privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை: பிராமீன்

சிறுகதை: பிராமீன்

-

“மாங்கா…. மாங்கா…”

மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ”மாங்கா… மாங்கா… ருசியான மாங்கா” மங்களத்து மாமியும் பக்கத்து வீட்ட மாமிகளும் வாசலுக்கு வந்துவிட்டதைப் பார்த்த செல்லத் துரைக்கு முகத்தில் சிரிப்பு ததும்பியது.

”என்ன மாமி எல்லோரும் பாத்திரத்தோடு வந்துட்டிங்க. இன்னைக்குன்னு பாத்து சரக்கு வேற கம்மியா போட்டுட்டு வந்துட்டேன். ஆளுக்கு ரெண்டு கிலோ போடட்டா?”

”ஏண்டா கூறுகட்டி விக்கறத போயி கிலோ கணக்குல விக்கிற அளவுக்கு நோக்கு கிராக்கி முத்திடுச்சோ! கிட்டக்க வா மொதல்ல கூடய பாப்போம்”

சைக்கிள் அருகில் வந்ததும், கூடையிலிருந்து வந்த நாற்றத்தை மூச்சில் இழுத்த  பார்வதி மாமி கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி அவனைச் சந்தேகத்துடன் பார்வையால் அளந்தாள்.

”ஏண்டா வீணா போன மாங்காயா கொண்டாந்துருக்கியோ! இந்த நாத்தம் நார்றது”

”நல்ல மீனுன்னா இப்படித்தான் மாமி நாறும், வேணும்ணா பாருங்க,” கூடைக்கு மேல் மூடியிருந்த சாக்கைத் திறந்தான்.

”திருட்டு முழி முழிச்ச்சிண்டு அவன் சிரிக்கறப்பவே நெனச்சேன். கிராதகம் பண்ணுவான்னு. மற்றவர்களும் வசவை ஆரம்பித்தனர்.

”பாவி கம்மனாட்டி, கோகுலாஷ்டமியும் அதுவுமா, இப்படி பண்றியே மாங்காண்ணா நாங்க பாத்திரத்தோட வந்தோம். நோக்கே நன்னாருக்கா இப்படி பண்றது” அதுக்கு மேல் மீன் நாற்றத்தில் நிற்க விரும்பாமல் சரேலென்று திண்ணைக்கு ஓடி வாயை வளைத்தும் நெளித்தும் முணுமுணுத்த வண்ணமிருந்தனர்.

வெக்கு வெக்கென்று சிரித்துக் கொண்டிருந்த செல்லத்துரையைப் பார்த்து பொரிந்து தள்ளினாள் பார்வதி மாமி.

”அந்தக் கண்றாவிய, தண்ணிய கொட்டிண்டு இன்னும் ஏண்டா நிக்கற? மொதல்ல சைக்கிள நகர்த்து. போடா! போனா போறது உங்கப்பன் காலத்லேர்ந்து அக்கிரகாரத்த நம்பி பொழச்ச குடும்பமாச்சேன்னு உன்கிட்ட கறிகா வாங்கிண்டிருந்தோம. இந்த கண்றாவிய கொண்டாந்து வச்சிண்டு மாங்கான்னு எங்களவாள நக்கல் பண்ணியோ, இனிமே யாரும் ஒன்னிட்ட எதுவும் வாங்க மாட்டா, நீ போடா மொதல்ல.”

”சும்மா பயப்படாதீங்க மாமி, மெட்ராசுல போயி பாருங்க உங்க ஆளுங்க மாட்டுக்கறிய என்னா போடு போடுறாங்கண்ணு.”

”நீ காலங்காத்தால தண்ணி போட்டுட்டு வந்துட்டியா? போடா மொதல்ல”

”கோவிச்சுக்காத மாமி, வெறும் தயிறு சோற திங்கறதுனாலத்தான் கொற வயசுலேயே தலை ஆடுது. கூன் விழுது. எங்கள மாதிரி எலும்பையும், மீனையும் கடிச்சு பாருங்க. இடுப்பு என்னமா நிக்குதுன்னு. என்னா போடட்டா ஒரு கிலோ?”

”இல்ல இல்ல, இவன் நம்ப பேச்சுக்குப் படியமாட்டான். ஏய்! ராமமூர்த்தி இங்க வாயேன்….”

”தே! மாமி அந்தாள இழுத்து வுட்றாத. திருக்கைய உப்புல வச்சி தேக்கிற மாதிரி, வாயாலயே வச்சி தேச்சிடுவாரு தேச்சி” சிரித்துக் கொண்டே, கால் சட்டைக்கு மேலே கைலியை தூக்கிவிட்டவாறு சைக்கிளை ஒரு மிதி மிதித்து ”மாங்கா….. மாங்கா… மீனு… மீனு” என்று சிரித்தபடியே புறப்பட்டான்.

”மாங்கா மாங்கான்னு சத்தம் வந்துதேன்னு வடாம் போட்ட கையோட அப்படியே வந்தேன். கட்டயிலே போறவன் மீன் கூடய வச்சிண்டு என்ன பேச்சு பேசறான் பார்த்தேளா!” மங்களத்து மாமியின் பொறுமலோடு பார்வதியும் ஒத்திசைத்தாள்.

”எல்லாம் அழியறத்துக்கு காலம்டி, ஒரு காலத்துல இந்த அக்கிரகாரத்துல கால வைக்கவே நடுங்னவாள்லாம் இப்ப நம்பளவாள நக்கல் பண்ணிண்டு போறா.”

”கேக்க ஆள் இல்லியோன்னோ அதான், கண்டதும் நம்பள நக்கல் பண்றது. மொதல்ல இந்த போஸ்ட் ஆபீஸ் வந்தது. ஒரு சேரி ஆள் வந்தான். அடுத்து தெருவுல இந்த தாய் சேய் விடுதி வந்தது சூத்திரவாள் வந்தா. இப்ப இது அக்கிரகாரமாவா இருக்கு…. க்கூம்.”

”இந்த முத்துசாமி அய்யர் மெட்ராசோட போறேனிட்டு காசுக்காக சூத்திரன் கிட்ட வீட்ட வித்துட்டு போயிட்டார். நம்பளவாளே சரியில்லாதப்போ யார குத்தம் சொல்றது.”

”சரி போயி ஆத்துல வேலைய பாருங்கோ” பார்வதி மாமி வழிமொழிய கலைந்தனர்.

***

”வாசு வாங்க என்ன ஹாயா உட்கார்ந்திட்டேள்” ராமமூர்த்தி அய்யர் வழக்கமான வெண்பொங்கல் சிரிப்பை பரிமாறினார்.

மாலை நேர சுலோகங்களை முடித்துக் கொண்டு திருநீறு, சந்தனம் மணக்க ராமமூர்த்தி அய்யர திண்ணையில் வந்து உட்கார்ந்தால், யாரும் பக்கத்தில் போகவே பயப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு பாகவதம் பாடி ”இது கூட தெரியாதா? என்னத்த எம். எஸ்சி. படிக்கிறேள்” என்று மடக்குவதும், ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டு தெரியாமல் விழிப்பவர்களைப் பார்த்து ”என்ன கான்வென்ட் படிப்போ எழவோ? ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்கறது” என்று பலருக்கும் முன் அவமானப்படுத்தி ”இத்தனைக்கும் நான் அந்தக்கால பத்தாவது” என்று அவர் சிரிக்கும் சிரிப்புக்கு எதிர் நிற்க முடியாமல் பலரும் பயந்து ஒதுங்குவார்கள்.

என்னை மட்டும் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து அவர் அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை அவரது பேச்சுக்கு ஒத்துப் போகாமல் எதிர்கேள்வி கேட்கும் என்னை முழுவதுமாகப் பணியவைக்க வாதத்தை ஆரம்பிப்பது அவரது வழக்கம்.

இவ்வளவு ஆர்வமாக வரவேற்க காரணம் என்னவாயிருக்கும்? காலையில் தெருவில் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு ராமமூர்த்தி அய்யர் பக்கம் போனேனே.

”என்ன சார் ஏதும் முக்கியமான விசயமா?”

”என்ன இருந்தாலும் நானெல்லாம் ஓல்டு ஜெனரேஷன். உங்கள மாதிரி புதுமை, பகுத்தறிவெல்லாம் நேக்குத் தோண மாட்டேன்றதே!”

சுற்றி வளைத்து எங்கு வருகிறார் என்பது புரிந்தது. மௌனமாகச் சிரித்துக் கொண்டேன். ”சொல்லுங்கோ வேற என்ன நியூஸ், ஏதாவது ராமசாமி நாயக்கர் புக் படிச்சிருப்பேயே பிராமின்ஸ குத்தம் சொன்னா உங்களுக்கு வெல்லம்…. ஹி…. ஹி….”

”என்ன சார் நீங்க வேற, காரணம் இல்லாம ஒருத்தர திட்டுனா ஏத்துக்க முடியுமா? தேவையானத தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.”

”ஜாடையா எங்களவாள திட்றத சரிதான்றேள். காலைல தெருவுல நடந்த்தை பாத்தேளா, யாரு தப்பு பண்றா, சொல்லுங்கோ.”

”ஓ! அந்த செல்லத்துரையா?”

”என்ன சாதாரணமா ஓ போடறேள். நீங்கதான் பகுத்தறிவு பாக்குற ஆள். அவன் செஞ்சது சரியா சொல்லுங்கோ! என்ன பேசிண்டே இருக்கேன், சிரிக்கிறேள்” உணர்ச்சிகரமானார் அய்யர்.

”இது அக்கிரகாரம்னு தெரியும், இங்க இருக்கிறவா பிராமின்னு தெரியும். இங்க வந்து மீனு, மீனுன்னு கத்தறான், ஆளுக்கு ரெண்டு கிலோ வேணுமான்னு கேக்கறான்னா, எவ்ளோ இன்டீசென்ட் பிகேவியர். இங்க இருக்கிற நான்பிரமின்ஸ் பார்த்து சிரிச்சிட்டுதானே இருந்தாள், யாராவது அந்த படவாவ கண்டிச்சாளா? பிராமின், நான்பிராமின் பேதம் பாக்காம எவ்ளோ டீசென்டா இருந்துண்டு இருக்கோம். அடுத்தவாளுக்குப் புடிக்காததை செஞ்சி அதுல ஆனந்தம் அனுபவிக்கிறன்னா அவனோட புத்திய என்ன சொல்றது? இத எந்த பகுத்தறிவும் கேட்காதோ?” ஆவேசமும், ஆலோசனையுமாக பேச்சு நீண்டது.

”சொல்லுங்க வாசு, இது அசிங்கமில்லையா? எங்களவாதான் மேனியில பூணூல் போட்டாலே தப்புன்னு வாதம் பண்றேள்! அடுத்தவா வேணாம்னு ஒதுக்குறத அடுத்தவா மேல அத்துமீறி நடந்துக்குறதுக்கு யாரு தப்பு சொல்றது. இதுதான் டெமாக்ரசியா? சொல்லுங்கோ.”

பேசிக் கொண்டே போனவர், தெருப்பக்கம் கவனித்தவாறு ” தோப்பனார் தேடறார் போல இருக்கு. போயிட்டு வாங்கோ, நீங்களும் நானும் எங்க போயிடப்பொறோம், ஆற அமர பேசலாம். கொஞ்சம் சாமர்த்தியமா யோசிக்கிற ஆளாச்சேன்னு உங்க காதுலயும் போட்டேன் அவ்வளவுதான்,” சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார்.

****

முதல் நாள் இராமமூர்த்தி அய்யரிடம் மேற்கொண்டு பேச நினைத்தைப் பேச இயலாது போயிற்று. காலையிலிருந்து தெருப்பக்கம் அவரைத் தேடிக் கொண்டிருந்தன எனது கண்கள். வீட்டிலிருந்து தென்படுவார் என எதிர்பார்த்தேன். இராமமூர்த்தி அய்யர் தெருவிலிருந்து வீட்டுப்பக்கம் வழக்கத்தைவிட வேகமாக நடந்து வந்தார். அவரது வட்டவடிவமான தொந்தியும், பூணூலும் புவியீர்ப்பு விசையோடு போராடுவது போல அசைந்து கொண்டிருந்தது.

“என்ன சார் இவ்வளவு வேகமா வாரீங்க, ஏதும் அவசரமான வேலையா?”

”என்ன தெரியாதது போல கேக்கறேள்! கம்மாளத் தெருவுல புதுசா கட்டுன வினாயகர் கோவிலுக்கு இன்னிக்கு மகா சம்புரோட்சணமோன்னோ! அதான் பாராயணத்துக்கு காத்தாலயே போயிட்டேன். அபிஷேகத்துக்கு சந்தனம் வாங்கி ஆத்துலேயே மறந்து வச்சிட்டு போயிட்டேன், அதான் வேகு வேகுன்னு கொண்டு போயி கொடுதிட்டு வர்றேன். அப்பாடா… நாராயணா…. நமச்சிவாயா…” துண்டால் தொந்தியில் வழிந்த வியர்வையை ஒற்றியபடி திண்ணையில் உட்கார்ந்தார்.

”அப்புறம் என்ன சேதி, ஊரே அங்க தெரண்டு நிக்கறது. நீங்க மட்டும் வரமாட்டேள்”

”ஓ! அதானா காலைலேர்ந்து நமகா, நமகான்னு சத்தம் கேட்டுச்சு”

”நீங்க காத்தால கேட்டது என்னோட வாய்ஸ்தான். வேதபாராயாணம் உங்களுக்கு நக்கலா படுதா”

”இல்ல சார் நேத்து நீங்க சொன்ன மாதிரியே நல்லா யோசிச்சு பார்த்தேன். செல்லத்துரை செஞ்சதையே இப்ப நீங்களும் செய்யறீங்களே, அதான், என்ன சொல்றதுன்னே தெரியலே”

”அந்த மீன்காரன் மாதிரி நானா? என்னது குண்டதூக்கி போடறேள்” பரபரத்தார் இராமமூர்த்தி.

”வாங்கப் புடிக்காதவங்க கிட்ட மீனு மீனுன்னு கத்தறது தப்புன்னா, சமஸ்கிருதம்னா என்னன்னு தெரியாதவங்ககிட்ட போயி மைக்கசெட்டு போட்டு நீங்க நமகா, நமகான்னு கத்தறது மட்டும் சரியா? நீங்களே யோசிச்சு பாருங்க. அந்தத் தெருவுல இருக்கறவங்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. நீங்க கர்நாடக சங்கீதம் கச்சேரி வேற வெச்சீருக்கீங்க. இப்படி அவங்க விருப்பத்த மதிக்காம இதுதான் பாட்டு, இதுதான் வேதம்னு நீங்க திணிக்கறது மட்டும் எந்த வகையில சார் டெமாக்ரசி?”

”ஹி… ஹி…. யாரோ எழுதி வச்சத படிச்சுட்டு தப்பாப்  பேசறேள். உங்களுக்குப் புரிய வைக்க நம்மால ஆகாது. சரி. அந்த சாப்டர விடுங்கோ. கொஞ்சம் கட்டையை சாச்சிட்டு திரும்பவும் பாராயணம் பண்ண போகணும்.”

”அப்ப திரும்பவும் மீன்விக்க போறீங்கன்னு சொல்லுங்க.”

ஆவேசமாகி வாதம் பொறி பறக்கப் போகிறதென்று எதிர்பார்த்தேன்.

”ஆஹா…. ஹா… ஹா…. ஒங்களுக்கு அனுபவம் பத்தாது. அதான் தெரியாம பேசறேள். சாதாரண மேட்டர போயி ரொம்ப சீரியசா எடுத்துக்கறேளே. போயி நீங்களும் ரெஸ்டு எடுங்கோ. ஏன் சும்மா பேசிண்டு. திண்ணைல வேற காத்த காணோம். ரொம்ப புழுங்கறது….” போய்க் கொண்டே இருந்தார்.

இதற்கு முன், நழுவிச் செல்வதில் இப்படியொரு உயிரினத்தை இதற்குமுன் பார்த்திராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

________________________________________ 

புதிய கலாச்சாரம், செப்டம்பர் 1999.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. sariyana mokkai vaadam, avunga enna panna ungalukku enna. unga veetukulla vandha carnatic kacheri nadathuranga,illa unga veetu vasalukku vandhu mike set vechu namaha namaha panrangala.

    adhu oru orathula nadakuthu,ithukku thana agraharam irukku.

    pinna indha madhiri maramandaya ellam vittu nazhuvama vera enna seyya?

  2. Boss, What is the logic in this story? The differences are totally at 2 ends. First we wont eat and smell the fish but that guy has cheated by saying that as mango. In the second incident sastrigal hasnt forced the people to hear that. People only wants the sastrigal to say the vedas. Secondly people likes it even though they doesnt understand. So ultimately the difference is liking only. If anything is forced without someone’s liking then its a serious offence.

    • சமஸ்ல மக்களுக்கு ஒன்னும் புரியலைன்னு சொன்னா கடைய மாத்திருவேளா!

    • அப்புடி வற்புறுத்தலன்னா மைக் செட் போடாம வீட்டுக்குள்ள வாசிக்க சொல்லும் உம்ம சாஸ்திரிகள.

    • same thing boss.. ungaluku venumna, kovila mattum vetham othungo.. yen theruvula speaker a katti valukattayama ellar kaathilaiyum manthiram solrel? ganapathiyum, muruganum adutha election MLA va nikka pora maathiri, neenga speaker a vaichu koovuna athu thappilayo?

    • Only logic they have is to mock the Brahmins because they cant do the same to other castes…

      செத்த பாம்பு அடிக்கும் வீரர்கள்!

      இசுலாமியர்கள் ஒரு சமூகமாக சட்டபூர்வமாக மதநெரிகளோடு செய்யும் ஒரு காரியத்தை , ஒரு குழு தான் தோன்றி தனமாக செய்வதையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்று என்று எழுதுவார்கள் .( மதத்தை அவமரியாதை செய்தால் மரண தண்டனை, மப் ஹுசனி கொல்லபடுவாய் என்ர மிரட்டல் )

      பெரும்பான்மையாக உள்ளா ஆதிக்க சாதிகளை குளிர்விக்க இப்படி செய்வார்கள்
      இசுலாமியர் உள்ளாம் புண்பட்டால் என்ன ஆகுமோ என்ற போதிலும் இப்படி செய்கிறார்கள்

  3. தமிழகத்தில் இந்த பிராமணர்கள் செய்யும் சாதி வெறி கொடுமைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. தலித்களை பொது குழாயில் தண்ணி பிடிக்க விடமாட்டேன்றான் ரேஷன் கடையில் தனி க்யூ வில் நிக்க சொல்றான் டீ கடைகளில் தனி டம்ளர் வச்சிருக்கான் தெருவில் சைக்கில் டூ வீலர ஒட்டிக்கொண்டு போகாமல் தள்ளிக்கொண்டு நடக்க சொல்றான். பஞ்சாயத்து தேர்தலில் ரிசர்வ்ட் தொகுதியில் கூட நிக்க விட மாட்றான் நின்னா வெட்டி கொல்கிறான்.சாதி மீறி காதலிக்கும் இளைஞர்களை பொது இடத்தில வெட்டி போடறான்.ஒரு அரசு குத்தகையையும் எடுக்க விடுவதில்லை. திராவிட கட்சி நடத்தி இருபது சதம் மக்கள் தொகையில் உள்ளவர்க்கு ஒரே ஒரு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பதவி அதுவும் ஒரு அடிமை காமெடி பீசுக்கு கொடுக்கிறான்….இதையும் கேளுங்கள் வினவு

    • Why u all are continuously insulting brahmins. I am also a brahmin – college student from chennai. So far I am a vegetarian. Brahmins were originally meat eaters. Only after buddhism and jainism came brahmins were forced to become vegetarians, because in both buddhism and jainism animal killing is not allowed. Many people moved to buddhism because there is no idol wordship, no caste, no animal sacrifice and many other good things. In order to protect hinduism brahmins were made to become vegetarians. Subdivision of Pillai, mudhaliyar and chettiyars also adopted.

      Insulting brahmin women has become very common. Will you be silent if I insult your mother. You’re doing the same thing to me.

      Also, you people always refer brahmins as pappan.. Will u be silent if i call a dalit as parayan or sekkili. Wont you feel insulted if i say so? Are we brahmins not saying so because we are afraid?

      If u feel that a brahmin makes a mistake then point on that individual and not the whole community. Raja made corruption so can people say that all dalits are corrupt? Is that right?

      If you want to gain popularity by insulting brahmins then go ahead…

  4. infact carnatic musicavida night poora mike set vechu thoongura makkal kaadu javva arutha punniyam amman koil koozh oothura thiruvizhala thaan. enakku kovam varum,aanalum enga appa amma saami vishayam,ippadi ellam pesa koodathunnu thaan solluvanga.

    • பார்த்தேளா, அப்ப கூட விளிம்புநிலை மக்களின் அம்மன் கோவில் திருவிழாவத்தான் குறை சொல்றீர் ! எந்திரன் பட பாதிப்பு போல.

      • naan koraye sollala.chinna vayasula enga appa amma enakku ozhunga solli kuduthu valarthaanga. Aana neenga thaan engayo koilla nadakkura carantic musica thinippungureenga aana vidiya vidiya schoolukku poga vendiya kuzhanthainga,pregnanta irukkura women,exam ezhutha vendiya school matrum college students, noyala kashtapadura vayothikarkal,ippadi ellarayum kashta apduthara oru nigazhchiya vechu neenga arasiyal pesureenga.

        Idhu dhaan ungaloda manidhapimanam,ungaloda arivu mudirchi.

        • சரிதான், எந்திரன் பட பாதிப்பு அதிகமாவே இருக்கு. உம்ம கருத்தையும் கொஞ்சம் தமிழ்லேயே தட்டச்சப்படாதா? படிச்சு பதில் சொல்ல கஷ்டமா இருக்குதோன்னோ! உமக்கு தமிழ் எழுத தெரியுமோன்னோ!

          • idhukkum enthiranukkum endha connectionum kedayathu,nee modhalla relevanta reply pannu.nee endhiran padam paathu idha ellam therinjikitta adhukku naan enna seyya?

            enakku thamizh ezhutha theriyum,romba nallave.aana romba time consuming.

            • ஆமாம், உங்கள மாதிரி ஆளுங்க சினிமாத்துறையிலும் அதிகமாவே இருக்காங்கன்னு, அந்த மாதிரி படங்கள பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

            • aana romba time consuming. // உம்மோட பொன்னான கருத்துக்களை தமிழில் பொறுமையாவே தட்டச்சி சொல்லலாம். ஒன்னும் அவசரமில்லை.

        • சுப்பி.. நீ என்னவோ அப்பா அம்மா சொல்லிகொடுத்து வளத்ததா சொல்ற… உன்ன பார்த்த அப்டி தெரியலியே… வளர்ப்பு சரியில்லாத பிள்ளை மாதிரி தெரியிரியே..

          • ஒரு அம்பி எங்களுக்கு வீட்டை விற்று விட்டு சென்னையில் செட்டில் ஆகி விட்டார் . நாங்கள் வீட்டின் முன் நிற்கும்போது ஒரு பெண் தன் குழந்தையை அழைத்து கொண்டு வந்தாள். அது எங்களை பார்ததும் இவர்கள் சூத்திரர் தானே இவர்களிடம் எதுவும் வாங்கி திங்க கூடாதுதானே என மழலையில் கூறியது, உடனே அதன் அம்மா அவ்வாறு சொல்லகுடாது என்று சொன்னாலும் , ரெண்டு வயது குழந்தைக்கு சூத்திரர் என்ற வார்த்தை எப்படி தெரியும் – அம்மா சொல்லி கொடுத்துதானே…..

            • சூத்ராள் வீட்ல சாப்பிடாதே என்று சொல்லிக் கொடுப்பது நடக்கத்தான் செய்கிறது. ஏன் என்று விளக்கம் கேட்டால் அவா மாம்சம் சாப்பிடறவா என்ற பதில்தான் வரும்.! சைவப் பிள்ளை, சைவ முதலியார், சைவச் செட்டியார் மற்றும் சைவ வீடுகள்/சைவ உணவகங்களில் சாப்பிடும் விசயத்தில் இது போன்ற ‘எச்சரிக்கை’ ஏதும் விடப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்..!

        • சரிங்க மிஸ்டர் சுபிரமனி

          சின்ன வயசுல உங்களுக்கு அம்மன் கோயில் பாட்டு தான் டிஸ்டர்ப் பண்ணுமா இல்ல விடிய விடிய பன்ர வினாயகர் கோவில் கும்பாபிசேகம் டிஸ்டர்ப் பண்ணுமா?

  5. // நழுவிச் செல்வதில் இப்படியொரு உயிரினத்தை இதற்குமுன் பார்த்திராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். //

    மீனுக்கு பதில் பன்றியையும், சம்ஸ்கிருததிற்கு பதில் அரபியையும், ராமமூர்த்தி அய்யருக்கு பதில் ரகுமான் பாயையும் போட்டு கதையெழுதியிருந்தால், கிளைமாக்சில் ஆசிரியருக்கு வேறு ஏதாவது நழுவியிருக்கும்!!!

    • அம்பிக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கலைன்னா தூக்கம் வராதோ!

      • நாளை வெள்ளிக்கிழமை, வழக்கம் போல் வினவில் பாயா ஊற்றினாலும் ஊற்றுவார்கள்.. பாய்களும் திருப்பிப் போட்டுத்தாக்குவார்கள்.. அம்பிகளுக்கும் பாயா ஊற்றச் சொல்வார்கள்.. வினவில் இதெல்லாம் சாதாரணமப்பா..!!!

  6. Funny. Daily we’ve been seeing thousands of attacks against Jews and still somehow those guys are managing to come up in a brilliant manner and you guys are doing identical stuff. Nothing more than that. You’re indirectly working for the development of Brahmin.

  7. //ஓ.. அப்போ அங்க நழுவி சென்ற அந்த உயிரினம் நீர்தானா?/ /
    சரியான காமெடி

  8. சுப்புரமணி அவர்களே,
    ராமமூர்த்தியும் பாதையில் தானே மீன், மாங்காய் விற்று சென்றார்.
    உங்கவாளுக்கு நாத்தம் பொறுக்க முடியலனா மூக்க பொத்திண்டு வீட்டுக்குள்ள இருக்க வேண்டியது தானே .
    அத உட்டுபுட்டு சும்மா நாட்டமை பண்ண வந்துட்டீங்களே நல்ல கிச்சி கிச்சு மூட்றேல்.

    ஆமாம் ,
    உங்கள மாதிரி ஆட்களால் எல்லாம் எப்படி பேச விடுகிறோமே நாங்க மரமண்டை தான் ..அதான் காலகாலமா மரமண்டை ஆக்கிட்டீங்களே

  9. neenga thiruppi nalla yoseenga,veliya ninnukittu irundha illatharasi vikkuravana niruthi,nee yen inga meen vikkurannu kettangala?

    veena ulla irukiravangala maangannu solli,veliya varavechu vambu panrathum koilla sasthri solra mandhiramum onna.

    neenga engala pesa vidureengala, naanga illannu neenga ellam ippo saudi arabiavula ottaguthukku &*^%&* velai paathirupeenga.

    Vellaikaran kitta dhuttu vaangittu poi pracharam pannunappove dhaadi kara thathava vaayile suttrukkanum,illa andha vettipaya thandavaalathula thala vechappove traina vitukkanum,naanga pannuna thappu inaikku sallipayala ellam pesa vittu vedikka paakavendi irukku.

  10. //இதற்கு முன், நழுவிச் செல்வதில் இப்படியொரு உயிரினத்தை இதற்குமுன் பார்த்திராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்// – அதுல கில்லாடிங்க .
    இந்த தலைமுறை பார்ப்பானுங்க பன்னிக்கறி , மாட்டுக்கறி எல்லாத்தையும் முழுங்கராங்க.

      • சுப்ரமணியின் வாக்குமூலங்கள்.

        https://www.vinavu.com/2011/11/18/conversion-10/#comment-54487

        And yeah,regardless of the poonal i ll always be a paapan because i have common sensse and u dont.Btw common sense translated to pagutharivu in tamizh.

        மாமி-மாட்டுக்கறி-நக்கீரன் பதிவில்

        i dont eat beef myself and it is no big deal,i dont eat because of my religious reasons

        i am not interested in religious discussion,i am quite an atheist myself.

        i m non-vegetarian dude,i dont eat beef thats all.

        இந்த பதிவில்

        non veg saapudravan brahmine kedayathu.

      • //non veg saapudravan brahmine kedayathu.// பரவாயில்லை அதுவரைக்கும் பிரமீன் நான்-பிரமீன் என்ற பேதம் இருப்பதை ஒத்துண்டேளே! முன்ன ஒரு வாட்டி சொன்னது போல Atheist – ஒன்னு நினைச்சுண்டேன்!

        • there is no connection between what i said and what you understood.I said anyone who eats non veg is not a brahmin and u said there are brahmins/non-brahmin.

          do u see any connection? only u guys can come up with such great inferences.

          • முன்னுக்கு பின் முரணா பேசறதையே வழக்கமா வச்சிண்டு அடுத்தவாள குத்தம் சொல்றதே பொழைப்பா போச்சு ஓய் நோக்கு.

  11. All Beings are Equal. Partiality,must not be allowed.We human should keep MERCY on all living beings. There is no difference between any human. Thinking,Treating.Speaking against on any living being is injustice. Bhramin or any other person is not superior or inferior than anyone in the universe. We must keep MERCY on all UNSPEAKABLE Animals. Because of our TONGUE’S Taste Need, We are not WORRYING on the amount of CRUELTY FORCED on animals to become food to us. Brothers & Sisters MY HUMBLE REQUEST:Please REALISE The Pains on animals before it attains death.PLEASE Avoid KILLED ANIMAL FOOD as MAXIM As POSSIBLE. visitanand2006@yahoo.com

    • நேத்தே ஜீவகாருண்யம் பேசுன உங்களவா கிட்ட கேட்டேன்.அவுங்க சாமர்த்தியமா இந்த கதையில் வரும் சுப்ரமணியின் ராமமூர்த்தி மாமா மாதிரி நழுவுறாங்க.உங்கள பாத்தா கொஞ்சம் நியாயமா பேசுரவரா தெரியுது. நீங்களாவது சொல்லுங்க.

      நேத்து நடந்த வாதம்.https://www.vinavu.com/2012/02/23/jaya-nakheeran/#comment-57773

      மாட்டை கொல்லும்போது அது வேதனையில துடிக்குதுன்னு சொல்றீங்க. உண்மைதான்.ஆனால் அந்த வேதன ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும்.ஆனால் மாட்டை காயடிப்பது அதை விட வேதனையானது.அந்த மாடு ஒரு வாரத்துக்கு நிற்க படுக்க முடியாமல் கடும் வேதனையால் துன்பப்படும். அப்டி காயடிக்காட்ட அந்த மாடு விவசாயத்துக்கு பயன்படாது.அந்த மாட்டின் வேதனையில் விளைந்து வரும் பொருட்களை குற்ற உணர்வு இல்லாமல் ஜீவகாருண்யம் பேசுவோர் சாப்பிடுவது எப்படி. மாட்டுக்கறி உண்பதற்கும் மாடு விளைவிக்கும் பொருட்களை சாப்பிடுவதற்கும் இரக்கம்கிற அளவுல பெரிய வித்தியாசம் ஏதுமில்லைங்கிறது இதுலேர்ந்து தெரியலையா.

        • \\obviously there is a big difference//

          அந்த பெரிய்ய்ய்ய வித்தியாசம் என்ன.முதல்ல நாணயமா அத சொல்லிட்டு அப்புறம் நாட்டாமை தீர்ப்ப சொல்லணும்.

          \\,but why are you justifying things //

          நியாயப்படுத்த வேண்டிய அவசியமே இல்ல.இயல்பாவே நியாயமாத்தா இருக்குன்னு எடுத்துக் காட்றேன்.

          \\when did i ask you not to eat beef or tried to argue with you about beef?//

          அப்படின்ன மாட்டுக்கறிய பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதுறது ஏன்.மாட்டு கறி திங்கிறவன வெறுப்பது ஏன்.

      • Dear Anbu

        What is “Kaai Adithal”? I dont understand. Nejamaave puriyamaa dhaan kekaren.

        I have not seen myself any farming activities. But I presume and assume all agricultural activities are nowadays carried out by machines and tractors, not anymore by bulls??

        We should not inflict any suffering to other living beings. Slaughtering cows are great sinful acts. So is all the other slaughters. Please dont justify it.

        Nowadays anycase only tractors are used right? Oru sigappu colour thundu pottundu oruthar tractora ottindu povar. Vaai niraya oru passionate sirippu…….adha sirippu dhaan mutton shopsla aadu vetravartayum irukkum………enna dhaan avaalukku adhula elaam oru thirpthiyo therila………Ishwaro rakshadhu.

        • தன்னை சுற்றி உலகம் எப்படி இயங்குதுன்னு தெரியாத,தெரிஞ்சுக்க முயற்சியும் பண்ணாம, அதையே ஒரு பெருமையாவும் சொல்லிக்கிற உங்கள மாதிரி கிணத்து தவளைஎல்லாம் எங்களுக்கு அறிவுரை சொல்ல கிளம்பிடுறீங்க.

          Castration ன்னா என்னான்னு google ல தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.அது எப்படி வேதனயாயிருக்குனு வடிவேலு கிட்டயும் கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

          http://video.google.com/videoplay?docid=4541296433234250690

          இந்திய விவசாயத்தில் ட்ராக்டர் மற்றும் மெசின் களின் பங்கை விட மாடுகளின் பங்களிப்பு அதிகம்..இந்த உபகரணங்கள் எல்லாம் கண்டுபிக்க முன்னால விவசாய விளைபொருள சாப்பிட்ட உங்க முன்னோரெல்லாம் இரக்கமற்ற அரக்கர்கள்னு சொல்வீங்களா.

          எப்படி பார்த்தாலும் மாட்டை கொன்று தின்பவனுக்கும் மாடுகளை வதைத்து விளைவிக்கும் பொருட்களை தின்பவனுக்கும் வித்தியாசம் ஒன்னுமில்ல.

          அதுக்காக நீங்க அரிசி வாங்குற கடையில இது மாடு உழுது விளைஞ்ச அரிசியா டிராக்டர் உழுது விளைஞ்சதா ன்னு கேட்டு வாங்கனும்னு கிளம்பிராதீங்க.அண்ணாச்சிகள் பாவம்.பொழச்சிட்டு போறாங்க.இப்படிலாம் கேள்வி கேட்டு அவர்களை ஒரு வழி ஆக்கிறாதீங்க.

          • Dear Anbu

            I am not really proud of being ignorant on ” kaai adithal”.

            Actually I am pained in heart to know any suffering by living being.

            Atleast dont kill the animals. This world will always have good and bad. We need to be picky and choose only good, is not it? Sarvam vasudeva mayam jagathu: . Everything is God only, but one should shun away from evil.

            You can be vegeterian, dont worry about some unknown tribes, but why you are not trying to be vegeterian? If possible, I have always used organic food in US , but its not full fledged in India yet. You have a point that we are inflicting suffering to bulls. But atleast you need not get proud of it.

            Per anbunu vechundu yen swamy slaughter panradha support panrel? kaai adikardhe periya paavam dhaan. Illenu sollala. But dont slaughter adding insult to injury.

            yennaku ungalavaalta puduchadhu naraya undu………aanaa human beingta mattum dhaan unga humanity elaam irukkum……not with other creatures….

            I have always found this — you people are extreme always. When you start showing love , you have always shown more but not that always you have that inclination

            Even assuming labour class is only rough and tough due to their physical need, elite people who have been uplifted by so called reforms which are nothing but a deform to someone else, these elite section coming to the net world can atleast try to be softer right? yen oru maadhiri slang, pesa porathukku mathavaalukku bayam varaa maadiri?

            infact I speak only with selective people like you who are not abusive and who has atleast some form of good will to others…….my friend warns me not to visit these sites lest I may get burnt in the heart by their abusive langauge…..

            braahmnaa apdinaale veruppunu vechukaadheer…………vandhu therunjukkum….ippo dhaan samathuvam vandhaache…….upanishad padikardhu….kekarthukke hidhamaa 108 upanishads irukku……yen enemity paaratanum………

            sari kovil poga vendaam…kurukkalnaa aagaadhu…….evlavlo ashrams irukke?…..elaarum yenna poli saamiyaaraa? vendaam sasthrothamaa irukara madangal vendaam……..modern dayla vandha ashrams like aurobindo, ramanshram iruke? angeyelaam poi avaa books ennanu dhaan padikardhu…

            you cannot reform the whole world…..but atleast please change yourself….

            By all means serve everybody, but dont think human beings are the only living beings that are sensitive to pain…….animals are more sensitive to pain than us……

            I have an agenda to visit the beef shops and kindly requesting them to change their profession……….Let us see how that goes….atleast if I have changed the thinking of one slaughterer, that is a small success I celebrate

            the way of brahminical life is not unadoptable to you……..its not about society, its about the individual’s upliftment in his thinking standards…….

            its not about living in luxury….its about thinking in high standards, not living with a lower taste and a cheap thinking attitude…..

          • // எப்படி பார்த்தாலும் மாட்டை கொன்று தின்பவனுக்கும் மாடுகளை வதைத்து விளைவிக்கும் பொருட்களை தின்பவனுக்கும் வித்தியாசம் ஒன்னுமில்ல. //

            பெருமளவு விவசாயிகள் வண்டி/உழு மாடுகளை பாசத்துடன் நடத்துவதைக் கண்டிருக்கிறேன்.

            மற்றபடி, மாடுகளை வாட்டி வதைத்து பலன் நுகர்வோர்க்கும், அடிமாடுகளாய் விற்பவர்களுக்கும்,

            அவற்றைக் கொன்று மாட்டிறைச்சியை உண்ணும் நிலையில் உள்ளவர்களுக்கும்,

            இடையில் இரக்கம் என்ற அடிப்படையில் வித்தியாசம் ஏதும் இல்லாதபோது தீண்டாமை என்ற பேதத்தை நுழைப்பது சரியானதில்லை என்பது அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சிந்திப்பவர்களுக்குப் புரியும்.

  12. சொதப்பல் பதிவு. பிராமணர்களைக் குறைக் கூறுவதென்று முடிவாகிவிட்டது. அதற்கு சரியான கதையையாவது தேர்ந்தெடுத்திருக்கலாமே.

    சம்பவம் #1: மீனை மாங்காய் என்று பொய்யுரைத்தல். உண்மை தெரிந்தவரிடம் அவருக்கு அருவருக்கத்தக்க விஷயம் எனத் தெரிந்தும் வாங்க வலியுறுத்தல்

    சம்பவம் #2: புரியாத சுலோகம் என்றாலும் யாரையும் ஏமாற்றவில்லை. சுலோகம் சமஸ்கிருதம் தான் என்று அனைவருக்கும் தெரியும். தெரிந்தே தான் அங்கு சென்று கூடியிருக்கின்றனர். ஏமாற்றி அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லவில்லை. கர்நாடக சங்கீதம் பிடிக்காதென்று வர மறுத்தவரை வலுக்கட்டாயமாக கச்சேரிக்கு அழைத்து செல்லவில்லை.

    இதில் என்ன ஒற்றுமை கண்டீர். இராமமூர்த்தி அவர்களுக்கு திண்ணையில் காற்று வராததால் உள்ளே சென்றதை உங்கள் வெற்றியென்று நினைத்தது, இந்த கதையைப் பொறுத்தமட்டில் காக்கை அமர பனம்பழம் விழுந்த கதை தான். அடுத்த முறை பொறுத்தமான கதையைத் தேர்வு செய்யவும்.

  13. உங்கள் தளத்தில் சில நாட்களாக பின்னூட்ட எண்ணிக்கை குறைவாக உள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கென்று இப்படி ஒரு ஜாதிதுவேஷ பதிவு போட்டித்தான் கமெண்ட் எண்ணிக்கையைக் கூட்டவேண்டுமென்றால் உங்களுக்கும் தேர்தலின் போது ஜாதியை வைத்து ஓட்டுக் கேட்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை.

  14. //Vellaikaran kitta dhuttu vaangittu poi pracharam pannunappove dhaadi kara thathava vaayile suttrukkanum// -யாரு வெண்தாடி வேந்தரையா?

    //vettipaya thandavaalathula thala vechappove traina vitukkanum//மு.க வையா?

  15. Parpanium is worst. But this story is ill-logical. We have no right to ask them to eat fish, similarly we have no need to call them to our ‘own’ temple as a priest. So ignore them is feasible but insult them is idiotic.

    • ஏண்டாப்பா தருன்குமரா! அவாள் எப்பவுமே மத்தவாள மட்டமா பேசறது பாக்கறது எல்லாம் insult நு தோணலையா நோக்கு! மத்தபடி செல்லத்துரை பாத்திரம் ஒரு வெள்ளந்தியாதான் தோன்றது!

  16. ”வாங்கப் புடிக்காதவங்க கிட்ட மீனு மீனுன்னு கத்தறது தப்புன்னா, சமஸ்கிருதம்னா என்னன்னு தெரியாதவங்ககிட்ட போயி மைக்கசெட்டு போட்டு நீங்க நமகா, நமகான்னு கத்தறது மட்டும் சரியா? நீங்களே யோசிச்சு பாருங்க. அந்தத் தெருவுல இருக்கறவங்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. நீங்க கர்நாடக சங்கீதம் கச்சேரி வேற வெச்சீருக்கீங்க. இப்படி அவங்க விருப்பத்த மதிக்காம இதுதான் பாட்டு, இதுதான் வேதம்னு நீங்க திணிக்கறது மட்டும் எந்த வகையில சார் டெமாக்ரசி?”—இந்தியன் டெமாகரசின்னு சொல்லாம்மா போயிட்டாரே…..

  17. entha carnatic music kachcheri thinikka pattuthu,sanskritla mandiram solrathu oru ritual,adha yaaru yaaru mela thinichaanga,makkal atha yethukittu thana irukkanga.

    iyer poosari illatha koilum irukku,anga poga vendiyathu thaane.appadi oorla ulla aalunga ellarukkum pudikkalanna iyer poosariya irukka maatare.

    • பொங்கல் தீபாவளி போன்ற நாட்களில் பகுத்தறிவு பற்றி பேசும் கலைஞர் சன் தொலைக்காட்சிகளில்
      கூட கர்நாடிக் இசை இசைக்கப்படுகிறது . இது திணிப்பு அல்லையா.

    • நண்பர் சுப்ரமணி, சொல்வது சரி தான். அவர்கள் எப்போது சமஷ்க்ரிதத்தை திணித்தார்கள்.மட்ரவர்கள் படிக்க கூடாது என்ரு தான் தடுத்தார்கள். குரங்கின் கையில் கிடைத்த மாலை போல அவர்களிடம் மாட்டிக்கொண்டு நல்ல அதிர்வு வளம் கொண்ட மொழி அழிந்தே விட்ட‌து தான் உண்மை.

  18. சபாஷ் வினவு! கமெண்டுகள் குறைஞ்சுகிட்டு வரும்போதே நினைச்சேன், இந்த மாதிரி ஒரு மொக்க பதிவு வரும்னு, கரெக்டா வந்திருச்சே. பார்முலா நல்லா வொர்க் அவுட் ஆகுதுல்ல! அய்யர்கள திட்டனும் இல்ல முஸ்லிம்கள திட்டனும். “விளிம்பு மனிதர்கள்” என்ன செஞ்சாலும் நியாப்படுத்தணும். மகஇக பண்ற லூசுத்தனங்களை ஆதரிக்கனும்.

    வெளங்கிரும்!

  19. பிறக்கும் போதே பூநூலுடன் பிறந்திருந்தால் அவன் உயர்ந்தவன் என்று ஏற்றுக்கொள்ளலாம் பாவம் அவனும் அம்மனமாகத்தான் பிறக்கிறான்.

    அவனை தலையிலிருந்து பிறக்க வைத்த மயிரு கடவுள் ஏன் பூநூலுடன் பிறக்ககவைக்க மடியாதா?

    (ஒருவனை தாழ்ந்தவன் என்று கடவுளே சொன்னால் அவனை மயிரு கடவுள் என்று சொல்வது தவறில்லையே).

    பூநூல் வெளியே தெரியவேண்டும் என்பதற்காகவே சட்டப்போடாம சுத்துகிறான், சரி மாமிகள் ஏன் பூநூல் போடுவதில்லை அவர்களும் பிராமீன் தானே?

    • Avargal poonal poduvathaal ungal veetil aduppu eriyavillaye illai un kundi veengi vittathaa?

      Vendumendral neeyum un ammavum pottu kollungal, yaar thadukka povathu?

      Nee kudumbathudan poonal pottu kolvathodu nikkamal, ungalathu poolin uruppin nuniyayum arathu kondu, athodu nillamal sevappu nira thaadiyai valarthu kondu, piraku alleluya paadalgalai paadi kondu, pinnar amman kovilil sevappu nira paavadaiyil koozhai kudithu vittu anaithu mathangalaiyum saathikaliyum aravanaippayaaka.. Amen!!

  20. அது சரி…
    பிராமனர்கள் இப்படித்தான் இருப்போம்…
    என்ன செய்ய முடியும் உங்களைப்போன்ற வெட்டிப்பயல்களால்?

  21. மற்ற எல்லா மதத்து கடவுளும் ஏற்ற தாழ்வில்லாமல் சமமாக மனித குலத்தை படைத்திருக்கும் போது நம் மத கடவுள் நம்மை நான்கு வர்ணங்களாக படைத்துவிட்டு அதை கீதையில் தன் வார்த்தையால் உறுதி செய்து இருந்தாலும் எதுவும் மேல் கீழ் என்று அவர் சொல்லவில்லை.நாம் தான் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் பெரிது சிறிது என்று பிரிந்து வாழ்கிறோம்.மனதில் கை வைத்து சொல்லுங்கள் தலித்கள் நால் வர்ணத்தில் இல்லை தானே ஏன்?அவர்கள் புத்த சமண வழியில் இருந்தவர்கள் மற்றும் நம் கடவுள்களை வணங்க மாட்டார்கள் நாமொன்றும் அவர்களை கோவிலுக்குள் தடுக்கவில்லை. நம் வழியில் அவர்கள் இல்லாததால் பொது எதிரி ஆனார்கள்.அதை நாம் காலப்போக்கில் சரி செய்தால் போயிற்று அதற்காக நம் பாரத புண்ணிய பூமியில் தோன்றிய பழம் பெரும் மதத்தை வெறுக்கலாமா?

  22. தனக்கு தானே சூனியம் வைக்கிற பதிவு இது… 🙂

    செத்துப்போன குழி தோண்டி புதைக்கப்பட்ட கம்யுனிச புரட்சி கருத்துக்களை அறவே விரும்பாத ஜனநாயக நாட்டின் மக்கள் மத்தியில் விற்பனை செய்ய முயன்று தோற்றுகொன்டிருக்கும் உங்களின் செயல், செல்லத்துரை மற்றும் இரமாமூர்த்தியின் செயலை விட மோசமானது…

    • சரியாகச்சொன்னீர்கள்…
      மனித இனத்தில் பல மனிதர்களிடம் கானப்படும் குறைகளை…என்னவோ பிராமனர்கள் மட்டும் குறை உள்ளவர்கள் என்று சித்தரிக்கும் நியோ பார்ப்பன கூட்டம் இங்குள்ள பலர்…

      இந்த நியோ பார்ப்பனர்கள் செய்வது சரி என்றால்…ஜாதி வேறுபாடும் சரி என்று ஆகிவடும்…

      அவாள் அவாள் என்று தூற்றி இவாளும் அவாள் ஆன கூத்து தான் இங்கு நடக்கிறது…

  23. \\அவாள் அவாள் என்று தூற்றி இவாளும் அவாள் ஆன கூத்து தான் இங்கு நடக்கிறது\\

    ஒரு வேலை அனைவரும் பிராமணி ஆகிவிட்டால் சமத்துவம் வந்து விடும் என்று நினைதிருப்போரோ என்னவோ 🙂

    பிராமணீய ஒழிப்பு என்ற போர்வையில் கட்சி வளர்த்த பல திராவிட கட்சிகளை பார்த்து போட்டு கொண்ட சூடு
    பிராமணீய ஒழிப்பு என்ற போர்வையில் கம்யுனிசம் வளர்க்க விழைகின்றனர் இந்த கருப்பு கம்யுனிஸ்டுகள்..

    திரவிடமாயினும், கம்யுனிசமாயினும், சோஷலிசமாயினும், ரெவேல்யுசனிசமாயினும், எச்டேரிமிசமாயினும் அது பிராமணிய வதை என்ற அர்த்தத்தில் தான் தமிழகத்தில் புரிந்து கொள்ளபடுவது தமிழனின் தலை விதி…

    • மிகச்சரியான விஷயம் மனிதன், தேவனும் கவுண்டனும் வன்னியனும் தலித்கள் மீது சாதி வெறி கொடுமைகளை தினமும் நடத்தி விட்டு இங்கே வந்து பிராமணனை திட்டுவது மிகப்பெரிய மொள்ளமாரித்தனம்.என்னைக்கோ அக்ரகாரத்தில் நடந்ததை கண்டிக்கும் இவர்கள் இன்றைக்கு சேரிகள் மீது அவ்வளவு கரிசனம் காட்ட வேண்டியது தானே?அங்கே வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு இவர்கள் எதாவது உதவி செய்வார்களா?வெள்ளைக்காரன் வந்து பாத்துட்டு பதறி சத்துணவு பற்றாக்குறையால் வரும் வியாதி என்று அவன் நாட்டில் இருந்து உடனடியாக வரவழைத்த மருந்தையும் உணவு பொருட்களையும் கூட…..வேண்டாம்.

  24. இந்த தலத்தில் தங்களது பதிப்புகளை பதிவு செய்ய வரும் பிராமணர்களுக்கு சில கண்டன அறிக்கைகள்:

    தையவு செய்து இனி தர்மபுரியில் உள்ள தலித் வீடுகளை எரிக்கதீர்!

    அரசு துறையில் உள்ள முக்கால்வாசி பணிகளில் அமர்ந்து கொண்டும் வேலை செய்யாமல் இருந்து நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீர்!

    வழிப்பறி, கற்பழித்தல், பெண்களை எவெ டீசிங் செய்தல், அசிட் ஊற்றுதல், கள்ள காதல் கொலைகள் போன்ற மிக மோசமான வேளைகளில் ஈடுபடும் நீங்கள் இனியாவது திருந்த வேண்டும்!

    தயவு செய்து கர்நாடக சங்கீதத்தை கச்சேரியில் பாடுதல், பூணல் போட்டு கொள்ளுதல் போன்ற செயல்களால் எங்களை வேருபெற்றதீர்கள்.. அதற்கு பதில் டபுள் மீனிங் ஜோக்குகள் மற்றும் திரைப்பட குத்து டான்ஸ் போட்டால் அது எங்களை பாதிக்காது!

    வேளையில் எப்படி ஸின்செராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களிடத்தில் இருந்து கற்று கொள்ள வேண்டும்!

    இனியும் நீங்கள் பொது இடங்களில் குண்டு வெய்பது, திருட்டு தனம்மாக கேமரா வெய்து பெண்களை அசிங்கமாக படம் பிடித்து இன்டர்நெட்டில் விடுவது, திருட்டு CD கலை விற்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டால் எங்களுக்கு மிக்க கோபம் வரும்.

    செட்டியார், முதலியார், கௌண்டர் ஜாதியை சேர்ந்த மக்கள் தாங்கள் பொருளாதார ரீதியாக நல்ல இடத்தில உள்ளோம் என்பதை உணர்ந்து எப்படி தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று உதறினார்கள், ஆனால் நீங்களோ இன்னும் BC சமுகத்தில் இருந்து கொண்டு எங்களது வேலை வாய்ப்புகளை பரிக்கரீர்கள். இது என்னே ஞாயம்.

    அதென்ன நீங்கள் மட்டும் சைவ உணவை சாபிடுவது. நாங்கள் ஒரு சபதம் எடுத்துள்ளோம். நீங்க சைவ உணவை சாப்பிட்டால் உங்களை மட்ட படுத்துவோம், இதுவே அசைவ உணவை சாபிட்டால் கேவல படுத்துவோம்!

    நீங்கள் நலிந்த பொருளாதார சூழ்நிலையிலிருந்து வந்து நோபெல் பரிசு பெற்றாலும் அல்லது ராமானுஜம், வாஞ்சிநாதன் போன்று சாதித்தாலும் உங்களை அங்கீகரிக்க மாட்டோம், ஏனென்றால் நீ பார்பனன். ராஜாவும் கனியும் தான் எங்கள் சொத்து!

Leave a Reply to Vinodh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க