privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

-

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், ‘அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?’ என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங்  தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகாரவர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

‘ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை’ என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது.  “கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், ‘கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்’ என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?” என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

விற்பனை செய்யப்பட்ட ஒரு பொருளில் உற்பத்தி சார்ந்த குறைபாடு  (manufacturing defect)  இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டால், உற்பத்தி செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவதென்பது மிகச் சாதாரணமான நுகர்வோர் உரிமை. மின்விசிறி முதல் விமானம் வரை எல்லாப் பொருட்கள் விசயத்திலும் உள்ள இந்த உரிமை அணு உலைக்கு மட்டும் கிடையாதாம். “உற்பத்திக் குறைபாட்டினால் விபத்து நேர்ந்தாலும் கம்பெனி பொறுப்பல்ல” என்ற சட்டத் திருத்தத்தை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கும் அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்று அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகள் நிர்ப்பந்திக்கின்றன. இதனை ஏற்று அச்சட்டத்திற்கு திருத்தமும் கொண்டு வந்திருக்கிறார் மன்மோகன் சிங். (தி இந்து, நவ.12)

‘விபத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்று கூறும் பன்னாட்டு முதலாளிகள் இழப்பீடு பற்றி ஏன் அஞ்ச வேண்டும்? ஏனென்றால், அணுஉலை விபத்து சிறியதாக இருந்தாலும் அழிவு போபாலைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இழப்பீடு பெரும் தொகையாக இருக்கும். பன்னாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தைப் பணயம் வைக்க மாட்டார்களாம். ஆனால், கூடங்குளம் மக்களை உயிரைப் பணயம் வைக்கச் சொல்கிறது, அரசு.

இதற்காக விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்ற பட்டங்களைச் சுமந்து திரியும் அயோக்கியர்களை அமர்த்தி அணுஉலைக்கு ஆதரவாகக் கூவச் சொல்கிறது. இந்த ‘வல்லுநர்கள்’தான் நாட்டைக் கெடுப்பதில் முன்னோடிகள். சாதாரண பாட்டரி கம்பெனி என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குள் நச்சு வாயுவை உற்பத்தி செய்யத் திட்டம் வகுத்துத் தந்த விஞ்ஞானி, அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரி, மூச்சுத் திணறி இறந்த மக்களின் சவப்பரிசோதனை அறிக்கையில்கூட தில்லுமுல்லு செய்த மருத்துவர்களென எல்லா அயோக்கியர்களும் ‘வல்லுநர்கள்’தான். ஆபத்தான இரசாயன ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது முதல் காடுகளை அழித்துச் சுரங்கம் தோண்டச் சுற்றுச்சூழல் அனுமதி தருவது வரை எல்லாப் பித்தலாட்டங்களையும் முதலாளிகளுக்கு செய்து கொடுப்பவர்களும், விவசாயிகளுக்கே தெரியாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் புகுத்தி,  விவசாயப் பல்கலைக்கழகங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடியாள் கழகங்களாக மாற்றி விவசாயிகளின் குடியைக் கெடுப்பதும் விஞ்ஞானிகளும் வல்லுநர்களும்தான்.

விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர். ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும்,  இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.

‘கலாம்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி’ என்று நம்பும் பழ.நெடுமாறனால் கூட, அக்னி ஏவுகணையை விஞ்சும் வேகத்தில் கலாம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை நம்ப முடியவில்லை. ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.

கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808. இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு  அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!

உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும்  கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.

4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு  கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.  3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான்  ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002  கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.

மிகப்பெரும் விபத்துகளாக மாறியிருக்க வேண்டியவை, தொழில்நுட்ப வல்லுநர்களின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. கல்பாக்கம் உள்ளிட்ட எல்லா அணுஉலைகளைச் சுற்றியும் வாழும் மக்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் கலந்துள்ள கதிரியக்கத்தின் அளவு என்ன என்பதை வேறு யாரும் அளவிடுவதை அரசு அனுமதிப்பதே இல்லை. தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்று இவை தடை செய்யப்படுகின்றன.

செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 57பேர் மட்டும்தான் எனப் புளுகுகிறார் கலாம். புற்றுநோய் வந்து 70,000 பேர் உயிரிழந்ததாகவும், இன்றும் பல்லாயிரம் பேர் அதன் பாதிப்பினால் புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் அமெரிக்காவின் நியுயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ் கூறுகிறது. உலகெங்கும் உள்ள 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், அவர்களிடையே புற்றுநோயும், ஊனமும் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ,  வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். கலாமோ கூடங்குளம் உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறுகிறார். இந்த விசயத்தில் அணுசக்தித் துறை தலைவர் முகர்ஜியை, கலாமுக்கே அண்ணன் என்று சொல்லலாம். ஃபுகுஷிமா விபத்து பற்றி தொலைக்காட்சியில் செய்தி வந்த மறுகணமே, “இது விபத்தல்ல, ஜப்பானிய விஞ்ஞானிகள் சோதனை செய்கிறார்கள்” என்று இவர் இந்தியாவிலிருந்து அறிக்கை விட்டார். இதனைக் கேட்டு ஜப்பானிய விஞ்ஞானிகளே வெலவெலத்து விட்டனர்.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!கலாம், முகர்ஜி போன்ற வல்லுநர்களின் பொய்களுக்கு மறுப்பெழுத பக்கங்கள் போதாது. கலாமின் பொய்களைக் காட்டிலும் கீழ்த்தரமானது, அவர் கூடங்குளம் மக்களுக்கு சிபாரிசு செய்திருக்கும் பத்து அம்சத் திட்டம். “கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம் ” என்று பயாஸ்கோப் காட்டுகிறார் கலாம். ஓட்டை விலை பேசுவதையும், ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசுவதையும் விடக் கேவலமாக மக்களின் உயிரை விலை பேசுகிறார் இந்த ‘விஞ்ஞானி’. கூடவே, கூடங்குளம் உலைக்கு தண்ணீர் கொண்டுவரும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என்று கூறி இரு மாவட்ட மக்களுக்கும் சிண்டு முடிகிறார்.

அணுசக்தியை ஆதரிக்கும் அனைவரும் இதன் உற்பத்தி செலவு மற்றெல்லாவற்றையும் விடக் குறைவானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதது என்றும் கூறுகின்றனர். ஆடு கால்பணம், சுமை கூலி முக்கால்பணம் என்பதுதான் அணுசக்தி. உற்பத்திச்செலவு குறைவு. அணுக்கழிவைப் பராமரிக்கும் செலவு  அதிகம். அணு உலை 30 ஆண்டுகளில் மூடப்பட்டு விடும். அது தோற்றுவித்த கழிவின் கதிர்வீச்சு 25,000 ஆண்டுகள் நீடிக்கும். அதனைப் பாதுகாக்க பல்லாயிரம் கோடி செலவு. இதுதான் சுற்றுச்சூழலுக்கும் எதிர்கால சந்ததிக்கும் அணுஉலை விட்டுச்செல்லும் பரிசு.

கூடங்குளம் உலையின் அணுக்கழிவுகள் ரசியாவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், அது கூடங்குளத்திலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றார் கூடங்குளம் உலையின் இயக்குநர் காசிநாத் பாலாஜி. கழிவைப் பாதுகாப்பாக ரயில் மூலம் வேறு இடத்துக்கு கொண்டு போய் விடுவோம் என்றது அணுசக்தித் துறை. அக். 7 அன்று பிரதமரைச் சந்தித்தபோது அணுக்கழிவை ஒரு சிறிய கண்ணாடிப் பந்துக்குள் உருக்கி அடைத்து விடுவோம் என்று சொல்லியிருக்கிறார் எஸ்.கே.ஜெயின். பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் 25% கழிவாகத் தங்கும் என்கிறார் அப்துல் கலாம். இரண்டு வாரங்களுக்குள் இத்தனை முரண்பட்ட பதில்கள் தரப்பட்டதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அம்பலப்படுத்துகிறார்.

இந்த அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது என்பதால், இது தேசப் பாதுகாப்பு இரகசியமாகிவிட்டது. இது பற்றி நம் நாட்டு மக்களுக்கு கூற மறுக்கும் அரசு, இதே விவரத்தை ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கவும், அமெரிக்காவின் அடியாளான சர்வதேச அணுசக்தி முகமை இந்திய அணுஉலைகளைச் சோதனையிடவும் அனுமதிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக மத்திய அரசு அனுப்பி வைத்த வல்லுநர் குழுவிடம் 49 கேள்விகளைப் போராட்டக் குழுவினர் கொடுத்திருக்கின்றனர். அவற்றுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல், “இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறது வல்லுநர் குழு.

இந்திய அரசின் இந்த அணுஉலைக் காதல் எப்போது உருவானது? இரான்இந்தியா எரிவாயுக் குழாய் திட்டம் கையெழுத்தாகவிருந்த சூழ்நிலையில், 2005 இல் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு செயலர் கண்டலிசா ரைஸ், “இரானுடன் சகவாசம் வேண்டாம். அமெரிக்காவிலிருந்து அணுஉலை தருகிறோம், அணுசக்திதான் சுற்றுச்சூழலுக்கு நல்லது” என்று அறிவுரை கூறினார். “அப்படியிருக்கும்போது 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏன் ஒரு அணுஉலை கூட அமைக்கவில்லை?” என்று அந்த அம்மையாரை மன்மோகன் கேட்கவில்லை.

2050ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 208 உலைகளை நாம் சுயசார்பாக அமைக்க முடியும் என்றும் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றும் 2004இல் இந்திய அணுசக்தி துறை கூறியது. 2005இல் அமெரிக்காவின் உபதேசத்தைக் கேட்டபின், “அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடாவிட்டால் ஒரு அணு உலைகூட இயங்க முடியாது” என்று பல்டியடித்தார் மன்மோகன். இப்போது, 2050க்குள் 1000 மெகாவாட் திறனுள்ள 655 உலைகளை அமைத்து, 6.5 லட்சம் மெகாவாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்யப்போவதாகப் பேசியிருக்கிறார் மன்மோகன். அதாவது இந்தியாவின் 3000 கி.மீ. நீளக் கடற்கரையில் 55 கி.மீட்டருக்கு ஒரு அணுஉலை! (டாக்டர்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், )  பேரழிவுக்கு இதைக் காட்டிலும் குறுக்கு வழி உண்டா?

ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது. பிரான்சும் ஜப்பானும் குறைக்கின்றன. இந்தியா அதிகரிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உலைகளைப் போல 4 மடங்கு விலையில் இவை அமெரிக்க, பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகச் சொல்கிறார், கோபாலகிருஷ்ணன்.

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!வால்மார்ட்டுக்காக சிறுவணிகர்களை அழிப்பதையும், போஸ்கோவுக்காக காடுகளை அழிப்பதையும் முன்னேற்றம் என்று சொல்வதைப் போலத்தான், அணு உலைக்காக மக்களை அழிப்பதையும், அணுஉலைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு அணுஅறிவியலை அழிப்பதையும் முன்னேற்றம் என்கிறார் மன்மோகன் சிங். “அணு உலை வேண்டாமென்பவர்கள் மின்சாரம் வேண்டாமென்று சொல்வார்களா?” என்று மிரட்டுகிறார்கள் கலாம் ரசிகர்கள். மின்சாரத்தைப் போற்றுவதற்காக உயர்அழுத்த மின்கம்பியை முத்தமிடவா முடியும்?

மக்களை மரணத்தின் விளிம்பில் நிறுத்தியாவது உற்பத்தி செய்தே ஆகவேண்டிய இந்த மின்சாரத்தால் பயனடைபவர்கள் யார்? “1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52% கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42% கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன” (இந்தியா டுடே, நவ.30, 2011) சிறு நகரங்களும் சிறு தொழில்களும் மின்வெட்டால் மடிந்து கொண்டிருக்கின்றன. பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நுழைவாயில் முதல் கக்கூசு வரை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஷாப்பிங் மால்கள், நட்சத்திர விடுதிகள், பணக்காரர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குத்தான் தடையற்று மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. உன்னுடைய முன்னேற்றத்துக்காகவும், ஆதாயத்துக்காவும், சொகுசுக்காகவும் நாங்கள் ஏன் அழியவேண்டும் என்பதுதான் நம்முடைய கேள்வி.

கடைசியாக, “அறிவியலுக்காக மேரி க்யூரி தியாகம் செய்யவில்லையா?” என்று கேட்டிருக்கிறார் கலாம். அவருடைய வாதத்தின்படி போபாலில் கொல்லப்பட்ட மக்கள் வேதியியலின் முன்னேற்றத்துக்காகத் தியாகம் செய்தவர்கள். ஹிரோஷிமாவில் கொல்லப்பட்ட மக்கள் அணு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்!

அப்படியானால், குண்டு வீசியவர்கள்? அவர்களை விஞ்ஞானிகள் என்று யாரும் அழைத்ததில்லை. எனினும், அப்துல் கலாம் விஞ்ஞானி என்றுதான் அழைக்கப்படுகிறார். இடக்கரடக்கலாக இருக்கக்கூடும்!

__________________________________________________

-புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. கூடங்குளம் அறிக்கையில் மக்கள் யாவருக்கும் கீழ்வருவனவற்றை தெளிவு படுத்திவிட்டார் கலாம் :

    1. கலாம் ஒரு விஞ்ஞானி இல்லை.
    2. கலாம் ஒரு நேர்மையாளர் இல்லை.
    3. கலாம் ஒரு பொய்யர்.
    4. கலாம் ஒரு ஊருக்கு உபதேசி.
    5. கலாம் ஒரு சுயநல வாதி.
    6. கலாம் ஒரு விளம்பரப் பிரியர்.
    7. கலாம் ஒரு தலைக்கனம் பிடித்தவர். தானென்ற இறுமாப்புக் கொண்டவர்.
    8. நாட்டு மக்களை முட்டாளாக நினைப்பவர்.
    9. கூடங்குளம் தவிர்த்த மற்ற பிரச்சினைகளுக்குள் தலையிடாதவர்.
    10. வல்லரசு கனவு காணச் சொல்லி ஏதுமறியா மாணவர்களிடம் பொறாமை நஞ்சை விதைப்பவர்.
    11. கூடங்குளத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் அறிவித்து லஞ்ச லாவண்யத்தை ஊக்குவிப்பவர்.
    12. மக்களோடு மக்களாக, பொது மேடை விவாதத்தை வைத்து விளக்க முற்படாமல், மக்களைக் குழப்பும் குழப்பல்வாதி.

    • //அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.//

      புதிய பாமரன் போன்ற புத்திசாலிகள் இருக்கும் வரை வினவு விஞ்ஞான வல்லுநர் குழுவுக்கு கொண்டாட்டம் தான்

    • அணுவல்லூறுவின் குணத்தை பட்டியலிட்ட தோழருக்கு நன்றி. கனிபால்கள் வருகின்றன, உஷார்…

  2. “விபத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்று கூறும் பன்னாட்டு முதலாளிகள் இழப்பீடு பற்றி ஏன் அஞ்ச வேண்டும்? ஏனென்றால், அணூலை விபத்து சிறியதாக இருந்தாலும் அழிவு போபாலைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இழப்பீடு பெரும் தொகையாக இருக்கும். பன்னாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தைப் பணயம் வைக்க மாட்டார்களாம். ஆனால், கூடங்குளம் மக்களை உயிரைப் பணயம் வைக்கச் சொல்கிறது, அரசு”.

    “இந்த அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது என்பதால், இது தேசப் பாதுகாப்பு இரகசியமாகிவிட்டது. இது பற்றி நம் நாட்டு மக்களுக்கு கூற மறுக்கும் அரசு, இதே விவரத்தை ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கவும், அமெரிக்காவின் அடியாளான சர்வதேச அணுசக்தி முகமை இந்திய அணூலைகளைச் சோதனையிடவும் அனுமதிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது”.

    அருமையான,விளக்கமான பதிவு!தோழர்களுக்கு நன்றி!

  3. பல நாட்டின் அரசுகள் அணுமின் நிலையங்களை ஏன் ஆதரிக்கின்றன?

    அணு ஆயுதம் செய்வதற்கு தான்!

    ஆம். அணுமின் நிலையத்தில் உபயோகப்படும் யுரேனியம் வேதியல் மாற்றத்திற்கு பின் ப்ளுடோனியமாக மாறும். ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தை செய்தும் ஒரு அணுமின் நிலையம் வருடத்திற்கு 150 – 200 கிலோ ப்ளுடோனியம் தயாரித்துவிடும். இதைக் கொண்டு எளிதாக ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் 25 தயாரித்துவிடலாம். ஒரு அணுமின் நிலையத்தின் ஒரு வருட தயாரிப்பே இவ்வளவு என்றால், உலகில் 439 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதிலிருந்து கிடைக்கும் ப்ளுடோனியத்தை கொண்டு எவ்வளவு குண்டுகளை தயாரிக்கலாம். நினைக்கவே பயமாக இருக்கிறது.

    பிறகென்ன, பல அரசுகளின் முழு ஆதரவும், அணுமின் நிலையங்களுக்கு கிடைக்காமலா இருக்கும்?

    http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_27.html

  4. மின்சாரத்திற்கு எந்தவித திட்டமும் இல்லாமல், நீ வா! நீ வா! என பன்னாட்டு நிறுவனங்களை நமது முதலமைச்சர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து அழைத்த பொழுது, நாம் எதிர்த்திருக்கவேண்டும்.

    இங்கு நடக்கும் உற்பத்தி எல்லாம் ஏகாதிபத்திய சேவைக்கான உற்பத்தியாய் இருக்கும் பொழுது, இங்கு இருக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் தான் இவர்களுக்கு வேலையே தருகிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு வாழ்வு தருபவர்களை (!) எப்படி கேள்வி கேட்க முடியும்? அணு மின்சாரம் கிடைத்த பிறகும், நமது முதலமைச்சர்கள் நீ வா!
    நீ வா! என மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களை அழைப்பார்கள். இவர்கள் அப்பொழுதும் வேடிக்கைத்தான் பார்ப்பார்கள்.

    ஆக ஒன்று புரிகிறது. உற்பத்தியில் லாபம் பெறுவது பன்னாட்டு நிறுவனங்கள்.
    கூடங்குளம் அணு உலையால் பயன் பெறப்போவதும் பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

    http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_21.html

  5. சிறந்த வெளிபாட்டுடன் கூடிய கட்டுரை, ஊர் உலகத்தை ஏமாற்றும் உலுத்தர்களை தோலுரிக்கும் கட்டுரை. இதற்கு மேலும் இதனை ஆதரிப்பவர்களை மனிதர்கள் என்று கருதக்கூடாது.அவர்களை அணு உலைகளின் மையத்தில் குடியமர்த்தவேண்டும். வரட்டும்….

  6. ungal karuthukkal migavum alamanavai…aanal ella vishayathilum thangal solvathu sari endru solla mudiyathu..ungaluku ulla aarivai payanbaduthi thangal solla vilaindhathuthan indha katurai… athe pol than abdul kalamum thanga paditha padipin arival sonna karuthu.. natin valarchiku sonna karuthu ungaluku kothipai undu panniyathu.. athu pola than ungal karuthu silarai alla palarai athuvum nattin valrchi patru yosikkum sila nallavargalin kothippuku aalaga vendi irukirathu… ivargaluku illatha andha kandi karumandhram ungaluku etharku endru ketkathondrum

  7. PMANE குழுவினர் அறிவியல் என்ற பெயரில் அடித்திருக்கும் ஜல்லியை மக்களுக்கு புரிய வைக்க அணுசக்தி துறையைச் சேர்ந்த அத்தனை விஞ்ஞானிகளும் சேர்ந்து வகுப்பெடுத்தாலும் முடியாது.

    ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்.

    எரிமலை அபாயம், நீரடி நிலச்சரிவு அபாயம், அதனால் ஏற்படக்கூடிய சுனாமி அபாயம் என்று திகில் படம் ரேஞ்சுக்கு பில்லடப் கொடுத்திருக்கும் PMANE அறிக்கையின் முதல் அத்தியாயம் ஆதாரம் நம்பர் 21 ஐ பார்ப்போம்.
    வில்லியம் வெஸ்டால் மற்றும் ஆலன் லௌரி ஆகியவர்களின் ஆய்வுக் கட்டுரை ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது

    21. William Vestal, Allen Lowrie, “Large Scale Slumps Off Southern India and Sri Lanka”, Geo‐Marine Letters,
    Vol.2, 171‐177 (1982)

    இதே அறிக்கையை தான் ரம சேதுவுக்கு ஆதாரமாக கல்யாண்ராமன் என்பவர் சுட்டுகிறார். சுனாமி அபாயம் உண்மையென்றால் ராம சேதுவும் அறிவியல் பூர்வமான உண்மையென்று ஒப்புக் கொள்வீர்களா?

    http://www.scribd.com/doc/53142620/A-Historical-Facts-on-Mahabharata

    • @ராம் காமேஸ்வரன்

      PMANE குழுவினரின் அறிக்கையில் இருந்து….

      From:
      http://www.firstpeoplesfirst.in/admin/pdf/123PMANE_Expert_Committee_Report_Dec_2011.pdf

      ….
      In 1982, two American researchers William Vestal and Allen Lowrie have studied the sea bed of south Gulf of Mannar and have identified two large slumps 90 and 35 kilometers long. They have named them as East Comorin Slump and Colombo Slumps. They have mapped these slumps intricately and have found evidences of
      past landslides in these slumps. Petrographic studies in Gulf of Mannar have revealed the presence of large scale clay stones in this area. Presence of claystones make the occurrence of submarine landslides easier. The volcanic vent found by V.V.Sastri et al in 1981 is located beneath the Colombo slump and the vent found by G.R.K.Murty in 1994 is located just beneath the East Comorin slump. Indrani fault extends into Gulf of Mannar and has the capacity to disturb these slumps. Any earthquake that occurs on this fault has the potential to
      casue the slump to slide down and thus trigger a near field tsunami.
      ….

      இதில் என்ன பில்டப் இருக்கிறது? எந்த ஆதாரத்தை அல்லது ஆராய்ச்சி முடிவுகளை வைத்து இதை பில்டப் என்கிறீர்கள்?

      //21. William Vestal, Allen Lowrie, “Large Scale Slumps Off Southern India and Sri Lanka”, Geo‐Marine Letters,
      Vol.2, 171‐177 (1982) இதே அறிக்கையை தான் ரம சேதுவுக்கு ஆதாரமாக கல்யாண்ராமன் என்பவர் சுட்டுகிறார். சுனாமி அபாயம் உண்மையென்றால் ராம சேதுவும் அறிவியல் பூர்வமான உண்மையென்று ஒப்புக் கொள்வீர்களா?//

      வில்லியம் வெஸ்டல் & ஆலன் லௌரீ அறிக்கை ராம சேதுவுக்கு எப்படி ஆதாரமாகிறது என்பதை ‘கல்யாணராமன்’ விளக்கவில்லை. நீங்கள் விளக்க முடியுமா?

      ஜல்லியடிப்பது அவர்களா இல்லை நீங்களா?

      • “வில்லியம் வெஸ்டல் & ஆலன் லௌரீ அறிக்கை ராம சேதுவுக்கு எப்படி ஆதாரமாகிறது என்பதை ‘கல்யாணராமன்’ விளக்கவில்லை. நீங்கள் விளக்க முடியுமா?”

        கல்யாண் அவர்களே விளக்கம் அளித்துள்ள சுட்டி இதோ
        http://kalyan97.wordpress.com/2007/10/09/992/

        PMANE குழு அளித்துள்ள ஆதாரங்கள்(bathymetry, paleontology)ஆகியவை ஆராய்சியாளர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்திய ஆய்வுகளின் முடிவுகள். ஆழ்கடலில் எண்ணை தேடும்போது ONGC நடத்திய ஆய்வுகள் போன்றவை.
        இதை தங்கள் முடிவுகளுக்கேற்ப வளைப்பதற்குப் பெயர் “cherry picking”. அதோ அங்கே slump இருக்கிற து, இதோ இங்கே fault இருக்கிறது அதனால் ரெண்டும் சேர்ந்தால் சுனாமி வரும் என்பது எவ்வளவு அறிவியலோ அதே போலத்தான் கல்யாணராமன் வகையறாக்களும்.

        • முதலில்….

          //கல்யாண் அவர்களே விளக்கம் அளித்துள்ள சுட்டி இதோ//

          அந்த சுட்டியில் உள்ளதை ஏற்கனவே படித்து விட்டேன். அந்த விளக்கம் விளங்காமல் தானே உங்க கிட்ட கேட்டேன், மேற்கூறிய ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையை கல்யாண் ராமன் எவ்வாறு தனது ‘ராமசேது’ தியரிக்கு ஆதாரமாக வைக்கிறார் என்று? திரும்ப சுட்டிகிட்டே இருந்தால் எப்படி? 🙂

          இரண்டாவது…

          //அதோ அங்கே slump இருக்கிற து, இதோ இங்கே fault இருக்கிறது அதனால் ரெண்டும் சேர்ந்தால் சுனாமி வரும் என்பது எவ்வளவு அறிவியலோ அதே போலத்தான் கல்யாணராமன் வகையறாக்களும்.//

          சரி.. அறிக்கையை முழுவதும் படிக்கமுடியாதபடி அவசரமும் முன்முடிவுகளும் உங்களைத் தடுத்து ஆட்கொண்டிருப்பதால், சில cherry -கள் உங்களுக்காக…

          அதாவது, தென் தனுஷ்கோடி மூழ்கியது உட்பட பல மாற்றங்கள் நடந்து வருகிற கடற்கரை. மிகவும் ‘unstable ‘ கடற்கரை என ஆராய்ச்சியாளர்கள் பகுத்திருக்கிற ஒரு பகுதியில் கடலில் இருந்து வெறும் 300 மீட்டர் தூரத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு முன் அதுகுறித்த எந்த ஆய்வும் நடத்தப் படவில்லை.

          வெஸ்டல் & லௌரீ நடத்திய ஆய்வுகளில் கடந்த காலங்களில் மன்னார் பக்கத்திலுள்ள மணற்திட்டுக்களில் நீரடி நிலச்சரிவுகள் குறித்த செய்திகள் உள்ளன. வி. வி. சாஸ்திரி குழுவினர் (1981 ) மற்றும் ஜி.ஆர். கே. மூர்த்தி (1994 ) இந்த மணற்திட்டுகளில் எரிமலைத் துவாரங்களை கண்டுபிடித்துள்ளனர். நீரடி நிலச்சரிவுகளின் முக்கியமான பின்விளைவு சுனாமி. இங்கு அவ்வாறான சில நிலச்சரிவுகள் கடந்த காலத்தில் நடந்துள்ள போதும் அதுகுறித்து என்ன ஆய்வு நடத்தப்பட்டுள்ளது?

          1938 , 1991 ஆகிய ஆண்டுகளில் முறையே 5 .8 , 5 .2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளன . சமீபத்தில் 2011 நவம்பர் 19 அன்று கூடங்குளத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தெற்கேயுள்ள மணற்திட்டில் 5 .2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Center for Earth Science Studies, IMD and INCOIS ஆகிய அமைப்புகள் இது குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த பொது NPCIL ( Nuclear Power Corporation of India Limited ) இதை கண்டுகொள்ளவே இல்லை.

          அமெரிக்காவின் Nuclear Regulatory Commission (USNRC ) கடற்கரையில் அமைந்துள்ள அணுவுலைகளுக்கு கடலின் dry intake -ஆல் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்திருக்கிறார்கள். இங்கு சுனாமிக்குப் பின் அடிக்கடி நீர் உள்வாங்குவதால் அச்சமயங்களில் நிலத்தில் இருந்து காற்றை உள்ளிழுத்து அதனால் அனுவுலைக்கு ஏற்படும் ஆபத்து குறித்து NPCIL ஆய்வு நடத்தியதா ?

          கடைசியாக…

          ஆர். ரமேஷ் , வி.டி. பத்மநாபன், வி. புகழேந்தி ஆகியோர் பின்வருமாறு கூறுகின்றனர். “We have undertaken a critical review of the KKNPP site. We have used research papers from peer reviewed journals, international and national nuclear safety manuals (IAEA, USNRC and AERB), published books on various specific topics, and reports of recent natural events for conducting this in depth review. The review covers the fields of Geology, Oceanography and Hydrology.The review indicates that this is one site that should have been selected with much caution. The review notes that the site selection and evaluation by the concerned authorities was not done with due diligence.”

          நீங்களும் எந்த ஆய்வுகள், அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு உங்கள் வாதத்தை (?!) வைக்கிறீர்கள் என்று விளக்கினால் நலம். அப்படியல்லாமல் PMANE குழு வைக்கிற ஆதாரங்களுள் ஒரு அறிக்கையை எடுத்துக்கொண்டு அதை பொய் என்று கல்யாண ராமன் மூலம் நீங்கள் நிரூபிக்க முயல்வது பரிதாபகரமான முயற்சி. அதாவது ஆர்.எஸ்.எஸ் காரனும் பகத்சிங் படத்தை பயன்படுத்துவதால் பகத்சிங்கை இந்துத்துவ வெறியர் என்று சொல்வதற்கு ஒப்பானது உங்கள் மொக்கையான வாதம்.

  8. கலாம் ஒன்றும் அணு விஞ்ஞானி இல்லை. அவர் ராக்கெட்டு ராசா. ஏவுகணை தொழில் நுட்பம் தெரிந்தவர். விஞ்ஞானி என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ பதிவோ அவர் பெயரில் வெளிவரவில்லை. ஆபீசில் கணக்குவழக்கு பார்த்தவரெல்லாம் விஞ்ஞானி என்றால் அது அறிவியலுக்கே அவமானம். அனால் அவர் ஒரு தலைசிறந்த காமிடியன். விவேக்குக்கெல்லாம் முன்னோடி என்றால் அது மிகையில்லை. தனக்கு அணு அறிவியல் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது என்பதை இப்படி எல்லோர் முன்னாலும் அவிழ்த்து காட்டியிருக்க வேண்டாம். இதெல்லாம் விஞ்ஞானியென்றால் பாரத மாதாவின் புதல்வர்களின் நிலை மிக பரிதாபத்துக்குறியது.

  9. Well! A rocket scientist cannot understand Nuclear technology but vinavu authors and readers can understand better than him.

    AC Current is dangerous
    Driving in Indian road is dangerous
    This earth with Tsunami,Volcano, earthquake and cyclones is dangerous.
    Democracy is dangerous

    ” குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் “

    • AC current will kill only who touch or make some incident.Road also only who faces accident will be affected. next hour transport will continue.

      one small incident involving nuclear, will make the place,that nobody can live for hundreds of years, will affect lot of people surrounding several kilometers. Is AC current and road accident same as nuclear accident?

      • // one small incident involving nuclear, will make the place,that nobody can live for hundreds of years, will affect lot of people surrounding several kilometers//

        Agreed. But not having electricity will make the place,that nobody can live today.
        Look at Japan after Fukushima, It is not they chickened out and stopped all the reactors.

        More Electricity = More Jobs = More stomachs full

        No car/bike company guarantees accidents will not happen, have you stopped driving?

        • //More Electricity = More Jobs = More stomachs full//
          //But not having electricity will make the place,that nobody can live today.//

          பதில் கட்டுரையிலேயே உள்ளது : மக்களை மரணத்தின் விளிம்பில் நிறுத்தியாவது உற்பத்தி செய்தே ஆகவேண்டிய இந்த மின்சாரத்தால் பயனடைபவர்கள் யார்? “1995 இல் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 81,000 மெகாவாட். அப்போது 52% கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. இன்று உற்பத்தித்திறன் 1.82 லட்சம் மெகாவாட். இன்றும் 42% கிராமங்கள் இருட்டில்தான் உள்ளன” (இந்தியா டுடே, நவ.30, 2011)

          //No car/bike company guarantees accidents will not happen, have you stopped driving?//

          11.1 பதிலே இதற்கும் பொருந்தும்.

        • //No car/bike company guarantees accidents will not happen, have you stopped driving?

          Again and again please don’t compare road, bike accidents and nuclear disaster and mislead people.

  10. அடுத்த ஜல்லி
    அமெரிக்காவில் உள்ள யுக்கா மவுண்டன் அணுக் கழிவு கிடங்கு கைவிடப்பட்டதற்கு முக்கியமான காரணம் அங்கே எரிமலை அபாயம் இருப்பதாகவும் அதனாலேயே அரசு அத்திட்டத்தை கைவிட்டதாகவும், அமெரிக்கர்களே ஒரு திட்டத்தை எரிமலை அபாயம் கருதி கைவிட்ட பிறகும் இந்திய அரசு கூடங்குளத்தை எப்படி தொடரலாம் என்பது இவர்கள் வாதம்.

    CHAPTER – 1
    VOLCANISM, TSUNAMI, KARST AND SHORE STABILITY

    ….The primary argument against siting a high level radioactive waste repository at the Yucca Mountain Region (YMR) was centered on the possibility of small volume basaltic volcanism in the region.

    உண்மை என்னவென்றால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காகவே நெவாடா மாகாண செனட்டர் ஹாரி ரீட் என்பவரின் முன்னாள் உதவியாளர் கிரிகரி ஜாஸ்கோ என்பவர் NRC (Nuclear Regulatory Commission) யின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் ரீதியில் இந்த திட்டத்தின் கழுத்தை நெரித்திருக்கிறார்கள்.

    அமெரிக்க அரசு இந்த திட்டம் தொழில்நுட்பம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக கைவிடப்படவில்லை என்று தெளிவாக சொல்லியிருக்கிறது.

    http://www.gao.gov/products/GAO-11-229

    DOE decided to terminate the Yucca Mountain repository program because, according to DOE officials, it is not a workable option and there are better solutions that can achieve a broader national consensus. DOE did not cite technical or safety issues.

    அணு உலையில் எரித்தபின் எரிக்கற்றைகள் அந்தந்த அணுமின் நிலையங்களிலேயே ஆண்டுக்கணக்கில் சேமித்து வைப்பது சரியா அல்லது நெவாடா போன்ற பாலைவனத்தில் (100 கி.மீ சுற்றளவில் மனிதர்களே இல்லாத இடம்) மலையை குடைந்து அமைத்த சுரங்கங்களில் பாதுகாப்பது சரியா என்ற கேள்விக்கு இரண்டாவது முறைதான் சரி என்று அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

    யுக்கா மலைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய இன்னும் பல பில்லியன் டாலர்கள் செலவும் பல பத்தாண்டுகள் தாமதமும் ஏற்படப்போகிறது.

    • 2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை:
      1. அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!
      2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின் டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில் செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!

      • ஒபாமாவும் நம்ம ஊருஅரசியல்வாதி மாதிரிதான், அவர் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியதை வைத்து அவர் அணுசக்திக்கு எதிரானவர் என்று முடிவு கட்ட வேண்டாம். பதவிக்கு வந்த உடன் புதிய அணு உலைகளுக்கு லோன் கியாரண்டியாக 8.3 பில்லியன் டாலர் அறிவித்தார்.

        http://www.cbc.ca/news/world/story/2010/02/16/obama-nuclear-loan.html

        • //ஒபாமாவும் நம்ம ஊருஅரசியல்வாதி மாதிரிதான்

          உண்மைதான், ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் பற்றி? “அணுமின்சாரம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose) வழியில்லை”.

    • //அமெரிக்க அரசு இந்த திட்டம் தொழில்நுட்பம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக கைவிடப்படவில்லை என்று தெளிவாக சொல்லியிருக்கிறது. //
      //யுக்கா மலைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய இன்னும் பல பில்லியன் டாலர்கள் செலவும் பல பத்தாண்டுகள் தாமதமும் ஏற்படப்போகிறது.//

      அமெரிக்க அரசுக்கு செலவாவது குறித்து நீங்கள் வருத்தப் படுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.

      அமெரிக்காவின் Court of Appeals , அணு உலைகளின் குறைந்தபட்ச பாதுகாப்பு காலத்தை 10 ,000 ஆண்டுகளில் இருந்து 10 லட்சம் ஆண்டுகளாக மாற்றியது. ஆனால் 10 லட்சம் ஆண்டுகளுக்குள் அங்கு எரிமலை வெடிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை தெரிவித்த நிலையில் Dept . of Energy -யால் அந்த திட்டத்தின் பாதுகாப்பு அம்சத்தை Court of Appeals -இல் நிறுவ முடியாமல் போய்விட்டது.

      விபரம் இங்கே: http://www.state.nv.us/nucwaste/news2005/pdf/eos20050830.pdf

      அரசின் எனர்ஜி செக்ரட்டரி ஸ்டீவன் சு 2009 மே யில் சொன்னது – “Yucca Mountain as a repository is off the table. What we’re going to be doing is saying, let’s step back. We realize that we know a lot more today than we did 25 or 30 years ago. ….”

      புரியுதா?

      இந்த விக்கிலீக்ஸ் காலத்திலும் அரசின் அறிக்கையை மட்டுமே நம்புகிற அப்பாவி போலும் நீங்கள்.

    • //அடுத்த ஜல்லி
      அமெரிக்காவில் உள்ள யுக்கா மவுண்டன் அணுக் கழிவு கிடங்கு கைவிடப்பட்டதற்கு முக்கியமான காரணம் அங்கே எரிமலை அபாயம் இருப்பதாகவும் அதனாலேயே அரசு அத்திட்டத்தை கைவிட்டதாகவும், அமெரிக்கர்களே ஒரு திட்டத்தை எரிமலை அபாயம் கருதி கைவிட்ட பிறகும் இந்திய அரசு கூடங்குளத்தை எப்படி தொடரலாம் என்பது இவர்கள் வாதம்.

      CHAPTER – 1
      VOLCANISM, TSUNAMI, KARST AND SHORE STABILITY

      ….The primary argument against siting a high level radioactive waste repository at the Yucca Mountain Region (YMR) was centered on the possibility of small volume basaltic volcanism in the region.//

      “யுக்கா மலைக்கடியில் அணுக் கழிவுகளை சேமிக்கும் திட்டம் குறித்த முதன்மையான எதிர்வாதமே அங்கிருக்கும் எரிமலை அபாயம் பற்றியது தான்.” இவ்வாறு தான் PMANE அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அரசாங்கம் அதை ஒரு காரணமாக குறிப்பிட்டதாக எங்கும் சொல்லப் படவில்லையே.

      தப்பா புரிஞ்சுகிட்டு புலம்பினா நியாயமா சார்?

  11. கிறித்தவ பாதிரிகளின் சூழ்ச்சியை ஒரு இஸ்லாமிய அறிஞ்சரை வைத்து வெல்ல நினைக்கிறது சீக்கியன் தலைமையிலான மத சார்பற்ற அரசு…
    ரஷ்ய மேலாதிக்க வல்லரசின் உதவியை தடுக்கும், அமெரிக்க வல்லரசின் சூழ்ச்சியை, நிச்சயம் வெல்லும் இத்தாலிக்காரியின் இந்திய அரசு.

    யாமறிந்த குடியரசு தலைவர்களிலே கலாமை போல் ஆளுமையும், அறிவும், ஆழ்ந்த சிந்தனையும், துணிவும், வீரமும் , எழுச்சியும், பண்பும், மக்களின் மேல் பாசமும், பரிவும் கொண்ட தலைவரை இனிதாவ தெங்குங் காணோம்.

    பன்னிரண்டு பகை கருத்துக்களை கலாம் மேல் பரப்பியிருக்கும் பண்பாளர் பாமரன், அமெரிக்க குடியுரிமை பெற்ற, கிறித்தவ மத ஆராய்ச்சியாளர், இந்து இஸ்லாம் மத துவேஷி, உத்தமர் உதயகுமாரன் பற்றி ஓரிரு முத்துக்களை உதிர்க்கலாமே…

    உதயகுமார் கூட்டம் மற்றொரு கிழக்கிந்திய கம்பெனி என தெரிந்துகொள், கும்பிநிகளுக்கு சலாம் போட்டு நாட்டை அடிமையாக்கியது போதும்.. கும்பினிக்கு அடிமையாவதை விட குடியரசுக்கு குடிமகனாக இருப்பதே சிறந்தது…

    • //யாமறிந்த குடியரசு தலைவர்களிலே கலாமை போல் ஆளுமையும், அறிவும், ஆழ்ந்த சிந்தனையும், துணிவும், வீரமும் , எழுச்சியும், பண்பும், மக்களின் மேல் பாசமும், பரிவும் கொண்ட தலைவரை இனிதாவ தெங்குங் காணோம்.

      நல்ல நகைச்சுவை. சொந்த ஊர் ராமேஸ்வரத்தில் எத்தனை மீனவர்கள் கொல்லபட்டபோதும், இன அழிப்பின் போதும் வாயே திறக்கவில்லை.

      • @Anand
        Kalam is not a political leader! He was a rocket scientist and leave him at it.

        Did your elected leader have voiced anything for those causes?

        Can you list what are the activities you have done other than writing comments for Fisher men and Srilankan Tamils?

        If one guy talks about corruption, then you guys ask, has he raised voice for Tamil cause?
        If one scientists talks about nuclear tech, then you guys ask, has he raised voice for Tamil cause?

        when will you guys get Pagutharivu ?

        • //Kalam is not a political leader! He was a rocket scientist and leave him at it.//

          ஆனந்த்தின் பதில் மனிதனின் bla bla bla விவரணைக்கு எதிர்வினையாக அமைந்தது. மனிதன் அவ்வாறு ‘மன்னர் புகழ் பாடுவது போல’ பாடியிருக்காவிடில் ஆனந்த் அவ்வார்த்தைகளை உதிர்த்தே இருக்க மாட்டார்.

          //Did your elected leader have voiced anything for those causes? //

          தேர்தல் முறையும் ஜனநாயகமும் கேலிக்கூத்தாக வெற்றுச் சடங்காக அமைந்திருக்கும் காலகட்டத்தில் இதென்ன கேள்வி.

          //If one guy talks about corruption, then you guys ask, has he raised voice for Tamil cause?//

          கலாம் குடியரசுத் தலைவராய் இருந்த காலகட்டங்களிலும் மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை ஓநாய்களின் தாக்குதல் இருந்தது. முப்படைகளுக்கும் தலைமைத் தளகர்த்தரான அப்துல் கலாமால் அப்போது என்ன செய்ய முடிந்தது? ஆனந்த்தின் கேள்விக்கு குதர்க்கமான பதிலை தயாரிக்க முடிகிற நேரத்தில் அந்தக் கேள்விக்கான பின்னணியையும் அலச/பகுத்தறிய முனையலாமே!

        • //Kalam is not a political leader! He was a rocket scientist and leave him at it.

          any human can raise his/her voice against crime and genocide. by birth kalam was also human, not a scientist.

          //Can you list what are the activities you have done other than writing comments for Fisher men and Srilankan Tamils?

          I was not president. Also i did not made propaganda that nuclear plant is safe etc.
          when kalam did not raise voice for Tamils, should have kept mouth closed for koodangulam also.

  12. ஆனந்த் அண்ணே, நீங்க சொல்லுற பிரச்னைக்கெல்லாம் வாய தொறக்க முந்தா நாள் முளைச்சு முப்பது பேரு உருப்பினாராய் உள்ள கட்சி தலைவன் நூற்று கணக்கில் இருக்கான் இந்த நாட்டிலே.. அவனெல்லாம் வாய தொறந்து என்ன நடந்து கிழிசிடுச்சு… ஒருவர் ஒரு விசயத்தை பற்றி அறிக்கை விடுவதாலேயே அவர் அந்த விடயத்தில் துணிவோடு களம் இறங்குகிறார் என்று கொள்ள கூடாது…

    ராமேஸ்வரம் பிரச்னையும், ஈழ பிரச்னையும் உணர்வு பூர்வ சடங்குகளை தாண்டி, இரு நாட்டு அரசுகள் சம்பந்தப்பட்ட பிரச்னை.. ஓரிரு தமிழ் உணர்வாளர்கள் உறக்கமிடுவதால் தீர்வு காண முடியுமா என்ன? இங்குள்ள தலைவர்கள் தங்கள் அறிக்கையின் மூலம் மக்களின் உணர்வுகளை தான் தூண்டிவிடுகிரார்களே தவிர வேறு ஒரு பயனும் இல்லை..

    மேதகு கலாம் அவர்கள் அப்படியெல்லாம் மக்களின் உணர்சிகளை அவ்வுளவு எளிதில் தூண்டிவிட முடியாதது… அவர் வகித்த பதவிக்கு அது அழகல்ல… இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தவர் அவர்… நாட்டின் குடியரசு தலைவர்கள் வீதிக்கு வந்து போராடுவதில்லை…

    கூடங்குளம் விடயத்தில் மட்டும் ஏன் பங்கு கொள்கிறார் என கேட்பீராயின்.. அவர் நீங்களோ நானோ இல்லை ரஷ்யாவோ சொல்லி இதை செய்யவில்லை.. இந்திய பேரரசின் பிரதமர் முதலான அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று மக்களின் அறியாமை இருளை நீக்கும் சமாதான தூதுவனாகவே அவர் செயல்படுகிறார்…

    நீதிபதிகள், ஆளுநர்கள், முதன்மை செயலர்கள், சபாநாயகர்கள், குடியரசு-துணை குடியரசு தலைவர்கள் இவர்கள் ஓய்வு பெற்றுவிட்டாலும் அரசு ஊழியர்களாகவே கருதப்படுவார்கள்… இவர்களை எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாநில அரசுகள் வேறு அரசு பணிகளை செய்விக்க வேண்டிக்கொள்ள அரசுக்கு உரிமை இருக்கிறது… இந்த பொறுப்புகளை வகித்தவர்கள் எத்தகைய மக்கள் பிரச்னையிலும் நேரிடை தொடர்பு கொள்வதில்லை… அரசாங்கம் வேண்டினால் அன்றி இவர்கள் பொது பிரச்னைகளுக்கு ஆதரவோ, எதிர்ப்போ வழங்க கூடாது என்பது நடைமுறை…

    முல்லை பெரியாருக்கு வக்காலத்து வாங்க வந்த நீதிபதி பாலகிருட்டினனுக்கும், நம்ம உள்துறை அமைச்சருக்கும் கிடைத்த மரியாதை தான் கிடைக்கும்…

    • @மனிதன். //ஓரிரு தமிழ் உணர்வாளர்கள் உறக்கமிடுவதால் தீர்வு காண முடியுமா என்ன

      ஒவ்வொரும் இவ்வாறு விலகி கொண்டால் சுந்தந்திரம் என்று கிடைக்கும். அப்துல் கலாம் ஒரு தீப்போரியாக இருந்திருக்கலாம் அல்லவா. சமீபத்தில் வி ஆர் கிருஷ்ணா அய்யர் கூட கேரளாவில் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

      //இந்திய பேரரசின் பிரதமர் முதலான அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று மக்களின் அறியாமை இருளை நீக்கும் சமாதான தூதுவனாகவே அவர் செயல்படுகிறார்…

      அதே பிரதமரிடம் தமிழருக்காக பேசியிருக்க வேண்டும். அல்லது இப்போது வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

      அப்துல் கலாம் பேசியவை: கூடங்குளத்தில் மருத்துவமனை, சாலை, தொழிற்சாலை, பள்ளி, விளையாட்டு மைதானம், 200 கோடிக்கு வளர்ச்சித் திட்டம். உண்மையில் அணு உலை குடியிருப்பு முப்பது கிலோ மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இவர் பேச்சு ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்றது. இது ஒன்றே போதும் அவருக்கு மனித நேயம் தெரியவில்லை, வல்லரசு வல்லரசு வல்லரசு.

  13. திரு.ஞானி அவர்கள் எழுதிய ஒரு பத்தி. தயவு செய்து இதனை பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு…

    http://gnani.net/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/

  14. சிறப்பான பதிவு. நன்றி வினவு.
    அணு மின்சாரத்துக்கு மாற்று பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.

  15. @Ragu

    FYI: Japan has shut down 48 of its 54 reactors. The other six will be shut down in a few months. The shutdowns are not because they are all unsafe but due to public concern. Japan is already increasing imports of natural gas, coal and oil products to keep generating the same electricity as earlier. They are also looking at other options like renewables (wind, solar, etc).

    The nuclear push in India is purely aimed at helping corporate interests and former allies.

  16. […] பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்… மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை […]

  17. இடக்கரடக்கலாக – இதுக்கு பொருள் என்ன?
    பு.ஜ வுல படிக்கும் போதே புரியலை. அப்பவே கேட்கனும்னு நெனச்சேன், மறந்துட்டேன்.

    • இடக்கரடக்கல்:

      மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். “இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள்.அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.
      நன்றி :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D

      உம் :

      [1]மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.

      [2]”சாவு” என்பதை கொங்கு வட்டார வழக்கில் “பெரிய காரியம்” என்பர்

Leave a Reply to Ragu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க