privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி!

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி!

-

 

தோழர்-சீனிவாசன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று (5.5.2012, சனிக்கிழமை) காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61. .

எழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.

பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

மகஇக-சீனிவாசன்-மரணம்
தோழர் சீனிவாசன்

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.

தொடர்புக்கு: செல்பேசி: 99411 75876

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

  1. தோழர் சீனிவாசனின் மறைவு பற்றி கேள்விப் பட்டவுடன் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அன்னாரின் மறைவு எமக்கெல்லாம் பேரிழப்பாகும். தோழருக்கு எனது சிவப்பஞ்சலி.

    • நல்ல வலுவான பெரிய உடலமைப்பு கொண்ட தோழர் சீனிவாசனை புற்றுநோய், எலும்பும் தோலுமாக மாற்றிவிட்டிருந்தது. கணயத்தில் ஏற்பட்ட பாதிப்பு அவரது கல்லீரல் செயல்பாட்டை முடக்கி உணவெதும் உட்கொள்ள முடியாத, கிட்டத்தட்ட மரணத்தின் வாசலை எட்டியிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் பார்க்கச் சென்றிருந்தேன்.

      படுக்கையில் கண்மூடியபடி துவண்டிருந்தார், மெல்ல அவரை தொட்டு எழுப்பினேன், கண் திறந்து பார்த்தார், அக் கண்கள் கதிரவனைப்போல மஞ்சள் நிறமாகிப் போயிருந்தது, ஆனாலும் கூர்மையாக என்னை பார்த்த்து அடையாளம் தெரிந்து கொண்டார். வலியை பொறுத்துக்கொண்டு புன்னகை செய்தார். அதைக் கண்டவுடன் என் கண்களில் அடக்கமுடியாமல் கண்ணீர் கொட்டத்துவங்கிவிட்டது. என் கரத்தை பற்றினார், 12 ஆண்டுகளுக்கு முன்னர் என்னைப் பற்றிய இரும்புப்பிடியல்ல அது. ஒரு குழந்தையின் பிடி.

      பேச நா எழவில்லை, பின்

      ”நாங்கெல்லாம் இருக்கோம் தோழர்” என்றேன்.,
      ”அந்த நம்பிக்கை எனக்கிருக்கு, அந்த நம்பிக்கையிலதான் நான் போறேன்” என்றார்

      அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை, அவரும் எதுவும் பேசவில்லை…

      போய் வாருங்கள் தோழர். சீனிவாசன், நாங்கள் இருக்கிறோம்!

      சிவப்பஞ்சலி!

  2. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் சார்பிலும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பிலும் தோழருக்கு எமது எம் சிவப்பஞ்சலி.

    • veera vanakkam veera vanakkam veera vanakkam seikinrean tholar srinivasanukku veera vankkam seikintroam. maka ekavin porulalaraai mattumall varkka porulaai vaalnthu enkalukku varkka unarvootya tholarukku veera vanakkam

  3. தோழருக்கு எனது சிவப்பஞ்சலி. தோழர் மக்களுக்காக பாடுபட்டு, அடைய நினைத்த புதிய ஜனநாயக புரட்சிப் பாதையை, நாமும் உறுதியுடன் ஏற்று, வழிநடத்த வேண்டும்.

  4. போராட்ட தருணங்களில் தோழர்.சீனிவாசன் துடிப்புடன் செயல்படுபவர். மக்களுக்காக உழைத்த அர்ப்பணிப்பு மிக்க தோழருக்கு எனது சிவப்பஞ்சலி.

  5. நான் சென்னை வந்த புதிதில் என்னை வந்து பார்த்தவர் தோழர் சீனிவாசன் தான். அதன்பிறகு எங்கு, எப்பொழுது பார்த்தாலும் தோழமையுடன் நலம் விசாரிப்பார். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கும், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கும் மிகப்பெரிய இழப்பு.

    அவருக்கு நமது வீரவணக்கங்கள். அவருக்கு செலுத்தும் மரியாதை என்பது அவர் கண்ட புதிய ஜனநாயக புரட்சி கனவை நாம் நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது.

  6. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தோழரின் மறைவு இந்தியப் புரட்சிகர இயக்கங்களுக்குப் பேரிழப்பு. அவருக்கு எனது அஞ்சலிகள். -நாவலன் – இனியொரு சார்பில்

  7. தோழர் சீனிவாசனுக்கு சிவப்பு அஞ்சலிகள். அவர் நோயினால் அவதியுற்ற காலத்திலும் அவரின் மன உறுதியும், அர்பணிப்பும் எள்ளளவும் குறைய வில்லை.
    செவ்வணக்கங்கள் தோழர்…

  8. தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்!
    போராட்ட தருணங்களில் தோழர்.சீனிவாசன் துடிப்புடன் செயல்படுபவர்.
    மக்களுக்காக உழைத்த அர்ப்பணிப்பு மிக்க தோழருக்கு எனது சிவப்பஞ்சலி.

  9. தோழர் சீனிவாசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி. அவரது பிறந்ந்த ஊர், குடும்ப பின்னணி பற்றி சிறு குறிப்பு எழுதவும்.

  10. Red salute to Tholar Seenivasan. So far not seen him…but tears from my eyes..why? what bonds us? That is communism..Red Salute to Tholar Seenivasan..

  11. தோழர் சீனிவாசன் தோழருக்கு எனது சிவப்பஞ்சலி!

    செவ்வணக்கங்கள் தோழர்……

  12. சுமார்10 ஆண்டுளுக்கு முன் நான் சென்னையில் இருந்தேன்.அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடக்கும்.தோழரோடு அறிமுகப்படுத்திக் கொண்டேன்.ஒவ்வொரு இயக்கத்தின் போதும் தோழர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார்.தோழரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.வீரவணக்கம் தோழர்!

  13. தோழர் சீனிவாசன் அவர்களை கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. தோழர் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும்பொழுதே இயக்கப் பணிகள் குறித்தும், சக தோழர்களிடம் கம்யூனிசப் பண்புகளை பற்றியொழுகுதல் குறித்தும் உற்சாகத்துடன் விவாதிப்பாராம். தோழரின் மனோ உறுதியையும், உயர்ந்த பண்புகளையும் நாமும் தொடர்ந்து உயர்த்திப்பிடித்து தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்துவோம்.

  14. தோழருக்கு வீரவணக்கம்! தோழரின் இலட்சியத்தை அடைய முன்னிலும் கூடுதலாக மக்களுக்கு உழைப்பதே நமது கடமை.

  15. தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்! சென்று வாருங்கள் தோழரே… நீங்கள் விட்டுச் செல்லும் கடமைகள் தொடரும் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

  16. தோழர் சீனிவாசனின் இழப்பினால் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய விலை மதிக்க முடியாத மக்களே சேவையை இழந்து தவிக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  17. After leaving the Government job and working for the upliftment of downtrodden
    even when he was suffering from disease, a great thozar left his mortal body here..
    but his work and ideas are with us and we will have to work hard to fulfill his ambitions..

  18. I first came to know comrade Srinivasan through the publisher’s details in Puthiya Kalaachaaram, in 1995 when i was 2nd yr medical student in Madras Medical College. I was surprised to know the cost and content of the magazine; you can compare with the other magazines filled with useless materials sold high costs. Till now, i know his name alone, and i have high regards for him for the fearless cover stories and powerful cartoons published.
    My heartfelt condolences. Thank you comrade.

  19. தோழர் சீனிவாசனின் இழப்பினால் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய விலை மதிக்க முடியாத மக்களே சேவையை இழந்து தவிக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  20. அன்புள்ள தோழருக்கு
    தாயின் மரணத்தை விட வலி தருவதாக உள்ளது உங்களது மரணம். நீங்கள் இல்லாத போராட்ட தலைமையை நினைத்துப் பார்த்தால் சிரமமாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு சென்டிமெண்ட் இருக்க கூடாது. இதோ தண்ணீர் தனியார் மயம் பற்றிய போராட்டம் இரண்டாவது முறையாக துவங்க உள்ளது. நீங்கள் எங்கோ எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருக்கிறீர்கள். செங்கொடியை தவற விட்ட எத்தனையோ அறிவாளிகளுக்கு மத்தியில் உறுதியாக அதனைப் பற்றி நின்ற, மக்களோடு மக்களாக இரண்டற கலந்த ஒரு தோழரை நான் இழந்து விட்டேன். ஆனால் ஆயிரமாயிரம் தோழர்கள் வருவார்கள். தன்னுடைய காலத்தில் புரட்சியை காண முடியாது என்று தெரிந்த பின்னும் (அதாவது மரணத்திற்கான புற்றுநோய் தாக்கிய பிறகும், தன் வாழ்நாள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோதும்) புரட்சியை நேசித்த எங்களது தலைவரை இழந்து விட்டேன். இவ்வளவு நாட்களும் உங்களைப் போன்ற தோழர்களின் கைவிரல்களை நாங்கள் பற்றி நடந்தோம். இடறி விழும்போதெல்லாம் எப்படி தவறிழைத்தோம் என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தீர்கள். நல்லது தோழரே! உங்கள் மரணம் கூட உங்களது தியாகத்தை எங்களுக்கு சுயபரிசீலனை செய்ய பல வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. மெத்தப் படித்த மேதாவிகளை விடவும் எங்களது தோழர் மிகச்சிறந்தவர் என்பதை நாங்கள் உரக்கச் சொல்லுவோம். உங்கள் மரணத்தை இட்டு நிரப்ப உழைக்க வேண்டும் தோழரே அதுவும் அந்த அசாதாரண தியாக உணர்வோடு.

  21. \\”அந்த நம்பிக்கை எனக்கிருக்கு, அந்த நம்பிக்கையிலதான் நான் போறேன்” என்றார்//

    சாவு நெருங்கி விட்டதை அறிந்த நிலையிலும் கலங்காத நெஞ்சிலிருந்து மட்டுமே இப்படியான சொற்கள் வெளிப்பட முடியும்.தோழர்.இரா.சீனிவாசன் அவர்கள மக்கள் மீது கொண்ட பற்றும் அதற்கான போராட்டத்தில் வரக்கூடிய அடக்குமுறைகளை எதிர் கொள்ள அவர் காட்டிய துணிவும் நெஞ்சுரமும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது.

    நக்சல்பாரி புரட்சியாளர்களை வேட்டையாடி தீர்த்துக்கட்டிய எம்.ஜி.ஆர்-தேவாரம் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து இருந்த எண்பதுகளின் நடுவில்தான் புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் இதழ்கள் வெளிவரத்துவங்கின.நக்சல்பாரிகள் நாங்கள் என பகிரங்கமாக அறிவித்து நக்சல்பாரி அரசியலை உயர்த்திப் பிடித்த அந்த ஏடுகள் தோழரை வெளியீட்டாளராக கொண்டு அவரது முகவரியை தாங்கியே வெளிவந்தன.

    2003 ஆம் ஆண்டு தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய தோழர்.மருதையன் இப்படி சொன்னார்.
    ”எங்கள் எழுத்துக்களை படிக்கிற சிலர் கேட்கிறார்கள்.என்ன இது பயங்கரமா எழுதுறீங்க.அரசாங்கம் அனுமதிக்குதா இதையெல்லாம்.எழுதுறவனுக்கு பயமா இல்ல. படிக்கிறவனுக்கு பயமா இருக்கு.”
    அத்தகைய எழுத்துக்களை தாங்கி வந்த ஏடுகளை வெளியிட எத்தகைய துணிவும் நெஞ்சுரமும் தோழருக்கு இருந்திருக்க வேண்டும்.

    தோழர்.சீனிவாசன் போய் வாருங்கள்.பிரியா விடை உங்களுக்கு.

  22. படுக்கையில் இருந்த காலத்திலும் மக்களுக்காக தொடர்ந்து சிந்தித்து ஓய்வின்றி உழைத்தவர் தோழர் சீனிவாசன், அவரது உழைப்பு என்றும் வீண்போகாது அவருடைய புதிய ஜனநாயக புரட்சி லட்சியத்தை மேலும் வலுபடுத்தி மக்களிடையே உள்ள அடிமைத்தனத்தையும், மூடனம்பிக்கையையும் நீக்கி புதிய ஜனநாயக புரட்சியை செய்து முடிப்போம் என்று நாம் அனைவரும் சூளுரைப்போம்…………………….

    தோழர் சீனிவாசன் அவர்களுக்கு எனது செவ்வணக்கம்,………….

  23. மரணபயத்தை கிஞ்சித்தும் கொண்டிராத எங்கள் தோழரே, போய்வாருங்கள்! உங்கள் நினைவை நெஞ்சில் சுமந்து புரட்சியை முன்னெடுத்துசெல்கிறோம்.
    தோழருக்கு சிவப்பஞ்சலி!

  24. தோழருக்கு வீரவணக்கம் மற்றும் சிவப்பஞ்சலி.

    தோழர் சீனிவாசனின் இழப்பினால் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய விலை மதிக்க முடியாத மக்களே சேவையை இழந்து தவிக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  25. தோழரின் துணிவு பற்றி பிற தோழர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. நோயின் தாக்கத்தின் ஊடேயும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலும் நிகழ்ச்சியொன்றில் தோழரை தொலைவில் இருந்து காணமுடிந்தது. மரணபயமே இல்லாத அந்த முகத்தில் தான் எத்தனை உற்சாகம், நம்பிக்கை… உண்மையில் அச்சமென்றால் என்னவென்றே அறியாத அந்தத் தோழரிடம் மரணம் தான் தோற்றுப் போயுள்ளது.

    விடைகொடுக்கிறோம் தோழரே,, நீங்கள் எந்த நம்பிக்கையில் சென்றீர்களோ அந்த நம்பிக்கையை நாங்கள் என்றும் காப்பாற்றுவோம்..

    தோழருக்கு சிவப்பஞ்சலிகள்

  26. எனது 54 ஆண்டு வாழ்நாளில் நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தோழரை சந்திக்கச் சென்றேன். அன்று அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நான் ஒரு அரை மணிநேரம் பேசாமல் இருந்தேன். பேசும் ஆற்றல் அன்று எனக்கில்லை. கண்ணீரால் கைக்குட்டை நனைந்ததே தவிர என் கண்ணகளை திறக்க முடியவில்லை. ”தமிழ் மணியா இது?” எனக் அவர் கேட்ட பிறகும் எனக்கு பேச நா எழவில்லை. அவரது முகத்தைப் பார்க்க முயலும் முன்மே என் கண்கள் குளமாகிவிடும். பிறகு எப்படி அவரை நான் பார்ப்பது?

    இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரைப் பார்த்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துயரைத்து மறைத்து ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.

    அவர் மரணமடைந்த செய்தி கேட்டு வழியத் தொடங்கிய கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதால் ஏற்கனவே குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் மருதையன் குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னும் வற்றவில்லை. கண்ணீர் வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது.

    ஒரு முப்பு ஆண்டு காலம் உற்ற தோழனாய், நண்பனாய், உறவாய் என என்னுள் அமைப்பு வேலைகளில், எமது உடல் நலனில், எமது குடும்ப உறவில் இரண்டறக் கலந்தவர் தோழர் சீனிவாசன். பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது ”ஏன்னு சொல்ச்சுனா” என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் எப்படி என் நினைவிலிருந்து அகலாதோ அது போல என் கண்களிலிருந்து எவ்வளவுதான் கண்ணீர் வழிந்தாலும் அது ஒரு போதும் வற்றாது.

    ஆனாலும் வெறும் கண்ணீர் மட்டும் அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை நிறைவேற்ற உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அவரைப் போல வீருகொண்டு எழுவதே அவருக்கு நான் செலுத்து நினைவஞ்சலியாக இருக்க முடியும்.

    தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்!.

  27. தோழர் சீனிவாசனின் மரணச் செய்தி சற்று தாமதமாக கிடைத்தது. எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லையென்றாலும் அவரின் பல உரைகளை கேட்டுள்ளேன். அவரது உரையின் சிறப்பையும், தன்மையையும் தோழர்கள் விளக்குவதையும் நிறைய கேட்டுள்ளேன். அவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முகம் என்றால் மிகையில்லை என்று நினைக்கிறேன். தோழருக்கு எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன். தோழர் சீனிவாசனின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், அமைப்பு, அவரை அறிந்த தோழர்கள் மற்றும் உறவினர்களின் துயரில் நானும் பங்கெடுக்கிறேன்.

  28. I know him verywell.shocked when i heard the news.hard worker.he trust his movement, revolution more than his life.he won the mind of comrades all over tamilnadu.thozhar srinivasan vithaikkappattullar.veera vanakkam thozhare,unkal ninaivu emathu nenjaivittu enraikkum maraiyathu.umathu vazhiyil aaiyiramaiyram thozharkal umathu paniyai mutipparkal.thozharukku enathu sivappanjali.

  29. தோழர் சீனிவாசனுக்கு எமது சிவப்பஞ்சலி.தோழரின் தியாகத்தையும்,அவர் ஏற்றிருந்த புரட்சிகர அரசியலையும் நெஞ்சில் ஏற்றுவோம்..கம்யூனிஸ்ட் தீபத்தை அணையாமல் காப்போம் என உறுதி எடுப்போம்
    தோழர் நம்மை விட்டு போகவில்லை நம் ஒவ்வோருவருக்குள்ளும் தோழர் சீனிவாசனாய் வாழ்கிறார். தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்,.

  30. Thozharkale ! united we stand….thozhvar srinivasan taught us how to fight against the atrocities areound us and how to bring revoluion even when he was not keeping good health..he believed in action than caing his helath…always smiling and giving good and right advice when we are in two minds..one aim to achieve he goal of revolution..the day is not far away..fight..fight..to achieve our aim…THOZHARUKKU ANATHU SIVAPPANJALI…

    kannan and family
    USA

  31. 1990களில் திராவிட இயக்கத்தை விமர்சித்து புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரைக்கு மறுமொழி அளித்து நான் அனுப்பிய மடலுக்கு விளக்கம் அளிக்க நான் தங்கியிருந்த புதுக்கல்லூரி விடுதிக்கு தோழர் சீனிவாசன் வந்திருந்தார். பின்னர் அவரை சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்த பொழுது கீழைக்காற்று நூல் விற்பனை நிலையத்தில் சந்திது பேசினேன். அவரது மறைவை அறிந்து வருந்துகிறேன். அவரது தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  32. தோழர் அவர் மனைவியிடம் எப்போதும் சொல்வது ” தோழர்கள்தான் நமது சொத்து”…
    சிவப்பு வணக்கம் தோழரே, நாங்கள்தான் எங்களது விலைமதிப்பற்ற சொத்தை இழந்துவிட்டோம்……

  33. தோழர் சினுவாசனுக்கு சிவப்பஞலி!!! அவர் குடும்பட்தினருக்கும் தோழர்களக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  34. தோழரின் இறுதி ஊர்வலம் முடிந்த பிறகு மயானத்திற்கு அருகில் ஒரு கடையில் தேனீர் அருந்திய பொழுது தோழரை
    பற்றி சிறப்பாக பகுதி மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் , இன்னா மனுஷன் பா என்றெல்லாம் பேசிக்கொண்டதே தோழர்
    மக்களுடன் கலந்து இருப்பார் என்பதற்கு உதாரணம் . மக்களுடன் நெருங்கி பழகுவதை நாம் தோழரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
    நாம் எந்த தருணம் எல்லாம் மக்களுடம் கலந்து வேலை செய்கிறோமோ அத்தருணம் எல்லாம் தோழர் நம்முடன் உயிரோடு இருக்கிறார் .
    தோழருக்கு செவ்வணக்கம்

  35. // கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. //

    கணையப் புற்றுநோயின் ஆரம்ப காலத்தில் வலி உண்டாக்குவதில்லை, முற்றிய நிலையில், அறிகுறிகளும், வலியும் தெரியும் போது காலம் கடந்துவிடுகிறது. கடுமையான வேதனையிலும் மனம் தளராமல், தீரத்துடன் மரணத்தை எதிர்கொண்ட தோழர் சீனிவாசன் அவர்களுக்கு இறுதி வணக்கங்கள்.

  36. தோழர் சீனிவாசன் அவர்களுக்கு நமது சிவப்பஞ்சலியை செலுத்துவோம்.

    அவர் இறுகப் பற்றிய புரட்சியை நம் கையிலெடுத்து, அரசு வேலையை துச்சமாகப் மதித்து ஒரு முழு நேரப் போராளியாக தம்மை உயர்த்திக் கொண்ட மேன்மையை நாமும் பின் தொடர வேண்டும். அதுவே தோழர் சீனிவாசன் அவர்களின் இலட்சியத்தை நாம் நிறைவேற்ற வல்ல பாதை.

  37. ம.க.இ.க. நமது இசைக் குறுந்தகடுகல் அனைத்திலும் ஓங்கி ஒலித்த பெயர். அமைப்பி
    அமைப்பிற்கும் என்னைப் போன்ற அமைப்பைப் பின்பற்ற முயன்று கொண்டிருப்போருக்கும், ஆதரவாலர்கலுக்கும், ஆர்வலர்கலுக்கும் இன்னும் பிர பொது மக்கலுக்கும் இடயே இருந்த அமைப்பின் ஒரே முகவரி தோழர்தான். போராட்டக் கலங்கலில் ஒருங்கினைப்பு மற்றும் னெறிப்படுத்தும் பனிக்கு தோழர்தான் எப்போதும் பொருப்பேற்ப்பார் என்று சொல்லக் கேட்டதுண்டு. இப்போது அவர் இல்லாத நிலையில், அவருக்கும் சேர்த்து உழைஇக்க வேண்டி இருக்கும். அமைப்பும் தோழர்கலும் அதைச் செய்ய அவரே நமக்கு முன் மாதிரி.
    தோழருக்கு வீற வணக்கம், சிவப்பஞ்சலி.

  38. தோழர் சீனிவாசனின் இழப்பினால் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய விலை மதிக்க முடியாத மக்களே சேவையை இழந்து தவிக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  39. வீர வணக்கம்,

    1989 ல் வில்லிவாக்கம் புஜ, புக வின் வாசகர் வட்டத்தில் அறிமுகமாகி என்னில் அரசியல் உணர்வை வளர்த்த தோழர்களில் ஒருவரை இழந்து விட்டேன். இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அவர் ஆற்றிய பணியை தொடர்ந்து செய்வோம்

  40. the soul is immortal…..so also his ideas….he left his boothodal here…..
    he lives in our hearts….
    there must be some reason for any death…in the case of thozhar it is illness…
    the gap is to be filled somehow, our heartfelt condolances to Ma.Ka.E.Ka..eyakkam…

    kannan and family
    USA

  41. சிலரது இழப்பு இறகைவிட லேசானதாகவுள்ளது
    ஆனால் சிலரது இழப்பு மலையைவிட கனமானதாக உள்ளது..
    தோழரது மரணம் மக்களுக்கும் ம.க.இ.க விற்கும் பேரிழப்பாகும்.
    அவரது பணியினைத் தொடர்ந்து செய்து நமது அஞ்சலியையும்,வீரவணக்கத்தையும் செலுத்துவோம்.தோழருக்கு எனது வீரவணக்கம்.

    • தோழர் காலமான அன்று அவரது உடல் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் வைக்கப்பட்டிருந்தது, நூற்றுக்கணக்கில் தோழர்கள் இரவு அங்கேயே தங்கியிருந்தனர். இரவு மணி 12 இருக்கும் ஆஜானுபாகுவான உடலமைப்புடன் ஒரு தோழர் வெளியூரிலிருந்து வந்தார். தோழர் சீனிவாசனின் உடலை சிறிது நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு பின் அங்கிருந்த தோழர் காளியப்பன் ( ம.க.இ.க வின் மாநில இணைச்செயலர்) அருகில் சென்று அமர்ந்தார். தோழர் ஏதோ பேச ஆரம்பித்தவுடன் அவரது தோளில் சாய்ந்து கதறியழுதார்…
      மைதானமே நிசப்தமாக அவரையே பார்த்து கொண்டிருந்தோம். இதுவரை எதற்காகவும் அவரழுததில்லை என்று அவரைப்பற்றி சொன்னார்கள்..அது தோழர் சீனிவாசனின் மரணம் ஏற்படுத்திய இழப்பின் கனம்.

      உண்மைதான், மக்களுக்காக வாழ்ந்து மடிபவரின் இழப்பு மலையைவிட கனமானததுதான்.

  42. தோழர் சீனிவாசன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக ம.க.இ.க வின் தோழர்களும், அதன் தோழமை அமைப்பைச் சேர்ந்த தலைமையில் உள்ள தோழர்கள் தோழரைப் பற்றி இரங்கல் உரை ஆற்றினார்கள். இறுதியில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் 15 நிமிடம் இரங்கல் உரை ஆற்றினார்.
    அதன் முழு உரையும் கீழே உள்ள சுட்டியில் தரப்பட்டுள்ளது.

    http://socratesjr2007.blogspot.in/2012/05/blog-post_17.html

Leave a Reply to செங்கொடி மருது பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க