காமெடி நாத்திகம் பெசுனாரே!

      • அவர் அன்று பேசும் பொழுது அது அனைவருக்கும் புரியவில்லை தோழரே!!! இப்பொவாது மக்கள் புரிந்து நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும்!

  4. பெரியார் இதைத்தானே செய்தார் கடவுள் இல்லை ன்னு சொல்லிட்டு பிற மதங்களை தாக்க கூடாதுன்னு சொல்லி///….அது உண்மைதான்!

    ********************************************************************************
    26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

    ‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’

    • என்னய்யா உங்க உங்களின் அறிவுகூர்மை. நம்ம வீட்டுக்காரி சரியில்லையானா அவகிட்டதான் விவாக ரத்து வாங்கலாம். பக்கத்துக்கு வீட்டுக்காரி கிட்ட யா கோவிச்சுப்பே?

      • நம்ம வீட்டுக்காரி சரியில்லையானா அவகிட்டதான் விவாக ரத்து வாங்கலாம்///
        .
        .
        அய்யா நீங்க சொல்வது ஒரு வகையில் நியாயம்தான்!ஆனால் இங்குள்ள சாதி கொடுமைகளுக்கு பெரியார் சொன்ன தீர்வென்ன?மத மாற்றம்!ஆப்ரகமிய மதங்களான கிருத்துவம் மற்றும் இஸ்லாம் சிறந்த தீர்வென்று சொன்னார்!அப்போ அந்த மக்கள் அங்கு மதம் மாறுவதற்கு முன்னர் அந்த மத குறைகளையும் எடுத்து சொல்வதுதானே நியாயம்?(அம்பேத்கர் அதை செய்தார்!)

        • நான் பெரியாரைப் பற்றி முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு “முழுமையான நாத்திகவாதியாக” பரிணமித்தது அவரது 50, 60 வயது காலகட்டங்களில்தான் என்று எங்கோ வாசித்த ஞாபகம். அதற்குமுன் அவருக்கும் நிலையான சிந்தனை இருந்ததில்லை. தேடல்களே தொடர்ந்து கொண்டிருந்தன எனக் கருதுகிறேன். நீங்கள் குறிப்பிடும் காலகட்டம் அதுவாக இருக்கலாம்.

  5. கடவுள் இருக்காறா?!!!!!
    இருக்காற்!!!!!!!!!!!: அதும் அப்பாவி மக்களை பலி எடுக்கும்! எமனாக!!!
    இதனால்: அரசங்கம் பல வழியில் உதவிகளை மேற்கொண்டால்! 100-ல் 85% மக்களை உயிறை காப்பாற்ற முடியிம்!!!!!!!
    ஆனால்?
    முடியிமா!!!!!!!!

  6. வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசுவது என்ற விதத்தில் எழுதப் பட்டுள்ள கட்டுரை. கோவில்களுக்குச் சென்றதால் நடந்து விபத்துக்களையும், அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்புகளையும் பட்டியல் போட்டுள்ளீரே, நாட்டில் வேறெந்த வாகன விபத்துக்களுமே நடக்கவில்லையா, அல்லது அந்த விபத்துகளில் யாரும் சாகவே இல்லையா? அல்லது இனி யாருமே கோவில்களுக்குச் செல்லக் கூடாது என்று நிறுத்தி விட்டால் நாட்டில் விபத்துக்கள் நடப்பது நின்று விடுமா? அல்லது நல்ல ரோடுகளில் விபத்துகளே நடப்பதில்லையா? விபத்து என்பதற்கு அர்த்தமே, அது எதிர்பாராமல் நடப்பது என்பதுதானே? அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே, அதற்க்கு கோவில்களுக்குச் செல்பவர்களை மற்றும் குற்றவாளிகள் என்று போட்டுத் தாக்குவது நியாயமா? உங்களுக்கு ரோடு சரியில்லை காரணம் ஆளும் அரசு சரியில்லை. நடப்பது மக்களாட்சிதானே? நீங்களாகத் தேர்ந்தெடுத்த நபர்கள்தானே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்? அவர்களிடம் போய் நல்ல சாலைகள் வேண்டுமென்று போர்க்கொடி உயர்த்துவதுதானே? அது முடியாது, ஏனென்றால் ஓட்டு போட காசு வாங்கிவிட்டீர்கள், இப்போது ஊமையாகத்தான் இருக்க வேண்டிவரும். அவன் சாராயக் கடையை திறந்து விட்டு ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் குடித்தே செத்தாலும் உங்களால் கேள்வி கேட்க முடியாது, அவன் எத்தனை லட்சம் கோடிகள் சுருட்டினாலும் கேள்வி கேட்க வக்கில்லை, ஏமாந்தவன் கோவிலுக்குச் செல்பவனும், கடவுளும்தான். ஏனென்றால் அவர்கள் தான் உங்கள் அடாவடித்தனந்த்தை எதிர்த்து கேள்வியே கேட்க மாட்டார்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

    • ஒரு சாலை விபத்திலிருந்து அல்லது தன்னை பார்க்க வரும் பக்தர்களை காப்பாற்ற முடியாத கடவுளை இனியும் எதற்க்கு நம்ப வேண்டும்? (இது எல்ல மதத்திற்க்கும் பொருந்தும்)

      //இப்போது ஊமையாகத்தான் இருக்க வேண்டிவரும். அவன் சாராயக் கடையை திறந்து விட்டு ஊரில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் குடித்தே செத்தாலும் உங்களால் கேள்வி கேட்க முடியாது, அவன் எத்தனை லட்சம் கோடிகள் சுருட்டினாலும் கேள்வி கேட்க வக்கில்லை, ஏமாந்தவன் கோவிலுக்குச் செல்பவனும், //

      நீங்கள் வினவிற்க்கு புதிய வாசகர் என்று நினைக்கிறேன். வினவில் இதையெல்லாம் எதிர்த்த நிறைய கட்டுரைகள் உள்ள நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கவும்.

      • பரவாயில்லை விடுங்க, கன்னுக்குட்டி ஏதோ தெரியாம புதுசா கருத்து சொல்லிடிச்சி. போக போக தெரிஞ்சிக்கும்…

      • ஏட்டில் சர்க்கரை என்று எழுதிக் கொண்டிருந்தால் இனிக்குமா? நீங்கள் கட்டுரைகள் எழுதலாம், அதனால் பலன் என்ன? சாராயக் கடைகள் மூடப் படுமா? ஸ்பெக்ட்ரம்-ல் கொள்ளை போன 1.76 லட்சம் கோடி மீண்டு வருமா? அபகரிக்கப் பட்ட நிலங்கள் உரியவருக்குப் போய்ச் சேருமா? குடிகாரர்களாகிவிட்ட தமிழ்க் குடிமக்கள் அதை விடுவார்களா? அல்லது நாட்டில் ரோடுகள் எல்லாம் போடப் பட்டு விடுமா? You can’t make any tangible change to the existing degraded third class governance in the state, then what is the point in simply writing articles?

        • ஆக, வினவு எழுதிய கட்டுரை சர்க்கரைக்கொப்பானது என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைச் செயல்படுத்தவே போராட்டகளத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார்கள். வெறுமனே எழுதுவதோடு நின்றுவிடுவதல்ல! நீங்கள் வினவைத் திட்டவில்லை. சீக்கிரம் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற வேகம் தெரிகிறது. நல்லது.

    • ஜெயதேவ்,
      கட்டுரையின் மையமான நோக்கமே “உங்களுக்கு வாழ்க்கையில், குடும்பத்தில், சமூகத்தில் பிரச்சினை என்றால் கோவிலுக்கு ஓடாதீர்கள். அங்கு உங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. மாறாக, பிரச்சினையின் மூல காரணத்தை அறிந்து அதைக் களைய முயலுங்கள்” என்பதுதான்!

      கையறுநிலையைத் தாங்கும் மனப்பக்குவத்தைப் பெறவே கடவுளை நாடுகிறோம் என்று பக்தி ஆர்வலர்கள் சொன்னால், அந்தக் கையறு நிலையை வேரறுக்க கை சேருங்கள், போராடுவோம் என்கிறது கட்டுரை. இதை மனதிற்கொண்டு மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள்.

      • \\கட்டுரையின் மையமான நோக்கமே “உங்களுக்கு வாழ்க்கையில், குடும்பத்தில், சமூகத்தில் பிரச்சினை என்றால் கோவிலுக்கு ஓடாதீர்கள். அங்கு உங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. மாறாக, பிரச்சினையின் மூல காரணத்தை அறிந்து அதைக் களைய முயலுங்கள்” என்பதுதான்!\\ கடவுள் அப்படின்னு ஒரு concept- டே இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள், அது உங்கள் இஷ்டம், ஆனால் மற்றவர்களையும் ஏன் நம்பச் சொல்கிறீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. வினவு பதிவுகளை படிக்காதீர்கள், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? கோவிலுக்குச் செல்வதனால் பலனுண்டா இல்லையா என்பதை போகிறவர்தானே தீர்மானிக்க வேண்டும்? நீங்கள் எப்படி தீர்மானிக்கிறீர்கள்? மேலும், கோவிலுக்குப் போகிறவர்கள் நாட்டை ஆள்பவர்கள் ஊழல் செய்கிறார்கள், அதை நிறுத்து என்று போனால் நீங்கள் வேண்டாம், வாருங்கள் போராடலாம் என்பதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் தனக்கு ஏற்ப்பட்டுள்ள கஷ்டங்கள் என ஆரம்பித்து, எல்லாமும் இருக்கிறது வெறும் மன நிம்மதி இருந்தால் போதும் என்று செல்பவர்கள் வரை நோக்கம் வெவ்வேறாக இருக்கிறது. அங்கு சென்றால் பிரச்சினை தீர்வதாக அவன் நம்புகிறான், அவன் நம்பிக்கையில் குறுக்கிடுவது தனி மனித உரிமையில் தலையிடுவதாகாதா? தங்களை கோவிலுக்கு வா என்றால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? நீங்கள் மட்டும் கோவிலுக்குப் போகாதே என்று மற்றவர்களை எப்படி சொல்லலாம்? அல்லது இறை நம்பிக்கை இல்லாத கம்யுனிச நாடுகளில் மக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக உள்ளார்களா? நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் அதற்க்கு போராட வேண்டும்,ஆனால் அதற்க்கு இறை நம்பிக்கையை தாக்குவது எங்ஙனம் சரியாகும்?

        • கட்டுரை ய படிச்ிடு பொவியா…. இதுக்கெல்லம் இங விலக்கம் கெடைகாதுகி

          • பிற மொழிகளில் பின்னூட்டமிட்டால் எப்படி நாங்கள் விவாதிப்பது. புரியும்படி தமிழில் எழுதப் பயிற்சி எடுத்தபின் இங்கு வரலாமே!!

        • ஜெயதேவ்,
          கடவுள் நம்பிக்கையை விட மனிதநேயம் முக்கியம் என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். மனிதத்தை சிதைக்கும் எந்த விஷயமும் புறந்தள்ள வேண்டியதே! மனிதன் தனிநபராய் வாழ்பவன் அல்ல. சமூகமாய் வாழ்பவன். அவனது ஒவ்வொரு செயலும் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வினையை நிச்சயமாய் ஏற்படுத்தும். தற்போது வாழ்க்கை நிச்சயமற்ற சூழலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு சமன் நிலை ஏற்படுத்த வேண்டிய மிகப்பெரிய பணியிருக்கிறது. அப்பணியில் ஈடுபட கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. ஏனெனில், “எல்லாம் அவன் பார்த்துப்பான். பாரத்தை அவன் மேல போட்டுண்டு செவனேன்னு நம்ம பொழப்ப மட்டும் பார்க்கணும்” என்பது ஒரு திசைதிருப்புதல் ஆகும். சமுதாயத்தில் “தானே” எல்லாம் நிகழ்ந்துவிடும் என நினைப்பது மடமை. அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்கமும் ஊழல் செய்வதன் எதிரொலிதானே அன்றாடம் உழைக்கும் மக்களின் வாழ்க்கை சலசலத்து உடையும்நிலை? அவ்வாறிருக்கும்பட்சத்தில் நீங்கள் எத்தனை முறை ‘கடவுள் தரிசனம்’ பெற்றாலும் சரி.. ‘இறை வழிபாடு’ நிகழ்த்தினாலும் சரி.. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘ஏதோ ஒரு திருப்தி’ கிடைக்கலாமேயொழிய, அது எவ்வகையிலும் சமுதாயத்திற்குப் பலன் தராது. கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கைகள், பிற்போக்கான விஷயங்கள் அனைத்தும் நம்மை நம் சரியான பாதையிலிருந்து மடைமாற்ற முயலுபவை. உங்கள் அலுவலகத்தில் உங்களை கொத்தடிமையாக நடத்துகிறார்கள் என்றால் அதை எதிர்த்துப் போராட வேண்டியதே முதன்மையான பணி. அதில் வென்றால் உங்கள் மன உளைச்சல்களிலிருந்து முழுமையாக விடுபடலாம். அதை விடுத்து கோயில் குளமென்று போவீர்களேயானால் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் ‘ஏதோ ஒரு திருப்தி’ கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒருவித ‘மன மயக்க’ நிலையே ஒழிய, சுரண்டலுக்கு எதிரான உங்கள் வினை அல்ல!

          இறை நம்பிக்கை இல்லாத மக்கள் வசிக்கும் நாடுகளில், மக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதற்கு வேறு காரணிகள் இருக்கலாம். அவற்றைக் கண்டறிந்து போராட்டத்தின் மூலம் அம்மகிழ்ச்சியை வென்றெடுக்க வேண்டும். மாறாக, இறை நம்பிக்கை பிரச்சினைகளிலிருந்து எஸ்கேப் ஆக வழி தருமே ஒழிய அதை தீர்க்க வழி காட்டாது.

          ஆக, இப்படி ஒவ்வொருவரும் தத்தம் உரிமை என்று ஆளாளுக்கு தனித்து நின்றுகொண்டு கூவிக் கொண்டிருந்தால் ஒருபோதும் அடக்குமுறைகளை ஒழித்துக்கட்ட முடியாது, ஊழல் பல்கிப்பெருகிக்கொண்டேதான் போகும். நம் இன்றைய தேவை மனமயக்கங்களிலிருந்து விடுபட்டு ஒன்றுபட வேண்டிய நிலை. தனிநபர் வாழ்க்கையை தனிநபர் தீர்மானித்துக் கொள்ளலாம்தான். ஆனால் சமுதாயத்தில் களத்தில் இறங்கும்போது ‘தனிநபர் வாழ்க்கையின் தனிப்பட்ட மயக்கங்கள்’ அவனை பின்தள்ளுமேயொழிய இலக்கை நோக்கி முன்னேற வைக்காது! அவ்வளவுதான்!

          • \\அதை விடுத்து கோயில் குளமென்று போவீர்களேயானால் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் ‘ஏதோ ஒரு திருப்தி’ கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒருவித ‘மன மயக்க’ நிலையே ஒழிய, சுரண்டலுக்கு எதிரான உங்கள் வினை அல்ல!\\ இறை நம்பிக்கை, கோவில் குளங்களுக்குச் செல்வது ஒருவருடைய தனிமனித உரிமை, அதனால் பலனிருக்கிறதா இல்லையா என்பதை போகிறவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல. நீங்கள் ஓட்டு போட்டு தானே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து ஆட்சியமைக்க விட்டீர்கள்? அவன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் அதற்க்கு கோவில்களுக்குச் செல்பவர்களா பொறுப்பு? ராமர் எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து விட்டு பாலம் கட்டினார் என்று கேட்டவன் தானே அவனுடைய ஆளை வைத்து 1.76 லட்சம் கோடி மக்கள் பணம் கொள்ளை போக வழி வகுத்தான்? கோவில்களை மூடி விட்டால் அவன் நல்லவனாகி விடுவானா என்ன? உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்வது உங்களுடைய தனி மனித உரிமை, அதில் எப்படி மற்றவர்கள் தலையிட முடியாதோ, அதே போல மற்றவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் செய்கிறார்கள், அதில் பலனில்லை, வெறும் மயக்கம் என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்?

            • நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாக சொல்லிவிட்டதாகவேக் கருதுகிறேன். தனிமனித உரிமைகள் என்ற பெயரில் சமுதாயம் எப்போதும் சுயநலப் போக்கோடுதான் செயல்படுகிறது. ‘தனிமனித உரிமை’ என்ற கருத்தைத் தாண்டி வரவேமாட்டேன் என்கிறீர்கள். அவ்வாறு வராதவரை ‘பொதுநலம், சமூகநலம்’ என்ற வெளிக்குள் உங்களால் வரவே முடியாது.

              Idealism and Materialism பற்றி நீங்கள் தெளிவுற அறிந்திருந்தால் என் கருத்துகள் உங்களுக்கு எளிதாக கைவரப்பெற்றிருக்கும். தேடுங்கள்! கண்டடைவீர்கள்.

              மேலும், வெகு எளிதான உதாரணம் சொல்கிறேன். டீக்கடையில் உட்கார்ந்து ஒருவர் பேப்பர் படித்துக்கொண்டு, ராசா மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டதாகக் கூறுகிறார். அதற்கு அடுத்தவர், “அவனுக்கு திறமை இருக்கு; அடிக்கறான். உனக்கு தெம்பு இருந்தா நீயும் அடிக்கவேண்டியதானே.. அவன ஏன் குறைசொல்லிக்கிட்டு இருக்கற. அரசியல்ல எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துருப்பான்..”. முதலாமவர் அது சரிதான்னு சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருந்தா என்ன ஆகும்?

              • \\தனிமனித உரிமைகள் என்ற பெயரில் சமுதாயம் எப்போதும் சுயநலப் போக்கோடுதான் செயல்படுகிறது. ‘தனிமனித உரிமை’ என்ற கருத்தைத் தாண்டி வரவேமாட்டேன் என்கிறீர்கள். அவ்வாறு வராதவரை ‘பொதுநலம், சமூகநலம்’ என்ற வெளிக்குள் உங்களால் வரவே முடியாது.\\ அவரவர்க்கு பிடித்தமானதைச் செய்யலாம், அது நாட்டின் சட்ட வரையறைக்குள் இருக்க வேண்டும் மேலும் இன்னொருத்தருடைய சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடாது. உங்களுக்கு இசை பிடிக்கலாம், ஓவியம் வரைதல் பிடிக்கலாம். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்றால் நீங்கள் தாராளமாகச் செய்யலாம். நீங்கள் இசையைக் கேட்பதனால் நீங்கள் மயக்கத்தில் இருக்கிறீர்கள் சமுதாயம் முன்னேறாது என்று இன்னொருத்தர் வந்து சொன்னால் அவருக்கு மனநிலை சரியில்லை என்று நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள். இறை வழிபாடு என்பது நமது சட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டுள்ள ஒன்று. இறைவன் இல்லை என்று அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை, சொல்லப் போனால் ஐன்ஸ்டீன் என்ற தலை சிறந்த விஞ்ஞானி ஒரு இறை நம்பிக்கையாளர். அப்படி இருக்கும் பட்சத்தில் கோவிலுக்குப் போகாதே, அதனால்தான் சமுதாயம் உருபடமட்டேன்கிறது என்று நீங்கள் சொல்வது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. இறை மறுப்பை ஏற்றுக் கொண்ட நாடுகளில் சாலை விபத்துக்கள் நடப்பதில்லை அல்லது அங்கெல்லாம் ஊழலே இல்லை, மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள், இறை நம்பிக்கை உள்ள நாடுகளில் மட்டுமே இவை உள்ளன என்று நீங்கள் உதாரணம் காட்டினால் ஒரு விதத்தில் உங்கள் வாதத்தில் நியாயம் இருக்கிறது. அப்படியும் நீங்கள் ஏதும் காட்டவில்லை. எந்த அடிப்படையுமே இல்லாமல், அவரவர் திருப்திக்காக வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வது கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

                • குடியும் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்! அது தனிமனித உரிமை என்று விட்டுவிடலாமா? சிகரெட்டும் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்! அது தனிமனித உரிமை என்று விட்டுவிடலாமா? குடியும் சிகரெட்டும் உடம்புக்கு நல்லதில்லைனு விடச் சொல்லிச் சொன்னால், அதற்குப் பின் உடம்புல நோயே வராதான்னு கேட்கக்கூடாது!

                  முதலில் உங்களுக்கு மனிதநேயம் முக்கியமா, கடவுள் முக்கியமா என்ற முடிவுக்கு வாருங்கள். மனிதநேயம் இல்லாத கடவுள் பக்தியாளர்களும், மனிதநேயம் இல்லாத கடவுள் மறுப்பாளர்களும் இரண்டுமே ஒன்றுதான்! பெருங்கூட்டம் கூடுமிடத்தில் விபத்துகள் ஏற்படுமெனில் அப்படியென்ன வெறி பிடித்த பக்தி வேண்டியிருக்கிறது. அத்தனை பேரும் இறைவனின்பால் நம்பிக்கை வைத்துத்தானே வருகிறார்கள்? ஏன் உங்களுக்குள் ஒரு ஒழுங்குமுறை வைத்துக்கொண்டு நிதானமாக இறைவனை ‘தரிசிக்க’ முடியவில்லை? அடுத்தவனை முந்திக்கொண்டு தான் நுழைந்துவிட வேண்டும் என்ற வேகம்தானே? அவனது குறைகளைக் ‘கேட்பதற்குமுன்’ தன் அப்ளிகேஷனைப் போட்டுவிடவேண்டும் என்ற வெறிதானே? ‘அப்பேர்ப்பட்ட’ மனிதநேயமற்ற குருட்டு பக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் எதையும் ‘சாதித்து’ விடமுடியாது!

                  • \\குடியும் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்! அது தனிமனித உரிமை என்று விட்டுவிடலாமா? சிகரெட்டும் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்! அது தனிமனித உரிமை என்று விட்டுவிடலாமா? குடியும் சிகரெட்டும் உடம்புக்கு நல்லதில்லைனு விடச் சொல்லிச் சொன்னால், அதற்குப் பின் உடம்புல நோயே வராதான்னு கேட்கக்கூடாது!\\சிகரெட் , குடி இவையும் கோவிலுக்குச் செல்வதும் ஒன்று என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கடவுள் இல்லை என்று சொல்வதும் சிகரெட் , குடி போல தீங்கானது என்று கூட வாதிடலாம். நீங்கள் சொல்வதை உண்மை என்று நிர்ரோபிக்க வேண்டுமானால், இறை மறுப்புக் கொள்கையை தழுவியவர்களும், அதைக் கடைபிடிக்கும் நாடுகளும் மகிழ்ச்சியாகவும் சுபிட்சமாகவும் உள்ளார்கள் என்றும், இறை நம்பிக்கை அனுமதிக்கப் பட்ட நாடுகள் நாசமாகப் போய் விட்டன என்று Statistics காண்பிக்க வேண்டும். நம் நாட்டிலேயே கொள்ளையடிப்பதில் முதலிடத்தில் உள்ளவன் ஒரு நாத்தீகன். நாத்தீகக் கட்சியின் இன்றைய தலைவரின் நேர்மையின் லட்சணம் ஊருக்கே தெரிந்தது. தி.க. சொத்துக்களை தனக்குப் பின்ன்னர் தன்னுடைய மகனே அனுபவிக்க வேண்டுமென்று இப்போதே அவரை அடுத்த தலைவராக்க திட்டம் போட்டு வருக்கிறார். சங்கதி இப்படி இருக்க கோவிலுக்குச் செல்வதால் மட்டுமே எல்லாம் போய் விட்டது என்று கூக்குரல் இடுவதில் நியாயமேயில்லை.

                    • கருணாநிதியையோ, வீரமணியையோ ‘உண்மையான’ பகுத்தறிவாளர்களாக நான் கருதவில்லை. இவர்களெல்லாம் பிழைப்புவாதிகள். தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பும்போது, ஐயர் கொடுத்த பூர்ணகும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு, கும்பத்தைத் தொட்டு வணங்கிச் சென்றவர்தான் கருணாநிதி. போலி நாத்திகவாதிகளை, பிழைப்புவாதிகளையெல்லாம் உதாரணம் காட்டாதீர்கள்!

                    • \\கருணாநிதியையோ, வீரமணியையோ ‘உண்மையான’ பகுத்தறிவாளர்களாக நான் கருதவில்லை. \\வீரமணி போலி என்றால் குறைந்த பட்சம் அவரைத் தூக்கிவிட்டு நல்ல தலைவரை கொண்டு வரக்கூட முடியாதா? அப்போ நாத்தீகத்தை வச்சி என்னதான் சாதிச்சீங்க? போலிச் சாமியார்களுக்கும் உங்க தலைவர்களுக்கும் என்னைய்யா வித்தியாசம்? உங்க வீட்டையே உங்களால சுத்தம் செய்து கொள்ள முடியலை, அந்த பிரச்சினையை தீர்க்கிறேன், இந்தப் பிரச்சினைக்கு ஆலோசனை தரேன் என்று ஊருக்கு உபதேசம் பண்ண கிளம்பிட்டீங்களா? உங்க அந்த ism இந்த ism எல்லாத்தையும் வச்சி உங்க நாத்தீக இயக்கத்தை திருடனுங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க, அதில சக்சஸ் ஆனதும் ஊருக்கு உபதேசம் பண்ண வாங்க.

                  • \\முதலில் உங்களுக்கு மனிதநேயம் முக்கியமா, கடவுள் முக்கியமா என்ற முடிவுக்கு வாருங்கள். \\ கடவுள் நம்பிக்கையுள்ளவர்களால் மனித நேயத்தோடு இருக்க முடியாது என்று நீங்கள் நம்பி கொண்டிருந்தாள் அதற்க்கு நான் பொறுப்பல்ல. உங்கள் அறிவுக்கு இறைவன் இல்லை என்று தோன்றுகிறது, எங்கள் அறிவுக்கு அவன் இருக்கிறான் என்று தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்வதால் மனித நேயம் வந்து விடுமென்றால் சென்ற ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் திருட்டும், கொள்ளையுமாக அல்லவே அது இருந்தது? எதை வைத்து கடவுள் மறுப்பாளன் மனித நேயத்துடன் இருப்பான் என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

                    • மீண்டும் மீண்டும் சொல்கிறேன். போலியான கடவுள் மறுப்பாளர்களை உதாரணம் காட்டாதீர்கள்.

                  • \\மனிதநேயம் இல்லாத கடவுள் பக்தியாளர்களும், மனிதநேயம் இல்லாத கடவுள் மறுப்பாளர்களும் இரண்டுமே ஒன்றுதான்!\\ மனித நேயம் இருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை, கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு இது இல்லை என்றோ, இறை மறுப்பாளர்களுக்கு இருப்பதாகவோ நீங்கள் நிரூபிக்க வில்லை, அப்புறம் இது எதுக்கு?

                  • \\ பெருங்கூட்டம் கூடுமிடத்தில் விபத்துகள் ஏற்படுமெனில் அப்படியென்ன வெறி பிடித்த பக்தி வேண்டியிருக்கிறது. அத்தனை பேரும் இறைவனின்பால் நம்பிக்கை வைத்துத்தானே வருகிறார்கள்? ஏன் உங்களுக்குள் ஒரு ஒழுங்குமுறை வைத்துக்கொண்டு நிதானமாக இறைவனை ‘தரிசிக்க’ முடியவில்லை? அடுத்தவனை முந்திக்கொண்டு தான் நுழைந்துவிட வேண்டும் என்ற வேகம்தானே? அவனது குறைகளைக் ‘கேட்பதற்குமுன்’ தன் அப்ளிகேஷனைப் போட்டுவிடவேண்டும் என்ற வெறிதானே? ‘அப்பேர்ப்பட்ட’ மனிதநேயமற்ற குருட்டு பக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் எதையும் ‘சாதித்து’ விடமுடியாது!\\ பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரே வருடத்தில் இந்தியாவிலேயே அறை டஜனுக்கும் மேலான விமான விபத்துக்கள் நடந்தன. இத்தனைக்கும் விமானங்கள் பழுது நீக்குதலும், அவற்றின் பாதையைக் கண்காணித்தலும் ஈடு இணையற்ற பாதுக்காப்போடும் கவனத்தோடும் செய்யப்படும் என்பது உமக்கே தெரியும். இத்தனை இருந்தும் ஏன் அத்தனை விபத்துகள் நடந்தன? அதுசரி, இத்தனை விபத்துகள் நடக்கின்றன என்று விமானங்களை இனி இயக்கவே கூடாது என்று ஏன் முடிவெடுக்க வில்லை? மாறாக, விமான விபத்தில் செத்தவர்களின் பிணங்களை வாங்க வந்த உறவினர்களே விமானங்களில் தானே வந்து இறங்கினார்கள்? கோவில்களுக்குச் செல்லும் போது நடந்த விபத்துகளையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் பற்றிய புள்ளி விவரங்களைக் கொடுத்துள்ள நீங்கள் ஏன் இந்தியாவில் கோவில்களுக்கு செல்லும்போது மட்டும்தான் விபத்துக்கள் நடந்தனவா வேறு எந்த இடத்துக்குச் செல்லும் போதும் விபத்துக்கள் நடக்கவில்லையா என்ற கேள்வி பற்றி பதில் எதுவும் சொல்லவில்லை?

                    • //கோவில்களுக்குச் செல்லும் போது நடந்த விபத்துகளையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் பற்றிய புள்ளி விவரங்களைக் கொடுத்துள்ள நீங்கள் ஏன் இந்தியாவில் கோவில்களுக்கு செல்லும்போது மட்டும்தான் விபத்துக்கள் நடந்தனவா வேறு எந்த இடத்துக்குச் செல்லும் போதும் விபத்துக்கள் நடக்கவில்லையா என்ற கேள்வி பற்றி பதில் எதுவும் சொல்லவில்லை? //

                      விபத்துகள் எல்லா இடத்திலும்தான் நடக்கின்றன. ஆனால் கோவிலுக்குச் சென்றால் ‘எல்லாம் வல்ல இறைவன்’ காப்பாற்றுவான் என்ற உங்கள் நம்பிக்கை பலிக்கவில்லையே! கோயிலுக்குச் சென்றால் உங்கள் நம்பிக்கையை கடவுள் காப்பாற்றியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் வேறெங்கும் யாரும் உங்களுக்கு உத்தரவாதம் கொடுப்பதில்லையே. விமானியோ விமானத்துறை அமைச்சரோ உங்களுக்கு ‘விபத்து’ நேருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பில்லை என்று உறுதிமொழி கொடுத்தனரா.. இல்லையே? அப்புறம் ஏன் இரண்டையும் ஒப்பிடுகிறீர்கள்?

                      எனக்கென்னவோ விவாதம் வெட்டித்தனமாய் சுற்றிச் சுற்றி வருவதாய் தோன்றுகிறது. கட்டுரையின் மையப்பொருளை எடுத்துக்கொண்டு விவாதிப்பதாய் தெரியவில்லை!

                    • \\விபத்துகள் எல்லா இடத்திலும்தான் நடக்கின்றன. ஆனால் கோவிலுக்குச் சென்றால் ‘எல்லாம் வல்ல இறைவன்’ காப்பாற்றுவான் என்ற உங்கள் நம்பிக்கை பலிக்கவில்லையே! கோயிலுக்குச் சென்றால் உங்கள் நம்பிக்கையை கடவுள் காப்பாற்றியிருக்க வேண்டுமல்லவா? \\கோவிலுக்குப் போறவங்க சாகா வரம் வாங்கத்தான் போறாங்கன்னு உங்களுக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை. கோவிலுக்குப் போய் இறைவனை வழிபடுவது எங்கள் கடமை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நம்பிக்கை இறை நம்பிக்கையாளர்களுக்கு உண்டு. யாரும் விபத்து நடக்கட்டும் என்று வேண்டுமென்றே உயிர் பலி கொடுப்பதில்லை. நம்மையும் மீறி விபத்து நடந்தால் அது இறைவனின் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கோவிலுக்குச் சென்ற இடத்தில் விபத்து நடந்தது அதனால் கோவிலுக்கே செல்லக் கூடாது என்றால், சுற்றுலா சென்ற பேருந்துகள் கூட விபத்துக்குள்ளாகிறது, அவ்வளவு ஏன் தினமும் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகள் கூட விபத்துக்குள்ளாகிறது, எனவே நாட்டில் இனி பஸ்களே ஓடக்கூடாது என்று சொல்வீர்களா? ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது கூட வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படுகிறது, அதனால் இனி வெளியே செல்லாமல் வீட்டுக்குளேயே முடங்கியிருப்பீர்களா?

              • \\Idealism and Materialism பற்றி நீங்கள் தெளிவுற அறிந்திருந்தால் என் கருத்துகள் உங்களுக்கு எளிதாக கைவரப்பெற்றிருக்கும். தேடுங்கள்! கண்டடைவீர்கள்.\\ இந்த ism த்தை வைத்து உருப்படியான ஒரு நாடு இருந்தால் சொல்லுங்களேன்.

                • ஹா..ஹா.. நம் வாழ்க்கையியல் என்பது இந்த இரு தத்துவங்களின் அடிப்படையிலேதான் பெரும்பாலும் இருக்கிறது என்பதற்காகத்தான் அதைத் தேடச் சொன்னேன். பின்வரும் சுட்டிகள் அவற்றிற்கு எளிமையான விளக்கத்தைக் கொடுக்கும்.

                  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12898:2011-02-10-07-31-37&catid=1262:2011&Itemid=522
                  http://govikannan.blogspot.com/2009/10/blog-post_14.html

                  மற்றபடி மனித மனங்களின் எண்ணங்கள் இந்த இரு இசங்களின் கலவையாகவே உள்ளது. நாடு என்று குறுக்கிக்கொள்ளக்கூடாது. மொத்த உலகத்திற்கும் பொதுவானது இது. இதை மிகவும் சுருக்கிக் கூற என்னால் இயன்ற அளவுக்குக் கூறுகிறேன். மனிதர்களைப் பிரித்தாள பார்ப்பனீயம் கொண்டு வந்ததுதான் ‘இல்லாத கடவுளைப்’ பற்றிய Idealism. மனிதனின் ‘இருத்தல்’ என்பதே உண்மையானது என்பது பற்றிய தத்துவம்தான் Materialism.

                  எந்த இசங்கள் வந்தாலும் இதுவரை எந்த நாடும் செழுமையடைந்ததில்லை என்று சொல்லிவிட்டு ‘உண்மையை’ தேடுவதில் சுணக்கம் காட்டிவிடக்கூடாது.

                  • \\மனிதர்களைப் பிரித்தாள பார்ப்பனீயம் கொண்டு வந்ததுதான் ‘இல்லாத கடவுளைப்’ பற்றிய Idealism.\\இந்தியாவில் தான் பார்பனன் கடவுளை கண்டு பிடித்தான், அது சரி கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை யாரு சார் கண்டு புடிச்சாங்க?

                    \\எந்த இசங்கள் வந்தாலும் இதுவரை எந்த நாடும் செழுமையடைந்ததில்லை என்று சொல்லிவிட்டு ‘உண்மையை’ தேடுவதில் சுணக்கம் காட்டிவிடக்கூடாது.\\வெறும் ism த்தை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது, அதனால உருப்பட்டது யாருன்னு சொல்லுங்க?

              • \\மேலும், வெகு எளிதான உதாரணம் சொல்கிறேன். டீக்கடையில் உட்கார்ந்து ஒருவர் பேப்பர் படித்துக்கொண்டு, ராசா மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டதாகக் கூறுகிறார். அதற்கு அடுத்தவர், “அவனுக்கு திறமை இருக்கு; அடிக்கறான். உனக்கு தெம்பு இருந்தா நீயும் அடிக்கவேண்டியதானே.. அவன ஏன் குறைசொல்லிக்கிட்டு இருக்கற. அரசியல்ல எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துருப்பான்..”. முதலாமவர் அது சரிதான்னு சொல்லிட்டு கிளம்பிக்கிட்டே இருந்தா என்ன ஆகும்?\\ கோவிலுக்குச் செல்வதற்கும், ஒரு அரசியல்வாதி கொல்லையடிப்பதர்க்கும் எதற்கு முடிச்சு போடுகிறீர்கள் என்று தெரியவில்லை. சொல்லப் போனால் கடவுள் இல்லை என்று சொன்னவன் கொள்ளையடிக்கிறான், அதை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். ஊழலுக்கும், இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

                • தனிநபர் உரிமைகளை ‘மட்டும்’ பற்றியே நீங்கள் கதறிக்கொண்டிருந்ததால் கொடுக்கப்பட்ட உதாரணம் அது. முதலில் எந்தப் பிரச்சினையையும் ஒரு சிறுவட்டத்தில் குறுக்கிக்கொண்டு பார்த்தால் அந்த உதாரணத்தில் குறிப்பிட்டபடியே முடியும். முதல் தேவை விசாலமான பரந்துபட்ட பார்வை. அப்போது பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களும் மேலோட்டமாய் தெரியும். அதன்பின் அதன் அனைத்துக் கூறுகளையும் பிரித்துப் பார்த்து தீர்க்க கற்க வேண்டும்.

                  • \\தனிநபர் உரிமைகளை ‘மட்டும்’ பற்றியே நீங்கள் கதறிக்கொண்டிருந்ததால் கொடுக்கப்பட்ட உதாரணம் அது. \\ அப்போ தனி மனித உரிமையே சட்டப் படி குற்றம் என்று மாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா?

                    \\முதலில் எந்தப் பிரச்சினையையும் ஒரு சிறுவட்டத்தில் குறுக்கிக்கொண்டு பார்த்தால் அந்த உதாரணத்தில் குறிப்பிட்டபடியே முடியும். முதல் தேவை விசாலமான பரந்துபட்ட பார்வை. அப்போது பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களும் மேலோட்டமாய் தெரியும். அதன்பின் அதன் அனைத்துக் கூறுகளையும் பிரித்துப் பார்த்து தீர்க்க கற்க வேண்டும்.\\ நீங்க நாட்டிலுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டாம், வாங்க கோவிலுக்குப் போகலாம், அங்க போனால் இதெல்லாம் தீர்ந்திடும் என்று உங்களைத் தடுத்திருந்தால் உங்கள் வாதம் சரியானதாக இருந்திருக்கும், அப்படி நான் சொல்லவில்லையே? கோவிலுக்குச் செல்வதும், இறை வழிபாடும் எனது உரிமை. நாட்டில் ஊழலை எதிர்த்து போராடுவதை கொண்டு வந்து ஏன் இதனோடு முடிச்சுப் போடுகிரீர்கள் என்றே புரியவில்லை.

  7. நாங்களும் இதையெல்லாம் எதிர்த்துப் போராட வாங்கனு தா கூப்பிட்டோம் அவர்கள் தா இதையெல்லாம்,பகாவான் பாத்துக்குவாரு, எங்கள அவரு காப்பாத்துவாருனு போனாங்க,சாதான சாலை விபத்திலக்கூட கடவுளால காப்பாத்த முடியல அதாக்கேட்டோம்,உங்க கடவுளு எங்கனு.

    கோவிலுக்கு போகும் மக்களின் நோக்கம் என்ன.எதற்காகக் கோவிலுக்கு போராங்க.தனது கஷ்டத்தையெல்லாம் போக்கி என்னையும் இந்த சமுகத்துல ஒரு மனுசனா வாழவையுனு வேண்டதானே.அப்படிப் போகும் பக்தனின் வாழ்க்கைய பறிச்சா அது கடவுளா?.
    அதாக் கேட்டோம்,

    எங்கப் போயித்தொலஞச, சாமி நி எங்க போயித்தொலஞச ,சந்துல பொத்துல இன்டு ,இடுக்குல எங்கப் போயித்தொலஞச ,சாமி நீ எங்கப்போயித்தொலஞச

  8. டேய் தண்ட முண்டங்களா! பக்தர்கள் தெளிவதாண்டா இருக்காங்க! அதனாலதான் எவனும் உன்ன மாதிரி லூசு பயலுகுளோட சேர்றதில்ல. கூட்டம் கூடினா நெரிசல் ஏற்படும். இது இயற்கை. இதுல கடவுள இழுக்க வேண்டிய அவசியமில்லேன்னு பக்தனுக்கு தெரியும். அதனாலதான் எத்தன விபத்து ஏற்பட்டாலும் எந்த கோவிலிலும் கூட்டம் குறைவதில்லை. இதுகூட தெரியாம கட்டுரை எழுத வந்துட்டியே. இதை படிச்சா எவனும் வாயால சிரிக்க மாட்டான்.

    • நீங்கள் ‘தெளிவு’ எனக் கருதுவது ஒரு ‘மனமயக்க’ நிலை. அதிலிருந்து விடுபட முயற்சியுங்கள். உங்கள் வாழ்வு மட்டுமல்ல, நம் எல்லோருடைய வாழ்வுமே சிறக்கும். எத்தனை விபத்து ஏற்பட்டாலும் எந்தக் கோவிலிலும் கூட்டம் குறையாததற்கு காரணம், கோவில் விபத்தில் செத்தால் சொர்க்கத்தில் ரிசர்வேஷன் கிடைக்கும் என்பதினால்தானே? 🙂
      இல்லாத சொர்க்கத்திற்கு இருக்கும் வாழ்வைத் தொலைப்பேன் என்கிறீர்களே.. நியாயமா!!

      • நண்பரே, அபினியில் வீழ்ந்த இந்த அபலைகளுக்குப் புரியவைப்பது அதற்கு மாற்று மருந்து கொடுத்தால்தான் தெளிவார்கள். சிலர் தெளிந்து விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு வலிந்துதான் ஊட்டவேண்டும்.நியூரான்கள் புறவயத்திற்கு ஆட்பட்டு செயல்திறன் குறைந்துவிட்டது. தெளிந்து வந்தால் நல்லது. உணர்வார் என்று உழைப்போம்….

    • நானும் சில மாதனங்களுக்கு முன்பு வரை கடவுல் உண்டு என்றுதான் நம்பி கொண்டிருந்தேன். ஆனால் எப்போது தன்னை நம்பி தன்னிடம் வரும் பக்தர்களை எந்த கடவுளர்களாலும் காப்பற்ற இயலவில்லையோ பிறகு எப்படி கடவுளை நம்பமுடியும். கோவிலுக்கு சென்ரு இறப்பவர்கலையும் சாலை விமான விபதுக்களையும் ஒப்பிடுவது மடமையிலும் மடமை. எந்த பக்தனும் கொவிலுக்கு சென்று அப்படியே வைகுண்ட வரம் வாங்குவதர்க்காக செல்லவில்லை. தானும் தன் குடும்பமும் செல்வ செழிப்போடும் நிம்மதியாககவும் வாழ வேண்டும் என்று தான் பிரார்திக்க செல்கிறான்.

      • \\நானும் சில மாதனங்களுக்கு முன்பு வரை கடவுல் உண்டு என்றுதான் நம்பி கொண்டிருந்தேன். ஆனால் எப்போது தன்னை நம்பி தன்னிடம் வரும் பக்தர்களை எந்த கடவுளர்களாலும் காப்பற்ற இயலவில்லையோ பிறகு எப்படி கடவுளை நம்பமுடியும். கோவிலுக்கு சென்ரு இறப்பவர்கலையும் சாலை விமான விபதுக்களையும் ஒப்பிடுவது மடமையிலும் மடமை. எந்த பக்தனும் கொவிலுக்கு சென்று அப்படியே வைகுண்ட வரம் வாங்குவதர்க்காக செல்லவில்லை. தானும் தன் குடும்பமும் செல்வ செழிப்போடும் நிம்மதியாககவும் வாழ வேண்டும் என்று தான் பிரார்திக்க செல்கிறான்.\\ விட்டால் நான் கோவிலுக்குப் போனேன், அதனால் எனக்கு வயதே ஆகக் கூடாது, நோய் வாய்ப் படக்கூடாது, சாகக் கூடாது, இதெல்லாம் செய்ய முடியாவிட்டால் அவன் என்ன கடவுள்? என்றெல்லாம் கேட்பீர் போலிருக்கிறதே. கடவுள் என்ன நீங்கள் செல்லும் ஓட்டலில் வேலை செய்யும் சப்ளையரா? நீங்கள் நினைக்கும் படியும், சொல்லும்படியும் நடந்துகொள்வதற்கு? He is the Supreme Autocrat. அவருடைய செயல்களுக்கு யாரும் கேள்வி கேட்க முடியாது. இயற்கையில் எல்லோருக்கும் என்னென்ன நடக்கிறதோ அது கோவிலுக்குச் செல்பவர்களுக்கும் நடக்கும் , மாற்ற முடியாது. நீங்கள் காசு பணம் வேண்டும் நீங்களும் உங்க குடும்பமும் நல்லாயிருக்க வேண்டும் என்று கடவுளிடம் போனால் நீங்கள் அங்கே இறைவனை வழிபடச் செல்ல வில்லை வியாபாரம் பேசப் போனீர்கள் என்று அர்த்தம். அது தான் மடமை. கோவிலுக்கு போனாலும் போகா விட்டாலும் உங்களுக்கு விதிக்கப் பட்ட சுக துக்கங்கள் உங்களை தப்பாது வந்து சேரும், சாக வேண்டிய நேரத்தில் தப்பாது சாவீர்கள். அப்படியானால் நான் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டும்? காசு பணத்தில் இல்லாத மகிழ்ச்சி இறைவின் மீது நேசம் கொள்ளும் போது எங்களுக்குக் கிடைக்கிறது, எங்களுக்கு அதுவே போதும்.

        • //காசு பணத்தில் இல்லாத மகிழ்ச்சி இறைவின் மீது நேசம் கொள்ளும் போது எங்களுக்குக் கிடைக்கிறது//

          மகிழ்ச்சி மட்டுமே கோவிலுக்கு செல்வோரின்நொக்கம் எனில் கோவில் மரம்தோரும் குழந்தை வேண்டி தொட்டில் கட்டுதல், கோவில் உன்டியலில் வேண்டுதலை நிறைவேற்ற பணம் போடுதல், திருமணம்நடைபெறவேண்டி திருமணந்சேரி, திருநாகேசுவரம் செல்லுதல் etc., இதெல்லாம் பிறகு யார் செய்கிறார்கள். எனக்கு தெரிந்த வரையில் கோவிலுக்கு செல்லும் அனைவருக்கும் தங்கள் நலன் சார்ந்த வேண்டுதல் உள்ளது.

  9. சிதம்பரம் கோவிலில் பகவானை சேவிச்சுக்குங்கோ இங்கே ஆகாய ரூபமாய் காட்சியளிக்கிறார் என்று பக்தர்களை பயமுறுத்தும் தீட்சிதர்கள், பக்தர்கள் நடராஜருக்கு கொடுத்த நகைகளை ஒரு நூறு முறையாவது திருடி மாட்டிக்கொண்டு பஞ்சாயத்து நடந்திருக்கிறது.அவர்கள் என் பகவானுக்கு பயப்படவில்லை?

        • @ரிஷி!
          அய்யா நான் சொல்ல வருவது எவனோ சில மொள்ளமாரிகள் பூசாரி சாமியாராக இருந்து கொண்டு தவறு செய்கின்றனர்!அதற்கும் பக்தனுக்கும் என்ன சம்மந்தம்?இப்படி எல்லா மதங்களிலும் தவறு செய்யும் ஆசாமிகள் மத தலைவர் குருமார்கள் என்ற பெயரில் இல்லையா?

          • இங்க பார் கடவுள்ன்னு எனக்கு காட்டுறவன் பயப்பட மாட்றான் ஆனா நான் பயந்து போய் காணிக்கை கொட்டணும்னு எதிர்பாக்குறான்.கடவுளை கண்டுபிடித்தவன் ஒரு புத்திசாலி பூசாரி.

      • அப்படியென்றால் கடவுளால் ஏன் அந்த திருட்டை தடுத்து நிறுத்த முடியவில்லை.???

  10. அட பாவிகளா…. கடவுள் என்றால் இவர்கள் கேட்டதை இலவசமாக கொடுக்கும் அரசாங்கம் என்று நினைத்து விட்டீர்களா?

    ஹா… ஹா… இப்படி அறிவு கெட்ட தனமாக எழுத உங்களால் மட்டும் தான் முடியும் என்பதை மீண்டும் நிறுபித்தமைக்கு நன்றி…

    இறைவன் என்ன அரசியல் கட்சி தலைவரா தன்னை வணங்குபவர்களுக்கு மட்டும் நன்மை செய்து விட்டு தன்னை வணங்காதவர்களுக்கு தண்டை கொடுப்பதற்கு… என்ன காமெடி….

    இறைவனை அரசியல் கட்சி தலைவர் ரேஞ்சுக்கு கொண்டு வந்து எதையோ சொல்கிறேன் பேர் வழி என்று இப்படி பல்ப் வாங்குவீர்கள் என்று நான் நினைக்கவில்லை…

    நீங்கள் சொல்லும் கடவுள் அதாங்க… தன்னை வணங்குபவனை மட்டும் காப்பாற்றி, பிறரை வணங்குபவனை தண்டிக்கும் கடவுள் ஆப்பிரகாமிய கடவுள்… அவர்களிடம் இதை பற்றி கேளுங்கள். ஒருவன் தன்னை வணங்குகிறான் என்று இறைவன் எதுவும் செய்வதில்லை… முடியல… இது போன்ற விசயங்களை இங்கு சொல்வது என்பது… அமாவாசையில் வானில் நிலவை தேடுவது போல் உள்ளது…

    நல்ல நகை சுவையான பதிவு 🙂

    • //அட பாவிகளா…. கடவுள் என்றால் இவர்கள் கேட்டதை இலவசமாக கொடுக்கும் அரசாங்கம் என்று நினைத்து விட்டீர்களா?//
      அரசாங்கமாவது இலவசம் கொடுத்து ஏமாற்றுகிறது. கடவுள் அதுவும் கொடுக்காமல் ஏமாற்றப்படுகிறார்கள். இதில் பெரும்பாண்மை ஏழை அப்பாவி பக்தர்கள் மட்டுமே ஏன் உயிரை இழக்கிறார்கள் என்பதற்கு உஙகள் பதில் என்ன.

      // இறைவன் என்ன அரசியல் கட்சி தலைவரா தன்னை வணங்குபவர்களுக்கு மட்டும் நன்மை செய்து விட்டு தன்னை வணங்காதவர்களுக்கு தண்டை கொடுப்பதற்கு… என்ன காமெடி….//
      நீங்கள் சொல்வது உண்மைதான். இறைவன் யாருக்கும் எதுவும் கொடுப்பது இல்லை.

      //இறைவனை அரசியல் கட்சி தலைவர் ரேஞ்சுக்கு கொண்டு வந்து எதையோ சொல்கிறேன் பேர் வழி என்று இப்படி பல்ப் வாங்குவீர்கள் என்று நான் நினைக்கவில்லை//நாங்கள் பல்ப் (லைட்) வாங்குவோம். என்ன பல்ப் என்று உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்.

      // ஒருவன் தன்னை வணங்குகிறான் என்று இறைவன் எதுவும் செய்வதில்லை… முடியல… இது போன்ற விசயங்களை இங்கு சொல்வது என்பது… அமாவாசையில் வானில் நிலவை தேடுவது போல் உள்ளது…//
      இறைவன் எதுவும் செய்வதில்லைதான், மற்றபடி அமாவாசை அன்றும் வானில் நிலவு இருக்கும். இருக்கிறதை தேடுங்கள், இல்லாததை விட்டுவிட்டு…

      நல்ல நகை சுவையான பதிவு

    • சோழன், நாமும் மற்றவர்களுக்கு குறைந்தவர்கள் அல்ல.. இந்து கடவுள்கள் தன்னை வணங்காதவர்களை கொல்வதற்கு மோடி, ஜெயலலிதா, மற்றும் நம் RSS காரர்களையும் பூமியில் ஏஜென்ட்களாக நியமித்திருக்கின்றனரே.
      மேலும் மற்ற மதத்தினரை தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க நமது போலீஸ் காரர்களும் நமது நீதிபதிகளும் நமது கடவுளர்கள் நியமித்து இருக்கின்றார்களே.
      ஜெய் ஹிந்த்!!!

    • ஒருவன் தன்னை வணங்குகிறான் என்று இறைவன் எதுவும் செய்வதில்லை என்றால் ஏன் அவனை வணங்க வேண்டும். அப்படியென்றால் கோவிலுக்கு செல்பவர்கள் அடுத்தவர்கள் நலனுக்காகவா வேண்டுகிறார்கள்???

  11. ஜெயதேவ் தாஸ், யாரையும் கோவிலுக்கு போகக்கூடாதுன்னு இப்ப யாரு சொன்னது, இறைவனால தன் பக்தர்களையே காப்பாற்ற முடியல, அதனால இறைவனை மட்டும் நம்ம பிரச்சனைகளுக்கு தீர்வா நம்பி பிரயோசனம் இல்லை, நாமளே அதை கையிலெடுத்து ரெண்டுல ஒன்னு பார்க்கனும், அப்படி பார்க்க துணிஞ்சவங்க ஒரு அமைப்பா இணையனும்னுதானே சொல்லது. நீங்க தெனோம் சாமி கும்பிடுங்க யார் வேணாம்னு சொன்னது, ஆனா கும்பிட்ட கையை முஷ்டியா மடக்கி அப்படியே சமூக அவலங்களுக்காக போராட வாங்கன்னு சொல்லுறோம். அவ்ளோதான் மேட்டரே!

      • நீங்க தெரிவித்த கருத்து இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டதிலிருந்து மாறுபட்டதாக அதே சமயம் ஏற்கத் தக்கதாக இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும்போது வாகன விபத்து நடக்கிறது அதனால் கடவுளே இல்லை, யாரும் கோவிலுக்குப் போகாதீங்க என்பது பிக்காலித் தனமான கருத்து என்று இந்தப் பதிவருக்கு எடுத்துச் சொல்லி நீங்கள் கண்டித்தால் நான் அதை வரவேற்ப்பேன்.

  12. சாமிய பத்தி எழுதுனா மட்டும் உங்களுக்கு கோபம் வருது… அந்த சாமிய படைத்ததே நாமதானே அதனால அதவச்சு முட்டாதனமா திரியாம கொஞசம் நாட்டபத்தி யோசிங்கடா…..

  13. சோழன் அண்ணே அமாவாசையன்று நிலவு இருக்காது என்று கூறும் போதே உங்கள் அறிவு தெரிகிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள் வளருது தேயிது அப்படின்னு முட்டாள் ஜோதிடர்கள் புள்ளயாரின் சாபத்தை காரணம் சொல்லும் புராணக்கதையை இந்த காலத்திலும் நம்பும் நீங்கள் இங்கெல்லாம் வரப்படாது.போய் புதனை ஆக்டிவேட் பண்ணிட்டு வாங்க எல்லாம் சரியாய்டும்.

    • //போய் புதனை ஆக்டிவேட் பண்ணிட்டு வாங்க எல்லாம் சரியாய்டும்.//

      வயிறு குலுங்கச் சிரித்தேன் நண்பா.

  14. //எல்லாம் கடவுள் செயல்// ஜெயதேவ் அண்ணே! நம்ம கடவுள்ட்டச் சொல்லி வினவ எழுத விடாமச் செய்யுங்கண்ணே பிரச்சனை தீர்ந்திரும். அப்பிடியே விவசாயிகள் தற்கொலை,சாதி,மத மோதல்,வரதட்சணைக் கொடுமை,ஊழல்,போலீசு அராஜகம்……………எல்லாத்தையும் ஒழிச்சிரச் சொல்லுங்கண்ணே! நாத்தீகப் பிரச்சாரமே ஒழிஞ்சிரும்.

    • \\ஜெயதேவ் அண்ணே! நம்ம கடவுள்ட்டச் சொல்லி வினவ எழுத விடாமச் செய்யுங்கண்ணே பிரச்சனை தீர்ந்திரும்.\\ அவருடைய கருத்து சுதந்திரத்தில் ஏம்பா அனாவசியமா உன் மூக்கை நுழைக்கிறாய்?

      \\அப்பிடியே விவசாயிகள் தற்கொலை,சாதி,மத மோதல்,வரதட்சணைக் கொடுமை,ஊழல்,போலீசு அராஜகம்…………… எல்லாத்தையும் ஒழிச்சிரச் சொல்லுங்கண்ணே! நாத்தீகப் பிரச்சாரமே ஒழிஞ்சிரும்.\\ நல்லா யோசிச்சு சொல்லு இதெல்லாம் என்ன கடவுள் உண்டு பண்ணிய பிரச்சினையா? உங்க தலைவர், பதிவர் வினவில் ஆரம்பித்து உங்களைப் போன்ற கைத்தடிகள் வரை ஒருத்தருமே மண்டையில் இருக்கும் களிமண்ணைப் பயன்படுத்தவே மாட்டீர்கள் போலிருக்கிறது. திருடனுங்களுக்கு ஓட்டைப் போட்டு விட்டு, அவனுங்க இந்தியப் பணத்தை கொண்டு போய் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்க விட்டு விட்டு விவசாயிகள் தற்கொலை என்று இப்போது கடவுளை இழுத்தால் அவர் என்ன பண்ணுவார்? இது ஜனநாயகத்தின் சாபக் கேடு. ஜனநாயகம் என்பது லண்டன், ஜப்பான், அமேரிக்கா மாதிரி விழிப்புணர்வுள்ள மக்களுக்கு. இந்தியாவில் இருப்பது போல ஏமாளிகளுக்கல்ல. முடிச்சவிக்கி மொள்ளமாரிகளுக்கு ஓட்டை நீ போட்டுவிட்டு அதனால் பிரச்சினை என்று வரும் போது அதை கடவுள் தீர்க்க வேண்டும் என்பது நியாயமா? இந்தியாவைப் பொறுத்தவரை கொள்ளையடிக்கப் பட்ட வெளிநாட்டு பணம் வந்தாலே போதும், எந்த விவசாயியும் தற்கொலை செய்ய வேண்டியதில்லை, எல்லோரும் சந்தோஷமாக இருக்க முடியும். ஆற்று மணலை சுரண்டி விற்காமல் [அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே] விலை நிலங்களை அனாவசியமாக பிளாட்டு போடாமல் இருந்தாலே போதும் உணவுப் பஞ்சம் வராது. முதலில் நீ வரதட்சினை வாங்காமல் கல்யாணம் பண்ணு, நாட்டில் வரதட்சிணைக் கொடுமையே இருக்காது.

      • செம பதில் ஜெயதேவ்!நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரமிது!இப்படி பதிலடி கொடுத்தால்தான் மதங்கள் பற்றி பேசுவதை நிறுத்துவர்!

        • அடப் பதருங்களா! மொன்னையான வாதங்களை முன்னிருத்திக்கொண்டு செம பதிலா! மதங்கள் அடிப்படையில ஒண்ணு சேர்ந்தீங்கன்னா சண்டைதான்யா வரும். வர்க்கத்தின் அடிப்படையில ஒண்ணு சேருங்க. நல்லாருப்பீங்க!

      • //லண்டன், ஜப்பான், அமேரிக்கா மாதிரி விழிப்புணர்வுள்ள மக்களுக்கு.//

        அப்படின்னா, அவங்க கும்பிடுற கடவுளுக்குதான் பவர் அதிகம்னு சொல்றீங்களா!

        • கடவுள் என்றால் ஒருத்தர் தானேப்பா இருக்க முடியும்? உன்னை படிச்சவர் வேற, என்னைப் படிச்சவர் வேறயா இருக்க முடியுமா? உனக்கு இப்படியெல்லாம் துர்போதனை பண்றவன் யாருப்பா?

          • //கடவுள் என்றால் ஒருத்தர் தானேப்பா இருக்க முடியும்?//

            அந்த ஒருத்தர் யார்? லண்டன், ஜப்பான், அமேரிக்கா மக்களெல்லாம் விழிப்புணர்வா, சனநாயகத்த அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்கன்னா அவங்க கடவுள்தான் உண்மையோன்னு தோணுது. இந்தியர்களெல்லாம் அந்த கடவுளை கும்பிடுவதில்லை என்பதாலோ என்னவோ நமக்கெல்லாம் விழிப்புணர்வ கொடுக்க மறுக்கிறாரோ!

            • \\அந்த ஒருத்தர் யார்? லண்டன், ஜப்பான், அமேரிக்கா மக்களெல்லாம் விழிப்புணர்வா, சனநாயகத்த அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்கன்னா அவங்க கடவுள்தான் உண்மையோன்னு தோணுது. இந்தியர்களெல்லாம் அந்த கடவுளை கும்பிடுவதில்லை என்பதாலோ என்னவோ நமக்கெல்லாம் விழிப்புணர்வ கொடுக்க மறுக்கிறாரோ!\\ திருபவும், அந்த கடவுள் இந்த கடவுள்-ன்னு என்னமோ நாட்டுக்கு, மதத்துக்கு, சாதிக்கு ஒரு கடவுள் இருக்குற அர்த்தத்திலேயே பேசுறியேப்பா? இந்த பிரச்சினைக்கு நாத்தீகன், “வாங்க போராடித் தீர்க்கலாம்”-ன்னு சொல்லுவான். ஒரு இந்து, “அது நீ முன்னால் செய்த உன்னோட பாவம் தான் இப்போ அனுபவிக்கிறாய்” என்பான். ஒரு கிறிஸ்தவன், நீ ஜீசஸ்-ஐ ஏத்துக்க வில்லை அதனால் தான் கஷ்டப் படுகிறாய் என்பான். அதே ஒரு முஸ்லீம், “ஏழைகள்ன்னு இருந்து அவங்க கஷ்டப் பட்டாத்தான், இன்னொரு முஸ்லீம் அவனுக்கு உதவி பண்ணி அந்த நற்செயல் மூலமா அந்த பணக்கார முஸ்லீம் சொர்க்கத்துக்குப் போயி பொம்பிளை, தண்ணி என்று நிரந்தரமா மஜா பண்ணிகிட்டே இருக்கலாம் என்று சொல்வான். நியூமராலாஜி படிச்சவன் உன் பேருக்கு கடைசியில ஒரு z போட்டு விட்டா எல்லாம் சரியாப்பூடும்பான். எதைப் பண்ணினாலும், மக்கள் என்னைக்கு புத்தி வந்து ஒற்றுமையாய் இந்த திருட்டுப் பசங்களை சட்டை காலரைப் பிடித்து கேள்வி கேட்கிறாங்களோ அன்று வரை கஷ்டத்துக்கு விடிவு கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் போடும் எழும்புத் துண்டுக்காக நம்மை நாமே நாய்களாக மாற்றிக் கொண்டு கட்சி, வட்டம், மாவட்டம்னு பங்கு போட்டு பிரிச்சி தின்னுகிட்டு இருக்கும் வரை ஆனால் அது எங்கே நடக்கப் போகுது?

    • அவாள் கிட்ட கேட்டால் அவர்கள் சாகனும்னு விதி,தலைஎழுத்து என சொல்லுவார்கள்.. ப்ராப்தம் , கடவுள் என்ன செய்வார் ?

  15. ஜெயதேவ்,

    //அப்போ தனி மனித உரிமையே சட்டப் படி குற்றம் என்று மாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா?//

    மீண்டும் வார்த்தைக்கு வார்த்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள். மையமான விஷயத்தை சிந்திக்கவே மறுக்கிறீர்கள். பொதுநலன் என்று வரும்போது சில தனிப்பட்ட விருப்பங்களை தியாகம் செய்துதான் வரவேண்டும். இறை நம்பிக்கை உங்களுக்கு அதற்கான உத்வேகத்தைத் தரமுடியாது, உங்கள் மீதான நம்பிக்கையையே குலைக்கும், உங்களைப் பின்னுக்கு இழுக்கும் என்பதே என் வாதம். கோவில் என்பதே பார்ப்பனர்களின் தொழில் ஸ்தலம்தான் என்பதைத் தாண்டி எதுவுமில்லை.

    //வாங்க கோவிலுக்குப் போகலாம், அங்க போனால் இதெல்லாம் தீர்ந்திடும் என்று உங்களைத் தடுத்திருந்தால் உங்கள் வாதம் சரியானதாக இருந்திருக்கும், அப்படி நான் சொல்லவில்லையே?//

    நீங்கள் ‘சொல்லவில்லை’. பகவானை தரிசித்தால் லோகம் சுபிட்ஷமா இருக்கும்னு உங்க பெரியவா தான் சொல்லிருக்காங்க. எப்போது நீங்கள் கோவிலுக்குச் செல்கிறீர்களோ அப்போதே அதை ஏற்றுக்கொண்டு விட்டதாகவே அர்த்தம்.

    //கோவிலுக்குச் செல்வதும், இறை வழிபாடும் எனது உரிமை. நாட்டில் ஊழலை எதிர்த்து போராடுவதை கொண்டு வந்து ஏன் இதனோடு முடிச்சுப் போடுகிரீர்கள் என்றே புரியவில்லை. //

    மீண்டும் எனது வாதங்களைப் படியுங்கள். சிந்தியுங்கள். நான் சிந்திப்பதும் சிந்திக்காமல் இருப்பதும் என் உரிமை என்று மொக்கையாக வாதிடாதீர்கள்.

    // கோவிலுக்குச் செல்லும்போது வாகன விபத்து நடக்கிறது அதனால் கடவுளே இல்லை, யாரும் கோவிலுக்குப் போகாதீங்க என்பது பிக்காலித் தனமான கருத்து என்று இந்தப் பதிவருக்கு எடுத்துச் சொல்லி நீங்கள் கண்டித்தால் நான் அதை வரவேற்ப்பேன்.//

    பிக்காலித்தனம் எது என்பதை காலம் போகிற போக்கில் உணர்வீர்கள். நீங்களெல்லாம் அந்நியன் படத்துல வர்ற அம்பியைப் போல. பகவானை சேவிச்சுக்கிட்டு தனியா நின்னு வெறுமனே ரூல்ஸ் பேசிக்கிட்டு நிக்கிறவங்க. ஒண்ணும் செய்யமுடியாது!

    //திருடனுங்களுக்கு ஓட்டைப் போட்டு விட்டு, அவனுங்க இந்தியப் பணத்தை கொண்டு போய் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்க விட்டு விட்டு விவசாயிகள் தற்கொலை என்று இப்போது கடவுளை இழுத்தால் அவர் என்ன பண்ணுவார்?//

    அதானே! பாவம் அவர் என்ன பண்ணுவார்! அவருக்கும் ஆயிரத்தெட்டு சோலி பாடு இருக்கும். எந்தெந்த விஷயங்களுக்கு கடவுள்ட்ட அப்ளீகேசன் போடணும்னு சொல்லிட்டீங்கன்னா பரவால்ல! நாமெல்லாரும் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்ல.

    // இந்தியாவைப் பொறுத்தவரை கொள்ளையடிக்கப் பட்ட வெளிநாட்டு பணம் வந்தாலே போதும், எந்த விவசாயியும் தற்கொலை செய்ய வேண்டியதில்லை, எல்லோரும் சந்தோஷமாக இருக்க முடியும்.//

    உங்கள் புரிதல் தவறு. அப்போதும் விவசாயிகள் துயருறுவர். காரணம், விவசாயத்திற்கென்று சீரிய திட்டங்கள் இல்லாமை. மேட்டுக்குடி மக்கள் ஆட்சியில் இருக்கும்வரை நலிந்தோருக்கு எவ்வகையிலும் முன்னேற்றம் வராது.

    // எதைப் பண்ணினாலும், மக்கள் என்னைக்கு புத்தி வந்து ஒற்றுமையாய் இந்த திருட்டுப் பசங்களை சட்டை காலரைப் பிடித்து கேள்வி கேட்கிறாங்களோ அன்று வரை கஷ்டத்துக்கு விடிவு கிடையாது.//

    அதையேதான் நானும் சொல்றேன். வர்றீங்களா கேள்வி கேட்க? போலீஸ்காரன் நாலு அடி சவட்டி எடுத்தா, மாரியாத்தா கால்ல போய் விழுவீங்க எனக்கு நிம்மதி கொடு தாயீன்னு! அது என் தனி மனித உரிமைன்னு மறுபடியும் கதறாதீங்க.

    • \\இறை நம்பிக்கை உங்களுக்கு அதற்கான உத்வேகத்தைத் தரமுடியாது, உங்கள் மீதான நம்பிக்கையையே குலைக்கும், உங்களைப் பின்னுக்கு இழுக்கும் என்பதே என் வாதம். \\ பகுத்தறிவு, விஞ்ஞானப் பூர்வாமாக சிந்தித்தல் என்றெல்லாம் நாத்தீகர்கள் பெருமை பட்டுக் கொள்கிறீர்கள், ஆனால் நடைமுறையில் யாரும் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் ஒரு கொள்கையை [theory] எடுத்துவைக்கிறீர்கள் என்றால் எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள் என்பதயும் விளக்க வேண்டும். உலகிலேயே பணக்கார நாடுகளிலும் இறை நம்பிக்கையுடைய மக்கள் இருக்கிறார்கள். இறை நம்பிக்கையுள்ள நாடுகள், சமூகங்கள் வீணாய்ப் போய்விட்டன, இறை மறுப்புக் கொள்கையை கடைபிடிக்கும் நாடுகள், சமூகங்கள் சுபிட்சமாக இருக்கின்றன என்று நீங்கள் Statistics காண்பித்தால் நீங்கள் சொல்வதை consider செய்யலாம், அவ்வாறு உங்களால் முடியாவிட்டால், இது உங்கள் சொந்தக் கருத்து, அதற்க்கு எந்த value -ம் இல்லை.

      \\கோவில் என்பதே பார்ப்பனர்களின் தொழில் ஸ்தலம்தான் என்பதைத் தாண்டி எதுவுமில்லை.\\ அப்போ சர்ச்சுக்குப் போகலாம், மெக்கா மெதீனா என்று போகலாம். இறை நம்பிக்கையே தவறு என்று நீங்கள் சொல்வது எந்த அடிப்படையில்?

    • \\நீங்கள் ‘சொல்லவில்லை’. பகவானை தரிசித்தால் லோகம் சுபிட்ஷமா இருக்கும்னு உங்க பெரியவா தான் சொல்லிருக்காங்க. எப்போது நீங்கள் கோவிலுக்குச் செல்கிறீர்களோ அப்போதே அதை ஏற்றுக்கொண்டு விட்டதாகவே அர்த்தம்.\\ வீரமணி, கருணாதி போன்றவர்கள் செய்யும் அயோக்கியத் தனத்துகெல்லாம் நான் பொறுப்பில்லை என்று நீங்கள் மட்டும் கழண்டு கொண்டுவிட்டு, இப்போது நான் மட்டும் எவனோ அவாள், இவாள் சொன்னதுக்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டுமா? நல்ல நியாமையா இது. மதத் தலைவர்கள் அயோக்கியர்களாக இருப்பதால் இறைவன் இல்லை என்றாகி விடுமா? நாதீகத் தலைவர் ஒரு மொள்ளமாரி நான் உண்மையான நாத்தீகன் என்று நீர் உம்மை சொல்லிக் கொள்கிறீரே, அதே போல போலி மதத் தலைவர் இருக்கக் கூடாதா, அவரை புறந்தள்ளிவிட்டு நான் இறைவனை வழிபடுவது தவறா?

    • \\அதானே! பாவம் அவர் என்ன பண்ணுவார்! அவருக்கும் ஆயிரத்தெட்டு சோலி பாடு இருக்கும். எந்தெந்த விஷயங்களுக்கு கடவுள்ட்ட அப்ளீகேசன் போடணும்னு சொல்லிட்டீங்கன்னா பரவால்ல! நாமெல்லாரும் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்ல.\\ இறைவன் படைப்பில் காக்கா குருவி முதற்கொண்டு மலம் உண்ணும் பன்றி வரை எல்லோருக்கும் உணவு இருக்கிறது. ஐந்தறிவு உள்ள இனங்களே உணவுக்காக கஷ்டப் படவேண்டியதில்லை [மனுஷன் அதுங்களையும் வாழ விடுவதில்லை என்பது வேறு விஷயம்], ஆறறிவு உள்ள மனுஷன் மட்டும் ஏன் கஷ்டம் …கஷ்டம் … என்று புலம்பும் நிலையில் உள்ளான் என்று நீர் யோசிக்க வேண்டும். இறைவன் சுவையான நீரைக் கொடுக்கும் கங்கை, யமுனை, காவிரி நதிகளைக் கொடுத்தான் அதில் நீங்கள் ரசாயன ஆலைகலீல் இருந்து வரும் விஷத்தைக் கொட்டினீர்கள், அற்று மனை அள்ளி விற்றீர்கள், விவசாய நிலங்களை பிளாட்டு போட்டு விற்றீர்கள், காடுகளை அழித்தீர்கள், திருடன் கையில் ஆட்சியை கொடுத்தீர்கள்…. இப்படி உமது கஷ்டங்கள் எல்லாம் நீங்களாக வரவழைத்துக் கொண்டது, அதற்க்கான பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள். இந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட இறை நம்பிக்கையாளர்கள் கோவிலுக்குச் செல்கிறார்கள். அதிலும் மண்ணை வாரிபோட வருகிறீர்களா? நாத்தீகக் கொள்கைகளை வைத்து ஒரு நாத்திக இயக்கத்தில் உள்ள பித்தாலட்டத்தைக் கூட சரி செய்ய முடியாத நீங்கள், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறீர்களா? நல்ல தமாஷ்!!

      • // இறைவன் படைப்பில் காக்கா குருவி முதற்கொண்டு மலம் உண்ணும் பன்றி வரை எல்லோருக்கும் உணவு இருக்கிறது. ஐந்தறிவு உள்ள இனங்களே உணவுக்காக கஷ்டப் படவேண்டியதில்லை [மனுஷன் அதுங்களையும் வாழ விடுவதில்லை என்பது வேறு விஷயம்], ஆறறிவு உள்ள மனுஷன் மட்டும் ஏன் கஷ்டம் …கஷ்டம் … என்று புலம்பும் நிலையில் உள்ளான் என்று நீர் யோசிக்க வேண்டும்.//
        நீர் யோசித்ததில் என்ன தோன்றியது. கடவுள் என்று சொல்ல வேண்டாம். அதை நிரூபணம் செய்யவேண்டும். ஆறறிவு உள்ள மனிதனின் செயல்களை தடுக்க முடியாத கடவுளுக்கு எத்தனை அறிவு.

        //இறைவன் சுவையான நீரைக் கொடுக்கும் கங்கை, யமுனை, காவிரி நதிகளைக் கொடுத்தான் அதில் நீங்கள் ரசாயன ஆலைகலீல் இருந்து வரும் விஷத்தைக் கொட்டினீர்கள், அற்று மனை அள்ளி விற்றீர்கள், விவசாய நிலங்களை பிளாட்டு போட்டு விற்றீர்கள், காடுகளை அழித்தீர்கள், திருடன் கையில் ஆட்சியை கொடுத்தீர்கள்…. இப்படி உமது கஷ்டங்கள் எல்லாம் நீங்களாக வரவழைத்துக் கொண்டது, அதற்க்கான பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள்//
        அதை செய்தது கம்யூன்ஸ்ட்கள் அல்ல, லாபவெறி கொண்ட முதலாளிகளும் அவர்களின் ஊதுகுழல்களாக செயல்படும் மத அடிப்படைவாதிகளும்தான், நோய்கண்டவர்களை மருத்தவர்களிடம் அழைத்து செல்பவரை, வழிகாட்டுபவரை விமர்சித்து, நோயாளிகளை பார்ப்பனர்களிடமும், பூசாரிகளிடமும், அழைத்துச்சென்று முடியாமல் சாகுபவரை எல்லாம் விதி என்று நம்பச்செய்யும் உம்மைப் போன்றோரை என்னசொல்வது? இல்லை அதைவிட்டுவிட்டு அனைத்திற்கும் ஆதாரபூர்வமான விளக்கம் அளிப்பவர்களை காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்ப்பதா? இல்லை எதற்கும் உதவாத கடவுளை நம்புவதா? அனைத்து அடிப்படை வாழ் சூழ்நிலைகளையும் ஆக்கிரமப்பாளர்களிடம் ஒப்படைத்தது யார்? கம்யூனிஸ்களா? இல்லை மக்களை மூடக்குழியில் தள்ளி ஆதாயம் தேடும் ஆன்மீகவாதிகளா? என்று மனதில் நேர்மையிருந்தால் பதில் சொல்லவும்.

        //கஷ்டத்திலிருந்து விடுபட இறை நம்பிக்கையாளர்கள் கோவிலுக்குச் செல்கிறார்கள். அதிலும் மண்ணை வாரிபோட வருகிறீர்களா?//
        நாங்கள் மண்ணைப் போட்டது மக்களின் நம்பிக்கையிலா? இல்லை அவர்களை ஏமாற்றி பொறுக்கித் தின்பவர்களின் மோசடியிலா?

        // நாத்தீகக் கொள்கைகளை வைத்து ஒரு நாத்திக இயக்கத்தில் உள்ள பித்தாலட்டத்தைக் கூட சரி செய்ய முடியாத நீங்கள், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறீர்களா?//
        சந்தர்ப்பவாதிகளை எங்களோடு இணைக்கவேண்டாம்.நாங்கள் தமாஷ் செய்யவில்லை.

        தேவை நேர்மையான பதில். கிடைக்குமா…..?

        • \\இல்லை அதைவிட்டுவிட்டு அனைத்திற்கும் ஆதாரபூர்வமான விளக்கம் அளிப்பவர்களை காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்ப்பதா? \\ இதுவரைக்கும் எதற்ககெல்லாம் நீங்க ஆதாரத்தைக் கொடுத்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? அறியாமையில் இருக்கும் உங்கள் மீது எனக்கெதற்கு காழ்ப்புணர்ச்சி?

          \\இல்லை எதற்கும் உதவாத கடவுளை நம்புவதா? \\ எல்லாம் கொடுத்தவன் இறைவன் அதை அழித்தவன் உங்களைப் போன்ற மனிதன். எல்லாவற்றுக்கும் உதவுபவன் இறைவன், ஒன்றுக்கும் உதாவாக்கடை வீணாய்ப் போன சில மனிதர்களே.

          அனைத்து அடிப்படை வாழ் சூழ்நிலைகளையும் ஆக்கிரமப்பாளர்களிடம் ஒப்படைத்தது யார்? கம்யூனிஸ்களா? இல்லை மக்களை மூடக்குழியில் தள்ளி ஆதாயம் தேடும் ஆன்மீகவாதிகளா? என்று மனதில் நேர்மையிருந்தால் பதில் சொல்லவும்.

          \\நாங்கள் மண்ணைப் போட்டது மக்களின் நம்பிக்கையிலா? இல்லை அவர்களை ஏமாற்றி பொறுக்கித் தின்பவர்களின் மோசடியிலா?\\ போலிகள் எல்லா இடங்களிலும் உண்டு, கோவில்களிலும் உண்டு. அதற்காக இறை மறுப்புக் கொள்கையை தழுவுவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போல.

          \\சந்தர்ப்பவாதிகளை எங்களோடு இணைக்கவேண்டாம்.\\ உங்க வீட்டை சுத்தம் பண்ணுங்க அன்பரே, அதுக்கப்புறம் மத்தவங்க பிரச்சினையைத் தீர்க்கலாம்.

          \\தேவை நேர்மையான பதில். கிடைக்குமா…..?\\ நேர்மை, கிலோ என்ன விலை, அது எந்த கடையில் கிடைக்கும் என்பது போல பின்னூட்டம் போட்டுவிட்டு என்னை நேர்மையாக இருக்கச் சொல்வது நியாயமா?

          • // இதுவரைக்கும் எதற்ககெல்லாம் நீங்க ஆதாரத்தைக் கொடுத்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? அறியாமையில் இருக்கும் உங்கள் மீது எனக்கெதற்கு காழ்ப்புணர்ச்சி?//
            உங்களுக்கு எதற்கு ஆதாரம் வேண்டும், சொல்லுங்கள். தருகிறோம். அறியாமையில் இருப்பது யார் என்று தெரியும். உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் ஆராயும் மனப்பாண்மையில்லாமல், ஒற்றை முடிவுடன் இருக்காதீர், காழ்ப்புணர்ச்சி இல்லை என்றால் மிகவும் நன்றி.

            // போலிகள் எல்லா இடங்களிலும் உண்டு, கோவில்களிலும் உண்டு. அதற்காக இறை மறுப்புக் கொள்கையை தழுவுவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போல.//
            மூட்டைப்பூச்சிகு பயந்து வீட்டையெல்லாம் கொளுத்தவில்லை. இல்லாத ஒன்றை எப்படி ஏற்றுக்கொள்வது. மன்னித்துக்கொள்ளவும், கடவுள் இருந்தால் ஒரு பின்னூட்டம் இடச் சொல்லவும். முடியாத மற்றும் இல்லாத கடவுளுக்கு நீர் கவலையேற்க வேண்டாம்.சின்ன சந்தேகம், போலிகளை ஒழிக்க கடவுளிடம் வேண்டிக்கொண்டீரா?

            // உங்க வீட்டை சுத்தம் பண்ணுங்க அன்பரே, அதுக்கப்புறம் மத்தவங்க பிரச்சினையைத் தீர்க்கலாம்.//
            குப்பைகள் இருந்தால் சுத்தம் செய்யப்படும். மற்றபடி ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதம் செய்யமாட்டோம். எல்லா பிரச்சனைகளும் வர்க்க பின்னணி கொண்டவையே, தீர்ப்பதற்கு நீர் என்னவழி வைத்திருக்கிறீர்? உங்கள் கடவுள் என்னசொல்கிறார்?

            //நேர்மை, கிலோ என்ன விலை, அது எந்த கடையில் கிடைக்கும் என்பது போல பின்னூட்டம் போட்டுவிட்டு என்னை நேர்மையாக இருக்கச் சொல்வது நியாயமா?//
            அப்ப, நீங்க நேர்மையாக இல்லை என்று ஒத்துக்கொண்டீர்கள்தானே!
            தோழரே, நட்புடன் விவாதித்து எங்கள் வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிடினும், மக்கள் நன்மையை நீரும் கருதுவதால் உங்கள் தோழமையை விரும்புகிறோம்.நன்றி…

            • // உங்களுக்கு எதற்கு ஆதாரம் வேண்டும், சொல்லுங்கள். தருகிறோம். அறியாமையில் இருப்பது யார் என்று தெரியும். \\ You say that our society is not developing just because we believe in God, can you prove statistically that countries with faith in God don’t develop & and without faith in God are flourishing?

              \\உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் ஆராயும் மனப்பாண்மையில்லாமல், ஒற்றை முடிவுடன் இருக்காதீர்.\\ what analysis and logic did you use to become an atheist boss?

              \\இல்லாத ஒன்றை எப்படி ஏற்றுக்கொள்வது.\\ The very existence of the creation is the proof that the creator, God does exist and no further proof is required. Of course there may be problem when you buy a TV set that does not mean the TV set came into existence without a manufacturer.

              \\மன்னித்துக்கொள்ளவும், கடவுள் இருந்தால் ஒரு பின்னூட்டம் இடச் சொல்லவும். \\ He is not your order supplier to say “Yes sir” as and when you place an order.

              // குப்பைகள் இருந்தால் சுத்தம் செய்யப்படும். மற்றபடி ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதம் செய்யமாட்டோம். \\ The DK movement was started to clean up the society of caste discrimination, corruption and liquor consumption. But the leaders themselves are selling liquor and trying to make their offspring as their successor. First clean it and then you can clean the society.

              \\எல்லா பிரச்சனைகளும் வர்க்க பின்னணி கொண்டவையே, தீர்ப்பதற்கு நீர் என்னவழி வைத்திருக்கிறீர்? உங்கள் கடவுள் என்னசொல்கிறார்?\\ Develop love for God, that will solve all problems. Otherwise you will be cheated by people like veermani and karunaanidhi.

              \\தோழரே, நட்புடன் விவாதித்து எங்கள் வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிடினும், மக்கள் நன்மையை நீரும் கருதுவதால் உங்கள் தோழமையை விரும்புகிறோம்.நன்றி…\\ You are welcome, Thanks.

              • உங்கள் பின்னூட்டத்தை தமிழில் இட்டால் உங்கள் வாதத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியுமே!

              • //Develop love for God, that will solve all problems. Otherwise you will be cheated by people like veermani and karunaanidhi.//
                ஜெயதேவ் சார், problem solve ஆகணும்னு சொல்லி கடவுளை வேண்டுறவங்களை சங்கராச்சரியார் மாதிரியான பூசாரிகள் ஏமாத்திடுராங்களே!

                ஜெய்ஹிந்த்!

    • \\போலீஸ்காரன் நாலு அடி சவட்டி எடுத்தா, மாரியாத்தா கால்ல போய் விழுவீங்க எனக்கு நிம்மதி கொடு தாயீன்னு!\\ நீங்க என்ன வீரமணி காலில் போய் விழுவீர்களா?

      • நல்லது நண்பரே, நீங்கள் எங்கே விழுவீர்கள் என்பது தெரிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கும் வீரமணிக்கும் என்ன தொடர்பு என்று சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும்.

  16. ரிஷி..
    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஆக கையாலாகாத கடவுளால் ஒன்றும் செய்ய இயலாது மனித ஒற்றுமையால் தான் முடியும் என்று சொல்ல வருகிறீர்கள் சரிதானே?

  17. சில தமிழர்களுக்கு சாமியாக இருந்தாலும்/ ஆசாமியாக இருந்தாலும் அண்டை மாநிலம் தான் பிடிக்கிறது.. என்ன செய்வது பகுத்தறிவில்லாத மனிதர்கள்களுடன் நாம் வாழ்ந்து கொண்டு தானே உள்ளோம்.அவர்கள் மட்டுமா நம் பகுத்தறிவு தமிழர்கள் நடத்தும் பல தொலைக்காட்சிகளும் அப்படிதானே இருக்கின்றன.
    நிலைமை மாற வேண்டிக்கொள்வோம் நம்ம ஊர் பச்சவழியம்மன் கோயில் ஐயனாரப்பனை!

  18. ஜெயதேவ்,
    இயற்கையாய் உருவான நம் வாழ்வின் மூலாதாரங்களையும், இந்த மண்ணின் செல்வங்களையும் மனிதன் பேராசை கொண்டு தன் சுய அற்ப சந்தோஷங்களுக்காக அழித்து வருவது கண்டு மிகவும் கொதிப்படைந்திருக்கிறீர்கள். நல்லது. நம் எல்லோருக்குமே இதில் பங்கு இருப்பதை உணரும் இக்கட்டத்தில், அந்தப் பேராசையும் நுகர்வு வெறியும் அசுர வேகத்தில் கடந்த சில பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அந்த வெறி நமக்கு எவ்வாறு ஊட்டப்பட்டது என்பதையும் பரிசீலனை செய்யவேண்டும், அதை ஒழித்துக் கட்டவேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். அறியாமையில் உழலும் மக்களுக்கு இந்தச் செய்தி எடுத்துச் செல்லப்படவேண்டும். இல்லையேல் நம் சந்ததியினர் அடுத்து வரும் காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட நேரிடும்.

    மற்றபடி, இந்த லாப வெறி, நுகர்வு வெறி, அபரிமிதமான பேராசை, நிச்சயமற்ற வாழ்க்கையின் அச்சுறுத்தல்கள், குரல்வளை நெரிக்கும் துரோக மனப்பான்மைகள் போன்ற அத்தனை அசுரத்தனங்களிலிருந்தும் விடுபட்டு மன சாந்தி பெற உங்களுக்கு நீங்கள் கருதும் ஆன்மிகமும், பக்தியும் வழிகொடுக்கும் என்று நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்! மற்றபடி நான் அவ்வாறு கருதவில்லை. அதற்கு நேரெதிர் பார்வை என்னுடையது. But, still, let us be friends and happy to agree the disagreement. 🙂

    • தங்களது அன்பான பதிலுக்கு நன்றி. தங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் எனக்கு இல்லை, இங்கே நடத்து கொள்கை ரீதியான மோதல்களே. அதை நீங்கள் +ve ஆக எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி. நீங்கள் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டதற்காக ஓரிரு வார்த்தைகளை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றுவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று தாங்கள் நம்புகிறீர்கள் என்று தெரிகிறது. இது உண்மையா என்று நீங்கள் ஆராய வேண்டும். நீங்கள் என்னதான் சம்பாதித்தாலும் கடைசியில் ஒரு வெறுமையே மிஞ்சி நிற்ப்பதை கண்கூடாகக் காண முடியும். ஒரு படத்திற்கு நாற்ப்பது கோடி சம்பாதிக்கும் சாம்ர்த்தியுள்ள ஒருத்தர், நல்ல மனைவி அழகான இரண்டு குழந்தைகள், இன்னும் வாழ்க்கையில் என்னென்ன பொருளாதார ரீதியில் வேண்டுமோ அத்தனையும் இருந்தும், ஏன் அடிக்கடி இமயமலைக்கு ஓடுகிறார் என்று யோசித்தீர்களா? இந்த வெறுமை இவரது விஷயத்தில் மட்டுமல்ல எல்லோருடைய மனதிலும் இருக்கிறது, ஆனால் வெளியில் சிலர் காட்டிக் கொள்கின்றனர் சிலர் காட்டுவதில்லை. ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான அளவுக்கு ஒவ்வொருக்கும் பொருள் இருக்க வேண்டும், அது இயற்கையிலேயே கொடுக்கப் பட்டுள்ளது வறுமை, மனிதனின் பேராசையால் வந்தது. வறுமையில் இருப்பவர்கள் பணம் இருந்தால் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் இறைவனின் மீது அன்பு செலுத்தினால் அன்றி மகிழ்ச்சி என்ற ஒன்று கானல் நீராகவே இருக்கும். இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்,இது என்றும் மாறாத உண்மை என்று உணர்வீர்கள்.

      • இதே தளத்தில் “அன்னை” தெரசா எழுதிய வெறுமை பற்றிய கடிதம் பற்றிய கட்டுரை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் ஒரு வெறுமை உண்டாகும். இது கடவுளை நம்பும் மற்றும் நம்பாத அனைவருக்கும் பொருந்தும்.
        https://www.vinavu.com/2008/12/29/mteresa/

  19. //வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் ஒரு வெறுமை உண்டாகும். இது கடவுளை நம்பும் மற்றும் நம்பாத அனைவருக்கும் பொருந்தும்.//

    ஆம் இது தான் உண்மை எனவே கடவுளுக்கு(?)இதில் தொடர்பில்லை. நன்றி வித்யா.

  20. போராட்டம் எந்த தடையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டும்.நச்சு சக்திகள் நாச வேலைகள் செய்யாமல் இருக்க வேண்டும்.

  21. Faith in god is necessary for any country people, you can strongly condemn and fight against blind beliefs and fake godman but God and prayer is indispensable look around the world majority of world people follow a religion. Periyar is right in opposing the blind beliefs and fetish rules of hinduism but adhering atheism is not the solution. Religion is formed to purify human, without religion people will be nothing. Stay away from negative propaganda. Even in Tamilnadu days of atheist is well gone. It is appreciable to remove the fetish practices it is ok but What have you achieved in blaming gods and faith of people, nothing but a group of negative viewers.

Leave a Reply to Vidhya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க