privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்கடவுள், ஆன்மா, முக்தி........ கேள்வி பதில்!

கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!

-

கேள்வி: கடவுளை மறுத்தால்…..பரம்பொருள், ஆன்மா, பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது என்று கூறுகிறார்களே…சற்றே விளக்குங்கள்!

– பி.தினேஷ் குமார்.

அன்புள்ள தினேஷ் குமார்,
உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் குறித்த அனைத்து விளக்கங்களும், செய்திகளும், கற்பனைகளும் நம்மால் சிந்தனையில் மட்டுமே அறியப்படுகிறது. சிந்தனை என்பது மூளையின் செயல்பாடு. நமக்கு வெளியே இருக்கும் உலகத்திலிருந்து புலன்கள் மூலம் கடவுள் குறித்த அனைத்தும் மூளையில் பதியப்பட்டு நாம் பேசுகிறோம், சிந்திக்கிறோம் அல்லது உணர்கிறோம். ஆன்மீகவாதிகள் சொல்லும் பரவச நிலை, சமாதி நிலை, முக்தி நிலை இன்ன பிற நிலைகளெல்லாம் கூட மூளையின் அறிதலோடு மட்டுமே கட்டுண்டு கிடக்கின்றன. டாஸ்மாக் குவார்ட்டரினால் கூட இத்தகைய நிலைகளை எளிதில் ‘உண்மை’யாகவே அடைய முடியும். அது மூளையின் மயக்க நிலை, அல்லது போதை நிலை.

ஒரு வேளை இந்த பரவச நிலைகளை அடையும் வண்ணம் நாம் பக்குவப்படவில்லை என்று ஆன்மீகவாதிகள் கூறுவார்களாயின் அதுவும் கூட மூளையின் உதவியோடுதான் அறியப்படுகிறது. கடவுளை ஒன்றியவர் என்று ஒருவர் கூறும் அனுபவம் கூட இவ்விதமே கடவுளை ஒன்றாதவர்களை சென்றடைகிறது. மனித உடலில் உயிரின் இயக்கம் நின்ற பிறகு மூளையின் செயல்பாடும் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பிறகு டிடிஎஸ் எபெக்டில் கடவுள் வந்தாலும் செத்தவர் அதை உணர முடியாது. எனவே ஆன்மா, பருப்பொருள், கடவுள், என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது மூளையின் செயல்பாடான சிந்தனையேயன்றி வேறல்ல. அந்த சிந்தனையும் வெளியே இருக்கும் மனித சமூகத்தின் வழியாக கற்றுக் கொள்ளப்படுகிறதே அன்றி சுயம்புவாக தோன்றிவிடுவதில்லை.

ஆகவே நாம் சிந்தித்தால் மட்டுமே ‘கடவுள்’ இருப்பார். சிந்திக்கவில்லை என்றால் கடவுள் இல்லை. அதன்படி நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்’. ஆக கடவுளை, ஆன்மாவை, பரம்பொருளை தோற்றுவிப்பவன் மனிதனே அன்றி கடவுள் அல்ல. பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது அனைத்தும் மனித சிந்தனையால் தோற்றுவிக்கப்படும் கனவுலகமே அன்றி உண்மை அல்ல. இந்த கனவுலகின் கற்பனைக்கு கூட யதார்த்த உலகின் அறிவை மூளை கற்றிருப்பது அவசியம்.

அதாவது காட்டில் ஒரு மனிதக் குழந்தையை விட்டு அது தானே வளருகிறது என்றால் அது நாட்டில் இருக்கும் மனிதர்களின் கடவுளை அறியவே முடியாது. அதை அருகில் இருந்து உசுப்பேற்றி சொல்லிக் கொடுப்பதற்கு இன்னொரு மனிதன் வேண்டும். எல்லா மதங்களும் சொல்லும் சொர்க்கத்தின் வசதி, ஆடம்பரம், கேளிக்கைகளைக் கூட இகலோக இன்பங்களிலிருந்தே மனிதன் கற்பித்துக் கொள்கிறான். அல்வாவைச் சாப்பிட்டிருந்தால் மட்டுமே அமுதத்தின் சுவை எப்படி இருக்கும் என்று சிந்திக்க முடியும்.

இயற்கையின் நீட்சியாக நாம் என்றும் இருக்கிறோம். மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோமே அன்றி நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது. அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும். ஆகவே இயற்கை அல்லது பருப்பொருள் என்ற அளவில் நாம் என்றும் மரணிப்பதில்லை. ஆனால் இந்த உண்மையை மனிதனாக இருக்கும் போது மட்டும் உணர்கிறோம். மற்ற பொருட்கள் அப்படி உணர முடியாது. அந்த வகையில் இயற்கை தன்னைத்தானே உணரும் உன்னத பொருள் என்று மனித மூளையைச் சொல்லலாம்.

ஒரு மனிதன் சேகரித்த அறிவும், திறமையும், கருத்தும் அவனது மரணத்தோடு அழிந்து விடுவதில்லை. அவனைச் சுற்றி இருக்கும் மற்ற மனிதர்கள் மூலம் அந்த அறிவு வாழையடி வாழையாக கைமாற்றித் தரப்படுகிறது. ஆகவே நாம் இன்று சிந்திக்கும் விசயமும், கண்டுபிடிக்கும் பொருளும் நாளைக்கு, பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னும் மேம்பட்ட நிலையில் இருக்கும். அந்த வகையில் நமது சிந்தனைக்கும் ‘அழிவில்லை’ இதைத்தாண்டி ஆன்மீகவாதிகள் சொல்லும் பிறப்பற்ற நிலை, முக்தி நிலை என்று எதுவுமில்லை. அவை தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ளும் சுய இன்ப கற்பனைகள்.

இரண்டாவதாக கடவுள் குறித்த கருத்தோ, நம்பிக்கையோ, பற்றோ எதுவும் நமது உயிர் வாழ்க்கையின் நிபந்தனையாக என்றுமே இருப்பதில்லை. நீங்கள் வேலை செய்தால் ஊதியம், ஊதியமிருந்தால் சாப்பாடு, தங்குமிடம், வாழ்க்கை. மற்றபடி எவ்வளவுதான் கவனத்தோடு தியானமோ, நம்பிக்கையோ கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சினைகளுக்கான ஒரு கற்பனையான இடைக்கால நிம்மதியை வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை தரலாம். அதனால்தால் இந்த உலகம் மனிதர்களை வைத்து மட்டுமே இயங்குகிறது, கடவுளை வைத்து அல்ல. அதனால்தான் வீட்டு சாக்கடை அடைத்தால் கூட நகர சுத்தி தொழிலாளிகளைத்தான் அழைக்கிறோமே அன்றி கடவுளை அல்ல. அந்த வகையில் இந்த உலகை இயக்க வைக்கும் உழைக்கும் மக்கள்தான் கடவுள். கருவறையில் உட்கார்ந்து அக்கார அடிசலைக் கூட சாப்பிடத் துப்பில்லாமல் தேமே என்றிருக்கும் கடவுள் வெறும் கற்சிலைதான்.

இறுதியாக நீங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை போராடி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற போராட்ட குணம் வேண்டுமென்றால் இல்லாத கடவுள் குறித்த நம்பிக்கையை அகற்ற வேண்டும். அந்த வகையில் கடவுள் இல்லை என்பது இளமைத்துடிப்புள்ள பண்பாகும். கடவுள் உண்டு என்றால் அது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வேண்டாம் என்று சொல்கிற கிழட்டுத் தத்துவமாகி விடுகிறது.

ஆகவே நீங்கள் இளமைத் துடிப்புடன் எப்போதும் வாழ விரும்புகிறீர்கள் என்றால் கடவுளை புரிந்து கொள்ளுங்கள்…அதாவது இல்லை என்பதை!

  1. // கருவறையில் உட்கார்ந்து அக்கார அடிசலைக் கூட சாப்பிடத் துப்பில்லாமல் தேமே என்றிருக்கும் கடவுள் வெறும் கற்சிலைதான்.
    //

    அக்கார அடிசலைச் சாப்பிடச் சொல்லி அன்புத் தொல்லை கொடுக்கப்படாது என்றுதான் கடவுள் கற்சிலையாக நடிக்கிறார்..

    • என்னது கற்சிலையாக நடித்து கொண்டிருகிறாரா?
      அப்ப, தேவநாதன் அய்யர் சேட்டை செய்யும் போது என்ன பண்ணி கொண்டு இருந்தார்?

      • அவனும் கடவுளை வெறும் கற்சிலையாக நினைத்துத்தான் சேட்டைகள் செய்திருக்கிறான்..

          • அண்ணா அடப்பாவி!

            அம்பி என் சொல்றார்னா..குடுமி வச்சவனெல்லாம் கடவுள் பக்தி கொண்டவனுமில்ல..கருப்பு சட்ட போட்டவனெல்லாம் நாத்திகனும் அல்ல…

            தேவநாதன் உங்கள்ப் போன்ற நாத்திகவாதி..பிழைப்புக்காக குருக்கள்…
            நிறைய கருப்பு சட்டைகள் ஆத்திகவாதி பிழைப்புக்காக நாத்திகவாதி…அதுப்போல…

      • தம்பி அடப்பாவி!!!

        நீங்கள் உங்கள் வீட்டில் சரக்கு அடிக்கிறிங்கனு வைத்துக்கொள்வோம்..உங்கள் தந்தையின் புகைப்படம் மாட்டியிருக்கிறதுனு வைத்துக்கொள்வோம் அப்ப என்னடா உன் அப்பாவுக்கு முன்னாடி கொஞ்சம் கூட மரியாதையில்லாம இப்படி சரக்கடீக்கீறனு நண்பன் சொன்னா…அவன் அறியாமையை கண்டு சிரிப்பீங்களா..? இல்ல தப்புதானு பம்முவிங்கலா..?

        அது மாதிர்தான் தேவநாதன் என்கிற போலி குருக்களின் கதை!!!

        • யப்பா!தூணிலும் இருப்பது துரும்பிலும் இருப்பதாகச் சொல்லப்படுவது கடவுளைத்தானே!

        • எந்தையை யாரும் “அனைத்தையும் அடக்கி ஆளுபவன்” என யாரும் விளம்பரபடுத்தவில்லை…..

        • உண்மையான குருவின் பணி என்ன?

          அவ்ர் பாலியல்ரீதியான எந்த எண்னமும் இல்லையென்றால் அந்த குரு தனது ஆண் குறியை வெட்டி எறிந்து சமநிலை பாலினமாக வாழலாமே?

          அதை ஏன் செய்வதில்லை யாரும்.

          நான் பார்க்கல, அதுனால என் குருவும் தப்பானவர்னு ஒத்துக்க முடியாதுன்னு நீங்க சொல்லலாம்,
          நான் பார்க்கல, அதுனால கடவுளை ஒத்துக்க முடியாதுன்னு நாங்க சொன்னா இம்புட்டு விளக்கம்!

          கடவுளை உனரத்தான் முடியும்னு சொல்றிங்க, ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அழைக்கப்படும் விகேக்கின் குரு தான் காளியை பார்த்ததாக சொல்லியிருக்கார். அவர் அடிச்ச கஞ்சா தான் காரணமா அல்லது அவருக்கு மட்டும் கடவுள் ஸ்பெஷல் ஷோ காட்டிகிட்டு போனாரா!?

          • // அவ்ர் பாலியல்ரீதியான எந்த எண்னமும் இல்லையென்றால் அந்த குரு தனது ஆண் குறியை வெட்டி எறிந்து சமநிலை பாலினமாக வாழலாமே? //

            குரு என்பதற்காக அவர் உக்காந்துதான் மூச்சா போகணும் என்ற நிலைக்கு தள்ளப்படாது..

        • /அது மாதிர்தான் தேவநாதன் என்கிற போலி குருக்களின் கதை!!!\\

          போலி குருக்களா? இவர்களை போலி என்று சொல்லி கடவுள்களை புனித படுத்த வேண்டாம்…..
          நீங்கள் ஹிந்து புராண கதைகளை படிக்கவில்லை என்று நினைக்கிறேன், கடவுள்கள் தான் மிக கீழ்த்தரமான, ஆபாசமாக இருக்கிறது, வேண்டுமென்றால் இந்த லிங்கில் போய் படித்து பாருங்கள் ஆதாரத்துடன் கடவுளின் காம லீலைகளை தெரிந்து கொள்ளலாம். http://thathachariyar.blogspot.in/2011/02/5.html

          திருந்தவேண்டியது தேவனாதனோ இல்லை நித்தியானந்த போன்றோர் அல்ல, இந்த கடவுள்களை நம்பும் மக்கள்….

          • தாத்தாச்சாரியைப் போல, தேவநாதனும் எப்போது தன் பங்குக்கு இணையதளம் ஆரம்பித்து, உங்களுக்கெல்லாம் தான் ’கண்ட’ கடவுள்களை பாதாம்,பிஸ்தா,லேகியம் சேர்த்த மசாலாவுடன் அறிமுகப்படுத்தி வைத்து குஷிப்படுத்தப் போகிறானோ தெரியவில்லை.. ஆனால் நித்திக்கு அந்த அவசியம் இருக்காது, நிறைய துட்டு சேர்த்துவிட்ட நித்திக்கு அரிப்பைத் தீர்த்துக்கொள்ள வேறு வழிகள் இருக்கலாம்…

            • அம்பி, பேச்சை மாற்ற வேண்டாம்,

              இந்து கடவுள்களை பற்றி புராணத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு ரொம்ப ஆபாசமாக இருக்கா, இல்லையா?

              அவற்றை நம்பலாமா, கூடாதா?

      • நடக்கும் நிகழ்வை ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன் பக்தா

        • டெங்குக் கொசுக்கள் குஜால் பண்ணி விருத்தியடைவதையும்தான் பார்த்து ரசிக்கிறீர்கள்.. அதையெல்லாம் கேட்டோமா..?!

        • அம்பி சொன்னது..நிஜ சாமியை…நீங்கள் “காஞ்சிபுரம் மச்சேஸ்வரர்” வேடம் போட்டு அமர்ந்து இருந்தது அம்பிக்கு தெரியாது

  2. அம்பி வந்தாச்சு,
    ஜெயதேவ் தாஸ், சந்தானம், ரிஷி, ஊசி, தியாகு, சுஜித், வடிவேலு மற்றும் சமூகத்தார் எல்லாரும் மேடைக்கு வரவும்

        • இங்கே!
          http://jayadevdas.blogspot.com/

          பாவம் அவரும் எத்தனை நாள்தான் மத்தவங்க ப்ளாக்குகளுக்கு ஹிட்ஸ் ஏத்திக் கொடுத்துக்கிட்டே இருப்பாரு! அதான் சொந்தக் கடையைப் போட்டு வியாபாரம் ஆரம்பிச்சிட்டாரு. மேட்டரு என்னன்னா நான் கூட அவர் பதிவுல இஸ்கான் கோவிலுக்குப் போய் பார்க்கிறேன்னு சொல்லிப்புட்டேன்! உண்மையில் அந்தக் கட்டிடம் ரொம்ப அழகா இருந்தது.

  3. My contribution is this much,

    Does aanmiga nilai and mabbu the same thing?

    even if they are,doesnt the fact that getting something without losing 60 rupees and abusing your liver count for something.

    The worst part is,this is the advice vinavu gives poor people who waste money on liquor.

    Neenga ellam eppadi thaan collara thooki vuttukkureengannu puriya maatengudhu?

  4. and Vinavu there is difference between thinking and feeling,

    You think with your brain and you get intuition by feeling,

    mudiyalana,vutrunga,edhukku ippadi aazham theriyaama kaal vudreenga?

    • thinking and feeling கும் அப்புறம் அதுக்கு மேல intuition இதெல்லாம் எங்கிருந்து வருதுன்னு யோசிக்க மாட்டீங்களா?

        • உங்கள் திருத்தத்தில் உங்களையும் அறியாமல் ஒரு மாபெரும் தத்துவ விசாரத்துக்கு வித்திட்டுவிட்டீர்கள்.. “நான் இல்ல, ஏன்” என்பதை கேள்வியாகக் கொண்டால், பதில் -“இருப்பது அது மட்டுமே – நான் என்பதே அதுதான் – தத்வம் அஸி” என்ற வேதாந்த சாரம் யாதுமான பரம்பொருளை எளிதாக விளக்குவதை உணர்ந்து தெளியலாம்.. இந்து மதத்தின் வேதாந்தம் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குவதாயிருந்தால், “நீ இல்லாத இடமேயில்லை” என்ற இஸ்லாமீய கீதத்தை, பாய் ஆகாமலேயே சிந்தித்துப் பார்த்து தெளிவடையலாம்..

          • // தத்வம் அஸி//

            இது என்ன மொழி, அரபியா?

            நான் அங்கே ஒரு எழுத்து பிழை செய்துவிட்டேன், அதற்கான வியாகியானம் பிழை தான் கடவுள் என்பது போல் இருக்கு உங்களிடமிருந்து.

            என்ன செய்ய உங்க வளர்ப்பு அப்படி!

            • உங்கள் பதில் எனக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது…

              வடமொழியான தத்வமஸி என்பதன் பகுப்பு :

              தத் – அது (எங்கும், எப்போதும் ’இருக்கும்’ பரம்பொருள் )
              த்வம் – சுயம்/நான்
              அஸி – ஆவது / இருப்பது

              நானே அது – என்று தன் முனைப்புடன் பொருள் கொள்ளலாம்..

              நானாக இருப்பதும் அதுவே – என்று பொருள் கொள்வதே சரியானது என்பதே என் கருத்து..

  5. //அதன்படி நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்

    அவைகள் சிந்திப்பதே இல்லை என்று எந்த மூளை சிந்தித்து உங்களுக்கு சொன்னது.

    • ரெண்டு மச்சக் காளைகள் அசை போட்டபடியே “இந்த காராம் பசு என் காலை வாரிட்டாடா, மச்சா” என்று பேசிக் கேட்டிருக்கிறீர்களா..?! குரங்குகள் ஜோக்கடித்துப் பேசி சிரித்துப் பார்த்திருக்கிறீர்களா..?! (அவை பல்லைக் காட்டினால் அது சிரிப்பல்ல, பயம்/கோபம் என்று உங்களுக்கே தெரியும்). “இவ்வளவு நேரமா வாலாட்டுறேன், எல்லா பிஸ்கோத்தையும் இவனே தின்னுபுடுவான் போலருக்கே” என்று மனிதர்களைப் பார்த்து நாய் குற்றம் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா..?! “இத்தனை நாள் நல்லாத்தானே இருந்தான், இன்னைக்கு வெட்டப்போறானாமே,மேமேமே” என்று ஆடு புலம்பி, கூப்பாடு போடுவதைக் கேட்டிருக்கிறீர்களா..?!

      இல்லை, முடியாது.. சரி போகட்டும்..

      நீ சிந்திக்கிறாயா..? என்று இந்த ஜீவராசிகளிடம் கேட்டால் ஆமாம் என்று கூட தலை ஆட்டுவதில்லையே.. (இந்த 2 கால் பிராணி என்னிடம் வந்து ஏதோ முனகுகிறதே, ஒரு எழவும் புரியலையே என்று அவைகள் சிந்தித்தாலும்) மனுசனுக்குப் புரியும்படி பதில் கூறுவதில்லையே..!!!

      ஆக மொத்தம் இவைகள் சிந்திக்கின்றன என்று இவைகளால் மனிதனிடம் நிரூபிக்கமுடியவில்லை.. ஆகவே அவை சிந்திப்பதில்லை..

      எப்படி நம்ம சிந்தனை..?!!!

      • Neenkhal sinthani alavukole sollukinrerkala illai sinthanaiye seivathu illai enru solkinreerkala.. Nayai kal yeduthu adikum pothe bayanthu odukinrathe athu sinthanai illaiya.. kanru pasi edukum pothu thai madi thedi oduthe athu sinthikamala varum.. melum thanai valartha all iranthu vittal nayum kuthirayum 1 varathukul irantha kathai nerilo allathu padithathu illaiya.. Unkal mozhi theriyathavanidam nee muttal enru sonnal kooda pei mulithan mulipan athanal avan sinthani illathavan akkiduvanah..

        • அவைகள் நம்மைப் போல் சிந்திப்பதில்லை.. அவைகள் சிந்திக்கின்றன என்று நாம், நம்முடைய அளவீட்டுக்கருவிகளை கொண்டு மதிப்பீடு செய்து பார்த்து, ஏற்றுக் கொள்வதும் இல்லை.. இதுதான் பிரச்சினை.. ஜிம் கார்பெட்டின் புத்தகங்களைப் படித்தால் எப்படி புலிகள் கைதேர்ந்த ஒரு வேட்டைக்காரனுக்கு ஒரு படி முன்னாலேயே திட்டமிடுகின்றன என்பது வியப்பைத் தரும்..

      • //எப்படி நம்ம சிந்தனை..?!!!//

        வெளங்கிடும். நகரமாயமாக்கலின் விளைவாக நகரத்து நாய்கள் ரோட்டை கிராஸ் செய்யும்போது கவனித்திருக்கிறீர்களா:)) அவைகளின் சிந்தனைகள் குறிப்பிட்ட வரம்பிற்குள் உள்ளன என்று வேண்டுமானால் சொல்லலாம்.

        • மனிதர்களின் சிந்தனையானது வளர்ந்து, பேச்சு அதன்பின் குறியீடுகள்,மொழி,எழுத்து என்னும் தொடர்புக் கருவிகளால் முறைப்படுத்தப்பட்டது. இவ்வகை தொடர்புக் கருவிகள் இல்லாத விலங்குகள் சிந்திப்பதில்லை என்ற முடிவுக்கு வருவது சரியானதுதானா என்றுதான் கேட்டிருக்கிறேன்..!!!

            • ஏன் கேட்கிறீர்கள்..?! இதுவும், இதை வலுவிலக்கச் செய்யும் extinction என்ற முறையும் முறையே உந்துதலைத் தூண்டவும், எந்த தூண்டலையும் ஏற்படுத்தாத பழைய நிலைக்குக் கொண்டுவரவும் முடியும்..

              • தாங்கல் சொல்லும் விலங்குகளுக்கான சிந்தனை கன்டிசனல் ரிப்லெக்ஸ் என்ற வரையரைக்குள் வருமா? வராதா?

                • எப்படி வரும் என்று உறுதியாகக் கூறமுடியும்..?! வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா..? தொடர்ந்து அவதானிக்கவும்.. கண்டிசனல் ரிப்லெக்ஸையும் தாண்டி அவற்றின் நடத்தை இருக்கிறதா என்று கண்காணித்துச் சொல்லுங்கள்..

                  • சிந்தனை என்பதற்க்கான வரையரை என்ன

                    வாழும் சூழ்னிலைக்கு ஏற்ப தன் உடம்பை மாற்றி கொள்வதை
                    சிந்தித்து தான் மாற்றியது என்பீர்களா.

                    • behavioural change, physiological change – இரண்டையும் குழப்புகிறீர்கள்..

                      சிந்திப்பதால் உடல் நலத்திலும், வலிமையிலும் மாற்றம் ஏற்படலாமே தவிர உடலின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றமுடியுமா என்று தெரியவில்லை..

                      குரங்கினத்திலிருந்து மனித இனமாக ஒரு திடீர் விபத்தால் மாறியதிலிருந்து மனித இனத்தினர் சிந்திக்கத் தொடங்கினார்கள் என்பது எவ்வளவு அபத்தம்..?! பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சியில் விலங்கினம் சிந்திக்கத் தொடங்கியதா இல்லை மனித இனம் வந்தபின் தான் சிந்தனை தொடங்கியதா என்ற கேள்வி எழுகிறது..

                      விலங்கினம் சிந்திக்கத் தொடங்கியது என்றால், விலங்குகள் சிந்திப்பதில்லை என்னும் உங்கள் வாதம் தவறு..

                      மனித இனம்தான் சிந்திக்கத் தொடங்கியது என்றால், உங்கள் வாதப்படி, சிந்திப்பதற்குமுன் இருந்த மனித இனம், ’சிந்திக்க இயலாத’ விலங்கினமாக வரையறுக்கப்பட வேண்டும்.. அதாவது, இந்த விலங்கினம் சிந்தித்தால் அன்றி மனித இனமாக முடிந்திருக்காது..

                      விலங்கினம் சிந்திக்க முடியுமா, இல்லையா என்று இப்போது சொல்லுங்கள்..

                    • @அம்பி

                      behavioural change, physiological change,conditional reflex .

                      மேற்ச்சொன்ன மூன்று சொற்களையும் விளக்க முடியுமா.
                      or
                      behavioural change
                      என்றும் சிந்தனை என்றும் நாம் எப்போது வரையரை செய்யலாம் ??
                      ஒரு சிம்பன்சி கண்ணாடியை பார்த்து அதில் தெரிவது தன் உருவம் தான் என்பதை கண்டு பிடிப்பதையும்,
                      நாய்கள் ரோட்டை கிராஸ் செய்யும்…
                      போன்ற விசயம் சிந்தனையா

                      அல்லது இயற்க்கைக்கு ஏற்ற மாறி தம்மை மாற்றாமல் இயற்க்கையை புரிந்து கொண்டு அதை மாற்ற துணிவது சிந்தனையா
                      அல்ல
                      வியாதி இறைவன் சாபம் என்று சொல்லமல் யெதோ குறை என்று துணிவது சிந்தனையா

                    • nagaraj,

                      சிந்தனையின் வரையறை என்ன என்று விவாதிக்கத் தொடங்கினால் அதற்கு ஒரு தனி இழை வேண்டியிருக்கும். சிந்திக்கும் விலங்குகளில் மனிதன் பிற விலங்குகளைவிட அதிக வித்தியாசத்தில் முதலிடத்தில் இருக்கிறான் என்று கூறலாமே தவிர மனிதன் மட்டுமே சிந்திக்கும் விலங்கு என்று கூறமுடியாது என்பதுதான் என் கருத்து.. உங்களால் ஏற்க முடியவில்லை என்றால் வாய்ப்பு கிட்டும்போது விரிவாக விவாதிக்கலாம்..

          • உந்தப்படும் உள்ளுணர்வினாலேயே பல செயல்களை விலங்குகள் செய்கின்றன எனக் கருதுகிறேன். அவற்றை சிந்திப்பது என்று சொல்ல முடியாது. ஆனாலும் சிந்திப்பதே இல்லை என்றும் முடிவு கட்ட முடியாது. நமது சிந்தனைத் திறனோடு, நம் மூளையின் சக்தியோடு ஒப்பிடும்போது அவற்றின் திறன் Negligible அளவே! மனித சிந்தனையானது வளர்ந்துகொண்டே இருக்கிறது.. அல்லது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் விலங்குகளுக்கு எப்படி விதிக்கப்பட்டதோ அப்படியே அவை எப்போதும் இருக்கின்றன.

            • விலங்குகளும், இடம் பெயர்ந்து வேறு புதிய சூழலில் வேட்டையாட நேரும் போது அவற்றின் வேட்டை முறைகளையும், வியூகங்களையும் மாற்றிக் கொள்ளும் அளவு திறன் படைத்திருக்கின்றன..

  6. இது ஒன்றும் அறிவு சார்ந்த கட்டுரையாகவோ அல்லது பதிலாகவோ தோன்றவில்லையே ..?

  7. கேட்ட கேள்விக்கு மையமான பதிலாக எனக்குப் புலப்படவில்லை. பொதுவாக கடவுளின் இருப்பையே மீண்டும் கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகப் படுகிறது. ஆன்மா, உயிர், ஆவி நிலை, புலன்களால் உணரப்படா உலகம் போன்றவற்றை விரிவாக அலசியிருக்கலாம்.

    அதாவது கடவுள் எனும் கான்ஸெப்ட் தாண்டி அறிவியலாளர்களே வியக்கும் பல அதிசயங்கள் நடந்துள்ளன.. நடக்கின்றன. பூர்வ ஜென்ம நினைவுகள், மூளைக்குள் பொதிந்திருக்கும் நாமே அறிந்திராத விடயங்கள், தூரத்தில் நடப்பவற்றை அகத்தில் காணுதல், இன்னபிற.

    இவையெல்லாமே மூளை நிகழ்த்தும் கற்பனைக் காட்சிகள்தான் என்று புறந்தள்ளிவிட்டுச் செல்ல முடியவில்லை.

      • அன்புள்ள வால்,
        முன்ன மாதிரி அதிக நேரம் கிடைக்கிறதில்லை உரையாடுவதற்கு. மன்னிக்கவும்.
        மூன்று மாதங்கள் இப்பக்கமே வராமல் கடந்த ஓரிரு வாரங்களாகத்தான் அவ்வப்போது தலைகாட்டி வருகிறேன். வாழ்க்கையில் நிறைய தலைகீழ் மாற்றங்கள்!!

  8. ஆகவே நாம் சிந்தித்தால் மட்டுமே ‘கடவுள்’ இருப்பார். சிந்திக்கவில்லை என்றால் கடவுள் இல்லை. அதன்படி நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்’. proved yourself that you are animals

    • வினோத் அருமை…!

      இதன் பெயர்தான் பகுத்தறிவு …மிக நன்றாக பகுத்து அறிந்து பதில் சொன்னீர்கள்!

      • என்னது பகுத்தறிவா? வினோத் எப்பொழுதும் இப்படிதான் வினவு பதிவுகளை எதிர்க்க வேண்டுமென்று பேசுவார்…

        இந்த வரிகளை திரும்ப படித்து பாருங்கள்….

        // நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்’.//

        எங்களைபோலதான் விலங்குகளும் நாத்திகர்கள் என்று உள்ளதே தவிர, விலங்குகளை போல் நாத்திகர்கள் என்று சொல்ல வில்லை…..

        ஆரம்பத்தில் மனிதன் சிந்திக்க ஆரம்பித்த பின்பு, விளங்க முடியாத இயற்கையை பார்த்து, ஏதோ ஒரு சக்தி இருபதாக நினைத்து தான் கடவுள் என்பதை உருவாக்கினான், //காட்டில் ஒரு மனிதக் குழந்தையை விட்டு அது தானே வளருகிறது என்றால் அது நாட்டில் இருக்கும் மனிதர்களின் கடவுளை அறியவே முடியாது.//

        காட்டில் விட்டால் நாட்டில் இருக்கும் கடவுள்களை பற்றி அறிய மாட்டான், ஆனால் அவனே ஒரு கடவுளை உருவாக்குவான். இன்று கூட பல பழங்குடி மக்கள் நிச்சயம் ஏதோ ஒன்றை கடவுளாக வணங்குவதை பார்க்கலாம். (ஆதி காலத்தில் இருக்கும் ஒவ்வொரு மனித நாகரீகத்திலும் பல்வேறு விதமான கடவுள் நம்பிக்கை இருபதை பார்க்கலாம் ) கடவுள் கூட மனிதன் சிந்திக்கும் திறனின் ஒரு வளர்ச்சி என்று வைத்து கொள்ளலாம், ஆனால் இவ்வளவு அறிவியல் வளர்ந்த பிறகும் கடவுளை நம்புவது மிக மிக மூட தனம்.

        எங்கோ மனித நாகரீகம் வளராத தீவில் வாழும் மனிதனின் அறிவு வளர்ச்சி எவ்வளவோ, அவ்வளவுதான் கடவுளை நம்பும் மனிதனின் அறிவு வளர்ச்சியும்.

        நாங்கள் எங்கள் பகுத்தறிவை வைத்து அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டோம் நீங்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி இருக்க போறீங்க?

    • சில விஷயங்களை நன்கு சொல்லிவிட்டு கட்டுரையாளர் இவ்விடத்தில் சற்றே இடறி விட்டார்.. 🙂
      கணக்கு வாத்தியார் எல்லாவற்றையும் போட்டு கடைசியில் Hence proved என்று முடிப்பார். அது போல ஆகிவிட்டது.

    • சமூக விலங்குகள் என்பதை கூட நான் ஒத்துகிறேன், ஆனால் யாருக்கும் அடிமை என்பதை தான் ஒத்துக்க முடியல.

      அனிமல்ஸ் நாட் அடிமைஸ்

      • **அனிமல்ஸ் நாட் அடிமைஸ்**

        அசைவ மிருகங்களுக்கு சைவ மிருகங்கள் என்ன சமதர்ம்ம வாதிகளா..?

        வலுவுள்ள மிருகம் வலுவில்லா விலங்கை அடிமைப்படித்தான் வைத்துயிருக்கின்றன…

  9. வினவு…

    கடவுளையும் ஆன்மாவையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இரண்டுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆன்மா, தியானம் பரவசம் இவைகளை ஆன்மீகத்தோடு இணைத்துக் கொள்வது எல்லாரும் செய்யும் தவறு. தியானம் என்பது ஒருவிதத்தில் அறிவியல் தான்.வெளியுலகம் எதானால் ஆக்கப்பட்டது என்பதை அறிவதை விட எனக்குள்ளே என்ன இருக்கிறது என்று அறிய ஒருவன் முனைந்தால் அதுதான் ஆன்மிகம். இங்கே எந்த இடத்தில் கடவுள் வருகிறார் என்று தெரியவில்லை. கடவுள் உண்டு என்று சொல்வது அறியாமை என்றால் கடவுள் இல்லை என்று சொல்வது அறியாமையின் மறுபக்கம் அவ்வளவே. கடவுள் இல்லை என்பதை நீங்கள் எங்கோ படித்திருப்பீர்கள். நாத்திக வாதிகள் , பெரியார் போன்றவர்கள் சொன்னதை அப்படியே ஒப்பித்திருப்பீர்கள்.இரண்டின் பக்கமும் சாயாமல் நடுநிலையாக நான் கண்மூடி எனக்குள் பயணிப்பேன்… ஆன்மா உண்டா நான் அழிவில்லாதவனா மரணம் உண்டா என்பதை அனுபவரீதியாக உணர்வேன் என்று ஒரு பத்து நிமிடம் தியானத்தில் அமர்ந்திருந்தால் அது தான் புத்திசாலித்தனம். நான் தான் கடவுள் என்று சங்கரர் அறிவிக்கிறார். நான் தான் அனைத்தும் கடவுள் இல்லை என்கிறான் மஞ்சூர். இது அவர்கள் வெறுமனே கடன் வாங்கிய அறிவல்ல. தங்களுக்குள் பயணித்து உணர்ந்து கொண்ட அனுபவ உண்மை. எனவே இந்த சோ கள்ளேந்து நாத்திக வாதிகள் குறைந்த பட்சம் இந்த சுய தேடலை மேற்கொள்ள வேண்டும். நான் என்பது வெறுமனே இந்த உடல் தானா? கார்பன் தானா? இதைத் தாண்டி எனக்குள் ஏதேனும் இருக்கிறதா? மரணத்தின் பின் நான் பூஜ்ஜியம் தானா? இல்லை பூஜ்ஜியத்தினுள் ஏதேனும் ராஜ்ஜியம் இருக்கிறதா என்றெல்லாம்.எனவே ஆன்மீகம் என்ற அறிவியலை மதவாதத்துடன் இணைத்து குழம்பிக் கொள்ளாதீர்கள். தவறான பிரச்சாரம் செய்யாதீர்கள்.

    பக்தி ,பரவசம் இவையெல்லாம் மூளையின் வேலை தான் என்று நீங்கள் சொன்னால் well and good . இருக்கட்டுமே அதனால் என்ன?சிகரெட் மூலமோ போதை மருந்து மூலமோ கிடைக்கும் செயற்கையான ஆபத்தான பரவசத்தை விட இது better தானே?அனுபவித்துக் கொண்டு போவோமே இந்த இயற்கை போதையை? இதற்கு இன்னொரு வெளிப்பொருளை சார்ந்திருக்கும் அவசியம் இல்லை பாருங்கள். யாரேனும் ஒரு முட்டாள் விஞ்ஞானி இதற்கும் மூளையில் நடக்கும் வேதி வினைகள் பற்றிய சமன்பாடுகளை கண்டுபிடிப்பார். அதனால் நமக்கு என்ன?
    நாம் மூளை தந்த பேரானந்தத்தை அனுபவிக்கலாமே?

    • ஆன்மிகம் என்ற பெயரே ஆன்ம + இகம், ஆன்மா தங்கியிருக்கும் இடம் எனும் பொருள் பொதிந்தது. ஆன்ம அறிவியலின் நுணுக்கங்களை பௌதீக அறிவியலே வியக்கும் வரலாற்று சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. கடவுள், மதங்கள் போன்ற கான்ஸெப்டுகளை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இவை தாண்டி பல புதிரான விஷயங்களும் உள்ளன. அவற்றை நம் மூளை கொண்டு ஆராய்ந்து பார்ப்பதில் தவறில்லை. மனித வாழ்க்கைக்கு இவையெல்லாம் சுவாரஸியம் தருவன. அவற்றையும் கடவுள் நம்பிக்கையுடன் இணைத்து முற்றுமுதலாக ஒழித்துக்கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

  10. கடவுள் இல்லை என அணித்தரமாக சொல்லும் கட்டுரையாளரின் ஆறாவது அறிவை தண்ணீர் தெளித்து எழுப்புவது நமது கடமை!!! இதை படிங்க…

    “இதே இடத்தில் ஒரு மலர் மாலையை நீங்கள் பார்க்கிறீர்கள். இது என்னவென்றால் முல்லைப்பூ என்று சொல்வதற்கு எல்லோருக்கும் தெரியும். இது எங்கே கிடைக்கிறது என்று கேட்டால் கடையில், எங்கே உற்பத்தி என்றால் நந்தவனத்தில், என்ன விலை என்றால் அதற்கு சரம் இன்னவிலை என்று பொருள். இத்தனையும் சொல்லுகின்ற நீங்கள் இதனடைய மணம் என்ன என்று கேட்டால் நல்ல வாசம் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, முல்லையுடைய வாசத்தை விவரமாக வார்த்தையால் சொல்ல முடியுமா?

    அதே போல் ஒரு ரோஜாப்பூ. ரோஜாவினுடைய நிறம், இதழ், விலை சொல்லலாம். அதனடைய வாசம் என்னவென்று கேட்டால் அதை சொல்வதற்கு வார்த்தை உண்டா?

    ஒரு ரோஜாவை நுகர்ந்து பார் என்று தான் சொல்லலாம். நிறத்தைச் சொல்லாம், உள்ளே விதை இருக்கும் என்பதை சொல்லாம், விலை சொல்லலாம், அதனுடைய ருசி என்ன என்றால் புளிப்பு என்று சொல்லலாம். புளிப்பு எப்படி இருக்குமென்றால் சொல்வதற்கு வார்த்தை உண்டா? ஒரு பழத்தை நீ ருசித்துப்பார் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.

    இம்மாதிரி கேவலம் சாமான்யமான வாசகங்களுக்கும், சாமான்யமான சனைகளுக்கும், சாமான்யமான ருசிக்கும் சொல்வதற்கு வார்த்தை இல்லை என்கிற நிலைமையில்,

    உலகத்தின் உணர்ச்சி இருக்கிற பொழுது உணர்வால் தெரிய வேண்டிய விஷயங்களை உரையால் புகுத்த வேண்டும் என்று காண்கிற்ற இடம் எவ்வளவு மேல்படி என்று நீங்களே உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அம்மாதிரியான நிலையை அடைவதற்கு இம்மாதிரியான அடிப்படையை நாம் கையாள வேண்டியது மிக அவசியம்.- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரவர்கள் 1959 அக்டோபர் 10-ம் நாளன்று பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோயில் 12-வது நவராத்திரி ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.”

    கடவுள் பற்றி விளக்க சொல்லும் கட்டுரையாளர் உணரமுடிந்த ஒரு பூவின் வாசத்தை…ஒரு பழத்தின் வாசத்தை விளக்கி சொல்லட்டும் பார்க்கலாம்… நன்றாக தண்ணீர் தெளித்துவிட்டோம் ஆறாம் அறிவு இனியாவது விழிக்கட்டும்..

    • அதான் புளிப்புன்னு சொல்லியாச்சேய்யா அப்புறம் எப்படின்னு சொல்லனும். வேனுமின்னா புள்ள்ள்ள்ளிப்புன்னு சொல்லிக்கோங்கோ. ரோசாப்பூவை முகர்ந்தால் வரும் வாசத்தை ரோசாப்பூ மணம் என்று சொலுங்க, மல்லிகைப் பூவிற்கு மல்லிகைப் பூ மணம் என்று சொல்லுங்க. இதுக்கெல்லாம் ஒரு விளக்கம் வேணுமா? முகர்ந்தால் குமட்டல் வராமல் இருந்தால் அது நாற்றம். குமட்டல் வந்தால் அது துர்நாற்றம். இதுக்கு ஆறாவது அறிவு தேவையா. வேணுமின்னா கழுதைக்கு பின்னாடி நின்னுகிட்டு முன்னாடி கற்பூரத்த காட்டிப் பாருங்க.

      • பிரகாஷ் அண்ணா..!!

        அதான் கடவுளுனு சொல்லியாச்சே..!அப்புறம் எப்படின்னு சொல்லனும்..வேனுமின்னா ‘உள் கட உள் கட’ சொல்லிக்கோங்கோ …கடவுளை உணர்ந்தால் வரும் பரவசனிலையை ஞானமுனு சொல்லுங்க..கடவுளை உணர்ந்தால் கடவுளை உணர்ந்தானு சொல்லுங்க..இதுக்கெல்லாம் ஒரு விளக்கம் வேணுமா? உணர்ந்தும் ஞானம் வராமல் இருந்தால் அது நாத்திகம். உணர்ந்து ஞானம் பெற்று இருந்தால் அது ஆத்திகம். இதற்கு அறிவு தேவையா..? வேணுமின்னா கழுதைக்கு பின்னாடி நின்னுகிட்டு முன்னாடி கடவுள் இல்லையினு பேசி காட்டிப் பாருங்க.

        • பிரகாஷ் அண்ணா..!

          கடவுளை விளக்கி சொல்லுங்கனு கேட்டா.. அதற்கு நாங்கள் எப்படி ஒரு பூவின் வாசத்தை ஒரு பழத்தின் சுவையை விளக்கி வார்த்தையால் சொல்லயிலாதோ அதுப்போல் கடவுளையும் வார்த்தையால் சொல்ல இயலாது..!!!

          முல்லை பூ வாசம் மாதிரி… டாபூல் பர்கர் சுவையாயிருக்கும் ( இப்படி சொன்னா உங்களுக்கு புரிதாங்கண்ணா..???)

          • //சொல்ல இயலாது //அது சரி

            அவர் தேவையா இல்லையா

            அதையாவது சொல்ல இயலுமா

            இந்த நம்பிக்கை அது இதுன்னு சொல்லாம வேதத்தில் இருந்தொ இல்லை அத்வைதத்தில் இருந்தொ சொல்லவும்.

      • //ஒருவேலை கடவுள் மோந்து பார்த்தா தான் தெரிவாறோ//தல மோர்ந்து பார்த்தா தெரிவார் தல அதான் சந்தனம் பூசி வச்சிருக்காங்களே

        • இன்னும் பல விசயங்கள் அதே மஞ்சள் நிறத்தில் இருக்கே. அதிலுமா கடவுள் தெரிவார். எனக்கு இப்பவே கப்படிக்குது போங்க தக!

    • ரோஜா மணம் 300 வேதிப்பொருட்களின் கலவை…(citronellol, geraniol, nerol, linalool…..)

      பழத்தின் இனிப்பு குளுகோஸ்… C6H12O6

      கடவுள்?

  11. நீங்கள் வினவு தளத்தை படிக்கிறீர்கள்..இந்த தளம் உருவாக்கப்பட்டது யாரால் என உங்களுக்கு தெரியும்..!

    இங்கு உள்ள கட்டுரைகளும் தானாக உருவாகியதில்லை அதை உருவாக்கியவர் கண்டிப்பாக இருக்கிறார்..!

    இங்குள்ள மனித இனத்தை உருவாக்கும் விந்து அந்த விந்தை உருவாக்கும் செல்கள் அந்த செல்களை உருவாக்கும் புரோத சத்து..அந்த சத்துக்காண உணவு..அந்த உணவாய் மாறும் தாவரம்..அந்த தாவரத்தை தாங்கும் நிலம் நீர் யாவும்… பரம்பொருள்..பரம்பொருளே..

    சொல்வது சரிதான்! கட்டுரையாளர் கூறுவதைப்போன்று பருப்பொருள் என்று ஓன்றுமில்லை…

    • //இங்கு உள்ள கட்டுரைகளும் தானாக உருவாகியதில்லை அதை உருவாக்கியவர் கண்டிப்பாக இருக்கிறார்..!//

      -அப்ப கடவுளை உருவாக்கிய கடவுள்???

      ASUME A SITUATION SOMEBODY IS COMING TO CUT YOUR WITH SWORD
      //பருப்பொருள் என்று ஓன்றுமில்லை // THAT MEANS SWORD IS AN ILLUSION ,MAN IS AN ILLUSION

      • yeah but if u r watching this from space,it is nothing much.

        If two ants are fighting each other to death,how much ll u care abt it.

        Thats the crudest way,i can explain it.

        • அண்ணா அது
          //பருப்பொருள் என்று ஓன்றுமில்லை //
          என்ற கருத்துக்கு விளக்கவுரை

          பொருள் ஏன்று ஒன்று இருக்கா இல்லையா அதுக்கு பதில் சொல்லுங்க.

          அப்புரம் அந்த பொருள் தேவையா இல்லையா என்று பேசலாம்

      • உருவமில்லாமை..வெற்றிடம் அது உருவாக்கப்பட்டதில்லை அது அங்கேயே இருப்பது..!!!

        இந்த உலகம் என்பது பொருள்… மனிதன் ..மிருகம்.. சூரியன்…தாவரம்…வெறும் பொருள்கள்….பொருளை மட்டுமே உருவாக்க முடியும்.கடவுள் என்பது பொருள் அல்ல…தனித்தநிலை..

        ஆகாயம் என்பதை உருவாக்க வேண்டியதில்லை..அது அங்கேயே இருப்பது..!!

        பின்:
        உருவத்திலிருந்து அருவம் அதுவே கடவுள்…அத்வே அத்வைதம்…ஆகாயம் – உருவமில்லாமை..வெற்றிடம் அது உருவாவதில்லை அது அங்கேயே இருப்பது..!!!

        • முதலில் //பருப்பொருள் என்று ஓன்றுமில்லை…// என்றும்

          பின்பு

          //உருவமில்லாமை..வெற்றிடம் அது உருவாக்கப்பட்டதில்லை அது அங்கேயே இருப்பது..!!!

          இந்த உலகம் என்பது பொருள்… மனிதன் ..மிருகம்.. சூரியன்…தாவரம்…வெறும் பொருள்கள்….பொருளை மட்டுமே உருவாக்க முடியும்.கடவுள் என்பது பொருள் அல்ல…தனித்தநிலை..//

          • பரம்பொருள் என்ற சொல் யாவரும் அறிந்ததே..பருப்பொருள் என்ற வார்த்தை தமிழில் அகராதியிலேயே இல்லை… அதனால்தான் //பருப்பொருள் என்று ஓன்றுமில்லை…// என்று சொன்னோம்..!!!

            வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சி எழுதுங்க பாஸ்

        • தத்துவார்த்தமாய் பின்னிப் பெடலெடுக்கிறீங்க..! 🙂
          வழக்கமா வரக்கூடிய மன்னாரு, குயாதி போன்றோரைக் காணோமே! 🙂
          தப்பா எடுத்துக்காதீங்க நண்பா…

            • I replied to Thiyagu only. to 13.1.2.
              அவர்கள் எப்போதுமே தியாகுவை கலாய்த்துக்கொண்டிருப்பார்கள். அதுதான் சொன்னேன். நீங்க தொடர்ச்சியா படிக்கறதில்ல போலிருக்கு.

        • //ஆகாயம் என்பதை உருவாக்க வேண்டியதில்லை..அது அங்கேயே இருப்பது..!!//
          எங்கேயே இருப்பது ?
          சிரிப்பு மூட்டாதிங்க பாஸ் ….

    • உலகத்தை உருவாக்கும் முன்னர் கடவுள் எதை சொறிஞ்சிகிட்டு இருந்தார் என்ற சந்தேகம் என் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு வந்திருக்கு!

      • கடவுள் சொறிந்து கொண்டேதான் உலகத்தைப் படைத்திருப்பாரோ என்ற சந்தேகம் உங்கள் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு வந்ததற்குக் காரணம் நீங்கள்தான்.. கண்ணாடி முன்னாடி நின்று சொறிவதை நிறுத்தினால் கண்ணாடியின் சந்தேகம் காணாமல் போய் நிம்மதியடையும்.. 🙂

        • அம்பி ! இவர்கள் பெரியார் சொன்னதை அப்படியே கடைப்பிடிப்பவர்கள்..அதனால்..அடிக்கிற வெயில வாரம் ஒரு முறைதான் குளிப்பார் போல…இப்படி சுத்தமில்லாம இருந்தா சொறியாம என்ன பண்ணுவார்…. பாஸ் பாத்து சொறிங்க செரங்கு வந்துடும்..அப்புறம் நாத்திகம் தெரிந்த மருத்துவரா பாத்து ஓடனும்.

      • சொறிந்துக்கொண்டே எழுதுவது..மூக்கை விரலால் சொரண்டிக்கொண்டே சாப்பிடுவது..காதை சுண்டு விரலால் கிளரிக்கொண்டே புத்தகம் படிப்பது..நகம் வெட்டாமை..ஏன் பாஸ் பெரியாரை
        ஞாபகப்படுத்துறீங்க..?
        எங்க வீட்டுநிலைக்கண்ணாடியில் எங்க தாத்தா வைத்த பெரியார் படம்தான் இருக்கு…அவர் மனநிலை சரியில்லாம இருந்த காலத்துல..அதை அங்கு வச்சார்..இன்னும் மனநிலை சரியில்லாமதான் இருகார்..!!!

        • உங்களை போல் பேரன்களை(உங்க சகாக்களையும் சேர்த்து) வைத்து கொண்டு வேற எப்படி இருக்க முடியும்?

          ஆனால் அதில் உங்களுக்கு இருக்கும் பெருமையில் உங்களிடம் இருக்கும் மனிதம் தெரியுது. பாவம் உங்க தாத்தா. அட்ரஸ் கொடுங்க நாங்களாவது கூட்டிபோய் பார்த்துகிறோம்.

  12. நீங்கள் வினவு தளத்தை படிக்கிறீர்கள்..இந்த தளம் உருவாக்கப்பட்டது யாரால் என உங்களுக்கு தெரியும்..!

    இங்கு உள்ள கட்டுரைகளும் தானாக உருவாகியதில்லை அதை உருவாக்கியவர் கண்டிப்பாக இருக்கிறார்..!

    இங்குள்ள மனித இனத்தை உருவாக்கும் விந்து அந்த விந்தை உருவாக்கும் செல்கள் அந்த செல்களை உருவாக்கும் புரோத சத்து..அந்த சத்துக்காண உணவு..அந்த உணவாய் மாறும் தாவரம்..அந்த தாவரத்தை தாங்கும் நிலம் நீர் யாவும்… பரம்பொருள்..பரம்பொருளே..

    சொல்வது சரிதான்! கட்டுரையாளர் கூறுவதைப்போன்று பருப்பொருள் என்று ஓன்றுமில்லை….

  13. *** நீங்கள் வேலை செய்தால் ஊதியம், ஊதியமிருந்தால் சாப்பாடு, தங்குமிடம், வாழ்க்கை. மற்றபடி எவ்வளவுதான் கவனத்தோடு தியானமோ, நம்பிக்கையோ கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடாது***

    இதைதான் பெரியார் புராணம் படித்தவர்கள் வாழ்வின் எதார்த்தம் என்கிறார்கள்.
    இதைதான் பெரிய புராணம் படித்தவர்கள் வாழ்வின் விதி என்கிறார்கள்.

    • விதி என்று ஒன்று இருந்தால் கடவுள் எதற்கு? என்ன பண்ணாலும் நடப்பது தானே நடக்கும்! நாங்க கடவுள் மறுப்பாளர்களாக இருப்பதற்கும் அதானே காரணமாக இருக்கனும். அப்போ கடவுளுக்கு படைப்பு சிக்கல் இல்லையா. அதை கூட ஒழுங்கா செய்யத்தெரியாத கடவுள், காத்தலை மட்டும் ஒழுங்கா செய்வான்னு எப்படி நம்புறது!?

    • நாத்திகர்கள், ஆத்திகர்களாக மாற முடியாமல் தடுப்பது இந்த “விதி“ தான்.

      ஒரு வாகன விபத்தில் ஒருவர் இறந்து விட்டால், உடனே விதி முடிந்தது என்று சொல்லி விடுவார்கள், ஆனால் ஏன் விபத்து ஏற்பட்டது என்று சிந்திபதில்லை…..

      விபத்து ஏற்பட காரணம் கவனமின்மை, போக்குவரத்து விதியை மீறுவது, சாலை சரி இல்லாமை, வாகன பராமரிப்பு இல்லாமை போன்ற எதாவது காரணம் இருக்கும், இவற்றை சரி செய்தல் விபத்தை தடுத்து விடலாம், இதே போல் எல்லா பிரச்சனைக்கும் காரணம் உண்டு, அவற்றை பகுத்தறிந்து மூலம் மாற்றலாம், விதியை நம்பிக்கொண்டு இருப்பது அறிவுக்கு ஒவ்வாத செயல்…

      இந்த விதியை நம்புகிறவர்களிடம் ஒரு கேள்வி?

      அதாவது எல்லாவற்றிற்கும் விதி தான் காரணம் என்றல் நீங்கள் யார் மீதும் கோபம் படகூடாது, யாரையும் தண்டிக கூடாது.
      உதாரணம் ஹிட்லர் கோடி கணக்கான மக்களை கொன்றதற்கு அவர்மீது பழி பொட கூடாது. ஏன் என்றால் அந்த மக்கள் ஹிட்லரால் கொல்லப்பட வேண்டும் என்று விதி இருந்தது, பாவம் ஹிட்லர், விதி செய்த செயலுக்கு அவர் என்ன செய்வார், விதி ஹிட்லரை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டது…
      எனவே நாத்திகர்களே உங்கள் பிரச்சனைக்கு இனிமேல் நீதி மன்றம் போகவேண்டாம், விதி என்று ஏற்று கொள்ளுங்கள்.

        • ஹரி,
          நோய்கள் எல்லாம் சுகாதார கேடு, உடலை சரியாக பராமரிக்காததால் தான் வருகிறது, அவற்றை கட்டு படுத்த முடியாதா?

          வேண்டுமென்றல் இயற்கை சீற்றத்தை ஒன்றும் செய்ய முடியாது, வேண்டுமென்றால் ஒருமுறை நடந்தால் அந்த இடத்தை விட்டு தள்ளி போகலாம. மனிதர்கள் செய்யும் தவறுகளும் இவற்றிற்கு ஒரு காரணம்….

            • வந்துடுட்டாருய்யா டாக்குடரு கரிக்குமாரு. ஏன் அண்ணாத்தை இந்த வெளக்கமாத்து வெளக்கமெல்லாம். இதய அட்டாக்கு ஒன்னும் ரத்தக்குழாயில சாக்கடை அடைப்பு மாதிரி இல்ல தூர் வாறுவதற்கு. உங்கள் அப்பா தாத்தன் பாட்டன் கொஞ்சம் குடுத்த சொத்து, நீங்களா பாத்து கொஞ்சம் சம்பாதிச்சது அவ்வளவுதான். சாமி குடுத்ததில்லை. இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஒன்னும் கடவுள் இருந்துகொண்டு ஒன்னுக்கு ரெண்டுக்கு போய்க்கொண்டிருக்க வில்லை.

  14. ***இயற்கையின் நீட்சியாக நாம் என்றும் இருக்கிறோம். மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோமே அன்றி நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது. அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும்.****

    அததான் பாஸு நாங்களும் சொல்றோம்..!

    மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோம் !

    நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது அதாகப்பட்டது என்வென்றால் உடலை புதைத்தால் புழுவாக…எரித்தால் சாம்பலாக.. மாறுகிறது.

    அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும்..அதாகப்பட்டது என்வென்றால் இவர்கள் சொல்லும் பொருள் என்னும் ஆன்மா..பிறிதொரு காலத்தில் வேறு தன்மையுடன் வேறு மனித பிறவியோ அல்லது வேறேதும் ஜீவனாகவோ பிறவி எடுக்கும்..!!!

    கடவுளிடத்தில் வாய்தாவுக்கோ..பொய் சாட்சிக்கோ..லஞ்சம் கொடுத்து தீர்ப்பை மாற்றும் வேளைக்கோ வேலையில்லை தண்டனை தண்டனைதான்..!!!

    • வாய்தா,பொய் ,லஞ்சம் இதைஎல்லம் மனிதனே உருவாகினான் .ஒன்றும் இல்லாத கடவுள் எப்படி தண்டனை கொடுக்கும் ?

      • –உயிரினதொகை மாறாமல் தானே இருந்திருக்கனும்!?–

        எவ்வளவு தெளிவா சொல்றீங்க..அப்போ எல்லா உயிரின் கணக்கும் கையில இருக்குமுனு நினைக்கிறேன்.

        அப்போ பதில் சொல்லுங்க பாஸ்..!!!

        எறும்பின் மொத்த தொகை உலகத்தில் எவ்வளவு..!!
        ஈக்கள்..கொசுக்கள்…மொத்த தொகை உலகத்தில் எவ்வளவு..!!
        (இதுக்கு மட்டும் கண்க்கு சொல்லுங்க பாஸ் போதும்)

        எறும்பு ஈ கொசு எல்லம் உயிரினமுனு எதுக்குவீங்கனு நினைக்கிறேன்.

        ..

        • அதை எழுதும் போதே நினைச்சேன்.

          ஆனா நான் நினைச்சா மாதிரி பாக்டீரியா, வைரஸெல்லாம் நீங்க எடுக்காதது, உங்களுக்கும் கொஞ்சம் அறிவு இருக்குன்னு காட்டுது!

          ஒரு உயிர் இன்னொரு ஆத்மாவாக மாறுது என்றால், தன்னை தானே பிரித்து கொள்ளும் ஒருசெல் உயிரினத்துக்கு உயிர் இல்லைன்னு சொல்றிங்களா?

          உங்கள் உடலிலேயே பல செல்கள் உயிருடன் இருக்குதே. அப்ப நீங்க ஒருத்தரா, இப்ப பலரா?

          (நல்லா படிச்ச புள்ளதான், ஆனா என்னாச்சோ தெரியலையே)

          • பாக்டீரியா, வைரஸ்-னு நான் கணக்கு கேக்கமாட்டேன் பாஸ்..!! ஏன்னா நீங்க கண்ணுக்கு புலப்படுபவைகளை தான் ஏற்றுக்கொள்வீர்கள்..என்பதை நன்கு அறிந்தவன் பாஸ்

  15. ***கருவறையில் உட்கார்ந்து அக்கார அடிசலைக் கூட சாப்பிடத் துப்பில்லாமல் தேமே என்றிருக்கும் கடவுள் வெறும் கற்சிலைதான்.***

    சிலை என்பது கடவுளின் அடையாளம்..

    உங்களுக்கு ஒரு பிள்ளை இருக்கிறான் அவன் சுவற்றில் மாட்டியிருக்கும் உங்கள் புகைப்படத்தை பார்த்து “நான் சிகரட் பிடிக்கிறேன் ‘அப்பா’ என்னம்மா கண்டிக்க துப்பில்லாமல் தேமே என்று இருக்கிறார் அப்பா வெறும் புகைப்படம்தான்” என்று அந்த சிறுவன் முடிவுக்கு வருனேயானால்..எப்படி அது அறியாமையை குறிக்குமோ அப்படி அறியாமையில் உள்ளீர்கள்…

    சிலை என்பது கடவுளின் அடையாளம்..

    • கடவுள் இருந்தால், எங்கோ ஒரு மூலையில் ஓரமாக இருந்துட்டு போகட்டுமே ..
      வம்படியாக வரிசையில் நின்று கல்லை வணங்குவது ஏன்?

      வணங்குவது ,புகழ்வது ,துதிபாடுவது இலையென்றால் உங்களுக்கு தூக்கமே வராது அப்படிதானே …

      • தோழரே.!!

        நீங்களே உங்களை பற்றி உங்கள் வார்த்தையாலேயே சொன்னால் எப்படியிருக்கும்..கொஞ்சம் சிந்திங்க பாஸ்…

        –பெரியார் இருந்தால், எங்கோ ஒரு மூலையில் ஓரமாக இருந்துட்டு போகட்டுமே ..
        வம்படியாக மேடைப்போட்டு நின்று பெரியார் புகழ் பாடுவதென் ஏன்?

        பேசுவது ,புகழ்வது ,துதிபாடுவது இலையென்றால் உங்களுக்கு தூக்கமே வராது அப்படிதானே —

        உங்க பதில் இப்போ உங்களுக்கே பதிலாச்சு…

        • பெரியார் ஒரு மனிதர், அவர் வாயிலிருந்து வரும் கருத்துக்கள் சமூகத்துக்கு ஏற்றது என்றால் அதன் வழியில் நடப்போம் .அதைவிட்டு விட்டு அவரை புகழ்வது அவருக்கு சிலைவைப்பது ,மாலைஅணிவிப்பது மூடத்தனமே …

          அதைபோல் உங்கள் super star கடவுள் அவர்கள் All india radio வில் வந்து சமூகத்துக்கு ஏற்ற கருத்துக்களை வழங்கினால் அதையும் ஏற்போம் .
          அதைவிட்டு விட்டு கல்லை வணங்குவது ,உலகமாக மூடத்தனம் …

          உங்க கடவுளையும் காணாம் ,குரல் ஒளியையும் காணாம் ,கருத்துகளையும் காணாம் எப்படி கடவுள் வழியில் நடப்பது ?

          புதுசா யோசிங்க பாஸ் ….

          • நான் பிறக்கும் முன்பே பெரியார் காலமாகிவிட்டார்.நான் பெரியாரை கண்டதில்லை அவர் சிலையை நிறைய இடத்தில் கண்டிருக்கிறேன்.புகைப்படத்தை நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன். நான் பெரியாரை நேராக பார்க்கவில்லை என்பதர்க்காக பெரியார் என்பதே பொய்யா..? பெரியார் சிலையும் பொய்யா..? இப்படிதான் இருக்கிறது உங்கள் வாதம்.

            • அவருடைய போராட்டக் குணத்தை வைத்தே அவரை பெரியார் என்று அழைக்கிறோம். அவரின் சொற்கள், செயல்களை வைத்து அவரை அறிகிறோம்.

              “பெரியாரை நேராக பார்க்கவில்லை என்பதர்க்காக பெரியார் என்பதே பொய்யா..?”

              இப்படி சின்னப்புள்ளத் தனமா சொதப்பாதீங்க.

              • நிச்சயம் போராட்ட குணம் மிக்கவர்தான்…தனது சக தோழர்கள்..சிஷ்யர்கள் எதிர்த்தும் மணியம்மையை போராடி திருமணம் முடித்தவர்..போராட்டக்காரர்தான்

            • அடிக்கடி எனது ஆறாவது அறிவிற்கு நீர் வெலை கொடுக்கின்றீர். பெரியார் ஒரு மனிதராக இருந்து எல்லாம் சொன்னார் என்பதற்கும் நீர் சொல்லும் சூன்ய பரம்பொருளிற்கும் வித்தியாசம் இல்லியா?

              • இங்கும் மனிதர்களாகதான் கடவுளாக வந்தார்கள்..கருத்துகள் சொன்னார்கள்…சூன்யம் எதுவும் பேசுவதில்லை அது உணரவைக்கிறது….

                கிருஷ்ணர் கருத்து சொன்னார்…ஏற்றுக்கொண்டோம்..!! அவர் பெண்களுடன் லீலை செய்தார் என நீங்கள் சொல்லலாம்..!!!

                நல்ல சீர்த்திருத்த கருத்து சொன்ன பெரியாரின் லீலை மணியம்மை திருமணம் வரை போனதே..என்று நாங்கள் சொல்லலாம்..!!

                வேதம் மற்றும் இத்யாதி இத்யாதி ….கடவுள் மனிதாக அவதரித்து எழுதப்பட்டது சொல்லப்பட்டது…என்பதே…!!!!

              • அறிவ பத்தியெல்லாம் இதுங்க கிட்ட பேசுறதே வீண். இதுல நீங்க ஆறாவது அறிவ பத்தி கேக்குறீங்க.

          • // அதைபோல் உங்கள் super star கடவுள் அவர்கள் All india radio வில் வந்து சமூகத்துக்கு ஏற்ற கருத்துக்களை வழங்கினால் அதையும் ஏற்போம் .
            அதைவிட்டு விட்டு கல்லை வணங்குவது ,உலகமாக மூடத்தனம் … //

            கடவுள் உங்கள் நிபந்தனையை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.. அதுவரை கடவுளின் இருப்பை கற்சிலையிலோ, சிலுவையிலோ, காபாவிலோ நம்பிக்கையால் உணரமுடிந்தவர்களை மூடர்கள் என்று எண்ணுவதை விடுங்கள்..

      • பம்முதல் என்பது பணிதல் என்பதின் நவீன தமிழ் வார்த்தை ( நன்றி: மதுரை மாவட்டம்)

        உங்கள் தகப்பனாருக்கு எப்படி பணிவீர்களோ அதைப்போல..உங்கள் ஆசிரியருக்கு எப்படி பணிவீர்களோ அதைப்போல..கடவுளுக்கு பனிவது.

        • நான் என் தகப்பனாருக்கு அய்யர் வச்சு பூஜை, அபிஷேகமெல்லாம் செய்வதில்லை.

          இன்னொன்னு அவர் என் முன் நின்று பேசுவார்.(இதுக்கு அர்த்தம் புரிதா)

          மனிதன் கற்று கொள்கிறேன், தந்தையிடமிருந்து பின் ஆசிரியமிடமிருந்து இவ்வுலகத்திலுருந்து அப்ப எல்லாரும் கடவுள்னா, எதுக்கு தனியா ஒரு கடவுள், தனியா ஒரு கோவில்.

          அவனவன் வேலையை பார்த்துகிட்டு போவது தான் சரி.
          அதை விட்டு கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வந்தால் சக சகோதரன் பாதிக்கப்படுகிறான் என்ற கோவம் வருவதும் இயல்பு தானே.

          • அப்போ பகுத்தறிவுப்பூசாரிகள்?

            மடங்களை மறுத்த ‘திராவிட’ இயக்கங்கள் மடத்தைப்போன்றே இன்று இயங்குகின்றன…
            அவர்களும் இன்று இப்படித்தான்…ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்…

            • வீரன்,

              புரிகிறது பிழைப்புவாதியாக வேண்டும் என்றால் மடத்தை திறக்கவேண்டியதுதான் போலும்

              • ஆமாம்…
                இத்தகைய ‘நிறுவனங்கள்’ மடம் ‘உட்பட’ பல பெயர்களில் இயங்குகின்றன…

                பிரசினை என்னவென்றால்:
                வெறுமனே மடத்தையும், பிராமனர்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்தால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று பலர் நம்புவது…
                இவர்களை ‘மடம்’ போன்றே இயங்கும் மற்ற ‘நிறுவனங்கள்’ இவ்வாறு நம்பவைக்கின்றன…

                இதனால் பலனடைவோர் – இவ்விறுநிறுவனங்கள்…முட்டாளாவது பொதுசனம்…

              • அது மட்டுமல்ல, மானம் ரோஷத்தை விட்டு விட வேண்டும். அயோக்கியத்தனம், மொள்ளமாறித்தனம் அதிகம் வேண்டும். பின் மடத்தை திறந்து பிஸினஸ் செய்வது என்பது சும்மா வந்துவிடுமா?

          • நேரே கண்டால்தான் நம்புவேன் என உங்களைப்போன்றே இங்கு சில பதிவுகள் பதியப்படிருக்கின்றன…ஒரு உதாரணம்..

            உங்கள் கண்களை உங்களால் காணமுடியுமா..?

            நான் எனது கண்களை காண முயற்சிக்கிறேன் ஆனால் என்னால் அதனை காண முடியவில்லை ஆதலால் தனக்கு கண்களில்லை என ஒருவன் முடிவுக்கு வருவானெனில்..அது சரியான சிந்தனையா..?

            அவனிடம் உன் கண்களை உன்னால் காணயியலாது..இதோ கண்ணாடி..இதன் மூலமாக அதன் பிம்பத்தை நீ காணமுடியும் என நாம் அவனுக்கும் உதவியாக ஒரு கண்ணாடியை கொடுக்கலாம்..அதன் மூலமாக அவனுடைய கண்களை அவன் பார்க்கமுடியும்…

            அதை அவன் உணரமுயற்சித்தால் அவனுக்கு உன் கண்கள் இருக்கும் இடத்தை விரல்களால் தடவிப்பார் என்றும் சொல்லலாம்…இதைப் போலவே…

            கடவுளை காணயியலாது..அதன் பிரதி பிம்பமாக..மனதை ஒருநிலைப்படுத்தி ஒரே சிந்தனையில் இருயிருப்பாய் எனில் மனம் என்னும் கண்ணாடியில் கடவுளின் பிம்பம் தெரியும்…இது கடவுளை நீ ஒருமுகப்படுத்தி சிந்தித்தால்…நடக்கும்…

            இது அறிவியலும் கூட டெலிபதி என்பதன் முறையும் இதுவே…இதுவும் நிருபிக்கப்பட்ட கூற்று.

            நாத்திக கடவுள் மறுப்பு கொள்கை உடைய தோழர்களே! இது உண்மையில்லை என்ற ஒரே வார்த்தையில் மறுக்காமல்..கொஞ்சம் செயல் முறைக்கு வருவோமானால்..நிதர்சனமாக நீங்கள் கடவுளை பற்றிய சுவடுகளை காணக்கூடும்..

            எல்லாம் கல் என பொருள்ப்பட்டால்.. துவைக்கிற கல்லும் கோவிலில் உள்ள சிலையும் ஒன்று என ஆகிவிடும்…அது எப்படி என்றால்…எல்லாம் பெண் என்பதாக எடுத்துக்கொண்டால்..தாய்க்கும்..சகோதரிக்கும்…மனைவிக்கும்..தோழிக்கும்..வித்தியாசமில்லா போகும்..

            எப்படி தாய்க்கும்..சகோதரிக்கும்…மனைவிக்கும்..தோழிக்கும் வித்யாசமிருக்கிறதோ..அதேபோல்..இந்த சிலைக்கும்..மற்ற கள் என பொருள் படுவதற்கும் வித்யாசம் உண்டு.

            • // எல்லாம் கல் என பொருள்ப்பட்டால்.. துவைக்கிற கல்லும் கோவிலில் உள்ள சிலையும் ஒன்று என ஆகிவிடும்…அது எப்படி என்றால்…எல்லாம் பெண் என்பதாக எடுத்துக்கொண்டால்..தாய்க்கும்..சகோதரிக்கும்…மனைவிக்கும்..தோழிக்கும்..வித்தியாசமில்லா போகும்..

              எப்படி தாய்க்கும்..சகோதரிக்கும்…மனைவிக்கும்..தோழிக்கும் வித்யாசமிருக்கிறதோ..அதேபோல்..இந்த சிலைக்கும்..மற்ற கள் என பொருள் படுவதற்கும் வித்யாசம் உண்டு. //

              பதின்ம வயதிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் இந்த விளக்கத்தைக் கேட்டு, இந்துக்கள் கல்லை வணங்குகிறார்கள் என்று கேலி செய்த பாதிரியார் பதிலளிக்க முடியாமல் சென்று விட்டார்.. சரியா..??!!!

              பசும்பொன் தேவர் அவர்கள் 1947 இந்திய விடுதலைக்குப் பின், அரசியலிலிருந்து விலகி, முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு தமிழக மக்களிடையே ஆன்மீகம், சமத்துவம், சகோதரத்துவம் நிலவ பாடுபட்டிருந்தால் அவருக்கிருந்த மரியாதை,செல்வாக்கு, ஆன்மீக ஞானத்தால் தமிழகத்தின் வரலாறு வேறாக இருந்திருக்கும்..

              • நீங்கள் சொல்வது மிக சரி அம்பி..!!!

                பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அரசயலில் இல்லாவிடில் தென்னகத்தில் இன்னோரு விவேகனந்தராய் இருந்திருப்பார்…

                அரசியலில் நேர்மை கடைபிடித்த முதலும் கடைசியுமான தலைவர் தேவர் மட்டுமே..!

                அதனால் தான் அவரால் மிக தெளிவாக இவ்வாறு சொல்லமுடிந்தது
                “தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!”

                இராஜாஜியும் அதனால்தான் தேவரை இவ்வாறு குறிப்பிட்ட்டார்
                “திரு.தேவர் ஒரு புனித மனிதர் பிறருக்காக தாட்சன்யத்திற்காக பயனுக்காக எதையும் அவ்ர் பேசியதில்லை பேசவும் மாட்டார்..அவருடைய உள்ளம் தனிதன்மை வாய்ந்தது அதிலிருந்து ஆசைக்கு அடிமைப்பட்ட எந்த கருத்தும் வெளிவந்து நான் கேட்டதில்லை..திரு.தேவர் உள்ளத்தால் எதிலும் பற்றற்று, உண்மையை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவதால் தேவர் பேச்சு தெய்வத்தின் பேச்சு ஸ்தானத்தை பெற்றுவிடுகிறது””

                • // தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!”//
                  தேசம் உங்கள் பார்வையில் பிச்சை எடுக்கும் கூட்டம் அப்படிதானே ..

                  • தேசத்தை பிச்சை எடுக்கும் கூட்டமாக பசும்பொன் தேவர் பார்த்திருந்தால்..தனது 32-1/2 கிராமத்தை தானமாய் கொடுத்திருப்பாரா…இன்று விருநகர் மாவட்டம் சிட்டவண்ணாண் குளம் மற்றும் அதன் சுற்றிய தலித் கிராமங்கள் தேவரின் நிலத்தில் அல்லவா சொந்தமாய் விவசாயம் செய்து வருகின்றன.

                    பெரிய தேசத்திற்கு 32-1/2 கிராமம் என்பது சிறியது அதனாலேயே அவர் இயன்றதை தருகிறேன் என கூறி தனது எல்லா சொத்துக்களையும் தந்தார்.

  16. முகத்தில் கண் கொண்டு பார்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்.

    முகக்கண் கொண்டு பார்ப்பதைத் தவிர வேறு எந்தக் கண்ணைக் கொண்டு பார்க்கமுடியும்?

    வேறு ஒரு கண் இருக்கிறதாக சொல்கிறார்கள். அது மிகத் தவறு. அது கற்பனை; பிரயோசனமற்ற ஒன்று. இது வீணாக சொல்வதைத் தவிர மற்றது கிடையாது என்று சொல்லுகிற அளவுக்கு பிரச்சாரமாகி நிற்கின்ற நேரம்தான் இன்றைய நாஸ்திக காலம்.

    ஆனால், அது உண்மையா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பார்ப்போம்.

    ஒவ்வொரு மனிதனுக்கும்சாதாரண காலம் ஒன்றுண்டு. நித்திரை காலம் என்ற ஒன்றுண்டு. நித்திரை காலத்தில் கண்ணை மூடித்தூங்குவதைத் தவிர பெரும்பாலோர் கண்ணைத் திறந்து தூங்குவதில்லை. ஆனால், பாதி கண்ணைத் திறந்து தூங்குபவர்களும் உண்டு அப்படி சிறுபான்மையோபர், திறந்து தூங்குவோர்களுக்கும்கூட நித்திரை நேரத்தில் பார்வை இருக்காது; இருக்க முடியாது; காது கேளாது; மற்ற அவயங்கள் வேலை செய்யாது.அதே நேரத்தில் சொப்பனம் என்பதைப் பார்க்கிறது. சொப்பனம் பார்க்கின்ற காலத்தில் நல்ல உருவங்களைக் கண்டு மகிழ்ச்சியும்,கெட்ட
    உருவங்களை கண்டு சோகமும் சொள்கிறார்கள்..

    ஒருவர் தூங்கி எழுந்ததும் மிக மகிழ்வாகவும்..சில சமயங்கள் சோகமாகவும் இருப்பது எதனால்??”””
    ———–பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 1959 அக்டோபர் 10-ம் நாளன்று பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோயில் 12-வது நவராத்திரி ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.

    தூங்கும் போது எங்கு இருக்கிறது அறிவு..???

    • எங்கேயோ விட்டத்தை பார்த்துகிட்டு எதாவது யோசனையில் இருப்பதும் இதில் சேருமா தியாகு?
      தூங்கும் போது நம்மை தூங்க வைக்கிறது அறிவு, அது என்ன ஆடா, மாடா ஊர் மேயப்போக!?

      • அறிவு என்ன செய்யும்??

        நாளை அலுவலகம் போக வேண்டும் நேரமாகிவிட்டது தூங்கு என சொல்லும்….அவ்வளவுதான் ..

        இல்லை இல்லை இன்னும் கொஞ்ச நேரம் விவேகனந்தரின் ராஜயோகம் படித்துவிட்டு படுப்போம் என்பது நான் எடுக்கும் முடிவு அதாவது என்னை ஆடிவைக்கும் மனம் எடுக்கும் முடிவு..!!

        அறிவு முடிவு எடுக்காது..தூங்கும் போது அறிவு இருக்காது..மனம் மட்டுமே விழித்திருக்கும்.

        அறிவை என்ன நாம் கயிறுப்போட்டு கட்டியா வைத்திருக்கிறோம்..இல்லை அறிவிடம் பால் கறந்து காபிப்போட்டு குடிக்கிறோமா..?

        அறிவு, என்ன ஆடா, மாடா ஊர் மேயப்போக!?
        என் கேள்வி எழுப்ப..!!!

        • அறிவை கட்டி வைப்பது தான் ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டம். பல ஆசிரமங்களில் மக்கள் சுயநினைவின்றி தான் அலைகிறார்கள். என் பதிவிலேயே அதற்கு ஆதாரம் காட்டியிருக்கிறேன்!

  17. ***அல்வாவைச் சாப்பிட்டிருந்தால் மட்டுமே அமுதத்தின் சுவை எப்படி இருக்கும் என்று சிந்திக்க முடியும்.****

    ஒரு வேளை அமுதம் துவர்ப்பாகவோ…கசப்பாகவோ…புளிப்பாகவோ இருக்கும் மெனில் உமது அடிப்படை அல்வா ஆராய்ச்சியே தவறாகிவிடுமே..!!!!

    அமுதம் போல் சுவையாக இருக்கிறது என சொல்வது பேச்சிவழக்கு..சொல்வழக்கு..இதை சொல்பவர்கள் யாரும் அமுதத்தை சுவைத்தது கிடையாது..!!!

    • lemme ask him one more thing, what if some guy doesnt have a tongue,will he still be able to taste something by thinking about the word.

      Thyagu,

      freeya vidunga, poova pushpamnu mattum thaan solla mudiyum,mudiyalanna vutranum,adha ivunga purinchikkave maatanga.

      • எந்த வேத்தின் எந்த பகுதியும் ஆசிரமம் வைத்து சாமியை தரிசிக்க சொல்லவில்லை..மக்களுக்கு அருள் பலிக்கவும் சொல்லவில்லை

        ஒரு எண்ணம் கொண்டவர்கள் ஒன்றாய் கூடி தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள அமைக்கப்பட்டதே அசிரமம்…

        எப்படி கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் சேர்ந்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள..இயக்கம் மன்றம் வைத்து உள்ளீர்களோ அதுப்போல….

        ..சில நாத்திகவாதிகள் சாமியார் வேடம் தரித்து அசிரமம் என்ற பெயரில் அப்பாவி மக்களை ஏமாற்றுவதே நிகழ்கிறது…

        போலி சாமியார்களும் நாத்திகவாதிகளே அவர்களுக்கு கடவுள் எனற பணிவோ பயமோ உங்களைப்போல் அவர்களுக்கும் இருப்பதில்லை..அதனாலேயே கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் போல எந்த கட்டுபாடுமின்றி அனைத்து விரோத செயல்களும் செய்கிறார்கள்…

  18. முதலில் கட்டுரையைப் படித்து முடித்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆன்மா, பரம்பொருள், கடவுள் குறித்து இதைவிட எளிமையாக விளக்க முடியாது.

    அதன் பிறகு பின்னூட்டங்களைப் படித்த பிறகு பின்னூட்டக்காரர்கள் மீது ஒருவித பரிதாபம்தான் ஏற்பட்டது. இது போன்ற கருத்துக்களை முன்வைக்கும் பலரிடம் நான் அன்றாடம் பேசி வருபவன். அவர்களும் வரிந்துகட்டிக்கொண்டு ஆன்மா, பரம்பொருள், கடவுளை நிலைநிறுத்த அனைத்துவகையான பகீரதங்களையும் செய்வார்கள். ஆனாலும் அவர்களால் ஆன்மா, பரம்பொருள், கடவுளை நிலை நிறுத்த முடிவதில்லை. இறுதியில் இது அவர்களின் நம்பிக்கை என்று ஒதுங்கிவிடுவார்கள்.

    இவர்களின் முக்கியமான பலகீனமே உலக நிகழ்வுகளை தொகுத்துப்பார்க்க தவறும் போக்குதான். இதற்கு பல்வேறு அறிவியல் சார்ந்த புரிதல் தேவைப்படுகின்ற அதே வேளையில் இயங்கியல் அறிவையும் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலும் இவர்கள் ஆன்மீகம் மற்றும் சில அறிவியல் நூல்களை மட்டும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவதுதான். அதற்கும் அப்பால் இயங்கியலைப் படித்து புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. மேலும் இவர்களுக்கு இயங்கியல் நூல்களைப் பற்றிய பரிச்சயமும் இருப்பதில்லை.

    அதனால்தான் மிகச்சாதாரண பூவின் வாசனை குறித்த அறிவியல்கூட தெரியாமல் அதை உணரத்தான் முடியும்; அறிய முடியாது எனக் கருதுகிறார்கள்.

    எனினும் இந்தக் கட்டுரை ஆன்மா, பரம்பொருள், கடவுள் குறித்து விரிவானதொரு விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

    வேண்டுமானால் இதுகுறித்து விரிவானதொரு விவாதத்தை – பெரியதொரு அரங்கத்தில் – நேரடியாக நடத்த முயற்சிக்கலாம். ஆன்மா, பரம்பொருள், கடவுள் குறித்து நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அதில் கலந்து கொண்டு ஆன்மா, பரம்பொருள், கடவுளை காப்பாற்றுகிறார்களா எனப் பார்க்கலாம்.

    நாம் அறிவை எவ்வாறுப் பெறுகிறோம் என்பது குறித்ததொரு பதிவு:

    அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?
    http://hooraan.blogspot.com/2011/03/blog-post_15.html

    • ஊரான் எனும் அறிவியல் ஞானம் பெற்றவரே …!

      கொஞ்சம் ஏதெனும் பூவின் வாசனையை விளக்கி அது எப்படியிருக்கும் என கருத்து பதிவு செய்யுங்கள் பார்ப்போம்..???

      அறிவியலுனு சொல்லறது உதாரா இல்லையானு இப்ப தெரிஞ்சிடும்..!!!

      • ஊரான் எழுதியே பதிவிலிருந்து…அறிவது யாதெனில்….

        நாத்திகர்களுக்கு செயல் முறை அறிவியல் முதிர்ச்சி மிகவும் குறைவு…சோம்பல் தனமாக வெறும் எழுத்தை நிஜம் என நம்பிக்கொண்டு மேஜையிலேயே முழுவதும் அமர்ந்துக்கொண்டு அறிந்துக்கொள்ள முயற்சிப்பார்கள்…

        முதலில் உலகம் சதுரம் என்று சொன்னதும் ஆமாம் என்றார்கள் இவர்களே… பின்பு உருண்டை என சொன்ன உடன் ஏன் எதற்கு எப்படி என எந்த கேள்வியும் இல்லாமல் ஆமாம் ஆமாம் என்றார்கள் இவர்களே..

        இவர்களுக்கு தானே சிந்திக்கும் ஆற்றல் குறைவு..உலகில் தன்னை தனித்து காட்டிக்கொள்ள செய்யும் உக்தி..இவர்களுக்கு இதுஒரு மனநோய் தான்..

        • எல்லாவற்றிற்கும் ஏதோ பதில் போட வேண்டும் என அவசரப்பட வேண்டாம். இதுவரை நீங்கள் வாழ்க்கையில் உணர்ந்தது அனைத்தையும் சற்றே அலசிப் பாருங்கள். விடை கிடைக்கும்.

      • இதெல்லாம் ஊரான் விளக்கிச் சொல்லனுமா? ஒரு விவரமான கெமிஸ்ட்ரி வாத்யாரப் போய்ப் பாருங்க. விளங்கும்.

    • வெறும் அறிவியல் மட்டும் போதாது. இயங்கியலையும் சேர்த்து படியுங்கள். இது நான் மீண்டும் கண்டுபிடித்தது அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கபிலா போன்றவர்கள் தொடங்கி இன்று வரை சொல்லப்பட்டு வருவதுதான். வரலாறையும் படிக்க மாட்டீர்கள். அறிவியலையும் முழுமையாகப் படிக்க மாட்டீர்கள். இயங்கியலையும் தொட மாட்டீர்கள். பிறகு எப்படி உங்களுக்கு விளங்கும்?

      • ungalukku thaan vilangala,unga arivu vattatha thaandi edhuvume illana neenga nenaikureenga.

        Nihilistic approaches have always existed in this world,whats the point of this,whats the point of this when i can understand all that,

        but you refuse to go one step forward.

        • கொஞ்சம் தமிழ்ல டைப் பண்ணக் கத்துக்கலாமே சார். பல பேரு இங்க சொல்லிப் பார்த்தாச்சு. எளிமையான விளக்கங்களும் வழிவகைகளும் காட்டியாச்சு. மாசம் பல ஆகியும் கத்துக்கலைன்னா என்ன பண்றது!

      • சரிங்க பாஸ்..!

        நீங்கள் சொல்கிறப்படி கடவுளை அறியாதவர் நாத்திகரல்ல.. கடவுள் சித்தாந்தம் சித்தரிக்கப்பட்டதே என நிலைப்பாடு எடுப்பதே நாத்திகம்

        கண்ணப்ப நாயனார்..அப்படினு ஒரு வேடன் இருந்தார் அவருக்கு கடவுளும் தெரியாது பக்தியும் தெரியாது… நீங்கள் சொல்வதைப்போல அவர் கடவுளை அறியாதவரே…

        அவர் வேட்டையாடி அசைவ உணவு எடுத்து வரும் போது சிவன் போயிலை பார்க்கிறார்..அந்த கல்லிலான லிங்கத்தின் மீது மிகுந்த அன்பு கொள்கிறார்..(அதாவது..உங்கள் மனதில் ஆடும் பிம்பத்தை ஒத்திருக்கும் ஒரு பெண்னை கண்டால் எப்படி ஒரு ஈர்ப்பு ஏற்ப்படுமோ அப்படி..!!)

        அந்த லிங்கத்தை ஒரு உயிர் பெற்ற ஜீவனாகவே பாவித்து..இந்த அடர்ந்த காட்டுக்குள் தனியாக இருக்கீறாயே என கலங்குகிறார் “இந்தா மாமிசம் சாப்பிடு என்கிறார்” அந்த அசைவ உணவை அங்கேயே வைத்துவிட்டு போகிறார்…

        இப்படியே 7 நாள்கள் நடந்தன..அந்த 7வது நாளில்தான் அது நடந்தது…

        லிங்கத்தின் வலது கண்ணில் இரத்தன் வடிந்தது..கண்ணப்ப நாயனார் கண்கலங்கினார்..அன்பினால் கலங்கி அழுதார்..(தன் பெற்ற குழந்தை அடிப்பட்டு ரத்தத்துடன் நின்றால் எப்படி அன்பினால் மனம் பதறுமோ அப்படி)

        தன் கண்னை எடுத்து லிங்கத்தில் வைத்தால் லிங்கத்தின் கண்ணிலிருந்து வரும் ரத்தம் நின்றுவிடும் என முடிவுக்கு வருகிறார் ( அவருக்கு மருத்துவம் தெரியாது அதனால் அப்படி முடிவெடுத்தார்)

        அம்பால் தன் வலது கண்னை நெம்பி எடுத்து லிங்கத்தில் வைத்தார்..இவரது வலது கண்ணிருந்த இடத்திலிருந்து ரத்தம் வழிந்தது…லிங்கத்தில் வலது கண்ணில் இரத்தம் நின்றது..

        இப்போது லிங்கத்தின் இடது கண்ணில் ரத்தம் வழிந்தது..பெரும் வலியில் தவித்த கண்ணப்ப நாயனார்..தனது பேரன்பின் காரணமாய் தனது இடது கண்ணையும் அம்பால் நெம்பி எடுத்து..லிங்கத்தில் வைத்தார்..அவர் கட்டைவிரலின் உதவியுடன்..

        இரண்டு கண்ணும் போன பிற்பாடு..தட்டு தடுமாறி நின்றார் கண்ணப்ப நாயனார்..இப்போது அந்த லிங்கத்திற்கு தேவை அறிந்து எப்படி பணி செய்வேன் செய்வேன் என்று இரண்டு கண்ணிலும் ரத்தம் வழிய அழுதார்….

        அப்போது அவர் கடவுளை உணர்ந்தாகவும் அவர் இரண்டு கண்களும் மீண்டும் அவருக்கு கிடைத்தாகவும் பெரிய புராணம் கூறுகிறது.

        அன்பே கடவுள்..இப்படி ஒரு அன்பை அந்த கல்லிலான கடவுளிடம் காட்டினால் கடவுள் தெரிவார்..

        நாங்கள் கடவுளை காண முயற்சிக்கிறோம்…உங்களால் முடிவில்லை என்றால் பேசாமல் இருங்கள்!

        • 🙂

          அவ்ளோ தானா புத்தகங்கள் நீங்க படிச்சது.
          இன்னும் இருக்கா?

          புத்தகங்களில் நீங்க படித்தவற்றிற்கும், சிறு வயதில் கேட்ட கதைகளுக்கும் உங்கள் மூளையை அடகு வச்சிட்டிங்களா?

          சுய அறிவுன்னு ஒன்னு இருக்கு, அதனால் இது சரியா தப்பான்னு யோசிக்க முடியும்னு சொல்லியிருக்குற புத்தகங்கள் எதாவது அனுபட்டுமா. அட்ரஸ் அனுப்புங்க 9994500540

          • புத்தகம் படிக்காமல் யாரும் சொல்லிக்கொடுக்காமலா..? கடவுள் மறுப்பாளர் ஆகிவிட்டீர்கள்…
            சிறுவயதில் கேட்டது… புத்தகம் படித்தது…இதை வைத்துதானே..பகுத்து அறிந்து எது சரி என முடிவுக்கொள்கிறோம்.

            என் எடைக்கும் மேலான அளவுக்கு நான் விவேகனந்தாவின் புத்தகம் படித்திருக்கிறேன்..ஆதலால் எனக்கு கடவுள் பிடித்தது பிடித்துக்கொண்டிருக்கிறது….

            அடுக்கி வைத்தால் உங்கள் உயரத்திற்கும் மேலான அளவிற்கு நீங்கள் கடவுள் மறுப்பு புத்தகம் படித்து கேட்டு வந்திருப்பீர்கள் ஆதலால் மறுப்பு பிடித்தது பிடித்துக்கொண்டிருக்கிறது….

            நான் பகுத்து அறிந்துக்கொண்டதில் கடவுள் தெரிகிறார் பிராத்திக்கிறேன்..அவர் இருக்கிறார்..
            நீங்கள் பகுத்து அறிந்துக்கொண்டதில் கடவுள் தெரியவில்லை எனில் அவர் உங்களுக்கு இல்லை..

        • என்னது லிங்கத்தின் மீது தனது கண்களை வைத்தாரா? பாவம் அவருக்கு லிங்கம் என்பது என்ன என்ற விளக்கம் தெரியவில்லை என்று நினைக்கிறேன், லிங்கத்தை பற்றி தெரிந்தால், இந்த கதை சிரிப்பாக இருக்கும்…

          //வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்… காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம். //

          http://thathachariyar.blogspot.in/2010/10/12.html

          • கண்ணப்ப நாயனார் தாத்தாச்சாரியை முதலில் சந்தித்திருந்தால் நாயனாராகி இருக்க மாட்டார்.. அடப்பாவி என்றழைக்கப்பட்டிருப்பார்…!!!

  19. Watch History channel’s Alien Documentaries on YouTube…We may get many answers which are related to this article, about god, creation of mankind,..etc.with evidences still existing in earth and from epics…Its very interesting and opens new window.for many of our questions.

  20. மனித மூளை உருவாகும்போது ரத்தமும் சதையுமாகத்தான் உருவாகிறது. ஒரு குழந்தை தாயிடமும், சுற்றுப்புறங்களிடமிருந்து மட்டும்தானா அது செய்திகளை உள்வாங்கி மூளையில் பதித்துக் கொள்கிறது? பிறப்பிலேயே மூளையில் பல தகவல்களை உட்பொதிந்துதானே வருகிறது. அது எங்கனம் நிகழ்கிறது? இதற்கும் ஆன்மா என்ற கருதுகோளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? கடவுள், மனிதன் என்ற நிலை தாண்டி கண்களுக்குப் புலப்படா வேறு உலகம் இருக்கிறதா? இதெல்லாம் சுவாரஸியமான விஷயங்கள். கடவுள் என்ற நிலைப்பாட்டை தவிர்த்துவிட்டு இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் வியக்கவைக்கும் உண்மைகளை அறியலாம். வெறும் கார்பன் உடம்பு என்று தூக்கியெறிந்து செல்வது ஏனோ சரியாகப்படவில்லை. நமக்கு கிடைத்திருக்கும் மூளை மனித இயங்கியலுக்காக வெற்று கருவிகளை உருவாக்கும் மெஷினாக இல்லாமல், வாழ்வியல் தாண்டிய விஷயங்களில் பயணிக்க ஏதுவான கருவியாக பயன்படுத்திப் பார்க்கலாமே!

  21. மறுமையை பற்றி கதைவ் அளந்து பயமுருத்தும் இசுலாமியவாதிகள் விவாதத்தில் காணாம்

  22. அன்புள்ள அனைத்து மறு மொழியாளர்களுக்கு,

    ‘Respectful’ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை மிக எளிய அடிப்படையான விசயங்களில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். அது முதல் படி என்றால் இந்த கட்டுரைக்கான கேள்வி அதற்கடுத்த படிகளைப் பற்றியது.

    வினவில் கடவுள் குறித்த நிறைய கட்டுரைகளை படித்ததன் மூலம் நானும் ‘கட – உள் ‘ க்குப் பதிலாக
    ‘கட – வெளியே ‘ வாகி அந்த மாயையிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். நான் 31 வயதான, இஸ்லாமிய குடும்பத்தில்
    பிறந்து வளர்ந்து இஸ்லாமிய பெயரும் கொண்டவன்.

    குஜராத்தில நரேந்திர மோடி 3000 முஸ்லீம்கள ( அந்த கலவரத்துக்கு முன்பு இந்துக்களையும் ) கொலை பண்ணினப்போ எந்த அல்லாவும் வந்து அவங்கள காப்பற்றி விடவில்லை. அதுல பாதி பேர் கூடவா 5 வேளை தொழுகை , 30 நோன்பு , 2 % ஜக்காத் , வசதி இருந்தா ஹஜ் and all kalimaas என்று இஸ்லாத்தை கடைபிடிக்காமல் இருந்திருப்பார்கள். But what use ?

    .சரி . கொஞ்சம் கீழே வருவோம். ராஜபக்சே இலங்கையில ஒரு லட்சம் மக்களை கொலை பண்ணினப்போ அதுல majority இந்து மக்களோட major Gods ராம், கிருஷ்ணா, விநாயகா, முருகா, சிவா, விஷ்ணு இவங்க யாருமே வந்து என்ன ஏதுன்னு கூட கேட்கவே இல்லையே . ஏன் ?

    ஆக என்னுடைய நிகழ் கால, சமூக, வாழ்வியல் பிரச்சனைகளுக்கு இந்த so called all கடவுள்கள் எந்த தீர்வையும் தாராமல்
    at least தப்பு பண்ணினவனுக்கு தண்டனையை கூட அடுத்த ஜென்மம் வரைக்கும் wait பண்ணி தான் கொடுக்கும் என்றால்
    ( நம்ம இந்தியன் கவர்மெண்டு மாதிரி ) அவ்ளோ slow வான கடவுள் இருந்தாலும் எனக்கு அதைப் பத்தி கவலையே இல்லை.

    கடைசியாக, உலகத்திலேயே மிகச்சிறந்த scientist யாருன்னா இல்லாத கடவுளை கண்டு பிடிச்சவன் தான்.

    நன்றி.

    • கிராம வாசி..!! நீங்கள் மதவெறிக்கொண்ட கும்பலால் இறந்த போனவர்களை பார்த்து கடவுளை மறுத்துள்ளீர்கள்…நாங்கள் அந்த கலவரத்தில் உயிர் பிழைத்தோரை பார்த்து..அவர்கள் கண்ணில் வழிந்த நன்றி கண்ணீர் துளியை பார்த்து கடவுளை ஏற்றுள்ளோம்..!

      • ஈழத்தில் இறந்தவரை எண்ணி கலங்காமல் பிழைத்தவரை எண்ணி நாம் நம் கடவுளுக்கு நன்றி சொல்லும் அதே நேரம் சிங்களன் அவன் கடவுளுக்கும் நன்றி சொல்கிறான்.எந்த கடவுள் சரி தியாகு?உங்க கடவுளுக்கு அமெரிக்காவோ ஆப்ரிக்காவோ அன்டார்டிகாவோ எதுவுமே தெரியல ஆனா உலகத்தையே அவர் தான் படைத்தார்.வளைகுடா கடவுளுக்கு எரிமலையும் பனிமலையும் ஜப்பானும் சீனாவும் தெரியவில்லை அவரும்தான் உலகத்தை படைத்ததாய் சொல்கிறார்கள்,ஜெருசேலம் கடவுளுக்கும் அவர் வசித்த வட்டாரம் தவிர வேறு எந்த பகுதியின் விவரமும் தெரியவில்லை but அவரும் படைச்ச லிஸ்டில் இருக்கிறார் இப்படி தான் படைத்த உலகம் கூட முழுதாய் தெரியாத கடவுள்களை நம்புவது வெட்டி வேலை. பின்குறிப்பு;படைத்ததாய் கடவுள்களே சொல்லிகொள்கிறார்கள் அவரவர் புனித நூல்களில்.

      • Wow ! fantastic ! Mr . Thiyagu

        நான் 13 ஆம் நம்பர் பஸ்சுல சம்பள பணத்தை பிக் பாக்கெட் அடிக்க கொடுத்தவனோட துயர நிலையை எண்ணி வருத்தப்படுகிறேன்.

        But Mr.தியாகு , நீங்கள் மிச்சம் 73 பேரோட பர்ஸும் பத்திரமாத்தானே இருக்குன்னு சந்தோசப்பட சொல்றீங்க. இதுல god க்கு tanks வேற சொல்லணுமாம்.

        எனக்கு தெரிந்த வரைக்கும் இதைத்தான் சந்தர்ப்பவாதம்னு சொல்லுவாங்க. வினவு பாணியில் சொல்வதானால் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

        நன்றி.

        • நல்ல உதாரணம்…. village vaasi..

          கட்டுரை மற்றும் விவாதங்களில் இருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
          சிறப்பான கட்டுரை எழுதிய வினவுக்கு நன்றி.

        • **நான் 13 ஆம் நம்பர் பஸ்சுல சம்பள பணத்தை பிக் பாக்கெட் அடிக்க கொடுத்தவனோட துயர நிலையை எண்ணி வருத்தப்படுகிறேன்** –

          73 பேரோட பர்ஸும் போனால் அது மிகபெரிய துயரமல்லவா….இப்போது 73 பேரும் தங்களால் முடிந்ததை இழந்தவனுக்கு கொடுத்து அவனை தேற்ற முடியும்..அதனால்தான்..பலியாகமல் தப்பித்தவரை நினைத்து சந்தோசப்படுகிறோம்…இழந்தவனுக்கு உதவவும் ஆறுதலாகவும் முடியும் என்பதால்…

    • மிகச் சிறந்த பதில், இதையும் மறுப்பவர்களை கண்டுகொள்வதில் எந்தவிதமான பயனும் இல்லை. நன்றி.., மிகச் சிறந்த பதிவு, வினவுக்கு நன்றி…

  23. நண்பர் தினேஷ் குமார் கேட்டிருந்த கேள்விக்கு மட்டுமல்ல இது போன்ற கேள்விகள் உள்ள எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிற பொறுப்பான பதில் தான் வினவின் பதில்.பிரச்னையின் சாரத்துக்குள் சென்று ஆழ்ந்து சிந்தித்து விவாதித்திருப்பவர்கள் மிகக் குறைவுதான்.கடவுள் நம்பிக்கையிலிருந்து பிறப்பவை தான் பரம்பொருள் ,ஆன்மா,பிறவாமை இத்தியாதி எல்லாம்.ஆதியில் இருந்தது பொருள் என்பதிலிருந்து தான் அறிவியல் தொடங்குகிறது.உயிரற்ற ஜடத்திலிருந்து தான் உயிர் தோன்றியது என்ற விதியிலிருந்து விஞ்ஞானம் பயணித்துக் கொண்டிருக்கிறது.விஞ்ஞானம் தான் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது.பரம்பொருளைப் பரப்புகிறவர்களின் ஜீவனையும் காத்து வருகிறது.இல்லை என்று மறுக்கிறவர்கள் ’ஆன்ம சுத்தி’ இல்லாதவர்கள்.விலங்குகளுக்கு அறிவு இருக்கிறதா,உணர்வு இருக்கிறதா என்ற பிரச்னை இஙுகு வரவில்லை.அவை கடவுளை மன்றாடி உயிர் வாழ்வதில்லை.கடவுள் ,ஆன்மா இவை எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிற பரிந்துரைக்குவேலை இல்லை.ஒரு தனி மனிதன் தனக்குள் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் தோண்டிப்பார்த்துக்கொண்டே போகட்டும்.ஆனால் அதைச் சொல்லி பலரை ஏமாற்றி ‘தலையெழுத்து’தத்துவத்தைத,மனிதர்களில் ஏற்றத்தாழ்வைத் திணிப்பது அயோக்கியத்தனம் அல்லவா?கண்ணப்ப நாயனார் கதையெல்லாம் சின்னப்பிள்ளைத் தனமாக இல்லையா?பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?செக்குக்கும் சிவலிங்கத்தும் வேருபாடு தெரியுமா நாய்க்கு? சிவலிங்கத்தின் மீது சிறு நீர் கழித்த ஒரு நாயையாவது பஸ்மமாக்கியிருக்கலாமே ஆதிசங்கரன்?இயற்கையின் உன்னதமான விளைபொருள் மனிதன்.மனிதன் சிந்திக்கத் தொடங்கியபோதுதான் இயற்கை தன்னை உணர்ந்தது- என்றார் ஏங்கல்ஸ்.ஹிக்ஸ் போசான் சோதனையை நடத்தி பெருவெடிப்பு கொள்கையை மெய்ப்பித்தவர்கள் சொக்கி வாசுதேவோஅல்லது ரவிசங்கர்சீயோஅல்ல.பேரண்டத்தின் இயக்கவியலைப் புரிந்துகொள்வது பீஸா,புர்கர் ,முஞ்ச் சாப்பிடுவதைப் போலல்ல;பொருள்..பருப்பொருள்..ஆக விரிந்து செல்லும் ஆற்றலின் பின் ஓய்வின்றி செல்லும் மானுடப் பொருண்மை.(அ)தென்புடையோர்தொடர்வோம்

    • பெரியார் வாழ்ந்தார் என்பதை சிலையையும் புகைபடங்களையும் செய்தியையும் வைத்து
      நம்பும் போது கண்ணப்ப நாயனார் வாழ்ந்தார் என்பதை பனையோலைகள்..வரைப்படம்.. புத்தகம்..பாடல்களை வைத்து நாங்கள் சொன்னால் அது சிறுபிள்ளை தனமா..?

      நாய் என்ன கடவுள் மறுப்பாளர் என்றால் கடிக்காமல் வாலட்டுமா…காலை தூக்கி பெரியார் சிலையில் மட்டும் சிறுநீர் கழிக்காமல் போகுமா..?

      எந்த விலங்கினமாவது வநது நான் கடவுள் மறுப்பாளன் என கூறியுள்ளதா…
      விலங்கு கடவுளை வண்ங்குவதில்லை என அறிவியல் ஆராய்ச்சி எதும் சொன்னதா…

      அது எப்படி கடவுளை வணங்குகிறதோ நமக்கு தெரியாது..ஒருவேளை அது திருநீறு.. பூனூல்..பூசை எல்லாம் போட்டு வந்தால்தான் நப்புவீர்களா..

      மனிதர்கள் இனத்திலேயே கடவுளை வணங்கும் விதம் நிறைய வேறுபாடு உள்ளது. இதில் மிருகம் வேறையா….?

    • லயன்ஸ் ..!

      இங்கு யாரும் நவீன நாத்திகவாதிகள் எனும் போலி சாமிகளை பற்றி பேசவுமில்லை வாய்திறக்கவுமில்லை….

      கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுவது தவறு ஒரு பெரும் குற்றம் என்பதில் எல்லோருக்கும் இங்கு உடன்பாடே..!!!

      கடவுள் எங்கும் வந்து சொக்கி வாசுதேவோ அல்லது ரவிசங்கர்சீயோ தனது பிரதிநிதி அதாலால் நிதிக்கொடுங்கல் என்று சொன்னதில்லை…

      கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் இவர்கள்களும் நாத்திக வாதிகளே..

      நாத்திக சாமியார்களுக்கும் …நாத்திக தலைவர்களுக்கும் ஒரு வித்தியாசம்தான்…

      கடவுள் பெயரைச்சொல்லி இவர்கள் பணம் பார்க்கிறார்கள்…
      கடவுள் பெயரைச்சொல்லி இவர்களும் அரசியல் பண்ணுகிறார்கள்…

  24. இத்தகையக்கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்…
    காரணம் – தேடுபவர்களது ‘கடவுள் என்றால் என்ன / யார்’ என்பவைகளைப்பற்றிய எண்ணங்கள்…
    மனிதருக்கு உள்ள கருணை, கோபம் போன்ற ‘உணர்வு’களைக்கொண்டவராகச்சிலர் கடவுளைப்பார்க்கிறார்கள்….
    நாத்திகர்களோ – விஞ்ஞானபூர்வமாகக்கடவுள் இல்லை என்றுநிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்பதப்பற்றி யோசிக்காமல் சிலையைப்பற்றி விமரிசனம் செய்கிறார்கள்…
    கடவுள் இல்லை என்பதை இன்னும் நிரூபிக்கவில்லை…

    உதா:

    நாம் தொலைநோக்கி மூலம் ஒரு 100 ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள ஒருநட்சத்திரத்தைப்பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது காணப்படும்பொழுது உண்மையில் இருக்கிறதா என்று சொல்லமுடியாது…

    நான் ஒரு பொருளைக்காண்கிறேன் என்றால் – அதை என் புலன்கள் ஒளியின் வேகத்திற்க்குள் தான் உணர முடியும்…

    ‘உண்மை’ அறிய ஒளியின் வேகத்தை விட வேகமாகப்பயனிக்க வேண்டுமோ என்னவோ…

    அப்படிப்பயனித்தால் நாம் -நடந்தது,நடக்கின்றது,நடக்க்ப்போவது என்றொ எல்லாம் தெரிந்த ஏகம்பரமாகிவிடுவோம்…

    அது சரி….கடவுள் இருந்தால் என்ன, இல்லைன்ன என்ன? என்ன ஆகிவிடப்போகிறது??? புரியவில்லை…

  25. கடவுள்நம்பிக்கையைப்பொறுத்தவரை நான்கு வகையான மக்கள் உள்ளனர்:
    1) ஆத்திகர்
    2) நாத்திகர்
    3) எனக்கு இதப்பத்தி கவலை இல்லை
    4) ஜகஜ்ஜாலக்கில்லாடி போக்கிரிகள்

    4ஆம் வகையைச்சேர்ந்தவர்கள்: ஆத்திக மற்றும் நாத்திக மடம் ஆரம்பித்து கும்மியடிப்பார்கள்…

    • இருண்டு விதமானவார்கள் தான் இருக்க முடியும். ஒன்று கடவுள் இருக்கிறது என்று நம்பும் ஆத்திகர்கள், மற்றொன்று கடவுள் போன்ற மூடநம்பிக்கையை நம்பாத நாத்திகர்கள்…

      /3) எனக்கு இதப்பத்தி கவலை இல்லை
      4) ஜகஜ்ஜாலக்கில்லாடி போக்கிரிகள்/

      இவர்கள் இருவருமே நாத்திகர்கள் தான்,

      நாதிகரா ஒருவர் இருந்தால் அவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியமில்லையே?

      பின் நாத்திகர்கள் இருபதே ஆத்திகர்கள் இருப்பதால் தான், ஒருவேளை எல்லோரும் நாத்திகர்களாக மாறிவிட்டால், அதற்கு பின் நாத்திகம் என்ற சொல்லுக்கு அர்த்தமே இருக்காது…

  26. //சிந்திப்பதால் உடல் நலத்திலும், வலிமையிலும் மாற்றம் ஏற்படலாமே தவிர உடலின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றமுடியுமா என்று தெரியவில்லை..//

    அம்பி,
    ஒரு நாயுடு பொண்ணை லவ்வும் நாடார் பையன் அந்தப் பொண்ணை எப்படித் தூக்குவது என்று சிந்தித்தால், அவன் உடலின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றிக் காட்டுவார்கள். 🙂

    • நீங்கள் இப்படியெல்லாம் சிந்தித்தால் யாருக்கும் காதல் வராது…!!!

    • ரிஷி..!!

      சிந்தித்தால் ஏற்ப்படும் உடல் மாற்றத்திற்கு இப்படி ஒரு உதாரணம்… 🙂

      புறநகர்ல எதும் ரூம் போட்டு யோசிக்கிறீங்களா..?????

        • நீங்க லவ்வும் பார்ட்டியா, அடிப்படை கட்டமைப்பை மாற்றும் பார்ட்டியா என்று தெரியவில்லை.. ஒன்று மட்டும் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.. உண்மையான, ஆழமான காதல் வாழும், வாழ்க…!!!

          • உண்மையான, ஆழமான காதல் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்குங்க..
            ஆனால் காதலர்கள் வாழவில்லையே!

            • நாடார்களும், நாயுடுகளும் கலப்புத் திருமணத்தை எதிர்த்து வெட்டு,குத்தில் இறங்குவதில்லையே..

              • ஏன் ஐயரையும் முதலியாரையும் விட்டு விட்டீர்கள் அவர்கள் தான் சாதி மறுப்பு திருமணங்களை மிகவும் சகஜமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

  27. கடவுள் இருக்கிறார் என்று வாதாடுகிறவர்கள் அந்த கடவுளின் பெயரால் கட்டமைத்திருக்கும் புராண கட்டுக்கதைகளின் மீது தமது விமர்சனப் பார்வையை செலுத்த தயாரா? அன்று அற்புதங்களை செய்தவர்; மக்களுக்கு காட்சி வழங்கியவர் இன்று அவற்றை செய்ய மறுப்பதேன்? இந்த கேள்விக்கு இங்கு மதவாதிகள் தரப் போகும் பதிலை மிக எளிதில் ஊகிக்கலாம். நேரடியான கேள்விக்கு நேரடியான பதிலை எந்த ஆன்மீகவாதியும் அளிப்பதில்லை. உன்னால் விளக்க இயலாததை விளக்காதே [ when you can’t explain, don’t explain] என்று சொல்வார்கள். இந்த அடிப்படை அறத்தை கடைபிடிக்காத ஒரே கூட்டம், உலகில் மதவாதிகள் கூட்டம் தான்.
    சிலர் கடவுள் மீது எழுப்பப்படும் கேள்விகளை பெரியார் மீது திருப்பி கேட்டு திருப்தி கொள்கின்றனர். மூளைக்கு கொஞ்சமும் சிரமமில்லாத இந்த வேலையை பெருமிதத்தோடு செய்கிறார்கள். பெரியார் பிறந்த நாளன்று ஊதுபத்தி கொளுத்தி, சூடம் காட்டும் விஜயகாந்திடம் போய் இதனை கேட்கலாம்.
    பி.கு. : ஒகிரவர்கள், ஹெல்மட் போன்ற ஏதாவது பாதுகாப்பு கவசியம் அணிந்து செல்லவும். போதையின் எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் பார்க்கவும்

  28. கடவுள் என்பது என்ன? கருத்தா, பொருளா அல்லது இந்த இரண்டுமல்லாத வேறொன்றா. கருத்து என்றால் அது ஒரு பொருளைப் பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். பொருளுக்கு வெளியே தனியே நிற்கும் கருத்துக்கு கற்பனை என்று பெயர். பொருள் என்றால் அது நான்கு பரிமாணங்களுக்கு உட்பட்டது(நீளம், அகலம், உயரம், காலம்) ஆனால் கடவுள் என்பது இந்த இரண்டுமல்ல என்று கடவுளை நம்புபவர்கள் ஒருசேரக் கூறுகிறார்கள். பின் கடவுள் என்பது என்ன? இந்த இரண்டுமல்லாத வெறொன்று என்றால் அது என்னவென்று விளக்கும் கடமை யாருக்கு உண்டு. ஆனால் இதற்கு யாரும் பதிலளிப்பதே இல்லை, அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும். மட்டுமல்லாது பதிலளிக்க முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும். அந்த போதாமையை மறைக்கத்தான். கடவுளின் வல்லமை என்று அவர்கள் நம்புவதை குறித்து பேசுகிறார்கள்.

    அதேநேரம் கடவுள் என்ற ஒன்று இவர்கள் கூறும் உள்ளடக்கத்துடன் இருக்க முடியாது என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறுகிறது. நிலையான இயக்கம் என்று ஏதாவது உண்டென அறிவியல் ஒப்புகிறதா? காலவரம்பற்று இலங்குதல் என்று ஏதாவது உண்டென அறிவியல் ஏற்கிறதா?

    இவைகளை ஒப்பிட்டு பரிசீலனைக்கு உட்படுத்தினால் அவன் நாத்திகவாதி, ஒப்பீடு பரிசீலிக்க மறுத்தால் அவன் ஆத்திகவாதி. அவ்வளவு தான்.

  29. செங்கொடி!!!

    ***பொருள் என்றால் அது நான்கு பரிமாணங்களுக்கு உட்பட்டது(நீளம், அகலம், உயரம், காலம்)***

    விளக்கம் சொல்லுங்கள்…

    காற்று என்பது பொருளா..? நீளம், அகலம், உயரம், காலம் காற்றுக்கு உண்டா..?
    அதைப் பார்க்க முடியுமா..? அல்லது உணரமுடியுமா.??இதே போல் நெருப்பு,நீர்,ஆகாயம் வடிவம் அற்றவை..

    அதுபோலவே கடவுள்!

    • தியாகு,

      காற்று, நீர், ஆகாயம் அனைத்தும் பொருட்கள்(சேர்மங்கள்) தாம். அதாவது அணுக்கள், மூலக்கூறுகளால் கட்டப்பட்டவை தாம். ஆனால் அதன் அணுக்கள் பிற திடப் பொருட்களைப் போல் நெருக்கமாக இல்லாமல் இருப்பதால் அவைகளுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் இருக்கின்றன. அணுக்களுக்கு நான் குறிப்பிட்ட எல்லாம் இருக்கின்றன. இதை எட்டாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். உங்களுக்கு மகனோ மகளோ இருந்தால் அவர்களிடம் கேட்டிருக்கலாம்.

      இதைப் போல்தான் கடவுள் என்கிறீர்களா? பரிதாபம் தான். கொஞ்சம் ‘அது போல, இது போல’ இல்லாமல் நேரடியாய் கடவுள் குறித்து கொஞ்சம் விள்க்கினால் வசதியாக இருக்கும். செய்யலாமா?

      • செங்கொடி..மீண்டும் என் பதிலை நன்றாக படிக்கவும்..எனது எதிர்கேள்விக்கு பதில் சொல்லுங்கள்…அதைவிட்டு விட்டு பில்லகாய் தனமாக உளறல் வேண்டா..

      • ஜம் பூதங்களாய் கொண்டாடபடுவதே கடவுள்…காற்று,நீர்,நிலம்,நெருப்பு மற்றும் ஆகாயம்….அதன் வடிவாகதான்..விக்கிரத்திற்கு வழிபாடு செய்தல் அதாவது..காற்றுக்காக வெண்சாமரம் வீசுதல்..நெருப்புக்காக தீபார்தனைச் காட்டுதல்…நிலத்தின் அடையாளமாக பூக்கள் தருத்தல்..ஆகாயத்தின் சாட்சியாக வெறும் கையை துதித்து நின்றல்….நீருக்கு ஆதாரமாக தண்ணிர்லவுதல்….

        எனக்கு இன்னும் திருமணமாகவில்லை உங்களுக்கும் ஆகிருந்தால் பிள்ளையிருந்தால்..கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்

        • @ஆர்.தியாகு
          அப்படி பூசை செய்வதால் என்ன நன்மை. அப்ப்டி நன்மை இருக்கும் என்றால் மிகபெரிய தீங்கு செய்துவைட்டு (எடுத்து காட்டு போபால் பேரழிவு a man disaster).ஏதாவது பூசை அல்லது உண்டியலில் காசு போட்டால் போதுமா??

          அதேசமயம்
          ஆறு கால பூசை அங்க்குள்ள கோவில்களில் நடக்கவே இல்லையா அங்குள்ள ஐம்பூதங்கள் மகிழ்விக்க படவிலையா ?
          ஊருன்னு இருந்திச்சின்னா நல்லவன் கெட்டவன் எல்லாம் தானெ இருப்பாங்க ஆனா போபாலில்
          சுமார் 20000 பேர் இறந்தனரே .

          a man made disaster
          1981 முதல் அந்த ஆலைக்குள் 7 முறை நச்சுவாயுக்கசிவு………… மே, 1982இல் ஆலையைப் பார்வையிட்ட அமெரிக்க வல்லுநர்கள் குழு, 30 அபாயங்களைப் பட்டியலிட்டு, அவற்றை உடனே சரிசெய்யாவிட்டால் ஆலையில் பேரழிவு நடக்கும் என்று நிர்வாகத்தை எச்சரித்திருந்தது.

          (2009)சென்ற ஆண்டு போபாலுக்குச் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆலையின் மண்ணை கையில் அள்ளி எடுத்து, “என்ன நடந்து விட்டது, நான் செத்தா போய்விட்டேன்?” என்று பாதிக்கப்பட்ட மக்களை நக்கலடித்திருக்கிறார். “போபால்கள் நடக்கலாம். அதற்காக நாடு முன்னேறாமல் இருக்க முடியாது” என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறார் மன்மோகன்சிங்.
          இன்னும் இறைவனின் கடைக்கண் பார்வை மக்கள் மீது படவே இல்லை போலும்

    • நண்பரே…
      //நாத்திகர்களோ – விஞ்ஞானபூர்வமாகக்கடவுள் இல்லை என்றுநிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்பதப்பற்றி யோசிக்காமல் சிலையைப்பற்றி விமரிசனம் செய்கிறார்கள்…
      கடவுள் இல்லை என்பதை இன்னும் நிரூபிக்கவில்லை…//

      விஞ்ஞானம் என்று சொல்லிக்கொள்ளும் நாத்திகர் பலர் அதே ‘விஞ்ஞான’பூர்வமாகக்கடவுள் இல்லை என்று நிரூபிக்க பாடுபட மாட்டார்கள்…

  30. தியாகு,ரிஷி,அம்பி போன்றவர்கள் இந்த விவாதத்தில் அக்கறையுடன் பங்கேற்பதாகத் தெரியவில்லை.உண்மையிலே ’அறிதொறும் அறியாமை’ காணும் இயற்கையின் இயங்கு தன்மை பற்றிய புரிதலை விரும்புகிறவர்களைத் திட்டமிட்டே குழப்புகிற வேலையைச் செய்கிறார்கள்.முகம் காண முடியாத இந்த வலையைக் கவசமாகப் பயன்படுத்திக்கொண்டு பொறுப்பற்ற,போக்கிரித்தனமான கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.உயிரினங்களில் மனித இனத்தில் ஒரு பகுதியினர் மட்டுமே கடவுள்,ஆன்மா,பரம்பொருள்,மறு உலகம் போன்ற விசாரத்தில் இறங்குகின்றனர்.பெரும்பான்மையினர் கடவுள் இத்தியாதிகளை நம்புகின்றனர்.அறிவியல் உலகம் பொருள் முதலாவதாகக் கொண்டு பேரண்டத்துக்குள் பயணிக்கிறது.ஆன்மீக உலகம், அறிவியலின் நீண்ட தேடலின் பயன்களைத் தூர்த்தமாகப் பயன்படுத்திக்கொண்டு,மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கிறது.பேரண்டம் இன்னும் அறிந்துகொள்ளவேண்டிய எல்லாமுமே மனித மூளை சிந்திப்பதனால் விளைகிறவைதான்.சிந்தனை என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று.மிகப்பன்னெடுங் காலத்திய அறிவியல் தேடலில் கடவுள்–என்ற ஒன்று சிக்கவே இல்லை. ஆனால் கடவுள் என்ற கருத்து அல்லது நம்பிக்கை பலரின் மூளையில் மட்டுமே இருக்கிறது.இதைத் தக்கவைப்பதற்குத் தான் ஆன்மீகவாதிகள் அரும்பாடு! படுகிறார்கள்.மதவாதப் புரட்டர்களையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறவர்கள் ஆன்மாவைக்கூட அறிவியலின் பாதையில் தேடவேண்டும்.பெரியாரிடம் ஒரு பக்தர் கேட்டார்:ஐயா,கடவுள் இல்லை, இல்லை,இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களே,ஒருவேளை கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?பெரியார் சொன்னார் ‘ஏற்றுக்கொள்வேன்’. நூறாண்டுகளை நெருங்கி வாழ்ந்த பெரியார் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடவே இல்லை.கண்ணப்ப நாயனார் கதையை இரண்டு முறை சொன்னால் ஒரு முட்டாள் கூட நம்பமாட்டன்..தியாகு போன்றவர்களைத் தவிர.

    • // முகம் காண முடியாத இந்த வலையைக் கவசமாகப் பயன்படுத்திக்கொண்டு பொறுப்பற்ற,போக்கிரித்தனமான கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். //

      மாற்றுக் கருத்துகளை யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் சொல்வது கூட போக்கிரித்தனம் என்பது பாசிசம்…

      // பெரியாரிடம் ஒரு பக்தர் கேட்டார்:ஐயா,கடவுள் இல்லை, இல்லை,இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களே,ஒருவேளை கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?பெரியார் சொன்னார் ‘ஏற்றுக்கொள்வேன்’. நூறாண்டுகளை நெருங்கி வாழ்ந்த பெரியார் கடவுள் மறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடவே இல்லை.//

      ஏற்றுக் கொள்வேன் என்றதோடு நிற்கவில்லை.. கடவுள் இருக்கிறார் என்று பிரச்சாரம் செய்வேன் என்றார்.. அவரால் எதையாவது பிரச்சாரம் செய்யாமல் இருக்கவே முடியாது..

      ஆனால் கடவுள் கடைசி வரை அவரை கண்டுகொள்ளவேயில்லை போலிருக்கிறது… அவரை ’ஆன்மீகப் போக்கிரி’யாகாமல் தடுத்த கடவுளுக்கு நீங்கள் நன்றி சொல்லுங்கள்..

      • ***கடவுள் இருக்கிறார் என்று பிரச்சாரம் செய்வேன் என்றார்.. அவரால் எதையாவது பிரச்சாரம் செய்யாமல் இருக்கவே முடியாது*** நினைக்க நினைக்க சிரிப்பா வருது…அய்யோ அய்யோ..
        கடைசியாய் ஒரு விளம்பர பிரியரிடம் இப்படி ஏமாறுவதுதான் நாத்தியமோ என்னவோ..

  31. God and liquor both are hot issues. One is concept and the other is consumption. Concepts must lead us to conceive the proper approach to reality. Consumption has to enable us to prosper and live our life.
    Concept or consumption mishandling them is always harmful. It suits to any parameters of life.Where the heart is there the pleasure too, It need not necessarily be god or liquor.

  32. சுந்தரபாண்டியன் திரைப்பட விமர்சனப் பதிவில், தேவர் சாதி வெறியைப் பொழிந்த ஆர்.தியாகு அவர்கள் இங்கு வந்து மூட நம்பிக்கை வெறியைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.அவரது சிறுமைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தால் அவர் தன்னைப் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்வார். ஆகவே அறிவுப்பூர்வமாக விவாதித்தால் மட்டும் விவாதத்தைத் தொடரவும்.

    அம்பி, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், மழுப்பிக் கொண்டிருக்கிறார். இந்து மதக் கடவுள்கள் பற்றிய கேவலமான கதைகளைப் பற்றி அவர் வாய் திறக்க மறுக்கிறார். எந்த ஒரு அயோக்கியனும் அந்தக் கதைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கதைகள் பக்தர்களுக்குத் தெரிந்து அவர் விழிப்புணர்வு பெறும் பொழுது கடவுள் சிலைகளுக்குப் பால் அர்ச்சனைக்குப் பதில் உமிழ் நீர் அர்ச்சனையும், மாலை அலங்காரத்திற்குப் பதில் மண்ணாங்கட்டி அலங்காரமும் தான் கிடைக்கும்.

    • // அம்பி, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், மழுப்பிக் கொண்டிருக்கிறார். இந்து மதக் கடவுள்கள் பற்றிய கேவலமான கதைகளைப் பற்றி அவர் வாய் திறக்க மறுக்கிறார்.//

      மாணவன்,

      கிருஷ்ணன், ராமன், சிவபெருமான், மகாவிஷ்ணு போன்றோர் இதைச் செய்திருக்கிறார்கள், அதைச் செய்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆன்மீகவாதிகள் ஏராளமான விளக்கங்களை உபன்னியாசங்கள், புத்தகங்கள் மூலம் கொடுத்திருக்கிறார்கள். இவைகளை இந்துக்கள் முழுமையாகவோ, ஓரளவுக்கோ ஏற்றுக் கொண்டதால்தான் நீங்கள் //இந்தக் கதைகள் பக்தர்களுக்குத் தெரிந்து அவர் விழிப்புணர்வு பெறும் பொழுது கடவுள் சிலைகளுக்குப் பால் அர்ச்சனைக்குப் பதில் உமிழ் நீர் அர்ச்சனையும், மாலை அலங்காரத்திற்குப் பதில் மண்ணாங்கட்டி அலங்காரமும் தான் கிடைக்கும்.// என்று கூறும்போது இன்னும் ஏன் அப்படி ஏதும் பெருமளவில் நடக்கவில்லை என்று புரியும்.. கடந்த ஒரு நூற்றாண்டில் பெரியார் பாணி பகுத்தறிவு உபன்னியாசங்கள், செருப்படி, சிலை உடைப்புகளால் முடியாத ஒன்றைப் பற்றி நீங்கள் நம்பிக்கையுடன் நாளையே நடந்துவிடுமென்பதைப் போல் பேசலாம்.. ஆனால் இது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை அடிப்படையிலான பரிசீலனைகளின்பாற்ப் பட்டது.. இதை நாத்திகர்களின் மட்டையடி தர்க்கங்களால் எதிர்கொள்ள முடியாது..

      // எந்த ஒரு அயோக்கியனும் அந்தக் கதைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. //

      உண்மையில் அயோக்கியர்கள் இந்தக் கதைகளை விளக்கங்கள் ஏதுமின்றி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் அளவற்ற உற்சாகம் அடைகிறார்கள், பின்விளைவுகளை எதிர்கொள்ள தாங்கள் கடவுளர்கள் அல்ல என்பதையும் மறந்து..

      • // நீங்கள் நம்பிக்கையுடன் நாளையே நடந்துவிடுமென்பதைப் போல் பேசலாம் //
        நான் நாளையே நடந்து விடும் என்று கூறவில்லை. பக்தர்களின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி தோழர் மருதையன் எழுதிய “சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா ” எனும் கட்டுரையில்

        ” இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது. சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது”

        என்று கூறுவார். வெறுமனே நாத்திகப் பிரச்சாரம் இந்த நம்பிக்கையைத் தகர்க்க முடியாது. அதற்கு அடித்தளமாக இருக்கிற பொருளாதார உறவுகளைத் தகர்ப்பதன் மூலம்தான் அது சாத்தியம் என்பது தான் என் கருத்து.

        • ” கட்வுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் ” எனும் கட்டுரையில் இருந்து

          // இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை. //

      • // கிருஷ்ணன், ராமன், சிவபெருமான், மகாவிஷ்ணு போன்றோர் இதைச் செய்திருக்கிறார்கள், அதைச் செய்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆன்மீகவாதிகள் ஏராளமான விளக்கங்களை உபன்னியாசங்கள், புத்தகங்கள் மூலம் கொடுத்திருக்கிறார்கள். இவைகளை இந்துக்கள் முழுமையாகவோ, ஓரளவுக்கோ ஏற்றுக் கொண்டதால்தான் //

        நீங்கள் இந்துக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?. பிராமணர் மற்றும் உயர் சாதியினரை மட்டுமா?
        அப்படி என்றால் அது சரி தான். அவ்ர்கள் ஏற்றுக் கொண்டிருருக்கலாம். ஆனால் இந்து என்னும் பட்டிக்குள் சட்ட ரீதியாக அடைக்கப் பட்டுள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு முதலில் அந்தக் கதைகளைப் பற்றியே தெரியாது.

    • மாணவன் தன் பள்ளன் ஜாதி வெறியை காட்டிய போது…நான் சார்ந்த சமுக அக்கரை காட்டினால் தவறா..?

      • சாதியத்தால் அசிங்கப்பட்ட அமுக்கப்பட்ட இழிதொழில்கள் செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்ட அதன் காரணமாய் சாதியின் பெயரை சொல்லவே கூச்சப்பட்ட எந்த ஒரு தலித்தும் சாதி ஒழிய வேண்டும் என்று தான் நினைப்பானே அன்றி சாதி வெறி பிடித்து அலைய மாட்டான்.தன் சாதியை சேர்ந்தவர் அனைவரும் எல்லோரையும் போல் வளர வேண்டும் என்று நினைப்பான். அதற்க்கான முயற்சியை தடுப்பவரை எதிர்ப்பான்.தன்னுடைய பிரச்னைக்கு தன சாதிக்காரன் தான் உதவுவான் என்று கூட்டமாய் இருப்பான்.சாதியே இருக்கக்கூடாது என்பவனிடம் சாதிவெறி எப்படி இருக்கும்.

          • நீ இந்தியனா Mr.Harikumar இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய் இழிதொழில்கள் யாவை என?உன்னை சுற்றி பார் மலம் அள்ளுவது யார் பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பு எடுப்பது யார் செத்த மாட்டை எடுப்பது யார் சுடுகாட்டில் பிணங்களை எரிப்பது யார் சாவு வீட்டில் மேளம் அடிப்பது யார்…யார் யார்…அரிக்குமார்…….அறி குமார்

            • நோவாம மணி அடிச்சிட்டு ______ வளக்குர கூட்டத்திற்கு தெரியாததில் வியப்பில்லை.

        • மீண்டும் ஒரு சாதீய விவாதத்திற்கு நான் புக விரும்பவில்லை…இருப்பினும்..எந்த ஒரு தலித்தும் சாதி ஒழிய வேண்டும் என்று தான் நினைப்பானே அன்றி சாதி வெறி பிடித்து அலைய மாட்டான் என நீங்கள் சொன்ன பிற்ப்பாடே நான் இதை கேட்க எத்தனிக்கிறேன். பள்ளர் தேவேந்திரகுல வேளாளரானுதும் பின் தேவேந்திரரானதும் பின் மள்ளரனதும் எதனால்…??

          பி.கு: நான் இதைப்பற்றி மீண்டும் ஒரு நீண்ட விவாதத்திற்கு அழைத்துப்போய்..வினவு..மீண்டும்..ஆதிக்க சாதிக்கு எதிராய் அதன் போராட்டம் தொடரும் என கூறி..கருத்துப் பதிவை இந்த தலைப்புக்காண கருத்துப்பதிவை நிறுத்தவைக்க விருப்பமில்லை..!!!

          • அவன் பௌத்தனாக இருந்ததால் சைவம் தழைத்து அவன் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டதால் நிலமற்றவனாக அடிமை வாழ்க்கை திணிக்கப்பட்டதால் இப்பொழுது படித்து முன்னேறி தன்னுடைய வரலாற்றி கொஞ்ச கொஞ்சமாய் தெரிந்து கொள்வதால்

      • அக்கட்டுரையின் பின்னூட்டங்களைப் படித்தாலே யார் சாதி வெறியன் என்பது தெரியும். அதே போல், ஆதாரங்களோடு பதிலளித்த கடுங்கோன் பாண்டியன் அவர்களுக்கு நீங்கள் வாயாலேயே வடை சுட்ட கதையும் தெரியும்.

        • எது ஆதாரம்? பொய்யா.?.திரித்து சொல்வதா?..போலி நாடகமிடுவதா..? நன்றாக அந்த பின்னுட்டத்தை ஜாதி வெறியை சுவற்று ஆணியில் மாட்டிவிட்டு மீண்டும் படியுங்கள் கீப்போர்டில் வடை சுட்டது யார் என்று தெரியும்..!

          • பொய் என்றால் நிரூபிக்க வேண்டியதுதானே. திரித்துச் சொன்னால் நீங்கள் சரியாக சொல்ல வேண்டியதுதானே. முதலில் திவாகரன் நிகண்டு பற்றி ஒன்றுமே தெரியாமல் நீங்கள் கிண்டல் செய்ததும், பின்னர் கடுங்கோன் பாண்டியன் அதற்கு ஆதாரம் அளித்தவுடன் நீங்கள் பொத்திக் கொண்டது, இது போன்ற விசயங்களை எல்லாம் எடுத்து விட்டால் நாறி விடும்.

            எமக்கு இந்த ஆண்ட பரம்பரை, மோண்ட பரம்பரையில் எல்லாம் மயக்கம் இல்லை. பெரும்பானமையான தமிழ் மன்னர்கள் ராஜராஜன் உள்ளிட்டு பார்ப்பன அடிவருடிகளாக இருந்து கொண்டு மக்களை வதைத்திருக்கிறார்கள்.

            உங்கள் விவாத முறை எப்படி இருந்தது என்பதைக் கூறுவதற்காக அப்படிக் கூறினேன்.

  33. கடவுள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவலாம்.

    கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
    https://www.vinavu.com/2008/10/16/god/

    செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?
    https://www.vinavu.com/2010/07/08/synthetica/

    சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
    https://www.vinavu.com/2009/01/15/sabice/

  34. மாணவன் நீங்கள் இன்னும் வளர்னும் தம்பி!

    கடவுள் இல்லை என்ற ஆதாராம் இருக்கா.?..பில்லகாய் பையன்கள் கட்டுரை என எடுத்துக்காட்டு தரும் நீங்கள் இன்னும் வளரனும் தம்பி!

    நாங்கள் எதிர்த்து பதியும் கருத்துக்க்கள் எல்லாம்…தோழர்கள் எழுதும் கட்டுரைக்கு எதிராய்…

    உங்களைப்போல் புனைப்பெயரில் ஒழிந்துக்கொண்டு என்னால் பதில்சொல்ல இயலாது..

    ஒரு கருத்து பதிவதின் பெயரில் ஒருவன் பெரிய ஆளாக ஆகலாம் என்று நீங்கள் நினைத்தால் எல்லா அரசியல்வாதிகளும் வினவு தளத்தில் கருத்துப்போண்டுக்கொண்டிருப்பர்.

    மாணவன் நீங்கள் இன்னும் வளர்னும் தம்பி!

    • எனக்கு தெரிந்து நீங்கள் இங்கே ஒரு ஐம்பது பேரையாவது வளரனும் தம்பி என்று பல வருடங்களாய் வாழ்த்தி இருக்கிறீர்கள் தியாகு அவர்களே.ஆனால் வாழ்த்துவதற்கான தகுதியை நீங்கள் வளர்த்துள்ளீர்களா?ஒரு ஆழ்ந்த ஆய்வோ புரிதலோ பொது அறிவோ எதுவும் இல்லாமல் கண்டது கேட்டதை வைத்தே காலம் தள்ளுவதற்கு பதில் பொறுப்பாக பசங்களை படிக்க வைங்க அண்ணா.

      • இப்படி கருத்து பதிவதில் இரண்டு வர்க்கம்தான் இருக்கிறது

        1. படித்ததை கெட்டதை அப்படியே வாந்தி எடுப்பது – இவர்களிடம் எதிர் கேள்வி கேட்டால் பதில் தெரியாது அல்லது சிந்திக்க தெரியாது..உடனே தனி நபர் தாங்குதல் தருவர்..

        2. படித்ததை கெட்டதை அப்படியே சிந்தனையில் அசைப்போட்டு அதன் சாதக பாதகங்களை அறிந்து..பதிவர்

        மீனவன் இதில் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர் என்று நீங்களே சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்..

    • அய்யா, வளர்ந்த தியாகு,நான் மேலே கொடுத்த கட்டுரைகள் எல்லாம் ஆதரங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது. ” கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் ” என்னும் கட்டுரையிலிருந்து
      // கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!

      காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.

      டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (Mறீ ஸ்சன்) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

      தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.

      இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

      மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (ணெஉரொ Tகெஒலொக்ய்) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.

      எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.// முடிந்தால் இதையும், கட்டுரையையும் முழுமையாகப் படித்து விட்டு ‘அறிவுப்பூர்வமாக’ அதை மறுத்து விவாதிக்கவும்.

      • மேற்சொன்ன கட்டுரை எல்லா மதத்தினுள் இருக்கிற சாதாரண சாமியடிகளை வைத்து சோதிக்கப்பட்டதாகவே சொல்லிகிறது, மேலும் தங்கள் நோக்கத்திற்காண சோதனை வெற்றி பெற வேண்டும் என்பதாலேயே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

        விஞ்ஞானம் என்பது ஒரு செயலின் செயல்பாடையும் விவரித்துச் சொல்லலாம்…என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என ஆதாரத்துடன் சொல்லலாம்…அதும் ஒரு எல்லைக்கு உட்ப்பட்டே..விஞ்ஞானத்தையும் தாண்டி போனால் மெய்ஞ்ஞானம் இருக்கிறது..

        உலகத்தில் ஆங்கிலேயர்கள் கிரகங்களை பற்றி விவரிக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த தமிழர்கள் கிரங்களை பஞ்சாங்கம் என்னும் பெயரில் சொல்லிக்கொணடிருந்தார்கள்..மறுக்கமுடியுமா..? (பஞ்சாங்கத்தின் நோக்கத்தை விடுங்கள்!) கிரகங்களை எல்லோருக்கும் முன்பே விஞ்ஞானம் அறியாத என் தமிழ் மூதாதையினர் சொன்னார்களா இல்லையா..?.மூளை என்பது உடலில் உள்ளது அதனால் அதை மட்டும்தான் ஆராய முடியும்..அறிவுக்கு அப்பாற்ப்பட்டதை ஆராய முடியாது

        கீரை விற்றுக்கொண்டு வீதியில் போகிறவனின் சத்தத்தை வைத்தே.. இன்ன மணிக்கு இவன் இறப்பான் கீரை விற்றவனும் அவ்வறே இறப்பான் – இது தமிழ் மருத்துவத்தில் உள்ளது (பனையோலை) தின்னையில் உட்கார்ந்துக்கொண்டே அது இன்ன நோய் என சொல்ல முடிந்ததே தமிழ் மருத்துவனால், அது மெஞ்ஞானம்.!.அவனை இந்த விஞ்ஞானத்தில் உட்படுத்தினால் அவன் மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதையோ.. அலலது டெம்பரல் லோப் என ஆராயலாம்.. எப்படி அந்த தமிழ் மருத்துவன் சரியாக அவன் மரணத்தை சொன்னான் என் விஞ்ஞானத்தால் கண்டுப்பிடிக்க முடியாது..!

        எப்படி கிரங்கள் பற்றி எந்தவித கருவிகள் இல்லாமல் சொன்னார்கள் என விஞ்ஞானம் ஆராய்ந்து சொல்லமுடியுமா..?

        • Boss don’t be funny!!!!, do you have any proof for those medicines practiced by your old tamil people??
          Even I heard many such stories. We people always waste time just by pricing our useless thoughts. If something is true then everyone should able to experience it. Now modern medicines are doing that. Even so called duplicate doctor also able to give treatment now days!!
          Regarding astrologers and panchang, did they give correct details? They said moon is big and all data they captured based on moon. And they considered stars as planets. Of course, I am not blaming them they tried based on their knowledge not by superstitious power. If there is superstitious power then everything should be right and no one should able to question it. But whatever there in panchang everything based on moon and its cycle and based on the wrong prediction about the system.

          • உங்கள் முடிவு என்ன ?முயற்சி செய்யாதே..’இல்லை’ என்று சொல்லிவிட்டு பேசாமலிரு..என்பதுதானே..! இல்லை என்று சொல்வதன் முலமாக, நான் சொல்வதை மட்டும் கேள் எதிர் கேள்வி கேதாதே என்பதன் உட்கருத்துதானே…
            பாசிசத்தின் முதல் தத்துவமே இதுதான்.

        • // மேற்சொன்ன கட்டுரை எல்லா மதத்தினுள் இருக்கிற சாதாரண சாமியடிகளை வைத்து சோதிக்கப்பட்டதாகவே சொல்லிகிறது //

          அது சரி, ஸ்பெசல் சாமியாரிடம் சோதனை செய்தால் தான் தியாகு நம்புவார் போல.

          உமது மெய்ஞானத்தைப் புரிந்து கொள்வதற்குக் கூட அறிவியல் தேவை.
          அறிவியலை வைத்து மதத்தைப் புரிந்து கொள்ளலாம், விளக்கலாம். ஆனால் மதத்தை வைத்து அறிவியலைப் புருந்து கொள்ள நினைப்பது முட்டாள் தனம். அறிவியல் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்று கலந்து விட்டது. இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை தொழில் நுட்ப வசதிகளும் அறிவியல் கண்டு பிடிப்புகள்தான். மெய்ஞானிகள் விஞ்ஞானத்தின் உதவியால்தான் வாழ்கிறார்கள்.

  35. தியாகு தன்னை சுய விமர்சனம் செய்து கொண்டதற்கு நன்றி. //படித்ததை கெட்டதை அப்படியே வாந்தி எடுப்பது – இவர்களிடம் எதிர் கேள்வி கேட்டால் பதில் தெரியாது அல்லது சிந்திக்க தெரியாது..உடனே தனி நபர் தாங்குதல் தருவர்..//

    • நான் யாரயும் தனிநபர் தாக்குதல் தொடுப்பதில்லை…

      மேலே மீனவன்,செங்கொடி மற்றும் அஸ்வின் இதைதான் செய்திருக்கிறார்கள்

  36. மனுசன் மதங்களை படைத்தான்.. மதங்களோ தெய்வங்களை படைத்தது..
    மனுசனும் மதங்களும் தெய்வங்களும் கூடி – இந்த
    மண்ணை கூறு போட்டான். அதோடு தம்
    மனசையும் கூறு போட்டான்

    இந்துவானான், முஸ்லிமானான், கிருத்துவன் என்றான் – கடைசியில்
    தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியாதவனானான்.
    இந்த நாட்டையே பைத்தியகாரத் தலமாக்கிவிட்டான்.
    ஆயிரமாயிரம் மனித இதயங்களை ஆயுத கிடங்குகளாகிவிட்டான்.

    தெய்வம் தெருவில் தினமும் செத்துமடிகிறது. அதைப்பார்த்து சாத்தான் சிரிக்கிறது.

    உண்மை எங்கே ? எழில்கொஞ்சும் அழகெங்கே ? – கடைசியில்
    நம் சுதந்திரம் தான் எங்கே ? நம் இரத்த பந்தங்கள் எங்கே ?
    மறையாத அன்புகொண்ட நெஞ்சங்கள் எங்கே ?
    ஆயிரம் யுகங்களில் வரும் அவதாரங்கள் எங்கே ?

    மனுசன் தெருவில் தினமும் செத்துமடிகிறான். அதைப்பார்த்து மதங்கள் சிரிக்கிறது.

  37. வேற ஒரு பதிவுல மொக்கையா கமன்ட் போட்டுக்கொண்டு இருந்த என்னை இங்கே வருமாறு அழைத்த நாகராஜ் அண்ணனுக்கு முதற்கண் ஒரு கும்புடு. வந்துள்ள மறுமொழிகளை நான் முழுதுமாக படிக்கவில்லை. Nevertheless, let me throw my two cents.

    அறிவியல் என்பதும் ஓரளவு நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவதே. Newton’s law of gravitation இன்று உண்மையாய் இருக்கிறது. அது எல்லா காலத்திலும் உண்மையாய் இருந்தது என்பதும் பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலும் உண்மையாய் உள்ளது என்பதும் நிரூபிக்கப் படவில்லை. இது வரை அந்த விதிக்கு எதிரான எந்த ஒரு நிகழ்வும் கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படி ஒரு எதிர் ஆதாரம் கிடைக்கும் வரை இந்த விதியை உண்மையென்று விஞ்ஞானிகள் கொள்கிறார்கள். அதனால்தான் அதை Newton’s theorem of gravitation என்று அழைப்பதில்லை, Newton’s law of gravitation என்றே அழைக்கிறார்கள். கணிதத்தில் வரும் Lagrange’s theorem of subgroups எனபது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. அதை மாற்றவே முடியாது. அறிவியலின் விதிகள் (Laws) அப்படிப்பட்டதல்ல. எனவே அறிவியல் கூற்றுகளை முக்கால உண்மைகளாக கொள்ள முடியாது. அவை மாற்றத் தக்கவை. ஆனால் அறிவியலுக்கு ஒரு மிகச்சிறந்த பண்பு உள்ளது. Hypothesis-prediction-testing என்ற மிக வலுவான கட்டமைப்பில் அது இயங்குகிறது. ஆன்மிகம் அப்படிப்பட்டதல்ல. “நான் உணர்ந்தேன். நீயும் முடிந்தால் உணர்ந்துகொள். இல்லாவிட்டால் நான் சொல்வதை நம்பு” என்ற அடாவடி முறையை அது கொண்டுள்ளது.

    ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மீகவாதிகளை உண்மையானவர்கள் என்றே நான் நம்புகிறேன். அதாவது அவர்கள் ஏமாற்றுவதற்காக எதையும் சொல்லவில்லை. தாங்கள் உணர்ந்ததையே சொன்னார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் சொல்வதை சரி பார்க்க இரண்டு வழிகள் உள்ளன. அவர்களே சொன்ன தியானம், தனக்குள்ளே தேடுவது, குகையில் அமர்ந்து தவம் இருப்பது என்பன ஒரு வகை. எனக்கு குடும்பம், குட்டி இருப்பதால் இதை நான் என்னளவில் ஒதுக்கிவிட்டு, இரண்டாவது முறையான அறிவியல் முறைக்கு வருவோம். அவர்கள் உணர்ந்த சமாதி, முத்தி நிலை போன்றவை வெறும் மூளையில் ஏற்பட்ட தூண்டுதல்களாக இருக்கலாம். அவர்கள் கூறும் ஆன்மா என்பதும் வெறும் மூளையின் கிளர்ச்சியாக இருக்கலாம். இன்றைய அறிவியலின் கூற்று இது. ஆனால் அறிவியல் கோட்பாடுகள் மாறக் கூடியவை. நாளையே இந்த அனுபவங்களுக்கும் உடலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்டுபிடிக்கப் படலாம். உடலில் இருந்து வேறுபட்ட ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக கண்டுபிடிக்கப் படலாம். இதற்கு மாறாக, மேற்கண்ட அனுபவங்களை தரக்கூடிய ஒரு வேதிப் பொருளும் கண்டுபிடிக்கப் படலாம். இவ்விரண்டு விளைவுகளில் இரண்டாம் (வேதிப் பொருள் கண்டுபிடிப்பு) விளைவுக்கே சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், இப்படித்தான் நடக்கும் என என்னால் உறுதியிட்டு கூற முடியவில்லை. மூளை, மனம் போன்றவை சம்பத்தப் பட்ட அறிவியல் ஆராய்ச்சிகள் இன்னும் இளம் நிலையிலேயே இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆகவே, இன்றைய அறிவியல் பார்வையின் மீது bet கட்டிவிட்டு காத்திருப்பதே சரி என்பது என் நிலை.

    மற்றபடி, சரக்கு, கஞ்சா, போதைப்பொருள்கள் தரும் நிலைக்கும் மேற்கண்டோர் சொன்ன சமாதி நிலைக்கும் சம்பந்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். நானும் சரக்கு அடித்திருக்கிறேன். சமாதி நிலை எல்லாம் வரவில்லை. மறுநாள் தலைவலி தான் வந்தது. கடைசியாக, எந்த ஆதாரமும் இல்லாமல் “இன்ன பிற நிலைகளெல்லாம் ஒரு குவார்டரில் எளிதில் ‘உண்மை’யாகவே அடையக்கூடியவை” என்ற வினவின் நையாண்டியை வன்மையாக கண்டிக்கிறேன். தியானம் போன்றவற்றின் மூலம் சமாதி நிலையை உணர்ந்துவிட்டு, அதே நிலையை ஒரு குவார்ட்டரின் மூலமும் அடைந்த பின்பு இக்கருத்தை எழுதுவதே விஞ்ஞான முறை. அறிவியல், அறிவியல் என நொடிக்கொருதரம் அலறும் வினவு அறிவியல் முறையை அறிந்து கொள்வது நலம்.

    • //தியானம் போன்றவற்றின் மூலம் சமாதி நிலையை உணர்ந்துவிட்டு, அதே நிலையை ஒரு குவார்ட்டரின் மூலமும் அடைந்த பின்பு இக்கருத்தை எழுதுவதே விஞ்ஞான முறை.//

      அறிவியலில் முக்கியமான பண்புகள் எந்த ஒரு விசயத்தையும் விமர்சன கண்ணோட்டத்தோட (critical approach) தான் பார்க்கும் அதன் பின் தாங்கள் சொல்வது போல் Hypothesis-prediction-testing. சரி அது இப்ப பிரச்சனை இல்ல.

      எனக்கு பரவசனிலை பற்றி ஒண்ணும் தெரியாது.இனிப்புனே என்னனு தெரியாதவங்கிட்ட இனிப்பு சுவையை எப்படி சொல்லி புரிய வைப்பேன்னு சொல்வீங்க முதலில் ஆறு சுவை இருக்கு இனிப்புன்னா இப்படி தான் இருக்கும் நீங்க தானே விளக்கனும்.
      இல்லன்னா இப்படி யோசிப்போம். எனக்கு பரவச நிலைன்னா என்னனு தெரியாது எனக்கு தெரிந்த்து எல்லாம் கன்சா ,சரக்கு போன்றவை அடித்தால் தன்னை மறக்கலாம் அப்படின்னா ரெண்டும் ஒண்ணுன்னு தானே நினைப்பேன்.
      அளவில்(quantitative) வேண்டுமென்றால் வேறுபடலாம் ஆனால் பண்பில்(qualitative) இரண்டும் ஒன்று ன்னு தானே நினைப்பேன்.

      this essay has both critical approach and hypothesis.every research starts with an hypothesis.if hypothesis is wrong prove it.

      • நல்ல கேள்வி. எனக்கும் சமாதி நிலை எப்படி இருக்கும் என்று தெரியாது. சரக்கு அடிப்பதனால் வரும் நிலையை உணர்ந்திருக்கிறேன். இது சாமாதி நிலையிலிருந்து வேறானதா என எனக்கு நிச்சயம் தெரியாது. ஆனால், சரக்கு போதையைப் போன்றதுதான் சமாதி நிலை என்றால் நான் நம்பும் ரமண மகரிஷியும், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரும், உபநிடத ரிஷிகளும் சமாதி நிலையை அவ்வளவு உயர்வாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். மேற்கண்ட பெரியோர் உணர்ந்த `சமாதி’ நிலைகள் எல்லாம் ஒன்றுதானா எனவும் எனக்கு நிச்சயமில்லை. ஆனால் அனைவரும் தியானத்தின் வழியே இந்நிலையை அடைந்ததால் ஒன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

        சமாதி நிலையம் மப்பும் ஒன்றுதானா என அறிய ஒரு வழிதான் உள்ளதாக எனக்குப் படுகிறது. மேற்கண்டோர் சமாதி நிலை என்ற அனுபவத்தை தியானத்தின் மூலம் அடைந்ததாக கூறுகின்றனர். எனவே தியானத்தின் வழியே சென்று பார்த்து என்ன என்ன அனுபவங்கள் கிடைக்கின்றன என அறிந்து அவ்வனுபவங்களும் சரக்கினால் வரும் போதையும் ஒன்று தானா என சோதிக்கலாம்.

        மேலும் தியானத்தில் பலவித அனுபவங்கள் கிடைப்பதாகவும், அதன் உச்சநிலையே சமாதி அனுபவம் என்றும் மேற்கண்டோர் கூறுகிறார்கள். தியானம் செய்யும் பொது சமாதி நிலையை அடைந்து விட்டோமா என எப்படி அறிவது என்பதும் கடினமான கேள்வி. ரமணர் போன்றோரை அணுகி நமது அனுபவத்தை விளக்கி இதே அனுபவம் தான் உங்களுக்கும் கிடைத்ததா என உரையாடுவது ஒன்றே வழி என எனக்குப் படுகிறது.

        நான் தியானம் செய்ய மாட்டேன். இருந்தாலும் சரக்கு மப்பும் சமாதி நிலை அனுபவமும் வேறானவை என நிரூபி எனக் கேட்கிறீர்கள். இதற்கான தகுந்த சோதனை எதுவும் எனக்கு தெரியவில்லை. யோசித்துப் பார்த்து ஏதாவது தோன்றினால் சொல்கிறேன்.

        இன்னும் precise ஆக சொன்னால் ‘சமாதி நிலை அனுபவம்’ என்பது `தியானத்தின் மூலம் அடையப்படும் எதோ ஒரு நிலை’ என்பது எனது (imprecise) definition. எனவே சரக்கு போதையும், சமாதி நிலையும் ஒன்றா என அறிய, by definition, தியானம் செய்வதே ஒரே வழி.
        இப்படிப்பட்ட சமாதி நிலையை அடைய நாம் ஏன் முயல வேண்டும், அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்பது அடுத்த கேள்வி. இதற்கு மேற்கண்டோர் சொல்லும் பதில் “அடைந்து பார். உனக்கே தெரியும்”.

        (வினவு தியானம் செய்யாமல், வேறெந்த முறையையும் பின்பற்றாமல் மப்பும், சமாதி நிலையும் ஒன்றே எனச் சொன்னதால் தான் நான் நீங்கள் கோடிட்டுக் காட்டியதை எழுதினேன்).

        • //ரமண மகரிஷியும், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரும், உபநிடத ரிஷிகளும் சமாதி நிலையை அவ்வளவு உயர்வாக சொல்லியிருக்க மாட்டார்கள்//

          தத்துவார்த்த ரீதியான விளக்கமும் இருக்காது,தர்க்கரீதியான விளக்கமும் இருக்காது மேலும் “அடைந்து பார். உனக்கே தெரியும்” போன்ற விளக்கம்????? தான் தருவார்கள்
          அவர்க்ள் சொல்வதால் மட்டும் நம்பி விடுவீர்களா ?

          விவேகானந்தர் மனு சாஸ்திரத்தை ஏற்று கொண்டவர் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
          அதை பற்றி எங்களுக்கு விளக்கவும்.

          உபநிடதங்களில் இருக்கும் கருத்துக்களில் ஏதாவது ஒன்றை எடுத்து விவாதிக்க தயாரா?

          • / அவர்க்ள் சொல்வதால் மட்டும் நம்பி விடுவீர்களா ?
            ஆம் நம்பிவிடுவேன்.

            பெரியாரின் கருத்துக்களில் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் “காசி நகரில் என்னை பார்ப்பனர்கள் தீட்டு என்று சொல்லி ஒதிக்கி வைத்தார்கள்” என்று சொன்னதை நம்புகிறேன். “எங்கே, அப்போது எடுத்த வீடியோ ஆதாரம் காட்டு” என கேட்க மாட்டேன். அவரது நேர்மையை நம்புகிறேன். அது போல ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் ஆகியோரின் நேர்மையை நான் நம்புகிறேன். இது அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்ததால் விளைந்த நம்பிக்கை. இதனால் பிறந்ததே, ஒரு சாதாரண அனுபவத்தை மிக உயர்வாகச் சொல்லி பிறரை ஏமாற்ற மாட்டார்கள் என்ற எண்ணம். ஆனால், என்னைப் போல் நீங்களும் நம்ப வேண்டும் என்று நான் நிர்பந்திக்கவோ, விவாதிக்கவோ மாட்டேன்.

            ரமணர் போன்றோர் கூறுவது புற உலகைப்பற்றி அல்ல. தங்களுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பற்றி. அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க அவர்கள் விஞ்ஞானப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அதனாலேயே அவர்கள் சொல்வது பொய் என்றாகிவிடாது. அவர்கள் முன்வைக்கும் தியானம் செய்து பார்த்தல் என்பதும் ஒரு சோதனையே. அதை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள்? விஞ்ஞானப் பயிற்சி அற்ற ஒரு பாமரன் யாரும் செல்லாத ஒரு காட்டுப் பகுதியில், புது வித மிருகம் ஒன்றை பார்த்ததாகக் கூறுகிறான். எங்கே, போட்டோ காட்டு, வீடியோ காட்டு என்று கேட்பது நிச்சயம் நியாயம் தான். அதற்கு அவன் இதெல்லாம் எனக்கு தெரியாது. காட்டுக்கு வா உனக்கும் காட்டுகிறேன் என்கிறான். அவனோடு சென்று பார்க்காமல் அவனை பொய்யன் என்று சொல்வது சரியான வழிமுறை அன்று.

            இந்த விவாதத்தில் நான் கூறுவதெல்லாம் ஒரு சிறிய கருத்தே. தியானம் செய்தால் சமாதி நிலை போன்ற அனுபவங்கள் கிடைத்ததாக ரமணர் போன்றோர் கூறுகிறார்கள். இதனை தர்க்க ரீதியாக நிரூபிக்காமல், “தியானம் செய்து பார்த்தல்” என்ற சோதனையை மட்டுமே முன் வைக்கிறார்கள். இந்த சோதனையை செய்து பார்க்காமல் அவர்களை நிராகரிக்காதீர்கள். அது விஞ்ஞான முறை அன்று.

            விவேகானந்தர் மனு தர்மத்தை ஆதரித்ததாக நான் இது வரை படித்ததில்லை. சுட்டி கொடுத்தால் படித்து தெரிந்து கொள்வேன்.

            உபநிடதங்கள் பற்றியோ, விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ரமணர் பற்றியோ, ஆன்மிகம் பற்றியோ விரிவாக விவாதிக்க நான் இதிலெல்லாம் அதிகம் படித்தவன் இல்லை. ஆன்மீக அனுபவங்கள் அடைந்தவனும் அல்லன். எனவே மேற்சொன்ன “சிறிய கருத்து” தவிர மற்றவற்றைப் பற்றி விவாதம் செய்ய விருப்பமில்லை என்று கூறி ஜகா வாங்கிக்கொள்கிறேன்.

            • மேற்சொன்ன பதிலில் கடைசி வாக்கியத்தை இப்படி திருத்த விரும்பிகிறேன்.

              எனவே ஆன்மிகம் பற்றி விரிவான விவாதம் செய்ய எனக்கு வக்கில்லை என்ற காரணத்தால் மேற்சொன்ன “சிறிய கருத்து” தவிர பிறவற்றை பற்றி விவாதம் செய்ய நான் தயார் நிலையில் இல்லை என்று கூறி ஜகா வாங்கிக்கொள்கிறேன்.

              • ஜகா வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டாலும், முற்றிலுமாக ஓடுவதற்கு முன் ஒரு கருத்தை பதிவு செய்ய விருப்பம். (இந்த வெட்டி விவாதத்திற்கு இத்தனை `தம்’ தேவையா என மனைவி திட்டுகிறாள்).

                உபநிடத விவாதம் பற்றி கூறினீர்கள். உபநிடத கருத்துக்கள் அனைத்தோடும் எனக்கு உடன்பாடு இல்லை, பலவற்றை சந்தேகப் படுகிறேன். உதாரணமாக இந்து மதத்தின் (அல்லது உங்கள் பார்வையில் “பார்ப்பனீய இந்து மதத்தின்”) அடிப்படை கோட்பாடான பிறப்பு இறப்பு சுழலை கட உபநிடதம் மந்திரம் ஆறு தெளிவாக பதிவு செய்கிறது. எமதர்மன் நசிகேதஸ் என்ற சிறுவனைப் பார்த்து “புன: புனர் வஷமாபத்யதே மே” என கூறுகிறான். அதாவது, (இந்த உலகம் தான் எல்லாம் என கருதுகிறவன்) மீண்டும் மீண்டும் என்னை அடைகிறான். இங்கே எது மறு பிறப்பு எடுக்கிறது என்றால் “ஆன்மா” என்று பதில் வருகிறது. தியானத்தின் மூலம் “நாம் உண்மையில் ஆன்மாவே என உணரலாம்” என கூறப்படுவதால், இந்த ஆன்மா என்பது ஒரு உணர்வு என்பது என் புரிதல். அப்படி அது வெறும் உணர்வென்றால், இன்றைய அறிவியல் புரிதலின் படி இது மூளையில் அடங்கிவிடும். இறப்புக்குப் பின் (என் உடலை எரிக்கும்போதாவது), வினவு சொன்னது போல் அது அழிந்துவிடும். பின் எப்படி வேறொரு புதிய உடலில் புக முடியும் என்ற கேள்வி எழுகிறது. எனவே மூளைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இது இருக்க வேண்டும். அது atom களால் ஆனதா, எதனால் ஆனது, அது வேறு ஒரு உடலின் செல்லும் mechanism என்ன என்பதற்கெல்லாம் பதில் இல்லை. அல்லது எனக்கு சுத்தமாக புரியவில்லை. இதற்கு மேல் கேட்டால் சங்கரர், ராமானுஜர், மத்வர் என்றெல்லாம் கூறி குண்டு குண்டு (வடமொழி) புத்தகங்களை காட்டி பயமுறுத்துகின்றனர், யுவர் ஹானர். எனவே சொல்லப்படும் கூற்று என்ன என்பதே எனக்கு தெளிவாக புரியாததால் இந்த உபடநிடத்தக் கருத்தை நான் சந்தேகிக்கிறேன் அல்லது ஏற்கவில்லை என கொள்ளலாம்.

                ஆனால், உபநிடதங்களை முழுதுமாக நிராகரிக்க நான் தயாரில்லை. இவை வெவ்வேறு காலகட்டங்களில் பல ரிஷிகளால் எழுதப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் கேட்டபடி விவாதம் செய்ய ஏதாவது ஒரு கருத்தை எடுப்பதானால் ஈசாவாஸ்ய உபநிடதம் மந்திரம் பதினாறைத் தேர்ந்தெடுப்பேன். இதன் கடைசி வரி “யோஸாவஸௌ புருஷ: ஸோஹமஸ்மி” என்கிறது: “யார் அந்த நபர்? அது நானே” என்பது இதன் பொருள். இந்த உபநிடதத்தின் முற்பகுதி, தியானத்தின் வழியே சென்று பார்க்கும் போது “ஓர் ஒளிக்காட்சியை (இறைவனை)” கண்டதாக கூறுகிறது. மேலே சொன்ன மந்திரம் “அந்த ஒளி நானே” என்கிறது. முன்பு சொன்ன கூற்றைப் (பிறப்பு இறப்பு சுழல்) போல் இல்லாமல், இந்த கூற்று எனக்கு புரிகிறது. தியானத்தின் மூலம் பெற்ற ஓர் பேரனுபவத்தை இந்த முனிவர் பதிவிடுகிறார். இந்த கூற்று உண்மை என நான் நம்புகிறேன். ஏனெனில் நான் அடிக்கடி குறிப்பிடும் மற்ற பெரியோரும் இதைப் பேசியுள்ளனர். மேலும், இப்படிப்பட்ட அனுபவம் சாத்தியமே என நான் கருதுகிறேன்.

                மேற்சொன்ன அனுபவம் மூளையில் ஏற்படும் வெற்று கிளர்ச்சியாக இருக்கலாம். இதற்கே அதிக சாத்தியக்கூறு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒரு படி மேலே போய் இதே அனுபவத்தை தரும் ஒரு வேதிப் பொருளை எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பர் என்பதே என் நம்பிக்கை. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அனுபவம் உள்ளது என்பதே என்னை வியக்க வைக்கிறது. இப்படிப்பட்ட அனுபவம் கண்டபின் ரமணர், விவேகானந்தர் ஆகியோரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. நான் இன்று பெரிதாக எண்ணும் உலக விருப்பங்கள் அனைத்தும் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாத சந்நியாசி நிலைக்கு செல்கின்றனர். எனவே, குறைந்த பட்சம் இந்த அனுபவம் looks very interesting to me . இந்த அனுபவத்தை தியானம் மூலம் சோதித்துப் பார்க்காமல் இதை பொய் என்று சொல்லி புறந்தள்ள நான் தயாரில்லை.

                நீங்கள் கேட்ட விவாதத்திற்கு மேற் சொன்ன உபநிடத அனுபவத்தை நான் எடுத்துக் கொள்வேன். ஆனால், அத்தகைய விவாதம் நாம் தற்போது செய்து கொண்டிருக்கும் விவாதத்தினின்றும் வேறானதாக இருக்காது. மேலும், இந்த அனுபவத்தை நான் பெற்றதில்லை என்பதால் இதை விரிவாக விவாதிப்பது உங்களுக்கோ எனக்கோ பயன் தருவதாக அமையாது. எனவே நான் இந்த விவாதத்தில் இருந்து ஜகா வாங்கிக்கொள்கிறேன்.

                (வா ஓடிடலாம், இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா உன் கோமணத்தையும் உரிவிடுவாங்க, என்பது என் மனைவி கூற்று 🙂 )

  38. தியானத்தில் சமாதி நிலை கைகூட ,கஞ்சாவை அதிகமாக பயன்படுத்துவோர் ஆன்மீக வாதிகளே.

    • அதே கருத்தை மீண்டும் வேறு வார்த்தைகளில் சொல்வதற்கு மன்னிக்கவும்.

      கஞ்சா அடிப்பதால் கிடைக்கும் அனுபவமும், தியானத்தின் மூலம் கிடைக்கும் சமாதி நிலையும் ஒன்றா, அல்லது வேறானவையா என எனக்கு உறுதியாகத் தெரியாது. நாகராஜ் சொன்னது போல் இவ்விரண்டுக்கும் quantitative difference தவிர qualitative difference இல்லாமலும் இருக்கலாம். ஆனால், கஞ்சா அடிப்பதால் சமாதி போன்ற ஒரு நிலையை அடைந்து விடலாம் என்றால், நான் மதிக்கும் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றோர் ‘தியானம் செய், மனதை உள்முகமாகத் திருப்பு, நான் யார் என்ற கேள்வி கேள்’ என்றெல்லாம் பக்கம் பக்கமாக அறிவுரை கூறி இருக்க மாட்டார்கள் என நான் கருதுகிறேன். எளிமையாக “கண்ணுங்களா, எல்லாரும் கஞ்சா அடிங்க” என சொல்லி விட்டு போயிருப்பார்கள் என்பது என் எண்ணம்.

      மேற் சொன்ன கருத்தில் உடபாடு இல்லையென்றால் அதை புறந்தள்ளி விடுங்கள். கஞ்சாவினால் கிடைக்கும் அனுபவமும், தியானத்தினால் கிடைக்கும் அனுபவங்களும் ஒன்று தானா என அறிய இவ்விரண்டையும் செய்து பார்த்து சோதனை செய்வதே ஒரே வழி என எனக்குப் படுகிறது.

      தியானம் செய்ய எனக்கு வக்கில்லை. கஞ்சா அடித்தால் போலீஸ் புடிச்சிக்கும். எனவே இரண்டில் ஒன்றைக் கூட என்னால் செய்து பார்க்க முடியாது. ஆகவே, நான் முதலில் சொன்ன கருத்தின் அடிப்படையில் இவ்விரண்டு அனுபவங்களும் முற்றிலும் வேறானவை என்பது என் இன்றைய நம்பிக்கை. அப்படியில்லை, கஞ்சா, தியானம் இரண்டும் மூளைக் கிளர்ச்சியினால் உண்டாவதால் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருந்துவிட முடியாது என்று நீங்கள் நம்பினால், அது உங்கள் கருத்து. உங்கள் விருப்பம்.

      முடிவாக நான் சொல்ல வருவது ஒரு சிறிய கருத்தே. தியானம், கஞ்சா என்ற இரண்டையும் செய்து பார்க்காமல், இரண்டும் ஒன்றே என்று குருட்டாம்போக்கில் உறுதியாகச் சொல்லாதீர். அப்படி செய்வது பகுத்தறிவு, அறிவியல் இரண்டுக்கும் முரணானது. பிறகு மூட நம்பிக்கை கொண்ட மதவாதிகளுக்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

      தியானம், கஞ்சா இரண்டையும் செய்து பார்த்த யாராவது இருந்தால் உங்கள் அனுபவங்களை அறிந்து கொள்ள (உண்மையில்) ஆவலாக உள்ளேன், என்று கூறி என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

  39. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் தெரியுமா?
    நவம்பர் 07,2012 — தினமலர்
    மாமிசம் சாப்பிடுபவர்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள். லெக்பீசை வாயில் வைக்கும்போது, இதையும் கொஞ்சம் மனசுலே வச்சுக்கிடுங்க! இந்த விளக்கத்தைச் சொன்னது யார் தெரியுமா? வாரியார் சுவாமிகள்…!

    — ரூம் போட்டு யோசிப்பய்ங்கலோ???

    • அப்படின்னா மாட்டிடமிருந்து பால் கறந்து குடித்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் 🙂

      • //அப்படின்னா மாட்டிடமிருந்து பால் கறந்து குடித்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் //

        என்ன சொல்லவரீங்க வெங்கடேசன்..?

        அப்போ பால்குடிகள் எல்லாம் பாவம் செய்தவங்களா..அசைவர்களா..?
        எந்த மனுதனும் தன் தாயின் பாலை குடித்தே வளரவேண்டும்..பசுவின்பால் என்பது பிஞ்சிய பால்..தன் கன்றுவுக்கு போக மிதியைதான் அது கொடுக்கும்..அதயும் பீச்சி எடுக்க நினைத்தால் மிதிக்கும்..!!!

  40. மக்களே , ஒருவர் கேட்டது போல் எனக்கு கஞ்சாவும் தியானமும் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது அதே போல் ஓரளவுக்கு குவாண்டம் அளவில் சடப்பொருளும் சக்தியும் ஒன்று என்பதும் ஐன்ஸ்டீன் ‘கண்டுபிடித்த’ சார்புக்கொட்படும் ஓரளவு புர்யும். dmt எனப்படும் ஒரு விடயத்தையும் எனக்கு ஆராயும் சந்தர்பம் கிடைத்தது. கஞ்சா கூடாது , ஆன்மிகம் பொய் என்பதுதேல்லாம் அவனவன் நினைத்தால் அது அவனனவனுக்கே. உண்மையில் நமது உடல் , மனம் மற்றும் அவை 5 புலன்கலஊடக கண்டுணரும் பிரபஞ்சமும் காலமும் இடமும் எல்லாவட்டையும் அறியும் அறிவே ,நீ, . நீ அல்லது நான் என்பது இவர்கள் சொல்லும் ஹிக்க்ஸ் புலம்,பரம்பொருள்,ஆன்ம,அல்லா . அதே நான் என்ற பிரங்க்ஜையே (consciousness)கடவுள். நீ வாழ்கையில் செய்யும் ஒவொரு செயலும் நீ உடல் மனம் இறந்த எல்லாமாக ‘நீ ; இருப்பாய், உடல் மனது இல்லாமல் அந்த ‘நான் ‘ இல் மூழ்கி எல்லாம் நானே என்று இருப்பதே சமாதி அதாவது இருப்பது என்று உடல் குந்தி கொண்டிருப்பதல்ல , மனம் அல்லது ஈகோ அழிந்த குழந்தை நிலையே. உண்மையில் நீங்கள் குழந்தை யாக பிறந்த விநாடி இந்த சமாதி நிலையே. அதே போல் இறப்பும் உடல் மனம் தியானத்தால் அன்றி பௌதீகமாக அழியும் சமாதி நிலையே. வினவு சொல்லும் பல ‘விஞ்ஞான விளக்கங்களுக்கு அதே விவிங்கனத்தில் பதிலும் உள்ளது, ஒரு ஹைட்ரஜன் அணுவளவு இடத்தில் நமது கண்ணுக்கு தெரியும் 1370 கோடி ஒளியாண்டு வரையுள்ள அணைத்து சடசக்க்தி விட அதிகளவு வெற்றிட சக்தி உள்ளதாம். நாம் ஒரு லண்டன் வாசி. வேலைக்கு செல்ல வேண்டி யா அவசரத்தில் எழுத்து பிழைகளை திருத்த முடியவில்லை….இது பற்றி ஈதவது யாருக்கு discuss panna interest iruntha pm me quantumson@ymail.com
    after all, all this debate and my comment is a total joke and you’ll laugh like buddha if you found the truth, please find out who you are really….this is the greatest service you could offer to world. – ramana maharshi.

  41. திருவாசகம்-திருவண்டப் பகுதி

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
    இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
    சிறிய வாகப் பெரியோன் தெரியின்
    வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
    தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
    மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
    சூக்கமொடு தூலத்துச் 10
    சூறை மாருதத் தெறியது வளியிற்
    கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
    படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
    காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
    கரப்போன் கரப்பவை கருதாக் 15
    கருத்துடைக் கடவுள் திருத்தகும்
    அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
    வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
    கீடம் புரையுங் கிழவோன் நாடொறும்
    அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20
    மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
    தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
    வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
    காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
    நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
    மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்
    றெனைப்பல கோடி யெனைப் பல பிறவும்
    அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
    முன்னோன் காண்க முழுதோன் காண்க
    தன்னே ரில்லோன் தானே காண்க 30
    ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
    கானப் புலியுரி அரையோன் காண்க
    நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
    ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
    இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35
    அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
    பரமன் காண்க பழையோன் காண்க
    பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
    அற்புதன் காண்க அநேகன் காண்க
    சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40
    சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
    பத்தி வலையிற் படுவோன் காண்க
    ஒருவன் என்னும் ஒருவன் காண்க
    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
    அணுத்தருந் தன்மைஇல் ஐயோன் காண்க 45
    இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
    அரியதில் அரிய அரியோன் காண்க
    மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
    நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
    மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50
    அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
    பந்தமும் வீடும் படைப்போன் காண்க
    நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
    கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
    யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55
    தேவரும் அறியாச் சிவனே காண்க
    பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
    கண்ணால் யானுங் கண்டேன் காண்க
    அருணனி சுரக்கும் அமுதே காண்க
    கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
    புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
    சிவனென யானுந் தேறினன் காண்க
    அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
    குவளைக் கண்ணி கூறன் காண்க
    அவளுந் தானும் உடனே காண்க 65
    பரமா னந்தப் பழங்கட லதுவே
    கருமா முகிலின் தோன்றித்
    திருவார் பெருந்துறை வரையி லேறித்
    திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
    ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70
    வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
    நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
    எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
    முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
    பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
    எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
    செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட – வரையுறக்
    கேதக் குட்டங் கையற வோங்கி
    இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
    நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
    தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
    அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன
    ஆயிடை வானப் பேரியாற் றகவயிற்
    பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
    சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் 85
    தூழூழ் ஓங்கிய நங்கள்
    இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்
    துருவ அருள் நீர் ஓட்டா அருவரைச்
    சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
    வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90
    மாப்புகைக் கறை சேர் வண்டுடைக் குளத்தின்
    மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
    அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
    தொண்ட உழவ ராரத் தந்த
    அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95
    கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
    அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
    அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
    நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
    சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க 100
    எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
    கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
    பேரமைத் தோளி காதலன் வாழ்க
    ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
    காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105
    நச்சர வாட்டிய நம்பன் போற்றி
    பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
    நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி – நாற்றிசை
    நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
    நிற்பன நிறீஇச் 110
    சொற்பதங் கடந்த தொல்லோன்
    உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
    கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
    விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
    பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115
    ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
    இன்றெனக் கெளிவந் தருளி
    அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
    இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி
    அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
    ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
    ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
    போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
    மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125
    திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
    முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
    ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்
    துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
    மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130
    இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
    கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
    முனிவற நோக்கி நனிவரக் கௌவி
    ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
    வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135
    ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
    துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
    அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
    ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
    பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140
    ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
    ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
    தாள்தளை யிடுமின்
    சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
    பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145
    தன்னே ரில்லோன் தானேயான தன்மை
    என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
    அறைகூவி ஆட்கொண் டருளி
    மறையோர் கோலங் காட்டி யருளலும்
    உளையா அன்பென் புருக வோலமிட் 150
    டலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
    தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
    பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
    நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
    கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155
    ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
    கோற்றேன் கொண்டு செய்தனன்
    ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
    வீழ்வித் தாங்கன்
    றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160
    ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
    தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
    சொல்லுவ தறியேன் வாழி முறையோ
    தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
    தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் 165
    கருளிய தறியேன் பருகியும் ஆரேன்
    விழுங்கியும் ஒல்ல கில்லேன்
    செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்
    துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
    வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறுந் 170
    தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
    குரம்பை தோறும் நாயுட லகத்தே
    குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
    அற்புத மான அமுத தாரைகள்
    எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 175
    துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
    கள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
    கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
    என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
    கருணை வான்தேன் கலக்க 180
    அருளொடு பராவமு தாக்கினன்
    பிரமன்மா லறியாப் பெற்றி யோனே

  42. I AM – well said..
    also I’m trying too
    கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்

    கண்டவரும் இல்லை விண்டவரும் இல்லை யாருக்கு? கண்டவருக்கு மட்டும்.
    ஞானியும் இல்லை அஞ்ஞானியும் இல்லை யாருக்கு ? ஞானிக்கு மட்டும்.

    ஒருவரும் வாதிட்டு ஒன்றையும் இங்கு நிருபிக்க போவதில்லை. எல்லாம் ஒன்று . அது இருப்பு/ இல்லாமை இரண்டையும் தாண்டியது,

    எனக்கு கிடைத்தது, ஒரு புரிதல் மட்டுமே. ஒருபக்கம் எல்லாமே நான் தான். இன்னொரு பக்கம் எதுவுமே நான் இல்லை. எல்லாமே நான் தான் என்ற புரிதலில் எல்லாவற்றின் மீதும் ஒரு பேரன்பும் ஒருவித பெருமையும் அதே நேரம் எதுவுமே நான் இல்லை என்பதில் ஒரு கவலையும் அவமானமுமாக இனம் புரியாத ஒரு அனுபவம். boy i tell you, you can’t talk about that, the moment you talk or think…well..still there but umm…I don’t know heheheh அனுபவம் வேண்டுமானால் மூளையுடைய பாஷையாக இருக்கலாம், அதன் காரணம் நிச்சயமாக மூளையை தாண்டியதும் அதே நேரம் மூளையை உள்ளடக்கியதும்.

    ஒரு சிலருக்கே ஐன்ஸ்டீனின் சார்புக்கொட்பாட்டையும், குவாண்டம் பொறிமுறையின் முடிவுகளையும், புத்தரின் சிரிப்பையும், ஒரு செர்ன் விஞ்ஞானியின் சிரிப்பையும், ஒரு குழந்தையின் சிரிப்பையும், DMT எடுத்து கொண்டவரின் அனுபவத்தையும் near death அனுபவித்தவரின் ஆதங்கத்தையும் பொருத்தி பார்க்கமுடியும்.

    மரணத்தின் போது ஒருவரும் இறப்பதில்லை. எல்லோரும் தாங்கள் ஏற்கனவே இருக்கவில்லை என்பதை புரியும் நேரமே மரணம்.

Leave a Reply to ரிஷி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க