privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க பீரோ புல்லிங் திருடர்கள்!

அமெரிக்க பீரோ புல்லிங் திருடர்கள்!

-

செய்தி -27

பீரோ-புல்லிங்-திருடர்கள்

“ஈராக்கிலிருந்து திரும்பி வரும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளில் பலர் பெரும் பணத்துடன் திரும்புகிறார்கள்” என்கிறார் இராக்கில் அமெரிக்காவின் தோல்வி என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் எம் ஓ பிரையன். ஈராக்கில் இருந்து $43,000 அனுப்பிய ஒரு மரைன் படை வீரரும், விலங்கு பொம்மையில் ஆயிரக்கணக்கான டாலர்களை திணித்து வீட்டுக்கு அனுப்பிய ஒரு வீரரும் பிடிபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் “பல லட்சம் டாலர் கொள்ளை அடித்த பெரிய காண்டிராக்டர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் அவர்.

“இராக்கிய ராணுவ தளம் ஒன்றை அமெரிக்க பண உதவியுடன் மறு சீரமைப்பு செய்திருந்தார்கள். அதன் நிலைமை பரிதாபப்படும் அளவுக்கு கேவலமாக இருந்தது. அந்த வேலைக்கு மூன்று அல்லது ஐந்து மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான அமெரிக்க மேலாளரிடம் கேட்ட போது அவர் சொன்ன தொகை $160 மில்லியன்” என்கிறார் ஓ பிரையன்.

“சில ஆயிரம் டாலர்கள் அளவிலிருந்து பல லட்சம் டாலர்கள் வரை மோசடிகள் நடந்திருக்கின்றன” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு அலுவலர். “திறக்கப்படாத மருத்துவமனைகள் கட்டவும் கைதிகளை வைத்திருக்க முடியாத சிறைச் சாலைகள் கட்டவும் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகளில் நடந்த ஊழல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழு $31 முதல் $60 பில்லியன் (சுமார் ரூ 1.6 லட்சம் கோடி முதல் ரூ 3.3 லட்சம் கோடி) வரை மோசடிகள் நடந்திருக்கின்றன என்று மதிப்பிட்டுள்ளது. ஈராக்கின் மறு சீரமைப்புக்கு அமெரிக்கா ஒதுக்கிய மொத்த தொகையே $62 பில்லியன்தான் என்பதை இந்த ஊழல் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை குழுவுக்கான நிதி ஆதாரத்தை ரத்து செய்து விட்டதைத் தொடர்ந்து அது கலைக்கப்பட்டது. 2031ம் ஆண்டு வரை வெளியிடப்பட முடியாதபடி அதன் அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றது.

சில ஆயிரம் டாலர்களை திருடிய சிறு திருடர்களை பிடித்து தண்டிக்கும் அமெரிக்க நீதி அமைப்பு, பெருமளவு கொள்ளை அடித்த பெரிய காண்டிராக்டர்களை தொடக் கூட முடிவதில்லை என்பதுதான் நிதர்சனம். நாட்டு பாதுகாப்பிற்கான யுத்தம் என்று வரிப்பணத்தையும் போர் வீரர்களின் உயிரையும் வீணடிப்பதை அமெரிக்க மக்களிடம் நியாயப்படுத்தும் அமெரிக்க அதிகார வர்க்கம் போரின் மூலம் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நடைமுறை சாட்சியம்.

இதையும் படிக்கலாம்

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்