privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே.....

நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..

-

செய்தி -74

பாபு-பஜ்ரங்கி-மாயா-கோத்னானி
பாபு பஜ்ரங்கி – மாயா கோத்னானி

2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.

கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.

சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின் கண் முன்னே, சகோதரர்களின் கண் முன்னே கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதும், படுகொலையெல்லாம் நடத்தி முடித்தபின், கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டதும் நரோதா பாட்டியாவில்தான்.

பாபு பஜ்ரங்கி ஒரு மனித மிருகம். “நான் பஜ்ரங்கி, நரோதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்” என்று பெருமையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன். “கொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் முடித்தபின்னர் நான் என்னை ஒரு ராணா பிரதாப் போல உணர்ந்தேன்” என்று தெகல்காவுக்கு பேட்டி கொடுத்தவன்.

இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin) என்று நீதிபதியால் சித்தரிக்கப்பட்டிருக்கும், மாயா கோத்னானிதான் இத்தனை அக்கிரமங்களையும் தலைமை தாங்கிய நடத்தியவள். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளும் மாயாவின் கண் பார்வையில்தான் நடந்தன.

மாயா ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் சேய் நல மருத்துவர். 2002 இல் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மாயாவை அமைச்சராக்கி அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வழங்கினார் மோடி.

தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட பல அர்ப்பணிப்புணர்வு மிக்க வழக்குரைஞர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சியால், நரோதா பாட்டியா வழக்கின் புலன் விசாரணையை உச்சநீதிமன்றம் தனது நேரடி கண்காணிப்பில் எடுத்துக் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்த பின்னர்தான் விசாரணை நகர்ந்தது.

அமைச்சராக இருந்த மாயாவை போலீசு பாதுகாப்புடன் தலைமறைவாக அனுப்பி வைத்தார் மோடி. தன்னை மவுன்ட் அபுவில் தங்க வைத்து மோடி பாதுகாத்தாரென்று தெகல்கா வீடியோவில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான் பஜ்ரங்கி. நரோதா பாட்டியா வெறியாட்டம் நடக்கும்போது, அங்கிருந்தபடியே மாயா கோத்னானி பலமுறை முதல்வர் அலுவலகத்துடன் தொலைபேசியில் பேசி, தங்கள் சாதனைகளை லைவ் ரிலே செய்திருக்கிறார்.

சாட்சி சொல்லிய பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், நீதி பெறுவதற்காக தம் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த வழக்கில் சாட்சி சொன்ன முசுலீம் மக்கள். இன்னமும் மோடியின் குஜராத்தில், அதே நரோதா பாட்டியாவில் குடியிருந்தபோதிலும், எள்ளளவும் அச்சமின்றி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பெண்களின் தைரியம்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தீஸ்தா சேதல்வாத்.

அதுமட்டுமல்ல, கலவரத்தில் ஈடுபட்ட காலாட்படையினரை மட்டுமின்றி, அதற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களையும் தண்டித்திருப்பது இத்தீர்ப்பின் சிறப்பம்சம் என்கிறார் தீஸ்தா.

கோத்ரா படுகொலையினால் ஆத்திரம் அடைந்த இந்துக்களின் எதிர்வினைதான் குஜராத் படுகொலை, என்ற வாதத்தை தனது தீர்ப்பில் நிராகரித்திருக்கிறார் நீதிபதி திருமதி. ஜியோத்ஸ்னா யாக்னிக்.  இது திட்டமிட்ட சதி என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுடன், சதிக்குற்றத்துக்காக தண்டித்துமிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது என்பதையும் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் யாக்னிக்.

நரோதா தீர்ப்பு கூறும் செய்தியாக பா.ஜ.க கூறுவது என்ன? மோடியைப் பற்றி அவதூறு செய்தவர்களின் வாயை இத்தீர்ப்பு அடைத்திருக்கிறதாம். மோடி அரசின் நடுநிலையை நிரூபித்திருக்கிறதாம். ஆனால் இதை கோத்னானியும், பாபு பஜ்ரங்கியுமல்லவா சொல்ல வேண்டும்?

இதையும் படிக்கலாம்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

  1. நீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என்று அன்போடு அழைக்கப்பட்ட மோடிக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும் ?

  2. உங்களுக்கு வேண்டுமானால் இவர்கள் கொலை பாதகர்களாக தெரியலாம்.. ஆனால் சீனுக்கள், பையாகள் மற்றும் நம் பார்பன அன்பர்களுக்கெல்லாம் அவர்கள் தியாகிகள்.. தேசப்பற்றுக்கு இலக்கணமானவர்கள்… மனித உருவில் வாழும் தெய்வங்கள்.. இவர்களின் உள்ளக்கிடக்கையை செய்து காட்டிய அவதார புருசர்கள்… பாரத மாதா படத்திற்கு அருகில் வைத்து பூஜிக்கப்பட வேண்டியவர்கள்..

    இவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்”.. “அன்பே சிவம்”… தூ…

  3. இந்தியாவில் எல்லாமோ இந்துத்துவமயமாகிவிட்டது, முஸ்லீம்களுக்கு நீதி கிடைக்காது, இந்த்துவ வன்முறயாளர்கள் தண்டிக்கவேபடமாட்டார்கள் போன்ற பொய் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி இத்தீர்ப்பு.

    • அப்படியல்ல ,கேள்வி
      திருமதி. ஜியோத்ஸ்னா ,தீஸதா போன்ற சத்தியசீலர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த தீர்ப்பு நிருபிக்கிறது .

  4. பாபு பஜ்ரங்கி ஒரு மனித குல விரோதி. இப்போது தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு கொஞ்சம் கூட சளைத்தவனல்ல இந்த மனித மிருகம். இருவரும் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் என்ற நிலையில் சமமானவர்கள் என்றாலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ரசித்து அனுபவித்து அவர்கள் துடிதுடித்து செத்து மடிவதை சந்தோசமாக பார்த்தது மட்டுமின்றி அதனை தெகல்கா நிருபரின் விடியோ முன் பெருமிதப்பட்டான். இவன் இப்படி முஸ்லிம்களை துடிக்க விட்டு கொல்லப்படுவதை ரசிக்குமளவிற்கு இவனை உருவாக்கியது “ஹிந்துத்துவ பயங்கரவாதம்”. மனித குல விரோதிகளை பாசறைகளில் வளர்த்து வரும் இந்து வகுப்புவாத இயக்கங்களை வெளிச்சத்திற்கு எந்த ஊடகங்களும் கொண்டு வர தயாரில்லை.

    “அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி.

    பாபு பஜ்ரங்கியின் கொள்கைகள்??

    இந்த நாட்டில் முஸ்லிம்களைக் கொல்ல மத்தியரசே உத்தரவிடவேண்டும். அவர்களை கொல்ல, உயர் ஜாதி இந்துக்கள் வீதிக்கு வர தேவையில்லை. பழங்குடி மற்றும் தாழ்த்தபட்ட மக்களிடம், முஸ்லிம்களை கொன்று அவர்களின் சொத்துக்களை சூறையாடிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் போதுமாம், முஸ்லிம்கள் அனைவரும் மூன்று நாட்களில் இந்தியாவிலிருந்து துடைத்தெறியப்படுவார்களாம்.

    கவுசர் பானு என்ற கர்ப்பினியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி தீயிலிட்டு பொசுக்கியவn இவன் தான். இதனையும் அந்த விடியோ முன் பெருமையாக சொன்னவன் “இன்னொரு வாய்ப்பை மோடி சாப் கொடுத்தாலும் சந்தோஷமாக அவர்களை (முஸ்லிம்களை) கொல்வேன்” என்றான். இந்த காட்சியை நேரில் கண்ட, கவுசர் பானுவின் கணவர் பித்து பிடித்தவர் போலானார். கடந்த வருடங்களில் நடை பிணமாக வாழ்ந்த அவருக்கு பாபு பஜ்ரங்கிக்கு எதிரான இந்த தீர்ப்பு பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்க வேண்டும். அவர் அழுததை பார்த்தவர்கள் எல்லாம் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கசிந்தனர்.

    ஒரிஸ்ஸாவில் காவிமயமான பள்ளிக்கூடங்களில் கூட முஸ்லிம்களை வெறுப்பதை பாடப்புத்தகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு என்பதை இந்த சங்பரிவார் பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் விதைக்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஏழு மாடுகளை உண்கிறானாம். ஒரு முஸ்லிமை கொன்றால் எத்தனை மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கணிதப்பாடத்தில் கேள்வி வருகிறது. வெறுப்பை எங்கே விதைக்கிறார்கள் பாருங்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பெரிய சதிவலை எல்லா வகையிலும் பின்னி வருகிறது காவி பயங்கரவாதம், அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தை ஊடகங்கள் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்ப்பது அவநம்பிக்கையாக போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. தீஸ்டா வுக்கு இந்திய முஸ்லிம் சமூகம் கடமைபட்டிருக்கிறது. சகோதரி.. உங்களின் போராட்ட குணத்திற்கும் நேர்மைக்கும் நன்றி.

    கொடூர குற்றமும் புரிய ஊக்கப்படுத்தியதோடு அதற்கு மறைமுகமாக ஆதரவும் கொடுத்து தூண்டிவிட்டு , தூண்டப்பட்டவர்கள் செய்த மனித தன்மையற்ற செயல்களை மூடி மறைக்கவும் செய்த ஒரு நாயை செருப்பால் அடிக்காமல், வருங்கால பிரதமர் என்று துதி பாடும் வெறி பிடித்த கூட்டமா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது?? எவ்வளவு பெரிய ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது ஆனால், காவிமயமான காவல்துறை இன்னமும் தீவிரவாதிகளை முஸ்லிம் சமூகத்தில் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை தடைகளை மீறி இந்த நரோடா தீர்ப்பு வந்திருக்கிறது என்று பின்னோக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது நியாயத்தின் குரல்வலையை நெறிக்க எத்தனை அநியாயவாதிகள் முயன்றிருக்கிறார்கள் என்று.

    • அப்பு ஊதியம், ரொம்ப பொங்காத, டெலிபோன் வயறு பிஞ்சு ஒரு வாரம் ஆகுது! என்னமா கூவுறான் பா! கத என்ன அழகா கட்டற?

      குஜராத்ல கொல்றது காவி பயங்கர வாதம்னா, அசாம்ளையும், ஈரான்ளையும், ஆப்கான்ளையும், பாக்ளையும், பர்மாளையும் கொல்றது என்ன கலர் பயங்கர வாதம்?

      ஈழத்துல சாவடிச்சன்களே ஒரு லட்சம் எங்கள் ரத்தங்களை, அப்போ எங்க போச்சு இந்த கொதிப்பு?

      எங்கயுமே நீ துலுக்கன் நான் துலுக்கன் மத்த எவன் கெட்ட நமக்கென்ன? இதனே லாஜிக்? சுண்ணிக்கும் ஷியக்கும் நடக்கும் சண்டை என்ன கலர் பயங்கர வாதம்? ஊரெல்லாம் உங்களுக்குள்ளேயே குண்டு வேசுகிட்டு நீயும் செத்து மத்தவனையும் செத்து செத்து விளையாட கூபிட்ரையே இது எந்த கலர் பயங்கர வாதம்?

      லட்சத்துக்கும் மேல காஷ்மிரி பண்டிட்ட அனாதைய அடிச்சி தொரத்தினது என்ன கலர் பயங்கர வாதம்? ஊரே செத்த போபால் விஷ வாயு,

      ஆயிரகனக்குல சிக்கியர்கள கொன்ன காங்கிரஸ் பயங்கர வாதம் போன்ற தீர்ப்புகள் இன்னும் கெடப்புல கெடக்க, அப்பாவிகள் மேல பாஞ்சு இருக்கும் இந்திய அரசின் சிருபான்மைன காதலால் விளைந்த இந்த தீர்ப்பு கண்டிக்க பட வேண்டியது!

      மாயா கோத்னானி போன்ற வர்களுக்கு வழங்க பட்ட தீர்ப்பு ஓட்டுக்காக சிறுபான்மை மக்களுக்கு வீசப்படும் எலும்பு என்பதே என் மரகிரீர்கள்?

      இதிலும் செத்தவன் இரண்டு மதங்களையும் சேர்ந்தவனே! இதில் என்ன குளிர்காய நினைக்கிறது காங்கிரஸ்?

      மோடி அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் மூடர்கள் அனைவரும் நீதியின் முன் வெட்கி தலை குனிய வேண்டும்!

      ஒசாமா செத்ததுக்கு பிரார்தன கூடம் வெச்ச கும்பலை முதலில் ஒழித்தாலே எல்லாம் சரி ஆகி விடும்!

      அப்பாவி இஸ்லாமிய சஹோதரர்கள் இத்தகைய வெளி வேஷம் ஆசாமிகளிடம் ஏமாறாமல் தங்கள் சமூஹதின் மீது விழுந்துள்ள சர்வதேச தவறான கண்ணோட்டத்தை துடைக்க வேண்டும்!

      • வெத்யன், ஏன் இவ்வளவு பொங்கல்..

        //கவுசர் பானு என்ற கர்ப்பினியின் வயிற்றைக் கிmappaழித்து அந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி தீயிலிட்டு பொசுக்கியவn இவன் தான். இதனையும் அந்த விடியோ முன் பெருமையாக சொன்னவன் “இன்னொரு வாய்ப்பை மோடி சாப் கொடுத்தாலும் சந்தோஷமாக அவர்களை (முஸ்லிம்களை) கொல்வேன்” என்றான்.// – இது பாபு பஜ்ரங்கியின் வாக்கு மூலம். அவனே ஒத்துகிட்டான்… இப்போ நீ தான்பா கொடுத்த காசுக்கு மேல கூவுற.. இதுக்கு நீ பிச்சை எடுக்கலமப்பா..

        //அப்பாவி இஸ்லாமிய சஹோதரர்கள்//– அய்யாயோ, என்ன இப்படி சகோதரன்னு சொல்லிட்ட.. ஓ.. இது தான் உன் நயவஞ்சக நரித்தனமா?

        //தங்கள் சமூஹதின் மீது விழுந்துள்ள சர்வதேச தவறான கண்ணோட்டத்தை// – எப்படியோ நிதானம் இல்லாம இந்த உண்மையை ஒத்துகிட்ட!

  5. நல்ல தீர்ப்பு. அனைத்து மதபயங்கரவாதமும் ஒழிக்கபட வேண்டும். திருமதி. ஜியோத்ஸ்னா , தீஸ்தா ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

  6. குஜராத் இனப்படுகொலை நடைபெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஆஷிஷ் நந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சாரகராக பணியாற்றிய இன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நடத்திய நேர்முகத்தின் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

    “நேர்முகம் முடிந்து நடுக்கத்துடன் நான் வெளியேறினேன்.அனைத்து குணங்களும் பொறுந்திய ஒரு ஃபாசிஸ்டைத்தான் சந்தித்துள்ளேன் என்பது எனக்கு புரிந்தது. ஃபாசிஸ்டு என நான் அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தை அல்ல. எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக விளங்கினார் அவர். வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியான எதுவும் அந்த சந்திப்பு எனக்கு அழிக்கவில்லை. சமூக வல்லுனர்கள், நிபுணர்களின் கருத்திற்கு இணங்க சர்வாதிகாரத்தின் பரிபூரணமான ஒரு மன நிலை கொண்ட நபராக அவர் விளங்கினார். ஒரு கொலையாளியை சில வேலையில் ஒரு கூட்டுக்கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையை செலுத்த முடியவில்லை”.

    ஆஷிஸ் நந்தியின் அனுமானங்கள் தவறில்லை. பத்தாண்டுகள் முடியும் முன்பே எவ்வித தயக்கமும் இல்லாமல் தான் ஒரு ஃபாசிஸ்டு என்பதை உலகின் முன்னில் நிரூபித்தார் மோடி. கொடூரமான மிருகத்தனத்தின் தீவிர தன்மையால் குஜராத் இனப்படுகொலையின் நினைவலைகள் இன்றும் உலகை நடுங்கச் செய்கின்றன. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புகுந்த மோடியின் எதற்கும் தயாரான தொண்டர்கள் முஸ்லிம் ஆண்களை தாக்கி உறுப்புக்களை சேதப்படுத்தி, உயிரோடு தீயிட்டு கொழுத்தினர்.

    பெண்களையும், சிறுமிகளையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய பிறகு தீயிட்டு கொழுத்தினர். கற்பினிகளின் வயிற்றை கீறி சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிறித்தனர்.

    கொடிய விலங்குகள் கூட வெட்கம் அடையும் அளவிற்கு கொடூரங்களை புரிந்த மோடி ஆட்சிகட்டிலில் அமர முடியும் என்றால் அவருக்கு பொறுத்தமானது இரத்தத்தின் தேய்ந்த கிரீடமாகும்.

    மனித குலத்திற்கு விரோதமான ஒரு கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஒரு கும்பலால் அவமானப்படுத்தப்பட்டு அநீதிக்குள்ளான ஒரு சமூகத்தின் துயரமான நிலையை குஜராத்தில் நாம் கண்டோம்.

    மனிதன் என்பவன் மகத்தானவன் என்ற தத்துவத்தை நாம் இது நாள் வரை எண்ணியதெல்லாம் பொய்த்துவிட்டது. மனித நாகரீகம் இவ்வுலகிற்கு அளித்த மகத்துவமான பங்களிப்புகள் எல்லாம் அழிந்து போய்விட்டது என்ற எண்ணம் உணர்வுள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்ட நாட்கள் தான் அவை.

    அப்பொழுதும் வெறிப்பிடித்த இரத்தக்காட்டேறியின் மர்ம புன்னகையுடன் அந்த இரத்தக்களரி திருவிழாவைப் பார்த்து ரசித்த ஒரு தலைவனும் ஒரு மாநிலமும் இந்த நாட்டில் உண்டு என்றால் அது மோடியும் மோடியின் மாநிலமுமான குஜராத்துமாகும்.

    தனது பாதுகாப்பின் கீழ் வாழும் ஒரு சமூகத்தின் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கும் கொடூரங்களுக்கும் மறந்து போய் கூட அனுதாபத்தில் ஒரு வார்த்தையை கூற இது வரை மோடி தயாராகவில்லை. நிரபராதிகள் இரத்த கறை படிந்த அவலட்சனமான அந்த முகத்திற்கு சொந்தக்காரன் ஜனநாயக இந்தியாவின் தலைவனாக மாறினால் எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனைக்கூட தேசவிரோதமாகும்.

    இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இந்த தேசமோ இந்த தேசத்தின் எதிர்காலமோ தங்களுடைய பொருளாதார விருப்பங்களை விட பெரிதல்ல. தங்களுக்கு பட்டுக்கம்பளத்தை விரிப்பவர்கள் எந்த சாத்தானாக இருந்தாலும் அவனை ஆதரிக்கவும் புகழ் பாடவும் முதலாளித்துவ சக்திகள் தங்களின் கை வசம் இருக்கும் அனைத்து நுட்பங்களையும் உபயோகப்படுத்துவார்கள் என்பது உறுதி.

    வளர்ச்சி என்ற பெரும் பொய்யை திரையாக பயன்படுத்தி இந்த தேசத்தின் பாரம்பரியத்திற்கும் விழுமியங்களுக்கும் பொருந்தாத ஒரு தீய சக்தியை இந்த நாட்டின் தலைவனாக்க ஏகாதிபத்திய சக்திகள் முயல்கிறார்கள்.

    இந்நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் இம்முயற்ச்சியை எதிர்தே தீர வேண்டும். தகுதி இல்லாதவர்களின் ஆசைகள் இந்நாட்டின் மோசமான கனவுகளாக மாறாதிருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் எச்சரிக்கயாக இருந்தே தீர வேண்டும். குற்றவாளி கூண்டில் நிற்பவரை பிரதமர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க முடியுமா?

    இன்றைய காலங்களில் இந்த தேசம் சந்தித்த நெருக்கடிகளின் போதெல்லாம் ஜாதி, மத பேதமின்றி போராடிய பாரம்பரியம் நமக்கு சொந்தமானது. அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக 1857 ஆம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டமே இதற்கு உதாரணமாகும்.

    இன்று வெளிநாட்டில் உருவான ஃபாசிஸம் என்ற வெறுப்பு கொள்கையை விழுங்கி அந்நிய மற்றும் முதலாளித்துவ சக்திகளின் ஆதரவுடன் இந்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்க திட்டமிடம் உள்நாட்டு தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் இந்த தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்டுள்ளது. அத்தகையதொரு போராட்டத்தை முன்னெடுத்து செல்ல அனைத்து இந்தியர்களும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    நன்றி: விடியல் வெள்ளி

    • மத வெறியர்களுக்கு தான் பாதி மூளை என்று நினைத்து இருந்தேன்! துலுக்க மதம் பரவிய இடம் முழுவதும் எப்படி அன்பாலே பரவியதுனு ஊர் நாட்ல இருக்கற எல்லா வரலாற்று ஆசிரியர்களும் பக்கம் பக்கமா எடுத்து சொல்றது நாம் அனைவரும் அறிந்ததே!

      ஊதியம் இங்க வெக்கற பொங்கல அப்டியே கொஞ்சம் திருப்பி இஸ்லாமிய தேசங்களிலும் வெக்க வேண்டும்! டுபாகூர் துபாய் பத்தியும் பல அரபு நாடுகளின் காட்டு மிராண்டி தனமான செயல்களை பத்தியும் வினவே பக்கம் பக்கமாய் எழுதி இருக்கிறது!

      ஏதோ இன்னைக்கு மோதிய தாளிச்சு கொட்டினா ஒரு பத்தி ஓட்டு தெருமேனு காங்கிரஸ் இல்லாத கலர்லேல்லாம் காத்தாடி விட்டு பாக்குது! நம்ம ஊர்ல தான் பணத்துக்காக எதையும் செய்ய தயாரா இருக்கும் கூட்டமும், ஒலகத்துல மத வெறிக்காக போர்க்கும் போதே துப்பாக்கியோட பிறக்கும் கூட்டமும் இருக்கும் வரை கண் இருந்தும் குருடர்களாய் இருக்கும் ஊதியத்த போன்ற ஆளுங்கள திருத்த முடியாது!

      அதோட ஊர்ல சொன்னங்க வெறிபுடிச்ச துளுக்கமாருங்க, யார் என்ன சொன்னாலும் நம்புவானுவோ! ஒன்னு சொன்ன அதுல இருக்கற உண்மை என்னனு கூட தெரியாம, செம்மறி ஆடு கூட்டம் மாதிரி சொன்னத கரக்டா செய்வானுவோனு! அது இங்க தெளிவா தெரியுது!

      எந்த மட பய மவனாவது, இவ்ளோ கொலை கற்பழிப்பு பண்ணிட்டான்னு குற்றம் சோமத்தி இருக்கும் பொது, கெமர முன்னாடி அத ஒத்துபானா? டேஹல்கா சொல்றான் கே ஆர் விஜய கொண்டைல கே டிவி தெரியுதுன்னு, நம்ம ஊதியம் சொல்லுது கே டிவி மட்டும் இல்ல சன் ராஜ் விஜய் எல்லாம் கூட செத்து தெரியுதுன்னு! ஆயிரம் வினவு போன்ற தளங்கள் வந்தாலும் இந்த ஊதியம் மாதிரி ஆளுங்கள திருத்தவே முடியாது!

      • கசாப் கூடத்தான் கேமரா மற்றும் போலீஸ் முன்னாடி கொலை பண்ணினதை ஒத்துகிட்டான்னு தூக்கு தண்டனை கொடுத்திருக்கு.. அதை மட்டும் எப்டி ஏற்றுகுறீங்க Mr சத்யன்.

        கொலை என்று வந்துவிட்டால் அது நல்ல கொலை கெட்ட கொலை என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் முஸ்லீம் பெயரால் நடத்தப்படும் கொலைகளுக்கும் இந்து வெறியர்களால் நடத்தபடும் கொலைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு..

        RSS காரர்கள் மற்றும் இந்து தீவிரவாதிகள் குழந்தைகள் என்றும் அப்பாவிகள் என்றும் பாராமல் ஒவ்வொரு உயிரையும் ரசித்து கொல்கிறார்கள்.. அனுபவித்து ரசித்து கொல்லவேண்டும் என்பதால் தான் குண்டு வைப்பதில்லை.. ஏன் என்றால் அந்த ரசனை மிஸ் ஆகி விட கூடாது அல்லவா..

        குழந்தைகள் வாயில் தீ வைத்து கொல்லப்பட்டார்கள் என்று சத்யன் போன்றவர்களிடம் சொல்லப்பட்டால் அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் முகம் ஞாபகம் வருவதில்லை… அதற்கு பதிலாக கே ஆர் விஜயாவும் அவரது கொண்டையும் தான் ஞாபகம் வருகிறது.. நிச்சயமாக நீங்கள் ஒரு உதாரண இந்து, தேச பக்தன்தான்..

  7. பணி இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் மாநிலத்தின் முன்னால் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் அம்மாநில முதலைமைச்சர் நரேந்திர மோடிக்கு நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தீர்ப்பு தொடர்பாக மனம் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குஜராத் இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடிதான் என்ற உண்மையை தைரியமாகவும் பகிரங்கமாகவும் வெளியிட்டார். மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்களும் செய்தார். இதனால் அவரை பணி இடை நீக்கம் செய்து அவர் மீதே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தது மோடி அரசு. இந்துக்கள் தங்களுடைய கோபத்தை சிறுபான்மையின மக்கள் மீது வெளிப்படுத்தட்டும், அதனை காவல்துறையினர் தடுக்க வேண்டாம் என நரேந்திர மோடி கூறியதாக சஞ்சீவ் பட் கூறியிருந்தார்.

    தற்போது நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தொடர்பாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாயாபென் கோத்னானி மற்றும் பஜ்ரங்தள் தலைவர் பாபுலால் பஜ்ரங்கி ஆக்யோருக்கு சஞ்சீவ் பட் மனம் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

    அவர் தனது கடிதத்தில் “உங்களுடைய விசுவாசமான தளபதிகளான மாயா கோத்னானி, பாபுலால் பஜ்ரங்கி மற்றும் இந்துத்துவா என்ற தீய சிந்தனையினால் தவறான வழிக்கு இட்டுச்செல்லப்பட்ட உங்களுடைய அடிவருடிகளுக்கு அவர்கள் செய்த தவறினால் ஆயுள் தண்டனை பெற்றுள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இவ்வேளையிலே தனக்கும் இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பது போன்று சாமர்த்தியாமாக விலகி இருப்பது சரிதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இக்கடிதம் தொடர்பாக இன்றுவரை மோடி, மாயாபென் கோத்னானி, பாப்புலால் பஜ்ரங்கி அல்லது இன்ன பிற பா.ஜ.கவின் அரசியல் தலைவர்களில் எவரும் சஞ்சீவ் பட்டின் இக்கடிதத்திற்கு பதில் அளிக்க வாய்திறக்கவில்லை.

    “தற்போது ஆயுள் தண்டனை அடைந்திருக்கும் உங்களின் அடிவருடிகளின் குடும்ப நிலைப்பற்றி என்றைக்காவது சிந்தித்து பார்த்ததுண்டா? நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிக்கு பின்னால் இருக்கும் உண்மையான முகத்தின் பிரதிபலிப்பை என்றைக்காவது கண்டதுண்டா? உங்களின் காட்டளைப்படி உங்களது பொய்யான முகத்தை ஊடகத்தின் மூலமாக உலக மக்களுக்கு காட்டி வந்தீர்கள். என்றைக்காவது உங்கள் உண்மை முகத்தை நீங்களே அறிந்ததுண்டா?” என மோடியை நோக்கி தான் எழுதிய கடிதத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

    தங்களுடைய சகாக்களையே பலிகாடாவாக்கும் இத்தைகை செயல்கள் தங்களுடைய ஆட்சியை எப்பொழுதும் தக்கவைக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய மத நம்பிக்கை அல்லாது வேறு ஒரு நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்ற ஓரே காரணத்திற்காக மற்ற மனிதர்களை கொல்வதென்பது நியாயமானதுதானா?” என மோடியை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    கோத்னானிக்கு எழுதிய கடிதத்தில் ” ஒரு பெண்ணாகவும் மருத்துவராகவு இருக்கின்ற நீங்கள் பிறரின் தூண்டுதலினால் எவ்வாறு இது போன்ற மாபாதக செயலை செய்தீர்கள்? ஒரு சமூகத்தின் மீது இருக்கின்ற வெறுப்பின் காரணமாக அவர்களை படுகொலை செய்தது நியாயம் என உங்களுக்கு தோன்றுகிறதா? தங்களின் அரசியல் லாபத்திற்காக உங்களை தூண்டியவர்கள் அதே அரசியல் லாபத்திற்காக உங்களை பலிகாடாக்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.

  8. கையோடு மோடிக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து கசாபு மச்சானுடன் தூக்கிலிட முயலலாமே.

  9. கசாபுக்கு கொடுத்து வந்த பிரியாணி இப்போ “பாபு பஜ்ரங்கி” க்கு போகும்.

    //எந்த மட பய மவனாவது, இவ்ளோ கொலை கற்பழிப்பு பண்ணிட்டான்னு குற்றம் சோமத்தி இருக்கும் பொது, கெமர முன்னாடி அத ஒத்துபானா?//

    நீங்கள் சொல்வது சரிதான். கேமரா முன்னாடி தனது தவறுகளை எப்படி ஒத்துக்கொள்வான்? ஆனால் தெகல்கா நிருபர் சென்றது பொத்தானில் பொருத்தப்பட்டு மறைக்கப்பட்டிருந்த கேமராவினால் பொறி வைத்து அல்லவா அவனது வாக்கு மூலம் வாங்கினார். இன்ன்றைக்கும் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்ன செய்வது.. உண்மைக்கு சில நேரங்களில் உயிரையும் விலை கொடுக்க நேரலாம் என்று தெரிந்தும் தான் துணிகிறார்கள்.

Leave a Reply to S.Ibrahim பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க