privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாநீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!

நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!

-

கமல்ஹாசன்லகம் எங்கிலும் உன்னை வென்றிட யாரு,

உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு,

உலக நாஅஅ யகனே!”

என்று பாடல் பெற்றவர் தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த மகான் என்று விதந்தோதப்படும் கமல்ஹாசன். முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் ‘ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை’ பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.

மாநாட்டை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில் “தமிழ்நாட்டில் ஒரு சினிமா தயாரிப்பது கோலா பானம் தயாரிப்பதை விட அதிக செலவு பிடிப்பதாக இருந்தாலும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை, வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் கோலாவின் விலையை விட குறைவாக இருக்கிறது. எனவே திரை அரங்குகளில் டிக்கெட் விலையை ஏற்ற வேண்டும்” என்று தனது பொருளாதார தத்துவத்தை உலகறியத் தந்துள்ளார்.

“சினிமாத்துறை இந்தியாவில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே கருதப்படுகிறது. மருத்துவமனைகள் போல அத்யாவசிய சேவையாக கருதப்படுவதில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் எலிகளால் தாக்கப்படும் மருத்துவமனைகள்தான் நாட்டில் அத்தியாவசியச் சேவையின் தரம் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. தான் அப்பல்லோவில் சிகிச்சை பெறுவது போல சாதாரண மக்களும் ஆயிரக் கணக்கில் மருத்துவத்துக்கு செலவழிப்பதால் சினிமா பார்க்கவும் ஆயிரக் கணக்கில் செலவழிக்கலாமே என்று ஆதங்கப்படுகிறார்.

‘டிக்கெட் விலை உயர்வு காமன் மேனை பாதிக்காதா’ என்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது,  உன்னைப்போல் ஒருவனில் ‘ரேஷன் கடையில் அரிசி வாங்க நிற்கும் காமன் மேனாக’ நடித்த கமல் “ரூ 10,000 கொடுத்து ஜீன்ஸ் வாங்கும், ரூ 5,000 கொடுத்து ஷூ வாங்கும் மக்கள் சினிமாவுக்கு கூடுதல் கட்டணம் கொடுக்க முடியாதா” என்று நியாயப்படுத்தினார். “ரோட்டோரக் கடையில் டீ குடிக்க வேண்டுமா அல்லது ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடிக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தனது கொள்கையை மேலும் விளக்கியிருக்கிறார்.

‘திரைப்பட டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்துவதை நான் உறுதியாக ஆதரிக்கிறேன்’ என்று முடிக்கிறார் அவர். ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடித்து சொகுசாக வாழும் மக்கள் மலிவான டிக்கெட்டில் திரைப்படம் பார்ப்பதன் மூலம் கமல் போன்ற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கமல் தன்னையே காமன் மேனாக பார்க்கிறார், தன்னைச் சுற்றிய வாழ்க்கையை உலகமாக பார்க்கிறார். அவரே காமன் மேன் என்பதால் பிரச்சனைகளின் தீர்வுகள் அவரைச் சார்ந்தே இருக்கின்றன. அவர் ரூ 10,000 மதிப்பிலான ஜீன்ஸ் போடுவார், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டீ குடிப்பார், குளிரூட்டப்பட்ட கக்கூசில் கக்கா போவார். அவற்றோடு ஒப்பிட்டு டிக்கெட் விலையை ஏற்றித் தரும்படி மக்களிடம் அறைகூவல் விடுக்கிறார்.

“நூறு ஆண்டு நிறைவை கொண்டாடும் நம் இந்திய சினிமா, அளவில் பெரியதாய் இருந்தாலும் வருமானத்தைப் பொறுத்த வரை முதலிடத்தில் இல்லை” என்று வருத்தப்படுகிறார். “சினிமாத் துறையில் கட்டமைப்பு மோசமாக இருக்கிறது, குறிப்பாக மின் வெட்டு அதிகமாய் இருக்கிறது” என்றும் கவலைப் படுகிறார் உலகநாயகன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மின் வெட்டினால் மக்கள் அனுபவிக்கும் அவலங்களும் ஒரு ஆண்டுக்கு மேலாக கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நடக்கும் போராட்டமும் இந்த உலகக் கலைஞரின் கண்ணில் படவில்லை, ஒரு கலைப்படைப்பாக பீறி வெளிவரவும் இல்லை. மின்தடை காரணமாக படப்பிடிப்பும், திரையரங்குகளும் பாதிக்கப்பட ஆரம்பித்ததும் மின்பற்றாக்குறை பற்றி பேசுகிறார்.

உலக அளவில் தமிழ் சினிமா எந்த இடத்தில் இருக்கிறது என்று கேட்டதற்கு, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் என் மொழியை வைத்துக் கொண்டு உலக அளவில் போக விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

கவலைப் படாதீர்கள் உலகநாயகனே! வால் மார்ட் தயாரிப்பில் தா பாண்டியன் நல்லாசியுடன், கூடங்குளம் கரண்ட்டை பயன்படுத்தி அன்பே சிவம் பாகம் இரண்டு எடுங்கள். தமிழை வைத்து உலக அளவில் போய் விடலாம்.

ரொட்டி கிடைக்காமல் மக்கள் பசியில் வாடும் போது கேக் சாப்பிடச் சொன்ன பிரெஞ்சு அரசியும், ரோம் நகரம் தீப்பிடித்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனும் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை கலைஞானி கமல்ஹாசன் போக்குகிறார். “வாழ்க வளமுடன்!”

படிக்க:

  1. நான் திரைப்படங்களைப் பார்த்து சுமார் பத்தாண்டுகளாகிவிட்டன. சமீபத்தில் வினவில் வந்த திரைப்பட விமர்சனம் மற்றும் கட்டுரையைப் படித்துவிட்டு சுந்தர பாண்டியனையும் தாண்டவத்தையும் பார்த்தேன். ‘தாண்டவம் ஒரு மொக்க, அதையா பாக்கப் போறீங்க!’ என எனது மகன் கேட்டான். இருந்தாலும் பார்த்தேன்.

    சுந்தர பாண்டியன் சாதிப் பெருமை பேசுகிறது. தாண்டவம் தேசப் பெருமை பேசுகிறது. இப்படித்தான் ஆகப் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் இருக்கின்றன என்பதை தொலைக்காட்சி விளம்பரங்களே சொல்லிவிடுகின்றன.

    மொத்தத்தில் இந்த மொக்கைகளுக்கு மொத்தமா ரூ100 காலி. இந்த மொக்கைகளை இதுக்கு மேலயும் காசு கொடுத்து பாத்தா நாமதான் மொக்கைனு தோணுது. இதுல ஒரு குடையை தொலச்சதுல ஒரு 250 ரூ காலி.

  2. கமலை நான் ஆதரிக்கிறேன்.. உங்கள் கட்டுரையையும் கருத்தையும் முற்றிலுமாக நிராகரிக்கிறேன்…
    நன்றி

    • என்ன பாஸ் நீங்க! ஒத்த வரியிலே நிராகரிக்கிறேன் சொல்லிட்டு போய்ட்டீங்க! கட்டுரை பல கருத்துக்கள் பெரும்பான்மை மக்கள் சார்பா நின்னு பேசுது! அதையெல்லாம் நிராகரிக்கும் பொழுது, கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்ல கடமைப்பட்டவர் தானே?!

  3. //தமிழ்நாட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை, வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் கோலாவின் விலையை விட குறைவாக இருக்கிறது//
    கோலா 1 முதல் 1.6 டாலர் வரை விற்க்கப்படுகிறது…( 50 முதல் 75 ரூபாய்)…மல்டிப்ளெக்ஸிலும், முதல் சில வாரங்களிலும் இதைவிட அதிக விலைக்கே டிக்கெட் விற்கிறார்கள் நம்மூரில்…

    //ரோட்டோரக் கடையில் டீ குடிக்க வேண்டுமா அல்லது ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடிக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்//
    வசதி இருந்தால் நான் ஏன் ரோட்டோரத்தில் குடிக்கிறேன்??

    //“சினிமாத்துறை இந்தியாவில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே கருதப்படுகிறது. மருத்துவமனைகள் போல அத்யாவசிய சேவையாக கருதப்படுவதில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.//
    முடியல சாமி…நிறுத்தாது சிரிப்பதால் என் வயிறு வெடித்தால் அதற்கு வினவே பொறுப்பு…சொல்லிபுட்டேன்…
    ஆனால் நானும் டிக்கெட் விலை உயர்வை ஆதரிக்கிறேன்…1000 ரூபாய் ஆக்கிவிடுங்கள்…
    நம் மக்கள் படம் பார்க்காமல் உருப்பட்டுவிடுவார்கள்…ஒரு வேளை ‘கலைஞானி’ சமூக அக்கரையினால் இப்படி கூறினாரோ?

    • “ஆனால் நானும் டிக்கெட் விலை உயர்வை ஆதரிக்கிறேன்…1000 ரூபாய் ஆக்கிவிடுங்கள்…
      நம் மக்கள் படம் பார்க்காமல் உருப்பட்டுவிடுவார்கள்…ஒரு வேளை ‘கலைஞானி’ சமூக அக்கரையினால் இப்படி கூறினாரோ?” – Good one

  4. இந்த கமலகாசன் அப்படி என்ன பெரிதாக நடித்து கிழித்துவிட்டார். பெரிதாக பேசுவதற்கு? இவர் நடிப்பு பெரும்பாலும் மிகை நடிப்பே! (சிவாஜி அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும்). மேலும் இவர் திரைப்படங்களில் வரும் லாஜிக் ரொம்பவும் இடிக்கும். இந்தியன் படத்தில் சாண எரிவாயு (gobar gas)வெடித்து கஸ்தூரி சாவதாக காட்டி இருப்பார்கள். உண்மையில் சாண எரிவாயு வெடிக்காது! அதே போல் தசாவதாரம் படத்தில் வைரஸ் கிருமிகளின் பின்னணியில் உள்ள லாஜிக்கை நினைத்து உயிரியல் படிக்கும் மாணவர்கள் பின்பொறியால் சிரிப்பார்கள். இந்த ஆள் தான் ஆஸ்கர் நாயகன் என்பதை நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது (அது சரி ஆஸ்கர் விருது அப்படி என்ன பெரிய விருது?) ஈரான் என்னும் நாடு மத அடிப்படைவாதம் செல்வாக்கு செலுத்துகிற நாடு. தொட்டதற்கெல்லாம் கத்தரி போடுகிற சென்சார் அங்கு உண்டு. சினிமா எடுப்பதற்கு இங்கு இருப்பது மாதிரி பெரியதாக பண முதலீடும் மற்ற வசதிகளும் அங்கு கிடையாது. நினைத்தபடியெல்லாம் படம் எடுக்கவும் முடியாது. படைப்பு சுதந்திரம் என்பது மிகவும் குறைவு. ரசிகர் வட்டமும் ஒப்பீட்டளவில் சிறியது தான். ஆனால் அந்த நாட்டில் இருந்து வெளிவரும் படங்கள் உலகையே கலக்குகின்றன. தமிழ் சினிமா ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே குப்பையாக தான் இருந்து வருகிறது. மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத மு.கருணாநிதி மாதிரியானவர்கள் கதை வசனம் எழுதி புகழ் அடைவது இங்கு மட்டுமே நடக்கும். இதில் ஆஸ்கர் நாயகன் என்னும் பட்டத்துடன் கமல் போன்றவர்கள்!

  5. அறிவுஜீவியாக தன்னை கருதிக் கொள்ளும் வினவுக்கு,

    ரொம்ப நாளாகவே கமல்ஹாசனைப் பற்றி எதோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். பதில் போட நேரமில்லாததால் ஒன்றும் சொல்லவில்லை. இப்போ போதுமான நேரம் இருந்ததால் இதோ என் பதில்.

    //“சினிமாத்துறை இந்தியாவில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே கருதப்படுகிறது. மருத்துவமனைகள் போல அத்யாவசிய சேவையாக கருதப்படுவதில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.//

    வருத்தம் தெரிவித்தார்னு உங்க கிட்ட சொன்னாரா ? மலேசிய நாட்டிற்கு ஒருமுறை பேட்டி கொடுக்கும் போது கமல் சொன்னது “சினிமா உங்களின் மாலை நேரத்தை சந்தோசப் படுத்துவதற்காகத் தான். அது ஒரு அடிப்படை தேவை அல்ல. ஒரு வருடம் மக்கள் சினிமா பார்க்கலைனா எதுவும் குறைந்து விடாது” ன்னு சொன்னார். யு டியுப் ல போய பேட்டிய தேடிக் கண்டுபிடித்து பார்த்துக்கோங்க.

    //‘டிக்கெட் விலை உயர்வு காமன் மேனை பாதிக்காதா’ என்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது, உன்னைப்போல் ஒருவனில் ‘ரேஷன் கடையில் அரிசி வாங்க நிற்கும் காமன் மேனாக’ நடித்த கமல் “ரூ 10,000 கொடுத்து ஜீன்ஸ் வாங்கும், ரூ 5,000 கொடுத்து ஷூ வாங்கும் மக்கள் சினிமாவுக்கு கூடுதல் கட்டணம் கொடுக்க முடியாதா” என்று நியாயப்படுத்தினார். “ரோட்டோரக் கடையில் டீ குடிக்க வேண்டுமா அல்லது ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடிக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தனது கொள்கையை மேலும் விளக்கியிருக்கிறார்.//

    ஒரு தியேட்டர்ல 30, 40 ரூபாய் டிக்கேட் கொடுத்து படம் பார்க்க வந்தவர்கள் 150 ரூபாய் கொடுத்து கோக் குடிக்கிறான். தியேட்டர்ல போய் எது என்ன விலைன்னு போய் பாருங்க. தம் அடிக்கிற கூட்டம், பீர் அடிக்கிற கூட்டம், சாராயம் அடிக்கிற கூட்டம்னு எல்லாவகை மக்களையும் பார்த்தா 30, 40 ரூபாய் கம்மிதான்.

    //‘திரைப்பட டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்துவதை நான் உறுதியாக ஆதரிக்கிறேன்’ என்று முடிக்கிறார் அவர். ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடித்து சொகுசாக வாழும் மக்கள் மலிவான டிக்கெட்டில் திரைப்படம் பார்ப்பதன் மூலம் கமல் போன்ற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.//

    என்னவோ போங்க ஏழைகளைக் கண்டால் நீங்க மட்டும்தான் ரொம்ப கவலைப் படுறீங்க.

    //கமல் தன்னையே காமன் மேனாக பார்க்கிறார், தன்னைச் சுற்றிய வாழ்க்கையை உலகமாக பார்க்கிறார். அவரே காமன் மேன் என்பதால் பிரச்சனைகளின் தீர்வுகள் அவரைச் சார்ந்தே இருக்கின்றன. அவர் ரூ 10,000 மதிப்பிலான ஜீன்ஸ் போடுவார், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டீ குடிப்பார், குளிரூட்டப்பட்ட கக்கூசில் கக்கா போவார். அவற்றோடு ஒப்பிட்டு டிக்கெட் விலையை ஏற்றித் தரும்படி மக்களிடம் அறைகூவல் விடுக்கிறார்.//

    இந்த மாதிரி மூன்றாம் தர விமர்சனங்களைப் பேசிப்பேசி என்னதான் கண்டீர்களோ தெரியல. அவர் என்ன பண்ணார்னு தேடித்தேடி போய் பார்த்திருக்கீங்க. உங்களுக்கு மட்டுமே இருக்குற தனித்திறமை.

    //“நூறு ஆண்டு நிறைவை கொண்டாடும் நம் இந்திய சினிமா, அளவில் பெரியதாய் இருந்தாலும் வருமானத்தைப் பொறுத்த வரை முதலிடத்தில் இல்லை” என்று வருத்தப்படுகிறார். “சினிமாத் துறையில் கட்டமைப்பு மோசமாக இருக்கிறது, குறிப்பாக மின் வெட்டு அதிகமாய் இருக்கிறது” என்றும் கவலைப் படுகிறார் உலகநாயகன்.//

    என்னய்யா இது, தமிழ் நாட்டுல இருக்கிறவங்க தன் வீட்டுல மின்சாரம் இல்லை என்றவுடன் தான் தைய்ய தக்கான்னு குதிக்கிறான். சென்னையில் இருக்கும் மனிதர்கள் மற்ற நகரங்களைப் பற்றி கவலைப் பட்டார்களா ? என்னவோ கமலுக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையில் பங்கு இருக்குற மாதிரி பேசுறது.

    சரியா அரசியல் தலைவனை தேர்ந்தெடுக்க வக்கில்லாத உங்களைப்போல் மக்கள் இருக்கும் இடத்தில் என்ன பேசுனாலும் வேலைக்கு ஆகாது.

    //கடந்த மூன்று ஆண்டுகளாக மின் வெட்டினால் மக்கள் அனுபவிக்கும் அவலங்களும் ஒரு ஆண்டுக்கு மேலாக கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நடக்கும் போராட்டமும் இந்த உலகக் கலைஞரின் கண்ணில் படவில்லை, ஒரு கலைப்படைப்பாக பீறி வெளிவரவும் இல்லை. மின்தடை காரணமாக படப்பிடிப்பும், திரையரங்குகளும் பாதிக்கப்பட ஆரம்பித்ததும் மின்பற்றாக்குறை பற்றி பேசுகிறார்.//

    அதே கடந்த மூன்று ஆண்டுகளாக தாங்கள் என்ன செய்தீர்கள்னு யோசிச்சு பாருங்க. எந்த ஒரு விசயமும் மத்தவங்க கிட்ட தூக்கிப் போட்டுட்டு போறது சுலபம். மூன்று ஆண்டுகளாக இருக்கிற பிரச்சனைக்கு தீர்வு வேணும்னா மக்கள் இந்நேரம் கொதித்து எழுந்திருச்சு தமிழ் நாட்டையே கலக்கியிருக்க வேண்டாமா ? இது மக்களின் பிரச்சனையா தனி மனிதன் பிரச்சனையா ?

    //கவலைப் படாதீர்கள் உலகநாயகனே! வால் மார்ட் தயாரிப்பில் தா பாண்டியன் நல்லாசியுடன், கூடங்குளம் கரண்ட்டை பயன்படுத்தி அன்பே சிவம் பாகம் இரண்டு எடுங்கள். தமிழை வைத்து உலக அளவில் போய் விடலாம்.//

    இதே வால்மார்ட் உங்ககிட்ட வந்து பிசினஸ் பேசுனா உங்க நிலைமை தெரிஞ்சுடும்.

    //ரொட்டி கிடைக்காமல் மக்கள் பசியில் வாடும் போது கேக் சாப்பிடச் சொன்ன பிரெஞ்சு அரசியும், ரோம் நகரம் தீப்பிடித்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனும் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை கலைஞானி கமல்ஹாசன் போக்குகிறார். “வாழ்க வளமுடன்!”//

    திரும்பவுன் சொல்றேன், ரொட்டி கிடைக்காம மக்கள் பசியில் வாடற அளவுக்கு தமிழ் மக்கள் இருந்தா ஒரு புரட்சி வெடிச்சிருக்கனும். அரசியலில் ஒரு மாற்றம் நடந்திருக்கனும். இல்லையே. நம் நாட்டுல எவ்வளாவோ பிரச்சனைகள் இருக்கு. அது எல்லாத்திற்கும் தீர்வு வேணும்னா இந்த மாதிரி கட்டுரை எழுதறத விட்டுட்டு மக்களுக்கு அரசியல் பற்றியும் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கறத பற்றியும் எழுதுங்க.

    இல்லைனா அடுத்தவங்களை குறை சொல்றதை நிறுத்திவிட்டு உங்களை உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள நேரம் செலவிடுங்கள்.

    இத நீ செய்ய வேண்டிய தானேன்னு என்னை கேட்டீங்கன்னா, என் பதில் முதல் வரியில் சொன்னமாதிரி ரொம்ப நாளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்பதான் சொல்லனும்னு தொனுச்சு.

    • ராஜ்சங்கருக்கு

      முதலில் ரொட்டி கிடைக்காம இருந்திருந்தா இன்னேரம் புரட்சி வந்திருக்கும்னு சொல்லுரீங்க ஆனா ஆடுத்த வரியில் // நம் நாட்டுல எவ்வளாவோ பிரச்சனைகள் இருக்கு.//

      //என்னவோ போங்க ஏழைகளைக் கண்டால் நீங்க மட்டும்தான் ரொம்ப கவலைப் படுறீங்க. //

      மக்கள் பிரச்சனை பற்றி சொல்லும் பல பதிவுகளில் விவாதித்ததெற்கெல்லாம் வராதவர்.
      கம்ல் பற்றி எதோ ….

      • கமலுக்கு உலக்கை நாயகன் என்ற பெயரே பொருத்தமனானது, இந்த கூத்தாடியால் சமுகத்திற்க்கு ஏற்பட்ட சிறு நன்மைய சொல்லுங்கள். ஒரு சாராய வியாபாரி அல்லது ஒரு விபச்சாரியால் இந்த சமுகத்திற்க்கு என்ன நன்மையோ அல்லது தீமையே அந்த அளவே இவரின் பங்கீடும் உள்ளது.

        தமிழக மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து ஓலு புழுவின் எதிர்ப்பை கூட காட்ட திராணியற்றவர்களாக மாற்றியதில் இவருக்கும் சினிமாவிற்ககும் பொரும் பங்கு உள்ளது??

  6. சினிமா,சினிமா,சினிமா இதையே தன் உலகமாகப்பார்க்கிரார் கமல். அதை தான்டியும் ஒரு சமூகம்,ஒரு வாழ்க்கை இருப்பதை பல சமயம் மரக்கிரார். அவருக்கு வேன்டுமானால் சினிமாவே வாழ்வாய் இருக்கலாம். ஆனால் பிரரும் அப்படி இருக்க வேன்டும் எனநினைப்பது என்ன கொடுமை?

  7. i fail to understand why you write articles frequently about this stupid self-absorbed tamil actors like kamal hassan vijaykant etc., it only shows that even those who preach radical politics do succumb to the cinema craze. Will the people come and see the cinema if ticket prices are raised given their purchasing power. It is an article which does not deserve any comments. I comment only to tell you that avoide articles on cinema and write about burning problems-sundaram

  8. Tamils always has the quality of not appreciating local talents.The same people who have criticised Kamal and Karunanidhi will be appreciating Bollywood or Holliwood actors/screen-play writers.Whether these people appreciate or not Times magazine has appreciated Nayagan as one among the greatest 100 films of the world.Parasakthi was a trend setting film in India.Karunanidhi only wrote the dialogues for Iruvar Ullam as well as for Manohara.

    • அய்யோ அய்யொ !
      காட் பாதர் படத்தை அட்ட காப்பி அடிச்சி எடுத்த படம் தான்நாயகன் படம் அதை 100 ல ஒண்ணுன்னு சொல்ல எப்படி சார் மனசு வருட்கு உமக்கு !

  9. சினிமா ஒரு ஊடகம். அதில் நடித்து விட்டால் என்ன்னவோ பெரிய சாதனை செய்தது போல் ஆலடி கொள்வது.
    இதற்கு காரணம் தயாரிப்பாளர் தரும் அதிக பணம். இதை குறைத்து விட்டால் எதற்கு அதிக விலையில் டிக்கெட் போட வேண்டும்.
    ஒரு அடிப்படை தொழில் செய்யும் தொழிலாளியை விட இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை.
    நீங்கள் எழுதிய கருத்துகள் சரியானதே..

  10. தியேட்டர்களில் கட்டணங்களை உயர்த்துவதை நான் ஆதரிக்கிறேன். வருடத்தில் வெளியாகும் சுமார் 150 படங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான தரத்தை கொண்டிருப்பவை 10 படங்கள் இருக்குமா? கட்டணத்தை உயர்த்தினால் ஜனக்கூட்டம் குறையலாம். சினிமாக்களுக்கு ஆதரவில்லையெனில் தொலைக்காட்சிகளில் உபயோகமான வேறு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிர்ப்பந்தங்கள் ஏற்படலாம்.

    நான் சிறுவனாக இருந்தபோதெல்லாம் மாலை 5.40க்கு கண்மணி பூங்கா தூர்தர்சனில் போடுவார்கள். அதைக் காத்திருந்து காணும் சுகம் அலாதியானது. மாலையில்தான் ஒளிபரப்பே ஆரம்பிக்கும் இரவு 10க்கெல்லாம் முடிந்துவிடும். அதாவது மாலைநேரம் பொழுதுபோக்கிற்கானது.. அன்றாட உழைப்பு, படிப்பின் களைப்பு தீரவும், சமூக அறிவார்ந்த வகையில் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் மாலைநேரம் உபயோகப்பட்டது. ஆனால் இன்னிக்கு அப்படியா? 24 மணி நேரமும் சினிமா சினிமாதான். அப்பேர்ப்பட்ட சினிமா ஒழிந்து தொலைந்தால்தான் என்ன!

    முதல்வாரத்திலேயே வசூலை அள்ளிவிடவேண்டும் என்றுதான் கட்டணத்தை வரைமுறையே இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசே சொல்லிவிட்டதே!! எவன் ஒழுங்கா வரி கட்டுவான்!
    அந்த வகையில் சினிமா கட்டணத்தை மேலும் உயர்த்தினால் இருக்கறவன் கொடுத்துப் படம் பார்ப்பான். இல்லாதவனுக்கு பொழுதை வேறு வகைகளில் நல்ல முறையில் செலவழித்து விடுவதற்கான வாய்ப்புக் கிட்டும். அதை பயன்படுத்துவதும் சீரழிந்து போவதும் அவன் கையில்தான் இருக்கு. நாம சொல்லி என்னாகப் போவுது!

  11. I apologize for taking this argument in a different direction,i think this cinema craze is also due to the lack of enough open spaces for children to play and also parents who dont actively discourage this from a young age.

  12. kamalhassan……….oru……suyanalavaathi ….matisaar kattiya oru appattamaana r.s.s pramanan entha oru producer ivarai vaiththu patam etuththu laabam adaivathenpathu …paaraiele naar urippathu polaththan ,,,,periya butget patammellam evannathu eamaali thalaile vaiththu aaskarkkellam muyarchi pannuvaar eanenral panam veruoruvarutaithuthaane nasttam vanthal antha producer taane saava pokiraar ivarukku enna vanthathu ?????? ivarutaiya sontha patam enraal kuraintha butget patam etuththu lattu sappituvaar maththa producerkku ellam vayile ……….nalla…….vaippaar

  13. //இல்லாதவனுக்கு பொழுதை வேறு வகைகளில் நல்ல முறையில் செலவழித்து விடுவதற்கான வாய்ப்புக் கிட்டும். ///

    தியேட்டர்களில் கட்டணம் உயர்த்தப்படுவதை நான் ஆதரிக்கவில்லை. இது பல குடும்பத்தின் வாழ்நிலையைக் கெடுக்கும். இதனால் தாய்மார்களும் மனைவிமார்களும் மேலும் துயரப்பட நேரிடும். உதாரணமாக, சரக்கின் விலை ஏற்றப்பட்டதால் குடிமகன்கள் குறைத்துக் கொண்டனரா என்ன!

    • இதற்கான பதில் என்னுடைய பின்னூட்டத்திலேயே இருக்கிறது.

      //அதை பயன்படுத்துவதும் சீரழிந்து போவதும் அவன் கையில்தான் இருக்கு. நாம சொல்லி என்னாகப் போவுது!//

  14. கருத்து சொன்ன சிலரில் நுழைவுச்சீட்டின் விலையை ஏற்றினால், சினிமா பார்ப்பதை குறைக்கும் என்பதாக கருத்து சொல்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. திரையரங்குகளும், தயாரிப்பாளர்களும், நடிகர்கள் தான் மக்கள் காசைத்தான் கொள்ளையடிப்பார்கள்.

    கட்டுரையாளர் தன்னை அறியாமலே, கமலை உலகநாயகன் என ஒப்புக்கொண்டுவிட்டார். கமலின் நிலை இப்பொழுது தேசம் கடந்த தரகு முதலாளி போல, தேசங்கடந்த நடிகராகி இருக்கிறார். கமலின் புதிய படத்தை பார்த்து மெய்சிலிர்த்து, சர்வதேச சினிமா தயாரிக்கும் தயாரிப்பாளர் சிக்கி இருக்கிறார். அதனால் தான் இந்த பேச்சு.

    • அன்புள்ள குருத்து,
      சினிமா பார்ப்பதை மக்கள் குறைத்தால் அல்லது விட்டொழித்தால், நீங்கள் சொன்ன அத்தனை தரப்பினரும் மக்கள் காசை எப்படிக் கொள்ளையடிக்க முடியும்?

  15. ஏண்டா அம்பி அவா நனனதான் ஷோல்றா ஷினிமா காரா நன்னா இருக்கணும் ஸாதாரண மக்கள் எக்கேடு கேட்டல் என்னடா வந்தது அம்பி?அவா ஷமபாதிக்க வேண்டாமோ?

Leave a Reply to ரிஷி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க