privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சினேகா - பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!

சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!

-

ஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல இதுவரை இரண்டு புரட்சிதாம்டே இருந்துச்சு. ஒண்ணு புரட்சித்தலைவர்-தலைவி வகையறா, ரெண்டாவது ” என் தங்கம், என்னுரிமை”ன்னு கல்யாண் ஜூவல்லரியில பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம். இப்போ இந்த கசுமாலங்களோட மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி!

ஞாயித்துக் கிழமையும் அதுவுமா எங்கூரு சலீம் பாய் கடையில பொட்டாட்டுக் (குறும்பாடு) கறியக் கூட எடுத்து திங்காம சினேகா அக்கா கல்யாணத்தை பத்தி சிவனே மவனேன்னு எழுதுதனே ஏம்லே? உழைச்சு பிழைக்கிற மக்கமாறு அன்னாடம் கஞ்சி குடிச்சு வாழுததுக்கு கூட வக்கு இல்லாத நாட்டுல இந்த சினிமாக்காரனோட கலியாணம், கருமாதியை நியூசு, வியூசு, மேட்டரு, ஹெட்டிங்கு, சென்சேஷன்னு செங்கோட்டை சாப்பாட்டுகடை மாஸ்டரு அடிக்கிற புரோட்டா மாறி பிச்சு உதறதானுகளே, என்னைக்காவது ரோசனை பண்ணியிருக்கியாலே?

பிச்சுப் போட்ட புரோட்டாவ தின்னா அடுத்த நாளு ஆய் போவியா, இல்ல அமுதத்த கக்குவியா? சினேகா அக்கா கல்யாண மேட்டரு மாதிரி உசிலம்பட்டியில பேச்சியம்மாளுக்கும், மதுரை வீரனுக்கும் கண்ணாலம்னு ஒரு சேதிய, அவுத்து வுட்டா உச்சி மோந்து படிப்பியா இல்ல, வேற வேலவெட்டி இல்லயான்னு ஒதுக்கிவிட்டு போவியா?

தம்பி பிரசன்னாவுக்கும், அக்கா சினேகாவுக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்ட பிறகு வயிறெறிஞ்ச பயலுவள வுடுங்க, மத்த பயலுவளும் நமக்கு சினேகா மாதிரி ஒரு மனைவி அமையலேன்னு ஃபீல் பண்ணுறதயும் வுடுங்க, மொத்தமாப் பாத்தா அல்லாரும் அந்த தம்பதிமாரை மனசாரா வாழ்த்திருப்பீக! நானு இந்தக் கல்யாணத்தை இப்புடி கலாய்க்கிறதப் பாத்து அவுகளெக்கெல்லாம் பெரிசா கோபம் வருமுன்னு எனக்கு தெரியுமுடே! மவுசுல ஸ்க்ரோல் பண்ணியே கண்ணீரு வுடுற இந்த ஃபீல் பார்ட்டிங்களுக்கு, இது ஒரு சினிமா பீர் பார்ட்டின்னு உரைக்கிற மேறி எழுதணாத்தாம்லே என்னோட வெப்ராளம் (ஆற்றாமை) அடங்கும்.

ஏலேய் போக்கத்த பயலுகளா, நீங்க நினைக்கிற மாதிரி இந்தக் கல்யாணம் ஒரு எளஞ்ஜோடிங்க கல்யாணம் காட்சின்னு ஆரம்பிக்கிற புதுசான வாழ்க்கை  இல்லேலே, இது பக்கா பிசினஸ். இல்லேன்னா ஒரு புது சினிமான்னும் சொல்லலாம். ஒரு சினிமாக்குண்டான பட்ஜெட், பிசினெஸ், காஸ்ட்யூம், பி.ஆர்.வோ, ஸ்பான்சரு, திரைக்கதை, டிவிஸ்ட்டுன்னு அத்தனை ஐட்டங்களும் இதுல உண்டுன்னு சொன்னா நம்புவியாலே?

இந்தத் தம்பியும் நம்ம அக்காவும் அவுகளோட கல்யாணத்த டி.வியில ஒளிபரப்பதுக்கு எம்புட்டு துட்டு வாங்குனாகன்னு தெரியுமாடே? மூணு கோடி ரூபாய்னு சொல்லுதாக. இது பொய்யுன்னு புலம்புற மல்லு வேட்டி மைனருங்க அல்லாப் பத்தரிகையையும் புரட்டி பாருங்கடே, “லம்பான அமவுண்டுக்கு திருமண ஒளிபரப்பை வித்துட்டாங்கன்னு” கொட்டை எழுத்துல நியூஸ் போட்டுருக்கான்.

இதுக்கு காஸ்ட்லி கல்வி முதலாளி பச்சமத்துவோட புதிய தலைமுறையும், கிழட்டு நரி முர்டோச்சோட விஜய் டி.வியும் போட்டி போட்டானுகளாம். கடைசியில முர்டோச் மூணு கோடிக்கு ஏலத்துல ஜெயிச்சுருக்கான். இந்தப் பயபுள்ளதான் ஏற்கனவே பிரபலமாருங்க கல்யாணத்தை விஜயில “நம்ம வீட்டு கல்யாணம்” னு காட்டி காசு சுருட்டுறதுல சீப்பான எக்ஸ்பர்ட்டு!

ஏலேய் உடம்ப வித்து பிழைக்குற பொம்பளைங்களை விபச்சாரின்னு யோக்கியனாட்டாம் பேசுத பயபுள்ளங்ககிட்ட ஒண்ணு கேக்கேன். அது விபச்சாரம்னா இப்புடி கல்யாணத்தை காசுக்காக டெலிகாஸ்ட்டு பண்ணுன்னு விக்கிறதுக்குப் பேரு என்னடே? அது பாடி விபச்சாரம்ணா, இது டெலிகாஸ்ட்டு விபச்சாரம்ணு சொல்லலாம்லா? மதுரை ஆதீனமாக முடியோட முடிசூட்டியிருக்கிற நித்தியானந்தா, ரஞ்சிதாவோட சல்லாபம் போட்டபோது அடுத்தவங்க படுக்கையறையை எட்டிப் பாக்கது தர்மமான்னு நம்ப பிசினஸ் பாய் மனுஷ்ய புத்திரன்ல இருந்து, த.மு.எ.க.ச தமிழ்ச் செல்வன் வரைக்கும் நெம்ப ஃபீல் பண்ணிணாக. ஏலேய் அதே மாதிரி தனிப்பட்ட கல்யாணத்தை ஊரு பூறா பாக்கதுக்கு ரேட் போட்டு விக்கானே, இது மட்டும் தர்மமாலே? ரஞ்சி எபிசோடுல சன் டி.விக்காரன் செலவில்லாம சுருட்டுனான், இங்க அக்கா எபிசோடுல கொஞ்சம் முதலீடு போட்டு சுருட்டுறான், அம்புட்டுதாம்டே வித்தியாசம்!

இன்னைக்கு கல்யாணத்த வித்து பணம் பண்ணுறவன் நாளைக்கு காது குத்து, மொட்டை, பூணூல் கல்யாணம், புது வீடு, பொறந்த நாளுன்னு அல்லாத்தையும் விப்பானுகல்லா?

நாட்டுல ஆயிரத்தெட்டு அநீதிங்க நடக்கையில, இப்புடி சினிமாக்காரனோட கல்யாணம், கருமாதியக் காண்பிச்சு உன் டேஸ்ட்ட வேஸ்ட்டு பண்ணி, நேரத்தையும் ஸ்வாகா செஞ்சு, குப்பைங்களை பொழுது போக்குண்ணு மூளையில திணிக்கிறானே, எந்த பயலுக்காவது சொரணை இருக்கா?

சரி அத்தோட வுடாம நாளைக்கே தேனிலவையும் டெலிகாஸ்ட்டு பண்ணுடான்னு விக்க மாட்டானுகளா என்ன? அமெரிக்காவுல இப்புடி புதுமணத் தம்பதிமாரு இணையத்துல முதலிரவை காட்டி காசு பாக்கையில நாளன்னைக்கு நம்ம தமிழ் சினிமா பயலுக செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்? ஏற்கனவே ஸ்டார் வேல்யூ வெளம்பரத்துக்காக தம்பி சிம்பு, நயனுக்கு முத்தா கொடுத்து அதை ஃபீரியா யூ டியூபுல ஓடவிட்ட கதை ஞாபகமிருக்குல்லா? அது மேறி படத்துல நடிக்கிறதை படுக்கையில செஞ்சு காமிச்சு அதுக்கு தேனிலவு லைவ்வுன்னு போட்டா உன்ன மாறி போக்கத்த பயலுவ ஜொள்ளு வடிய பாக்க மாட்டீகளா என்ன? உட்டா நாளைக்கே அக்கா சினேகா வூட்டு கோழி முட்டயை போடுறதையம் ரியாலிட்டி ஷோன்னு போட்டு அதுக்கு நாலஞ்சு ஸ்பான்சர பிடிச்சு நாலரைக்கோடி தமிழருமாருங்கள பாக்க வச்சு பேசவும் வைப்பான்.

வழக்கு எண், சினேகா திருமணம் இரண்டையும் ஏலத்துல எடுத்தவன் விஜய் டி.விங்குறதாலா படத்தோட சினிமா நிருபர்களுக்கான ஷோவ ஐஞ்சு நாள் முன்னாடி  வச்சுட்டானாம். படம் பாக்க வந்த நிருபருங்கிட்ட கல்யாண அழைப்பிதழ் கொடுத்து உறுதி செஞ்சுகிட்டான்.வெள்ளிக்கிழமை சினிமா நிருபருங்கள உள்ளிட்டு ஊரு உலகம் முழுக்க சினேகா அக்கா திருமணத்தை மட்டும் பேசணும்கிறதுதான் விஜய் டிவியோட பிளான். இதுல அண்ணன் பாலாஜி சக்திவேலுக்கு வருத்தம் இருந்தாலும் விஜய் டி.விய பகைச்சுக்க முடியாதுல்லா. என்ன இருந்தாலும் அவன்தான படியளக்குற எசமான்!

அடுத்து அக்கா கல்யாண டெலிகாஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி லைட்டிங், கலரு எல்லாம் ஒரு ஆர்ட் டைரக்டரை வைச்சு போட்டிருக்கான். இது போக நகைங்க, ஆடைகளுக்கு ஸ்பான்சரு சரவணா ஸ்டோராம். ஏலேய் இது கல்யாணம் இல்ல, அது பேருல நடக்குற ஷூட்டிங்குன்னு இப்பவாச்சும் ஒத்துக்கிவியாலே?

பெறவு சினேகா, பிரசன்னாவோட பி.ஆர்.ஓவாக இருக்குறவரை வைச்சு தினசரி ஒரு நியூஸ் வரமாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கான் விஜய் டி.வி. அந்த நியூசு எல்லாம் தினத்தந்தியிலிருந்து, ஜூ.வி, ஆ.வி, குமுதம் அப்புறம் நம்மோட இணையத் தந்தியான தட்ஸ்தமிழ் வரைக்கும் பத்தி பத்தியா போட்டு மந்தை மந்தையா மேய வுட்டுறுக்காணுவ. நியூஸ் வரவர மக்கமாருகிட்ட மவுத் டாக் வளர வளர நாளைக்கு விஜய் டி.வி கண்ணாலத்தை காட்டும் போது டி.ஆர்.பி ரேட்டிங்கு எகிறுமுல்லா?

“சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்” கல்யாணம் நடக்குதுன்னு அந்த மண்டபத்த கூட ஒரு நியூசாக போட்டுருக்கானுக. மத்தபடி புன்னகை இளவரசியோட கல்யாணம் புரட்சித் தலைவி கட்சியோட பொதுக்குழு நடக்குற மண்டபத்துல நடந்துச்சுன்னு ஒரு பயலும் போடல. ஏன்னா ரெண்டுமே நாடகம்தாங்குற சங்கதி மக்களுக்கு தெரிஞ்சிருமுல்லா?

அது கூட பரவாயில்ல, சினேகா அக்கா திருமண அழைப்பிதழ எடுத்துக்கிணு குடும்பத்தோட புரட்சித் தலைவியையும், கலைஞரையும் பாத்ததா ஒரு நியூஸ் போட்டுக்காணுக. ஏம்லே இன்விட்டேஷன் கொடுக்குறதுக்கு குடும்பத்தோட போகாமா வீட்டு நாயைக் இட்டுக்கினா போவாக? இதெல்லாம் ஒரு நியூசுன்னு நீ படிப்பேன்கிற நம்பிக்கையில போடுதாம்லே. கல்யாணத்தன்னைக்கு புரட்சி வரலை, தமிழினத் தலைவர் மட்டும் நம்பர் 2 குடும்பத்தோட வந்து ஆசிர்வதிக்கிறாரு. நம்பர் 1க்கும், 2க்கும் நாந்தான் கல்யாணத்துக்கு வருவேன்னு சண்டை நடந்துச்சான்னு தெரியல. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வருடத்தில பெருசுக்குத்தான் சினேகா கல்யாணம் மாறி எவ்ளோ கமிட்மெண்ட்ஸ்.

பெறவு நலங்கு, மொகந்தி நிகழ்ச்சிங்க, நடிகமாருக்கு தனி ‘பார்ட்டி’ன்னு கூட நியூஸுங்க பன்னிக்குட்டி மாதிரி அணிவகுக்குதுங்க. பார்ட்டியில எத்தனை லிட்டர் காக்டெயிலு ஓடுச்சுன்னு நிருபக்கமாரு நீயூஸ் போடல. அவனே இப்படி சினிமாக்காரவுக பார்ட்டிக்கு போய்த்தான் தாகத்தை தணிச்சுக்கிடுதான். அப்பாலிகா சினேகா அக்கா, பிரசன்னாவோட தனிக்குடித்தனம் போவாகளா, இல்லை கூட்டுக் குடும்பமா, கலியாணத்துக்குப் பிறகு நடிப்பாகளா, சமையல் பண்ணுவாகளான்னு ஒண்ணு விடல. இவ்ளோ நியூஸ் போட்டவனுக கல்யாணத்துக்கு முன்ன புன்னகைச்ச மாதிரி கல்யாணத்துக்கு பின்னயும் அக்கா சிரிப்பாகளான்னு போடவே இல்லை? என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமுல்லா?

சிநேகா-பிரசன்னா-திருமணம்

 

கல்யாணத்தன்னைக்கு ரெண்டு பேரும் ஏழு இலட்சம் ரூபாய் பணத்துல பெங்களூரு டிசைனர் உடைங்கள போட்டத அறிவாளி பத்திரிகை தினமணிக்காரன் நியூசா போட்டுறுக்கான். அதுல உள்ள முக்கியமான நியூஸ் எதுன்னா தம்பி பிரசன்னா அக்காவுக்கு ரெண்டு வாட்டி தாலி கட்டுனாராம். இந்த ரெண்டு வாட்டிக்கும் அக்கா ரெண்டு பட்டுப்புடவைங்களை காஞ்சிபுரத்துல சொல்லி 25 இலட்சத்துல செய்ஞ்சாங்களாம்.

சரி, எதுக்குடே ரெண்டு தபா தாலி கட்டணும்? தம்பி வந்து தெலுங்கு பாப்பார சாதியாம். அக்கா நாயுடு சாதியாம். அதுனால மொதவாட்டி நாயுடு ஸ்டைல தாலி கட்டுன தம்பி, அரைமணி நேர கேப்புல பாப்பார முறைப்படி ரெண்டாவது தாலி கட்டுனாராம். காதல் கல்யாணம், கலப்புத் திருமணம்னு சொல்லிட்டு தாலியக் கட்டுறுதுல கூட சாதிய வுடமாட்டானுகளாம். ரெண்டு சாதியுமே ‘மேல்சாதி’ங்குறதுன்னால ரெண்டு சாதிக்காறவுனகளும் ஒருத்தருக்கொருத்தரு வுட்டுக்க கொடுக்க மாட்டான்.

சரிலே நாளைக்கு அக்கா சினேகாவுக்கு ஒரு குழந்தை பொறந்து, வளந்து ஆளாயி, ஐயங்காரு – ரெட்டி காம்பினேஷன்ல ஒரு வாரிசை கல்யாணம் பண்றதா வச்சுக்குவோம். கூட்டிப்பாத்தா இங்கன நாலு சாதி வருது. அந்தப்படிக்கு நாளைக்கு சினேகா அக்கா குழந்தை நாலுவாட்டி தாலி கட்டுமா?

இதுல சினேகா அக்கா, “ஆட்டோகிராப்” படத்துல வெள்ளையும் சொள்ளையுமாக “ஒவ்வொரு பூக்களுமே”ன்னு பாட்டுப்பாடி இளைஞர்களுக்கு அட்வைசு சொல்ற பார்ட்டி. இயக்குநர் சேரன் சொல்லிக்கொடுத்ததை அக்கா நடிச்சாகன்னு கூட விவரமில்லாத நாட்டுல இந்த இமேஜை உண்மைன்னு நம்பி பல பள்ளிக்கூடத்துக்காரனுக அக்காவ கூப்பிட்டு பள்ளி விழாக்களை நடத்துறானுக. இந்தக் கொடுமையை என்னண்ணு சொல்ல?

இந்த ஆண்டு பிப்ரவரி மாசம், ” சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியதாவது,”ன்னு ஒரு நியூச பாத்தேன். அதுல அக்கா ஆசிரியை உமா மகேஸ்வரி கொலையப் பத்தியெல்லாம் நெம்ப ஃபீல் பண்ணி பேசியிருக்காக. இப்புடி ஊரு உலகத்துக்கு அட்வசு பண்ணுற அக்கா தான் கல்யாணத்துல ஊரு உலகம் மெச்சுற மாதிரி நடந்திருக்கணும்லா? தம்பி பிரசன்னாவும் லயோலா காலேஜூல படிச்சு கொஞ்சம் நஞ்சம் ‘முற்போக்கு’ விசயமெல்லாம் பேசுற ஆளுதான். ஆனா ரெண்டு பயபுள்ளைகளும் இப்புடி சாதிய வுட்டுக்கொடுக்கமாட்டாகன்னா அப்பறும் எதுக்குடே ஊரு உலகத்துக்கு நியாயத்தை கத்துக் கொடுக்கீக?

சரி, இப்புடி ரெண்டு தபா தாலி கட்டுனா சட்டப்படி எதுடே செல்லும்? நம்ப தோஸ்த்து லாயருகிட்ட கேட்டா சட்டமே இப்படி ஒரு சிச்சிவேஷனை சந்திச்சதில்லைங்குறாரு. அதாவது இந்து திருமண சட்டப்படி அக்னியை சுத்தி வந்தா கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனா மேறியாம். அப்படின்னா இங்கன தம்பியும், அக்காவும் ரெண்டு தபா அக்னியை சுத்தி வந்து ரெண்டு தபா தாலி கட்டியிருக்காக. முத தபாதான் சட்டப்படி செல்லும்ணா நாயுடுக்காரன் கல்யாணம்தான் லீகலுக்குள்ள வரும். இது தெரிஞ்சா பார்ப்பானுங்க துள்ளிக் குதிப்பானுங்க. அடுத்து ஒரு பெண்ணுக்கு ரெண்டாவது தபா தாலி கட்டுறதா இருந்தா முத கல்யாணத்தை விவாகரத்து செஞ்சிருக்கணும். அப்போ முதல்ல தாலியக் கட்டி விவாகரத்து செய்ஞ்சிட்டு ரெண்டாவது தபா கட்டுனாத்தான் தெலுங்கு பாப்பார முறை திருமணம் செல்லும். அப்போ நாயுடுக்காரன் திருமணம் அதோகதி.

ஆக ரெண்டு வாட்டிதாலி கட்டுனதால விசயம் முடியல. நாயுடுக்காரனுவகளும், பாப்பானுகளும் நல்லா யோசிச்சு ஃபைசல் பண்ணி ஒரு முடிவுக்கு வாங்கடே. உங்க சாதித் திமிரை ஆய்வு பண்ணுணா கல்யாணத்தன்னைக்கே விவாகரத்த பேச வேண்டியிருக்குதுல்லா? சினேகா அக்கா கல்யாணம் காச்சியுமா இருக்கிறச்சே காளமேகம் இப்புடி அபஸகுனமாக விவாகரத்து பேசுறானேன்னு எம்மேல பாயாதீக? நானா ரெண்டு தபா தாலி கட்டச் சொன்னேன்?

மக்கா, உழைக்குற மக்கள் பல பேரு சாதியக் கடாசிட்டு கல்யாணம் பண்ணியிருக்காக. அங்க இல்லாம் இப்புடி இரட்டைத்தாலிங்குற கேவலம்லாம் இல்லடே. ஆனா ரெண்டு சினிமா வி.ஐ.பிங்க அதுவும் ஊரு உலகத்துக்கு தன்னோட கல்யாணத்த வித்து பாக்கச் சொன்னவன், இப்புடி ரெண்டு தாலி கட்டுற கேவலத்தை, சாதித் திமிரை வுடமுடியாதுன்னு பெருமையா பேசுறானே அதுதாம்லே மகா கேவலம். அந்தக் கேவலத்தை டி.வியில வேற காட்டுறான்னா பாக்குறவன் கேனயன்னுதானடே நெனைப்பு! இதுல நாளைக்கே சாதி மாறிக் கல்யாணம் பண்ணுறவனெல்லாம் இதே மாதிரி ரெட்டைத்தாலி கட்டணும்னு ஒரு புது சடங்கை இந்தக் கசுமாலங்க ஆரம்பிச்சு வச்சுருக்கானுவ. ஒரு தாலியவே விடணும்னு நம்ம தோழருங்க போராடிக்கிட்டிருக்கிற நாட்டுல இனி காதல் திருமணம்னா ரெண்டு தாலின்னா, அதைக் கட்டுறவ லோடு அடிக்கிற மாடா, இல்ல மனுஷியா?

தம்பி பிரசன்னாவும், சினேகா அக்காவும் அவ்வளவா மார்கெட் இல்லாத நடிகருங்கன்னாலும் ஐஞ்சாறு படத்துல நடிச்சுக் கிடைக்கிற காச ஒரே வாட்டி லம்பா மூணு கோடிக்கு வுத்து சுருட்டிட்டிங்கல்லா. இதுல கல்யாணத்துக்க்காக அக்கா பண்ருட்டியில இருக்கிற திருமண மண்டபத்தை வுத்துட்டாகளான்னு நொம்ப ஃபீல் பண்ணி பத்திரிகைகாரனுவ எழுறான். ஏலேய் போக்கத்த மூதிகளா, நடிகைங்க மார்கெட் இல்லேன்னாலும் வளைகுடா நாடுகளுக்கு போய் கலை நிகழ்ச்சி நடத்தி சம்பாதிக்கிறது உங்களுக்குத் தெரியும்தானடே, பெறவு என்ன ஃபீலிங்கு?

இனி, என்ன? விஜய் டீ.விக்காரன் நம்ம வீட்டு கல்யாணம்கிற தொடருல சினேகா அக்கா கல்யாணத்தை போட்டு, அவுக எப்புடி சந்திச்சாக, யாரு புரபோசல் பண்ணுணாக, வீட்டு எதிர்ப்பை எப்படி சமாளிச்சாக, ரெட்டைத் தாலி எப்புடி கண்டுபிடிச்சாகன்னு நாலஞ்சு வாரம் ஓட்டுவான்.

மக்களே, தமிழ்நாட்டுல இந்த ரெண்டு, மூணு மாசத்துல ஐஞ்சாறு கவுரவக் கொலைங்க நடந்திருக்கு. அந்தக் கொலையில இருக்குற சாதி வெறிக்கும், இந்த இரட்டைத் தாலியில இருக்கிற சாதி வெறிக்கும் என்னடே வித்தியாசம்? அதயும் ஒரு டி.விக்காரன் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டப் போறாம்னா, நாமல்லாம் சுரணையுள்ள பயபுள்ளைகளா, பீயத் தின்னுற பன்னிகளா?

______________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சினேகா – பிரசன்னா கல்யாணம், ஒரு கல்யாணமே இல்ல. அது ஏலத்துக்கு விட்டத ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற செய்தியை அண்ணாச்சி ஆனித்தரமால்ல சொல்லிப்புட்டாக? அண்ணாச்சி நல்லா வெவரமாத்தான் இருந்துருக்கா!

  2. விருப்பமுள்ளவன் ஒளிபரப்பரான், விருப்பமுள்ளவன் பாக்கப் போறான். இதுல நமக்கு என்ன? பிரசன்னா எத்தனை தாலி கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன? இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.

  3. May 9, 2102-ல் இந்த தலைப்பில்,
    “சினேகாவும் பிரசன்னாவும் திருமணத்தை தமிழர்களுக்கு காட்ட விஜய் டிவிக்கு விற்றது சரியே!” என்று நான் இங்கு,

    http://www.nambalki.com/2012/05/blog-post_09.html

    எழுதியுள்ளேன். முடிந்தால் பாருங்கள்; உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்!

    அன்புள்ள,
    நம்பள்கி!

  4. ஆமா அது என்ன… “இந்த சினிமாக்காரனோட கலியாணம், கருமாதியை நியூசு, வியூசு, மேட்டரு, ஹெட்டிங்கு, சென்சேஷன்னு செங்கோட்டை சாப்பாட்டுகடை மாஸ்டரு அடிக்கிற புரோட்டா மாறி பிச்சு உதறதானுகளே, என்னைக்காவது ரோசனை பண்ணியிருக்கியாலே?”

    ஏன் இப்ப நீயி என்னத்த பத்தி எழுதி கிழிச்சுருக்கே??? போயி வேற வேலய பாரு….

  5. [[[சினேகா அக்கா கல்யாணம் வெள்ளிக்கிழமைன்னா, வழக்கு எண் படமும் அதே கிழமைதான். இரண்டையும் ஏலத்துல எடுத்தவன் விஜய் டி.விங்குறதாலா படத்தோட சினிமா நிருபர்களுக்கான ஷோவ முன்னாடி திங்கட்கிழமையே வச்சுட்டானாம். வெள்ளிக்கிழமை சினிமா நிருபருங்கள உள்ளிட்டு ஊரு உலகம் முழுக்க சினேகா அக்கா திருமணத்தை மட்டும் பேசணும்கிறதுதான் விஜய் டிவியோட பிளான். இதுல அண்ணன் பாலாஜி சக்திவேலுக்கு வருத்தம் இருந்தாலும் விஜய் டி.விய பகைச்சுக்க முடியாதுல்லா. என்ன இருந்தாலும் அவன்தான படியளக்குற எசமான்!]]]

    வழக்கு எண் படம் சினிமா நிருபர்களுக்கான ஷோ நடந்தது ஏப்ரல் 30, திங்கட்கிழமை சாயந்தரம்.

    வழக்கு எண் படம் ரிலீஸானது மே 4 வெள்ளிக்கிழமை.

    இதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சுத்தான் சினேகா கல்யாணம் மே 11 அடுத்த வெள்ளிக்கிழமைல..!

    சினேகா கல்யாணம் நடந்த மே 11-ம் தேதி, கலகலப்பு படம்தான் ரிலீஸ் ஆச்சு..!

    இதுல எங்க இருக்கு உள் அரசியல்..?

    • கட்டுரையாளர் மூலம் விவரப் பிழை திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நன்றி

      • உண்மைத்தமிழன்: வினவுக்கு சரியான சாட்டையடி…!! உங்களின் மறுமொழியைப் படித்தப்பின் இந்தப் பதிவினை அகற்றி இருந்தாலோ, அல்லது இந்தப் பதிவின் தலைப்புக்குக் கீழேயே மன்னிப்பு கேட்டிருந்தாலோ வினவின் நேர்மையைப் பாராட்டி இருக்கலாம்…!! It is called Hate Article in English. And add Jealousy to that..!! Vinavu should write about how Muslim girls should marry Hindu Dalits, if they believe in inter caste and inter religious marriage. I challenge Vinavu, that they wont advocate about Muslim girls marrying Hindu Dalits…!!

  6. That is their own business… Making research on that and getting tension on that is our unnecessary headache… He is going to get paid for what he is giving… If interested we can watch and read… If not,Change the channel boss!!

  7. பாப்பான் எதிலவாது மாட்டுவானான்னு கண் கொத்தி பாம்பு மாதிரி இருக்கிறது ரொம்ப அருவருப்பா இருக்கு…

  8. “ஏலேய் உடம்ப வித்து பிழைக்குற பொம்பளைங்களை விபச்சாரின்னு யோக்கியனாட்டாம் பேசுத பயபுள்ளங்ககிட்ட ஒண்ணு கேக்கேன். அது விபச்சாரம்னா இப்புடி கல்யாணத்தை காசுக்காக டெலிகாஸ்ட்டு பண்ணுன்னு விக்கிறதுக்குப் பேரு என்னடே? அது பாடி விபச்சாரம்ணா, இது டெலிகாஸ்ட்டு விபச்சாரம்ணு சொல்லலாம்லா? ”

    இந்த நியுஸ வெச்சு நீங்க பண்ற பிரச்சாரத்திற்கு என்ன பேர் வச்சிருக்கீங்க….

    • // இந்த நியுஸ வெச்சு நீங்க பண்ற பிரச்சாரத்திற்கு என்ன பேர் வச்சிருக்கீங்க….//

      மக்களை சினிமா மோகத்தில் அடிமைப்படுத்தும் ஊடகங்களையும், சாதித் திமிரை இழக்க விரும்பாத சினிமா நட்சத்திரங்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரம் என்று அழைக்கலாம்.

  9. Why u are using the bad words( especially at last three words)…. These prove that u are third class people. You are not educated… Its disgusting…. Even i know low caste people, they are well mannered and their behaviour is very good. You know vinavu,, this is last article i have read.. Hereafter i dont come to this blog… good bye vinavu

  10. இந்த கட்டுரையில் எந்த தவறும் இல்லை. சாதியை பற்றி பீற்றிக்கொள்ளும் இருவர் ஜோடி சேர்ந்துள்ளனர், அவ்ளோதான். இதுதான் உன்மையான கலாச்சார சீரழிவு!
    சாதியை புறம்தள்ளிச் செல்வது எப்படி என்ற எனது குழப்பத்தை தெளிவு செய்ததில் வினவின் பங்கு மிகப்பெரியது. இந்த காமென்டுகள பார்த்தா ஒன்னு புரியுது- சாதி அபிமானிகள் வினவு போன்ற வலைபக்கங்களையும் சாதி மறுப்பு ஓடகங்களையும் கன்டு பயமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்!

    ஒரு வேன்டுகோள் = வினவு மற்றும் இதர தோழர்களிடம் ஏற்கனவே கேட்டும் யாரும் பதில் சொல்லவில்லை “கோவையில் புதிய கலாச்சாரம் மற்றும் புதிய ஜனநாயகம் எஙே கிடைக்கும்?” தயவு செஇது சொல்லுங்கள்….

    • புதிய கலாச்சார அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876 இந்த எண்ணில் தொடர்பு கொள்க

    • Honestly,it is the other way around.I mean there is an article on Sneha-Prasanna marriage of all people,i mean most people are discussing Tapsee,Tamanna,Anushka and all,u r analysing Sneha-Prasanna,one daddhi pair.

      • I think you have mistaken this site for other entertainment blogs. The purpose of the article is not discussing a couple’s marriage, it is an analysis of how money and fame is being used by individuals and media to exploit the public. Hence discussing about Topsee or Bottomsee is also as useless as discussing other celebrities.

        • No,u r the one who takes this website too seriously.TN people always had a mad craze for celebrities and this is the case since 1960s,what we are looking at today is nothing new.

          Inter caste/community marriage has double ceremonies, Celebrities exploit the common man;s craze for them and these things have been happening since a very longtime.

          So cribbing and bickering about it is even worse than a entertainment website,i can but help laugh at such vetti articles.

          People were never suckers for ideology and all,they just want time pass.Writing articles like this is not going to change that status anytime soon.

          • //TN people always had a mad craze for celebrities and this is the case since 1960s//

            //People were never suckers for ideology and all,they just want time pass.//

            அப்படினா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற நடிகர்களை தூக்கி வீசியிருக்க வேண்டுமல்லவா? ஒண்ணூம் கிழிக்கலேன்னாலும் அவங்கதானே மக்கள் இதயங்கள்ல அடைச்சிக்கிட்டிருக்காங்க. ஜஸ்ட் வேடிக்கையல்ல நண்பரே…

            சினெகா கல்யாணம், சிம்பு காதல் தோல்வி, பிரபுதேவா கள்ளக் காதல் – இதையெல்லாம் டைம் பாஸுக்காக ரசிங்கன்னு ஊடகங்கள் உங்க மேலே திணிச்சா பார்த்துட்டு.. படிச்சிட்டு சிரிச்சிக்கினு போவேன்னு சொல்றீங்க.. உங்கள மாதிரி தமிழ்நாட்டு ஜனங்களோட மட்டரக ரசனையைப் பாக்கும்போது கேவலமா இல்ல?

            • Enakku indha vishayathula ellam interest 19 vayasulaye poidichu,neenga panra indha vimarsanathayellam 1970slaye parents ellarum pannitaanga,Dravida iyakkame cinema engira oodagathai payanpaduthi makkala muttalakki whistle adikka vechu vote vaanguna groupu thaan.

              Adhaan Anna,Kamaraj,Rajaji ellam overnightula kaanama pootanga.Neenga panra indha vimarsanatha 30-40 varushama ovvovoru veetulayum pasanga school kattadichittu cinema pogum pothum,rajini maadhiri mudi vechikkitappovum,nadhiya maadhiri saree kattikittapovum appa amma sonnadhu dhaan.

              Mudinja makkalukku nalla heroesa kaatunga, Sportsmen,Scientist,Technical people.Andha maadhiri heroesum irukkanga, aana cinema alavukku thakkatha erpaduthala.

              Indha seerazhivukku kaaranam Dravida Iyakkam thaan.

          • Oh you found out that people like you are not going to change? Nice! we thought you have at least a bit of rational thinking and proved us wrong. People are crazy about movie stars and so u want vinavu to write articles that gossip about them?

            • people like me,jus because i think this article is pointless,i belong to the other side.This is your biggest weakness, you always think it is me versus the rest,if you dont think like me,then you are against me even if i agree with you on topic and only oppose your method.

              You are the guys who go to a guy wearing coat-suit and say right now,u have to wear veshti and langodu and white shirt.Instead of doing it slowly you want to change things immediately and no wonder people are repelled by you.

          • //People were never suckers for ideology and all,they just want time pass.Writing articles like this is not going to change that status anytime soon.
            you have written the opposite i guess. In political sphere Tamils are being guided at every step by ideologies. false or genuine – it doesnt matter. but there exists a cornucopia of ideologies in TN. what you have written is so naive.
            And i dont think that this is a vetti article. people needs to be enlightened.
            And its not all same. the craze for cinema and hero worship have multiplied. The media are now following many deceitful paths to manipulate the sentiments of people and unfortunately people fall prey.

            • People are very enlightened.If you ask anyone about film actresses,u can see what they think,they ll still go and watch those movies and gloat,but they still know about these actresses/actors.

              I dont know if i am naive, in this uncertain world giving people fixed ideologies and that too Tamil people,who are the most open of them all,who have changed themselves due to so many different rulers and they have always rejected it.

              • No Mr Harikumar. i would never accept that people are enlightened. its not just the curse of people of Tamil nadu but that’s how it is in most of the societies around the world. what’s happening in the state now is a perfect example.to quote one such eg, if people were enlightened i think the ‘freebies culture’ in politics wouldn’t have evolved ( i quote this in first place because of the immense harm that it is going to bring ).

                • No,thats not the point.

                  People are accepting freebies because regardless of freebies or not,either of the two parties are going to win.The whole political scenario is very stagnant and both the parties dont let each other function peacefully,perhaps Mu.Ka’s death can change things.

                  Ideologies work only as long as the survival of people are not under question, Ideologies fly when survival is under question.

                  Survival is the only ideology that survives.

                  The regressive impact of the whole Dravidian revolution far outweighs the positives, today TN which was a state far ahead of every single other Indian state in 1947 is no.3/no.4 even letting AP& Karnataka as competitors.

                  And in no time,even they may go ahead of us.

                  But we ll always be stuck up with ideology.

                  • No. freebies don’t work that way. you support a party in election by way of weighing the freebies that it has promised to provide in case of coming power.
                    There are lots of factors out there that should be gone into deciding our favorite party in elections. Their ideologies, their stand on contemporary issues that affect our lives directly/indirectly etc are some to name a few. All that we need to do NOW is to just think of which of the freebies we want – tv or grinder . choose the party accordingly. Doesn’t it sound like mockery at people’s intellect. ??

                    “ideologies work only as long as the survival of people are not under question” . Dravidian ideology has rooted strongly in tamilnadu. So does that mean we all are leading safe and secure (both economically and politically) life? never. I don’t think ideologies thrive only when people are all well off (or did I got you wrong?)

                    I dont think I have a holistic knowledge for commenting on the Dravidian parties. But I wont accept the fact that you are indicting those Dravidian parities and their ideologies and the affects of both on Tamilnadu with such an ease. we still call our land as “periyar pirandh mann” implying we havent smelt (or can I say “we are yet to smell”) the stinking breath of RSS, VHP like parties in our land. We can call ourselves the most rational society in India thanks to Periyar and the early Dravidian parties. Good and bad are inevitable in everything. In politics that’s not uncommon. But I accept that Dravidian parties off late have gone too far in manipulating the minds of people to achieve personal gains. Who should bear responsibility for that? I would say its us. the people. we failed to steer them. we idolized people. as Ambedkar and other Political scientists have insisted people should never take to idolism. Be it Periyar or Anna or whoever. Periyar deserves to be idolized. But I wouldn’t say so with Anna’s case. Though he was ‘good’ he still was a politician and everyone knows of his political foulplays. He never deserves to be placed on the same platform as Periyar. But still we have done it. We even have given him a throne bigger than Periyar’s. so I would blame only the people ( ofcourse a vague guilt ) for all this.
                    And you used ideologies in such a context as if it is something very negative. Ideologies do have many positive effects. Just like two kinds of people – good and bad- there are good and bad ideologies. The Dravidian ideologies brought us out of a vicious net that everyone knows of. And I politely differ that survival is not an ideology rather it is a process.

                    • You are just another emotional guy,man.

                      I dont know what good the dravidian ideology gave you,but most of the good that has happened to TN whether industrial/economic/spiritual has happened from where you don’t think it came/shouldn’t have come from and ll continue to do so.

                      I personally dont think Periyar is all that,he was a novice and yeah he got certain things right but he could do nothing much.If he was so great people would have all stopped believing in religion,become atheists and we wont have caste clashes today and so many things.

                      Our linguistic nationalism fell to pieces when people voted the congress party into power right when people were getting slaughtered in Yaazhpanam.

                      By saying periyar deserves to be idolized you are going against what periyar said himself and this is the ultimate impact of what periyar has said and how little it has seeped into the common man’s head beyond hero worshipping him.

                      Ideologies are certainly negative,i said survival is the only ideology because that alone happens in the long run,oetherwise eveyr ideology gets broken sooner or later.

                      Forget about Anna/Karunanidhi, MGR stopped the Dravidian revolution at mid way.

                      Even Jayalalitha is able to beat Mu.Ka with a huge margin.

                      Basically Dravidian Ideology is a divisive ideology with absolutely no rational backing or solid grunds.Infact it only helped the middle castes get rid of the brahmins from power.

                      It is a political tussle and the people are happy that their present rulers have darker skin & poor hindi accents,just an emotional hinge.

                      It is precisely because of this TN is now having troubles at every level,whether cauvery water/mullai periyar lack of enough investment in Chennai,so many things.

                      Everytime we always say we ll fight you on the ground like Vaiko does but the maximum loss is the common man’s from this isolation and thats why they goes for freebies.

                      It is so funny that the very party that claims to be the anointed sons of Periyar,The DMK started the freebie culture.

                      Basically the ideology has made them emotionally happy and financially,physically,economically weaker & poorer.

                      Who said TN is the most rational society in India? The only place where rationality helps TN is when Government officials give reasons not to do their work & take bribes.

                  • i deny each and every line of your reply for 2 resons. first being u dint understand what i said and second being your ‘ideology’ .
                    i never said we should idolize Periyar. I request you to go back and read my text once again.
                    And for your ease the gist of my last reply was this: i dint intend to glorify Dravidian ideologies or Dravidian parties. I said they did more good than harm. In the harm it produced we bear equal culpability as they – the Dravidian parties, do. Because we failed to steer them. we blindly followed them. we idolised them.
                    And most of the claims you make seems very superficial and stereotypical to me. but i may be totally wrong.

                    • I want to know what good they did and why were we worse than we are now?

                      We failed to steer them?

                      what do you mean by that? we should have controlled them? we did control them by electing MGR again & again?

                      But the reality is not all that,the reality is people are scared to talk to them and oppose their cultural hegemony because of the fear of violence.

                      They are to TN what communists are to West Bengal & to a certain extent,Kerala.

                      But luckily TN people are so awesome in general,they do not need politicians or policies to advance themselves.

                      If you see the results of the last election, despite giving a lot of freebies and having a huge coalition,DMK still lost 61 seats to ADMK.

                      Which means the freebies worked to a certain extent but losing 61 seats to the incumbent party is huge.61 seats in TN assembly is huge.

                      Try to analyze this twist.

                      ADMK is a party which has survived the death of its icon MGR,part desertions everything and they still have ruled TN for more than 50% of the time since 1971.

                      How is that possible?

                      DMK is still the legitimet succesor of the DK and they have managed to rule only 18 years since 1971.

                      And please dont try to teach the people whats right and wrong.people are still surviving even after the political parties have given up on them totally,thats the rule of democracy.

                      if you want to see the people as ignorant and still hold onto power,that would simply mean your power hunger and not respect for people’s emotions.

    • உங்கள் முகவரி சொல்லுங்க அங்கே புதிய கலாச்சாரம் . புதிய ஜனநாயகம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் ( மெயில் பண்ணவும் tamilaman @gmail .com )

      • நன்றி தோழர்! ஆர்.எஸ்.புரம் ஏரியாவில் உள்ள கடைகளில் கேட்டு கிடைக்கவில்லை இங்கே பெரோஸ் என்ற தோழர் சொல்லும் கடைக்கு போய் பார்க்கிறேன்.எனது வீட்டு ஓனர் ஒரு மாதிரியான ஆள் அதனால்தான் நான் கொஞ்சம் தயங்கிறேன்.

        கோவை போன்ற பெருநகரங்களில் நிறைய இடங்களில் விற்பணை செய்தால் நிறைய பேர் படிக்க முடியும். சூலூர், அன்னூர் போன்ற இடங்களில் கிடைக்க ஏர்பாடு செய்தால் பரவாயில்லை.

        வினவு, தமிழமன் மற்றும் பெரோஸ் தோழர்களுக்கு நன்றி!

        • // எனது வீட்டு ஓனர் ஒரு மாதிரியான ஆள் அதனால்தான் நான் கொஞ்சம் தயங்கிறேன். //

          ??!!

  11. Vinavu: i think you should support this marriage because people of two different castes marrying. It is good it was telecasted so that people started to marry out side of their castes.
    Vinavu don’t look everything with your crippled eye….

    • அதாவது இவுக ரென்டு பேரும் புரட்சி பன்னி இருக்காங்கனு சொல்றீங்களா? இதுவே சினேகா தாழ்த்தப்பட்ட சாதியா இருந்தா கல்யானம் பன்ன விட்டுருப்பாங்களா? முதல்ல உங்க பார்வைய சரி பன்னுனங்க பாஸ்!

      • ஏன் பிரசன்னா தாழ்த்தப்பட்ட சாதியா இருந்தா கல்யாணம் பண்ண விட்டுருப்பாங்களாங்கிறது உங்க பார்வையில் படவில்லை.?!

        • இந்த கேடுகெட்ட சமூகம் முதலில் பென்பாலைத்தான் குறிவைக்கும், அதான் அப்படி சொன்னேன். மேல்வர்க்க ஆண்கள் தவறே செய்தாலும் அந்த தவறு மறக்கப்படும் ஆனால் ஒரு பெண் சிறிதளவேனும் தவறு செய்தால் கூட, அந்த வர்க்கம் அதை மறக்கவோ மன்னிக்கவோ செய்யாது.
          இன்னும் ஆழமாக பார்த்தால், அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட சாதியா இருந்திருந்தா இந்த கல்யாணம் பெருசா பேசப்பட்டிருக்காது, போனியும் ஆகியிருக்காது. உன்மைதானே?

          • Over extra analysis,this marriage has viewers only because of Sneha being a beautiful girl,i doubt anyone cares about Prasanna.

            These days any marriage of rich people regardless of caste is done with a lot of money and pomp and extravaganza,so if the girl/actress is beautiful then the marriage has chances of being watched and telecasted.

            • சம்பந்தம் இல்லாத பதில் பாஸ். ஜோடிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரா இருந்திருந்தா நடந்திருக்கும் சடங்குகளை பற்றி மீடியா பேசுமா? அவர்கள் சாதியை குறிப்பிடுமா? நாசுக்கா தவிர்த்து இருக்காதா? ஸ்னேஹா அழகா இல்லையாங்கறது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்ல பாஸ்.

              • Ungalukku mukkiyam illa,but 3 crore kuduthathu adhukkaga thaan.Appadi oru thaazthappatu azhagana actress kalyanam nadantha enna aagumnnu enakku theriyadhu,ithe maadhiri telecast pannuvaangalanum theriyala.

                Podhuva enakku indha ideave pudikkala,kalyanam ellam private vishayam,adha telecast ellam panna koodathungrathu thaan yen karuthu.

                • என்ன பாஸ்! அவங்க பண்ற கூத்து தப்புன்னு சொல்றீங்க அத பத்தி யாராச்சும் எழுதினா அதையும் தப்புன்னு சொல்றீங்க.

        • தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை எந்த FC, BC, MBCக்களும் கல்யாணம் பண்ணுவதில்லை. அப்படியே செஞ்சிருந்தாலும் அது ரொம்ப ரொம்ப சொற்பமே..! அப்படி நடக்கும் காலகட்டங்களில்தான் சாதிகள் ஒழியும். சமத்துவம் மலரும். அதுவே புரட்சி.

          • நீங்க சொல்ற அந்த சொற்பம் கூட, பணம் புகழ் போல் ஏதாவது காரனத்துக்காகத்தான் இருக்குமே தவிர சமத்துவத்துக்காக இருக்காது.நடந்த இந்த கல்யானத்த போய் சாதி ஒழிப்பு சமத்துவம் என்று சம்பந்தப்படுத்தும் லூசுப்பசங்களை பற்றி என்ன சொல்றது?

              • உங்கள யாரு புரட்சி கல்யாணம் பண்ண சொன்னா? நாம பேசறது தனி மனித வாழ்க்கையை ஊடகங்களுக்கு விற்று காசு பார்ப்பது பற்றியும், தனது சாதி அபிமானத்தை தம்பட்டம் போட்டு டிவி யில் காட்டும் கூத்தாடிகளை பற்றியும்தான்.

                  • //Saadhi abhimanan ellam prachanaye illa,kalyanathula caste irukka thaan seyyum,adha paaka makkal irukurathu thaana prachanai//ஆம் அதுதான் பிரச்சனையே

  12. கோவையில் புதிய கலாச்சாரம் கிடைக்கும் இடம்… மணிக்கூண்டு வேல்கோ செப்பல் கடை அருகே இருக்கும் புத்தக கடை

  13. ஒவ்வொரு வருஷமும் எல்லா கடவுளுக்கும் திருக்கல்யாணம் நடக்குது. ஒவ்வொரு வருஷமும் தாலி கட்டுறாங்க. இது சரின்னா, சினேகா பிரசன்னா கல்யாணமும் சரியே.

  14. நீங்க வேற…

    விஜய் டீவியில் இவர்கள் திருமணம் மட்டுமல்ல, மற்ற நடிகர், மருத்துவர் ஐயா பேரன் திருமணம் போன்றவையும் ஒளி பரப்பப்பட்டன…
    அண்ணாச்சிக்கு இத்திருமணம் ஏன் உருத்துகிறதோ தெரியவில்லை 🙂

    மற்றபடி, தமிழரின் சினிமா மோகமும் மயக்கமும் எல்லாருக்கும் தெரிந்ததாயிற்றே…
    நாம் தான் முகத்தை நம்பி ஓட்டு போடுகிறோமே…நடிகருக்காக சன்டையிட்டு மன்டை உடைத்துக்கொள்ளும் வீரர்கள் நம் மக்கள் என்பதை மறக்காதீர்கள்…

  15. //சரிலே நாளைக்கு அக்கா சினேகாவுக்கு ஒரு குழந்தை பொறந்து, வளந்து ஆளாயி, ஐயங்காரு – ரெட்டி காம்பினேஷன்ல ஒரு வாரிசை கல்யாணம் பண்றதா வச்சுக்குவோம். கூட்டிப்பாத்தா இங்கன நாலு சாதி வருது. அந்தப்படிக்கு நாளைக்கு சினேகா அக்கா குழந்தை நாலுவாட்டி தாலி கட்டுமா?//

    அருமை

  16. //பாப்பான் எதிலவாது மாட்டுவானான்னு கண் கொத்தி பாம்பு மாதிரி இருக்கிறது ரொம்ப அருவருப்பா இருக்கு… //

    //விருப்பமுள்ளவன் ஒளிபரப்பரான், விருப்பமுள்ளவன் பாக்கப் போறான். இதுல நமக்கு என்ன? பிரசன்னா எத்தனை தாலி கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன? இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.//

    //semma mokkai,ivunga kalyanam tvla varadhe oru vetti nigazhchinna athai aNu Anuva aaraychi seyradhu adha vida vetti velai.//

    செய்தித்தாள்களைப் புரட்டினால் இவர்களைப் பற்றிய நியூஸ்; டிவியைப் போட்டால் இவர்களைப் பற்றிய நியூஸ்; நெட்டில் புகுந்தால் இவர்களைப் பற்றிய நியூஸ்; ஃபேஸ்புக்கிலும் இவர்கள்தான்; மின்னஞ்சல்களிலும் இவர்கள்தான்; பஸ்ஸில் பிரயாணிக்கும்போதும் இவர்களைப் பற்றிய பேச்சுதான்!! நாம் இவர்களை, இந்தத் திருமணத்தைப் பற்றிய கவனமின்றி இருக்க நினைத்தாலும் நம்மை இந்த சுழலுக்குள் இழுத்துச்செல்ல அத்தனை மீடியாக்களும் வெகு கவனமாய் இருக்கின்றன! காரணம் பணம்..பணம்.. பணம்! நம்மை, நம் சகோதரர்களை, நம் சமூகத்தை வலுக்கட்டாய நுகர்வுக்கு ஆளாக்குவதை எப்படி தனிப்பட்ட விஷயம் என்கிறீர்கள்? தனிப்பட்ட விஷயம் எதற்கு தரணி முழுவதிலும் தண்டோரா போடப்படுகிறது? அவர்கள், அவர்களின் சொந்த பந்தங்களுக்குச் சொல்லி ஒரு வட்டத்திற்குள் இரு மணம் இணையும் திருமணம் நிகழ்த்தினால் பத்தாதா?

  17. கலப்புத் திருமணம் செய்வோரை வெட்டித் தள்ளுங்க என்று பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவையெல்லாம் விட்டு விட்டு இப்படி கல[ப்புத்திருமணம் செய்பவரை இம்சிப்பது த்குமோ??

    • காடுவெட்டி குருவெல்லாம் ஒரு ஆளுன்னு சட்டமன்றத்துல தூக்கி வச்சிருக்கீங்களே ஒய்யாரமா… ஓட்டுப் போட்டு அந்த ஆளை ஜெயிக்க வச்ச அந்த மக்கள் கிட்ட இந்தக் கேள்வியக் கேட்டீகளா? நீங்கள் மெச்சும் இந்திய ஜனநாயகம் எப்படி இருக்குனு புரியுதுல்ல?

  18. \\தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை எந்த FC, BC, MBCக்களும் கல்யாணம் பண்ணுவதில்லை.\\

    ஏன் தாழத்தப்பட்ட சமூகத்தில் ஆண்களுக்குப் பஞ்சமா.. இப்படி சலித்துக் கொள்கின்றீர்கள்.

    சாதி அழிப்புக்கு கலப்பு திருமணம் செய்தால் போதுமா.. அதுவும் இந்து மதத்திற்குள் ஏன் செய்ய வேண்டும். சாதி தாண்டி மதம் தாண்டி சைனா, ரஸ்யா, அமெரிக்கா போன்றவற்றில் இருப்பவர்களை உங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தால்,..

    சாதி அழியும்,
    மதம் அழியும்,
    இந்தியா அழியும்..

    ஏன் இப்படி இந்து மதத்தில் இருக்கும் தலித் அல்லாதவர்களுடன் குழந்தை பெற்றுக் கொள்ள துடிக்கின்றீர்கள் என தெரியவில்லை…

    • தலித் அல்லாதவங்களோட படுக்கறதுக்கு இங்க யாரும் துடிக்கல.. தாழ்ந்தவங்க, கீழ்ஜாதின்னு முத்திரை குத்தி வச்சிருக்கானுங்களே.. அந்தக் கயவாளிகளோட முகத்திரையக் கிழிக்கத்தான் அப்படி சொன்னேன். ஒரு அய்யர் கூட நாயுடு படுத்து புள்ள பெத்துக்க துடிச்சா அது கலப்புத் திருமணம் + சமுதாய முன்னேற்றம்னு வாழ்த்து. அதையே ஒரு தலித் செய்ய நினைச்சா.. படுக்கறதுக்கு அலயறான்னு ஒப்பாரி..

      மனுசங்களுக்கிடையில மனுஷங்க மட்டும்தான்யா இணையனும். ஆடு கிடாயோடதான் படுக்கும். ஆண் சிங்கம் பெண் சிங்கத்தோடதான் சேரும். மனுசன் மனுசியோடதான்யா சேரணும்! எந்த ஜாதியா இருந்தா என்ன.. மதமா இருந்தா என்ன நாடா இருந்தா என்ன? மனசுக்குப் பிடிச்சதுன்னா கட்டிக்கவேண்டியதுதான்..!

    • தாழ்த்தப்பட்ட பெண்கள் யாரும் துடிக்கவில்லை பாஸ். இன்னிவரைக்கும் பார்ப்பனர்கள் தங்கள் பெண்களை தாமே முன்வந்து நீங்க சொல்றது போல அமெரிக்க இங்கிலாந்துகாரனுக்கு எல்லாம் கட்டிக் குடுத்திருக்காங்க. உதாரணம் கீதா பென்னெட். இதுவே ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு கட்டி கொடுப்பாங்களான்னு கேட்டா , புள்ள பெத்துக அலையராங்கன்னு அர்த்தமா ?

      • இது பார்ப்பானை இழுத்துவிட்டு மடை மாற்றும் முயற்சி.. செல்லாது.. செல்லாது..

        • அவர் சொன்னது தாழ்த்த பட்ட் பயனுக்கு பார்பனர்கள் தஙகள் பெண்னை கட்டி கொடுப்பார்களா? ஆனால் அமெரிகனுக்கு அல்லது இங்கிலாந்து காரனுக்கு கட்டி கொடுப்பார்கள்.

          • Ippo yaarunga arranged marriage panraanga,30 vayasu varaikkum love set aagadhavunga thaan,35 varaikkum intra caste marriage panna try pannuvanga,adhukku appuram yaaro oruthar kedaicha pothumnnu irukkanga.

            Idhula community thaandi eppadi arranged marriage seyya mudiyum,Aana suppose rendu appavum/illa ammavum officelayo illa munnadi scholllayo friendsa iruntha appadi patta arranged marriage nadakkalam,aana veembukku valukattayama ellam nadakkathu bossu.

        • நான் சொல்றது கட்டிகிட்டவங்கள பத்தி இல்ல பாஸ், கட்டி குடுத்து இருக்காங்களா? இரே ஒரு சம்பவம் சொல்ல முடியுமா? மேல் சாதிக்காரங்க பிள்ளைங்க வேற மேல் சாதி பிள்ளைங்கள கல்யாணம் பண்ணினா பிரச்னை பண்ணுவாங்க ஆனா ஒரு கட்டத்துல ஒத்துமையா ஆகிடுவாங்க. இதுவே தாழ்த்தப்பட்ட ஆளையோ பொன்னையோ அந்த பிள்ளைங்க கல்யாணம் பண்ணினா ஜென்மத்துக்கும் ஏத்துக்க மாட்டாங்க. இது கிராமத்தில் நடந்த கவுரவ கொலை விழும் , இதுவே சிட்டியில நடந்தா பெற்றோர் பிள்ளை உறவை துண்டித்திருவாங்க (ஏன்னா அவுங்கல்லாம் நாகரிகமானவுங்க இல்ல)

    • mune said://ஏன் இப்படி இந்து மதத்தில் இருக்கும் தலித் அல்லாதவர்களுடன் குழந்தை பெற்றுக் கொள்ள துடிக்கின்றீர்கள் என தெரியவில்லை…//

      Dai psycho mune, SERUPALA ATTPAN

  19. //Thaazthapatta payyan brahmin ponna kalyanam panni kitta 2-3 caseuu enakke thriyum//இது அந்த பெண்கள் தானாக போய் கல்யாணம் செய்து இருப்பார்கள் .பார்ப்பனர்கள் தானாக முன்வந்து தங்கள் பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டார்கள்

    • அட நீங்க வேற. பிராமணர்கள் மட்டுமல்ல, எந்த ஜாதிகாரனும் தானாக முன்வந்து தலித்துகளோடு சம்மந்தம் வைத்து கொள்ள மாட்டான். காதல் கல்யாணத்துக்கே எவ்வளவு எதிர்ப்பு!

  20. வினவு ஆசிரியர் குழுவிற்கு,

    இக்கட்டுரை குறித்த எனது பார்வையை வினவின் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தேன். பதில் ஏதும் இல்லையே.. வினவு அது குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

    vinavu@gmail.com

    ஆசிரியர் குழுவின் பார்வையில் எனது மின்னஞ்சல் பட்டதா என்று தெரிய விரும்புகிறேன்.

    நன்றி.

  21. இந்த நியுஸ வெச்சு நீங்க பண்ற பிரச்சாரத்திற்கு என்ன பேர் வச்சிருக்கீங்க…. vayitherichal nu vecha nalla irukkum..dei nee senjadhum oru vibacharamdhaan..vera vela vetti irundha paaru…makkalukku naalu nalla karutha sollu adhavittutu ippadi mokkaiya ezhudhadha !! enna puridha ??

  22. சினெகா அக்காவுக்கு குழந்தை பிறப்பதை நேரடி ஒளி பரப்பு செஇதால் இன்னும் காசு கிடைக்கும்லே

Leave a Reply to Sneha-Prasannna பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க