privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்வாவ்! பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!

வாவ்! பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!

-

“ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த நாட்டுக்கே முன்மாதிரியாய் விளங்குகிறார்” என்கிறார் மும்பை லீலாவதி மருத்துவமனையின் பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் கிரண் கொயல்லோ. மறுநாளே இதை முன்மொழிந்து வழிமொழிந்து இடைமொழிந்து குதூகலித்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை. நடுத்தர வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் சிசேரியன் செய்து கொள்ளவே விரும்புவதாகவும், இந்நிலையில் சுகப்பிரசவமே வேண்டும் என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதி நாட்டுமக்களுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிற்கிறது என்கிறது அந்த செய்திக் கட்டுரை.

சிசேரியன் ஆகி விடக்கூடாது என்கிற ஐஸ்வர்யா ராயின் மன உறுதியைக் காட்டிலும் அவர் மேல் பணம் கட்டியிருக்கும் – மற்றும் கட்டவிருக்கும் – படக் கம்பெனி முதலாளிகளில் இருந்து விளம்பர நிறுவனங்கள் வரை அனைருக்கும் இதயம் தாறுமாறாக எகிறியிருக்கும். லீலாவதி மருத்துவமனை மகப்பேறு வார்டின் முன் கையைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்த அமிதாப் பச்சனின் மனசாட்சிக்குக் கூட அது தெரிந்திருக்கும் – வயிற்றில் ஆப்பரேஷன் கோட்டோடு கவர்ச்சி உடையில் தோன்ற முடியாதல்லவா? அதனால் தான் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் அமிதாப் பச்சனே ட்விட்டரில் இது சுகப்பிரசவம் தான் என்று உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்.

அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் 2007-ல் திருமணம் முடித்ததில் இருந்து அவர் கருவுற்ற தேதி வரை அந்தக் கால மாமியார் போல ‘அடியே இன்னுமா மசக்கை ஆகலை’ என்று முதலாளித்துவ ஊடகங்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கருவுற்ற பின்னும் வயிறு தள்ளியிருக்கிறதா என்பதில் ஆரம்பித்து அதை மறைக்க எந்த வகை உடை அணிகிறார் – எதை அணியலாம் என்பது வரைக்கும் ஆங்கில ஊடகங்கள் தமது ‘பேஜ் 3’ பக்கங்களில் அக்கறையுடன் பல ஆலோசனைகளை வழங்கி அவற்றைத் தமது வாசகர்களுக்கு சுவைபட விவரித்துக் கொண்டிருந்தன.

குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா எப்போது வெளியே தலைகாட்டுவார் குழந்தையின் புகைப்படம் எப்போது வெளிவரும் என்ன பெயர் வைப்பார்கள் என்று துப்பறியும் நாவலைப் போல் விறுவிறுப்பாக எழுதிக் குவித்தனர். இதற்கிடையே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை வைத்து வடநாட்டில் புக்கிகள் பந்தையம் கட்டி சூதாடியது நடந்தது. சூதாட்டம் என்று வந்த பின் கிரிக்கெட்டாவது குழந்தையாவது – தின்னும் சோற்றைக் கூட விட்டு வைக்காமல் சூதாடும் நாட்டில் குழந்தையை வைத்து சூதாடுவது ஆச்சர்யத்துக்குரியதல்ல – ஆனால் அதையும் பெருமிதத்துடன் பத்திரிகைகள் எழுதுகின்றன என்பதைக் கொண்டே இவர்களின் தரம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்போது ஐஸ்வர்யா திரும்பவும் எப்போது திரையில் தோன்றி மகிழ்விப்பார் என்கிற எதிர்பார்ப்பில் மூழ்கிக் கிடக்கும் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஆற்றுப் படுத்தும் விதமாக அவர் தனது உடலை மெலிய வைக்க மீண்டும் பயிற்சிகளை  ஆரம்பித்துள்ளார் என்கிற உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை பக்கம் பக்கமாக ஓதுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள். அதிலும் ஒரு படி மேலே போன இந்துஸ்தான் டைம்ஸ், பிரசவத்துக்குப் பின் செய்தியாளர்கள் முன் தோன்றிய ஐஸ்வர்யா பாரம்பரிய வேலைப்பாட்டுடன் கூடிய ஹவாய் செருப்பை அணிந்து வந்தார் என்றும் இது கால் தசைகள் மற்றும் பின்புறத்தில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைக்க உதவுமென்றும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது. மட்டுமல்லாமல், அந்த செருப்பை எங்கே வாங்கலாம் அதன் விலை என்ன அது போன்ற செருப்பை அணிவதன் பிற பலன்கள் என்ன அதைப் பற்றி உடற்கூறியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கர்ம சிரத்தையாக ‘செருப்பு’ ஆய்வுக் கட்டுரையாக அதை வளர்த்துச் செல்கிறது.

ஐஸ்வர்யாவுக்கு நடந்த சுகப்பிரசவத்துக்காக மகிழ்ச்சிக் கடலில் முழ்கியுள்ள பத்திரிகைகள் இதே நேரத்தில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 18.65 சதவீதமாக உயர்ந்துள்ளதைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லி விட்டுக் கடந்து செல்கின்றன. அதிலும் நாட்டின் தலைநகரமான தில்லியில் தான் குழந்தை இறப்பு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேகமாக ‘வளர்ந்து’ வரும் தில்லி நகரத்துக்கு மேக்கப் போடுவதற்காக நடந்துவரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளுக்காக இடம் பெயர்ந்து வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு போதிய மருத்துவவசதிகள் ஏதும் வழங்கப்படாததே இதற்குப் பிரதானமான காரணம். மேலும் தில்லியில் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் இருக்கும் பிரசவ வார்டுகளுக்கு போதிய மருத்துவர்களோ செவிலியர்களோ பிற உட்கட்டமைப்பு வசதிகளோ எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை.

உலகளவில் குழந்தை இறப்பு விகிதம் குறித்து ஐ.நா வெளியிட்டிருக்கும் பட்டியலில் இந்தியா 152-ம் இடத்தில் இருக்கிறது. இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளும் துனீஷியா, லிபியா, கோஸ்டாரிகா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் கூட இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். கூடிய சீக்கிரத்தில் வல்லரசாப் போகிற நாடு என்று ராக்கெட்டு விட்ட அப்துல் கலாமே சர்டிபிகேட் கொடுத்துள்ள இந்த தேசத்தில், பிறக்கும் குழந்தைகளைக் கூட காப்பாற்ற வக்கற்ற தேசம் என்பது யதார்த்தமாக இருக்கும் போது ஒரு நடிகை பிள்ளை பெற்றுள்ளதைப் பற்றி இவ்வாறு விவரித்து எழுத அசாத்தியமான தடித்தனம் தேவை.

அமிதாப் பச்சன் தனக்குப் பிறந்துள்ள பேரக்குழந்தைக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். சரியான பெயர் ஏதும் கிடைக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பமே புதிய வரவான அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடி வருவதாகவும் தனது ரசிகர்களும் பொருத்தமான பெயர்களைச் சிபாரிசு செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பெயர் ‘அ’ வரிசையில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை போல – இந்த செய்தி வெளியான எல்லா ஆங்கில செய்தி ஊடகங்களின் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பெயர்களை பரிந்துரைத்து வருகிறார்கள்.

இந்தப் பெயர் வைப்பு வைபவம் என்பது ஐஸ்வர்யாவுக்கு மட்டும் கிடைத்த பேறு அல்ல. கோடிக்கணக்கான ஏழைப் பெண்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு ‘க’ வரிசையில் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது – கருமாதி!

_________________________________________________

– தமிழரசன்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. முன்னரெ இதைப் பொல ஒரு பதிவு வினவில் படித்ததாக ஞாபகம் “உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா”
    முதலாளித்துவ ஆட்சி நடைபெரும் நாட்டில் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

    அருமையான பதிவு.

  2. ஆசுபத்திரிகளே இல்லாத ஊரில், மாட்டுவண்டியில் ஏற்றி, கழனிக்காட்டு வழியிலேயே வலியால் துடிதுடித்து, சிசேரியன் இல்லாமல் குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகிறதே… அந்த வலியால் துடித்த தாய்மார்கள் முன்மாதிரி இல்லையா?

    தகர டப்பா பேருந்துகளிலும், ரயில்வே பிளாட்பாரங்களிலும் பிறக்கும் குழந்தைகளின் தாய்கள் முன்மாதிரி இல்லையா?

    ஆசுபத்திரிக்கு லஞ்சம் கொடுக்க வழியில்லாமல் மருத்துவமனைக்கு வெளியிலேயே பிரசவிக்கும் தாய்மார்கள் முன்மாதிரியில்லையா?

    ஆசுபத்திரியில் சேர்த்தவுடனே, ஹஸ்பெண்டுவின் கையெழுத்து வாங்கிக்கொண்டு சுகப் பிரசவம் ஆவதற்கு முன்னாலேயே சிசேரியன் செய்துவிடும் ‘தையல்’ கொடுமைகளை, உங்களைப்போன்ற ஆசுபத்திரி நிர்வாகங்கள்தானே செய்கின்றன? அங்கு நீங்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ளவில்லையே?

    ‘வயிற்றில் கீரல் வேண்டாம், அழகு போய்விடும். காசு ஆனாலும் பரவாயில்லை. கத்தி வைக்கவேண்டாம்’ என்று நோட்டை நீட்டினால் மட்டும்தான், சதி லீலாவதி மருத்துவமனையில் சுகப்பிரசம் ஆகுமோ?

    தலைமை மருத்துவர் கிரண் கொய்யாலே…. கொஞ்சம் கதவைத் திறந்து இந்தியாவில் காலாற நடந்து பார். உங்களின் இந்த பளபள முன்மாதிரிக்கு முன்னால் எத்தனையோ கதியற்ற முன்மாதிரிகள் கண்ணுக்குத் தெரிவார்கள்!

    • //ஆசுபத்திரிக்கு லஞ்சம் கொடுக்க வழியில்லாமல் மருத்துவமனைக்கு வெளியிலேயே பிரசவிக்கும் தாய்மார்கள் முன்மாதிரியில்லையா?///

      ஆம். இதில் லஞ்சம் கேட்ப்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். அவர்களை ‘திருத்த’ முயலாமால் சும்மா தனியார்களை ’திட்டுவது’ வீண். வளர்ந்த நாடுகளில் பொதுவாக பொது மருத்துவம் மற்றும் கல்வி அரசாங்களால் சிறப்பாக (அதாவது இந்தியாவை ஒப்பிடும் போது) செயல்படுத்தப்படுகிறது. இங்கு அதை செய்யக்கூடாது என்று எந்த ‘தனியார்வாதியும்’ தடுக்க முயலவில்லை. ஆண்டுக்கு பல லச்சம் கோடிகள் அரசு செலவு செய்தும், போதுமான விளைவுகள் இல்லை. ஏன் ? அரசு எந்திரம் இப்படி சீரழிய யார் காரணம் ? தொழிற்சங்கங்களை அமைத்து, தம் ‘உரிமைகளுக்காக’ மட்டும் போராடும் அரசு ஊழியர்களின் ‘கடமைகளை’ பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. உரிமைகளுக்காக போராடலாம். அதை குறை சொல்லவில்லை. ஆனால் கடமை என்பது அதன் மறுபக்கம். அதுவும் மிக முக்கியமானது.

      ஆனாலும் இந்தியாவில் பொது மருத்துவத்திற்க்கு அரசுகள் சொலவிடும் தொகையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் / முடியும். தேவையில்லாத வெட்டி செலவுகள் / ராணுவ செலவுகளை தவிர்த்தாலே நிறைய மிச்சமாகும்.

      • ////ஆசுபத்திரிக்கு லஞ்சம் கொடுக்க வழியில்லாமல் மருத்துவமனைக்கு வெளியிலேயே பிரசவிக்கும் தாய்மார்கள் முன்மாதிரியில்லையா?///

        ஆம். இதில் லஞ்சம் கேட்ப்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். அவர்களை ‘திருத்த’ முயலாமால் சும்மா தனியார்களை ’திட்டுவது’ வீண். வளர்ந்த நாடுகளில் பொதுவாக பொது மருத்துவம் மற்றும் கல்வி அரசாங்களால் சிறப்பாக (அதாவது இந்தியாவை ஒப்பிடும் போது) செயல்படுத்தப்படுகிறது. இங்கு அதை செய்யக்கூடாது என்று எந்த ‘தனியார்வாதியும்’ தடுக்க முயலவில்லை. ஆண்டுக்கு பல லச்சம் கோடிகள் அரசு செலவு செய்தும், போதுமான விளைவுகள் இல்லை. ஏன் ? அரசு எந்திரம் இப்படி சீரழிய யார் காரணம் ? தொழிற்சங்கங்களை அமைத்து, தம் ‘உரிமைகளுக்காக’ மட்டும் போராடும் அரசு ஊழியர்களின் ‘கடமைகளை’ பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. உரிமைகளுக்காக போராடலாம். அதை குறை சொல்லவில்லை. ஆனால் கடமை என்பது அதன் மறுபக்கம். அதுவும் மிக முக்கியமானது.

        ஆனாலும் இந்தியாவில் பொது மருத்துவத்திற்க்கு அரசுகள் சொலவிடும் தொகையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் / முடியும். தேவையில்லாத வெட்டி செலவுகள் / ராணுவ செலவுகளை தவிர்த்தாலே நிறைய மிச்சமாகும்.
        //

        மிஸ்டர் அதியமான் சொல்வது சங்கம் அமைத்தால் சரியா வேலை செய்ய மாட்டான் என்பதே ?

        அப்போ சங்கம் இல்லாத போலீஸ் துறை ஏன் சரியா வேலை செய்யலை சார்

        • //அப்போ சங்கம் இல்லாத போலீஸ் துறை ஏன் சரியா வேலை செய்யலை சார்//

          பொலீசு சரியா வேலை செய்யலைன்னு எப்படி சொல்லுறீங்க. அது எதுக்கு உருவாக்கப்பட்டதோ அந்த வேலைய அது சரியாத்தானே செய்கிறது.

          • அப்போ சங்கம் இல்லைன்னா சரியா வேலை செய்வாங்கன்ற அதியமான் பாயிண்ட ஏத்துகிறீங்களா மாயாண்டி அண்ணே

            • //அப்போ சங்கம் இல்லைன்னா சரியா வேலை செய்வாங்கன்ற //

              இல்லை. தவறு. சங்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ‘நிரந்தர வேலை’ என்ற சாத்தியம் இருந்ந்தால், பொதுவாக ஒழுங்கா வேலை செய்ய மாட்டாங்க.

              வீட்டு வேலை செய்யும் ஒத்தை தொழிலாளிக்கு இதே போல் நிரந்தர வேலை அளித்து பார்க்கவும். அதாவது ஒழுங்கா வேலை செய்யாவிட்டாலும் அல்லது இஸ்டத்துக்கு விடுப்பு எடுத்தாலும், திருடினாலும் வேலை போகவே போகாது என்று வைத்து பார்க்கவும். பிறகு ‘விளைவுகள்’ பற்றி புரியும்.

              இந்திய போலிசார் நிலை இத்துடன் ஒப்பிட முடியாது. அவர்களின் பிரச்சனைகள் வேறு. முக்கியமாக ஓய்வு அனேகமாக கிடையாது. வருடம் 365 நாட்களும் வேலை. வேலை நேரங்களும் இரவு பகலாக உண்டு. அதிலும் கான்ஸ்டபள் நிலையில் உள்ளவர்கள் நிலை தான் கொடுமை. ஆனால் உயர் அதிகார்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் மிக மிக அதிகம். top heavy and feudal management system. brutalisation எனப்படும் மிருக உணர்சிவசப்படுத்துதல் படிப்படியாக உருவாகும் அமைப்பு இங்கு. விலைவாசி உயர்வும், பொதுவான ஊழல் முறையும் இவர்களை மிக அதிகம் பாதித்துள்ளது. பொய் கேஸ் போடுதல் இங்கு போல் வேறு எங்கும் இல்லை. இதை எல்லாம் சேர்த்து தான் பார்க்க வேண்டும்.

              சும்மா பொத்தாம் பொதுவாக ஒற்றை வரியில் பொதுப்படுத்த முடியாது.

            • மாசம் நாலு லாக்கப் கொலைகள் நடந்திட்ருக்கும் போது கூட போலீசு ஒன்னுமே செய்றதில்லைப்பான்னு புளுகுகிற எங்க எங்க (மரமண்டை) தலை பார்ப்பன பாப்பாத்தி ஜெயாவுக்கு ஆலோசகரா இருக்க வேண்டியவர்.

              எங்க தலைவருக்கு நீங்க இவ்வளவு மரியாதை கொடுத்து பதிலளிக்க வேண்டியதில்லை, எமது தானைத்தலைவர் புரட்சித்தளபதி ஒரு பூட்ஸ் நக்கி என்பது அனைவரும் அறிந்ததே.. கூலி விவசாயிகளை சுரண்டும் பணக்கார விவசாயிகளையும் ஐக்கிய முன்னணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று லெனின் கூறிய ஒன்றே இவருக்கு போதுமான பதில்.

            • மாசம் நாலு லாக்கப் கொலைகள் நடந்திட்ருக்கும் போது கூட போலீசு ஒன்னுமே செய்றதில்லைப்பான்னு புளுகுகிற எங்க எங்க (மரமண்டை) தலை பார்ப்பன பாப்பாத்தி ஜெயாவுக்கு ஆலோசகரா இருக்க வேண்டியவர்.

        • //அப்போ சங்கம் இல்லாத போலீஸ் துறை ஏன் சரியா வேலை செய்யலை சார்//

          மிஸ்டர் தியாகு, நீங்க தான் பதில் சொல்லுங்களேன் ? இந்தியாவில் தான் போலிஸார் இத்தனை ஊழல் மற்றும் அராஜகமான முறையில். வள்ர்ந்த நாடுகளில் இத்தனை மோசம் இல்லை. உதாரணாமாக ஸ்டானிடினேவிய, கனடா போன்ற நாடுகளை சொல்லலாம்.

          அரசு ஊழியர் சங்கங்கள் பெரும்பாலும் சி.பி.எம் மற்றும் இதர கட்சிகளின் கட்டுபாட்டில் தான் இயங்குகின்றன. அவர்களில் ‘தலைவர்களின்’ அடிப்படை நேர்மை பற்றி நிறைய பேச முடியும். IOB வங்கி ஊழியர் சங்க தலைவர் பற்றி நிறைய பேச இருக்கிறது. மேலும் அதன் உறுப்பினர்களின் கடமை உணர்வு மற்றும் அமைப்பு சாரா ஏழை தொழிலாளர்களை பற்றிய ‘அக்கரை’ பற்றியும் பேசலாம்.

          அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் சங்கங்கள் பற்றியும் தான் : ஒழுங்கா சொல்லிகொடுக்காத, ஒழுங்கா பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது குறைந்த பட்ச நடவடிக்கை எடுக்ககூட முடியாத நிலை. ஏன் இப்படி ? ஆனால் இவர்கள் தான் ‘செங்கொடி’ பிடித்து ஆர்பாட்டம் செய்கிறவர்கள். நல்ல கதை.

          இந்த பின்னுட்டத்தில் முதல் சொல்லப்பட்ட ‘லஞ்சம் கேட்க்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள்’ பற்றி : என்ன தவறு செய்தாலும் வேலை போகவே போகாது என்ற உறுதி தான் இத்தனை சீரழிவுக்கும் காரணம். சங்கங்களாக கூட்டு சேர்வதாலும் இது இன்னும் மோசமாகிறது. பொறுப்பில்லாமல், ஒழுங்கினத்திற்க்காக வேலை இழந்தவர்கள் யாரவது இருந்தால் காட்டுங்களேன். இந்த சட்டம் இருக்கும் வரை இவர்களை திருத்தவே முடியாது. அய்ரோப்பாவில், வட அமெரிக்காவிலும் பொது துறை அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் இங்கு போல் ஜாப் செக்க்யூரிட்டி 100 சதம் கிடையாது. எனவே தான் அங்கு நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

          • மிஸ்டர் அதியமாக் கனடாவில் நடுத்தெருவில் கக்கூஸ் இருக்கு இந்தியாவில் அது இல்லை என்பன போன்றா வெட்டி பேச்சு எதற்கு

            இந்தியாவில் சங்கம் இருப்பதால்தான் தனது கடமையை சரிவர செய்யமாட்டேங்கிறார்கள் அரசுதுறை ஊழியர்கள் என்றால் போலீசுக்கு சங்கம் இல்லை அவன் தனது பணியை சரிவர செய்யாமல் இருப்பது ஏன் ?

            • //மிஸ்டர் அதியமாக் கனடாவில் நடுத்தெருவில் கக்கூஸ் இருக்கு இந்தியாவில் அது இல்லை என்பன போன்றா வெட்டி பேச்சு எதற்கு//

              எது வெட்டி பேச்சு என்று நீங்களே சொல்லிக்கொண்டு திரிய வேண்டாம். கக்கூஸ் மனோபாவம் உள்பவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவார்கள். ஓகே.

              //இந்தியாவில் சங்கம் இருப்பதால்தான் தனது கடமையை சரிவர செய்யமாட்டேங்கிறார்கள் அரசுதுறை ஊழியர்கள் என்றால் போலீசுக்கு சங்கம் இல்லை அவன் தனது பணியை சரிவர செய்யாமல் இருப்பது ஏன் ?//

              போலிஸ் துறை பற்றி சொல்லியிருக்கிறேன். மேலும் ஜாப் செக்கியூரிட்டி பற்றியும் தான். சரி, இதெல்லாம் இருக்கட்டும் : இந்த விவாத்த்தின் மைய்ய விசியமான அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்ப்பதினால் பாதிக்க்ப்படும் ஏழைகளை பற்றியது ; அதற்க்கு என்ன தீர்வு அப்ப ? இப்படியே தொடரந்தால் பரவாயில்லையா ?

              • /இந்த விவாத்த்தின் மைய்ய விசியமான அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்ப்பதினால் பாதிக்க்ப்படும் ஏழைகளை பற்றியது ; அதற்க்கு என்ன தீர்வு அப்ப ? இப்படியே தொடரந்தால் பரவாயில்லையா ?//

                முக்கியமான பிரச்சனைதான் அரசு ஆஸ்பத்திரியெல்லாம் இப்படி அநியாயமா லஞ்சம் கேட்டால் ஏழைகள் பாதிக்கப்படுவாங்க அதற்கு தீர்வு என்னவென நம்ம வினவு சொல்றாங்கன்னு நீங்களே சொல்லிடுங்க எனக்கே போரடிக்குது இவங்க ப்திவுகளை படிச்சி படிச்சு எப்படித்தான் படிக்கிறீங்களோ 🙂

                • அண்ணே, ஒரு வார்த்தைன்னாலும் ஒரே மாதிரி பேசனும். இப்படி வினவுகாரவுகள எதிர்க்கனும்றதுக்காகவே மண்டையில ஒன்னு வாயில ஒன்னுன்னு பேசிக்கிட்டிருந்தா இப்படித்தான் போரடிக்கும்.

                  • மிஸ்டர் மாயாண்டி வினவு காரவுங்களை நான் எதிர்க்க வேண்டியதில்லை மார்க்சியமே எதிர்க்கும் அதை விடுங்க ——–

                    —————
                    முக்கியமான பிரச்சனைதான் அரசு ஆஸ்பத்திரியெல்லாம் இப்படி அநியாயமா லஞ்சம் கேட்டால் ஏழைகள் பாதிக்கப்படுவாங்க அதற்கு தீர்வு என்னவென நம்ம வினவு சொல்றாங்கன்னு நீங்களே சொல்லிடுங்க
                    ————————–

                    கேட்ட கேள்வியை விட்டு ஓடாதீங்க பாஸ் நமக்கு அது அழகா

                    • அண்ணே ரொம்ப குறுக்கு புத்திகாரருண்ணே நீங்க. அதியமான் கேட்டதுக்கு பதில் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுங்க. அதவுட்டுட்டு வினவு என்ன சொல்றாரு, வினவு சார்பா நான் என்ன சொல்றேன்னு எதிர்க் கேள்வியா மடைய மாத்துறீங்க. இருந்தாலும் முயற்சி பண்றேன்.

                      வினவு என்ன சொல்றாருன்னு எனக்குத் தெரியல. ஆனா நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதுவந்து அரசு ஆசுபத்திரியெல்லாம் ஜான் ஹாப்கின்ஸ் ஆசுபத்திரிகாரய்ங்க கையில கொடுத்திடலாம்னு சொல்லுவிங்க சரிதானே.

  3. /ஆசுபத்திரியில் சேர்த்தவுடனே, ஹஸ்பெண்டுவின் கையெழுத்து வாங்கிக்கொண்டு சுகப் பிரசவம் ஆவதற்கு முன்னாலேயே சிசேரியன் செய்துவிடும் ‘தையல்’ கொடுமைகளை, உங்களைப்போன்ற ஆசுபத்திரி நிர்வாகங்கள்தானே செய்கின்றன? அங்கு நீங்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ளவில்லையே?

    ‘வயிற்றில் கீரல் வேண்டாம், அழகு போய்விடும். காசு ஆனாலும் பரவாயில்லை. கத்தி வைக்கவேண்டாம்’ என்று நோட்டை நீட்டினால் மட்டும்தான், சதி லீலாவதி மருத்துவமனையில் சுகப்பிரசம் ஆகுமோ?/

    சரியான நெத்தியடி

    • ///வயிற்றில் கீரல் வேண்டாம், அழகு போய்விடும். காசு ஆனாலும் பரவாயில்லை. கத்தி வைக்கவேண்டாம்’ என்று நோட்டை நீட்டினால் மட்டும்தான், சதி லீலாவதி மருத்துவமனையில் சுகப்பிரசம் ஆகுமோ?////
      நன்றிகள்.இனி சிசரியன் இல்லாமல் குழந்தை பிறக்க ஐடியா கிடைத்திருக்கிறது.

  4. ஒரு சிறிய திருத்தம்.
    கோஸ்டாரிக்கா ஆப்பிர்க்காவில் இல்லை, மத்திய அமெரிக்காவில் உள்ளது.

  5. //ஆசுபத்திரியில் சேர்த்தவுடனே, ஹஸ்பெண்டுவின் கையெழுத்து வாங்கிக்கொண்டு //

    இது தான் எனக்கு புரியாத எரிச்சலூட்டும் விஷயம்! குழந்தையை சுமப்பதும், பிரசவ வலியும் பெண்ணுக்கே. இதில் கணவனே ஆனாலும் சுகப்பிரசவமா அல்லது சத்திர சிகிச்சையா என்பதை ஏன் கணவனின் முடிவுக்கு விடவேணும். நான் வாழும் நாட்டில் யார் நோயாளியோ அவர்களின் முடிவே இறுதியானது. எந்த வலியையும் நோயாளிதானே பொறுத்துக்கொள்கிறார். இதில் மற்றவர்கள் என்ன முடிவெடுப்பது. என் வாதம் பிழைஎன்றால் விவாதிக்கலாம். ஐஸ்வர்யா தவிர்த்துவிட்டு ஒரு பொதுப்பிரச்சனையாய் இதை பார்க்கிறேன்.

    கணவரிடம் கையெழுத்து வாங்குவது என்பது அவர்களின் பில்லுக்கு பணம் கட்டுறதுக்காக இருக்கும் என்பது என் கருத்து. எனக்கு இந்திய, தமிழக நடைமுறை தெரியாது.

    • //கணவரிடம் கையெழுத்து வாங்குவது என்பது அவர்களின் பில்லுக்கு பணம் கட்டுறதுக்காக இருக்கும் என்பது என் கருத்து. எனக்கு இந்திய, தமிழக நடைமுறை தெரியாது.//

      பிரசவம் என்றில்லை, யாருக்கு எந்த ஆபரேசன் என்றாலும் ஆபரேசனுக்குப் பின் நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், எந்த சட்டரீதியான பிரச்சினைகளும் வரக்கூடாது என்றோ அல்லது நெருங்கிய ரத்த சொந்தங்களின் அனுமதியுடன்தான் செய்யப்படுகிறது என்பதற்காகவோதான் கையெழுத்து வாங்கப்படுகிறது எனக் கருதுகிறேன். இது சரியான நடைமுறைதான் என்பது என் பார்வை.

  6. ரிஷி, நான் சொல்வது Consent to Treatment. அதாவது சிகிச்சை அளிப்பவரின் படிப்பும், அனுபவமும் காரணமாய் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒரு நோயாளி அதை புரிந்துகொண்டு சிகிச்சைக்கு உடன்பட்டு கையெழுத்து போடுவது. அதில், அந்த சிகிச்சைமுறையில் நோய்வாய்ப்பட்டவரின் உடல்நிலை, நோயின் தாக்கம் குறித்து உண்டாகும் விளைவுகளுக்கே அவர்களால் பொறுப்பேற்க முடியாது. அது சிகிச்சை வழங்குபவரால் ஏற்கனவே புரிய வைக்கப்பட்டிருக்க வேண்டும். சிகிச்சை வழங்குபவரின் தனிப்பட்ட திறமை குறைவுக்கோ அலது தவறுக்கோ யாரும் அவர்களை சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்த கூடாது என்பதல்ல Consent to Treatment என்பதன் அர்த்தம் என்பது என் புரிதல்.

    அதுக்கு நோயாலோ, பிணியாலோ அவஸ்தைப்படுபவர் தான் கையெழுத்து போடவேண்டும் என்பது என்னுடைய வாதம். அது தான் மிகப் பெரும்பாலான நேரங்களில் ஒரு தனிமனித விருப்பமாயும் இருக்கும்.

    நெருங்கிய சொந்தங்களின் கையெழுத்துக்கும் சிகிச்சை குறித்த சம்மதத்துக்கும் தொடர்பு வருவதென்பது நோயாளி தனது சிகிச்சை தொடர்பான முடிவை எடுக்க முடியாதவராய் இருக்கும் பட்சத்தில் தான்.

    மற்றப்படி பொதுவான மற்ற விடயங்களில் இது எப்படி சரியான நடைமுறை ஆகும்? ஒரு வேளை தமிழ் நாட்டில் தனியார் மத்துவமனையில் இது தான் பொதுவான நடைமுறை என்றால் என் புரிதல் தவறுதான்.இது சரியான நடைமுறை என்று அனுமதிக்கப்படுவது், கேள்வி கேட்காமலேயே, எப்படி என்பது ஆ்ச்சரியம்.

    • ரதி,
      //எந்த ஆபரேசன் என்றாலும் ஆபரேசனுக்குப் பின் நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், எந்த சட்டரீதியான பிரச்சினைகளும் வரக்கூடாது என்றோ //

      இப்படியும் இருக்கலாம் என்பதாகக் கருதினேன். மற்றபடி விசாரித்ததில் மேற்குறிப்பிட்டபடி இல்லை எனத் தெரியவருகிறது. அதனால் இதனில் இருந்து பின்வாங்குகிறேன்.

      //நெருங்கிய ரத்த சொந்தங்களின் அனுமதியுடன்தான் செய்யப்படுகிறது என்பதற்காகவோதான் கையெழுத்து வாங்கப்படுகிறது எனக் கருதுகிறேன்.//

      தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் அதிகம். எப்பேர்ப்பட்ட அறிவுப்பூர்வமாய் சிந்திப்போரும் சில நேரங்களில் உயிரிழப்பின்போது அதீதமாய் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். உதாரணத்திற்கு, கணவர் வெளியூரில் இருக்கிறார். மனைவியைப் பார்க்க புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு உடனடியாய் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை. கணவரிடம் தொடர்பு கொள்ள முடியாததால் வேறு உறவினர் அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக்கொள்கிறார். ஆனால் சிகிச்சைக்குப் பின் எதிர்பாராத விதமாய் உயிரிழப்பு நேர்ந்து விடுகிறது. இப்போது கணவர் வந்தபிறகு என்னைக் கேட்காமல் எப்படி ஆபரேஷன் செய்யலாம். நான் வேற நல்ல ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் பார்த்திருப்பனே.. என்று குதிக்கிறார். இதனாலேயே இது போல கையெழுத்து வாங்கப்படுகிறது.

      மற்றபடி, நீங்கள் சொல்வதுபோல் சம்பந்தப்பட்ட நோயாளியிடமே கையெழுத்து வாங்கலாம்தான். ஒருக்கால் அவரே போய்ச் சேர்ந்துவிட்டால் அப்போதும் சுற்றியிருப்பவர்கள் குதிப்பர். இரு தரப்பிலும் கையெழுத்து வாங்கியபின் கத்தியைப் போடுவது சரியானதாக இருக்க முடியும். இதற்கென்று விதிமுறைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நடைமுறைக் காரணம் இதுதான்.

Leave a Reply to முருகன் கண்ணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க