privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாசல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

-

சல்மான்-கான்-கொலை“இன்றைய தேதியில் ரூபாய் நூறு கோடி வசூலை குறுகிய காலத்தில் எட்டும் நடிகர் யார்? சந்தேகமேயில்லாமல் சல்மான்கான்தான். இந்தி நடிகரான இவரது ‘வாண்டட்’, ‘தபங்’, ‘ரெடி’, ‘பாடிகாட்’ ஆகிய படங்கள் அனைத்துமே நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியவை. அதுவும் இந்த ஆண்டு ரம்ஜானை ஒட்டி வெளியான ‘ஏக் தா டைகர்’ இந்திப் படம், முதல் ஐந்து நாட்களிலேயே இந்த நூறு கோடி ரூபாய் வசூலை கடந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. எனவே அவர்தான் இன்றைய தேதியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ” என ஏகமனதாக இந்தி(ய) பத்திரிகைகள் அனைத்தும் எழுதுகின்றன, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. இன்றைய தேதியில் ஒரு படத்துக்காக அவர் வாங்கும் தொகை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்.

சட்டப்படி இன்னும் சல்மான் கானுக்கு திருமணமாகவில்லை. எனவே ஏராளமான காதல் கதைகளும், கிசுகிசுக்களும் அவரைக் குறித்து உலாவுகின்றன. எனினும் அந்த கிசுகிசுக்களுக்கிடையில் சமூக நலன்களுக்காகவும், சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அடிக்கடி தன்னார்வக் குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் சிறப்புரை ஆற்றுவார். மறுநாள் அவை தலைப்புச் செய்திகளாக இடம்பெறும். கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தபோதும் எந்தவொரு கிரிக்கெட் அணியையும் அவர் ஏலத்தில் எடுக்கவில்லை. இதுவொரு தனிச்சிறப்பான தகுதி என மெய்சிலிர்த்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

இப்படி சல்மான் கான் எது செய்தாலும் அதை செய்தியாக எழுதும் அச்சு ஊடகங்களும் சரி, மைக் பிடித்து மயிர் பிளக்கும் வாதங்களை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களும் சரி, கவனமாக ஒரு விஷயம் குறித்து வாயே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன. அல்லது பத்தோடு பதினொன்றாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றன.

அந்த விஷயம், அல்லது சம்பவம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்னும் முற்றுப்பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 அன்று இரவு முழு போதையுடன் தனது டயோட்டா லேண்ட் க்ரூசியரை (Toyota Land Cruiser ) சல்மான் கான் ஓட்டி வந்தார். வண்டி தாறுமாறாக செல்கிறது என்பதை உணரும் நிலையில் அவர் இல்லை. மிதப்புடன் வண்டி ஓட்டி வந்தவர், வேகத்துடன் பந்தாராவின் புறநகரிலுள்ள ஒரு திருப்பத்தில் தன் வண்டியை திருப்பினார்.

கட்டுப்பாட்டை இழந்த வண்டி, ப்ளாட் ஃபார்ம் மீது ஏறி பறந்தது. வசிக்க வீடின்றி அங்குதான் ஐந்து உழைக்கும் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ஐவரின் உடலையும் சல்மான் கானின் வண்டிச் சக்கரம் பதம் பார்த்தது. ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற நால்வரும் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட நிகில் வாகலே (Nikhil Wagle) என்னும் பத்திரிகையாளர், மறுநாளே சல்மான் கான் மீது பொதுநல வழக்கை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பந்தாரா காவலர்கள் அவரை கைது செய்தனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டியது, கொலை முயற்சி, கொலை ஆகிய குற்றங்களின் கீழ் அவரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், எளிதில் ஜாமீனில் வெளிவரக் கூடிய செக்ஷனில் அவரை கைது செய்த காவலர்கள், அன்று மாலையே நீதிமன்ற உதவியுடன் ரூபாய் 950 ஜாமீன் தொகையுடன் விடுவித்தனர்.

இதனை எதிர்த்து நிகில் வாகலே நீதி மன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால நிவாரணமாக பாதிக்கப்பட்ட ஐவருக்கும் ரூபாய் 17 லட்சத்தை சல்மான் கான் தர வேண்டும் என்றும், மாநில அரசு இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உடனே ரூபாய் 17 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்திய சல்மான் கான், வெளியே வந்தார். அரசு மேற்கொண்டு விசாரணை நடத்தும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், எதுவும் நடக்கவில்லை. சென்ற மாத இறுதியில் நிகில் வாகலே, மீண்டும் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் சல்மான் கான் செலுத்திய ரூபாய் 17 லட்சத்தை இதுவரை அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கவேயில்லை என்றும், விசாரணையை மேற்கொள்ளவே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த அதிர வைக்கும் உண்மை, எந்த ஊடகத்திலும் பெரிதாக வரவில்லை. அம்பிகள் இதை விவாத நிகழ்ச்சியாக காட்சி ஊடகங்களில் நடத்தவே இல்லை.

2002ல் இந்த படுகொலை நிகழ்ந்த போது, சல்மான் கான் இறங்கு முகத்தில் இருந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். ஆனாலும் அவர் ஒரு நடிகர் என்பதால் பிணையில் வர முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு பதில், வெறும் ரூ.950 ஜாமீன் தொகையில் காவலர்கள் அவரை விடுவித்தனர். இன்றோ, தொழில் முறையில் ரூபாய் நூறு கோடி வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். எனவே மாநில அரசு பெயரளவுக்குக் கூட விசாரணையை மேற்கொள்ளவேயில்லை.

நீதி மன்றத்தில் அவர் செலுத்திய இழப்பீட்டுத் தொகையான ரூபாய் 17 லட்சத்தை இதுவரை மாநில அரசு பாதிக்கப்பட்ட, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வழங்கவில்லை.

சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு வாழவேண்டியவர்கள் சாமான்ய மக்களும் உழைக்கும் வர்க்கமும்ம்தான். பணக்காரர்களுக்கு அல்ல என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். ஏற்கனவே ராஜஸ்தானில் மானை வேட்டையாடி கறி உண்ட வழக்கும் சல்மான் கான் மீது இருந்தாலும் அதையும் ஊற்றி மூடி விட்டார்கள். மானையோ இல்லை மனிதர்களையோ ஒரு நட்சத்திர நடிகர் கொன்றால் இந்தியாவில் தண்டனை இல்லை.

சாதாரண அப்பாவி முசுலீம் மக்களெல்லாம் அவர்களது அடையாளத்தை வைத்து அதிகார அமைப்புக்களால் எப்போதும் துன்புறுத்தப்படுகிறார்கள். அதுவே ஒரு நட்சத்திர நடிகரெனும் போது அவர் இசுலாமியராக இருந்தாலும், குற்றமே செய்திருந்தாலும் விசாரணையோ, தண்டனையோ இல்லை. ஊடகங்களும் சினிமா உலகம் தும்மினாலும், துவண்டாலும் செய்தியாக்கி வியாபாரம் செய்வதால் நட்சத்திர நடிகர்களை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுகின்றன.

எனில் சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

படிக்க

  1. அம்பிகள் இதில் எங்கு வந்தார்கள்.. ஒருவேளை கானை பிராமின் ஆக்குகிறார்களா.. என்னய்யா உம்ம கருத்து…?

    • உங்க ரெண்டு பேருக்கும் அம்பின்னு பேரைக்கேட்டாலே ஏன்யா பத்திகிட்டு வருது

      இந்த அதிர வைக்கும் உண்மை, எந்த ஊடகத்திலும் பெரிதாக வரவில்லை. அம்பிகள் இதை விவாத நிகழ்ச்சியாக காட்சி ஊடகங்களில் நடத்தவே இல்லை.

      இப்படித்தானேய்யா எழுதியிருக்கு? பாப்பார ஊடகம்னு எழுதினாலாவது பரவால்ல, அம்பின்னு எழுதினாலே உங்க மயிர்எல்லாம் 90 டிகிரியில நட்டுக்குதே!

      அம்பியெல்லாம் பார்ப்பார சாதிக்கு மட்டும் சொந்தமில்லை இது எல்லாரையும் விட பார்ப்பானுங்களுக்கு நல்லா தெரியும்…. ”நான் பிராமின்ஸ்” பசங்களையெல்லாம் பார்ப்பானுங்க அம்பி அம்பின்னு கூப்புடறது சீனுவுக்கும் நாகராஜூக்கும் தவிர மத்த எல்லாருக்கும் தெரியும் போல

      ஹையோ ஹையோ

      • நாகராஜ்..?!! யார் அந்த அம்பி..?! பக்கத்து வீட்டு அம்பியா குன்சா அம்பி..?!!

  2. All the media are after money/ circulation & Viewer rating. Casteism is not a dominant factor in deciding the news. however, any wise person can judge about the media in the words they play. magnifying the issue or suppressing it can be done very easily to indians. In the Salman issue, the issue of popularity only play and not any ambi. south indian media is not that much concerned abt North/west except some politics/ cinema.

    Now, another question What would have been the compensation if the same accident happened due to- a. a truck driver who own only a truck b. a truck driver who is a worker in a big transporting company c. bus driver from govt. d a upper middle class/ middle class self driving person. What is the MV act says? will the same punishment is given to all in all categories? should salman be punished more since he is in richest category? or should he pay more compensation? think….do we have a system?

  3. remember your previous comment on
    குறவர் என்றால் இளக்காரமா?

    “whenever there is a theft, it is general perception to doubt the poor. if you are searching your some item/money misplaced in your house, do you not doubt your servant even for a second?” on October 6, 2012 at 12:51 pm

    now you are asking whether there is any system for punishing equally a rich and a poor

    but on previous case you will say that suspecting a poor person in a specific theft is normal

    you are a man of moral values

  4. ///எனில் சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?///
    உழைக்கும் மக்கள் தாம்

  5. ///எனில் சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?///
    //உழைக்கும் மக்கள் தாம்//

    இந்தியாவின் 95 சதவீத இருளில் வாழும் மக்களின் அடிமனதில் இருக்கும் விருப்பமும் அதுதான், ஆனால் என்ன செய்வது துரதிர்ஷ்ட்டம் இந்திய மக்கள் தொகையில் அரசியலை தொழிலாக கொண்டுள்ள இரண்டு சதவீத அரசியல் வியாதி திருடர்களிடமும். பாமரனின் இரட்சகனாக திரையில் வேஷம் கட்டும் இரண்டு சதவிகித சினிமா கூத்தாடிகளிடமும், அரசியலில் சட்டங்களையும் அடிப்படை திட்டங்களையும் தீர்மானிக்கவல்ல விஜய் மாலையா, டாட்டா, அம்பானி, கேடி பிரதர்ஸ் போன்ற கொள்ளையர்களிடமும் இந்தியா கொத்தடிமையாகி கிடக்கிறது.

    வேண்டுமானால் ஸ்லம் டோக் மில்லியொனர் போன்று சினிமா எடுத்தால் ஆஸ்கார் வரை கொண்டுசெல்ல முடியும். 7ம் அறிவுக்கு நாம் கொடுத்த முக்கியத்துவம், தாண்டவத்துக்காக நாம் தவமிருக்கும் நிலை, புல்லரிக்க வைக்கவில்லயா? யாருக்காவது துணிவிருந்தால் பந்தாராவின் அந்த படுகொலைகளை சினிமாவாக எடுத்தால் (நம்ம “அங்காடித்தெரு” ) மூக்குச்சிந்தி ஆதரவு கொடுக்க 95 % மக்களும் தயார்நிலையில் இருக்கின்றனர். அல்லது யாராவது கூடங்குளம் போராட்டத்தை நம்ம சூப்பர் நடிகர் ரஜனி ஐயாவை, அல்லது உலக நாயகர் கமலரை வைத்து இரண்டு முத்த காட்சிகளுடன் சன் பிக்ஸர்ஸை கொண்டு படமாக்கி பாருங்கள். 176,00 கோடிக்கு மேலே வசூலாகி ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்படும். மற்றும்படி எதுவும் எடுபடுவதற்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.

  6. @nagaraj. The action of police depends on the person status, money power, local support etc. Unlike any other dept, they may/do beat the suspect. (whether it is legally correct or not.) the caption should have been ” a poor person got beaten” not the caste or clan. whether the physical torture is correct or not is debatable.

  7. every person character is determined by class in which he belongs

    but in India feudal values are still there in the system so both class and caste determines behavior of a person.

    OK now tell me on the start of the discussion i asked you one question

    ///remember your previous comment on
    குறவர் என்றால் இளக்காரமா?

    “whenever there is a theft, it is general perception to doubt the poor. if you are searching your some item/money misplaced in your house, do you not doubt your servant even for a second?” on October 6, 2012 at 12:51 pm

    now you are asking whether there is any system for punishing equally a rich and a poor

    but on previous case you will say that suspecting a poor person in a specific theft is normal///

  8. 50கோடி சம்பளம்!!! கேட்கவே வயிறு எரிகிறது.ஏராளமான வளர்ந்த நாடுகள் எல்லாம் சினிமாவை ஒரு பொருட்டாக நினைக்காத நிலையில் இந்தியர்கள் மட்டும் சினிமாவையும்,இந்த பெரிய திரை கூத்தாடிகளையும் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது கேவலம்.சினிமாவிற்கு மட்டும் 99சதவீத வரி தாரளமாக விதிக்கலாம்.ஒழியட்டும் இந்த சினிமா.

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க