privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அம்பேத்கரியம் சாதித்தது என்ன?

அம்பேத்கரியம் சாதித்தது என்ன?

-

‘‘புதிய ஜனநாயகம்” 2012 செப்டம்பர் இதழில் தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?” என்ற கேள்வியை எழுப்பும் நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், பல எடுத்துக்காட்டுகளுடன் சில முடிவுகளும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:

  • Žஇதுவரை இத்தனை ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளும், தீண்டாமை-வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களும், வளர்ச்சி-முன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடவில்லை. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.
  • Žஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப்பட்டு, காந்தி-நேரு-காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.இந்த நேக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளித்து வளர்க்கப்பட்ட மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகைச் சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனிவகைச் சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. இப்போதுள்ள அரசுக் கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
  • பெரியார், அம்பேத்கர் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும் அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்து, புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு, என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பான, புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா?
  • அடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில்  சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் புதுப்புது நடைமுறைகள் மூலம் மீண்டும் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல! கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும், உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி! தலித்” தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா?தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலைமை, சாதிய ஒடுக்குமுறை பற்றி இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள், தமிழ்நாட்டில் உள்ளவை மட்டும்தாம். நாட்டின் பிற மாநிலங்களில், குறிப்பாக அரியானா, பீகார், முன்னாள் உ.பி. மற்றும் முன்னாள் ம.பி., ஒரிசா, மராட்டியம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் உள்ள நிலைமைகளோ படுமோசமானவை.ஆகவே, நாட்டிலுள்ள தலித் அரசியல் கட்சிகளும், தலித் விடுதலை இயக்கங்களும், தலித் அறிவுஜீவிகளும் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை, வன்கொடுமைகளை முறியடிப்பதற்கும், சமூக விடுதலைக்கும் அம்பேத்கர் காலந்தொட்டு இதுவரை, இவ்வளவு காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தொகுத்தறிய வேண்டியுள்ளது. சுயதிருப்தியை உதறிவிட்டு சுயபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்
அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்

ஓட்டுக் கட்சி அரசியலில் குதித்து சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகள் அமைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட ஆதிக்கச் சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டு, மக்களுக்குத் துரோகமிழைத்தும் கருங்காலித்தனம் செய்தும் ஒரு சில தனிநபர்கள் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், துணைப் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற முடிந்தது. இடஒதுக்கீடு மூலம் அரசுப் பதவிகளைப் பிடித்து, அதிகார வர்க்கம்-போலீசின் உயர்ந்த பதவிகளையும்கூட ஒரு சிலர் பிடிக்க முடிந்தது. (அவர்களிலும் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், முத்துக்கருப்பன் போன்ற ஒரு சிலர்  கோடீசுவரர்களாகவும் முடிந்தது.) தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் இத்தகையவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட கிடையாது. அதேசமயம், இப்படி உயர்ந்தவர்கள்கூட ஆதிக்க சாதியினருக்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றுவிட முடியவில்லை. துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன்ராம் முதல் மத்திய அமைச்சராக இருந்த தென்காசி அருணாச்சலம் வரை சாதி அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அதிகரித்த அளவில் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற முறையில் சமத்துவம், விடுதலை என்பதை நோக்கி ஒரு சிறு அளவுகூட முன்னேறி விடவில்லை.  அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட தலித்-சூத்திரக் கூட்டு என்ற பகுஜன் சமாஜ் வழியில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முதன்முறையாக தலித் முதலமைச்சரானார், மாயாவதி. அவர் ஆட்சியில்கூடத் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை; முன்னைவிடப் பெருகித்தான் வந்துள்ளன.

அதற்குக் காரணம், பத்து மாநிலங்களில் கால் பதித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், அதாவாலே, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் ஓட்டுக் கட்சி அரசியலில் புகுந்து சீரழிந்து போய் விட்டார்கள்; அம்பேத்கரின் தத்துவத்தையும் வழிமுறைகளையும் புரிந்து கொள்ளவுமில்லை; பற்றி  நிற்கவும் இல்லை-என்று நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே சிந்திக்கும் காஞ்சயிலைய்யா, ஆனந்த் தெல்தும்டே போன்ற இன்றைய தலித் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் வாதிடுகிறார்கள்.

உண்மையில், தலித் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரைத் தமது சமூக மற்றும் அரசியல் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதுகின்றனர். அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய ஒரு அரசியல் தெய்வமாகவே முன்வைக்கின்றனர்.  அவரது தத்துவம் மற்றும் வழிமுறைகள் மீதான விமர்சனப்பூர்வ ஆய்வுகள், மதிப்பீடுகள் எதையும் தாழ்த்தப்பட்ட சமூகம் முழுமைக்கும் எதிரான தாக்குதல்களாகவே சித்தரிக்கின்றனர். அம்பேத்கரின் சிலைகளை அவமரியாதை செய்யும் சாதி இந்துக்களை வெறுப்பதைப் போல அம்பேத்கரின் கருத்துக்களை விமர்சிப்பவர்களை வெறுக்கிறார்கள். திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்கள்கூட இதற்கு நிகராகவே வெறுக்கப்படுகின்றன.

விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல; அவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற உண்மையைச் சொல்பவர்கள் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். திருமாவளவனின் குறைபாடுகள், சந்தர்ப்பவாதங்களை எடுத்துரைப்பவர்கள் தலித் எதிரிகள் என்று சித்தரித்துத் தாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அம்பேத்கரியம் பற்றிய விமர்சனப்பூர்வமான மதிப்பீடுகள் எவ்வாறு சித்தரிக்கப்படும் என்று சொல்ல வேண்டியதில்லை! என்றாலும், அப்பணி இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது.

தீண்டாமை மற்றும் சாதியக் கட்டமைப்புக்கு எதிராக அம்பேத்கரின் பங்களிப்புகளை சாரமாகத் தொகுத்துச் சொல்வதற்குப் பதிலாக, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மாமேதையாகவும், புரட்சியாளராகவும் காட்டுவதற்காக அம்பேத்கரின் மேற்கோள்கள், தொகுப்பு நூல்கள், உரைகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொள்ளும்படி தலித் அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், தீண்டாமை, சாதியக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் அவர் முன்மொழிந்த தீர்வுகளும் நடைமுறைகளும் தோற்றுப் போவிட்டன என்பதுதான் எதார்த்த உண்மையாக உள்ளன.

இந்த உண்மையை, தலித் ஆய்வுகளுக்கான இந்தியக் கழகம் 2008-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த அம்பேத்கர் நினைவு முதற் சொற்பொழிவில் பிரெஞ்சு பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ மிகவும் எளிமையாகவும் சாரமாகவும் நிரூபித்திருக்கிறார். தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாளில் நான்கு மூல உத்திகளை மேற்கொண்டார் என்று தொகுக்கிறார் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ.

அம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்
அம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்

‘‘சமனற்ற வெவ்வேறு படிநிலைகளைக் கொண்ட (இந்திய) சமூகம், கீழ்நிலை சாதிகள் (சூத்திரர்கள்)  – தலித்துகள் என்றும், சூத்திரர்களும் தலித்துகளுமே பல சாதிகள் என்றும் பிளவுபட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, முதலாவதாக தலித் மக்களை ஐக்கியப்படுத்துவது; பிறகு தலித்துகள் – சூத்திரர்கள் அடங்கிய பகுஜன் சமாஜ் மக்களை ஐக்கியப்படுத்துவது. இரண்டாவதாக, அவர்கள் அனைவருக்கும் தனியொரு அடையாளத்தை உருவாக்கிக் கட்டமைப்பது; அது அவர்களுக்கு சமஸ்கிருதமயமாக்கத்திலிருந்து (பார்ப்பனமயமாக்கத்திலிருந்து) விடுபடுவதற்கான மாற்று வழியைத் தரும். இந்த இரண்டு நோக்கங்களையும் ஈடேற்றுவதற்காக நான்கு வெவ்வேறு மூல உத்திகளை – போர்த்தந்திரங்களை –  தமது நாற்பதாண்டுகால நீண்ட பொதுவாழ்வில் அம்பேத்கர் நடைமுறைப்படுத்தினார்.

1. தீண்டத்தகாதவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினால், அவர்கள் சாதிகள் அடிப்படையில் அல்லாத ஒரு மாற்று அடையாளத்தைப் பெறுவார்கள் என்று அம்பேத்கர் நம்பினார்; அவர்கள் தமது சுயமரியாதையை மீட்பதற்காகவும், தம்மிடையே உள்ள உட்பிரிவுப் பிளவுகளைக் கடப்பதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாம் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு உருவாக்கித் தருவதற்கு அம்பேத்கர் முயன்றார். தீண்டத்தகாதவர்கள் பூர்வீகத்தில் பௌத்தர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை உணருவார்களேயானால், அவர்கள் தமக்குள் நிலவும் சாதியப் பிளவுகளைக் கடந்து தாம் ஒரே இனக்குழுவினர் என்ற நிலைப்பாடு எடுப்பார்கள்; இதனால் பழைய, ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கும் எதிராக எழுந்து நிற்பார்கள் என்று அம்பேத்கர் நம்பிச் செயல்பட்டார்.

2. தேர்தல் அரசியல் ஈடுபாடு. இந்து சமுதாயத்தில் உண்மையில் நிலவும் முரண்நிலை – பிளவு, பிராமணர் – பிராமணர் அல்லாதவர் என்பதல்ல; தீண்டத்தக்கவர் – தீண்டத்தகாதவர் என்பதாகும்; இதனால் அனைவருக்கும் சமமான வாக்குரிமை தரும் பிரதேச அடிப்படையிலான தொகுதிகள் என்ற தேர்தல் முறை ஏற்கக்கூடியதல்ல. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் தீண்டத்தகாதவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்பதால், அவர்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாமல் போகும். ஆகவே, தீண்டத்தகாதவர்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் அல்லது தீண்டத்தகாதவர்களைத் தனியான வாக்காளர்களாகக் கொள்ளவேண்டும் என்று அம்பேத்கர் கோரினார்.

இரண்டாவது வட்டமேசைக்குப் பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீடு செய்து, தீண்டத்தகாதோரைத் தனி வாக்காளர் தொகுப்பாக அங்கீகாரம் செயப்பட்டது. அது இந்து சமூகத்தை வகுப்புவாரியாகப் பிளவுபடுத்தி விடும் என ஆத்திரமுற்ற காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து உண்ணாநிலையை மேற்கொண்டார். 71 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட தனிவாக்காளர் தொகுப்புமுறையைக் கைவிட்டால், 148 தனித் தொகுதிகள் ஒதுக்கீடு தருவதாக  காந்தி கும்பல் பேரங்கள் நடத்தியபோது, அம்பேத்கர் பணிந்து புனா ஒப்பந்தத்தை ஏற்றார். (காந்தியின் உண்ணாநிலை, தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக இந்து சமூகத்தை ஆத்திரங்கொள்ளச் செய்துவிடும்; விளைவுகள் விபரீதமாகிவிடும் என்பதால் காந்தியின் நிர்ப்பந்தத்தை ஏற்கும்படியானது என்று அம்பேத்கரும் பிற தலித்துகளும் வாதிடுவதுண்டு).

அந்த அடிப்படையில், 1936-இல் அம்பேத்கர் நிறுவிய இந்தியத் தொழிலாளர் கட்சி அடுத்த ஆண்டு நடந்த தேர்தல்களில் பெருந்தோல்விகளைச் சந்தித்தது. அதற்கு முக்கியக் காரணம், அம்பேத்கர் தன்னைப் பொதுவில் தொழிலாளர்களின் தலைவராகக் காட்டிக் கொண்டு, தீண்டத்தகாதவர்களுக்கு அப்பாலுள்ள வெகுமக்கள் ஆதரவோடு பரந்த சமூக அடித்தளத்தைப் பெற முயன்ற அதேசமயம், வர்க்க அடிப்படையிலான மார்க்சியப் பார்வையை நிராகரித்து, இந்திய சமூகத்தின் அடிப்படை அலகாக சாதியம் மட்டுமே இருக்க முடியும் என்ற முரண்பட்ட இரட்டை நிலையை மேற்கொண்டதுதான். மேலும் மராட்டியத்திலேயே மகர், மாங்க், சாம்பர் ஆகிய உட்பிரிவுகளைக் கடந்த தலித் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலேயே அவர் தோல்வியடைந்ததை இந்தியத் தொழிலாளர் கட்சி நிராகரிக்கப்பட்டது காட்டியது. அடுத்து, அவர் நிறுவிய பட்டியல் சாதிகளின் பேரவையும் தேர்தல் களத்தில் பெருந்தோல்வியைக் கண்டது. சாதிய அடித்தளத்தைப் பரவலாக்குவது மற்றும் தீண்டத்தகாத மக்கள் நலன்களை மட்டும் காப்பது ஆகிய நிலைகளிடையே ஊசலாடியதுதான் அவரது அரசியல் தோல்விக்கும் பின்னடைவுக்கும் காரணமாயின. இறுதியில், சாதிய அடிப்படையைக் கடந்ததாக இந்தியக் குடியரசுக் கட்சியை அம்பேத்கர் நிறுவினாலும், அவரே நேரடியாகத் தோல்வியைத் தழுவி, தேர்தல் அரசியலில் பின்னடைவே நிரந்தரமானது.

3. அம்பேத்கரின் அரசியல் செயல்பாடு, அரசியல் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் பங்கெடுப்பதோடு நின்றுவிடவில்லை. தனது தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் ஆங்கிலேய அல்லது காங்கிரசு அரசாங்கங்களில் செல்வாக்குகளை ஏற்படுத்தித் தீண்டத்தகாதவர்களின் நலன்களுக்கான தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவும் கடுமையாக முயன்றார். ஆங்கிலேய ஆட்சியின் கீழ், ஒருபுறம் மேல்சாதிகளின் பிரதிநிதியாகிய காங்கிரசின் ஆதிக்கம் நிலவிய தேசவிடுதலை இயக்கத்தை நிராகரித்தார். இதனால் தனது சமத்துவ உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் கண்டு, சாதி இந்துக்களுக்கு எதிராகத்  தலித்துகள் பாதுகாப்பைப் பெறமுடியும் என்று நம்பினார். மறுபுறம், இந்தியராகிய அம்பேத்கரால் தனது நாடு ஒரு அந்நிய சக்தியினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதையும், அதற்கு மேல் அவர் மிகவும் நேசித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்பீடுகள் நசுக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஒருவகைக் குழப்பத்தில் மூழ்கி இருந்த அம்பேத்கர் 1930-களில் காங்கிரசுக்கு எதிரான பகைமை நிலைமை காரணமாக தேசிய உணர்வுகளை மீறி, ஆங்கிலேயர்களுடன் சமசரம் செது கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு ஓரளவு சாதகமான பலன்களைப் பெற முயன்றார். இதனால் ஆங்கிலேயர் ஆட்சியில் தலித் தலைவர்கள் சில பதவிகளையும் தீண்டத்தகாதோர் சில சலுகைளையும் பெற்றனர். ஆனால், அம்பேத்கரின் கட்சிகள் அடுத்தடுத்துத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததால் ஆங்கிலேய ஆட்சியில் தலித்துகளின் அமைப்புகள் என்ற வகையில் தலித்துகள் விரும்பிய ஆதாயங்களை அடைய முடியவில்லை.

1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்
1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்

1946-லிருந்து ‘விடுதலை’யை நோக்கி நாடு நகர்ந்தபோது நடைமுறை அரசியலுக்குத் தகுந்தபடி காங்கிரசுக் கட்சியுடன் அம்பேத்கர் நெருக்கமானார்.  காந்தியின் நிர்ப்பந்தம் காரணமாக 1947 ‘விடுதலை’க்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் அம்பேத்கரைச் சட்ட மந்திரியாக்கினார், நேரு. எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை; வெளியிலிருப்பதை விட அரசாங்கத்தில் பங்கேற்றுப் பட்டியலினச் சாதிகளின் நலன்களுக்கு எளிதில் சேவை செய முடியும் என்பதால் காங்கிரசு ஆட்சியில் அம்பேத்கர் பங்கேற்றார். அரசியல் நிர்ணயச் சட்ட வரைவுக் கமிட்டித் தலைவர், சிறுபான்மையினர் கமிட்டி உறுப்பினர் என்று பல கமிட்டிகளில் அம்பேத்கர் பங்கேற்று தலித்துகளின் நலன்களுக்கான விவாதங்களில் பங்கேற்றார். என்றாலும் வல்லபா பட்டேல், ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீதாராமையா போன்ற காங்கிரசுப் பிற்போக்காளர்களின் முயற்சியாலும் நேருவின் துரோகத்தாலும் இந்து சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அம்பேத்கர் முறியடிக்கப்பட்டார். ஆட்சியாளர்களுடன் அம்பேத்கர் மேற்கொண்ட கூட்டுறவு மூலம் அமெரிக்க மற்றும் ஆங்கிலேய பாணியிலான, வலுவான முதலாளிய மைய அரசமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்ற அம்பேத்கர், அதற்குள்ளாகவே இந்து சமூக அமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்தும் முயற்சியில் முறியடிக்கப்பட்டு, கசப்பான உணர்வுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த இந்தியக் குடியரசின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

4. மதமாற்றம்: அம்பேத்கரின் கடைசி மூலஉத்தி. சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கு வேறொரு மதத்திற்கு மாறிவிடுவது என்ற முடிவு இந்து மதம் பற்றிய அம்பேத்கரின் ஆவிலிருந்து தர்க்கரீதியாக வந்ததாகும். “நமக்குத் தேவை சமூக சமத்துவம்; முடிந்தவரை இந்து அமைப்புக்குள் அதைப் பெறுவோம்; இல்லையானால் பயனற்ற இந்து அடையாளத்தைத் தூக்கியெறிவோம்; இந்துத்துவத்தை விட்டொழிக்க வேண்டுவது அவசியமானால், இந்துக் கோவில்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று 1927 ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் மாநாட்டுக்குத் தலைமையேற்று அம்பேத்கர் பேசினார். அதைத் தொடர்ந்து பத்துப் பன்னிரண்டு மகர் சாதியினர் இசுலாத்துக்கு மதம் மாறினர்.

பின்னர், 1935 இயோலா மாநாட்டில், இந்து மதத்தில் இருப்பதால்தான் நாம் இழிவுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறோம்; இந்துத்துவத்துடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு நிபந்தனையற்ற சமத்துவம், தகுதி, வாப்புகளை உறுதிப்படுத்தும் வேறெந்த மதத்துக்கும் மாறிப் போய் விடுங்கள்” என்று தீண்டத்தகாதோருக்கு அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். வெவ்வேறு மதங்களை ஒப்பீடு செய்து, தாழ்த்தப்பட்டோருக்கு அம்மதத் தலைவர்களிடையே உள்ள வரவேற்பையும் ஆய்வு செய்தார். பிறகு 1936-இல் சீக்கிய மதத்திற்கு மதம் மாறுவதைத் தெரிவு செய்தார்.

சீக்கியராக மதம் மாறும் தீண்டத்தகாதோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு புதிய அரசியல் சட்டம் இயற்றும்படி ஆங்கிலேயரிடம் அம்பேத்கர் கோரினார். பஞ்சாபிலுள்ள சீக்கியருக்கு மட்டுமே அது பொருந்தும் என்று ஆங்கிலேயத் தலைவர்கள் நிராகரித்தனர். பஞ்சாபிலிருந்த சீக்கியத் தலித்துகள், அங்கு ஜாட் சாதியினர் தமக்கு இழைக்கும் கொடுமைகளை எடுத்துச் சொன்னார்கள். சீக்கியர்களின் அரசியல் தலைமையான அகாலிகளும் தீண்டத்தகாதோரின் பெருந்திரள் மதமாற்றத்தை எதிர்த்தனர். சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் திருப்பித் தாக்கும் நடவடிக்கைகளைக் கண்டஞ்சிய அம்பேத்கர், மதமாற்ற முயற்சிகளை அப்போதைக்குக் கைவிட்டார்.

தீண்டாமை மற்றும் சாதி ஆதிக்கத்துக்கு எதிரான பிற மூல உத்திகள் தோல்வியடைந்த பிறகு, மீண்டும் மதமாற்றத் தீர்வை அம்பேத்கர் கையிலெடுத்தார். இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பாக 1956 அக். 14 அன்று மிகப் பெரிய விழாவொன்றில் நாகபுரியில் பல நூறாயிரக்கணக்கான மகர் சாதியினர் புத்த மதத்தைத் தழுவினர். புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சட்டமும் சாதி இந்துத் தலைமையும் கருதுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனாலும், இந்துமதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பிரகடனம் செயும் வகையில் மராட்டியத் தீண்டத்தகாதோர் குடியிருப்புப் பகுதியிலிருந்த இந்துக் கடவுளர் சிலைகள் சாதி இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதன் மூலம் புத்த மதத்தைத் தழுவிய மக்கள் தமக்குத் தாமே ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், சமுதாயத்தில் நிலவும் சாதியப் படிநிலையிலிருந்து அம்மக்கள் விடுதலை பெறவே இல்லை. நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளில் நிலமற்ற விவசாயிகளாக வாழும் பௌத்த பெருந்திரள் மக்கள் பழைய முறையிலேயே வாழ்கிறார்கள். ஒரு முக்கிய வேறுபாடு, தங்களுக்கு முன்பு மறுக்கப்பட்ட (சடங்கு – சாத்திர) நடைமுறைகள் தமக்குத் தடை செயப்பட்டவை என்பதற்காக அல்ல, தாமே தனியினம் என்ற உணர்வுடன் அவற்றைப் பின்பற்றுவதைக் கை விட்டுள்ளனர். மேலும், சம்பர்கள் போன்ற பிற தீண்டத்தகாதவர்கள் புத்தமதத்தைத் தழுவுவதை நிராகரித்து விட்டனர். புத்த மதத்தைத் தழுவிய மகர்களிலும் ஏழை-எளிய மக்கள் பழைய வழக்கங்களைத் தொடர்கிறார்கள்.

இவ்வாறு தீண்டாமையையும் சாதிய அமைப்பையும் தகர்ப்பதற்கு அம்பேத்கரே முன்வைத்து நடைமுறைப்படுத்திய தீர்வுகளையும் போதனைகளையும் நேர்மையாகத் தொகுத்தறியும் எவரும், அவை தமது நோக்கங்களை ஈடேற்றக் கூடியவை என்று கூற முடியாது. மாறாக, அவை எதிர்மறைப் படிப்பினையைத்தான் கொடுத்திருக்கின்றன.

அம்பேத்கரியம்-7

முதலாவதாக, தீண்டத்தகாதோர் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தையும் தலித்துகள்-சூத்திரர்களை ஐக்கியப்படுத்தி, அவர்கள் அனைவருக்கும் சாதி அடிப்படையில் அல்லாத தனியொரு மாற்று அடையாளத்தையும் தருவதன் மூலம் சாதிய உட்பிரிவுகளைக் கடந்த ஐக்கியத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று அம்பேத்கர் நம்பினார். அதற்கு நேர்மாறாக ஒவ்வொரு சாதிய உட்பிரிவுகளும் தனித்தனி சாதி அடையாளத்தை வலுப்படுத்தி கொள்கிறார்கள். ஓட்டுக்கட்சி அரசியலின் வாக்கு வங்கி உருவாக்கம் மற்றும் சாதிய அரசியல், சமூக ஆதிக்கத்துக்கு இது அவசியமாக உள்ளது. தலித் மக்களிடையேகூட சாதிய உட்பிரிவு அடையாளங்கள் இறுக்கத்தையும் சீரழிவையும்தான் ஏற்படுத்தியிருக்கின்றன.

இரண்டாவதாக, தேர்தல் அரசியல் ஈடுபாடு தலித் அரசியல் தலைவர்கள், அமைப்புகளை மிக மோசமான அரசியல் சந்தர்ப்பவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் அடகு வைக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு மாறாக, தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை வைக்கும்படி சீரழிக்கப்படுகிறார்கள். சாதி, மத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி ஆதிக்க சாதியினர் ஆதாயம் அடையும் சூழலில் தலித் கட்சிகளின் சக்தியை பிற அரசியல் கட்சிகள் அங்கீகரிக்க மறுப்பதாக தலித் அரசியல் தலைவர்கள் அவர்களிடம் கெஞ்சுகிறார்கள்.

மூன்றாவதாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை, வன்கொடுமை மற்றும் சாதியக் கட்டமைப்பை முறியடிப்பதற்கு பதிலாக, ஆட்சியாளர்களின் தயவில் இம்மக்களுக்கு சலுகைகளையும் பதவிகளையும் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, ஆட்சியாளர்களையும் அதிகார அரசு அமைப்பையும் பகைச் சக்திகளாகக் கருதி அவர்களை எதிர்த்துப் போராடி, வீழ்த்த வேண்டிய பணிகளை – பாதையை நிராகரிக்கின்றனர். மாறாக, எப்போதும் தற்காலிக நிவாரணங்களையும், எதிரிகளுடன் சமரச-சரணடைவுப் போக்கையுமே மேற்கொள்கின்றனர்.

இவைதாம் அம்பேத்கரிடமிருந்து தலித் தலைவர்கள் கற்றுக்கொண்டவை. இவைதாம் அம்பேத்கரியம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவை!

இதற்கு மாறாக, தீண்டாமையையும் சாதிய சமுதாயத்தையும் பாதுகாத்துவரும், ஆதிக்க சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செயும் அரசுக் கட்டமைப்பைத் தாக்கித் தகர்க்கவேண்டும்.  சமூக, அரசியல் ஜனநாயகப் புரட்சி மூலம் சமுதாயத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியால்தான் தீண்டாமையும் சாதியமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். அரசியல், ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்பதன் ஊடாகத்தான் சாதிகளைக் கடந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்பட முடியும்.

எதிரிச் சக்திகளுடன் நேரடியான மோதலும் புரட்சியும் இல்லாமல், பழைய சாதிய சமூகக் கட்டமைப்புக்குள்ளாகவே கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களால் அம்பேத்கரே முன்மாதிரியாகக் கருதிய மேலைநாடுகளில் கூட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடங்கிய ஜனநாயகம் வந்துவிடவில்லை. ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை-சாதிய சமூகத்திலிருந்து விடுதலைக்கு வேண்டுவது சீர்திருத்தங்கள் அல்ல; மேற்கத்திய பாணியிலான ஜனநாயகப் புரட்சி கூட அல்ல. புதிய ஜனநாயகப் புரட்சி!

படிக்க

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________

  1. சிபிஐ, சிபிஎம் தொண்டர்கள் பேசிக்கொள்வார்களே, ‘பொருளாதார சமத்துவம் வந்தால் எல்லா ஏற்றத்தாழ்வும் சரியாப் போயிடும் தோழர்!’ என்று… அதையே நீட்டி முழக்கி 2 பக்கம் எழுதியிருக்கிறீர்கள். அவ்வளவே. மற்றபடி அதே தட்டையான புரிதல்தான் இருக்கிறது. இந்திய சமூக அமைப்பை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் அம்பேத்கார் ஒருவர்தான். புரிந்துகொள்ளவே முடியாத (அசல்+போலி+ எட்சட்ரா) இடதுசாரிகளால் தீர்வு எதையும் தரமுடியாததில் வியப்பில்லை.

    இப்படிக்கேட்கலாமே-

    ‘மார்க்ஸியம் சாதித்துக் கிழித்தது என்ன?’

    • உண்மையில், தலித் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரைத் தமது சமூக மற்றும் அரசியல் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதுகின்றனர். அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய ஒரு அரசியல் தெய்வமாகவே முன்வைக்கின்றனர். அவரது தத்துவம் மற்றும் வழிமுறைகள் மீதான விமர்சனப்பூர்வ ஆய்வுகள், மதிப்பீடுகள் எதையும் தாழ்த்தப்பட்ட சமூகம் முழுமைக்கும் எதிரான தாக்குதல்களாகவே சித்தரிக்கின்றனர். அம்பேத்கரின் சிலைகளை அவமரியாதை செய்யும் சாதி இந்துக்களை வெறுப்பதைப் போல அம்பேத்கரின் கருத்துக்களை விமர்சிப்பவர்களை வெறுக்கிறார்கள். திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்கள்கூட இதற்கு நிகராகவே வெறுக்கப்படுகின்றன.

      விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல; அவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற உண்மையைச் சொல்பவர்கள் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். திருமாவளவனின் குறைபாடுகள், சந்தர்ப்பவாதங்களை எடுத்துரைப்பவர்கள் தலித் எதிரிகள் என்று சித்தரித்துத் தாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அம்பேத்கரியம் பற்றிய விமர்சனப்பூர்வமான மதிப்பீடுகள் எவ்வாறு சித்தரிக்கப்படும் என்று சொல்ல வேண்டியதில்லை! என்றாலும், அப்பணி இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது.

      இதற்கான ஆதாரமோ இம் மறுமொழி!

      • வர்க்க போராட்டம் ஒன்று தான் சாதி ஒழிய ஒரே வழி என்பதை ஏற்று கொள்கிறேன்,
        அம்பேத்காரியம் தோற்றுவிட்டது என்பதையும் ஏற்று கொள்கிறேன் (
        அதில் எனக்கு உடன்பாடுமில்லை),
        ஒருவேளை, அம்பேத்கார் பொதுஉடைமையை பற்றி பேசிருந்தால் என்ன ஆகிருக்கும்?

        இந்த கட்டுரை தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை புரிந்துகொள்ளாமல், அவர்களின் நிலைமையில் நின்று யோசிக்காமல் எழுதியதாக தான் நான் உணர்கிறேன்……

        எழுதிய நோக்கம் சரி ஆனால் எழுதிய விதம் சரி என்று படவில்லை….

        • கட்டுரை தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் நின்று பேசியிருக்க வேண்டும் என்ற உங்களது அக விருப்பத்தின் படி எழுதுவது எப்படி நேர்மையான சமூக ஆய்வாக இருக்க முடியும் அடப்பாவி அய்யா

          • ஒரு திருத்தம் ஒரு ‘ம்’ யை சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமையில் நின்று’ம்’ யோசித்திருக்க வேண்டும் என்று கூறினேன். அதாவது
            மாவோயிஸ்ட்கள் கலெக்டரை கடத்திவிட்டார்கள் என்று சொன்னால் தவறாகத்தான் தெரியும், அதே மாவோயிஸ்ட்களின் நிலைமையில் நின்று பார்த்தால்தானே சரியென்று தெரியும், அதேப்போல் அம்பேத்கர் நிலைமையில் நின்று ஒருமுறை சிந்திக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு அவர் ஏன் பொதுவுடைமை ஏற்று கொள்ளவில்லை என்று சொல்லவேண்டும்.

            இந்த கேள்விக்கு பதிலளிக்கவிட்டுவிட்டீர்களே Mr.mani அய்யா…
            //அம்பேத்கார் பொதுஉடைமையை பற்றி பேசிருந்தால் என்ன ஆகிருக்கும்?//

  2. சாதி படைச்சவன் சாதி என்ன? சாதி என்ன?…
    சாதி பொறந்த தேதி என்ன? தேதி என்ன?…

    =சமத்துவம் என்பது அனைவருக்கும் மனதில் பிறக்க வேண்டும்=

  3. இந்திய சமூக அமைப்பை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் அம்பேத்கார் ஒருவர்தான். உண்மை.
    மார்க்ஸியம் சாதித்துக் கிழித்தது என்ன?’
    ஒன்றும் இல்லை அது தான் உண்மை.

    • this essay already explained what are all the things ambedkar did
      and where he failed .can you explain at which part of essay the explanation is wrong.

      we don’t generic statements

  4. ஹலோ வினவு, ….. கமுநிசம் ஒரு கானல் நீர் என்று அன்றே அறுதியிட்டு கூறியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்! வினவிர்க்கு தைரியம் இருந்தால் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை சரித்ரத்தை எடுத்து படிக்கவும்!

  5. இந்திய அரசு தாழத்தப்பட்டவர்கள் மேப்பாட்டிற்காக உருவாக்கிய எல்லா திட்டமும் ..எப்படி பாழாய்ப்போனது என தின்னையில் உக்கார்ந்து மோட்டைப்பார்த்து சிந்தித்தால் கீழ கண்டவை தெரிகின்றன…

    1.எல்லா சலுகைகளையும் தலித்களில் உள்ள பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிக்குமே பயன் படுத்திக்கொண்டனர்..
    2. பரம படிபறிவுவில்லாத தலித்களை இன்னும் அப்படியே வைத்திருப்பது தலித்களில் உள்ள பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிக்குமே
    3. 65 ஆண்டு காலமாக சலுகை தொடர்ந்தும் இன்னும் முன்னேறாமல் இருப்பது தலித்களில் உள்ள உள் சாதி சண்டைகள்தான் ( பள்ளன் குதிரை வண்ணான் இனத்தை தீண்ட தகாதவன் என கூறுவது..ப்றையர் பள்ளனை தாழ்வாகநினப்பது)

    4. அருந்ததியருக்கான உள் இடஓதிக்கீடு வரும் போது தலித்களிடமே உள்லெதிர்ப்பு நிறைய இருந்தது..

    5. அவர்கள் எல்லோரும் ஒரே இனம் என என்னதவரை இந்த சலுகைகள் என்றுமே அவர்களை முன்னேற்ற பயன் படாது.

  6. வினவு,

    எல்லா பக்கமும் திரும்பி ஒரெ இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பெரியாரியம் என்ற கட்டுமரத்தை தலித்துக்களை கைவிடச் சொல்கிறீர்கள்.. சரிதான்.. ஆனால் உயிர்காக்கும் கவசமான லைஃப் ஜாக்கெட் போன்ற அம்பேத்கரின் வழிகாட்டலை தலித்துகள் நிராகரித்து உங்களுடன் எதிர் நீச்சல் போடும் நிலையில் இருக்கிறார்களா..?! உமக்கு அபாரமான தன்னம்பிக்கை இருக்குங்காணும்.. ஆனால் தலித்துகளுக்கு அது இருக்கிறதா என்று தெரியவில்லை.. இருந்தால் அதுவே அம்பேத்கரின் வெற்றிதான்..

  7. தலித்துகளைப் போலவே நாடார்களும் சொல்லொண்ணா வன்கொடுமைகளை அனுபவித்தவர்கள். ஆனால் தலித்துகள் அப்படியே இருக்கிறார்கள், நாடார்களோ தமது சுய முயற்சியாலேயே பெருமிதம் தரும் அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை பார்க்கும்போது முன்னவர்களது நிலை வேதனை அளிக்கிறது.

    ஒரு முதல் முயற்சியாக இரட்டைக் குவளை முறையை எப்படி எதிர்க்கொள்ளலாம் எனக் கூறிய ஆலோசனைக்கு எவ்வளவு கேலியான பின்னூட்டங்கள்? (பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html).

    நான் சந்தித்த ஒரு தலித் நண்பரிடம் இப்பதிவைப் பற்றி கூறியபோது அவர் அரசு டீக்கடை வைத்து தருமா என ஒரு அடிப்படை கேள்வியே கேட்டார். அவ்வாறு எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்த்து நின்றால் சுயமரியாதைக்காகாது என்பதை அவர் புரிந்து கொள்ள தயாரில்லை. அதே மாதிரி நாடார்களும் நின்றிருந்தால் இப்போதைய அவர்களது உன்னத நிலை கனவில்கூட கிட்டியிராது என்பதே நிஜம்.

    பார்க்க: பெரு மதிப்புக்குரிய நாடார் சமூகம் http://dondu.blogspot.in/2009/01/blog-post_09.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    • 1890-லிருந்தே நாடார்கள் வன் கொடுமை ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள்..
      பிராமினர்களை எதிர்த்து பூனூல் அணிந்துக்கொள்ளுதல் போன்ற நூதன போராட்டமும்,
      உயர் சாதியினரை எதிர்த்து நாங்கள்தான் அரசபரம்பரையினர் என வெள்ளையன் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு தோற்றபொழுதிலும்…
      அவர்கள் வன் கொடுமையை எதிர்த்த போராட்டத்தை 60 வருடக்காலமாக போராடினார்கள்…

      நாடார்களுக்கு பொருளாதார வளர்ச்சி என்பது காமராஜர் முதல்வர் ஆனப்பிறகே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்…1967-ல் சட்டமன்ற தேர்தலில் விருதுநகரில் தோற்ற காமராஜர் 1969-ல் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் நாகர்கோவில் போட்டியிடும் போது தனது பெயரை காமராஜர் நாடார் என்று மாற்றிப் போட்டியிடுகிறார்…

      பாராளுமன்ற இனையதள முகவரி :- http://loksabha.nic.in/

      நான்காம் பாராளுமன்ற உறுப்பினர் பட்டியலில் நாகர்கோவில் M.P- யாக காமராஜர் நாடார் என பெயரை குறிப்பிட்டுயிருக்கிறார்.

    • டோண்டு சார், உங்கள் பெயருக்குப் பின்னால் பிளாக்கர் எண்ணை பிராக்கெட்டுக்குள் கொடுப்பதை விட்டுவிட்டீர்களே? எலிக்குட்டி சோதனையெல்லாம் இனி தேவையில்லை என்றா?

      (வினவு – பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்று விட்டுவிடாமல் இந்த கமெண்டை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

    • அய்யா சாமி எப்பொழுதும் வினவில் நீங்கள் போடும் கமெண்டை பார்த்தல் சிரிப்பு தான் வரும். நீங்கள் கொடுத்த லின்க்கில் போய் பார்த்தால்…….,
      ரொம்ப கொடுமையா இருக்கு…..
      ரெட்டை டம்ளர் பிரச்சனைக்கு நீங்கள் சொன்ன தீர்வை பார்த்தல் அப்படியே புல்லரிக்குது……

      ரெட்டை டம்ளர் டி கடைக்கு நீங்கள் சொன்ன தீர்வுக்கு பதில் இப்படி செய்தல் எப்படி இருக்கும்?

      அதாவது அனைத்து கோவில் களிலும் தாழ்த்த பட்டவர்களை (மாமிசம் உண்ணாத, மந்திரம் கற்ற தாழ்த்த பட்டவர்கள்) அரச்சகர்களாக ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? டி கடைக்கு கூட மற்றவர்கள் போவாமல் இருப்பார்கள் ஆனால் கோவிலுக்கு போகாமல் யாரும் இருக்க மாட்டார்கள் தானே?

      ///இவ்வளவு வருடங்கள் அரசாங்கமோ அல்லது நல்ல மனம் படைத்த மேல் சாதிக்காரரோ ஏதாவது செய்வர் என்று இருந்ததுப் போதும். ////

      தாழ்த்தப்பட்டவர்கள், தாங்களே தாழ்த்தி கொள்ளவில்லை,
      ஒடிக்கப்பட்டவர்கள் தாங்களே ஒடிக்கி கொள்ளவில்லை,
      அதற்கு காரணம் மற்றவர்கள்,
      யாரும் உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை,
      வளச்சியை தடுக்காமல் இருந்தாலே போதும்…..

      ///அதனால் என் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. அவ்வாறு செய்யாமல் நான் என்னை பஸ்ஸில் அனுமதியுங்கள் என்றுக் கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா?///

      தாங்க முடியல உங்கள் தற்பெருமை……

      நான் இந்த கமெண்டை போடுவதின் நோக்கம், தயவு செய்து நீங்கள் மொக்கை போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக…..

      கொலைவெறியுடன்,
      அடப்பாவி!

  8. //இந்திய சமூக அமைப்பை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் அம்பேத்கார் ஒருவர்தான். உண்மை.
    மார்க்ஸியம் சாதித்துக் கிழித்தது என்ன?’
    ஒன்றும் இல்லை அது தான் உண்மை.//

    இப்படியே மாத்தி மாத்தி குற்ம் சொல்லிக் கொண்டே இருங்கள். அழகான வழி சிரமமில்லாத வழி பெரியார் காட்டிய வழி இஸ்லாம் நம் கண் முன் இருக்க…..

    ‘எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!’

    அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே’

    • மொதல்ல தொழுகில வெரல ஆட்டுலாமா ஆட்டக்கூடாதா .? அப்புறம் இங்க தாவா பண்ண வரலாம் . எங்க —– விழுந்தாலும் அரிசி பொறுக்க போயிடறது.

  9. // பெரியார் காட்டிய வழி இஸ்லாம் நம் கண் முன் இருக்க..//

    இப்ப அவரும் ரசூலுல்லாஹ் ஆயிட்டாரா..?!! நல்ல தவ்ஹீத் போங்க..

  10. Ambedkariam has succeeded in North Indian where Mayawati’s bahujan Samaj party has made a political party for dalits and have been in power in UP.

    They have also been succesful in Punjab around the jalandhar area and have been in decent power in the sikh religion also.

  11. எனக்கு ரொம்ப நாட்களாகவே மனதைக்குடையும் சந்தேகம் ஒன்று…..நமது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதாக வெளிப்படுத்திக்கொள்ளும் நபர்கள் ஒருவர் விடாமல்
    ” தாழ்த்தப்பட்ட….பிற்படுத்தப்பட்ட …..” என்ற வார்த்தைகளை அடிக்கடி பிரயோகம் செய்கிறார்களே… அவை ஆங்கிலத்தில் scheduled caste , backward class , scheduled tribe , என்றுதானே உள்ளன. அவைகளுக்கு நேர்முகமான வார்த்தைகள் ” அட்டவணை சாதியினர் , பின்தங்கிய வகுப்பினர் ………” இப்படித்தானே வர வேண்டும். இவைகளை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று சொல்லி சொல்லியே இன்றளவும் சமூகத்தில் ஒரு வெறுப்புணர்வையே விதைப்பதில் இவர்களுக்கு என்ன ஒரு குரூர திருப்தி ?

    • “அட்டவணை சாதியினர் , பின்தங்கிய வகுப்பினர்”

      after 1000 years of exploitation
      Mr Gandhi called them as Harijans(SON OF Hari)

      consider a small situation 3 persons are always beating/irritating/torturing a fourth and fifth persons for No of days suddenly principal of the school suddenly come and tell the fourth and fifth person look here from here afterwards i will call you son of god.

      பேரு வச்சியெ சோறு வச்சியா case thaan

    • அப்படி சொல்வதால் எந்த சமுதாயத்திற்கு வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது என்பது தான் கேள்வியே. “பட்டியல் சாதியினர்” என்பதற்கும் “தாழ்த்தப்பட்ட” சாதியினர் என்பதற்கும், அதுபோல “பின்தங்கிய” என்ற சொல்லுக்கும் “பிற்படுத்தப்பட்ட” என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு நிரம்ப தெரிகிறது. அதனால் தானே உங்களால் இப்படி கேட்க முடிகிறது. அந்த வித்தியாசத்தை உரக்க சொல்லவே இப்படி வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். புரிகிறதா? 🙂

      அதாவது, ஆங்கிலத்திற்கு நேரான சொற்கள் ஏதோ அவர்களாகவே “தாழ்ந்தார்கள், பின்தங்கினார்கள்” என்ற பொருளில் வருகிறது. ஆனால், உண்மை அப்படியல்ல. அவர்கள் பிறரால் **தாழ்த்தப்பட்டார்கள்**, **பிற்படுத்தி வைக்கப்பாட்டார்கள்**. ஆகவே அவ்வாறு அழுத்திச் சொல்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

      • மெத்த சரி. கருணாநிதி முதல்வராகவிருந்த சமயத்தில் செய்யப்பட்ட பொருள்பொதிந்த சொல்லாட்சி.அதற்கு முன் அம்மையார் ஸ்றிமதி ஆசைப்பட்டது போல ‘பின்தங்கிய’ என்றெ இருந்து வந்தது.

        • perula enna irukku,salugai maara pogutha enna,illa mathavunga salugaya aataya podura groupu thaan maara pogutha?

          Ippo FC/SC/ST mattum thaan defined mathapadi ellathukkum poli certificateu irukku.

          I know a guy who scored 100/99 in Maths and Science in X std openly telling me that he got fake MBC certificate and now he ll get into Ann Univ.

          This was in the year,2000.

    • கழுதைக்கு குஷ்பு என்று பெயர் வைத்தால்..அதன் மீது உள்ள அபிப்பராயம் மாறிவிடுமா..??

      பெயரில் ஒன்றுமில்லை தோழர்…

      • கரெக்டா சொன்னீங்க , பசும்பொன் தேவர் அக்காவை , தேவர் ஐய்யா என்றால் மாறிட போறாரா என்ன.?

  12. //ரெட்டை டம்ளர் டி கடைக்கு நீங்கள் சொன்ன தீர்வுக்கு பதில் இப்படி செய்தால் எப்படி இருக்கும்?
    அதாவது அனைத்து கோவில் களிலும் தாழ்த்த பட்டவர்களை (மாமிசம் உண்ணாத, மந்திரம் கற்ற தாழ்த்த பட்டவர்கள்) அரச்சகர்களாக ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? டி கடைக்கு கூட மற்றவர்கள் போவாமல் இருப்பார்கள் ஆனால் கோவிலுக்கு போகாமல் யாரும் இருக்க மாட்டார்கள் தானே?//
    சொந்தமாக டீக்கடை வைபது ஒரு மைக்ரொ அளவில் கூட ஆரம்பித்து இன்னால் விரிவாக்கலாம். ஆனால் அர்ச்சகர்கள் ஆக்குவது நடக்கக் கூடிய காரியமா? என்ன உளறுகிறீர்?
    கூடவே நாடார்கள் சுயமாகவே முன்னேறியதைக் கூறியது உங்களுக்கு உரைக்கவில்லையா?

    //தாழ்த்தப்பட்டவர்கள், தாங்களே தாழ்த்தி கொள்ளவில்லை, ஒடுக்கப்பட்டவர்கள் தாங்களே ஒடுக்கி கொள்ளவில்லை, அதற்கு காரணம் மற்றவர்கள், யாரும் உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை,
    வளச்சியை தடுக்காமல் இருந்தாலே போதும்//
    ஆனால் வளர்ச்சியை தடுப்பதுதானே நிஜத்தில் நடக்கிறது?

    //தாங்க முடியல உங்கள் தற்பெருமை…//
    நான் கூறியது நிஜமாகவே நடந்தது. இதில் தற்பெருமை எங்கிருந்து வந்தது?

    மொத்தத்தில் தலித்துகள் மற்றவர்களது கருணைக்கு ஏங்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். வெளங்கிடும்.

    டோண்டு ராகவன்

    • ///ஆனால் அர்ச்சகர்கள் ஆக்குவது நடக்கக் கூடிய காரியமா? என்ன உளறுகிறீர்?///

      நீங்கள் இப்படி சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்…

      உங்கள் பதிவில் நீங்கள் கூறியது….

      ///முடியுமா என்று தைரியமில்லாமல் பார்ப்பதை விட முடியவேண்டும் என்று உறுதியுடன் இருக்க வேண்டாமா?///

      அர்சகர்களாக்க ஏன் முடியாது? பார்ப்பனர் ஆதிக்கத்தை முறியடித்தாலே போதும். இங்கு அரசாங்கமே தலித் சமுதாயத்திற்கு எதிராக உள்ளது, அதனால் மாற்ற வேண்டியது இந்த போலி ஜனநாயகத்தை.

      ///லித்துகள் மற்றவர்களது கருணைக்கு ஏங்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். வெளங்கிடும்.///

      இது திசைதிருப்பும் வேலை…. நேர்மையற்ற வாதம் ……

      • அடப்பாவி என்று உங்களை அழைப்பதற்கு எனக்கு சங்கடமாக இருக்கிறது. அதனால் தோழரே என்று அழைக்கிறேன்.

        எவ்வளவு தான் தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்கள் ஆவதற்கு படித்திருந்தாலும், முயற்ச்சித்தாலும் முட்டுக்கட்டை போடுவது கீழிருந்து மேல் வரை அவாள் தானே. அதற்காக முயற்சியை கைவிடச் சொல்லவில்லை.

        ஆனால் தலைக்கணம் பிடித்த அவர்களின் வார்த்தைகளைப் பாருங்கள்.

        “Dalits are not impure, but they’re not as pure as brahmins,” said V. Jagannathan, general secretary of Chennai’s Brahman Thamizhnadu Brahmin Association, adding that Dalits smoke, drink and wear dirty clothes. “This is a political drama,” he said.
        “Priests can’t be government approved; it’s hereditary.”

        “The priests are the last vestige, the root of Brahmin power,” said S. Kirupanandasamy, a port executive and lawyer advising the trainees in their struggle for recognition. “We’re not asking them to appoint some thief to the temple. These boys are well-trained and qualified.”

        The wannabe priests say they are not trying to take over India’s most famous temples or push Brahmins out. In fact, India has a significant priest shortage amid changing lifestyles that has left thousands of temples of all sorts shuttered.

        Rather, they just want jobs in some of Tamil Nadu’s 34,000 state-run temples, they say, in keeping with a constitution that outlaws caste and other discrimination. The real problem isn’t Dalit impurity or tradition, they argue. Rather, it’s that Brahmins don’t want to share money or power

        • I think Mr.jagannathan doesn’t understand history and he has no right to open his ignorant mouth.

          The question is not about smoking drinking and all that,it is obviously an issue but brahmins also do it these days.

          The real issue is this,an atheistic government choosing a temple priest is not acceptable.

          Government has no role in trying to run temples they did not build in the first place.

          The temple priest is not just another job like an accountant/clerk/supervisor,it is a service in the name of god.

          There are many temples in TN where the priest is not a brahmin,in kanyakumari district they are called kambars.

          They are also a priestly community,who take care of their own temples.

          If the government wants let them build government temples and appoint these guys there.

          • மெத்தப் படித்த உங்களவால் வரலாறு தெரியாத ஒரு மண்டூகத்தை ஏன் சங்கத் தலைவராக தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்??!!

            சில சமயங்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை ஒத்துக் கொள்கிறீர்கள். சகோதரரே, புகைப்பது, குடிப்பது மட்டுமல்ல அசைவம் சாப்பிடுவதிலிருந்து பலான பெண்களிடம் போகும் பல பிராமின்களை நான் பார்த்திருக்கிறேன்.(இங்கு நான் சங்கராச்சாரியாரை குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் அவரைப் பற்றிய நினைப்பு உங்களுக்கு வந்தால் அது என் தவறல்ல!!)

            கோயில்கள் கூடாதென்பதல்ல என்ற பராசக்தி வசனம் இந்த இடத்தில் எனக்கு நினைவிற்கு வருகிறது.(உங்களுக்கு திருவாளர் தேவநாதன் நினைப்பு வந்தால் அதுவும் என் தவறல்ல!!!)

            முன்னோர்கள் கட்டிய கோவிலுக்குள் இன்னமும் ஒரு பிரிவினரை வழிபட அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். நீங்கள் கட்டிய கோவிலாக இருந்தால் இன்னும் என்ன ஆட்டம் போடுவீர்கள்??

            கடவுள் (?) உங்களுக்கு மட்டும் உரிமையானவர் இல்லையே?! ஏன் நாங்கள் அவருக்கு சர்வீஸ் செய்யக்கூடாதா???

            பிராமின் பிரீஸ்டாக இல்லாத கோயில்களெல்லாம் ஒன்று ஊருக்கு வெளியில் இருக்கும். அல்லது அதை விட்டு நீங்கள் ஒதுங்கியிருப்பீர்கள்.

            தாழ்த்தப்பட்டவர்களையும் அந்த பிரீஸ்ட் கம்னுயூட்டியுடன் சேருங்கள் என்று தான் நாங்கள் போராடுகிறோம்.

            பார்த்தீர்களா!! இறுதியாக உங்களின் அந்த ஆதிக்க வெறி எழுத்துக்களாக வெளி வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சர்களாக்க வேண்டுமென்றால் அரசாங்கமே கோயிலைக் கட்டி, அந்த நாய்களை அதில் அர்ச்சகர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்றது என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே???

            • there are historical reasons for excluding someone from the temples.

              The historic reason is that they rejected the idea of the temple,the faith and the worship behind it.

              One more thing,these temples were built by people who had faith and people who believed in it.

              There are also certain rules for who can be a priest,only the families of the priest can be one.They are a class and they get very little money for being so.

              Those Agama vidhi cannot be broken,it ceases to be a temple if u break it.

              The government has no role to play in interfering in religion.They should just stick to stealing the temple’s wealth.

              Especially an theistic government has no business in this.

              If theyw ant let them interfere in the waqf board and pentecostal fundings.

              • என்ன சொல்ல வருகிறீர்கள்? வரலாற்றுக் காரணங்களைச் சொல்லி மறுக்கிறீர்களா? அல்லது ஆகம விதிகளைச் சொல்லி வெறுக்கிறீர்களா? தெளிவாகச் சொல்லுங்கள்.

                தெய்வ விசுவாசம் உள்ள மக்கள் கட்டிய கோயிலுக்குள், தாழ்த்தப்பட்டவர்களும் தெய்வ பக்தியுடன் தானே வழிபட உரிமை கேட்கிறார்கள்.

                டாக்டர் ஆவதற்கு ஒரு படிப்பு, என்ஜினியர் ஆவதற்கு ஒரு படிப்பு என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு தகுதியை நிர்ணயித்திருப்பது போல் தானே அவர்களும் பூசாரிக்கு வேண்டியதை படித்து விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தடுப்பத்ற்குண்டான காரணமாக இங்கு சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள். ““The priests are the last vestige, the root of Brahmin power,” said S. Kirupanandasamy, a port executive and lawyer advising the trainees in their struggle for recognition. “We’re not asking them to appoint some thief to the temple. These boys are well-trained and qualified.”The real problem isn’t Dalit impurity or tradition, they argue. Rather, it’s that Brahmins don’t want to share money or power ”

                இப்போதும் சொல்கிறேன். இந்த பதிலிலும் உங்களின் ஆதிக்க வெறி தான் எழுத்துக்களாக வெளி வந்திருக்கிறது.

                • Aaagama vithi thaan, koyila arasangatha nambi ellam oppadaikka mudiyathu.

                  poosariyaaga padikka ellam mudiyathu,appadiye padichalum ozhungana nambikkayana veda paadasalaiyila mattum thaan,arasangam solra aala ethukka mudiyathu.

                  Yaar oruthar virumbi intha panikku varaangalo,avungala thaan niyamikka mudiyum.

                  Aaadhikka veri,sadiq verinnu ungalukku puriyadha sorkalai upayogikkadheenga, indha vishayathula yaarayum namba mudiyathu.

                  • உங்கள் அகராதியில் (டிக்ஸனரியில்) ஆதிக்க வெறிக்கு என்ன அர்த்தம் (மீனிங்) என்று சொல்லித் தாருங்கள்.

                    அரசாங்கமும் மக்களும் உங்களை நம்பத் தயாராக இல்லை.

                    ஒழுங்கான நம்பிக்கையான வேத பாடசாலையில் படித்தவர்கள் தானே சங்கரனும் தேவநாதனும்?

                    இப்போது அர்ச்சகர் பணிக்காக காத்திருக்கும் தோழர்களும் விரும்பித்தானே இந்தப் பணிக்கு வர இருக்கிறார்கள்.?

              • மேலும் இதையும் படியுங்கள்:

                Top priests also rub shoulders with elite politicians, businessmen and socialites, opening various social and economic doors. “They arrange deals with VIPs,” said Sathguru, 28, a Dalit who completed the course. “And they don’t want to let others in.” Further upsetting tradition, the Dalit trainees want mantras and blessings to be said in the local Tamil language rather than ancient Sanskrit, which they believe further safeguards Brahmin power. “Even pious people cant understand what they’re saying…” Kirupanandasamy said.

                But politics has also worked against the trainees, with the current state government less enthusiastic than its predecessor, even quietly resistant, when it comes to taking on the Brahmins, making it more likely the issue will languish in court.

                • Pious people can understand what they are saying,if you want to know what they are saying,there are books in tamil which clearly mention how to pronounce those mantras,their meaning,significance everything.

                  These temples were not built by people wanting tamil mantras,there are lot of people who still want the sanskrit mantras.why doesnt the government train muslim imams and train them to give out the morning azaan in tamil?

                  All excuses from people who are least interested in sincerely being a priest and they just want income.There are families of brahmins who can be anything but a priest but they do that because it is life for them.

                  and for the last time,tamizh bhai,go impose tamizh in islam,ask your people to stop talking in broken urdu and ask them to understand arabic before talking abt temples.

                  • தவறிலேயே உழன்றாலும் தான் செய்வது தான் சரி என்று வாதிடும் நபர் நீங்கள்.

                    உங்களின் கடைசி இரண்டு வரிகளுக்கு நான் இஸ்லாத்தில் இணைந்த பின் (ஒருவேளை) பதில் சொல்கிறேன். உங்களுக்கு இப்போதே வேண்டுமென்றால் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்க வேண்டும். அல்லது அதற்குரிய லிங்க் – களில் தேடிப் படிக்க வேண்டும். முஸ்லிம் நண்பர்கள் அதற்குரிய லிங்க் – கை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  13. 1925ல் தொடங்கப்பட்ட பொதுவுடமை இயக்கம் இதுவரை சாதித்தது என்ன என்று தன்னாய்வோடு பேசக்கூடியவர்கள் மட்டுமே அம்பேத்கரியமும், பெரியாரியமும் சாதித்ததைப் பற்றி விமர்சிக்க தகுதியுடையவர்கள். அத்தகுதி வினவுக்கும் அதனை சார்ந்த அமைப்புகளுக்கும் உள்ளதா?

  14. ஜாதி சாரா ஜாதி எதிர்ப்பே தீர்வு…
    ஆனால் பெரும்பாலான ஜாதி எதிர்ப்பாளர்கள் எப்படிப்பட்டவர்?
    அவர்கள் வெரும் பிராமன எதிர்ப்பாளர்கள் / வெறுப்பாளர்கள்…
    அதாவது எப்படின்னா…
    1) எங்கள் இயக்கம் சாதி இல்லா சமூகம் அமைக்கப்பாடுபடும்
    2) எங்கள் இயக்கத்தில் ‘பிராமன’ சாதியைச்சேர்ந்தவர்கள் உறுப்பினராக முடியாது…
    ‘லாஜிக்’ புரிந்தவர்கள் இந்த இரண்டு ஸ்டேட்மென்டுகளில் உள்ள ‘முரன்பாட்டை’ புரிந்துகொள்வார்கள்…
    இசுலாம் தீர்வு என்பவர்கள் பாகிஸ்தானில் ஏன் சியா சூன்னி பிரிவினர் அடித்துக்கொள்கிறார்கள் என்று விளக்கவும்…

    • we don’t define a person as a Brahmin based on his birth

      according to us
      those who are all following sanathana tharma and has values like people are but some are more equal.
      and
      those who are following manu sasthara

      are defined as Brahmin to be precise பார்ப்பான்.

      • well said mr. nagaraj…
        we are on the same page…

        hope every movement ‘claiming’ to ‘aspire’ to ‘eradicate casteism’ starts to think in these lines…

        hope our people start thinking like this…

        because, for many casteism stops at anti-brahminism (against ppl born in brahmin caste)…

        அந்த நாளும் வந்திடாதோ…

    • மிக துள்ளியமாக சொன்னீர்கள் தோழரே.>!!!

      நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என கூறிக்கொண்டு..இஸ்லாம் மதத்தினரை தங்கள் கூட்டணிக்குள் வைத்துக்கொள்வார்கள்…

      சியா சூன்னி பிரிவினர் மட்டுமல்ல.! தமிழகத்திலுள்ள ராவுத்தர் பிரிவை இவர்கள் இஸ்லாம் மதமாக கருதுவதில்லை..அவர்களும் இஸ்லாம் மதத்தில் பின்தங்கியவர்கள் (இவர்களுக்காக எந்த குரலும் இருமக்கூட இல்லை)

      ஜாதிய எதிர்ப்பாளர்கள் எவருமே தன் இயக்கத்தை வளர்க்கும் வரை தன்னை ஒரு சீர்சிருத்த சியானாக காட்டிக்கொள்வார்கள்…போலி சாமியார் போலி பாதரி போல் போலி சீர்திருத்தவாதிகள் அவ்வளவே..!!

    • according to manusastra there are four varnas

      Brahmin(priests)

      sathriya(warlords or feudals or kings )

      vysya(business)

      sudra (labour)

      A kings rule is to make sure that each caste is following their respective rules and regulations and there is no caste mix up.

      can you read manu shastra

        • king’s rule according to manu shastra

          read it if you have time

          educate us with the quotes in manu shastra

          and also see people like shrila shri prabhu batha,gandhi,about varna

          • nagaraj,

            Kings were the first to violate manu sasthra..

            They married daughters of chieftains belonging to different caste groups to gather political & military support.. Manu sasthra was used just as a convenient tool by powerful people to justify what they wanted to do.. It was ignored by them when not useful or restricting.. So manu sasthra was not considered holy or divine rule book but a tool of convenience..

            • gupta age is called as golden age

              at this age .four vedas are made into a written script

              kings ruled according to manu shastra

              imperial chola is called as golden age

              look for raja raja chola’s mei keerthi it says
              this king ruled according to manu shastra

              similarly rajendra chola

              if look for dark ages( kalabhara age )

              most of பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் are written during this time

              we don’t know the caste of the most of the writters

              but in case of the Bhakti movement
              we have details of 63 naayanmaars
              12 aazhwaars
              further we also know the castes of these people
              if you argued god shows equal importance to all castes
              in kalabhara period the caste system itself is not followed

              ஊருக்கு நடுவுல கோவில்.
              கோவிலைச் சுற்றி அக்ரஹாரம்
              அதை சுற்றி மேல தெரு
              அதற்க்கும் வெளியே சேரி.

              இவை அனைத்தும்
              கருத்தியல் ரீதியாக இன்னும் நம் மூளையில் உள்ளது.

              also look in pathu paattu and ettu thokai

              here you can find only five lands with five kinds of people.

              • மாமன்னர் ராசராசரின் மெய்க்கீர்த்தியில் மட்டுமல்ல நீங்கள் சொன்ன குப்தர்களின் காலத்துக்கு முன்பே மனுநீதி சோழர் என்றே ஒரு சோழ மன்னர் இருந்ததுண்டு.. அது வேறு வகையான மனுநீதி… சாளுக்கியப் படையெடுப்பில் சோழப் படைகள் பார்ப்பனர்களைக் கொன்றதாக சாளுக்கியக் கல்வெட்டுகள் இருக்கின்றன.. காந்தளுர்சாலை என்ற பார்ப்பனர்களின் அதர்வ வேத பாடசாலையை அழித்தார் மாமன்னர் ராசராசர் என்றே அவரின் மெய்க்கீர்த்தி ஆரம்பிக்கிறது.. மனு சாத்திரத்தின் படி மரணதண்டனை பார்ப்பனர்களுக்கில்லை.. மாமன்னர் ராசராசர் பின்பற்றியது மனு சாத்திரமா..?! களப்பிர ஆட்சியில் உருவான ஆசாரக் கோவையைப் படியுங்கள்… கூற்றுவ நாயனார் என்ற களப்பிர சைவ மன்னரின் கதையும் படியுங்கள்..

                ஆட்சியாளர்கள் மனு சாத்திரத்தை தேவை கருதி ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு..

                • அந்த கருப்பு வேற இந்த கருப்பு வேற!

                  //சாளுக்கியப் படையெடுப்பில் சோழப் படைகள் பார்ப்பனர்களைக் கொன்றதாக சாளுக்கியக் கல்வெட்டுகள் இருக்கின்றன..//

                  அம்பி நீங்கள் ஆதாரஙகல் தர முடியுமா

                  • “..according to the Hottur inscription[15], “Nurmadi-Chola[16] Rajendra (i.e., Rajendra-Chola I) had collected a force numbering 900,000, had pillaged the whole country, had slaughtered the women, the children and the Brahmanas and taking the girls to wife, had destroyed their caste.” The Hottur record is dated in A.D. 1007, but the Uttattur inscription belongs to the 3rd year (A.D. 1013-14) of Rajendra-Chola I. We cannot help remarking with regret on the striking infringment of the ancient moralities of war by this king, however great his military achievements were.”

                    http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_3/introduction2.html

                    கீழைச் சாளுக்கிய வேங்கிக்கு உதவ மேலைச் சாளுக்கிய சத்யாச்ரயனின் படைகளை சோழர் பெரும்படை தோற்கடித்ததை குறிப்பிடும் மேலைச் சாளுக்கியக் கல்வெட்டு (ஹொரட்டூர்-தார்வார்(ட்)- 1007 AD). அப்போது சோழப்பேரரசின் இளவரசரான ராசேந்திரர் தலைமையில் 9 லட்சம் வீரர்கள் கொண்ட சோழப் படை Kollipake – ல் நடந்த போரில் செய்த ‘அட்டூழியங்களை’ இந்த சாளுக்கியக் கல்வெட்டு குறிப்பிட்டாலும் இதில் எந்த அளவு உண்மையிருக்கும் என்று தெரியவில்லை.. போரில் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லும் மரபு தமிழ் வேந்தர்களுக்கு இருந்ததில்லை, குறிப்பாக மாமன்னர் ராசராசரும், ராசேந்திரரும் இதனைச் செய்திருப்பார்கள் என்பது மிகைப்படுத்தல் என்றே கருதவேண்டியிருக்கிறது.. பார்ப்பனர்களைக் கொன்றதற்குக் காரணம் அவர்கள் சாளுக்கியப் படையில் இருந்திருக்கலாம்.. பார்ப்பனர்கள் ஆயுதமேந்துவதோ, போர்களில் பங்கெடுப்பதோ, பயிற்சியளிப்பதோ மனு சாத்திரத்தின் படி தடைவிதிக்கப் பட்டவை.. ஆனால் மாமன்னர் ராசராசரின் காலத்திலேயே காந்தளூர்ச்சாலை என்ற அரசியல்,நிர்வாக, போர்ப் பயிற்சியளித்த, சேர நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த, அதர்வ வேத பாடசாலை (sasthra & military academy) இதற்கு முன் அழிக்கப்பட்டமையும், நரக்கன் ராமன் (கிருஷ்ணன் ராமன்) என்ற பார்ப்பனர் சோழப் படைகளின் தளபதியாக இருந்ததும், மனு சாத்திரம் பார்ப்பனர்களாலேயே ஒரு புனித விதி நூலாகக் கருதப்படவில்லை என்று காட்டுகிறது..

  15. இந்த விவாதம் இன்னுமோரு பெரியாரிய விவாதமாக சுருங்கிப் போவதைத்தான் இதுவரையிலான மேலே காணும் பின்னூட்டங்கள் உணர்த்துகின்றன..

    // அதாவது அனைத்து கோவில் களிலும் தாழ்த்த பட்டவர்களை (மாமிசம் உண்ணாத, மந்திரம் கற்ற தாழ்த்த பட்டவர்கள்) அரச்சகர்களாக ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? டி கடைக்கு கூட மற்றவர்கள் போவாமல் இருப்பார்கள் ஆனால் கோவிலுக்கு போகாமல் யாரும் இருக்க மாட்டார்கள் தானே? //

    அனைத்து சாதினரும் அர்ச்சகர்களாவது இந்து மதத்தை வலிமையாக்கும்.. ஆனால் நடைமுறையில் இது நடக்குமா என்பது சந்தேகம்தான்.. மாமிசம் உண்ணாத, மந்திரம் கற்ற தலித்துகள் அர்ச்சகர்களாவதை பார்ப்பனர்களின் உடன்பாடு/ எதிர்ப்பை மட்டுமே பொறுத்த விசயமாகக் குறுக்கிப் பார்ப்பது பார்ப்பன விரோத பெரியாரிய உத்தி.. நடைமுறையில் தலித்துகளுக்கு சட்டரீதியாக உரிமையாக்கப்பட்ட குறைந்தபட்ச உயர்வுகளையும் கூட கடுமையாக எதிர்க்கும் இடைநிலைச் சாதிகளின் எதிர்வினைகள் கோவில்களை/வழிபாடுகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு போகும் என்பதை கண்டதேவியிலும் பிற ஊர்களின் மூடப்பட்ட/புறக்கணிக்கப்பட்ட கோவில்களிலும் காணமுடிகிறதே..

    அம்பேத்கர் ஆராய்சி,அனுபவரீதியாக அவதானித்த ”இந்து சமுதாயத்தில் உண்மையில் நிலவும் முரண்நிலை – பிளவு, பிராமணர் – பிராமணர் அல்லாதவர் என்பதல்ல; தீண்டத்தக்கவர் – தீண்டத்தகாதவர் என்பதாகும்” என்ற நிலைமையிருக்க,

    தலித்துகளின் சமூக விடுதலையானது அரசியல், அதிகார, பொருளியல் விடுதலையுடன் பிணைக்கப்பட்டிருப்பதை கண்டுகொள்ளாமல், பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர்களின் அர்ச்சக உரிமைச் சண்டையில்,

    (1) தலித்துகளுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சக உரிமை மறுக்கிறார்கள் என்றும்,
    (2) பார்ப்பனர்கள் தலித்துகளுக்கு மட்டுமே அர்ச்சக உரிமை மறுக்கிறார்கள் என்றும்,

    பார்ப்பனர்களை எதிர்ப்பதாலேயே தலித்துகளுக்கு சமூக விடுதலை கிட்டிவிடும் என்று தணிக்கை செய்த படம் காட்டுவது, பார்ப்பன எதிர்ப்பையே முக்கியமாகக் கொண்ட பார்ப்பன எதிர்ப்பாளர்கள் பெரியாரிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம்..

  16. தங்கள் புரட்சியின் திட்டம் என்ன ?அது என்ன விளைவை ஏற்படுத்தி விடும் ? உயர் ஜாதி இந்துக்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு ,தீண்டத்தகாத மக்களை மட்டும் கொண்ட சமூகம் அமைப்பதா ?அல்லது முருகனை “மில்லர்” அல்லது “மெக்டோனல்ட்” என்று பெயர் மாற்றினால் ,மாற்றம் ஏற்பட்டு விடுமா ? அவமானாங்களை சுமந்து கொண்டே அலைந்தாலும் பரவாயில்லை எனக்கு சலுகை கிடைத்தால் போதும் ,என்று மக்களே சகித்து கொண்டு வாழும் போது,என்ன புரட்சியை அவர்களிடம் ஏற்படுத்தி விட முடியும் ?”செருப்பால் அடித்தாலும் பரவாயில்லை ,எனக்கு கருப்பட்டிதான் முக்கியம்” என்று வாழும் மக்களிடம் நீர் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் ? புரட்சியின் செயல் திட்டத்தை விளக்கி. அது எப்படி மாற்றத்தை உண்டு பண்ணும் ,மேல்ஜாதி ஆதிக்கம் எப்படி வீழும், தீண்டாமை எப்படி ஒழிந்து சமநீதி கிடைக்கும் என்பதை நீர் தெளிவாக விளக்காத வரையில் ,கூட்டம் சேர்க்கும் பிழைப்புவாத அரசியல் நடத்த முயற்சி செய்வதாகவே எல்லோரும் எண்ணுவர் , திட்டத்தை விளக்குங்கள் ,அல்லது அனைவரையும் இஸ்லாத்தில் இனைய சொல்லுங்கள் ,நிச்சயம் சம நீதி கிடைக்கும் ,நீரும் அவர்களை தலித்துகளாகவே இருக்க செய்து பிழைப்பு நடத்த வேண்டாம்

    • ///அல்லது அனைவரையும் இஸ்லாத்தில் இனைய சொல்லுங்கள் ,நிச்சயம் சம நீதி கிடைக்கும் ,நீரும் அவர்களை தலித்துகளாகவே இருக்க செய்து பிழைப்பு நடத்த வேண்டாம்///

      attendance??????

    • இஸ்லாத்தில் இணைந்தால் முதலில் உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதா? ஏன் குற்ற பரம்பரை ஆக்கப்பட்டுள்ள இசுலாமிய சமூகம் குறித்து அல்லா கண்டும், காணாமல் இருக்கிறார்? கம்யூனிச கொள்கைகளை தாழ்த்தப்பட்ட மக்களிடம் விளக்குவதால் என்ன நன்மை ஏற்படும் என்று இந்த நண்பர் அங்கலாய்க்கிறார்? தம்மை ஓடுக்குபவனை எதிர்த்து திருப்பி அடிக்கும் வல்லமையை கம்யூனிச இயக்கங்களே தலித் மக்களிடம் ஊட்டியதை, கம்யூனிசம் வேப்பங்காயாய் கசக்கும் ‘தலித் முரசு’ இதழே ஒரு முறை ஒப்புக்கொண்டு எழுதியது.

      அம்பி குறிப்பிடுவது போல பார்ப்பனரை எதிர்க்காமல், இடைநிலை சாதியினரை மட்டும் எதிர்த்தால் தலித் மக்களுக்கு நீதி கிடைக்காது. எப்படி பார்ப்பன எதிர்ப்பு மட்டும் பலனை தராதோ, அது போலவே தலித் கண்ணோட்டத்தில் இடைநிலை சாதி மட்டும் எதிர்ப்பும் பலனை தராது. சாதிய அடுக்குமுறை ஏணி அமைப்புடன் இருப்பதால் சில எதிரிகள் இப்படித்தான் கண்ணுக்கு தெரியாமல் போகிறார்கள்; அல்லது அவர்களை மறைத்து விட முடிகிறது. இந்த அநீதியான சமூக அமைப்பை பேணும், தலைமை வகிக்கும் பார்ப்பனரை விட்டுவிடுவது, நோயின் மூல ஆதாரமான கிருமியை ஒழிக்காமல், நோயின் symptoms க்கு மட்டும் மருந்து எடுத்துக்கொள்வது போல.

      அம்பேத்கரியத்தின் சாதியத்தை எதிர்க்கும் நடைமுறைக்கு ஆகசிறந்த பங்களிப்பு அவர் காட்டிய போர்க்குணமிக்க சட்டப்பூர்வ போராட்டம் என்று மறைந்த கேசவன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அடையாள அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலித் இயக்கங்கள இன்று இதனை கைவிட்டுவிட்டன. புரட்சிகர அமைப்புகளை விடவும், முதுகிலே குத்த தயாராக இருக்கும் தேர்தல் கட்சிகளையே திரும்பவும் அவை நாடி செல்கின்றன.

      • Sukdev

        First understand the difference between jati and varna.Jati is an ethnic group,Varna is profession.

        By opposing brahmins you cannot kill jati,ethnic groups ll always exist.

        By opposing brahmins,u can only kill brahmins,if you want to do that.

        You cannot kill varna also,because different professions based on mental and physical labour ll always exist.

        • ஹரிகுமார் என்ற பார்ப்பனதாசரே,

          வரலாற்றின் ஒரு காலகட்டத்திலேனும் ஒடுக்குறைக்கு உள்ளாகாத இனம் என்ற ஒன்றில்லை; பார்ப்பனர்களை தவிர. பாலஸ்தீனர்களை தினமும் கொன்று குவித்து வரும் யூத இனம் கூட கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானது தான். தில்லி வரலாற்று பேராசிரியர் தி.என். ஜா தொகுத்துள்ள பண்டைக்கால இந்தியாவில் பார்ப்பனர்கள் ஒவ்வொரு கால மாற்றத்திலும் தம்மை எப்படி தகவமைத்து சமூக உயர்நிலையை தக்கவைத்து கொண்டுள்ளனர் என்ற உண்மைகளை விளக்கியுள்ளார்.

          மனிதர்களுக்குள் இருக்கும் வேறுபாடு வேறு; அந்த வேறுபாட்டின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிக் கொள்வது வேறு. இந்த ஏற்றத்தாழ்வையே, அதன் தலைமை ஸ்தானத்தில் இருக்கும் பார்ப்பனரைக் கொண்டு பார்ப்பனியம் என்கிறோம். பார்ப்பனரை கொல்வது இங்கு யார் திட்டமும் இல்லை. இந்த வீண் காய்ச்சல் உள்நோக்கம் கொண்டது. ஏன் பார்ப்பனரை ஒரு வரலாற்றுக்கு தவறுக்கு பொறுப்பாக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம்.

          ஒரு பார்ப்பனரின் வாழ்க்கை அக்கிரகாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அவர் வெளியே வருகிறார். தனது சாதிய உயர்வுள்ளம் அக்கிரகாரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களோடு இயல்பாக பழகுவதற்கு இருக்கும் புற, அக தடைகளை உணர்கிறார். அவர் அம்பேத்கரை படித்திருக்க வேண்டியதில்லை; பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டியதில்லை; மார்க்சியம் கற்றிருக்க அவசியமுமில்லை. ஆனாலும் தனது சொந்த சாதி பழக்கவழக்கங்கள் மனிதரை மனிதராக கருதி நேசிப்பதற்கு தடையாக இருப்பதை அவரால் உணர முடியும். அவரால் பூணூலை அடுத்த கணமே அறுத்தெறிய முடியும். ஆனாலும் அவர்கள் செய்யாமல் இருப்பதன் நோக்கம் சாதீய அனுகூலங்களும், சாதிய பெருமிதமும் தான்.

          இந்த இரண்டு குணக்கேடுகளும் ஜனநாயத்துக்கும், சமத்துவத்துக்கும் எதிராக இருப்பதாலே, பார்ப்பனர் என்று விளித்து நாம் அம்பலப்படுத்த வேண்டி இருக்கிறது.

          • // ஒரு பார்ப்பனரின் வாழ்க்கை அக்கிரகாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அவர் வெளியே வருகிறார். தனது சாதிய உயர்வுள்ளம் அக்கிரகாரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களோடு இயல்பாக பழகுவதற்கு இருக்கும் புற, அக தடைகளை உணர்கிறார். அவர் அம்பேத்கரை படித்திருக்க வேண்டியதில்லை; பெரியாரை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டியதில்லை; மார்க்சியம் கற்றிருக்க அவசியமுமில்லை. ஆனாலும் தனது சொந்த சாதி பழக்கவழக்கங்கள் மனிதரை மனிதராக கருதி நேசிப்பதற்கு தடையாக இருப்பதை அவரால் உணர முடியும். அவரால் பூணூலை அடுத்த கணமே அறுத்தெறிய முடியும். ஆனாலும் அவர்கள் செய்யாமல் இருப்பதன் நோக்கம் சாதீய அனுகூலங்களும், சாதிய பெருமிதமும் தான். //

            பார்ப்பனர்கள் பூணூல் அணிவதன் காரணம் சாதீய அனுகூலங்களும், சாதிய பெருமிதமுமா இல்லை கைக்கொள்ள வேண்டிய கடமையாகக் கருதுவதாலா.. எதுவாயினும் பார்ப்பன வாழ்க்கைமுறையை படிப்படியாக கைவிட்டுக் கொண்டு வரும் பார்ப்பனர்கள் கடைசியாகப் பூணூலையும் விட்டு பார்ப்பனரல்லாதவர்களுடன் ஒரே ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்,
            பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர் என்ற வேறுபாடு, பெரியாரிய நோக்கில், மறையுமே தவிர, தலித்-தலித்தல்லாதோர் என்று அம்பேத்கர் குறிப்பிட்ட, இன்றும் நிலவும், ஏற்ற-தாழ்வு மறையுமா..?! எப்படி..?!

            • நண்பர் அம்பி,
              பார்ப்பன ஆதிக்க நிலையின் ஒரு குறியீடாகவே நான் பூணூல் என்று குறிப்பிட்டேன். உங்கள் அங்கலாய்ப்பு வேறாக உள்ளதை கவனிக்கவும்.

              • என் அங்கலாய்ப்பு வேறுதான்.. ஆனால் கேள்விகள் இந்த விவாதத்துடன் தொடர்புள்ளவை..

          • Sukdev,

            Poonal/other things are not there to hurt anyone else.why are u so sensitive?

            It is their right to be in a certain way and practice a certain lifestyle.

            And his caste/anything does not prohibit him from being friendly and nice towards other people.I dont knw from where u get these ideas,which sincere brahmin ever hurt anyone.

            Most of the people u r aiming bullets at are those powerful political brahmins who used their caste and lineage to increase their power.

            Wearing poonal doesnt make anyone unfriendly.Every man has a right to be proud of his lineage/whatever that he is for and he is,democracy and samthauvam will not be affected by that.

            You have not understood the real issues to be sorted out,you do not understand that any man regardless of his caste/background has to earn other people’s respect by his behaviour and character,it doesnt come on its own.

            If a dalit man is well behaved and of good character and a brahmin is not,people ll still respect the dalit man and not the brahmin.

            And a real man of god,needs his space to give back to the society and there is nothing wrong with that.

            Thats what politicians do,they survive and keep power.Thats normal in life and thats how any society functions,the intelligentsia ll keep wanting to stay in power and do things to be there.

            Again,u r talking about the political classes of brahmins and there are those who are not political,they just be an archakar in temples and run their lives.

      • “இஸ்லாத்தில் இணைந்தால் முதலில் உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதா?”

        இஸ்லாத்தில் சமத்துவம், சமநீதி ,ஏற்ற தாழ்வு இன்மை ,இவைகளுக்கு உறுதி தர முடியும் , ,நண்பர் “சுகதேவ்” கேட்கும் உயிருக்கு உத்தரவாதம், ,!சாலையில் நடந்து செல்லும் சாமானிய மக்களுக்கு கூட தர முடியாது,,ஒரு வேலை கம்முனிச நாடுகளில் உயிருக்கு நூறு ஆண்டு ,இருநூறு ஆண்டு என்று உத்தரவாதம் தருகிறார்களோ என்னவோ ,என்னை போன்ற பாமரனுக்கு தெரியவில்லை ,தெரிந்தால் யாரவது சொல்லுங்கள் ,சமத்துவம், சமநீதீக்காக போராடுவதாக சொல்லும் தோழர்கள் (போராளிகள் )ஏன் உயிரைப்பற்றி கவலைப்படுகிறார்கள்,பதவியை அடையவா ?இல்லை “புரட்சி,புரட்சி “,என்று கூட்டம் சேர்க்கவா ? லட்சியம் ஒன்றே குறிக்கோள் இல்லையா உங்களுக்கு ,?அட போங்கப்பு …..நா கூட நீங்க “புரட்சிகரமான தீர்வு, படிநிலை,ஆதிக்க சாதி,உழைக்கும் மக்கள் ,சமத்துவம், விடுதலை”, அப்படின்னு மத்தவங்கள விட நீங்க நம்ம தமிழ்ல அடிக்கடி பேசாத ,கேக்காத வார்த்தைய பேசுதீக, நீங்க நெசமாவே புரட்சியோ, பொரியலோ எதோ செய்ய போரியலோன்னு நெனச்சேன் ,அம்புட்டுதானா ….இதுக்கு எதுக்கய்யா ,புரட்சி ,புரட்டாசி ,சமத்துவம் ,சாம்பசிவம்- ன்னு பேசணும் ,அம்மா கால்லேயோ ,கருணாநிதி கால்லேயோ விழுந்தா உயிர் பத்திரமா இருக்குமுல்ல ….

        ஏன் குற்ற பரம்பரை ஆக்கப்பட்டுள்ள இசுலாமிய சமூகம் குறித்து அல்லா கண்டும், காணாமல் இருக்கிறார்?”
        குற்ற பரம்பரை ஆக்கப்படவில்லை ,அவ்வாறு ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது,
        அறிவாளியான!!நீருமா அதை அசை போடுகிறீர் ,எதை நோக்கி மக்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களோ அங்கு மக்கள் சென்று விடாமல் தடுக்க உலகம் செய்யும் சூழ்ச்சி …இது உலகத்துக்கே தெரியும்,உங்களுக்கு ஏன் தெரியவில்லை ? எங்கு சம நீதியும் ,சமத்துவமும் ,கிடைக்குமோ ,அதை எல்லாம் தடுப்பதற்குத்தானே ,தங்களை போல நிறைய இயக்கங்கள் ,”மதமே ஒரு மாயை, முட்டாள்தனம்” ,என்று ,சமத்துவ மதத்தை படித்தே பார்க்காமல் ,எழுதிக்கொண்டும் ,கூவிக்கொண்டும் இருக்கின்றீர்கள், அவ்வாறு ஏற்றதாழ்வு ஒழிந்து விட்டால்,தங்களுக்கு தொழில் நொடித்து போய் விடுமே,உங்களுக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு வரவேண்டும் ,அதனால்தான் அல்லா கண்டும், காணாமல் இருக்கிறார்,

        • // இதைப்பற்றி விழிப்புணர்வு வரவேண்டும் ,அதனால்தான் அல்லா கண்டும், காணாமல் இருக்கிறார்,//

          allah won’t inter-fer on awakening of society

          after awakening we don’t need allah

        • நண்பர் அகமத் ஜான் ,
          ஒரு சிறு விமர்சனத்துக்கு குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுவதை நினைத்து பரிதாபப்படுகிறேன். சமத்துவம், சமநீதி போன்றவை சமூகம் அதன் நெடிய பயணத்தில் கண்டடைந்த சமூக விழுமியங்கள். அவற்றிற்கு மத உரிமை கொண்டாடுவது அபத்தம். அடிமை முறை இசுலாத்தில் இருந்ததற்கான சான்றுகளும், பெண்களை கணவன்கள் அடிக்கவும், கட்டுபடுத்தி வைக்கவும் உள்ள உரிமைகள் குறித்து குர்ஆனில் உள்ளதை நான் வாசித்துள்ளேன். நடைமுறையில் அவை மிகக் கொடூரமாக பின்பர்றப்படுவதையும் நாம் காண்கிறோம்.

          நீங்கள் ஐந்து வேளை மண்டியிட்டு ‘எனக்கு வேலை வாங்கித் தா, கடனை அடைக்க உதவி செய்’ என மன்றாடும் அல்லவை நோக்கி ‘ஏன், எங்கள் சமூக அவலம் குறித்து வாய் மூடி இருக்கிறாயே?’ என்று ஒரு நாளாவது கேட்டதுண்டா? இது ஒரு சாதாரண மனதின் கேள்வி தான். இந்த கேள்வியில் தவறிருந்தால் அந்த பிழையை சுட்டுங்கள்.

          பேராசிரியர் பெரியார்தாசனை நமக்கு தெரியும். மகஇக மேடைகளில் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி அவர் பேசியது அனைவருக்கும் நினைவிருக்கும். அவர் இசுலாத்தில் மாறியது அவரது தனிப்பட்ட உரிமையாக இருக்கட்டும். ஆனால், மாறிய கணமே அவருக்கு இந்துமத வெறியர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்? அவர் தான் முன்பு பேசியதை இப்போது பேச நேர்ந்தால் இந்துமத வெறியர்கள் மிகப்பெரிய வகுப்பு கலவரத்திற்கு தூபம் போடுவார்கள். அவர் ஒரு பெரியாரிஸ்டாக இருந்த போது இருந்த சமூக பாதுகாப்பு இன்று அவருக்கில்லை. ஜெயினாலுபிதீன் போன்ற மத வெறியர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்க கண்டிசன் போடுகிறார்கள். குமரி மாவட்டத்தில், கிறித்தவத்திற்கு மாறும் இந்து நாடார்கள் இந்து மத வெறியன்களால் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள்.

          மதமாற்றம் இந்த காலகட்டத்திற்கு ஒருக்காலும் சமூக இழிவுக்கு தீர்வாக முடியாது. அது, இந்துத்துவ பாசிசத்திற்கு இச்சமூகத்தை ஒப்புக் கொடுக்கும் மடமை.

          • நண்பர் சுக தேவ்
            உங்களுடைய சமத்துவ, சம நீதிக்கான போராட்டம் தலித் விடுதலைக்கா ? இல்லை பெண் உரிமைக்கா ?எனக்கு குழப்புகிறது ,நீங்கள் கோடிட்டு காட்டும் கணவன் மனைவியை அடிப்பது, என்பதில் ஜாதிய அடக்கு முறை எங்கே உள்ளது ? கணவன் மனைவியை அடிப்பதால் ‘தலித்துக்கு விடுதலை கிடைக்காது” ,என்று எங்கே உள்ளது ,இது ஆணாதிக்கம் சம்பத்தப்பட்டது என்று சொல்லுங்கள் ,அதைப்பற்றி தனியாக விவாதிப்போம்

            “நீங்கள் அனைவரும் ஒரு தாய்க்கு பிறந்த மக்கள்” என்று சொல்லும் இஸ்லாம் எங்கே ,பிறப்பில் இழிவுபடுத்தும் ஹிந்துத்துவம் எங்கே ?இன்று பெரியார்தாசன் இந்தியாவின் எந்த பள்ளிவாசலிலும் தலைமை ஏற்று தொழ வைக்க அனுமதிக்க படுவார்,அவர் எங்கு சென்றாலும் சக மனிதனாக ,எங்கள் இன சகோதரராக பார்க்கப்படுவார் ,படுகிறார் ,எங்களுடைய மூதாதையர்களும் இவரைப்போல் “ஹிந்து என்ற இழிவில்” இருந்து வெளிவந்ததால்தானே இதற்க்கு முன்பு வெறுத்து ஒதுக்கிய ஆதிக்க சாதியினர்கூட,”மாமா ,மச்சான் ,அப்பு ,சித்தப்பு ,”என்று உரிமையோடு அழைத்து சக மனிதனாக நடத்துகிறான் ,என்னுடைய போன தலைமுறை சாதி என்ன என்று தெரியுமா இந்த சமூகத்திற்கு ? இஸ்லாம் ஒழித்து காட்டி இருக்கிறதே சாதிய ஏற்ற தாழ்வை,மனிதர்கள் பிழைப்பு நடத்த ,ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்தி வைத்திருக்கும் சாதிய கட்டமைப்பில் இருந்து வெளியேறாமல் ,அல்லாவை குற்றம் சொல்வது ,விடுதலைக்கான வழி,வாய்ப்பு ,வசதி ,எல்லாம் இருந்தும் ,”நான் சிறையில்தான் இருப்பேன்”
            என்று அடம் பிடிப்பது போல் உள்ளது ,

            அடக்குமுறைக்கு எதிராக போராடும்போது நெருக்கடி ஏற்படவே செய்யாது என்று நீங்கள் உத்தரவாதம் தர முடியுமா ?பெரியார் தாசனுக்கு ஏற்பட்ட நெருக்கடியும் அப்படித்தான் ,எந்த நெருக்கடியும் வராமல் ,எந்த போரும் செய்யாமல் விடுதலை கிடைத்து விடுமா சுகதேவ் ?உங்களுடைய எழுத்தில், தலித் விடுதலைக்கான வேட்கையை விட சமூகபாதுகாப்பு போய் விடுமே என்றுதான் அதிகம் பயப்படுகிறீர்கள் ,அதனால்தான் “சமூகபாதுகாப்பு ,சமூகப்பாதுகாப்பு ,”என்று மட்டும் அலறுகிறீர்கள் ,உங்கள் நோக்கம் சாதியத்தின் ஏற்ற தாழ்வில் இருந்து விடுதலையா ?சமூக பாதுகாப்பா ?

            சமூக பாதுகாப்பு தான் வேண்டும் என்றால் ,தலித்தாகவே இருப்பது கூடஅதிக சமூக பாதுகாப்புதான் ,”தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை” ஏவி எந்த மேல்ஜாதியினரையும் கடுமையாக தண்டிக்க முடியும் , தலித்துகளிடம் யாரும் வம்பு வைத்துகொள்ள பயப்படுவார்கள், அந்த சட்டத்தை கண்டு “தேவர் இனம்’ நடுங்குவதை முத்துராமலிங்க தேவரின் பேரன் இப்படி சொல்கிறார் ” தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை 6468 பேர் தேவர் சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இக்கொடுமை அதிகம் உள்ளது. ஆனால் அங்கு அவ்வளவு வழக்குகள் இல்லை. இச்சட்டம் மூலம் அமைச்சர் சுரேஷ்ராஜன், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.,என்று2010-ல் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கூறுகிறார்,
            நீங்கள் சொல்லும் சமூக பாதுகாப்பு இந்த சட்டத்தில் இருக்கும்போது ,எதற்கு தலித் விடுதலைக்கான போராட்டம் ? அரசியலா?

            பெரியார்தாசனுக்கு ஜைனுலாபுதீன் பாதுகாப்பு தர கண்டிசன் போடுகிறார் என்று சொல்கிறீர்களே ?ஜைனுலாபுதீன் என்ன ராணுவ ஜெனரலா ?அவருடைய பாதுகாப்பே சமூகத்தில் கேள்விக்குறியாக இருக்கும்போது ,அவரிடம் என்ன இவருக்கு பாதுகாப்பு ,தாக்கினால் எதிர்த்து போராட தைரியம் ஊட்டுவதை விட்டு விட்டு ,ஹிந்து வெறியர்களால் தாக்கப்படுவதை நினைத்து ,விடுதலையை தடுக்கிண்றீர்களே ,

            • நண்பர் அஹமத் ஜான்,
              1 ] அடிப்படை ஜனநாயக கோரிக்கைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க இயலாதது. உதாரணமாக, பார்ப்பனியமே இந்துத்துவமாக இருக்கும் இந்தியாவில், மதசார்ப்பின்மைக்கான போராட்டத்தை சாதி ஒழிப்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆண்களுக்கு சரி நிகராக இருக்கும் பெண்கள் மீதான வன்முறையை சித்தாந்த ரீதியாக ஏற்றுக்கொள்ளும் ஒருவர், இதர ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரலில் நேர்மை இருக்கும் என்று ஏதாவது ஏமாளிகள் சபையில் போய் பேசுங்கள்.

              2 ] ‘அசை போடுகின்ற இனிமையான சுகபோக வாழ்க்கையையே, சொர்க்கம் ஒன்று காத்திருக்கிறது’ என்று ஏய்க்கும் ஒரு மதவாத கூட்டத்தை சேர்ந்த தாங்கள் எனது ‘சமூக பாதுகாப்பு’ என்ற கருத்தாக்கத்தை அவ்வாறு புரிந்து கொண்டதில் வியப்பேதுமில்லை. நான் சமூக பாதுகாப்பு என்று குறிப்பிட்டது, தலித் மக்கள், கால் ஊன்றி தம் உரிமைகளுக்காக போராடும் நிலத்தை [இடம்]. குண்டாந்தடியுடன் பாய்ந்த காவல்துறையிடமிருந்து தப்பித்து, தமது போராட்டத்தை தொடர கடல் மடியில் நின்றார்களே, கூடங்குளம் மக்கள்– அது போன்றதொரு பாதுகாப்பு இடம்.

              அப்படியொரு பாதுகாப்பான இடம் தலித் மக்களுக்கு இசுலாம் அல்ல; மாறாக கம்யூனிசமே. ஒடுக்கப்படும் மக்கள் இசுலாமியராக மதம் மாறினால் மட்டுமே அவர்கள் நிலை குறித்து நீங்கள் பேச முடியும். ஆனால் அப்படியொரு நிபந்தனை இல்லாமலே கம்யூனிஸ்ட்கள் தலித் மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு போராடி வருகிறார்கள். கைம்மாறு கருதாத இந்த உழைப்பை ஒடுக்கப்படும் மக்கள் எப்போதும், ஏற்று அங்கீகரித்தே வந்துள்ளனர். இசுலாமியத்தை தழுவுவது என்பது ஒரு தலித்துக்கு கூடுதல் சுமை. அவர்களை இன்னும் மோசமாக தனிமைபடுத்தி அடக்குமுறையை ஏவவே பயன்படும்.

              • கணவனுக்கு தனது குடும்பத்தின் மேல் உள்ள உரிமையில் மனைவியையோ ,தனது மகளையோ ,கண்டித்தால் ,பெண் அடிமைத்தனம் ,ஆணாதிக்கம் ன் எண்கின்றீர்! ,அது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை ,இதில் பெண் வன்முறை எங்கே வருகிறது ?அண்ணன் தம்பியை அடித்தால் ,அப்பா மகனை அடித்தால் ,ஆண் வன்முறை என்று சொல்வீர்களா ? மனைவியை கண்டிக்கும் உரிமை உள்ள கணவன் “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட மாட்டார் ,அநீதியை எதிர்க்க மாட்டார்” ,என்று நீங்களே நாட்டமையாக இருந்து தீர்ப்பு சொல்வது,உங்களுடைய அறியாமையை காட்டுகிறது ,

                நீங்கள் சொல்லும் சமூகபாதுகாப்பு !(இடமாகவே இருந்துவிட்டு போகட்டும்) அங்கு நின்றால்,அந்த தலித்தின் அடையாளம் மாறுமா ? திண்ணியம் ,பாப்பாபட்டி ,கீரிப்பட்டி ,மேலவளவு ,கொடியங்குளம் , இவைகள் நீடிக்க வேண்டும் என்பதா உங்கள் எண்ணம் ,?இன்னும் எத்தனை தலைமுறையை காவு வாங்கி உங்கள் கம்யுனிச கொள்கையை நிருவப்போகிண்றீர்கள் ,தலித் விடுதலை அல்ல உங்கள் நோக்கம் ,

                ஒரு தலித் சமூகம் முழுக்க கம்யுனிச கொள்கைக்கு மாறுவதாக அறிவித்தால் ,அரசு அதிர்ச்சி அடையுமா ?அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு மாறுவதாக அறிவித்தால் அதிர்ச்சி அடையுமா ? கம்யுனிசம் அவர்களுடைய அடையாளங்களை மாற்றாது என்பது அனைவருக்கும் தெரியும் ,ஆனால் இஸ்லாம் அவர்கள் மேல் ஹிந்துத்துவம் ஏற்படுத்திய அடையாளம் இல்லாமல் செய்து விடும் ,நெல்லை மாவட்டம் “மீனாட்சிபுரம்”
                கடைகோடியில் உள்வாங்கி இருக்கும் ஒரு குக்கிராமம் ,இஸ்லாத்திற்கு மாறுவதாக அறிவித்தவுடன் , அரசின் அனைத்து பரிவாரங்களும் மூட்டை கட்டிக்கொண்டு வந்து “உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள்” ன்று மண்டி இட்டதே ,வாஜ்பாய் உட்பட அனைவரையும் அங்கு வரவைத்ததே ,ஏன் ? இதுதான் நிஜ விடுதலைக்கான புரட்சி , இங்குதான் அவர்களுக்கு விடியல் இருக்கிறது ,நீங்கள் சொல்லும் புரட்சியை “தா .பாண்டியனிடம் ” நிறைய பார்த்து விட்டோம்

                • ஓரிடத்தில் அநீதியை மேற்கொள்கிறவன், இன்னோரிடத்தின் அநீதியை எதிர்க்கும் தார்மீக நெறியை இழக்கிறான். இது ஒரு தர்க்க நிலை.

                  \\திண்ணியம் ,பாப்பாபட்டி ,கீரிப்பட்டி ,மேலவளவு ,கொடியங்குளம் , இவைகள் நீடிக்க வேண்டும் என்பதா உங்கள் எண்ணம் ,?\\
                  நான் சொன்னவற்றின் மீது எதிர் விமர்சனம் செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது. நான் சொல்லாத ஒன்றை திரித்து பொருள் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லை. இப்படி பொய் பேசி திரியத் தான் குரான் படிக்கிறீர்களோ?

                  \\ஒரு தலித் சமூகம் முழுக்க கம்யுனிச கொள்கைக்கு மாறுவதாக அறிவித்தால் ,அரசு அதிர்ச்சி அடையுமா ?அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு மாறுவதாக அறிவித்தால் அதிர்ச்சி அடையுமா ?\\
                  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று முழுமையாக புரியவில்லை. ஆனால் ஒன்று, அதிர்ச்சி வைத்தியம் எந்த நோய்க்கும் முழுமையான தீர்வில்லை. மீனாட்சிபுரம் மதம் மாற்ற நிகழ்வையே தொங்கி கொண்டிருக்கிறீர்கள். அது 80 களில் நடந்த ஒன்று. மாறி வரும் சமூகத்தை மதவாதிகள் எப்போதுமே பார்க்க மறுக்கிறார்கள். பாபர் மசூதி தகர்ப்பு, பா.ஜ.க ‘இந்துக்கள்’ மத்தியில் பலம் பெற்றது, இரட்டை கோபுர தகர்ப்பு, குஜராத் படுகொலைகள் என இவை எதையும் பாராமல் கண்மூடித்தனமாக பேசுகிறீர்கள்.

                  இந்தியாவில் முசிலிம்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்களா? அல்லது அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்களா? காஷ்மீர் முஸ்லிம்களை ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். குஜராத்தின் முஸ்லிம்களையோ இந்தியாவின் பிற பகுதி முஸ்லிம்களையோ அப்படி சொல்ல முடியுமா? என்.டி.டிவியில், சில நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடைபெற்ற சொத்து கண்காட்சி [property show ] பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய மோடியின் மந்திரி, ஜெயபிரகாஷ் வியாஸ் இது குஜராத்தில் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து தலைநகரங்களிலும் இருப்பதாக தெரிவித்தார். இந்த ghettoisation முன்பு தலித்களுக்கு எதிராக மட்டும் இருந்தது. ஆனால் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் இருக்கிறது. எனவே ஒடுக்கப்படும் மக்கள் ஒரு common platform -இல் ஜனநாயக எண்ணம் கொண்ட மற்ற பிரிவு மக்களுடன் இணைந்து போராடியே இது போன்ற ghettoisation ஐ தகர்க்க முடியும்.

                  நீங்கள் தலித் மக்களை சுவீகரிக்க நினைப்பது எந்த வகையிலும் பலனளிக்காது. நீங்கள் எந்த இடத்திலும் தலித் மக்களுடன் இணைந்து போராடுவது பற்றி பேசவேயில்லை. உங்கள் கவனம் முழுக்க தலித் மக்கள் தலையில் குல்லா மாட்டி விடுவதிலேயே இருக்கிறது. மதமாற்றத்தை ஒரு தனி நபர் உரிமை என்றளவில் பொதுவாக வரவேற்கலாம். ஆனால் இந்துத்துவ நுகத்தடியிலிருந்து தப்பித்து இன்ன மதத்தில் போய் சேருங்கள் என்று நம்மால் பரிந்துரைக்க முடியாது. தந்தை பெரியார் இன்றிருந்தால் கூட இதையே சொல்லியிருப்பார்.

                  • தலித்துக்கு இழைக்கப்படுவது அநீதி ,கணவன் மனைவி பிரச்சினை, உரிமை சம்பத்தப்பட்டது நண்பரே ,அதையும் இதையும் குழப்ப வேண்டாம் ,

                    //இப்படி பொய் பேசி திரியத் தான் குரான் படிக்கிறீர்களோ?//
                    குரான் உண்மையே சொல்கிறது ,அதைபடிக்கும் நீங்கள் ஏன் பொய் பேசுகின்றீர்கள் என்கிறீர்கள் ,குரான் உண்மையை வலியுறுத்துகிறது என்பதை தங்களை அறியாமல் ஒப்புக்கொண்டு உள்ளீர்கள் ,நன்றி ,

                    மற்றபடி தங்கள் தலித் விடுதலைக்கான போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு சுகதேவ் ,ஆனால் ஹிந்துத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தலித்தும் ஆலயங்களில் அர்ச்சகராக வேண்டும் என்பது ,என்ன கொள்கையோ எனக்கு புரியவில்லை ?இந்த இழிநிலைக்கு ஒரு தீர்வாகத்தான் இஸ்லாமை சொன்னேனே தவிர ,மத மாற்ற நோக்கம் இல்லை ,அது அவரவர் தனிப்பட்ட உரிமை ,சில விசயங்களில் எனக்கும் உங்களுக்கும் மாறுபட்ட கருத்து (கம்யுனிசம் ,மதம்,கடவுள் ) இருக்கிறது ,ஆனால் பெருவாரியான விசயங்களில் நாம் இணைந்த கருத்தாக்கத்தில்தான் இருக்கிறோம் ,இனி இதைப்போன்ற பயனுள்ள வேறு கருத்தாக்கத்தில் ச(சி)ந்திப்போம்,சமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம் ,நல்ல கருத்துக்களை நாகரீகமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுகதேவ் ,என் வார்த்தைகள் எதுவும் தங்களை காயப்படுத்தி இருந்தால் (flow-ல வந்துருக்கும் )மன்னிக்கவும்

                    • நண்பர் அஹமத் ஜான்,
                      உங்களுக்கு மதமாற்றம் நோக்கம் இருந்திருந்தால் கூட அதை குற்றம் என்று நினைக்கவில்லை. அதனை குற்றம் என்பது இந்துத்துவ பார்வை. அது தீர்வில்லை என்பதே இங்கு வாதம்.

                      \\ஹிந்துத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தலித்தும் ஆலயங்களில் அர்ச்சகராக வேண்டும் என்பது ,என்ன கொள்கையோ எனக்கு புரியவில்லை ?\\
                      உங்களுக்கு எழும் சந்தேகங்களையும், விமர்சனங்களையும் தொகுத்து கூட வினவு தொடர்பு எண் அல்லது ‘புதிய கலாச்சாரம்’ முகவரியில் தொடர்பு கொண்டு வேண்டிய விளக்கத்தையோ, தோழர்கள் நிலைப்பாட்டையோ அறிந்து கொள்ளலாம்.

                      உணர்ச்சி கலப்பின்றி எந்த விவாதமும் இல்லை. என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை பெரிய மனிதன் ஆக்க வேண்டாமே. நான் வயதிலும்,அனுபவத்திலும் பெரியவரில்லை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உங்களுடன் விவாதித்ததில் மகிழ்ச்சி.

                      குரானை பற்றி சொல்லியிருந்தீர்கள். என்னிடம் இருக்கும் குரான் எனது கல்லூரி நண்பன் கலீலுர் ரஹ்மான் முதுகலை இறுதியாண்டின் போது அளித்தது. நான் அவருக்கு தோழர் மருதையனின் ‘போராடும் தருணங்கள்’ நூலை அளித்தேன்.

                • நண்பர் அஹமத் ஜான்,
                  ஓரிடத்தில் அநீதியை மேற்கொள்கிறவன், இன்னோரிடத்தின் அநீதியை எதிர்க்கும் தார்மீக நெறியை இழக்கிறான். இது ஒரு தர்க்க நிலை.

                  \\திண்ணியம் ,பாப்பாபட்டி ,கீரிப்பட்டி ,மேலவளவு ,கொடியங்குளம் , இவைகள் நீடிக்க வேண்டும் என்பதா உங்கள் எண்ணம் ,?\\
                  நான் சொன்னவற்றின் மீது எதிர் விமர்சனம் செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது. நான் சொல்லாத ஒன்றை திரித்து பொருள் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லை. இப்படி பொய் பேசி திரியத் தான் குரான் படிக்கிறீர்களோ?

                  \\ஒரு தலித் சமூகம் முழுக்க கம்யுனிச கொள்கைக்கு மாறுவதாக அறிவித்தால் ,அரசு அதிர்ச்சி அடையுமா ?அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு மாறுவதாக அறிவித்தால் அதிர்ச்சி அடையுமா ?\\
                  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று முழுமையாக புரியவில்லை. ஆனால் ஒன்று, அதிர்ச்சி வைத்தியம் எந்த நோய்க்கும் முழுமையான தீர்வில்லை. மீனாட்சிபுரம் மதம் மாற்ற நிகழ்வையே தொங்கி கொண்டிருக்கிறீர்கள். அது 80 களில் நடந்த ஒன்று. மாறி வரும் சமூகத்தை மதவாதிகள் எப்போதுமே பார்க்க மறுக்கிறார்கள். பாபர் மசூதி தகர்ப்பு, பா.ஜ.க ‘இந்துக்கள்’ மத்தியில் பலம் பெற்றது, இரட்டை கோபுர தகர்ப்பு, குஜராத் படுகொலைகள் என இவை எதையும் பாராமல் கண்மூடித்தனமாக பேசுகிறீர்கள்.

                  இந்தியாவில் முசிலிம்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்களா? அல்லது அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்களா? காஷ்மீர் முஸ்லிம்களை ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். குஜராத்தின் முஸ்லிம்களையோ இந்தியாவின் பிற பகுதி முஸ்லிம்களையோ அப்படி சொல்ல முடியுமா? என்.டி.டிவியில், சில நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடைபெற்ற சொத்து கண்காட்சி [property show ] பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய மோடியின் மந்திரி, ஜெயபிரகாஷ் வியாஸ் இது குஜராத்தில் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து தலைநகரங்களிலும் இருப்பதாக தெரிவித்தார். இந்த ghettoisation முன்பு தலித்களுக்கு எதிராக மட்டும் இருந்தது. ஆனால் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் இருக்கிறது. எனவே ஒடுக்கப்படும் மக்கள் ஒரு common platform -இல் ஜனநாயக எண்ணம் கொண்ட மற்ற பிரிவு மக்களுடன் இணைந்து போராடியே இது போன்ற ghettoisation ஐ தகர்க்க முடியும்.

                  நீங்கள் தலித் மக்களை சுவீகரிக்க நினைப்பது எந்த வகையிலும் பலனளிக்காது. நீங்கள் எந்த இடத்திலும் தலித் மக்களுடன் இணைந்து போராடுவது பற்றி பேசவேயில்லை. உங்கள் கவனம் முழுக்க தலித் மக்கள் தலையில் குல்லா மாட்டி விடுவதிலேயே இருக்கிறது. மதமாற்றத்தை ஒரு தனி நபர் உரிமை என்றளவில் பொதுவாக வரவேற்கலாம். ஆனால் இந்துத்துவ நுகத்தடியிலிருந்து தப்பித்து இன்ன மதத்தில் போய் சேருங்கள் என்று நம்மால் பரிந்துரைக்க முடியாது. தந்தை பெரியார் இன்றிருந்தால் கூட இதையே சொல்லியிருப்பார்.

    • islaathula sentha “cut” pannuveenga… aprom panni kari saapda koodathunu solluveenga! aprom enga amma, thangachi ellam nadamaadum koodaram pola karuppu thunila mooduveenga. adikaraveyila kullavum thaadiyum vechu arippu vara vaipeenga! approm jamat, masoodi kattanu kaasu kepeenga. ongaleye oru group soldrathu thappunu innoru group kelambuveenga… aprom vettu kuthu, kundu vedippu, thuppaki choodu! ippovey kanna kattuthey!

    • “அனைவரையும் இஸ்லாத்தில் இனைய சொல்லுங்கள் ,நிச்சயம் சம நீதி கிடைக்கும் ”

      நீங்கள் கூறும் சமநீதியைத்தான் அம்பேத்கரே சொல்லியிருக்கிறார். பாருங்கள்: பாபாசாகேப் அம்பேத்கர். நூல் தொகுப்பு: தொகுதி 25. பொருடக்கம் நான்கு: பக்கம்: 27-30.

      இஸ்லாமியர்களின் தீண்டாமையை தனது சொந்த அனுபவத்திலிருந்து மிகவும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

      அந்தக் கட்டுரையில் ” ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகமதியருக்கும் தீண்டத்தகாதவனே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துக்காட்டும்”. என முடிக்கிறார்.

      முழு நிகழ்ச்சியையும் தெரிந்து கொள்ள மேற்கண்ட கட்டுரையைப் படிக்கவும்.

      • அம்பேத்கார் சொல்லும் சமநீதி கிடைக்கவில்லை ,அந்த செயல் திட்டம் தவறு,அது தோல்வி அடைந்து விட்டது ,என்று சொல்லி மாற்று திட்டமாகத்தானே “புரட்சி”யை முன் வைக்கின்றது ,மேலே உள்ள கட்டுரை ,பிறகு மீண்டும் எதற்கு “அம்பேத்காரை இழுக்கின்றீர்கள் ,
        “ஹிந்து”வாக இருப்பதை அவமானமாக நினைத்த அம்பேத்கர் இருந்த நேரத்தில்தானே ,” யார் இந்து என்று அரசியல் சாசனத்தில் வரையறுக்கும் போது யாரெல்லாம் இஸ்லாமியன் இல்லையோ, கிறித்துவன் இல்லையோ, ஆங்கிலோ இந்தியன் இல்லையோ, பெர்சியன் இல்லையோ அவர்களெல்லாம் இந்து என்று ஷரத்து சேர்க்கப்பட்டது ,
        (a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
        (b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
        (c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion

        (a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
        (b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
        (c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion.

        இது குறித்து எழும்பிய கேள்விக்கு விடையளித்த அம்பேத்கர் கூறினார்: ” புத்தர் வைதீக பிராம்மணர்களிலிருந்து மாறுபட்ட போது தத்துவங்களில் மட்டுமே மாறுபட்டாரேயன்றி இந்து சட்ட அமைப்பினை தொடவில்லை. தம்முடைய தர்மத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் புதிய சட்ட அமைப்பினை அளித்திடவில்லை. மகாவீரர் மற்றும் சீக்கிய குருக்களுக்கும் இது பொருந்தும்.” (Times of India, 7-2-1951)

        புத்த மதத்தில் புதிய சட்ட அமைப்பு இல்லை என்று தெரிந்தும்,புதிய சட்ட அமைப்பை புத்த மதத்தினருக்காக ஏற்படுத்தி இன ஏற்ற தாழ்வை துடைத்து எரிய முயற்சி செய்யாமல் ,எந்த ‘ஹிந்து”வாக இருப்பது அவமானம் என்று கருதினாரோ ,அந்த அவமானத்திலேயே தலித் மக்களை விட்டு சென்றதனால்தான் இன்னும் இன இழிவு தொடர்கிறது ,அம்பேத்கார் சம நீதியை சொன்னார்,மறுக்கவில்லை ,அதை அவரால் ,அவரது புத்த மத மாற்றத்தால் ஏற்படுத்த முடிந்ததா என்பதுதான் இன்றைய கேள்வி ?

        சமநீதியை தேட அம்பேத்காரின் நூலை பார்வயிட சொல்லும் நீங்கள் ,இஸ்லாத்தில் உள்ள சம நீதியையும் நூல்களில் பாருங்கள் ,சில மனிதர்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாத்தை குறை கூறாதீர்கள் ,வண்டி சரியாகத்தான் உள்ளது ,அதை ஓட்டும் சில ஓட்டுனர்கள் சரி இல்லை ,அதற்க்கு வண்டியை குறை சொல்வது (அம்பேத்காராகட்டும் ,நீங்களாகட்டும்) சரி அல்ல என்பதுதான் எங்கள் கருத்து

        • //சில மனிதர்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாத்தை குறை கூறாதீர்கள் ,வண்டி சரியாகத்தான் உள்ளது ,அதை ஓட்டும் சில ஓட்டுனர்கள் சரி இல்லை ///

          in the same way Brahmins /upper caste may escape by saying like that

        • //இஸ்லாத்தில் சமத்துவம், சமநீதி ,ஏற்ற தாழ்வு இன்மை ,இவைகளுக்கு உறுதி தர முடியும் ,//

          how do you see the problems faced by Ahmedya Muslims,Sufi Muslims, Shia Muslims.

        • appo pakistan, saudi, iran, iraq etc ellam samthuvam irukku? pakistan-la oru Christian/Hindu nimbathiya vaazhamudiyum? saudi-la muslimkalukkum matra mathathinarukkum thani thani road illa? indonesia-la ahamadhiyakalaiyum kristhavargalaiyum kollala?ungalukullaye shia, sunni, sufi, ahamdhi nu pirinju kedakala? oru aanoda saatchi oru pennoda saatchiya pola double-nu soldrathu samthuvama? oru kuttratha nirubikka ithana muslim saatchi venumnu soldrathu samathuvama? ponga boss! comedy pannatheenga!

        • எல்லோரையும் புத்த மதத்திற்கு மாறச்சொன்னார் பாபா சாஹேப் மாறினார்களா?இந்திய சமூக கட்டமைப்பே ஒரு அற்புதமான ஏற்றத்தை பெற்றிருக்கும்.மிகச்சிறந்த யோசனைதான் அது அனால் பெரும்பாலோர் ஹிந்துத்வ புரளிகளுக்கு பயந்து மாறவில்லை அங்கும் பட்டியல் இனத்தில் தொடர வாய்ப்பிருந்தும். இன்று இஸ்லாத்திலும் கிருஸ்துவத்திலும் இணைபவர்கள் அவர் சொல் கேட்டு புத்த மதத்திற்கு ஒட்டு மொத்தமாய் மாறியிருந்தால் தெற்காசியாவில் ஒரு மிகப்பெரிய சக்தியாய் சாதி இழிவு இல்லாமல் தலித்கள் இருந்திருப்பார்கள்.

    • மொதல்ல தொழுகில வெரல ஆட்டுலாமா ஆட்டக்கூடாதா .? அப்புறம் இங்க தாவா பண்ண வரலாம் . எங்க —– விழுந்தாலும் அரிசி பொறுக்க போயிடறது.

  17. // இந்த அநீதியான சமூக அமைப்பை பேணும், தலைமை வகிக்கும் பார்ப்பனரை விட்டுவிடுவது, நோயின் மூல ஆதாரமான கிருமியை ஒழிக்காமல், நோயின் symptoms க்கு மட்டும் மருந்து எடுத்துக்கொள்வது போல. //

    பிரிட்டனில் அரசுப் பணியில் இருப்பவர்களை ’பிரிட்டிஷ் ராணியின் சேவையில்’ இருப்பவர்கள் என்று குறிப்பிடுவார்கள்.. ஆனால் பிரிட்டிஷ் ராணிக்கு ஒரு குமாஸ்தாவை நியமிக்கவோ, நீக்கவோ கூட அதிகாரமில்லை..

  18. நண்பர்களே,
    கட்டுரையின் மையக்கருத்தைப் பற்றி விவாதியுங்கள்.
    அம்பேத்கரின் கொள்கையும், சாதி ஒழிப்புக்கு அவர் முன் வைத்த தீர்வுகளும், இன்றைய சூழ்நிலையில் எவ்வாறு சாதி ஒழிப்புக்குப் பயன்படும்? அம்பேத்கரியம் பேசிக்கொண்டிருக்கும் தலித்திய அரசியல்வாதிகள், தலித்திய அறிவுஜீவிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும்,சாதி ஒழிப்புக்கான தீர்வுகளையும் மிகத் தெளிவாகக் கட்டுரை விளக்குகிறது.

    இதில் மாற்றுக்கருத்து இருந்தால், ஆதாரத்துடன் விவாதியுங்கள்.
    தலித் மக்கள் விடுதலைக்காக, சாதி ஒழிப்புக்காக போராடுபவர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் ஏன் விவாதிக்க மறுக்கிறார்கள்?

  19. ”அம்பேத்கரியம் சாதித்தது என்ன?” என்ற தலைப்பை படித்தவுடன் நெருடல் ஏற்பட்டது. தலித் மக்களை ஒருங்கிணைக்கவேண்டும் என்கிற இன்றைய காலக்கட்டத்தில் முதலில் இந்த மாதிரியான தலைப்பு தேவையா?

    அம்பேத்கர் கருத்துக்களை உள்வாங்கிய என்னை போன்றோர் மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களுக்கான விடுதலைத் தத்துவம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கம்யூனிச கொள்கைகள் தெரியாத அம்பேத்கர் கருத்துக்களை உள்வாங்கிய ஒருவர் இந்த கட்டுரையை படித்தால், நிச்சயம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித்தியத்துக்கும், தலித் மக்களுக்கும் எதிரிகள் என்ற எண்ணமே தோன்றும். அவர்கள் ”இந்தியாவில் மார்க்சியம் சாதித்து என்ன?” என்ற கேள்வியை கம்யூனிஸ்ட் கட்சியை பார்த்து கேட்கவைக்கும்.

    இந்த கட்டுரை சுட்டிக்காட்டும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் கட்சிகளை பற்றித்தான் இருக்கிறதே தவிர அம்பேத்கரின் கருத்துக்களைப்பற்றி (பௌத்தம் தழுவியது தவிர வேறெதும் பெரியதாக) பேசவில்லை.

    கட்டுரை எழுதுபவர் என்ன நோக்கத்துடன் எழுத முற்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த கட்டுரை அம்பேத்கர் கருத்துக்களை சரியாக படிக்காமல் அல்லது உள்வாங்காமல் எழுதப்பட்டது என்பது மட்டும் நிச்சயம். இப்படிப்பட்ட கட்டுரை அம்பேத்கரை உள்வாங்கிய ஜனநாயகமுள்ளவர்களை கம்யூனிஸ்ட் கொள்கைகளை தெரிந்துகொள்வதற்கு பதிலாக அவர்களை தூர நிறுத்தும்! மேலும் கம்யூனிசக்கொள்கைகளுக்கு எதிராகவும் நிறுத்தும்!

    • ///இந்த கட்டுரை சுட்டிக்காட்டும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் கட்சிகளை பற்றித்தான் இருக்கிறதே தவிர அம்பேத்கரின் கருத்துக்களைப்பற்றி///

      முதலில் இவை எதுவும் குற்றச்சாட்டுகள் அல்ல. இந்த கட்டுரை குறிப்பாக சாதியை ஒழிக்க அம்பேத்கர் முன்வைத்த வழிமுறை பற்றி தான் அது தவறு, தோல்வியடைந்துவிட்டது என்பதை பற்றி தான் விமர்சிக்கிறது. மாறாக நீங்கள் கூறுவதை போல தலித் தலைவர்களையோ,கட்சிகளையோ பற்றி பேசவில்லை.

      ///இந்த கட்டுரை அம்பேத்கர் கருத்துக்களை சரியாக படிக்காமல் அல்லது உள்வாங்காமல் எழுதப்பட்டது என்பது மட்டும் நிச்சயம்.///

      எதனடிப்படையில் இதை கூறுகிறீர்கள் ? நீங்கள் இவ்வாறு கூறுவதற்கு கட்டுரையிலிருந்து எந்த சான்றுகளையும் அளிக்கவில்லை.

      ///இப்படிப்பட்ட கட்டுரை அம்பேத்கரை உள்வாங்கிய ஜனநாயகமுள்ளவர்களை கம்யூனிஸ்ட் கொள்கைகளை தெரிந்துகொள்வதற்கு பதிலாக அவர்களை தூர நிறுத்தும்!///

      அம்பேத்கரை விமசிக்கக்கூடாது என்கிற ஜனநாயகமின்மை தான் இந்த நாட்டில் நிலவுகிறது.ஜனநாயகப்பண்பு இல்லை என்றால் விமர்சனத்தை உள்வாங்கிக்கொள்ளவே முடியாது.

      முழுக்க முழுக்க அம்பேத்கரின் சாதி ஒழிப்பு வழிமுறையின் மீதான அரசியல் விமர்சனத்தை வைக்கும் இந்த கட்டுரை அம்பேத்கரின் கருத்துக்களைப்பற்றியதே அல்ல என்கிற உங்களுடைய புரிதலும்,கருத்தும் அத்தகைய விமர்சனத்தை உள்வாங்கிக்கொள்ளாத கருத்துக்களே ஆகும்.

      அம்பேத்கர் முன் வைத்த தீர்வுகள் எவ்வாறு சாதியை ஒழிக்கும் என்பதை கூறுங்கள்.இந்த கட்டுரை கோட்பாட்டு ரீதியில் எவ்வளவு சரியானது,அறிவியல்பூர்வமானது,புரட்சிகரமானது என்பதையும் அம்பேத்கர் முன்வைத்த தீர்வுகள் எவ்வளவு தவறானது, கருத்து முதல்வாத தன்மை கொண்டது,சீர்திருத்தவாதம் என்பதை நான் கூறுகிறேன்.

  20. ஒரு தாழ்த்தபட்ட மணீதனும், வன்னியர்களொ அல்லது தேவர் சமுகத்தவர்களொ ஓன்றாக இணைந்து போராடுவார்கள் என்ரு வினவு கணவு காண்கிறது.

  21. சாதி என்பது ஒரு மனோ நிலை, அவை ஒரு கருத்தியல். தாக்கம் இந்து மதத்தின் இதிகாச புராணங்களும் ஒரு மனிதன் எப்படி இயங்கவேண்டும் என்று இந்தமத கருத்தியல் இயக்குகிறது. இதைத்தான் அம்பேத்கர் ஒழிக்கப்படவேண்டும் என்று கூறினார் பெரியாரும் அதைத்தான் வலியுறுத்தினார் இவைகளை நடைமுறையில் பர்க்கிறொம் எப்படியென்றால் சாதிக்கொரு கோயில் சாதிக்கொரு சாதி சடங்குகள் , சாதிங்கொரு பழக்க வழக்கம் என்று பறந்து விரிகிறது அதை தொடர்ந்துதான் தலித் மக்கள் ஆதிக்க சாதியினர் கோயிலுக்குள் அனுதிப்பத இல்லை பல ஊர்களில் சுடுகாட்டிற்கு ஆதிக்க சாதியினர் வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கிறார்கள் அவை தலித் மக்களில் பறையர் சமூகத்தினர் அருந்ததியரனர் அனுமதிப்பது இல்லை இப்படி உட்சாதிக்குள்ளும் பார்ப்பனிய கருத்தியல் இயக்கப்படுகிறது சாதியத்தின் உயிர்நாடி பார்பபனியம்தான். இப்போழுது இரு க்கும் இரசியல் பொருளாதார சூழலில் ஏனிப்படிகளைப்போல் இருக்கும் சாதியமைப்பில் இடஒதுக்கீடு தேவையற்றுது என்று ஊங்கள் கரத்தை ஆழமாமாக தலித் மக்களிலையில் இருந்து ஆய்வு செய்யவேண்டும்

Leave a Reply to ஊரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க