privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புல்தரைக் 'குடிசை'!

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புல்தரைக் ‘குடிசை’!

-

செய்தி -84

மனைவி சிநேகா ரெட்டியுடன் அல்லு அர்ஜூன்
மனைவி சிநேகா ரெட்டியுடன் அல்லு அர்ஜூன்

வாங்கும் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு நடிகர்கள் எப்படி சிக்கனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம்தான் நடிகர் அல்லு அர்ஜுன் செய்திருக்கும் காரியம்.

தெலுங்கு நடிகரான இவர், பிரபல ஆந்திர தயாரிப்பாளரான அல்லு அரவிந்த்தின் புதல்வர். இந்த அல்லு அரவிந்த், நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர். பிரஜா ராஜ்ஜியம் என்னும் கட்சியை ஆரம்பித்து ஆடித்தள்ளுபடியுடன் ஹோல் சேல் ஆக காங்கிரசுக்கு விற்றாரே… அந்த சிரஞ்சீவியேதான்.

இதுவரை 11 படங்கள் வரை நடித்திருக்கும் அல்லு அர்ஜுன், பாவம் படத்துக்கு 9 கோடி ரூபாய் வரைதான் சம்பளம் வாங்குகிறார். இதை வைத்துக் கொண்டு நாக்கையா வழிக்க முடியும்? அட, பெற்றோரை கூட காப்பாற்ற வேண்டாம். தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளவாவது பணம் வேண்டுமே? போதும் போதாததற்கு சென்ற ஆண்டு திருமணம் வேறு ஆகிவிட்டது. மணமகள், சிநேகா ரெட்டி. ஐதராபாத்தின் கல்வித் தந்தையான கே.சி.ரெட்டியின் புதல்வி. ஏராளமான கல்வி நிறுவனங்களுக்கு இந்த கே.சி.ரெட்டி உரிமையாளர். அப்படிப்பட்டவரின் மகளை பெரியவர்களின் ‘ஆசிர்வாதத்துடன்’ அல்லு அர்ஜுன் மணம் புரிந்திருக்கிறார்.

குடும்பம் பெருத்து விட்டது. மனைவியை காப்பாற்ற வேண்டும். உணவு உண்ண வேண்டும். குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். உடுத்த வேண்டும். ஊர் சுற்ற வேண்டும். நண்பர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். சுற்றத்தார் வைக்கும் விருந்துகளில் பங்கேற்க வேண்டும். ஆகாயத்தில் பறக்க வேண்டும். கப்பலில் பயணம் செய்ய வேண்டும். அன்றாடம் அறிமுகமாகும் ஒவ்வொரு நகை மாடலையும் வாங்கி வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கூடவே நிம்மதியாக உறங்க, சின்னதாக, அரை ஏக்கரில் ஒரு படுக்கையறை வேண்டும்.

இத்தனை ‘வேண்டும்’முக்கும் பணம் வேண்டும். கிடைக்கும் சம்பளமோ படம் ஒன்றுக்கு வெறும் ரூ. 9 கோடிதான். இதற்குள் எப்படி குடும்பம் நடத்துவது? எனவே தன் சம்பளத்தை ரூபாய் 3 கோடி வரை உயர்த்த முடிவு செய்தார். ஆனால், திரைத்துறையில் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் சங்கங்கள் வழியாக ரூபாய் ஆயிரம் வரை கூடுதலாக படம் ஒன்றுக்கு தர வேண்டும் என அநியாயமாக போர்க்கொடி உயர்த்தி இருப்பதால், தயாரிப்பாளர்களின் சிரமத்தை குறைக்க நியாயமான தன் சம்பள உயர்வை குறைத்து, இப்போது படம் ஒன்றுக்கு ரூபாய் 11 கோடி வரை வாங்குவது என முடிவு செய்திருக்கிறார்.

அல்லு-அர்ஜூன்-கெஸ்ட்-ஹவுஸ்-2இந்நிலையில்தான் இவரது மனைவி சிநேகா ரெட்டி, ஒரு கெஸ்ட் அவுஸ் வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். சொந்தமாக பல அடுக்கு மாடிகள் இருந்தாலும், கணவனும் மனைவியுமாக ஓய்வெடுக்க, மனம் விட்டு பேசி மகிழ, தனியாக ஒரு காணி நிலம் தேவையல்லவா? இதைதான் பராசக்தியாக நினைத்து கணவரிடம் கேட்டிருக்கிறார். அது கூட தன் கணவரின் சிரமத்தை உணர்ந்து, ஒரு கிணறு கூட வேண்டாம். சாதாரண நீச்சல் குளம் போதும். தென்னை மரங்கள் சூழ பங்களா வேண்டாம். புல்தரையுடன் கூடிய குடிசை போதும் என சுருக்கிக் கொண்டிருக்கிறார்.

மனைவியின் இந்த ஆசையை அல்லு அர்ஜுனும் நிறைவேற்றி விட்டார். ஐதராபாத் அருகில் ORR Gachibowliல்  இந்த கெஸ்ட் அவுஸ் கட்டப்பட்டிருக்கிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் சிறப்பான பொருட்கள் அனைத்தும் இந்த வீட்டைக் கட்ட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. திறந்த நிலையில் படுக்கையறை. வானத்து நட்சத்திரங்களை எண்ணலாம். பவுர்ணமி நிலவை ரசிக்கலாம். கழிவறை முதல் வரவேற்பறை வரை அனைத்தும் கிரானைட் கற்கள். மதுரையில் இருந்து இவை சப்ளை செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

‘Home Trends’ என்னும் சர்வதேச ஆர்கிடெக்ட் பத்திரிகை, இந்த கெஸ்ட் அவுசை புகழ்ந்து எழுதியிருக்கிறது. இந்த விருந்தினர் விடுதி இருக்கும் இடம், முன்பு விவசாய நிலமாக இருந்தது. விவசாயிகளை மிரட்டி வெளியேற்றிவிட்டு இந்த குடிசையை கட்டியிருக்கிறார்.

தெலுங்கு நடிகர்தானே, நமக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம்.

நாளொன்றுக்கு 300 ரூபாய்க்கும் குறைவான கூலி கிடைப்பதன் பொருட்டு ஏராளமான கட்டிடத் தொழிலாளர்கள் சென்னை வந்து வேலை செய்கின்றனர். வேலை செய்யும் இடமருகேயே குழந்தை, குடும்பமாக வாழ்கின்றனர். தெலுங்கு மண்ணில் நிலையான வாழ்க்கை, இருக்க இடமின்றி நாடோடிகளாக அலையும் இம்மக்கள் காசில்தான் இத்தகைய ஸ்டைலிஷ் ஸ்டார்கள் குறுநில மன்னர்களாக தர்பார் நடத்துகின்றனர்.

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: