privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்து ஞான மரபிடம் அடிபணிந்த மெக்டொனால்ட்ஸ்!

இந்து ஞான மரபிடம் அடிபணிந்த மெக்டொனால்ட்ஸ்!

-

செய்தி -82

மெக்-டொனால்டுமெரிக்காவின் பிரபல துரித உணவு நிறுவனமான மெக்டானல்ட்ஸ் தனது சைவக் கடைகளை இந்தியாவில் உள்ள ‘புனித ஸ்தலங்களில்’ திறக்கப் போகிறது.

மெக்டானல்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, அசுர வளர்ச்சியைப் பெற்று,  உலகெங்கிலும் பரவி, மொத்தம் 119 நாடுகளில் 33,000 துரித உணவு சங்கிலித் தொடர் கடைகளை திறந்திருக்கிறது. இந்த பிராண்ட் பெயரை பயன்படுத்தி கடை நடத்த முன்வருபவர்கள் ரூ 25 லட்சம் பணமும், லாபத்தில் 2 சதவீதமும் மெக்டானல்ட்ஸ்க்கு கொடுக்க வேண்டும்.

சத்துக்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்ட பர்கரையும், உடலில் கொழுப்பை சேர்க்கும் இறைச்சி அல்லது உருளைக் கிழங்கு வருவலுடன் கோகோ கோலா சாப்பிட்டு சில நூறு ரூபாய்கள் செலவில் உடலை கெடுத்துக் கொள்ள வழி செய்பவைதான் மெக்டானல்ட்ஸ் கடைகள்.

உலகம் முழுவதும் மெக்டானல்ட்ஸின் புகழ் பெற்ற உணவு மாட்டிறைச்சி பர்கர் தான். இந்தியாவில் 1996-ம் ஆண்டு மெக்டானல்ட்ஸ் கடைகள் தொடங்கப்பட்டபோது இந்தியர்களின் மத உணர்வுகளை மதித்து இந்துக்கள் ‘புனிதமாக’ கொண்டாடும் மாட்டின் இறைச்சியால் செய்யப்படும் பர்கரை தியாகம் செய்தது மெக்டானல்ட்ஸ்.

இந்தியர்களை பார்த்து ஒரு அமெரிக்க நிறுவனம் நடுங்கி பணிந்து விட்ட இந்தப் புரட்சியை எதற்கு சமர்ப்பணம் செய்வது? இந்து தத்துவ ஞான மரபிற்கா அல்லது இந்தியா நடுத்தர வர்க்கத்தின் டாம்பீக கலாச்சாரத்துக்கா?

இந்திய சந்தைக்காக அது உருவாக்கிய மெக் ஆலூ டிக்கி (உருளைக்கிழங்கு வடை) அதன் மொத்த இந்திய வருமானத்தில் 25 சதவீதத்தை தருகிறது என்பது இந்திய ஞான மரபின் வலிமையையும் மெக்டானல்ட்ஸின் சந்தைப்படுத்தும் திறனையும் காட்டுகிறது.

அமெரிக்காவில் சாதாரண கடைகளாக மதிக்கப்படும் மெக்டானல்ட்ஸ் துரித உணவுக் கடைகள் இந்தியாவில் நடுத்தர வர்க்க மற்றும் மேட்டுக்குடி குடும்பங்களின் கௌரவ அடையாளங்களாகியிருக்கின்றன.

நம் தட்பவெட்ப நிலைக்கும், உற்பத்தி முறைக்கும், உடல் அமைப்பிற்கும்  சற்றும் பொருந்தாத உணவுகளை நம் மீது திணிப்பதுடன் நம்மை அவற்றிற்கு அடிமையாக்கும் அனைத்து மோடி மஸ்தான் வித்தைகளையும் மெக்டானல்ட்ஸ் செய்கிறது.

இந்தியாவில் தனது சந்தையை மேலும் விரிவாக்க இப்போது இன்னொரு தியாகத்தையும் செய்ய முன்வந்துள்ளது மெக்டானல்ட்ஸ். இந்தியாவின் கோவில் நகரங்களில் கூடும் கூட்டங்களை பார்த்த அந்நிறுவனம் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோவில் அருகிலும், பஞ்சாப் பொற்கோவில் அருகிலும் வெஜிடேரியன் கடைகளை திறக்க முன் வந்துள்ளது.

ஏற்கனவே சப்வே, டோமினோஸ் பிட்சா போன்ற போட்டி சங்கிலித் தொடர் துரித உணவுக் கடைகள் சைவக் கடைகளை திறந்துள்ளன. மெக்டானல்ட்ஸ் அவர்களிடமிருந்து வேறுபட்டு வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தை காசாக்கும் உத்தியை வகுத்து வெஜிடேரியனாக மறு அவதாரம் எடுக்கிறது.

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பல முறை புனித யாத்திரை போய் வந்துள்ள மெக்டானல்ட்ஸின் இந்தியக் கூட்டாளி விக்ரம் பக் ஷி, “அங்கு வருகை தரும் 10 லட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்களுக்கு  சேவை செய்ய முறைப்படுத்தப்பட்ட உணவகங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு முறை போகும் போதும் அங்கு கடை திறக்க வேண்டும் என்ற எனது விருப்பம் வலுத்துக் கொண்டே போனது” என்கிறார்.

அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஞானமரபை சுவீகரிக்கும் இந்த வேகத்தில் நாளையே பழனியில் பஞ்சாமிருதத்திற்கு பதில் பர்கர் பிரசாதமாக கொடுக்கப்படலாம். சாமி அதேதான் என்றாலும் பிரசாதம் மட்டும் அமெரிக்க தயாரிப்பு! ஃபாரின் பொருட்கள் என்றால் வாய்பிளக்கும் மக்கள் பிரசாதமும் ஃபாரின் என்றால் அவர்களது பக்தி உயரும் என்பது இந்து மதத்திற்கு கிடைத்த வெற்றியல்லவா?

இதையும் படிக்கலாம்

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. “இந்து தத்துவ ஞான மரபிற்கா அல்லது இந்தியா நடுத்தர வர்க்கத்தின் டாம்பீக கலாச்சாரத்துக்கா?”

    Not for these…At least an american company respects our feeling. Whereas this Vinavu never respects others’ feelings… This is the right time for vinavu to learn to respect others’ feelings, What ever be the religion..

    • என்னா Feelings?

      அடுத்தவன் உணர்வை மதிக்க சொல்லி ஒரு பார்ப்பன பண்டாரம் சொல்வதை பார்த்தால் செருப்பால் அடித்துவிரட்டா வேண்டும்போல் இருக்கிறது……

  2. ரொம்போ சந்தோசமாக இருக்கிறது. அப்படியே பன்றி இறைச்சியையும் போட்டு விற்றால் இன்றைய நாகரீத்தில் கிறிஸ்துவர்கள் சாப்பிடவும் வசதியாக இருக்கும். வேலாங்கன்னியில் இதுபோன்ற கடைகளை வரவேற்கிறோம்.

  3. “ஃபாரின் பொருட்கள் என்றால் வாய்பிளக்கும் மக்கள் பிரசாதமும் ஃபாரின் என்றால் அவர்களது பக்தி உயரும் என்பது இந்து மதத்திற்கு கிடைத்த வெற்றியல்லவா?”

    அதிகமாக மக்கள் கூட்டம் வரும் இடத்தில் கடை திறக்க பார்க்கிறான். இதற்கு இந்து மதத்தை தொடர்புபடுத்த தேவையா என்ன?

  4. இதற்கு பெயர் வியாபார உத்தி.. டில்லியில் கரோல் பாக் மார்கெட் போனால் – ‘சாப் இங்கே வாங்க. எல்லாம் நூறு ரூபா’ என்று தமிழில் கூவி கூவி அழைப்பர். அந்த கடைக்கு போனால் அவர் கூறிய வாக்கியத்தை தவிர வேறு தமிழ் வார்த்தை தெரியாது. அது போல தான் இதுவும்.

    மெக்டொனால்டு இந்தியாவில் பீப் பர்கர் விற்பதும், வைஷ்ணோதேவி கோயில் வெளியே அசைவ உணவு விற்பதும் சென்னையில் மே மாசம் ஸ்வெட்டர் விற்றது போல் ஆகி இருக்கும்.

    அவரவர் உடல் ஆரோக்கியம் அவர் அவர் கையில் உள்ளது. வாரம் ஒருமுறை சுவைக்காக சத்தில்லாத (அ) அதிக கொழுப்புள்ள உணவை உண்பது தவறில்லை. அதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

      • 2004 வெளிவந்த அமெரிக்கரான Morgan Spurlock இயக்கி நடித்த “super size me” ன்ற டாக்குமென்ட்ரி படத்தை ஒரே ஒரு முறை பாருங்களேன்.ஏன் போராடனும்னு புரியும்.

        • What is the relation between ‘Super Size Me’ and this article? This article is about Indianisation of MNCs. The item discussed in this article is a strategy of McDonalds to sell their products to specific targets. They will close the pure-veg food chains if they didn’t receive the expected support/profit. The market will decide this and why should someone care for this or protest against this?

  5. ஞான மரபாவது வெங்காயமாவது…
    மெக்டொனால்டுக்கு சரக்கு விற்றால் போதும்…அதற்கு என்ன குட்டிக்கரணம் வேண்டுமானாலும் போடுவார்கள்…

    இதற்க்கு காவி சாயம் பூசவேன்டாம் வினவு…

    • @Amba.. Have you staged protest against our very own road side porotta stalls which sell unhygienic/unhealthy maida porottas? Have you protested against beedi/cigerrette stalls that sell unhealthy cigarettes? Have you protested against petty shops that sell unhealthy tobacco? Have you protested against liquor shops that sell unhealthy liquor? These products cause more harm than those cheese burgers sold at McD.

      Obesity can be caused by eating the tea shop vadai, bonda, samosa, road side shop’s potato chips, maida porotta, fast food chicken/mutton/beef fry/biriyani and whole lot of other things. It’s the individual’s prerogative to decide what is healthy for him/her. If the person is consuming excess fat food, then (s)he must exercise to burn out those calories, else (s)he shall pay the price (obesity). And by the way do you think all those fat people you see in your house or on streets are obese because they ate at McDonald’s?

      You can definitely stage a protest or file charges against any food chain/ restaurant that sells you unhyginic food or lies to you about the name or quantity of the ingredients used.

Leave a Reply to G.V பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க