privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைமார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

மார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

-

பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

மார்ச் 23 – பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாள்.

இன்னும் எத்தனை வார்த்தைகள்
நமக்காக பேசியிருப்பானோ!
தூக்குக் கயிறு அதற்குள்
பகத்சிங்கின் தொண்டையை இறுக்கியது.

இன்னும்,
எத்தனை உணர்ச்சிகளை
உருவாக்கியிருப்பானோ!
அதற்குள்,
ராஜகுருவின் கண்களை
பிதுக்கிவிட்டது கயிறு.

இன்னும் எத்தனை தூரம்
மக்களைத் திரட்ட நடந்திருப்பானோ?
அதற்குள்,
துடித்து அடங்கிவிட்டன
சுகதேவின் கால்கள்.

சட்லெஜ் நதியில்
கரைந்த சாம்பல்
முல்லைப் பெரியாறில்
முழங்கும்போது,

லாகூர் சிறையில்
முழங்கிய குரல்கள்
இடிந்தகரையில்
எதிரொலிக்கும்போது,

அவர்கள் இல்லையென்று
எப்படிச் சொல்வது?

நாலாபக்கமும்
சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்
இடிந்தகரை
இன்னுமொரு ஜாலியன்வாலாபாக்காய்
நம் கண்ணில் தெரியுது!

கூட்டப்புள்ளியில் படகினிலேறி
சீருடை கயவரை
துடுப்பினில் ஒதுக்கி,
இடிந்தகரையினில் கால்வைக்கும் துணிச்சலில்
இருக்குது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு உணர்ச்சிகள்!

போராடும் மக்களுக்கு
மின்தடை, பஸ்தடை, பால்தடை
என வெறியாடும் போலீசின்
பயங்கரவாதத்துக்கு மத்தியில்,

உண்ணாவிரதப் பந்தலில்
தாயின் பசியறிந்து
தானும் நீரருந்தி
சகல படைகளுக்கும் சவால்விட்டு
பயமறியா குழந்தைகளின்
பார்க்கும் விழிகளில்
பகத்சிங்கின் போர்க்குணம் தெரியுது!

கொளுத்தும் வெயிலில்
கண்கள் செருகுது,
கண்ணிமை நுனியில்
பொழுதுகள் கருகுது

முன்னேறும் போலீசை தடுக்கும்
அந்த மூதாட்டியின்
போராட்டக் குரலில்…
சுகதேவின் தீவிரம் தெரியுது!

என்னமாய் படையைக் குவித்தாலும்
துரோகி கருணாநிதி, ஜெயலலிதா இணைந்தாலும்
தெலுங்கானா போராட்டம் போலவே
மார்க்சிஸ்டும், தா.பாவும் காட்டிக் கொடுத்தாலும்
இன்னுமென் உயிர் உள்ளவரை
அந்நியன் கால் மிதிபட்டு
என் தாய்மண் அழுக்கடைய
அனுமதியோம்! என
திண்ணமாய் போரிடும்
தெக்கத்திச் சீமை இளைஞர்களின் ஆவேசத்தில்
ராஜகுருவின் பிடிவாதம் தெறிக்கிறது!

சுற்றி வளைக்கப்பட்டது
முள்ளிவாய்க்கால்!
கழுத்து இறுக்கப்படுகிறது
இடிந்தகரை!

மறுகாலனியச் சுருக்கில்
மாட்டித் தவிக்கிறார்கள் மக்கள்.

இப்படியொரு சூழலில்,
சும்மாய் நினைவுகளை
சுமந்து நிற்பது
பகத்சிங்கிற்கு பாரம்!

நீ பகத்சிங்காய் இயங்குவதொன்றே
பகத்சிங் பார்வையில் நியாயம்!

__________________________________________

–  துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கண்களை கலங்க வைத்த கவிதை

    ///உண்ணாவிரதப் பந்தலில்
    தாயின் பசியறிந்து
    தானும் நீரருந்தி
    சகல படைகளுக்கும் சவால்விட்டு
    பயமறியா குழந்தைகளின்
    பார்க்கும் விழிகளில்
    பகத்சிங்கின் போர்க்குணம் தெரியுது!///

    இறுதியில் சாமானியர்கள் தான் வேல்வார்கள்
    பணக்காரனால் வானத்தை கூரையாக்கி ஒருபோதும்
    படுத்துறங்க முடியாது

  2. கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக, கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்! அதனால் அணு உலையை இழுத்துமூடு என போராடிவருகிறார்கள்.

    60 ஆண்டுகளாக துவங்கிய காலத்திலிருந்து, ஒருமுறை கூட வாய் திறக்காத இந்திய அணு சக்தி துறை இரண்டு, மூன்று சந்தேகங்களுக்கு மட்டும் பதில் சொல்லியது. பிறகு, எல்லாம் இராணுவ ரகசியம் என மற்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தது. இனி, பதில் சொல்ல முடியாது என திமிராக அறிவித்தது.

    அதன்பிறகு, ஜெ.வின் ஆட்டம். போராடும் மக்களுடன் உடன் இருப்பதாக முதலில் நம்பிக்கை ஊட்டினார். அணு உலை ஆதரவாளரான சீனிவாசனை போட்டு, அணு உலை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை பெற்றார். இடைதேர்தல் முடிந்த கையோடு, தனது பாசிச முகத்தை காட்டத்துவங்கிவிட்டார். மத்திய அரசு தன் பங்குக்கு இராணுவத்தையும், ஜெ. தன் பங்குக்கு காவல்துறையையும் போராடுகிற மக்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார்கள்.

    இந்திய ராணுவம் இந்தியாவை அந்திய சக்திகளிடம் காப்பாற்ற இருக்கிறது! காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்களே! இரண்டு கருத்துகளுமே நமது மனப்பிராந்தி என்பதை நடைமுறையில் நிரூபித்திருக்கின்றன. அந்த போராடும் வீரமான மக்கள் இந்த நெருக்கடியையும் நொறுக்கி, மீண்டுவருவார்கள். தள்ளி தள்ளி இருக்கிற நாம், அணு உலை எதிர்ப்பு போராட்டங்களை மாநிலம் முழுவதும் கட்டியமைக்கவேண்டும். வெகுஜன மக்கள் போராட்டங்கள் மூலம் தான் இதுவரை நமக்கான உரிமைகளை பாதுகாத்து இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    பகத்சிங், சுகதேவ், இராஜகுரு தோழர்களின் நினைவுநாளில், இந்த தொடர் போராட்டத்தில், திருநெல்வேலி மண்ணிலிருந்து இந்திய விடுதலைக்கு புதிய பகத்சிங்குகள் எழுவார்கள்.

  3. “ஆதிக்க அணு உலை அடங்காது இடிந்தகரை”இது வெறும்முன்னுரை தான்.
    இடிந்தகரை இப்போதுதான் சாரலடிக்க துவஙகி இருக்கிறது.
    இனி இடி இடிக்கும் மழைபெய்யும்
    அந்த வெள்ளம் சட்லெட் ஜ் நதியயை விட பெருக் கெடுத்து ஓடும்.
    அதில் மன்மோகன் கூட்டத்தின் முன்டாசு காணாமல் போகும்.
    சோனியாவின் குதிரைவால் கூட போகும்.
    ஜெயலலிதாவின் பார்ப்பனிய பச்சைத் துரோகம் சாம்பலாய் கரைந்து ஓடும்.
    முக்கால தமிழின துரோகி கருணாநிதியின் முழங்காலும் சேர்ந்து ஆடும்.
    மீண்டும் தோற்பதற்கு இது இன்னொரு தெலுங்கான அல்ல,
    ஆள் காட்டி மார்க்ஸிஸ்ட்டுகளும்,அண்டி நிற்கும் தா.பா க்களும்
    அலை வெள்ளத்தின் சருகாய் காணாமல் போவார்கள்.
    இடிந்த கரை இனி இடிக்கும் அந்த இடியில்
    இங்கு இல்லாத இறையாண்மை இல்லாமல் போகும்.

  4. Only Bhagat singh,Sukdev and Rajaguru are in your Matyrs list?
    What about Vanchinathan? Have you left him just because he is a brahmin?
    You call this as positive discrimination and being on the same lines as ‘periyar wigged Bharathiyar’..

  5. தியாகிகளின் நினைவுகள் கூட இல்லாததால் தான் நாடு சீரழிந்து வருகிறது

Leave a Reply to valipokken பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க