privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காடைம் - மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு!

டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு!

-

டைம்-மன்மோகன்

டைம் பத்திரிக்கைகாரன் மன்மோன் சிங் படத்த அட்டையில போட்டு ஏசியிருக்கானாம். காங்கிரசு அமைச்சருங்களும் கட்சிக் காரனுங்களும் அத கண்டிக்கதும், பிஜேபிகாரன் இதான் கோளுன்னு சத்தம் போடுறதும்னு டீவிகாரனுங்களுக்குத்தான் ஒரே கொண்டாட்டம். ஜனாதிபதி எலக்சன், பிராணாப்பு, சங்மான்னு சிரிப்பு சீனுகளுக்கு நடுவுல இப்பிடி ஒரு அழுக சீன்.

‘2002ல தூங்கி வழிஞ்ச டிரைவர்னு ஒங்காளு வாஜ்பாயிய இதே டைம் சொல்லிச்சேன்னு’ சிதம்பரம் பிஜேபிட்ட கேக்காரு. இதுக்கெடையில ‘காங்கிரசு காரனுங்க டைம்க்கு பதிலா டைம்ஸ் ஆப் இந்தியாவ எரிச்சிட்டாங்க’ன்னு இன்டர்நெட்டுல எல்லா பயக்களும் சிரிக்கானுங்க. ‘டைம்ணா என்ன டைம்ஸ் ஆப் இந்தியாண்ணா என்ன, ரெண்டுலயும் டைம் இருக்குல்லான்னு கையில கெடச்சத எரிச்சிருக்கான் காங்கிரசுகாரன், வேட்டிய கிழிக்க பயலுவளுக்கு அடிமையா கெடந்து பழக்கப்படவனுக்கு அறிவு எங்கனயிருந்துடே வரும்?

டைம்ங்கறது நம்ம நக்கீரன், ஜூனியர் விகடன் போல 90 வருசத்துக்கு முன்னாலயே, அமெரிக்காகாரன் ஆரம்பிச்ச பத்திரிகையாம். ஹேடன்கிற கொஞ்சாம் சோக்கான மனுசன், செய்திகள படிக்கிறவனுக்கு ஜாலியா போடணும்னு அன்னைக்கே யோசிச்சிருக்கான். கம்பெனிகாரனுகோ மொதல் போட்டு மொதல் எடுக்க வசதி செய்யறதுக்காக அமெரிக்காகாரன் ஒலகம் பூரா போட்டு வச்சிருந்த ரேடியோ ஸ்டேசன், டிராமா தியேட்டர் இங்கேல்லாம் எடம் பிடிச்சி டைம் பத்திரிகையையும் ஒலகம் பூர பரப்பினானுங்களாம்.

இப்போ டைம் பத்திரிகை அமெரிக்கால ஒரு மாரி, ஐரோப்பால ஒரு மாரி, ஆசியால ஒரு மாரி, ஆஸ்திராலியால ஒரு மாரின்னு அந்தந்த ஊருக்கேத்த மாரி வருகாம்! இந்த மாசம் 16-ம் தேதி போட்ட ஆசியா டைம் பத்திரிகை அட்டைலதான் மன்மோகன் சிங்கு படத்த போட்டுருக்கான்.

இந்த மன்மோகன் சிங், வாஜ்பாயிக்கெல்லாம் முன்னாலயே டைம் அட்டையில எடம் புடிச்சது யாரு தெரியுமா? பர்வீன் பாபின்னு ஒரு இந்தி சினிமாக்காரி. நம்ம ஊரு ஜெயமாலினி மாதிரி கவர்ச்சியா டேன்ஸ் ஆடக் கூடிய பர்வீன் பாபி சான்சு கெடச்சா கொணச்சித்திரமாவும் நடிக்கும். இந்தி சினிமா பத்தி ஒரு கட்டுரை போடும் போது 1976-ம் வருசம் ஐரோப்பா டைம் அட்டைல அவ படத்த போட்டுருக்கான் டைம் காரன்.  நம்ம ஊருல இருந்து போயி வெள்ளக்காரன் ஊருல வேல பாக்கக் கூடிய ஆளுக ஜொள்ளோட பொஸ்தகம் வாங்கணும்னா, இந்த மாரி சினிமா ஆளுக படத்த அட்டையில போடறான்.இடைக்கெடை அரசாளுர கோமாளிகளையும் போடுதான். இப்போ நம்ம நாட்டப் பத்தி அமெரிக்கா காரனுக்கும் டைம் புஸ்தம் படிக்கிறவனுங்களுக்கும் சங்கடம் வந்திருக்கும் போது மன்மோகன் சிங்கு படத்த அட்டையில போட்டிருக்கான்.

மன்மோகன் சிங் நம்ம நாட்டுக்கு என்ன செய்தாருங்கிறதயும் பர்வீன் பாபி சினிமால டான்ஸ் ஆடி நாட்டுக்கு என்ன செய்தாங்கிறதயும் ஒண்ணிச்சி பாக்கணும்.

ராஜீவ் காந்தி காலத்துல கலர் டீவி, பெரிய காரு, போபோர்சு பீரங்கின்னு வெளிநாட்டு பொருளையெல்லாம் எறக்குமதி செய்ய பெர்மிசன் கொடுத்து நம்ம ஊருல இருக்க பணத்தையெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பிட்டானுங்க பாத்துக்கோ. ராஜீவ் காந்தி  தோத்த பொறகு விபி சிங்கு வந்து இன்னும் குட்டிச் சொவுராக்கினாரு. ஒரு கட்டத்துல வெளிநாட்டுல இருந்து பெட்ரோல் வாங்கணும்னா கூட கைல பைசா இல்லாம நம்ம ஊரு தங்கத்தையெல்லாம் கப்பல்ல ஏத்தி லண்டனுக்கு அனுப்பி அடகு வக்க வேண்டி போச்சு!

எடத்தக் கொடுத்தா மடத்தப் புடிக்கிற அமெரிக்காகாரன், நம்ம அரசியல் வாதிங்க குடுமியைப் புடிச்சி உலுக்க ஆரம்பிச்சிட்டான். ‘நான் சொல்றத கேட்டாத்தான் கடன் கொடுப்பேன்’னு அவன் ஆளு மன்மோகன் சிங்க நைசா நிதி அமைச்சராக்கிட்டான். இன்னைக்கும் சுப்பிரமணியம் சாமி இந்த மன்மோகன் சிங்க தாங்குறான்னா அது சும்மா இல்ல, தெரிஞ்சுக்கோ.

obama-Manmohan-Singh-cartoonமன்மோகன் சிங்கு நாட்ட தொறந்து விட்டு சொத்தையெல்லாம் எல்லா வெளி நாட்டுக்காரனும் கொள்ளை அடிக்க ஏற்பாடு செஞ்சாரு. 1994-ல எவனுக்கும் தெரியாம காட் ஒப்பந்தத்தில கையெழுத்த போட வச்சு காலா காலத்துக்கும் நம்மள அடிமையா எழுதிக் கொடுத்துட்டாரு.

கொள்ளக் கூட்டம் உள்ள வந்ததுல கொள்ளைக்கு எடுபுடியா வேல பாத்து சம்பாத்தியம் செஞ்சு காரு, பிளாட்டு, ்பிளாட்டுன்னு ருசி பார்த்த நம்ம ஊரு பயலுக கொஞ்ச பேரு மன்மோகன் சிங்குக்கு ரசிகனாயிட்டானுங்க. 2004-ல காங்கிரசு திரும்பயும் ஜெயிச்சி, சோனியா காந்தி தியாகச் சொடரா பிரதமர் பதவிய தூக்கி எறிஞ்சதும் மன்மோகனுக்கு கோளு அடிச்சு பிரதம மந்திரியாவே ஆயிட்டாரு. சிபிஎம்மு சிபிஐ கச்சிகளையும் கூடச் சேர்த்துக்கிட்டு இல்லாத கூத்தெல்லாம் அடிச்சாரு.

2005-ல அமெரிக்கா போகும் போது ‘எதாவது ஒப்பந்தம் கிப்பந்தம் போடப் போறியா’ன்னு கேட்ட பயலுகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துட்டு ராணுவ, அணு சக்தி ஒப்பந்தம் போட்டுட்டாரு. நேரம் பாத்து நைசா போலி கம்முயூனிஸ்டு கச்சிகளை கழத்தி விட்டுட்டு அணு சக்தி சட்டத்த போட்டாரு. அமெரிக்காகாரன் சொல் பேச்சு கேட்டு செல்போனு, கரண்டு, பள்ளிக் கூடம்னு எல்லாத்தையும் தனியாருக்கு தொறந்து விட்டாரு.

செல்போனு அலக்கத்தைய தனியார் கம்பெனிகளுக்கு கொடுக்கிறதுல 1.76 லச்சம் கோடி ரூவா கொள்ளை, நிலக்கரி தோண்டற விவகாரத்தில 10 லச்சம் கோடி ரூவாக்கு மேல கொள்ளைன்னு தனியாரு கம்பெனிக கொழிக்கிறானுங்க.

‘நாம இவ்வளவு செஞ்சும் அமெரிக்காகாரனுக்கு நன்னி இல்லையே’ன்னு மன்மோகன் சிங் கொமைஞ்சுகிட்டுருக்காரு, சிதம்பரம் மாரி ஆளுங்க ‘நமக்கும் நாளக்கி இதே கதிதானோ’ன்னு மூக்கை உறிஞ்சுறானுங்க.

மன்மோகன் சிங நெறைய செஞ்சிருக்காருதான், இல்லைங்கல, ஆனா இப்போ கொஞ்ச காலமா கொணம் இல்ல. அதான் வெவகாரம். மன்மோகன் சாதிக்கலைன்னா டைம் காரன் சொல்லுறான், சாதிச்சது போறலைங்கறான், அவ்வளவுதான். தெரிஞ்சுக்கோ.

‘நம்ம நாட்டுக்கார பயலுக இதெயெல்லாம் புரிஞ்சுகிட்டு போராட ஆரம்பிச்சிறக் கூடாது’ன்னு கவனமா இருக்க வேண்டியிருக்கு, ‘எதிர்க் கட்சிக்காரன் சான்சு கெடச்சா நம்மள கவுத்துட்டு அவனே அடியாள் சேர்ல உக்காந்திருவானோ’ன்னு பயமும் உண்டு. அதனால கொஞ்சம் பார்த்து பார்த்துதான் செஞ்சு தர வேண்டியிருக்கு, இடையில ஒண்ணுக்கும் லாயக்கில்லாத எலவச திட்டங்கள்ல கெவர்ன்மென்டு பணத்தை எறைச்சு மக்கள பைத்தியாரன் ஆக்க வேண்டியிருக்கு!

இதுதான் நம்ம மொதலாளிகளுக்கும் வெளிநாட்டு எடுபிடிகளுக்கும் ஆங்காரமா இருக்கு. ‘எலவசத்தையெல்லாம் ஒழிக்கணும், இந்த நாடே உருப்படாது, காசு இல்லாதவனையெல்லாம் சுடணும்’னு சத்தம் போடறானுங்க.

நம்ம ஊருல பலசரக்குக் கடை வைக்க வெளிநாட்டு கம்பெனிகாரனுங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கல, பள்ளிக் கூடமும் காலேஜூம் தொறக்க வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வாய்ப்பு இல்ல, இன்சூரன்சு, பேங்கு இதிலைல்லாம் தனியாருக்கு கொடச்சல் கொடுக்குற சட்டங்க நிறைய இருக்கு. மலையையும் காட்டையும் தோண்டி அலுமினியமும் இரும்பும் கொள்ளை அடிக்கலாம்னா அதுக்கு மாவோயிஸ்டுக முட்டு வைக்கானுங்க.

இதுக்கெல்லாம் சேர்த்துதான் மன்மோகன் சிங்க அட்டையில போட்டு, ‘இந்த ஆளு செய்தது வரை சரிதான், ஆனா போறாது, மேக்கொண்டு நம்ம சோலிக்கு வேற ஆள பாக்கணும்’னு டைம் காரன் சொல்லுறான்.

‘அமெரிக்காகாராளே சொல்லிட்டா, மன்மோகன் சிங் போயிறணும்னு’  குதிக்கிறான் பிஜேபி காரன்.  அமெரிக்காகாரனுக்கு வால் பிடிக்க நமக்கு ஒரு சான்சு கெடைக்காதான்னு அவனுக்கு நப்பாசை. ‘அவாள் 2002-ல வாஜ்பாயியையும்தான் ஏசுனா’னு காங்கிரசுகாரன் சமாளிக்கப் பாக்குறான்.

அடுத்தாப்புல அமெரிக்காவுக்கு புடிச்சா மாரி ஒரு பிரதமரை நீரா ராடியாவை விட ஒசந்த அரசியல் புரோக்கர்களும், பர்கா தத்தை விட ஒசந்த பத்திரிகை புரோக்கர்களும் பேசி ஒரு முடிவெடுப்பாங்க, பாத்துக்கோ.

அந்த பிரதமரையும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் ‘ரைட்டு’ நமக்குத்தாம்ல, அத மட்டும் விட்டுக் கொடுத்துறக் கூடாதுன்னு குதிக்கிற பயலுவ இனியாவது திருந்துங்கடே!

__________________________________________

வடசேரி நாகராசன்

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மிகச்சிறந்த கட்டுரை. நகைச்சுவை, நையாண்டியோடு மக்கள் பிரச்சனை விளக்கப்பட்டுள்ளது. இதே மாதிரியான முயற்சிகள் தொடர வேண்டும்.

  2. டைம்ஸ் பத்திரிகைக்கும் டைம்ஸ் ஒf இந்திய பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியாம எதோ ஒன்ன எரிச்ச எங்கள் யுவராஜர்களே இப்புடியே Mainten பண்ணி ஓட்டுங்க

  3. // ’2002ல தூங்கி வழிஞ்ச டிரைவர்னு ஒங்காளு வாஜ்பாயிய இதே டைம் சொல்லிச்சேன்னு’ சிதம்பரம் பிஜேபிட்ட கேக்காரு. //

    இப்புடி ஒரு கட்டுரைய அமெரிக்க டைம்ஸ்ல விட்டா, பெரிய சிங்கு ஏற்கனவே ரொம்ப பிசி.. அதால மாண்டெக் சிங்கை பிரணாப்புக்கு பதிலா ‘முழு நேர’ நிதி அமைச்சராக்கி விட்டுரலாம்.. மதறாசி ப.சி. யை மாவோயிஸ்ட்டோட மல்லுக் கட்டிக்கினு கிடக்க வெச்சமாறியும் இருக்கும், லைனும் கிளியராயிரும்னு ரெண்டு சிங்குமாரும் சேந்துக்கினு பிளான் பண்ணிக்கீறாங்களோன்னு ஒரு டவுட்டு வந்து, நம்மூர்காரரு கரீக்ட்டா பாய்ண்ட்ட பிடிச்சு, டைம்ஸ்ல போட்டா அதுக்கு இன்னாங்கறே இப்பன்னு எல்லாத்துக்கும் எச்சரிக்க விட்டாரு பாரு.. சிங்குக்கு இம்பூட்டிருந்தா தமிழனுக்கு எம்பூட்டு இருக்கும்..

  4. நல்ல கட்டுரை. அருமையான நடை. வருக! வருக! வடசேரி நாகராசன் அவர்களே! தொடர்ந்து எழுதுங்கள்.
    காளமேகம் அண்ணாச்சியோட பக்கத்து ஊரா நீங்கள்! அல்லது அதே ஊரா!

  5. its time for common man like us to join hands with

    m ka e ka

    as they rightly told our enemy very powerfull they make us slaves with their ideiolism image we need to brake it with our inteligence

  6. தாறுமாறா இருந்துச்சு!!! ஒவ்வொரு வரிக்கும் ‘பலே’ ‘சபாஷ்’னு போட்டாகூட தகும்!!
    வாழ்த்துக்கள் தோழரே!
    //அந்த பிரதமரையும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் ‘ரைட்டு’ நமக்குத்தாம்ல//
    ஆமாம்ல… அந்த ஜனநாயக உரிமைய ‘ஸ்ட்ரிக்டா’ கடைப்புடிச்சாத்தான, “a government by US;for US” னு மார்தட்ட முடியும்!!!

Leave a Reply to ஆதவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க