privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சிறுகதை: அபின்

-

ஏனங்குடிக்குப் புதிதாக மருத்துவனாக வந்தபோது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சாலையை வேடிக்கை பார்ப்பது எனக்கு வழக்கம்.

மாட்டின் வாலை முறுக்கிவிட்டு அதன் பின்னே நடப்பவர்கள்; வெள்ளை வெளேரென்ற ஆட்டுக் குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடப்பவர்கள்; தெருவில் யாரையாவது பார்த்து விட்டால் தலையைக் குனிந்து செல்லம் இளம் பெண்கள்; என்னைப் பார்த்தால் நிறுத்தி வணக்கம் செலுத்திவிட்டுப் போகும் பால்காரர்கள்; புது டாக்டர் எப்படி இருக்கிறார் என ஆவலுடன் என் வீட்டை நோட்டமிடுபவர்கள்….

அப்போதுதான் முதல் முறையாக அப்பாசைக் கவனித்தேன். காற்றில் மிதப்பது போல மெதுவாக மண்ணெண்ணெய் வண்டியை மிதித்துக் கொண்டு செல்வார். அவரது வலது காலை அழுக்கான சேலைத் துணியால் சுற்றியிருந்தார்.

அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் நான் இருந்த போது அதே கட்டுடன் அப்பாஸ் ஒரு நாள் என்னைச் சந்தித்தார்.

”கால்ல என்னங்க?” என்றேன்.

”கால்ல புண்ணுங்க சார்” என்றவாறே தரையில் உட்கார்ந்து மெல்ல தனது துணிக்கட்டை அவிழ்க்க ஆரம்பித்தார்.

இரண்டங்குல அளவிற்குப் பெரிய புண் நடு உள்ளங்காலில் இருந்தது. ஆழமான அந்தப் புண்ணின் உள்பகுதி கறுத்து இருந்தது. டார்ச் விளக்குடன் நான் குனிந்தபோது புண்ணிலிருந்து ஒரு வித நாற்றம் பரவியதை உணர முடிந்தது. இத்தனைப் பெரிய புண்ணுடன் எப்படி இவர் மண்ணெண்ணெய் வண்டியை மிதிக்கிறார் என வருத்தமாக இருந்தது.

”புண்ல வலி இல்லீங்களா?” என்றேன்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க” என்றவாறு தனது இருகைகளாலும் புண்ணை அழுத்தி எனக்குக் காட்டினார்.

”அப்பாஸ் அண்ணனுக்கு நாலஞ்சு வருஷமா சக்கரை வியாதி இருக்கு சார். அதான் புண்ணு ஆற மாட்டேங்குது. நாங்களும் என்னன்னவோ மருந்து கொடுத்துப் பார்த்துட்டோம்” என்றார் மருத்துவனை ஊழியர் ராதாகிருஷ்ணன்.

அப்பாஸ் அண்ணன் என்று அவர் அப்பாசை மரியாதையாக விளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. வியப்பிற்கு விளக்கம் உடனே கிடைத்தது.

”சார் உங்களுக்கு ஏதுனா மண்ணெண்ணை வேணுமின்னா அண்ணங்கிட்ட சொல்லுங்க, வீட்ல வந்து கொடுக்கச் சொல்லறேன்” என்றார்.

அதற்குள் அப்பாஸ் ”இந்தப் புண் ஆறுமா சார்?” என்றார்; அவரது பார்வையில் நம்பிக்கையின்மை தென்பட்டது.

”ஆற வைக்கலாங்க. ஆனா தினம் நீங்க இன்சுலின் ஊசி போட்டுக்கணும்; அப்புறம் நீங்க மண்ணெண்ணெய் வண்டி மிதிக்கக் கூடாது. உங்க தொழிலை கொஞ்சம் மாத்திக்கணும். அப்போதுதான் சீக்கிரம் ஆறும்,” என்றேன்.

”ஊசி இங்கேயே போட்டுக்கலாமா?”

”இல்லீங்க இதமாதிரி கிராமப்புறத்து ஆஸ்பத்திரிக்கெல்லாம் இன்சுலின் தரமாட்டாங்க. நீங்கதான் வாங்கிட்டு வரணும்” என்றேன்.

தலையாட்டிய அப்பாஸ் அண்ணனை ஊழியர் அன்புடன் இழுத்துச் சென்றார். அன்று அப்பாசிடம் வாங்கும் மண்ணெண்ணெய்க்கு அவர் காசு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்….

______________________________

எனினும் சில நாட்கள் தொடர்ந்து கட்டு கட்டி வந்ததில் புண் ஆறுவதைப் பார்க்க அப்பாசிற்கு என் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். எப்படியோ ஒரு நாள் இன்சுலின் ஊசியுடன் வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியாயினும் ஒரு ஏழைத் தொழிலாளியின் நோய் குணமானால் சரி என்பது போல் ”இன்சுலின் நீங்களே வாங்கிட்டீங்களா பரவாயில்லை. ஆனா ஊசி 40 ரூபாய்க்கு மேல் இருக்குமே.”

”ஆமாங்க ஆனா புண்ணு இப்போ ஆறி வருதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஊசி போட்டுக்கிட்டா சீக்கிரமே நல்லாயிடுமில்ல.”

அப்பாஸ் ஊசி போட்டுக் கொண்டு கட்டும் அறைக்கு நகர்ந்ததும் ராதாகிருஷ்ணன் என் அருகில் வந்து கிசுகிசுப்பாக ”சார் வடக்குத் தெரு போயிருக்கீங்கல்ல. மூக்கா வீடுன்னு சொல்வாங்கள்ள,” என்றார். நான் புரியாது விழித்தேன்.

”சார் அந்த தெருவுல வீட்டு முன் பக்கம், காம்பௌண்டு சுவரு எல்லாத்திலேயும் கறுப்பு கலர்ல டைல்ஸ் பதிச்சிருப்பாங்கல்ல சார்.”

”ரெண்டு பேருக்கும் ஒரே அம்மா. ரெண்டு அப்பா சார்” என்றார்.

இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஒருவர் தனது வீட்டின் சுற்றுச் சுவர்களைக் கூட ராஜஸ்தானத்து டைல்ஸ்களால் அழகுபடுத்துகிறார். இன்னொருவர் ஆறாத புண்ணுடன் கூட வண்டியோட்டிப் பிழைக்கிறார். ஏன் இப்படி?

எல்லோரும் ஒரே தட்டில் உணவு உண்ணும் சகோதரத்துவம் எங்கே போனது? நான் சந்தேகத்தை எழுப்பிய உடன் ராதா ”அதெல்லாம் சும்மா சார்! சும்மானாச்சுக்கும் கல்யாணம்னா எல்லாம் அப்படி செய்வாங்க. அவ்வளவுதான்; ஏனங்குடியில் எவ்வளவு முசுலீம்கள் ஏழைகளா இருக்காங்க. எல்லாம் சொல்லுவாங்க சார். ஆனா நம்பள மாதிரிதான்” என்று என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

­­­­­­­­­­­­­­­_________________________________

ஓரிரு மாதங்கள் கழித்து அப்பாஸ் தன் மனைவியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தர். ”ரொம்ப நன்றிங்க சார். புண்ணு இப்போ நல்லா ஆறிடுச்சு சார்,” அப்பாஸின் கண்களில் ஈரம். ”நீங்க எந்தம்பி மாதிரி, ஆறு மாசமாக இந்த புண்ணை வச்சிகிட்டு வண்டி ஓட்றதுக்கு சிரமப்பட்டார். நீங்க நல்லா இருக்கணும்” என்றார் அப்பாசின் மனைவி.

தொடர்ந்து அப்பாசின் மனைவி ”இன்சுலின் ஊசி போதுமா? இல்ல இன்னும் போடணுங்களா?” என்றார்.

அவருக்கு மாத்திரையில ரத்தத்தில் சர்க்கரை குறையறது இல்ல,அதனால ஊசிய தொடர்ந்து போடுறதுதான் நல்லது” என்றேன்.

”ரொம்ப கஷ்டமாக இருக்கது தம்பி; ஊசி ரொம்ப வெலையாவுது; நீங்கதான் எப்படியாவது அரசாங்கத்துல சொல்லி ஊசி வாங்கி போட்டுவுடுங்க” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார்.

நான் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல; கையாலாகாத ஒரு அரசாங்க ஊழியன் என அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

__________________________________

அன்று இரவு ஜான் முகமதுவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜான் முகமது என்னைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதமான மனிதர். சற்றும் களங்கமில்லாத சிரிப்பு அவர் தாடிக்குப் பின்னிருந்து வந்து கொண்டேயிருக்கும். என்னை மதிப்பவர். என்மேல் பிரியம் உள்ளவர். ஐந்து வேளை தொழுகை செய்யும் அவர் நாத்திகனான என்னுடன் கை கோர்த்துக் கொள்வார். என் தந்தையின் வயதையொத்த ஒருவருடன் சமமாக கைகோர்த்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அவர் வீட்டின் எதிரிலிருக்கும் சந்தில் அப்பாஸ் திரும்புவதை தற்செயலாக கவனித்தேன்.

”என்ன மண்ணெண்ணெய்க்கார அப்பாஸ் இங்க போறாரு” என்றேன் அவரிடம்.

”உங்களுக்குத் தெரியாதா, அப்பாஸ் வீடு அங்கதான் இருக்கு” என்றார் ஜான் முகமது.

அந்த இருளில் சந்திற்கு அப்பால் இருந்த அப்பாசின் வீடு எனக்குப் புலப்படவில்லை.

”அப்பாசின் அண்ணன் வீடு வடக்குத் தெருவில இருக்குன்னாங்களே?” என்றேன்.

”ஆமா பாகப் பிரிவினையிலே அவங்க கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க.”

”நீங்க இருந்துமா இப்பிடி செஞ்சுட்டாங்க” என்றேனே.

”இல்ல, நான் ஏனங்குடி ஜமாத்துல்ல. அது கரைப்பாக்கம் ஆதலையூர் ஜமாத்” என்றார் ஜான் முகமது.

”எல்லோரும் சகோதரர்ன்னு சொல்றீங்க ஆனா ஜமாத்துக்கு ஜமாத் இப்படி வேறுபாடா?”

புன்னகையுடன் “என்ன செய்யிறது, காலம் மாறிப் போச்சு. தப்புப் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாங்கூட அவன் அண்ணன்கிட்ட சொல்லிப் பார்த்தேன். கேக்கலை, சரி நம்ம வீட்டுக்கு எதிரில இருக்கிற சந்துல அந்த பழைய வீடு சும்மா கெடந்துச்சு. அதான் இங்க கொண்டு வச்சுருக்கேன்” என்றார். அவரின் பணிவு என்னை நெகிழ வைத்தது.

”அப்பாசுக்கு தினம் இன்சுலின் போடணும், பாவம் ஊசி வாங்க காசு இல்ல போலிருக்கு. நீங்க உங்க ஜமாத்துல சொல்லி கொஞ்சம் ஊசி வாங்கி கொடுக்க முடியுமா?” என்றேன்.

”ஜமாத் என்னங்க, ஜமாத் இதுக்கு, நானே வாங்கி தர்றேன்” என்றார். சொன்னபடியே ஊசியும் வாங்கிக் கொடுத்தனுப்பினார். பலமுறை ஏழை முஸ்லீம் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போதெல்லாம் அவரை நாடியிருக்கிறேன். மனம் கோணாமல் அவரும் உதவியிருக்கிறார். ஆனால் எத்தனைக் காலம்தான் அடுத்தவர் தயவில் வாழ முடியும்? அப்பாஸ் ஊசி போட வருவது மெல்ல மெல்ல நின்று போயிற்று.

அதிகமான வேலைப் பளுவின் காரணமாகவும், மனிதர்களை அறைக்குள் மட்டுமே சந்திக்கும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் நானும் அப்பாசை மறந்து போனேன்.

____________________________________

ஓரிரு வருடங்கள் கழிந்திருக்கலாம். ஒரு நாள் மருத்தவமனையின் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்தபோது வாசலில் திடீரென ஒரே கூட்டம். கூச்சல். மருத்துவமனை ஊழியர்கள் கட, கடவென வாசல் பக்கம் ஓடினார்கள். கூட்டத்தை விலக்கியவாறு ஒரு சிலர் ‘வழியவிடுங்க’ என்றவாறு ஒரு பெண்ணை இரத்தம் ஒழுக தூக்கி வந்தனர். நிறம் மங்கிய அப்பெண்ணின் துப்பட்டா முழுவதும் ரத்தம் நிறைந்திருந்தது. அருகில் வந்ததும் தெரிந்தது அந்தப் பெண் அப்பாசின் மனைவி என்று.

மருத்துவமனை வராண்டாவில் படுக்கச் செய்து ”என்னவாயிற்று” எனக் கேட்டேன். ”நம்ம ரெண்டாம் நம்பர் பஸ்ல அடிபட்டுட்டாங்க சார்” என்றார் ஒருவர். புடவையை சற்று விலக்கி கால்களைப் பார்த்தேன். வலது கால் முழுக்க சிதைந்து போயிருந்தது. கூட்டத்திலிருந்து பலர் ‘உச்’ கொட்டினார்கள். ஏதும் செய்ய இயலாத நிலையில் அவரை உடனடியாக நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். மருத்துவமனை வளாகத்தில் இருந்து கூட்டம் கலைந்து கூச்சல் ஓய்ந்து அமைதி நிலவியது.

”எப்படி ஆச்சுங்க ஆக்சிடெண்ட்?” என்றேன் ராதாவிடம். அதற்குள் கடைத்தெருவிற்குப் போய் நிறைய தகவல்கள் சேகரித்து வந்திருந்தார்.

”அப்பாசுக்கு ரொம்ப முடியாம போய் நாகப்பட்டணம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேத்துட்டாங்களாம். இது அவருக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போயிருக்கு. ஏறுறதுக்குள்ளே பஸ்ஸை எடுத்துட்டானாம் அந்த டிரைவர். ரொம்ப மோசம் சார். எப்பவுமே ஓவர் ஸ்பீடு. பஸ்ஸ எடுத்த வேகத்துக்கு இந்தம்மா கீழே விழுந்து கால் பின் சக்கரத்துல மாட்டிக்கிச்சு.” நேரில் பார்த்தவர் போல் இதைச் சொன்னார்.

”அப்பாசுக்கு என்னவாம்” என்றேன் மெதுவாக.

”ரொம்ப மோசமா இருக்காராம் சார். அன்னிக்கு ஒரு நாள் நானே பார்த்தேன். மூஞ்சி, கை, காலெல்லாம் வீங்கி கிடந்தது. பிழைக்க மாட்டார் சார். கஷ்டம்! ஆனா பாவம் சார் ரெண்டும் சின்ன சின்ன பிள்ளைங்க. அதுங்களை காப்பாத்த வேண்டியது இந்த அம்மாதான் அதுக்குள்ள இவங்களுக்கு இப்படி ஆயிருச்சே” என்றார்.

சமூகத்தின் அவலம் ஒரு சிலருக்கு வெறும் செய்தியாகவே உள்ளது. இந்தச் சமூகத்தின் மீது மக்களை கோபம் கொள்ளாமலிருக்கச் செய்வது எது என யோசிக்கச் சொன்னது. யோசிக்க யோசிக்க தலைவலி அதிகமாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றேன்.

என் மனைவி எனது முகவாட்டத்தைப் பார்த்தும் முகம் மாறினாள். மருத்துவமனையில் நடைபெறும் சோகங்களை அங்கேயே மறந்துவிட வேண்டும் என்பது அவளது கட்சி. வாழ்க்கையில் வசதியான வீட்டில் பிறந்து செல்லப் பெண்ணாக வளர்ந்து வாழ்பவளுக்கு வாழ்வின் துன்பங்களும் துயரங்களும் தெரிந்திருக்க நியாயமில்லையோ? வருத்தத்திலேயே படுத்து உறங்கிப் போனேன்.

________________________________

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஐப்பசி மாதமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் தமிழ் மாதங்கள் எங்கே தெரிகிறது. ஆனால் வெளியே மழை மட்டும் ஐப்பசி மாதத்தை நினைவில் வைத்துக்கொண்டு கொட்டு, கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. மழையைப் பார்த்தபோது எனக்கும், நோயாளிகளுக்கும் இடையில் திரை விரித்தது போல இருந்தது. எனக்கு இது போன்றவையே ஓய்வு நாட்கள். அப்போது அந்த மழையிலும் குடை பிடித்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது. ஜான் முகமதுவின் வீட்டு வாசலில் அடிக்கடி பார்த்த முகமாக தெரிந்தது. ”என்ன விஷயம்?” என்றேன். அவசரமாக வரச்சொல்லி ஜான்முகமதுதான் சொல்லி அனுப்பியிருந்தார்.

வாசலில் ஆட்டுக் குட்டிகளுடன் உட்கார்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்தார் ஜான் முகமது. என்னைக் கண்டதும் பரபரப்பானார். ”என்னது நடந்தே வந்துட்டீங்க. செல்லியிருந்தா நான் ஆட்டோ அனுப்பியிருப்பேன்ல” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

காப்பி கொடுத்தவாறே ”நம்ம அப்பாசிற்கு ரொம்ப சீரியசா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? அதுக்குத்தான் கூப்பிட்டு அனுப்பிச்சேன்” என்றார்.

”ஏன்? என்னவாச்சு? அவரோட பெண்டாட்டி கூட பஸ்ஸில அடிபட்டாங்களே? அவங்க எப்படி இருக்காங்க?”

”அப்பாசுக்கு உடம்பு முடியாம இருந்து நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில சேத்து இருந்துச்சு. இடையே இந்த அம்மா வேற பஸ்ஸில அடிப்பட்டு அங்கேயே சேர்த்துருந்தாங்க. பாக்கிறதுக்கு ஆளில்ல, பணமும் இல்ல. அதனால ரெண்டு பேரையும் இங்கு கொண்டு வந்துட்டாங்க. பிள்ளைங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க அதுலயும் பெரிய பொண்ணு வயசுக்கு வந்துருச்சி.  அதுதான் ஆத்தாவுக்கும் அப்பனுக்கும் கஞ்சிவைச்சு கொடுக்குது; இடையில ஒரு வாரமா பெய்யிற மழையில அவங்க குடியிருக்கிற வீடு பாதி இடிஞ்சி விழுந்துடுச்சி; ரொம்ப பாவமா இருக்கு சார்.”

அப்பாசின் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்களைக் கோர்வையாக நினைவுபடுத்திப் பார்க்கும் போது எனக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாயிற்று. மெல்ல எழுந்து ஒரே குடையின் கீழ் இருவரும் அப்பாசின் வீட்டை நோக்கி நடக்கலானோம்.

இப்போதுதான் அப்பாசின் வீட்டை முதன் முதலாகப் பார்க்கிறேன். வீட்டினுள் நுழைந்து பார்ப்பதற்கு கதவுகளும், ஜன்னல்களும், தேவைற்றது என்பது போல முன் சுவர் இடிந்து பார்வைக்கு வழிவிட்டிருந்தது. கிழிந்து கையால் தைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கின் உதவியால் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மறைவுக்குப் பின்னாலிருந்து அப்பாசின் வயதுக்கு வந்த பெண்ணின் முகம் எட்டிப் பார்த்தது.

எந்த பிரக்ஞையும் இல்லாமல் குப்பை போன்று அப்பாஸ் படுத்திருந்தார்; படுக்க வைக்கப்பட்டிருந்தார். முகம் வெள்ளை வெளேரேன வெளிறிவிட்டிருந்தது. கை, கால்கள் முகம் முழுவதும் அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தது. அப்பாசின் அருகில் அமர்ந்து ”அப்பாஸ்! அப்பாஸ்!” என தட்டி எழுப்ப முயற்சி செய்தேன்.

மிகவும் பிரயத்தப்பட்டு கண்களைத் திறக்க முயற்சி செய்தார். கண்களின் இமைகள் மிகவும் வீங்கியிருந்தன. அப்பாஸ் கண்களைத் திறக்கச் சிரம்ப்பட்டார். கடைசியில் பிறை போன்று மெல்லிய கீற்றாக கண்களைத் திறந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது போலத் தோன்றிற்று. நான் நாடித்துடிப்பைப் பார்க்க கை வைத்தேன். நாடியினைத் தொட்டு அறிய முடியாத அளவிற்கு கை வீங்கி இருந்தது. நான் மெல்ல எழுந்தேன்.

”டயபடிக் நெப்ரோபசி வந்து ரீனல் பெய்லியர் ஆயிடுச்ச. சிறுநீரகம் முழுவதும் வலுவிழந்து பழுதடைந்துவிட்டது. என்னைவிட மரணம் அவருக்கு நெருக்கமாக உள்ளது. இனி ஏதும் செய்வதற்கில்லை” ஜான்முகமதுவிடம் தனியே தெரிவித்தேன்.

”சரி போகலாம் வாங்க” என்றார் அவர். அப்பாசிடம் சொல்லிக் கொள்வதற்காக அவரை மீண்டும் எழுப்பினேன். இந்த முறை சற்று உடனேயே கண்களைத் திறந்தார்.

”அப்பாஸ் நான் போயிட்டு வர்றேன்; கவலைப்படாதீங்க நல்லாயிடும்” என்று பொய் சொல்லி வைத்தேன்.

சட்டென்று அப்பாஸ் முகத்தில் ஒரு புன்சிரிப்பு பரவியது. ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லக் கூடியது அந்தச் சிரிப்பு. மெல்ல வாயைத் திறந்து அரபியிலோ, உருதிலோ ஏதோ கூறினார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அதுதான் அப்பாஸ் உச்சரித்த கடைசி வார்த்தைகளாக இருக்கும். எனக்கு அப்பாஸ் என்ன சொன்னார் என அறிய ஆவலாக இருந்தது.

ஜான் முகமதுவின் வீட்டிற்குத் திரும்பியதுமே அப்பாஸ் கூறியது என்ன என அவரிடம் கேட்டேன்.

”இன்னா லில்லாஹி லஇன்னா இலைஹி ராஜிஹன்; தவக்கல்லத்து அலல்லாஹ்; அல்ஹம்மது இபில்லாஹ்!” என்றார்.

அப்படியென்றால்?”

”நாம் அல்லாவுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம். இப்போதும் அந்த அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டேன். எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்பதாகக் கூறினார். எனக்கு அவரிடம் விடைபெற மனமில்லை.

மெல்ல எழுந்து தெருவில் நடக்கலானேன. அவருக்கும் என் மனதின் கேள்விகள் புரிந்திருக்க வேண்டும். மௌனமாக ஆட்டுக் குட்டிகளுடன் அமர்ந்து விட்டார். எனக்குள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகள்.

இத்தனைக் கஷ்டத்திலும் அப்பாசுக்கு ஏன் கோபம் வரவில்லை?

வசதியான மகனுடன் சேர்ந்து கொண்டு பெற்ற தாய் மறந்த போதும், வளமற்ற சகோதரன் வண்டியிழுத்துப் பிழைத்தபோதும் வருத்தமுறாத சகோதரனை நினைத்த போதும், வாழ வழியற்று விரட்டும் சமூகத்தினை நினைத்த போதும், இறுதி நேரத்தில்கூட ஆறுதல்தராத உறவுகளை நினைத்த போதும், அடிமேல் அடிஅடித்த விதியின் மீதும், அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி அவருக்கு இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?

யோசித்தவாறு ஏனங்குடியின் நடுத்தெருப் பள்ளி வாசலைக் கடந்த போது அந்த மழையிலும் பகல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இது நஞ்சல்லவா? இந்த நஞ்சு அபின் அல்லவா? இது கிறங்க வைக்கும், மயங்க வைக்கும், ஏங்க வைக்கும் நஞ்சல்லவா?

இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்?

மழையின் இரைச்சல் கூடியது. பாங்கோசை அதில் நனைந்து அடங்கியது.

____________________________________________________

–   மருத்துவர். சிவசுப்பிரமணிய ஜெயசேகர்புதிய கலாச்சாரம், டிசம்பர் 1999.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. அமெரிக்காவின் ஒரு அலுவலகத்தில்: அவன் எந்தத் தவறும் செய்யவில்லை. அவனுடைய மேலதிகாரிகளால் தெரிந்தோ தெரியாமலோ தவறான குற்றம் சுமத்தப் பெற்று அவன் வேலையிலிருந்து நீக்கப்படுகிறான். இப்போது அவனுக்கு வருவாய்க்கான வழி அடைக்கப்பட்டு, அவன் கடனாக வாங்கிய வீடு, கார் முதலானவை பறிபோய் குடும்பத்தோடு நடுத்தெருவுக்கு வரும் நிலைமையாகி விட்டது. இனி வாழ வழியே இல்லை. செய்யாத தவறுக்கு பாரம் சுமப்பதை நினைக்க நினைக்க, தன்னை நீக்கிய மேலதிகாரிகள் மீதும், அதைத் தடுக்க சக்தியிருந்தும் கண்டும் காணாமல் இருந்த சக ஊழியர்கள் மீதும் அவனுக்கு கோபம் பீறிட்டது. அவன் என்ன செய்தான்? கையிலிருந்த பணத்தைக் கொண்டு ஒரு துப்பாக்கி வாங்கினான். அவன் வேலை செய்த அலுவலகம் சென்றான். தன் மேலதிகாரியைச் சுட்டுக் கொன்றான். அதன்பின் அலுவலகத்தில் கண்ணில் காண்பவர்களை எல்லாம் சுட்டுக் கொன்றான். பின் தன்னையும் சுட்டு மாய்த்துக் கொண்டான்.

    இதுவே அவன் ஒரு நல்ல முஸ்லீமாக வளர்க்கப் பட்டிருந்தால், அது நமக்கு இறைவன் அருளிய வேலை. தவறு செய்தவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். நான் என்னால் இயன்றவரை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டேன். இதுதான் இறைச்சித்தம் போலிருக்கிறது இந்த உலகில் இல்லாவிட்டாலும் மறுவுலகில் அதற்கான நீதி எனக்கு கிட்டும். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். தவக்கல்த்து அலல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்!’ (‘நாம் அல்லாவுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம். இப்போதும் அந்த அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டேன். எல்லாப் புகழும் அல்லாவுக்கே’) என்று சொல்லி விட்டு தன் வாழ்க்கையை தொடர்வான்.

    எது கம்யூனிஸ்டுகளான உங்களுக்குப் பலவீனமாகத் தெரிகிறதோ அதுவே ஒரு முஸ்லீமின் பலமாகிறது.

    • //இதுவே அவன் ஒரு நல்ல முஸ்லீமாக வளர்க்கப் பட்டிருந்தால், அது நமக்கு இறைவன் அருளிய வேலை. தவறு செய்தவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். நான் என்னால் இயன்றவரை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டேன். இதுதான் இறைச்சித்தம் போலிருக்கிறது இந்த உலகில் இல்லாவிட்டாலும் மறுவுலகில் அதற்கான நீதி எனக்கு கிட்டும்//
      இந்த நியதி பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட போதும் (அதை இடித்தது இன்னொரு அபின் குரூப்பின் வெறி செயல் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை), டென்மார்க்கில் கருத்து படம் வெளியிட்ட பத்திரிக்கையை படித்த போதும், லூத்தைப் பற்றி விமர்சித்து எழுதிய பதிவை கண்ட போதும், அதை முக புத்தகத்தில் ஒரு தோழர் பகிர்ந்ததை அறிந்த போதும் ஏன் வரவில்லை? ஒரு ஏழை தொழிலாளி சமூகத்தால், தான் பாதிக்கப்படும் போது மட்டுமே அவனுக்கு வர வேண்டும் என்பது என்ன நீதி

      • //நான் என்னால் இயன்றவரை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டேன்.//
        என்ற வரியை படிக்க மறந்து விட்டீர்களா?
        என் ஒட்டகத்தை கட்டிப்போட்டு விட்டு இறைவா! இதை உன் பாதுகாவலில் விடுகிறேன் என துஆ செய் என்பதும் முஸ்லீமின் நம்பிக்கை. ஒன்றுமே செய்யாமல் இறைவன் உதவியை நாடுவதல்ல.
        மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முயற்சிக்காத வரையில் இறைவனும் அவர்களை மாற்றுவதில்லை

        • //நான் என்னால் இயன்றவரை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டேன்.//
          மன்னிக்கவும்! இந்த வரி எங்கு வருகிறது என் சுட்ட முடியுமா ?
          நான் பணியில் இருக்கிறேன். கிடைத்த கேப்பில் தேடினேன் கிடைக்கவில்லை
          நன்றி !

        • //மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முயற்சிக்காத வரையில் இறைவனும் அவர்களை மாற்றுவதில்லை//

          சுல்தான்,

          சொல்லப்பட்டுள்ள கதையில் அப்பாஸின் கதை வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், சொல்லப்படாத பகுதியில் அவருடைய குடும்பம் சந்திக்க இருக்கும் துயரங்கள் இருக்கிறதே, இந்த சுரண்டலமைப்பில் அதைப் பற்றி நினைத்துப்பார்த்தால் படுபயங்கரமாக இருக்கிறது. இப்படித் தொடரும் அவலங்களுக்கு குரான்தான் தீர்வு என்றால் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள தயாரில்லை என்றாகிறது.

          மனிதர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பது இனி குரானைப் படித்தால் நடக்காது. குரானை மட்டும் படித்துக்கொண்டே இருந்தால் மண்ணெணெய்க்கார அப்பாஸின் கையறு நிலைதான் தீர்வாக கிடைக்கும்.

      • கரிகாலான், ஒருவன் தன் குடும்பத்தால் பாதிக்கப்பட்டு, சகிப்புத்தன்மையுடன நடந்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். சிறிது யோசித்துப்பாருஙகள். அவன் கோபப்பட்டிருந்தால் கொலை தானே முடிவாயிருக்கும்.
        உங்கள் வீட்டை ஒருவன் இடிக்கின்றான், உங்கள் குடும்பத்தில் நீங்கள் உயிராய் மதிக்கும் ஒருவரை கிண்டலடித்து ஒருவன் கார்ட்டூன் வரைகிறான், உங்கள் குடும்பத்தாரை கேவலமாக விம்ர்சிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? எதெற்கெடுத்தாலும் மாற்று சமூகத்தை நாம் ஏன் குறை சொல்ல வேண்டும்? நம்முடைய சுதந்திர எல்லை தாண்டி நாம் ஏன் அடுத்தவரின் சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்க வேண்டும்? நம்முடைய அபினுக்குள் (மதத்திற்குள்) எத்தனை பிரிவு அபிஙள் இருக்கிறது. அதை களைய நாம் முயற்சி செய்வோம் வாருங்கள்.

        • அய்யா அறிவுள்ளவரே,

          //ஒருவன் தன் குடும்பத்தால் பாதிக்கப்பட்டு, சகிப்புத்தன்மையுடன நடந்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். சிறிது யோசித்துப்பாருஙகள்.அவன் கோபப்பட்டிருந்தால் கொலை தானே முடிவாயிருக்கும். //

          //உங்கள் வீட்டை ஒருவன் இடிக்கின்றான், உங்கள் குடும்பத்தில் நீங்கள் உயிராய் மதிக்கும் ஒருவரை கிண்டலடித்து ஒருவன் கார்ட்டூன் வரைகிறான், உங்கள் குடும்பத்தாரை கேவலமாக விம்ர்சிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்?//

          இந்த இரண்டு கருத்தையும் நீங்கள் தான் எழுதி உள்ளீர்கள்.

          இது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா

          //நம்முடைய சுதந்திர எல்லை தாண்டி நாம் ஏன் அடுத்தவரின் சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்க வேண்டும்?//

          அப்படி என்றால் தாவாப் பணி செய்வதுவும் அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கும் செயல் என்பதாக எடுத்து கொள்ளலாமா

          • கரிகாலன் என்ற புத்தியுள்ள அரசனின் பெயரைக்கொண்டவரே, இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் கவனியுங்கள்.
            தன் குடும்பம் சிதைந்து போகக்கூடாது என்ற நிலைப்பாட்டில், அவர் சார்ந்திருக்கும் மதக்கோட்பாட்டின் படி அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கலாம்.
            தன் குடும்பத்தையே காலிக்கூட்டம் சிதைக்கும் போது அதே சகிப்புத் தன்மையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது எப்படி அறிவார்ந்த செயலாகும்.
            எந்தப் பணி யார் செய்தாலும், நாம் மாறும்படி நம் மதத்தில் ஏன் இத்தனை கோளாறு இருக்கிறது.

            • //எந்தப் பணி யார் செய்தாலும், நாம் மாறும்படி நம் மதத்தில் ஏன் இத்தனை கோளாறு இருக்கிறது//
              மிக்க நன்றி நண்பரே! என் கருத்தோடு ஒத்து போகும் உங்களோடு நான் ஏன் விவாதம் செய்ய வேண்டும்.

              முந்தைய என் கருத்து,
              திரு சுல்தானின் கீழ்கண்ட கருத்திற்கு பதில்

              //தவறு செய்தவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். நான் என்னால் இயன்றவரை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டேன். இதுதான் இறைச்சித்தம் போலிருக்கிறது இந்த உலகில் இல்லாவிட்டாலும் மறுவுலகில் அதற்கான நீதி எனக்கு கிட்டும்//

              புரிந்துணர்வுக்கு நன்றி!

              • மேலும், உங்களை அறிவுள்ளவர் என்று சொன்னது, உங்கள் profil பெயரை சுருக்கி அழைத்தேன் நிச்சயமாக உங்களை கிண்டல் செய்ய அல்ல

    • If everyone follows the same thing what followed by the american then there will be fear of death among who is doing wrong things(Iam just taking ur example).. Instead just believing in ALLAH and going on with the miserable life will only encourage them to do more wrong and make more other people to suffer…
      Y we call religion as ABIN is becos every religion acts in the DONKEY CARROT STICK approach by showing HEAVEN(which no one knows wheather it exists or not) it stops people from revolting against evil

      • hey jenil don’t blame the religions. if everybody think that got is not here every one in the world will do more wrong and it will make more other people to suffer. bcos people like you not beliving god they will do what ever they wish. cos they all thinking there is no one here to punish us if we do the mistake. but beliving in allah make us to control our selves.bcos we know if we do the mistake allah will punish us. bcos of that beliving is the one make us to not to do the mistake.

  2. //அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?//

    ஏன் கோபம் வரவேண்டும்…? ஓன்றுமட்டும் புரிகிறது இஸ்லாமிய மார்கத்தின் மீது தங்களுக்கு கோபம் அளவுக்கு அதிகமாக உள்ளது

  3. மதம் அபின். சரி தான். உண்மைதான்.
    ஆனால் கதையில் இருப்பது துரோகம். விபத்து.
    சகோதரனை மதிக்காத துரோகத்துக்கும் விபத்துக்கும் மத அபின் எப்படி பொறுப்பாக முடியும் ?

  4. இசுலாம் மட்டுமல்ல எல்லா மதமும் அபின் தான்.
    கிறிஸ்தவரான என் தாய் தந்தை ஒரே மகன் நான். என் தாய் , தன் நினைத்தபடி மறுமகளை, என் மனைவியை நடத்த, நான் விடாததால் இரவு 12.30க்கு என்னையும் மனைவி மற்றும் 7 வயது பையனை விட்டை வெளிய அனுப்பினார்.

    இத்தனைக்கும் நான் வாங்கிய சம்பளத்தை அப்படியே கவருடன் அவரிடம் கொடுத்துவந்தேன். கையில் 10 ரூபாய் இல்லாமல் வெளியே வந்தோம்.

    இதில் மதத்தை எங்கே இழுக்க..?

    • Hello Vino,
      If There is a correct way (Solution) to handle the above incident,
      Then there is link for the above issue with the way of life(Religion).
      So everything is connected to our way of life.
      Check why she (mother) didn’t like your wife ,ask for the reason why ?
      May be your environment made her to do.So we have to change the environment.
      Otherwise your wife may do the same to your Daughter-in-law.So we need the solution for all the issue, search the truth ..you will definitely will find it….with the help of Super Power(GOD)…

  5. Thanks to share this article with us.
    Nice one to share.
    You may ask this question yourself.
    Only thing i understand is , Islam is not properly implemented here in India.
    If they believe in god and Islam ,no one let this brother down to death.
    This is not the problem of the way of life( religion).
    This is the problem of people,who doesn’t follow Islam.
    We are in the country of different way of life (religion). So we can’t implement immediate all the good things in this way of life.It will take time.
    It take long time to spread good morals compare to bad things.

  6. //”ஆமா பாகப் பிரிவினையிலே அவங்க கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க.”//

    இஸ்லாத்தை விமர்சனம் செய்பவனை வாழவிடாமல் துரத்துவதில் சகோதரர்களாக ஒன்றிணையும் அனைத்துலக ஜமாத்தும் பாகப்பிரிவினை விசயத்தில் கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க என நழுவிக்கொள்வது ஏன்? இதில் ஜமாத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?

    • பொறுப்பு இருக்கிறது .ஆனால் யார் இதனை சரியான அணுகுமுறையில் செய்து தருவார்களோ அவர்களை அப்பாஸ் அணுகியிருக்க வேண்டும் அல்லவா?அழுகின்ற குழந்தைதான் பால் குடிக்கும் .
      எத்தனையோ நீதி மன்றங்களில் பணம் வெற்றி பெறவில்லையா?

  7. //நழுவிக்கொள்வது ஏன்? இதில் ஜமாத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?//

    இதில் ஜமாத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என்று எங்கு கூறினார் ஜான் முகமது?
    அவர் கூறியது தன்னுடைய ஜமாத்தின் பரிபாலனைக்கு அப்பால் உள்ளதால் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை எனவே கூறியிருக்கிறார்.
    எல்லோரையும் ஒரே கூண்டிற்குள் அடைக்காதீர்கள். அபினி போதையில் இருந்தாலும் மனிதாபிமானம், நீதி, நியாயம் உடையவர்கள் இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜான் முகமது.

  8. அப்பாஸ் என்ற இடத்தில் எந்த பெயரை இட்டாலும் நமது சமூகம் சார்ந்த நிகழ்வாகவே தெரியும்.இருப்பினும் கடையநல்லூர் போன்ற நிகழ்வுகளை மாற்ற்வும்,புரிதலை உருவாக்கவும் இது போன்ற பதிவுகள் துணை செய்யும்.

    இந்தியாவில் இஸ்லாம் சரியாக பின்பற்றப்படுவதில்லை என காண நேர்ந்தது.இந்தியா மட்டுமல்ல,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் கூட இஸ்லாமியத்தின் விழுமியங்களை தொலைத்து விட்டே இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன.வளைகுடா நாடுகள் தங்கள் கலாச்சாரத்தையும் விட்டு விடாமல் மேற்கத்திய கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.மெக்காவின் காரணமாக சவுதி அரேபியா விதிவிலக்காக இருக்க கூடும்.

    • In my opinion, it is not only religion, every ideology can become opium if they are absolutized. Even the ideology called Communism also is not exceptional to it. The history bears witness to that.

    • மிகச் சரியாக சொன்னீர்கள் ராஜ நடராஜன். பெயரும் மதமும் தான் மாறியிருக்கிறது. மற்ற மதமாக இருந்திருந்தால் அரிவாள் வெட்டாகத்தான் இருந்திருக்கும்.
      இசை மேதை இளையராஜாவுக்கே, அவர் ஊரில், நம் ஜாதி என்ற அபினால் இருக்கும் மரியாதையை இதே வினவில் சமீபத்தில் நான் படித்தேன். இப்பொழுதெல்லாம் இளையராஜா பாட்டைக் கேட்கும்போதெல்லாம் மனது இலேசாவதற்கு பதில், மிகவும் பாரமாகிறது.

  9. ABIN kathayeen nadai arumai kathayeen nayagan abbas meethu irrakkam kattavaitha
    kathayeen asiriyar is good but world la practical illtha communism thaan kathaikku
    periya – so 0/100 marks. communisum oru pothaithan athu ulagil ethaiyum sathikkavillai

  10. /// அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது? ////

    தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ”நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் :2:156)

    ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:155)

    உண்மை இஸ்லாமியன், இறை அச்சம் உள்ளவன் உடன் பிறந்தாரையும் மற்றவர்களையும் ஏமாற்ற மாட்டான். மேலும் அல்லாஹ்(இறைவன்) மேல் எந்த சோதனையிலும், துன்பத்திலும் நம்பிக்கை இழக்கவும் மாட்டான். அழியக்கூடிய உலகில் பொறுத்துக் கொண்டால் அழியாத உலகில் நிலை பெற்று வாழவே. இறைவனை மறுக்கும் கூட்டத்தாருக்கு இந்த உண்மை புரியமால் பிதற்றி கொண்டு இருக்கிறார்கள்.

  11. அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
    சகோதரர் வினவிற்கும் மற்ற சகோதரர்களுக்கும் குர்ஆனில் (இறை வேதத்தில்) மனிதர்களே என்று இறைவன் அழைக்கிறான். அரபிகளே, இஸ்லாமியர்களே, என்று அழைக்கவில்லை. ஓட்டு மொத்த உலக மனிதர்களையும் அழைத்து சொல்கிறான். கீழ்க்கண்ட வசனங்களை மனமுரண்படாமல் படித்து சிந்திக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் குர்ஆனை ஆய்வு செய்யும்படியயும் கேட்டுக்கொள்கிறேன்.

    மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல்குர்ஆன் : 2:21 )

    மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1 )

    மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன் : 4:170 )

    (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். . (அல்குர்ஆன் : 7:10)

  12. //// இது நஞ்சல்லவா? இந்த நஞ்சு அபின் அல்லவா? இது கிறங்க வைக்கும், மயங்க வைக்கும், ஏங்க வைக்கும் நஞ்சல்லவா?
    இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்?////

    சகோதரர் வினவிற்கும் மற்ற சகோதரர்களுக்கும் : இறைவனை பின்பற்றாதவர்களைப் பற்றி இறைவன் சொல்வதையும் தாங்கள் முன் வைக்கிறேன்.

    மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் : 2:170 )

    நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 3:10)

    அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22 )

    சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் (இறைவனின்) குர்ஆனை ஆய்வு செய்யும்படி அன்புடன் அழைக்கிறேன்.

  13. உங்கள் மீது அமைதி நிலவுவதாக…

    நல்ல இறைப்பணி பதிவு. எங்களுடைய வேலையை நீங்களும் சேர்ந்து செய்கின்றீர்கள் எனும் போது மகிழ்வாக இருக்கின்றது.

    நன்றி..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    • ஆசிக்,

      கதை என்ன சொல்கிறது? ஒரு மனிதன் தனது அவல நிலைக்கு எதிராக, தனது நியாயமான உயிர் வாழும் நிலைக்காகப் போராடுவதை, போராடும் உணர்வை மதங்கள் குறிப்பாக இப்பதிவில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பீற்றிக்கொள்ளும் இஸ்லாமிய மதமும் கூட மழுங்கடிக்கும் வேலையையே செய்கின்றன. இதையே அபின் என்று கம்யூனிசம் சொல்கிறது. அதாவது மனிதனின் உணர்வை மழுங்கடிக்கும் போதை வஸ்துகளைப் போன்றதுதான் மதம் என்று மிகச் சரியாக சொல்கிறது கம்யூனிசம். இந்த உண்மையைச் சொன்ன கம்யூனிசம் எப்படி தோற்கும் என்பதுதான் கேள்வி?
      இதுதான் உங்களுடைய தாவாப் பணி என்றால் எங்களுக்கும் சந்தோசம்தான்.

  14. புதிய கலாச்சாரம் இதழில் வெளியான அந்த கதை இறுதியில் அப்பாசு தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வதாக முடியும்.இந்த கதை ஒரு மருத்துவரின் அனுபவத்தில் கண்ட உண்மை நிகழ்வு போன்ற தோற்றத்தை தருகிறது.[எனக்குத்தான் அப்படி தோன்றுகிறதோ என்ற ஐயமும் வருகிறது].

    • திப்பு,
      இந்தக் கதை 99ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்தது. அதை அப்படியே எதையும் மாற்றாமல் வெளியிட்டிருக்கிறோம். அந்த காலகட்டத்தில் மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் அவரது மருத்துவ அனுபவங்களை வைத்து பல உண்மைக் கதைகளை எழுதியிருக்கிறார். இதுவும் அதில் ஒன்று. மற்ற கதைகளையும் அவ்வப்போது வெளியிடுகிறோம். நன்றி.

  15. சொல்வதற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் உண்மை இதுவே.
    இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமை கொடுத்திருந்தாலும் நடைமுறையில்
    ஆணாதிக்கம் இருக்கவே செய்கிறது.இந்த கட்டுரை முறைப்படி பார்த்தல்
    இஸ்லாத்திலும் ஆணாதிக்கம் என்றே வந்திருக்க வேண்டும்.
    அப்படி வந்தாலும் அது சம்பந்தப்பட்ட இஸ்லாமியர்களின் தவறே அன்றி
    இஸ்லாத்தின் தவறல்ல.ஒரு வகுப்பில் இருக்கும் நாற்ப்பது மாணவர்களுக்கு
    நல்லதையே கற்பிக்கிறார் ஆசிரியர்.அதில் ஐந்து மாணவர்கள்
    கெட்டவராக உருப்பெற்றால் அது ஆசிரியரின் தவறா?
    அல்லது மாணவர்களின் தவறா?
    என் தாய் வழி பாட்டனாருக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவி
    இறந்ததும் (கவனிக்க:இறந்ததும்) மறுமணம் செய்து கொண்டார்.என் தாய் முதல்
    மனைவியின் ஒரே புதல்வி.இரண்டாம் மனைவிக்கு நான்கு பிள்ளைகள்.
    காலம் உருண்டோடி விட்டது.எங்களுக்குள்,அதாவது ஒட்டுமொத்த குடும்பத்தில்
    எந்த குழப்பமும் இல்லை.நாங்கள் ஐந்து பேர் எங்கள் தாயை நிறைவாக
    வைத்திருந்தாலும் இளைய தாரத்தின் ஆண்பிள்ளைகள் இரண்டு பேரும்
    எங்களுடன் போட்டி போட்டு கொண்டு என் தாயை பார்த்து கொள்கிறார்கள்.
    இது தனிமனித நேர்மை,மற்றும் ஒழுக்கம் தொடர்பான விசயமே தவிர
    பின்பற்றும் மதம் சம்பந்தமானனதல்ல.
    கடைசியாக ஒரு முக்கிய விஷயம் முதியோர் காப்பகத்தில்
    பிராமணர்கள் தான் மெஜாரிட்டி.ஏனைய சாதியோரும் குறிப்பிடும்
    அளவுக்கு பங்கு வகிக்கிறார்கள்.இது போன்ற இல்லங்களில்
    வசிக்கும் வயதான முஸ்லீம்களின் எண்ணிக்கையை அல்லது சவிகிதத்தை
    கட்டுரையாளரோ அல்லது வினவோ தெரிவித்தால் தன்யனாவேன்.

    • // கடைசியாக ஒரு முக்கிய விஷயம் முதியோர் காப்பகத்தில்
      பிராமணர்கள் தான் மெஜாரிட்டி. //

      எந்த முதியோர் காப்பகத்தில்?! பிராமணர்கள் நடத்தும் முதியோர் காப்பகத்திலா??! இல்லையென்றால் வீதியில் பிச்சையெடுக்கும் முதியோர்களின் சாதி, மதக் கணக்கெடுப்பை நடத்துங்கள், அதுதானே முடியும் நம்மால்..

      மேலும், 10 பிள்ளைகளில் ஒன்றாவது வைத்துக் காப்பாற்றாதா?!!! 🙂

  16. பூமிப் பந்தில் கடிகார சுற்றுப்படி அணையாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாங்கு சப்தத்தை அணைக்க முயற்சித்தால் தோல்வி உங்களுக்குத்தான் என்பதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்,.இது போன்ற கேணத்தனமான கதைகளை எழுத வேண்டாம் என அன்புடனும் கேட்டுக் கொள்கிறேன்.
    அது சரி..இந்த தவ்ஹீத் ஜமாஅத் காரங்க உங்களை விவாதத்திற்கு கூப்பிடறாங்களே…அதுவும் உங்க போது உடமை கொள்கையை உங்கள் மனைவி மார்( ?)களோடு தொடர்பு படுத்தி சொல்கிறார்களே….வினவு வில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா சவாலை சந்திக்க?

    • Mr Feroz,
      There are lot of “Annmahan” in the left wing all over the India. So only the
      most number of left wing communist get killed by the Indian state than any other political outfits. Communist are the only one “Annmahan” raised their fist and BOLDLY TELL their views and they never hide it. they ROSE and RAISED against the BABRI MASJID demolisiton. They are the people who are braving everyday attacks from the government and other goons in defending the RIGHTS of Minorities and other tribal people. They put all effots to bring justice to Gujarat victims. they are the one CONTINUOSLY opposing MODI and his agents.

      Honest and peace loving people should critizise the article and only comment about what is written in the article.

      If the great communist Russia had not sacrificed 2 million communist lives (ANMAHANS as you wish) the whole world would plunged in to darkness.

      all over the world COMMUNIST ONLY COMMUNIST HAVE THE RIGHT TO DAY THAT THEY ARE THE LEADING PERSONS WHO GAVE THEIR DEAR LIFE THROUGH SACRIFICE FOR THE CAUSE OF HUMANITY. RELIGIOUS FUNDAMENTALS ARE ALL SAME : WHAT IS THEY HAVE IN COMMON : = NO TOLERENCE TO ANY ALTERNATIVE THOUGHT IS THEIR CORE F O R M U L A .
      COMMUNIST “AAN MAGANS” ARE ALL SAME : WHAT IS COMMON THEY HAVE IS = THEY NEVER FEAR THE STATE,RELIGIOUS GOONS OR CORPORATE GANGS. THEY ARE READY TO GIVE THEIR LIFE TO CREATE TO FAIR AND HONEST WORLD.

  17. ஜி.வெங்கடேசன் கதைகளுக்காக கற்பனைகளுக்காக அனுதாபப்படுவதை விட ,நீங்கள் உண்மையாக அனுதாப் பட ஜி..ஹெச் சென்றால் இந்தகதையைவிட துயரமானவர்கள் ,பரிதாபத்துக்குரியர்கள் நிறையவே உள்ளனர் .அங்கு சென்று உண்மை கண்ணீர் வடிக்கலாம் .அதையும் விஞ்சும் ஈரங்கள் நெஞ்சில் இருந்தால் அவர்களுக்கு தாராளமாக் பண உதவிகள் செய்யலாம்.

  18. டாகடர் நல்லவராக இருந்தால் இந்த சோக அனுபவங்களை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து அவர்களுக்கு உதவிட அழைப்பு விடுத்திருக்க வேண்டும் .இது போன்ற எண்ணற்ற ஏழை மக்கள் மத வேறுபாடு இன்றி நிறையவே இருக்கிறர்கள் .அவர்களை கிறித்தவ அபின்கள் மருத்துமனை மூலம் சேவை செய்துவருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் அமைப்பும் தன்னால் இயன்ற அளவுகள் மருத்துவ உதவிகள் ,ரத்த தான முகாம்கள் ,அவசர இரத்த உதவிகள் ,செய்து வருகின்றனர்.முதியோர் இல்லம் நடத்தி கைவிடப்பட்ட முதியவர்களை பாதுகாத்து வருகிறோம் .அதையெல்லாம் மிகைப்படுத்தி கதையாக்கி ,ச்ச்ஹு கொட்டவைக்கவில்லை . கதை கூறிய டாகடர் அரசுவிடம் வாங்கிய ஊதியத்திற்கு உண்மையாக வேலை பார்த்து இருக்கிறார்.இதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை.

      • கம்யூனிஸம் பிரவுன்சுகர் இல்லையா?
        கேட்குது பாரு கேள்வி

        • //கம்யூனிஸம் பிரவுன்சுகர் இல்லையா?//

          அதை நீங்கதான் விளக்கோனும்

          • வெளக்கிருவோம்
            கம்யூனிஸ போதைக்கு ஆட்பட்டு செய்த கொலைகள் கொள்ளைகள்
            பித்தலாட்டங்கள் ஆல்லாத்தையும் வெளக்கி மொரட்டு பதிவு போட போகிறேன்
            அப்ப கள்ளமவுனம் சாதிக்காமல் வந்து எங்களை மாதிரி பதில் சொல்லுங்கோ சரியா?

          • லியோன் ட்ராட்ஸ்கி (Leon Trotsky)இவர் மெக்ஸிகோவில் ஒளிஞ்சுகிட்டு இருந்த தேடிப்பிடித்து கொன்றீர்களே? அந்த எந்தவகையான போதை?

            கம்யூனிஸாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துக் கொல்வது போதையில்லையா?

            • எதிர்க்க வேண்டும் என்பதற்கான அவதூறுகளுக்கெல்லாம் எந்த மாதிரி பதில் சொல்வது ஹைதர் அலி. கம்யூனிசத்தை எதிர்க்கும் உங்களது தலைக்கும் விலை பேசப்பட்டிருக்கிறதோ!

              • கம்யுனிஸ்ட்களிடம் அதிகாரமில்லை இருந்திருந்தால் நினைத்து பார்க்கவே பயமாக இருக்கு

                http://valaiyukam.blogspot.com/2012/03/blog-post_17.html இங்கே போயி படிச்சு பாருங்கே சும்மா சங்கம் வச்சதுக்கே ஏழைமக்களை இந்த ஆட்டு ஆட்டுறாய்ங்கே ஆட்சியே கிட்சியே புடுச்சுட்டா அவ்வளவுதான்

                • மக்களின் பங்கை அபகரித்தவர்கள், கம்யூனிஸ்டுகளின் அதிகாரத்தில் பயப்படவேண்டியவர்கள்தான். அந்தப் பங்கு உங்களிடத்திலும் இருக்கிறதா!

                  நீங்கள் பதிவின் உள்ளடக்கத்தை விட்டு விலகிக்கொண்டிருக்கிறீர்கள். பதிவைப் பற்றி பேசுங்களேன்.

                  • //கம்யூனிஸம் பிரவுன்சுகர் இல்லையா?//

                    //அதை நீங்கதான் விளக்கோனும்//

                    நீங்க தான் வெளக்க சொன்னீங்கே வெளக்கிட்டு இருக்கேன்

  19. பழைய ஆங்கிலேயே வரலாற்றை படித்து விட்டு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பார்கள் .
    மக்களின் உள்ளங்களை பார்த்துவிட்டு அபின் என்பார்கள்.
    இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் .ஆனால் இஸ்லாம் வளரும்

  20. தனது மதத்தில் சொல்லப்பட்டுல்லதை தெரியாதவர்கள் பலர் இருக்கும் போது மதத்தை குறை கூறி என்ன பயன்?
    சாந்தி மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். அது மட்டுமே மனிதனுடய எல்லா விவகாரங்களிலும் வழி காட்டியுள்ளது. நாத்திக வாதிகளுக்கு கசப்பாக இருக்கலாம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க.

    • //சாந்தி மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான்//

      இருக்கலாம் ஆனால் இப்ப பர்வீனாய் மாறியிருப்பாளே!
      இஸ்லாம் மார்க்கம் வந்ததும் பேரை மாத்திக்கணுமே
      😉

  21. இந்த மதம் கடவுள் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாதா?
    ஒருவேளை இந்த கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் எத்தனையோ உயிர்கள் இறந்து போகாமலாவது இருந்திருக்குமே!

    நாமெல்லாம் என்னதான் நண்பனாக, உயிராக பழகினாலும் நம்மால் ஒரளவுக்குமேல் உறவுக்கொள்ளமுடியாது ஏன் நெருங்கமுடியாது கூட முடியாது, சாதி, மதம் தடுத்துவிடும் எதற்காக இந்த பிரிவினை? அப்படி என்றால் அன்புகூட பொய்தானே? கடவுளால் வேறு என்ன நன்மை?

  22. when I was studying 7th standard, I was asked by mother to buy a tube light. I went to the shop and gave 100 rupees to the owner and asked for tube light and the person in the shop gave the bulb to me. The owner returned the change back to and I found he gave change for only 50 rupees. When I told him that i gave 100 rupees to him, that guy rejected it and started scolding in bad words and the shop keeper also started scolding me. The owner is saying see my cash box i don’t have single 100 rupees but he didn’t allow me to see it. I started crying but they didn’t bother. I came back home and told that I am keeping the change back in my mother’s purse and escaped from my mother without giving the change back to her directly. I never forget the words they abused me. even though it happened more than 20 years back still I remember the pain. As I lived in Muslim street for a long, I had lots of bad experiences with them. Still I have few good friends but percentage wise its nothing. Religion or caste is just a politics which help to cheat others by grouping themselves.

    I don’t have to tell that shop is owned by a Muslim. 🙂

  23. ஏன் தான் இந்த மதத்தைக் கட்டிக்கிட்டு அழறானுங்களோ தெரியலை.மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்நடந்தால் மதமும் தேவையில்லை:ஒரு ம..ரும் தேவைஇல்லை.மதம் என்னும் தீயில் விழுந்து சாகும் களுக்காக நீங்கள் ஏன் ஒரு கட்டுரையை எழுதிநேரத்தை வீணடிக்கிறீர்களோ தெரியலை.

    • ///எழுதிநேரத்தை வீணடிக்கிறீர்களோ தெரியலை.///

      நீங்க என்ன…. இதுக்கு பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணடிக்கிறீர் என்று தெரிந்து கொள்ளலாமா?

  24. idontcare///As I lived in Muslim street for a long, I had lots of bad experiences with them. Still I have few good friends but percentage wise its nothing. ///

    உலகம் முழுவதும் நல்லவர்கள் மிகவும் குறைவு.அதில் முஸ்லிம் தெருக்கள் மட்டும் விலக்கல்ல .நான் வாழும் நகரம் அனைத்து சாதியினரும் சாதிவாரியாக வாழும் நகரம் .தமிழ் முஸ்லிம்கள் உருது முஸ்லிம்கள் ,சைவ வேளாளர் ,யாதவர் ,தேவேந்திர வேளாளர் ,விஸ்வகர்மா ,வணிக செட்டியார் ,தேவர்,பிராமணர் ,முதலியார்,சேனைத்தலைவர் ,வன்னியர் ,என்று எல்லாமக்களும் சாதிவாரியான தெருக்களில் வசித்து வருகின்றனர்.நீங்கள் சொல்லுவதை நிருபிக்க அந்த தெருக்களில் உள்ள மக்களிடம் விசாரித்து பாருங்கள். நிச்சயமாக் முஸ்லிம்கள் தெருவிலே நல்லவர்கள் அதிக சதவீதம் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

  25. Hi Ibrahim,

    I dont have to en quire anyone. I am matured enough to realize the people around me. I know communities have good and bad but my observation is negative in case of muslims. I can say very few people are good aor want to have good relation in muslim community. Most of them are selfish and they never bother about others.

    I am not saying they are selfish to other communities, they are selfish to thier own blood relations and i have seen it.

Leave a Reply to கரிகாலன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க