privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

-

மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்.

மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.

இந்த மின்கட்டண உயர்வென்பது,  டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடே என்பதை விளக்கியும், “மின்சாரம் தனியார்மயமானதே, தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம். மின்வெட்டில்லா தமிழகம் வேண்டும்; ஆபத்தான அணுஉலை வேண்டாம்” என்ற முழக்கத்தினை முன்வைத்தும்,  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தொடர் பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகின்றன.

சென்னையில், 04.04.2012 அன்று ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. மற்றும் ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையை மறித்தும், ஜெவின் கொடும்பாவியை எரித்தும் தோழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருச்சியில்,  10.04.2012 அன்று, ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் சேர்ந்து மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.  ஆர்ப்பாட்டத்தில், மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மறுகாலனியத் தாக்குதலை அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

திருச்சி  துவாக்குடியில், 17.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. (தமிழ்நாடு) சார்பில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத புதிய ஜனநாயகம் இதழில் மின்சாரம் தனியார்மயமாக்கம் குறித்து வெளியான கட்டுரைகளை விளக்கி அறைக்கூட்டமொன்றை நடத்தினர்.

ஓசூரில் 09.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. அமைப்பின் சார்பாக, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான தர்கா பேருந்து நிறுத்தம் அருகே திரளான தொழிலாளர்களது பங்கேற்புடன் தெருமுனைக்கூட்டத்தை நடத்தினர்.

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் 15.04.2012 அன்று  கோத்தகிரியில்  பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தையும் இப்பகுதியெங்கும் நடத்திய தோழர்களது பிரச்சாரத்தையும் பகுதிவாழ் உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரவளித்தனர்.

கரூரில், 09.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் உழவர் சந்தை அருகில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறுதொழில், பட்டறை, விசைத்தறிகள் நிறைந்த இப்பகுதியில், மின்சாரம் தனியார்மயமானதே மின்வெட்டிற்கான காரணம் என்பதை விளக்கி, இத்தனியார்மயத்தை ஒழித்துகட்ட நாம் ஓரணிசேர வேண்டுமென்று இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக சிறப்புரையாற்றிய தோழர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கடலூரில், 14.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் டவுன் ஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.  பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் சுப.தங்கராசு. சிறப்புரையாற்றினார்,

தருமபுரியில், 13.04.2012 அன்று வி.வி.மு. சார்பில் இராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போலீசின் ஒருமாத கால இழுத்தடிப்பால் நீதிமன்ற முறையீட்டுக்குப் பின்னரே இப்பொதுக்கூட்ட அனுமதியைப் பெற முடிந்தது. மின்வெட்டு, மின்சாரம் தனியார்மயமாக்கத்தின் விளைவுகளை பு.மா.இ.மு.வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்களும்; முல்லைப்பெரியாறு அணையை மீட்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் நாகராசு அவர்களும் சிறப்புரையாற்றினர்.

இந்த ஊர்கள் தவிர, இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்திலும் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து  மேற்கொண்டு, மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கு எதிராகப் போராட மக்களை அணிதிரட்டி வருகின்றன

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: