privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 29/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 29/10/2012

-

செய்தி: அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக யுஎஸ்டிஏ அறிக்கை தெரிவிக்கிறது. 2012ம் ஆண்டில் 9.75 மில்லியன் டன்கள் அரிசியை ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, உலகிலேயே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது.

நீதி: பட்டினியில் முதலிடம் நோக்கி போய்க்கொண்டிருப்பதால் ஏற்றுமதியில் நம்பர் 1 வந்தாக வேண்டுமே?

______

செய்தி: மத்திய அமைச்சரவை மாற்றத்தில், தனது இலாகா மாற்றப்பட்டதால் எந்த வருத்தமும் ஏற்படவில்லை என்று ஜெய்ப்பால் ரெட்டி கூறியுள்ளார்.

நீதி: பெட்ரோலியத்துறை அமைச்சகத்திலிருந்து ரெட்டியை மாற்றியதற்கு முகேஷ் அம்பானிதான் சந்தோஷப்படவேண்டும் எனும் போது ரெட்டி காரு அழுத கதைகள் தேவையில்லையே?

_______

செய்தி: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வந்தாலும், பாராளமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறும் என்று அரசு எதிர்பார்ப்பில் இருக்கிறது.

நீதி: காங்கிரசு ஊழலுக்கு போட்டியாக கட்காரி ஊழல் வந்தாச்சுங்கிறத எவ்வளவு சாமர்த்தியமாக திரிக்கிறார்கள் பாருங்கள்!

_______

செய்தி: தமிழகத்துக்கு மின்சாரம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு இன்று வழக்கு தொடர்ந்தது.

நீதி: முல்லைப் பெரியாறு, காவிரிக்காக போட்ட வழக்குகளிலேயே உச்சநீதிமன்றம் ஒன்றையும் பிடுங்கக் காணோம் என்பது புரியவில்லை என்றாலும் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கு சொந்த அனுபவத்தையாவது வாய்தா ராணி யோசித்து பார்த்திருக்கலாமே?

_______

செய்தி: மத்திய மந்திரி சபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிய மந்திரிகளாக 22 பேர் பதவி ஏற்றனர். தற்போது மொத்தம் 78 மந்திரிகள் உள்ளனர்.

நீதி: நவராத்திரி கொலு பொம்மைகள் போல அமைச்சர்களை மாற்றினாலும் அதற்கு அமெரிக்காவிடம் பெர்மிஷன் வாங்கியாக வேண்டுமே மிஸ்டர் மன்மோகன் சிங்?

_______

செய்தி: ரயில்வே துறையின் சேவைகள் அதிகரிக்கப்பட, கட்டண உயர்வு அவசியமானது என புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

நீதி: பேசாதவனுக்கு பேசத் தெரிந்த வரம் கிடைத்த போது அம்மாவிடம் ” நீ எப்பம்மா தாலியறுப்ப?” என்றானாம்.

_______

செய்தி: ஆந்திராவில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 250 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 29 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். சுகாதார துறை நடத்திய ஆய்வில் திருப்பதியில் இருந்து பன்றி காய்ச்சல் பரவுவதாக தெரிய வந்தது. திருப்பதி கோவிலுக்கு வெளி நாட்டு பக்தர்கள் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

நீதி: பெருமாள் வராக அவதாரம் எடுத்தவர் என்பதால் பன்றிக் காய்ச்சலின் புண்ணியத் தலமே திருப்பதியாகத்தானே இருக்க வேண்டும்?

_______

செய்தி: ஊழலுக்கு எதிரான இயக்கத்தில், பாலிவுட் நடிகர் அமீர் கானை சேர்ப்பதற்கு, காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே திட்டமிட்டுள்ளார்.

நீதி: அமீர்கானோடு பிரியங்கா சோப்ராவைக் கூட்டி வந்தாலும் இனி செல்ப் எடுப்ப்பது சிரமம் ஐயா!

_______

செய்தி: “எனது செயல்பாட்டில், எனது நடத்தையில் களங்கம் எதுவும் கிடையாது. அதனால் தான், சமூக விரோதிகளுக்கு எதிராக என்னால் போராட முடிகிறது. பாருங்கள்… 6 கேபினட் மந்திரிகளின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும்.”- அமைச்சரவை மாற்றம் குறித்து அன்னா ஹசாரே.

நீதி: பாவம் பெரிசு, இப்படியாவது ஆசைபடட்டுமே!

________

செய்தி: கொலையாளிகள், கொள்ளைக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்படும்போதும், அவர்களுடனான போராட்டத்தின் போதும், பாதுகாத்துக் கொள்ளவே, போலீசுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது,” என, டி.ஜி.பி., ராமானுஜம் கூறினார்.

நீதி: எனில் போலீசிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள யாரு துப்பாக்கி கொடுப்பார்கள்?