பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு (BGFTU) இஸ்ரேலின் பொருட்களை கப்பல் துறைமுகங்கள், விமான நிலையங்களில் இருந்து இறக்கவும் ஏற்றவும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் BDS (Boycott, Divestment and Sanctions movement – பாலஸ்தீனத்துக்கு ஆதரவான சர்வதேச இஸ்ரேல் புறக்கனிப்பு இயக்கம்) இயக்கத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனை சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் சங்கம் (International Dockworkers Council – IDC) ஆதரித்த நிலையில், தென்னாப்பிரிக்க துறைமுக நகரமான டர்பனில் தென்னாப்பிரிக்க போக்குவரத்து மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த (SATAWU) துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேலிய கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படிக்க :
♦ சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !
♦ தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

மேலும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேலின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க அழைப்பு விடுக்கும் வகையில் மே 23-இல் டர்பன் நகர கடற்கரையில் 10,000–க்கும் மேற்பட்டோர் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (2008 – 2009 ஆண்டுகளிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலின் கப்பல்களை தென்னாப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் புறக்கணித்தனர்)

இதேபோல், இத்தாலிய நகரமானா லிவோர்னோவிலும் (Livorno) துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேல் அரசின் ஜிம் ஷாங்காய் (Zim shanghai) கப்பலில் ஆயுதங்களை உள்ளடக்கிய சரக்கினை ஏற்றாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம்

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காதுஎன்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் லண்டன், நியூயார்க், ஸ்பெயின், சோமாலியா, லிபியா, ஈரான், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் தனியாகவும் சில இடங்களில் துறைமுகத் தொழிலாளர்களோடு இணைந்தும் Boycott Israel” போன்ற பல்வேறு முழக்கங்களுடன் பேரணிகள் நடத்தியுள்ளார்கள்.

தேசியவெறியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போர்களுக்கு எதிரான போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு வாய்ப்புள்ள ஒரே வர்க்கம் தொழிலாளி வர்க்கம் தான். போரை நடத்தும் கார்ப்பரேட் நிதியாதிக்கக் கும்பலுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே சாத்தியம். இத்தகைய சர்வதேச தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஒற்றுமையும் ஆதரவும்தான் பாலஸ்தீனிய மக்களின் விடுதலைக்கு உரமூட்டும் !!


பூபாலன்
செய்தி ஆதாரம் : MIDDLE EAST EYE, Aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க