privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடெங்கு: கொசுவா, அரசா?

டெங்கு: கொசுவா, அரசா?

-

டெங்கு கொசு

டெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கையில், “எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல; பொதுவாக நூறில் ஒருவருக்கு சாதாரணமாக காய்ச்சல் இருக்கும்; தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் இருவராக உயர்ந்துள்ளது” எனக் கூறி உள்ளார் ஜெயலலிதா. தமிழகத்தில் தற்போது 59 பேருக்குத்தான் டெங்கு உள்ளது என்று திங்களன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கூறியுள்ளார். ஆனால் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த எண்ணிக்கையை 180 எனக் கூறி உள்ளார்.

அத்துடன் சென்னையிலுள்ள புகழ்பெற்ற எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையிலேயே டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தும் எலிசா சோதனை செய்வதற்கான வசதிகள் இல்லை என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இம்மருத்துவமனைக்கு வட மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரத்தின் கடப்பா போன்ற பகுதியில் இருந்தெல்லாம் டெங்கு காய்ச்சலுக்காக நோயாளிகள் வந்த வண்ணமுள்ளனர். இரத்த தட்டுகளின் எண்ணிக்கை 15,000 க்கும் கீழே போனால் ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும். பலருக்கு ஆக்சிஜன் தந்துதான் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமையில் சென்னை தொழிலாளர் நல மருத்துவமனை, கே.கே. நகரில் உள்ள பெரும்பான்மை மருத்துவர்கள் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால் கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. நாகர்கோவில் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை சரிதா தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் எடுத்தும் பயனில்லாமல் நேற்று இறந்து விட்டாள்.

க‌டந்த மே மாதம் துவங்கி கடையநல்லூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தற்போதுதான் இதற்காக அரசு ரூ.2.49 கோடி ஒதுக்கி உள்ளது. சென்னையில் இருவர் சாவு, காஞ்சிபுரத்தில் 1 (பவுசியா, வயது 7), மதுரை பகுதியில் 4 என இந்த சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அரசு நிர்வாக எந்திரத்தால் இதனைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. ஜெயலலிதா சொல்வது போல எதாவது ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 3 பேராவது டெங்குவால் பாதிக்கப்பட்ட பிறகுதான் அரசு அப்பகுதியின் சுகாதாரத்தை ஆய்வு செய்யுமாம். சென்னை போன்ற பெரு நகரங்களில் அவ்வப்போது பெய்யும் மழைநீர் இன்னமும் பல நாட்களுக்கு சாலைகளில் தேங்கிதான் நிற்கிறது.

மழைநீர் வடிகால் வாரியத்தின் வேலைகள் எதுவும் மழைக்காலத்தை எதிர்பார்த்து திட்டமிடப்பட்டதாகத் தெரியவில்லை. ம‌க்க‌ள் குடியிருப்புக‌ளில் இந்த‌ வேலைக‌ள் ப‌ழுதான‌ மெயின் லைன்க‌ளில் ப‌ராம‌ரிப்பு செய்யாம‌ல் இருப்ப‌தாக‌த்தான் தொட‌ருகிற‌து. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை த‌னியார் அர‌சு கூட்டுக்கு ஒப்ப‌டைப்ப‌த‌ன் ஒரு அங்க‌மாக‌ அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில்  அடிப்ப‌டை ம‌ருந்துக‌ளும் இல்லை, க‌ழிவுப்பொருட்க‌ளை அக‌ற்றும் ப‌ணியும் போதுமான‌தாக‌ இல்லை.

டெங்கு-காய்ச்சல்-அறிகுறிகள்
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

த‌ற்போதைய‌ டெங்குவுக்கு கார‌ண‌மான‌ ஏடிஸ் கொசு ந‌ன்னீரில் வாழும்   த‌ன்மை உடைய‌து. ப‌க‌லில் க‌டிக்கும் என்றெல்லாம் சொன்னாலும் ம‌ருந்துக‌ள் போதுமான‌ அள‌வுக்கு ஆங்கில‌ ம‌ருத்துவ‌த்தில் இன்ன‌மும் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட‌வில்லை என்கிறார்க‌ள். மாற்று ம‌ருத்துவ‌மான‌ சித்த‌ ம‌ருத்துவ‌த்தில் இத‌ற்கும் ம‌ருந்து இருப்ப‌தாக‌ சித்த‌ ம‌ருத்துவ‌ர் சிவ‌ராம‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் கூறுவ‌தை அர‌சு க‌ண்டுகொள்ள‌வே இல்லை.

ஜெயா மாமியின் பேச்சை யார் கேட்கிறார்க‌ளோ இல்லையோ? ச‌ன் டிவி   ப‌க்காவாக‌ கேட்கிற‌து. த‌மிழ‌க‌த்தில் யாராவ‌து டெங்கு காய்ச்ச‌லுக்கு ப‌லியானால் நேற்றிலிருந்து அத‌னை ம‌ர்ம‌க் காய்ச்ச‌ல் என‌ செய்திக‌ளில் சொல்ல‌த் துவ‌ங்கி இருக்கிறார்க‌ள். ம‌க்க‌ள் டெங்கு பெய‌ரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்க‌ளாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?

108 ஆம்புலன்ஸ் சேவை தனியாருக்கு, காப்பீட்டுத் திட்டம் தனியாருக்கு என்று பொது சுகாதாரத் துறையில் தனியார் மயம் திட்டமிட்டு புகுத்தப்பட்ட பிறகு, அரசு மருத்துவமனைகள் வேண்டுமென்றே நலிவடைய விடப்படுகின்றன. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் இல்லாத நிலையில் மக்கள் வேறுவழியின்றி தனியார் மருத்தவமனைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இறுதியில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பலர் பலியாக வேண்டியிருக்கிறது. டெங்கு கொசுவை விட இந்த தனியார் மயமும் அதைக் கட்டிக் காப்பாற்றும் அரசுமே குற்றவாளிகள் என்பதை உணரும் போதுதான் டெங்குவை நாம் ஒழிக்க முடியும்.

  1. தமிழ்நாட்டை பீடித்திருக்கும் மக்கள் விரோத அரசையும், ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளையும் ஓரங்கட்டினாலே போதும், மக்கள் பாதி விடுதலை அடைவார்கள். எதிரிகளை என்று வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்,ஆனால் துரோகிகளை இன்னும் வீட்டுவைக்க கூடாது.

  2. எந்தவகை காய்சலுக்குமான எளிய மருத்துவமுறையாக அய்யா நம்மாழ்வார் பரிந்துறைப்பது வேப்ப ஈர்க்கு குடிநீர்/கசாயம்.

    விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.

    வேப்பங்கொத்தில் இலைகளை உருவிய பின் இருக்கும் வேப்பம் ஈர்க்கு (மிக மெல்லிய குச்சி)10 அல்லது 15 எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு அது நன்கு கொதித்து பாதி அளவான பின் நீரை மட்டும் குடித்து பின் ஒய்வு எடுக்கும் போது வியர்வை வெளியாகி காய்ச்சல் சரியாகும்/சரியாகும் வரை இந்த முறையை பின்பற்றலாம்.

  3. டெங்கு என்ற உச்சரிப்பு தவறானது. ‘டெங்கி’ என்ற உச்சரிப்பே சரி. அவ்வாறே எழுதப்படவேண்டும்.

    • டெங்கின்னா ஏதோ வெங்கின்னு நம்மவாளக் கூப்பிடற மாதின்னா இருக்கு… ஒரு சீரியஸ்னெஸ் வேண்டாமோ..டெங்குன்னாதான் சும்மா நங்குன்னு உறைக்கும்..

      பிரிட்டிஷ் உச்சரிப்பு டெங்கெய்; அமெரிக்க உச்சரிப்பு டெங்கி.. இந்த வெள்ளைக்காரர்கள் கொசு கடித்தாலே செத்துப் போகும் சொங்கிகள்.. நம் நாட்டு மக்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், ஊட்டச்சத்து குறைவும், டெங்குக் கொசுக்களின் எண்ணிக்கையும் பிறப்பிடங்களும், மருத்துவ வசதியின்மையும் டெங்கு வைரசுக்கு ஈடுகொடுக்க முடியாத அளவு மோசமாக இருக்கிறது..

    • டெங்கு என்பதை டெங்கி என்று சரியாக உச்சரித்தால் சொசு கடிக்காமல் விட்டுருமா பாஸ்?

  4. ”டெங்கு கொசுவை விட இந்த தனியார் மயமும் அதைக் கட்டிக் காப்பாற்றும் அரசுமே குற்றவாளிகள் என்பதை உணரும் போதுதான் டெங்குவை நாம் ஒழிக்க முடியும்”.

    ‘‘எதிரிகள் ‘ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும்’ அல்ல. ‘அல்உமா’ தீவிரவாதிகளும் அல்ல. எல்லாம் நம்ம ஊர் குளம், குட்டை, சாக்கடைகளின் கழிவு நீரில் பிறப்பவர்கள்தான். நம்ம தண்ணியக் குடிச்சவங்கதான். எதிரிகளுக்கு மட்டும் தண்ணிப் பஞ்சம் எப்போதும் வராது. எதிரிகள் பாதுகாப்பாக இருக்க சாக்கடையில் தண்ணி வடியாம பாத்துக்கிற வேலயத்தான் நம்ம ஊர் நாட்டாமைங்க… அதாங்க…. ஊராட்சி – நகராட்சி கவுன்சிலரு, சேர்மேனுங்க கண கச்சிதமா செய்யராங்களே. எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை நம்மால் ஒழிக்கவா முடியும்?‘‘.

    கொசுக்களின் இருப்பிடம் சாக்கடை. சாக்கடையின் ஊற்றுக்கண் ஊராட்சி-நகராட்சி-மாநகராட்சி- மொத்தத்தில் அரசு. இந்த அரசை ஒழித்தால் போதும்; கொசுக்களும் தானே ஒழிந்து போகும்.

    எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!…

    http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

    பாடாய் படுத்தும் டெங்கு!
    http://hooraan.blogspot.in/2012/10/blog-post_14.html

  5. நண்டு ரசம் மிகச் சிறந்த மருந்து. என் தாயார் மிக மோசமாக பாதிக்கப்பட்டு,ரத்த தட்டுக்கள் குறைந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலையில், நண்டு ரசம் குடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்த தட்டுக்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஓரே நாளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இது தான் குறிப்பு:

    (வயல் நண்டு கிடைத்தால் நன்று அல்லது கடல் நண்டும் கிடைத்தாலும் சரி) நண்டை இடித்து ஓட்டை உடைத்து ரசம் வைத்து குடித்தால் டெங்கி மட்டுமல்ல எல்லா காய்ச்சலும் விரைவில் குணமாகும்.

    தோழர்கள் முயற்சி செய்துவிட்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

  6. டெங்குவை விட டெங்குவை கட்டுப்படுத்த முயலாத அரசு நடவடிக்கைதான் நிறைய பயமுறுத்துகிறது. சிலராவது செத்தால் தான் நடவடிக்கை எடுக்கிறது அரசு. நம் நாட்டில் மனித உயிர்கள் மலிவானவை.

Leave a Reply to வெல்தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க