privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகங்காஸ்நானம், கான்சரில் மரணம்!

கங்காஸ்நானம், கான்சரில் மரணம்!

-

கங்காஸ்நானம்ங்கை ஆறு புற்றுநோய் உருவாக்கும் ஆட்கொல்லியாக மாறியிருக்கிறது’ என்று ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பீகார், உத்தர பிரதேசம், மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் வசிப்பவர்கள் மற்ற பகுதியில் வசிப்பவர்களை விட புற்றுநோய் தொற்றுவதற்கான அபாயத்தில் உள்ளார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய் பதிவு இயக்கத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ‘பித்தப்பை புற்றுநோயில் கங்கை வடிகால் பகுதிகள் உலகிலேயே இரண்டாவது இடத்திலும், விந்துப்பை புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன’ என்று தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் வாரணாசி, வைஷாலி மற்றும் கிராமப் புற பாட்னா, மேற்கு வங்காளத்தின் 24-பர்கானா மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சர்வேயில் பங்கெடுத்த 1 லட்சம் பேரில் 20-25 பேர் புற்றுநோயாளிகளாக இருப்பது வந்துள்ளது.

கங்கை ஆற்றினுள் விடப்படும் தொழிற்சாலைக் கழிவுகளில் ஆர்சனிக், புளோரைடு, குளோரைடு மற்றும் கன உலோகங்கள் கலந்திருக்கின்றன. ஆர்சனிக் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதில்லை. தண்ணீரில் இருக்கும் இரும்பும் ஆக்சிஜனும் சேர்ந்து இரும்பு ஆக்சைடு உருவாகி அதனுடன் ஆர்சனிக் இணைகிறது. இந்த விஷக் கலவை ஆற்றுப்படுகையில் தங்குகிறது. காட்மியம், ஈயம் போன்ற கன உலோகங்களும் தண்ணீரில் தாழ்ந்து படுகையில் தங்குகின்றன.

இந்த சேர்மங்கள் நிலத்தடி நீருக்குள் ஊறிச் செல்கின்றன. அந்த நிலத்தடி தண்ணீரைக் குடிக்கும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றின் விளைவுகள் 2 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்குள் வெளிப்படுகின்றன.  கங்கையில் குளிப்பவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

கங்கை ஆறு பாயும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் செய்து கங்கைக்கும் அதற்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்வது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், ‘கங்கையில் குளித்தால் பாவங்கள் எல்லாம் கரைந்து போகும்’ என்று இந்தியா முழுவதிலிருந்தும் வந்து குளித்து விட்டு போகும் அப்பாவி மக்களில் எத்தனை பேர் அந்த காரணத்தால் புற்றுநோயால் பீடிக்கப்படுகிறார்கள் என்பதை கணக்கெடுப்பது மிகவும் சிரமமான வேலையாக இருக்கும்.  நாடு முழுவதும் சர்வே நடத்தி கங்கை பயணத்திற்கு பிறகு புற்றுநோய் வந்தவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டியிருக்கும்.

‘கங்கை நமது தாய், இந்துக்களின் புனித நதி, கங்கையின் புனிதத்தை காக்க வேண்டும்’ என்ற இந்து ஞான மரபின் உள்ளொளியில் எழுந்த உணர்வுகள் எதுவும் பல கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் இந்த ஆற்றை பாதுகாக்க முடியவில்லை. தமது லாப வேட்டையில் கண்மூடித்தனமாக கழிவுகளை ஆற்றில் கொட்டும் முதலாளிகளிடம் இந்து ஞானமரபு தோற்றுப் போயிருக்கிறது.

ஏகாத்மதா யாத்திரை என்ற பெயரில் கங்கை நீரை வைத்து விசுவ ஹிந்து பரிஷத் முன்னர் நாடு முழுவுதும் மதவெறி யாத்திரையை நடத்தியிருக்கிறது. எத்தனை நாளானாலும் கங்கை நீர் கெட்டுப் போகாது என்றெல்லாம் புளுகியிருக்கிறார்கள். இன்று கங்கை நீரை கெடுத்தது பா.ஜ.க செல்வாக்கில் இருக்கும் உ.பி மாநில முதலாளிகள்தான். இனி கங்கையில் குளித்தால் பாவம் போகுமோ இல்லையோ புற்று நோய் நிச்சயம் என்றான பிறகு கங்கா ‘ஜலத்தை’  புண்ணிய தீர்த்தமாக படம் காட்டிவந்த இந்து ஞான மரபு ரசிகர்கள் என்ன செய்வார்கள்?

படிக்க:

  1. \\BJP செல்வாக்கில் இருக்கும் உ.பி மாநில முதலாளிகள்தான்\\

    BJP was not in the power of UP for more than a decade. There were not even in the opposition. It shows the sick mind of so called communist vinavu website. I could see the hijacked pagen cross symbol in the authors mind. Nothing else to say on this.

    The article is nothing but a christian propaganda.

  2. கண்மூடித்தனமாக கழிவுகளை ஆற்றில் கொட்டும் முதலாளிகளிடம் இந்து ஞானமரபு தோற்றுப் போயிருக்கிறது…..

    ஆமாம்…. முஸ்லிம் மரபு தீவீரவாதிகளிடம் தோற்ற மாதிரி……

    புண்ணிய தீர்த்தமாக படம் காட்டிவந்த இந்து ஞான மரபு ரசிகர்கள் என்ன செய்வார்கள்?

    அத இந்துக்கள் முடிவு செய்வார்கள்… வினவு மாதிரி ஆட்கள் யோசித்து அறிவுரை சொல்லி அதை கேட்கும் அளவிற்க்கு உலகின் மூத்த மதமாம் இந்து மதம் தாழ்ந்து போய்விடவில்லை….

    இது மாதிரி ஏதாவது கிறுக்குத்தனமா எழுதினா தான் கோத்ரா மாதிரி சம்பவங்கள் நடக்கிறது….

    • // கண்மூடித்தனமாக கழிவுகளை ஆற்றில் கொட்டும் முதலாளிகளிடம் இந்து ஞானமரபு தோற்றுப் போயிருக்கிறது….. //

      முதலாளிகள் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டுதான் கழிவுகளை கங்கையில் விடுகிறார்கள்.. அதைக் கண்டித்து, போராடி, தடுக்காமல் கண்ணைமூடிக் கொண்டிருப்பது இந்து தர்மத்தை காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டு மதச் சண்டைகள் வளர்த்துக் கொண்டு இருக்கும் ருத்திராட்சப் பூனைகள்தான்… இந்து ஞான மரபுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை..

        • இந்தியனின் கோத்ரா பற்றிய திமிர்தான் காவி கும்பலின் உண்மைமுகம்… வேறு பதிவில் இவர்களின் இன்னொரு காவி “குஜராத்” படுகொலையை விபத்து என்று புளுகிகொண்டிருக்கிறது… அதிசரி “நொந்தியன்” கங்கையை காப்பாற்ற முத்லாளிகளுக்கெதிராய் கரசேவை நடத்தலாமே….

            • கங்கை அசுத்தமாச்சுனு கரியண்ணன் ஆராய்ச்சி பண்ணிட்ருக்கர், அப்புறம் பேசுங்கோ…..உத்ராஞ்சல் பிரிக்கறதுக்கு முன்னே கங்கை நன்னாதான் ஓடினா இல்லையா க்க்க்கரி……

      • அஸ்வின் அவர்களே,

        இவர்கள் எல்லாம் வீம்புக்கு _ _ _கிறவர்கள். செத்தாலும் சாவேனத் தவிர கங்கையில் குளிப்பது முக்கியம் என்று சொல்லி குளித்து விட்டு வந்தாலும் வருவார்கள்.
        பின்னூட்டம் இரண்டைப் பார்த்தீர்களா!!
        நான் சொன்னேனே, “இவர்கள் எல்லாம் வீம்புக்கு _ _ _கிறவர்கள்.”

        • Tamizh Bhai,

          I have taken a dip in the ganga and nothing has happened.There are many rivers in TN which are hundred times worse than the Ganga,Chennai is the only city to have a open air sewer called the Coovam.

          • ஹரி சகோதரரே,

            எல்லாவற்றிற்கும் நெட்டை தட்டிப் பார்க்கும் நீங்கள் கங்கையைப் பற்றியும் பாருங்களேன். உலகிலேயே மிக மோசமாக மாசு அடைந்திருக்கும் ஆறு கங்கை தான் என்பது தெளிவாக்த் தெரிந்திருந்தும் இப்படி சப்பைக் கட்டுகிறீர்களே!!!

            ஸ்நானம் மட்டும் தான் செய்தீர்களா? புனித தீர்த்தம் என்று குடிக்கவில்லையா??!!! இன்னுமொரு முறை சென்று குளித்து விட்டு, ஒரு 20 லிட்டர் கேனில் புனித தீர்த்தத்தை கொண்டு வந்து தினமும் காலையில் பூஜை செய்து விட்டு வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.

            சகலமும் தீர்ந்து விடும். சகலமும்!!!

            ஆமாம் ..நீங்களெல்லாம் இப்படி கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு சென்னை சென்று குடியேறினால் சாக்கடை குறையுமா? அதிகரிக்குமா?

            • I still think you are talking about Varanasi.You go to Rishikesh & Haridwar,then you ll see how the ganga is there.

              I personally doubt if you have ever gone beyond TN borders to actually see anything you talk about.

              We have ganga water from there and my father does have it.Btw,you try to drink corporation supplied water without boiling then sagalamaum enna,sarvamum satyanaasamaidum.

              Idhellam oru excuseaa? matha cityla ellam ipapdi nadakkala,Bangalore,Hyd,Mumbai,Delhi,ellam sariya irukku,chennaila mattum yen ippadi?

              • அறி அண்ணே பேசுறத பாத்தா கங்கை தண்ணி 4 பெக் போட்டுட்டுதான் பேசுறாருன்னு தோணுது…

  3. Solan and Indian are the examples of people who will fall in the abandoned well with their torchlight in their hands.Where is the question of Christian probaganda and Islamic terrorism here brothers?Vinavu has reproduced the news published in Times of India.Solan and Indian will also tell that Times of India is run by Christian Missionary.They will not digest the truth.They are the saviours of the ancient religion.

  4. வினவு எல்லாம் விமர்சனம் செய்யும் அளவிற்க்கு இந்து மதம் குறைந்து போகவில்லை…..

    • வினவு எல்லாம் விமர்சனம் செய்யும் அளவிற்க்கு இந்து மதம் குறைந்து போகவில்லை….. அட கொய்யால அப்படினா இன்னும் எத்தனை நித்தியானந்தா,,,, ஓத்தவாய் சங்கரர்களோ?

  5. UP state was run largely by muslims till 1947 and whateve rhas happened to the Ganga is a result of that.BJP was hardly in rule for more than 10 years.

    BTW,the gangs is like this only near the Varnasi/Allahabad.

    If you go to Rishikesh/Hridwar you can happily swim the Ganga and the water is pure like anything.

    Not only here,muslims have screwed the yamuna also.

    Moreover, if you see tamizhnadu the rivers are dirty,unclean and not fit for anything but if you go to Kerala/Karnataka/AP or any other state,the rivers are great and very good and that is due to the lack of a athiestic politics.

    • க்க்க்க்ரியண்ணே…. முசுலீம் ஒண்ணுக்கடிச்சதனாலேதான் கங்கை நாறுதாமோ….பிணந்திங்கிற சாமியாருங்க என்ன பாய்கதானாமா?

  6. கங்கை இந்து மதத்தால் மாசுபடுவது இருக்கட்டும்…
    ‘பகுத்தறிவு’ செம்மல்கள் பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தமிழகத்தைப்பார்ப்போம்….
    கூவம் – இதைப்பற்றி சொல்லத்தேவைஇல்லை…
    நொய்யல் – சாயப்பட்டறைகளின் கழிவால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்று…
    கொங்குப்பகுதியில் நிலத்தடி நீர் முதல் எல்லாம் சாயப்பட்டறைகளால் பாதிக்கப்பட்டாயிற்று…
    ‘இந்து’ மதம் இல்லாமலும் இந்தநதிகள் எல்லாம் நாறுகின்றன…
    கங்கை நதி சுதந்திரதிற்க்குப்பிறகே இந்த அளவு நாறுகிறது (பெரும்பாலும் ‘மத சார்பற்ற’ ஆட்சி)…
    கங்கை நதி நீரில் பிராணவாயு அதிகமென்பதால் நெடுநாள் கெடுவதில்லை…

    கடைசி விசயம்…ஒரு சாமியார் கங்கைக்காப்பாற்றா உண்ணாவிரதமிருந்து இறந்தார் (சுவாமிநிகமானந்தா)…
    ஆனால் வினவு உட்பட பலர் நித்தியானந்தாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவருக்குக்கொடுக்கவில்லை….
    கங்கை பிரசினயை தீர்ப்பது இருக்கட்டும்…தமிழகத்தில் தூய குடிநீர் கிடைக்கப்போரட்டம் செய்யுங்கள்…

    • வேரன் இப்பதான் தூங்கி முழுச்சீங்களா? இங்கு தொகுப்புனு ஒரு வார்த்தை இருக்கும். யாரையாவது காண்பிக்கச்சொல்லி போய் பாருங்க. நிகமானதாவைப்பற்றி யார் என்ன எழுதிருக்கங்கனு தெரியும்… காந்தி அப்பவே செத்துட்டார்ங்னா. அதுசரி திடீர்னு ஏன் இப்படி குடிநீர் பத்தியெல்லாம் பேசுறீங்க…

      • நண்பரே…ஜூலை 2011-ல் வினவு இதைப்பற்றி எழுதியுள்ளது…
        ஆனால், அதே தேடலை உபயோகித்து நித்தி என்று தேடுங்கள்…எவ்வவளவு பதிவுகள் என்று பாருங்கள்…அதைத்தான் நான் சொல்கிறேன்…

        //அதுசரி திடீர்னு ஏன் இப்படி குடிநீர் பத்தியெல்லாம் பேசுறீங்க
        வினவு ஏன் இதைப்பற்றி எழுதி இருக்கிறார்கள் என்று புரியவில்லை…

        காந்தியைப்பற்றி பேசவேஇல்லயே!!!

  7. இங்கு யாரும் கூவத்தையும், நொய்யலையும் புனித நதி என்று போற்றிக் கொண்டாடவில்லை. புனிதம் என்று நீங்கள் கொண்டாடும் கூவம் ஏன் மாசுபடுகிறது? தன் தெய்வீகத் தன்மையால் எத்தனை மாசுக்கள் தன் மீது கொட்டப்பட்டாலும் தானும் கெடாமல் தன்னை நம்பி வரும் அப்பாவிகளுக்கும் ஊறுவிளைவிக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?

    உண்ணாவிரதமிருந்து புனித கங்கையை காப்பாற்ற முயன்ற அதி புத்திசாலி சுவாமிநிகமானந்தா-வை பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? ஆனால் பெண் பித்தன் நித்தியானந்தாவைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமான ஒன்றல்லவா!!!

    • திலீபன் செய்ததையும் இதே மாதிரி செயல் என்பீர்களா?

      நிகமானந்தா இறக்கும் தறுவாயில் கல் உடைப்பு நிறுத்தப்பட்டது…
      http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne020711COVERSTORY.asp

      சாமியாரோ கம்யூனிஸ்டோ…மக்களுக்காகப்போராடிய எவருமே போற்றத்தக்கவர்கள்…
      கங்கை புனிதம் என்று சொல்பவர்கள் எல்லாம் அதை நாசமக்குபவர்கள் இல்லை…

      பின் குறிப்பு:
      நான் கஙயய் என் வாழ்வில் பார்த்தட்கில்லை…கங்கைநீர் குடித்ததில்லை…என்னைப்பாதிப்பது தமிழகநீர் மாசுபடுவது தான்…

  8. All rivers are nature’s gift to mankind and have to be protected like one’s own mother.

    Except TN and UP,most other states take care of their rivers very well.

    And Ganga is not the only pure river,all big rivers like Brahmaputra, Narmada,Cauvery,Mahanadi are supposed to be worshipped as much as the Ganga.

    Dont argue things like i ll go pollute the river but i accept divine intervention and want it purified.

    And the fact that you remember nigamananda is enough result for his fast whether the results come sooner or later.

    and dont compare nigamananda with nityananda.

    • சங்கராச்சாரியாருடன் ஒப்பிடலாமா…..கங்கை மாசுபட என்னதான் காரணமுனு “வேரத புத்தகத்தை” பார்த்து சொல்லுங்கோ….

    • நதிகள் எல்லாம் மனித இனத்திற்கு இயற்கை கொடுத்த ப்ரிசு என்கிறீர்கள். சொந்த தாயைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். இயற்கை வழங்கிய நதிக்கு தெய்வத் தன்மை கற்பித்து போற்றுகிறீர்கள். ஆனால் பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லதிதில் கொண்டு போய் தள்ளி விட்டு விடுகிறீர்கள். (ஓய்வு நேரத்தில் அங்கெல்லாம் சென்று பாருங்கள். நான் அப்படி சென்று பார்த்த ஒரு இல்லத்தில் 99% பிராமின் பெரியவர்கள் தான். நான் இதை பேச்சுக்காக சொல்லவில்லை. வேண்டுமானால் அட்ரஸ் தருகிறேன். நேரிடையாக பார்த்து தெளிவடையுங்கள்)

      ஏசியா நெட் நியூஸ் பாருங்கள். அங்கும் நதிகள் எப்படி மாசு படுகிறது என்று அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இது வீட்டுக்கு வீடு வாசற்படி போன்றது தான். நாம் தான் நம்மை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.

      மீண்டும் சொல்கிறேன், இயற்கை நம்முடைய உபயோகத்திற்கு வழங்கியவற்றிற்கு தெய்வத்தன்மை தந்து போற்றாதீர்கள்.

      ஆமாம் பெண்களை தெய்வம் என்று போற்றுகிறீர்கள். ஆனால் அவர்களை அதிக அளவில் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்குவதும் இங்கு தானே. இப்படித் தெய்வத் தன்மை தந்து தெய்வத்தின் (?) முன் கருவறையிலேயே காமக் களியாட்டம் நடப்பதும் இங்கு தானே!!!

  9. So,are you the kind of person who ll change his mind based on what people say or do currently?

    try to view things and have an opinion of your own based on what is good and bad for u.

    You cant do something because the neighbour does it,u shud do something because u believe in it.

    And there is a difference between use and abuse,you recognize god in what he gave us.If everyone thought like this,we ll be extinct in no time.

    Try to understand sue and abuse.

    The rivers did not get polluted when humans shitted in it but they do when humans shit in their toilets.

    figure this out if u can.

  10. and those statistics like 99% are brahmins and all are not important here,i dont knw if they are true but who does what is irrelavant here.

    You see how these guys,who put their parents in old age home,how their kids treat them at an old age.

    The rule of a life for all hindus are the same and the punishment for breaking the rules is maximum for a brahmin.

  11. The headline tries to divert the issue like Dinalamar does selectively. Many hindus believes ganges is sacred. many Hindus ignore.Many donteven bother. Every religion believs in some river, place, mountain based on their culture.

    Combining pollution with religion issue is not wise.

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க