privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅடக்குமுறைக்கு அஞ்சாமல் மரிக்கானா தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது !

அடக்குமுறைக்கு அஞ்சாமல் மரிக்கானா தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது !

-

செய்தி-71

தொழிலாளர்கள்-கொலை-1ரண்டு வாரங்களுக்கு முன்பு 34 தொழிலாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தென்னாப்பிரிக்காவின் மரிக்கானா சுரங்கத்தில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

இரண்டு வார பணி நிறுத்தத்திற்கு பிறகு திங்கள் கிழமை சுரங்கப் பணிகளை ஆரம்பிக்க முயற்சித்தது நிர்வாகம். “வேலை நிறுத்தம் செய்யும் 3,000 சுரங்கத் தொழிலாளர்கள் திங்கள் கிழமை வேலைக்கு திரும்பா விட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்” என்று கெடு விதித்திருந்தது லோன்மின் நிறுவனம்.

சம்பள உயர்வு, பணிச் சூழல் மேம்பாடு, ஓவர் டைம் சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடும் 3,000 சுரங்கத் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவது வரை உற்பத்தியை திரும்ப ஆரம்பிக்கும் முயற்சியை முறியடிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர்கள் மத்தியிலும் பேருந்து ஓட்டுனர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து ஆதரவை திரட்டுகிறார்கள்.

இதன் விளைவாக “திங்கள் கிழமை 28,000 தொழிலாளர்களில் 13% மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு வந்தார்கள்” என்று நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது முந்தைய வாரம் வேலைக்குப் போன 30% தொழிலாளர்கள் எண்ணிக்கையை விட மிகக் குறைவானது.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க முன் வராத நிர்வாகம் “தொழிலாளர்கள் வன்முறையை தூண்டுவதால்தான் சுரங்கம் செயல்பட முடியவில்லை” என்று புலம்புகிறது.

லெசோதோவைச் சேர்ந்த தொழிலாளர் அல்போன்சோ மோபோகெங், “தொழிலாளர்களில் சிறு பகுதியினர் வேலைக்கு போயிருப்பதாக கேள்விப்பட்டோம், அதை எதிர் கொள்வதற்காக திட்டமிட்டு வருகிறோம்” என்று கூறினார்.

போலீஸால் கைது செய்த 100 சுரங்கத் தொழிலாளர்கள் போலீஸ் காவலில் அடிக்கப்பட்டார்கள் என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மரிக்கானா படுகொலைக்கு பல நாட்கள் முன்பு நடந்த போலீஸ் அதிகாரிகள் கொலை வழக்கில் தொழிலாளர்களை தொடர்பு படுத்தும்படி வாக்குமூலங்களை தரச் சொல்லி லத்திகளால் அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளனர். “படுகொலை பற்றி விசாரிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தற்காக சிலர் அடிக்கப்பட்டார்கள்” என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுட்டுக் கொன்றாலும் கட்டிவதைத்தாலும் தொழிலாளரின் போராட்டக் குணத்தை அழிக்க முடியாது என்பதற்கு மரிக்கானா தொழிலாளர்கள் முன்னுதாரணமாக விளங்குகின்றனர். உலகமயமாக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்கா, இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் வளர்ந்து வரும் தொழிலாளர் மீதான அடக்குமுறை இனியும் தொடர முடியாது என்பதற்கு மானேசர் முதல் மரிக்கான வரை நடக்கும் போராட்டங்கள் கட்டியம் கூறுகின்றன.

இதையும் படிக்கலாம்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: