privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!

-

‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதிக்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம் இவற்றால்  குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன்.

பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில் வசிக்கிறார்கள். மூத்தமகள் ஒரு வருடத்திற்கு முன்பு பெந்தகோஸ்தெ எனும் கிறிஸ்துவ பிரிவில் சேர்ந்தார். அதை அப்போதே வீட்டிலிருப்பவர்கள் எதிர்த்து வந்தனர். 6 மாதத்திற்கு முன்பு மூன்றாவது பெண்ணும், மருமகளும் (மகனின் மனைவி) பெந்தகோஸ்தேவில் சேர்ந்து விட்டனர்.

அதிலிருந்து குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டார்கள், ஒன்று பெந்தகோஸ்தே குழு, இன்னொன்று ஹிந்து குழு. எதற்கெடுத்தாலும் பிரச்சனை, சண்டை.

வீட்டில் இருக்கும் வயதானவர்கள் ஹிந்து முறைப்படி சடங்கு, பூஜைகள் செய்ய வேண்டும் என்பார்கள். இல்லை, கிறிஸ்துவ முறைப்படி ஜபம் என்று பெந்தகோஸ்தே குழுவினர் மல்லு கட்டுவார்கள். குடும்பப் பிரச்ச்னைகள் தீர பல பிரார்த்தனைகள், பல யாகங்கள், பல ஜெப கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றாலும் அவை பிரச்சனையை இன்னும் பெரிதாக்கின. ஆண்டவனைத் தொழுதால் மனநிம்மதி என்பார்கள். இங்கோ கோவிலுக்கு போவதா, சர்ச்சிற்குப் போவதா என்ற போட்டியில் அந்த நிம்மதி சீர்குலைந்திருந்தது. கடவுள்களின் போட்டியால் அந்தக் குடும்பத்தில் எப்போதும் போர்க்கால சூழ்நிலையே இருந்தது.

இதன் நடுவே தங்கள் நெருங்கிய சொந்தக்காரர் திருமணத்திற்கு குடும்பமே திருப்பதிக்கு சென்றது. கீழ் திருப்பதியில் தங்கியிருக்கும் போது திருப்பதியில் மகனின் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என தாத்தாவும் பாட்டியும் ஆசைப்பட்டார்கள். ஆனால் மருமகளிடமிருந்து கடும் எதிர்ப்பு. மகன் அமைதியாக யார் பக்கமும் சேராமல் இருந்தார். தாத்தாவும் பாட்டியும் மற்றவர்களுக்குத் தெரியாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு மேல் திருப்பதிக்கு கிளம்பி விட்டார்கள். இதை கிறிஸ்தவக் குழு கண்டுபிடித்துவிட்டது. சேஸ் செய்து அவர்களும் கிளம்பினார்கள்.

மேல் திருப்பதியில் கோவிந்தன் அருளால் மொட்டை போட வேண்டும் என மாமனார் தயாராக, சாத்தான் கோவிலில் மொட்டையா என்று யேசு அருளால் அதை தடுக்க வேண்டும் என மருமகள் முனைய, பரபரப்பான ஒரு தருணத்தில், மொட்டை போடும் இடத்தில் குழந்தையின் தலை நடுவில் உச்சி முடியை கொஞ்சம் வழித்த நிலையில் பிடித்துவிட்டார்கள். யேசுவுக்கும் கோவிந்தனுக்குமான போட்டியின் முதல் ரவுண்ட் ட்ராவில் முடிந்தது.

ஊர் திரும்பிய மறு நாளே குழந்தைக்கு காய்ச்சல்.  திருப்பதி சென்று மொட்டை போடாமல் வந்ததால்  கடவுள் சோதிப்பதாகவும், அதனால் தான் குழந்தைக்கு உடல்நிலைக் குறைவு என தாத்தா தலைமையில் ஹிந்து கோஷ்டியினர் வாதிட்டார்கள். இவர்களுக்கு சப்போர்ட்டாக ஊரில் உள்ள பல பெருசுகள், “திருப்பதியான்கிட்ட போய் விளையாடலாமா” என்று ஏத்தி விட்டார்கள்.

‘இல்லை இல்லை கிறிஸ்துவ குழந்தைக்கு மொட்டை போட முனைந்ததால் சாத்தான் தாக்கி, குழந்தைக்கு உடல் நலக் குறைவு’ என பெந்தகோஸ்தே குழு பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. இவர்களுக்கு ஆதரவாக ஊரில் இருந்த பிற பெந்தகோஸ்தேக்கள் சேர்ந்து விட்டனர்.

பிறகு கிறிஸ்துவக் குழுவினர் சாத்தானை வீழ்த்த ஒரு திட்டம் தீட்டினார்கள். ‘ஜெபக் கூட்டம் ஒன்று நடத்தி பிரார்த்தித்தால் குழந்தைக்கு உடல் நலம் சரியாகிவிடும்’ என்று ஒரு ஜெபக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். பாதி ஏற்பாடுகள் வரை கள்ள மவுனம் சாதித்த ஹிந்து குழு, நடுவில் களத்தில் இறங்கியது. குழந்தைக்கு மொட்டை போடுவதாக மஞ்சத் துணியில் உச்சி முடியை கட்டி வைத்து வேண்டிக் கொண்டு சண்டை தொடங்கினார்கள்.

ஜெபத் தந்தை ‘ஏசுவின் கருணை இந்த பாவிகளுக்கு கிடைக்கக் கூடாது’ என சாத்தான் சதி செய்வதாகக் கூறி, அதை முறியடித்து யேசுவின் கருணையைப் பெற குழந்தையின் அம்மாவும் குடும்பத்தின் இதர கிறிஸ்தவ உறுப்பினர்களும் 10 ஞாயிறுகள் ஊழியம் செய்யவும், இரண்டு மாத சம்பளத்தை(கணவன் மனைவி இருவருமே அரசு பள்ளியில் ஆசிரியர்கள்) சர்ச்சிற்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ளவும் பணித்தார். ஆக இந்த கோவிந்தா – அல்லேலுயா சண்டையை வைத்து பாதிரி பல ஆயிரங்களை தேத்திவிட்டார்.

எப்படியாவது கூட்டம் நடத்திவிட்டால் சாத்தான் ஒழிந்து தேவனின் கருணை கிடைத்துவிடும் அல்லவா! ஜெபக் கூட்டம் நடத்தி விட்டு சர்ச்சிற்கு காணிக்கை தருவதையும் நேர்ந்து கொண்டு அதன் பிறகு குழந்தைக்கு மொட்டை போடலாம் என சமரசத்திற்கு வந்தார்கள். (பின்னால் அதை தடுத்துவிடலாம் என்பது ஐடியா).

ஜெபம் உச்சம் அடைந்து அனைவரும் சத்தம் போட்டு அல்லேலுயா போட்டு ‘அன்னிய பாஷை’யில் உளறத் தொடங்கினார்கள். குழந்தை மிரண்டு அழத் தொடங்கியது. அதனால் அம்மா குழந்தையை வீட்டினுள் தொட்டிலில் போட்டு விட்டுச் சென்றார். ஜெபக் கூட்டம் உச்ச பிரார்த்தனையை அடைந்தது, அல்லேலூயா அதிர தொடங்கியது.

ஏசுவின் ஆட்கள் அங்கே செம ஃபார்மில் இருக்கும் போது வீட்டிலிருக்கும் குழந்தை தனியாக இருப்பதைக் கண்டுகொண்ட, கொஞ்சமும் தாமதிக்க விரும்பாத ஹிந்து கோஷ்டியினர் முடி திருத்துபவரை அழைத்து வந்து குழந்தைக்கு மொட்டை போட்டு முடியை மஞ்சள் பையில் சேகரித்து விட்டனர். முடியை அன்றிரவே திருப்பதி சென்று காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தனர்.

நியாயமாக பார்த்தால் இப்பொழுதும் அல்லேலுயா Vs  கோவிந்தா போட்டி டிரா. சரி அதை விடுங்கள், இருக்கும் ஏதோ ஒரு கடவுள், இல்லை இரண்டு கடவுளரின் அருளால் குழந்தை நலமாகி இருக்க வேண்டும் அல்லவா? ப்ச், காய்ச்சல் அதிகமாகி விட்டது.

காய்ச்சல் அதிகமாகியதால், 10 ஞாயிறு ஊழியம் என்ற வேண்டுதல் 1 வருடத்துக்கு அனைத்து ஞாயிறுகள் என்று ஆனது. இரண்டு மாத சம்பளம் காணிக்கை என்பது மூன்று மாதமாகிவிட்டது. சண்டை நீடிக்க நீடிக்க பாதிரியும் தனது ரேட்டை கூட்டிக் கொண்டே வந்தார். கோவிந்தா சைடு ரேட்டும் கண் மண் தெரியாமல் எகிறிக் கொண்டே வந்தது. அதன்படி கோவிந்தாவுக்கு தங்க ஊஞ்சல், சிறப்பு பூஜைகள் என்று காணிக்கைகள் கூடியிருந்தன. இதற்கிடையில் மற்ற ஊர்க்காரர்கள் திட்டி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வைத்தார்கள். ஒருவேளை இந்த வரலாற்றுப் புகழ்மிக்க சண்டையால் அந்தக் குழந்தைக்கு ஒன்றுகிடக்க ஒன்று ஆகியிருந்தால்? அப்போதும் அவர்கள் இறுதிச்சடங்கு யார் வழக்கப்படி என்று சண்டைதான் போடுவார்கள்.

நல்லவேளை இப்பொழுது குழந்தைக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றதால் தான் குணமாகியது என்று என நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மை என்ன?

அல்லேலுயா - கோவிந்தா - மொட்டையேசுவும் கோவிந்தாவும் மூன்றாவது தவணையாக வாங்கிய காணிக்கையில் மனம் குளிர்ந்து, ஊரார் உருவில் வந்து வலியுறுத்தி குழந்தையை மருத்துவமனைக்கு போகச் செய்த அந்த மெய்சிலிர்க்க வைக்கும் செயலால்தான் குழந்தைக்கு உடல்நிலை சரியானது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும்.

பாருங்களேன், இப்பொழுதும் அல்லேலுயா vs கோவிந்தா போட்டி டிராதான். இறுதியில் இந்த ஆட்டத்தின் பயனாக அந்தக் குடும்பம் பெற்றது என்ன? பல ஆயிரம் ரூபாய்களை காணிக்கையாக செலுத்தினார்கள், வீட்டிற்குள் நிம்மதி பறி போனது, குழந்தைக்கு கடும் காய்ச்சல் வந்து அவதிப்பட்டது.

இதற்கு என்னதான் தீர்வு?

இனி ஒரு வீட்டில் இத்தகைய அல்லேலோயா, கோவிந்தா பிரிவுகள் இருந்தால் அந்த வீட்டுக் குழந்தைக்கு பாதி மொட்டையும், கழுத்தில் பாதி சிலுவையை மாட்டி விட்டு சமரசம் செய்து கொள்ளலாமோ? இதை விட நல்ல ஆலோசனை இருந்தால் நீங்களும் சொல்லலாம்.

_______________________________________________

– ஆதவன்

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

    • வாசகர்கள் கவனத்திற்கு: இந்தக் கட்டுரை ஒரு உண்மைச் சம்பவத்தை அப்படியே எதுவும் மாற்றாமல் எழுதப்பட்டுள்ளது.

    • திரு நம்பல்கி ஒரெ பந்தில் இரன்டு சிக்செர்,நீஙக கூட அடிக்கலாம் அது நோ பாலா இருந்தா!!! Free hit nu onnu irukku theriyuma nambalki ???

  1. தாயத்து மந்திரிஷ்ஷு கட்டினால்தான் நீர் சரிப்படுவீர்….
    இலாவிட்டால் ……போயசு தோட்டதில் புடிஷ்ஷு கொடுத்துவிடுவேன்…..
    சமர்த்தா சாப்பிட்டு…

  2. ஷப்பா…படிக்கும் போதே கண்ண கட்டுதே..நிஜத்துல இப்படி ஒரு குடும்பம் பக்கத்து வீட்ல இருந்தா…அதோகதிதான்!!

  3. மிக அருமையான கட்டுரை . எழுத்து நடை நகைச்சுவையாய் இருந்தாலும் , உள்ளடக்கத்தில் ஆழமான கட்டுரை

  4. Sir truly great… Even when i was a KID i have seen in christian missionary meeting people driving away evil spirits.. Also when some pastors come to house they use to keep hands on my head and pray and say that god has sent his power inside me but i have never felt anything.. All the above made me to think and make a decision that there CANNOT be any GOD.. But the way u have written is really super…The evnt of chasing the group to THIRUPATHI reminded me of 80s tamil movies.. At climax after all the fight hero will stop the marriage really funnyyy :):):):):)

  5. அல்லேலுயா கோக்ஷ்டியில் ஒரு பெண்ணை நேற்று பார்தேன்.. இந்த பகுதியில் என்ன பிரச்சனை வந்தாலும் மக்கள்
    எங்களிடம் வருவார்கள், நாங்கள் தான் தீர்த்து வைப்போம் என்றார் அதற்கு உதாரணமும் சொன்னார். இப்போ
    தான் புரியுது பிரச்சனையே இவங்க தான் கிளப்புராய்ங்கன்னு..

  6. பிரச்சனய கெளப்புறதே இந்த ஹல்லேளுஜாஹ் groupu தான். ஒவ்வொரு தடவையும் நெல்லை-குமரி expressula பயணம் செய்யும் பொழுது இவுங்க செய்யுற மங்குனி பிரசாரத்துக்கு ஒரு அளவே இல்ல.

    நான் பொய் கடல் கரையுள உக்காந்தன், கடவுளின் பரிசுத்த ஆவி என்னை தீண்டியது,அப்பவே கண்ணா கட்ட ஆரம்சிரும்.

  7. பரம பிதாவே !
    சாத்தானின் உருவமான நாத்திகர்களையும் கம்யூனிஸ்டுகளையும் பாவத்திலிருந்து மன்னிப்பாயாக !

    • பாவம், புண்ணியம், விதி என்பதெல்லாம் சுத்தப்பொய்..

      சரி இயேசுவைபோய் கடவுள் என்று சொல்லுறீங்க ஆனால் அவர் ஒரு சாதாரண ‘சுயநலம்’ கொண்ட ஒரு மனிதர் அம்புட்டுதான்,

      உங்க கடவுளுக்கும் எங்க கம்யூனிஸ்டுக்கும் உள்ள வேறுபாடு:

      இயேசு கிருஸ்து அவர்களை சிலுவையில் அறையும்போது வலி தாங்கமுடியாமல் கடவுளை நோக்கி ”என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்” (Eloi, Eloi Lama Sabkthani) என்று ஒரு விரக்தியில், ஏமாற்றத்தில், நொந்துபோய் சொல்வார். அவர் வாழ்ந்த காலத்தில் எவ்வளவோ மக்களை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் அப்பொழுதெல்லாம் அவருக்கு கடவுள் மீது எந்த கோபமோ கேள்வியோ எழவில்லை ஆனால் அவருக்கு என்று வரும்போதும் மட்டும் கடவுளை நோக்கி கேள்வி எழுப்புகிறார், அப்படி என்றால் மற்றவரின் துன்பத்தை தன் துன்பமாக கூட அவரால் கருதமுடியவில்லை .

      இது சுயநலம் தானே?

      ஒருவேளை மனிதன் உருவில் இருந்ததால் வலி ஏற்படுவது இயல்பு அதனால் இப்படி கூறினார் என்றால்

      மற்றவருக்காக வாழ்ந்த எங்கள் கம்யூனிச புரட்சி வீரர்களை பாருங்கள்…
      தோழர் பகத்சிங் அவர்களை தூக்கிலிடும் முன் அவர் சொன்னது

      ”நாங்கள் கறுப்புத்துணியால் எங்கள் முகத்தை மூடிக்கொள்ளமாட்டோம்!!!

      நாங்கள் தேசபக்தர்கள், தூக்கிலிடும்போத ு விழிகள் பிதுங்கிக்கொண்ட ு கோரமாக வெளியே வராது!!!

      நாங்கள் புரட்சிக்காரர்கள், எங்கள் நாக்குகள் வெளியே வராது!!!

      நாங்கள் புரட்சிக்காரர்க ள், எங்கள் நாக்குகள் நுரைதள்ளி துவளாது!!!

      நாங்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டவர் கள் கடைசி கடைசியாக இந்த உலகைக் காண அனுமதியுங்கள்” என்றார்

      இதுவல்லவோ தன்னலமற்ற சேவை!
      இதுவல்லவோ அன்பு!
      இதுவல்லவோ உண்மை!
      இதுவல்லவோ தியாகம்!
      இதுவல்லவோ நேர்மை!

      இப்பொழுது சொல்லுங்கள் யார் சிறந்தவர் கடவுளா? இல்லை கம்யூனிஸ்ட?

    • வினவு.. ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம் என்று கோவிந்தாக்காரர்கள் சொல்லவில்லையே.. அல்லேலுயா காரர்கள்தானே அப்படி சொல்கிறார்கள்.. எப்படி இரண்டுபேரையும் ஒரே தளத்தில் வைக்கிறீர்கள்..

  8. // மகன் அமைதியாக யார் பக்கமும் சேராமல் இருந்தார். //

    மதச் சார்பற்ற மகன்.. ஆமா இவரோட குழந்தைய இவரு டாக்டர்ட்ட கூட்டிட்டே போவலையா..?! இவரோட பெந்தேகோஸ்தே மனைவிக்கு, டாக்டருங்க எல்லாம் சாத்தான்கள்ன்னு பாதிரி ஓதிவிட்டுருப்பார்.. அதால அண்ணியும் ஜெபத்தைப் பண்ணியே குழந்தையத் தேத்திரலாம்னு டாக்டராண்டை போகவிட்டுருக்கமாட்டாங்க.. உடனே அண்ணாத்த வேற வழியில்லாம தன்னோட கோவிந்தாப் பார்ட்டிய இறக்கிவிட்டு வழக்கம்போல ’அப்பாவியாக’ நின்னுருக்கார்.. இத என்னமோ, ஏசு-ஏழுமலையான் இழுபறிக் கலாட்டா ரேஞ்சுக்கு கொண்டுபோயிட்டீங்களே ஆசிரியரே…

  9. ஒரு அமைதியான குடும்பத்திற்குள் ‘அல்லேலுயா’ கும்பலின் வருகை ( மிசிநரிகளின் வருகை) என்பது மிக பெரிய கலகத்திற்கும், குழபங்களுக்கும் வழி வகுக்கும் என்று அன்றே தேச பிதா கூறியது எவ்வளவு உண்மை என்பது இங்கு விளங்குகிறது! பிண வழிபாடையும் தமிழர் சமய வழிபாடையும் ஒன்றாக சித்தரிப்பது வினவின் அயோக்யதனத்தை காட்டுகிறது!

    • //குழபங்களுக்கும் வழி வகுக்கும் என்று அன்றே தேச பிதா கூறியது //

      antha aalu thennaappirikaavula irunthu indiavukku vanthathuthaan periya kulappathukellaam kaaranam.

    • U mean to say “Thirupathi Elumalaiyan” is tamilian worship ?? Do NOT try to drive auto in the gap of cycle..

      The base GOD of thirupathi is VISHNU , The GOD’s name itself can’t be written in tamil without the support of KIRANTHA letters.. How can that be worship of tamilians.. Tamilians got CONVERTED to HINDUISM before 3000 years now they are again getting converted to other religions like ISLAM, CHRITIANITY etc.. So both HINDUISM and CHRISTIANLTY are foreign religions to tamilians.. The only difference is HINDUISM intruded first…

      • ஜெனில், மால் என்றும் திருமால் என்றும் மாயோன் என்றும் துழாய்முடிமால் என்றும் அரங்க நகரப்பன் என்றும் ஆராவமுதன் என்றும் தாங்கள் கூறும் விஷ்ணுவிற்கு நாமம் பல, சங்க இலக்கியங்களிலேயே காண கிடைகின்றது! தமிழ் நிலங்களில் முல்லை நிலத்திற்கான இறைவன் திருமாலே! இன்றும் திருவேங்கடத்தில் இறைவனுக்கு தூய தமிழ் மறையால் வழிபாடுகளும் வந்தனைகளும் நடைபெறுகின்றன என்பதை சுட்டி காட்ட விழைகிறேன்!

        • ஹஸ்பண்டு இடையில வந்தவன் தானே.. டைவர்ஸ் பண்ணிட்டு போகச் சொல்றார்.. அவரு தாலி கட்டணுமாம்..

        • For an argument i will accept Vishnu = Mayaon but we have to decide which is the base name because in chritianity the term JESUS is not the actual name of the GOD the actual name is YESUA which is Hebrew when the religion spread in western countries the name is said as JESUS this process is called “Transliteration”… So JESUS is the name given by westerners to the actual name YESUA…

          Now we have to decide out of Vishnu and Mayon which is the original and which is the transliteration… The answer will be surely VISHNU is the originakl name because all the AVATAR stories of VISHUN are written in SANSKRIT later converted to other languages… for example RAMAYAN was written in SANSKRIT by VALMEEKI and then written in HINDI by TULSI DHASS and then by KAMBAN in TAMIL… SO by logic the actual script belongs ONLY to the people who spoke sanskrit.. How come u say that TAMILIANS are from the beginning HINDUS…

          If that is correct then even JESUS exist as YESU in tamil and even we have Tamil Bible and also we have YESU KAVIYAM written by weera ma munivar … so after another 1000 years showing all these literature will u say that CHRISTIANITY is the religion of TAMILS ???

          • To be honest,

            Christianity & Hinduism are hardly different.Christians & Hindus inter marry and remain that without converting.

            BTW Yeshua & Jesus is the same thing,in aramaic language J is pronounced as Y as in Latin,is also called Asus in Greek a mispronunciation of the same word,

            I agree that the CSI and the churches established by people here albeit as a form of Christianity is the same.It is an Indian religion but just inferior,but nonetheless still Indian.

            I agree.

    • // பிண வழிபாடையும் //

      ஏழுமலையானை சாத்தான் என்று கூறியது ஏசு கிறிஸ்து அல்ல.. தவிர நாமும் ஏசுவை பிணமாக்கியே தீர வேண்டுமா..?!!

  10. இதைபோல் பல குடும்பங்கள் உள்ளன.. தாத்தாவும் பாட்டியும் இந்துக்கள். அம்மா அப்பா கிறிஸ்துவர்கள்… நடுவில் குழந்தைகள் பாவம்… அருமையான பதிவு நன்றி

  11. 3000 years is a longtime Jenil,Very longtime.

    We dont even know if the people calling themselves Tamils today,whether they existed 3000 years ago.

    The idea here is not whether one should choose to be Hindu because it is older,but then except the Dalits i cant see anyone complain about Hinduism being bad to them,honestly everyone’s practices together make Hinduism.

    • I also agree that 3000 years is very long.. My point is even ELUMALAIYAN is also an foreign GOD only… Also the topic here is about how two beliefs become reason for a kid’s trouble… But the post i replied wants to achieve that “HINDUISM is the religion of TAMILIANS” thats y i asked “How can a religion mostly based on sanskrit can be the religion of TAMILIANS”..

      Also if u are OK when the conversion happened before 3000 years, HINDUS can also wait for another 3000 years and then accept ISLAM and CHRISTIANITY… Why they are tensed becos of conversions ???

      • ஏழுமலையானைப் பற்றி ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். அவர் வெளிநாட்டின் இறக்குமதி என்றால் எந்த நாட்டில் இருந்து, எப்போது இங்கே அறிமுகமானார் என்று [அந்த நாட்டில் ஏழுமலையானை கும்பிட்டதற்கான சான்றுகளோடு] சொல்ல முடியுமா?

        • Please see comment 14.2.1.2

          Also

          can HINDUISM exist without sanskrit ???

          Why all the base concepts of HINDUISM(VEDAS) are in sanskrit, If its tamilian religion it should have had it in tamil also why it do not exist ??

          • The whole tamil language is mixed with sanskrit and i m not talking aout phonetic sounds alone.

            Why should Hinduism exist or not exist without sanskrit?

            Sanskrit is a language of this land,accepted by the people of this land and nowhere else.

            Nonetheless so many religious songs are in Tamizh and someone can even reject the vedas and be Hindu.

          • பெருமாளைக் கும்பிடுவதற்கு தமிழில் அத்தனையும் இருக்கிறது. இன்றைக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில்கள் அத்தனையிலும் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எல்லா பூஜைகளிலும் படிக்கப் படுகிறது. இதே வழக்கம், விருந்தாவனம், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களிலும் பார்த்திருக்கிறேன். இவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும் அவரவர் மொழியில் இந்தப் பாடல்களை எழுதிவைத்துக் கொண்டு அழகாக பாடுகின்றார்கள்.

  12. மதத்தின் பேரால் இது போன்ற மூடநம்பிக்கை கேவலங்கள் ஏராளமாக நடக்கின்றன. ஒரு பக்கம் நாளுக்கு நாள் அறிவியல் – வளர்ச்சி கண்டு வருகிறது. மற்றொரு பக்கம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளும் புதிய புதிய வடிவங்களில் தோன்றிய வண்ணம் உள்ளன.

    இதற்கான காரணம் அறியாமை மட்டுமல்ல. இன்றைய சமூகக் கட்டமைப்பு நிச்சயமற்ற நிகழ்காலத்தையும் அச்சமூட்டும் எதிர்காலத்தையுமே உருவாக்கி வருகிறது. இச்சமூக கட்டமைப்பை அடித்து நொருக்குவதற்கான போராட்டங்களையும் மக்களின் துன்ப துயரங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக கண்டறிவதற்கான பிரச்சாரத்தையும் இணைத்தே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

    அதற்கு இது போன்ற கட்டுரைகள் பெரிதும் பங்காற்றும்.

    நல்ல செயல்களைச் செய்ய அஷ்டமி, நவமி பார்க்கும் மூடநம்பிக்கை குறித்த ஒரு கட்டுரை:
    அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?
    http://www.hooraan.blogspot.in/2012/06/blog-post.html

  13. Obviously there is a fundamental fact you are missing here,Even today there are thousands of deities,gods which are worshipped in villages/remote places and the organized hinduism never interfered with it and even that jainism & buiddhism which apparently came into contact with Hinduism still exist albeit in a different form than another.

    But Islam & Christianity are political movements masquereading as religions,they are interested only in numerical strength and you cannot change anything that are there in their books however stupid & irrelevant they might be.

    It is not the case with Hinduism,you can argue and change,

    Hinduism started getting political & ritualistic & stupid only after getting attacked politically,physically & economically by the book religions.

    It is not one & the same.

    And Ezhumalayan is infact the proper Tamil God,Ramanjucharya made his vaishnava philosophy right here in Kanchipuram,compared to anyone else.

    • எந்த கிராம மக்களும் விஷ்ணு,பிள்ளையார் போன்ற பார்பன தெய்வங்களை வணங்குவது இல்லை. ஆனால் அவர்கள் வழிபடும் ஐயனார், முனியாண்டி, போன்ற தெய்வங்களை பார்பனர்களும், பார்ப்பனிய மதத்திற்கு மாறிய சூத்திர சாதி இந்துக்களும் வழிபடுவதில்லை.

    • நோ மனிதன்…. பிரச்சனையை முடிச்சு வைக்கனும் தொடங்கி வைக்ககூடாது. அது தான் நமக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  14. \\யேசுவும் கோவிந்தாவும் மூன்றாவது தவணையாக வாங்கிய காணிக்கையில்\\ திருப்பதிக்கு காணிக்கை போடுங்கள் என்று யாரும் வற்ப்புருத்தப் படுவதில்லை. பக்தர்களாக தானாக முன் வந்து போடுவது மட்டும் தான்.

  15. இருக்காதா பின்னே! இந்து மதத்துல இருக்கும்போதே ஆயிரம் பிரச்சினைகள் சந்திக்க வேண்டியிருக்கு, மதம் மாறிட்டாலும் விட்டுருவாய்ங்களா?

  16. in christianitty , complesary converting of hindu people to cristiyanity is happaning more and more today, this people are converted by giving promises like money, land , educational sholorships, and even a piece of land to bury there body in some areas specially in ooty. i my friends family is converted to cristianity because there grandma was died in churh for attain ing her friends family marrage. so her family is priscribed to convert in to cristianity then only you mother get good position after death. by some what they brain wash the people to become a cristian , this people not able to know main rules and polices which said in this religion. they just do prayer thats all. nothing else.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க