privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்!

அணுமின்சாரத்தின் மிகையும், காற்றாலை மின் உற்பத்தியின் உண்மையும்!

-

காற்றாலைமின்சார உற்பத்தியில் நவீன தொழில் நுட்பம் என்பது அணு மின்சாரம் மட்டும் தான் என்கிற ரீதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி போன்ற பேர் பெற்ற விஞ்ஞானப் பெருந்தகைகள் சொல்லி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், ஒரிஜினல் விஞ்ஞான உலகம் அணு மின் உற்பத்தியிலிருந்து மாற்று வழிகளைத் தேடி எத்தனையோ படிகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் ஒட்டுமொத்த உலகின் மின்னாற்றல் தேவையைவிட நான்கு மடங்கு அதிகமாக  காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யுமளவிற்கு காற்று ஆற்றல் அபரிதமாக  இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த புதிய  ஆய்வில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யமுடிந்த மின்னாற்றல் அதிகபட்ச சாத்தியமான வரைமுறையையும், காற்றாலை மின் உற்பத்தி பருவ நிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் புவியியற்பியல் அடிப்படையில் சாத்தியங்களை, கணினி மாதிரிகளைக் கொண்டு  கணக்கிட்டுள்ளனர்.

காற்றாலை சுழலிகள் அதிகரிக்க அதிகரிக்க, அவை உற்பத்தி செய்யும்  மின்னாற்றலும் அதிகரிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுழலிகளை நிறுவினால் அவை காற்றின் வேகத்தை குறைப்பதுடன், மின்னுற்பத்தியையும் குறைத்துவிடும். அதே சமயம், காற்றின் வேகம் குறைக்கப்படுவதால் அது பருவநிலையின் மீது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துமெனினும் காற்றாலைசுழலிகளை கூட்டம் கூட்டமாக தொகுப்பாக நிறுவாமல் பரவலான முறையில்நிறுவினால் அவை உற்பத்தி செய்யும் மினாற்றலை கணக்கிடும் போது, பருவ நிலையின் மீதான தாக்கம் மிக குறைவானதே.

இன்றைய ஒட்டு மொத்த உலகின் மின் தேவை தோராயமாக 18டெரா வாட்டாகும் (1Terra watt = 1000 000 Mega Watts). சரிவர திட்டமிட்டு காற்றாலை சுழலிகளை நிறுவினால் இந்த தேவையைவிட  அதிகபட்சம் நான்கு மடங்கு  அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்கிறது ஆய்வு  முடிவுகள்.  ஆயினும்  காற்றாலை  திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதையும், நிர்மாணிப்பதையும், இந்த சாத்தியக்கூறு,  அதிகபட்ச வரைமுறைகளை விடஉலக அரசியல் பொருளாதார காரணிகளே  தீர்மானிக்கின்றன.

நமது தமிழகம் இந்தியாவிலேயே மிக அதிக அளவு காற்றாலை மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாக முதல் நிலையில் உள்ளது. அதிலும் அதிக அளவிலான காற்றாலைகள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தான்  நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தனியார் முதலாளிகளுக்கு சொந்தமானவை. அவை அரசின் மானியம் பெற்று நிறுவப்பட்ட பின்னர் அரசுக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்கின்றன.

இந்தியாவின் மூன்று படிநிலை அணுசக்தி  திட்டம், அணு மின்சக்தி நாட்டின்  மின்சார தேவையை ஈடுசெய்யும் என்ற அரசின் பித்தலாட்டங்களையும், அது சாத்தியமற்றது என்பதையும், அணு மின்சக்தி வெறும் 2சதவிகித தேவையை மட்டுமே ஈடு செய்யும் என்றும், யுரேனியம் எரிபொருளுக்காக ஏகாதிபத்தியங்களை சார்ந்திருப்பதன் மூலம் நாட்டை அடிமைப்படுத்தும் திட்டம் என்றும்  சுவ்ரத் ராஜு தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியிருகிறார்.

மேற்சொன்ன ஆய்வு முடிவுகளின் நாட்டின் படி மொத்த மின் தேவை ஈடு செய்ய முடியாவிட்டாலும், அபரிதமாக இருக்கும் காற்று ஆற்றலை சரிவர  பயன்படுத்தினால் 50 சதவிகித தேவையை நிச்சயம் ஈடுசெய்ய முடியும்.  ஆனால்,இராணுவ மற்றும் அணு சக்தி ஆராய்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டித்தீர்க்கும் இந்த அரசு, காற்றாலை மற்றும் மரபு சாரா  ஆற்றல் ஆய்வுகளுக்காக துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை.

ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக, ஏவல் நாயைப் போல செயல்படும் இந்த அரசு, சுயமான முடிவுடன் காற்றாலை திட்டத்தை மட்டுமல்ல, எந்த மரபு சாரா ஆற்றல் திட்டத்தையும் ஆய்வு செய்யாது, அமல்படுத்தாது. எதிர்த்து போராடினால் அதை ஒடுக்க சீருடை அணிந்த ரவுடிகளை அனுப்பும், போராடாவிட்டால் அணு உலை நின்று கொல்லும்!

படிக்க

கூடங்குளம் போராட்டம் தொகுப்புப் பக்கம்