privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 5/11/2012

ஒரு வரிச் செய்திகள் – 5/11/2012

-

செய்தி: “பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி நீண்ட நாட்களாக வலியுறுத்துகிறோம்; மத்திய அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்காமல் பாரபட்சமாக நடந்து கொள்கிற‌து. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தராமல் ஓய மாட்டேன்” என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமாகப் பேசினார்.

நீதி: இத்தகைய வெற்றுச் சவடால் இருக்கும் வரை இந்தியாவிலேயே பின்தங்கிய மாநிலம் பீகார்தான் என்ற “சிறப்பு அந்தஸ்தை” யாராலும் மாற்ற முடியாது.

______

செய்தி: புதுடில்லி; ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய நிலையில், தலைநகர் டில்லியில் பாரதிய ஜனதா கறுப்பு தினத்தை அனுசரித்தது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நகரின் மூலை முடுக்குகளில் கூட‌ பாரதிய ஜனதா கட்சியினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து நேற்று கறுப்பு நாளை அனுசரித்தனர்.

நீதி: சில்லறை வணிகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே இந்தக் காவிக் கட்சிதான் எனும்போது கருப்பு பேட்ஜ் யாரை ஏமாற்ற?

______

செய்தி: விரைவில் துவங்கவிருக்கும் பார்லி. கூட்டத் தொடரில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்தது முக்கிய பிரச்சினையாக இருக்கும் . இந்தப் பிரச்சினையில் அரசு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று மார்க் கம்யூ. பொதுச்செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.

நீதி: அட்டைக் கத்தி சண்டை போடுவதில் நம்ம “காம்ரேடுகளை” யார் விஞ்ச முடியும்?

______

செய்தி: புத்திசாலித்தனம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். ஆனால் அதை அவர்கள் பயன்படுத்தும் விதம் தான் வெவ்வேறாக உள்ளது என பா.ஜ.க‌ தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நீதி: நீர்ப்பாசன ஊழலில் கையும் களவுமாக பிடிபட்ட உடன் கட்காரியின் வாய் தத்துவங்களை உதிர்க்கிறது. கயிற்றரவம் என்று விளக்கம் எழுத ஆதிசங்கரனே வந்தாலும் பா.ஜ.க.விற்கு நேர்மை இமேஜ் இனி சாத்தியமில்லை.

_____

செய்தி: வரும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை சந்திக்க தேவையான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி பிள்ளையார் சுழி போட்டுள்ளது. தேர்தலுக்கான செயல் திட்டங்களை உருவாக்க காங். அறிவு ஜீவிகள் பங்கேற்கும் மிக முக்கியமான‌ மாநாடு வரும் 9ம் தேதி டில்லியின் புறநகர் பகுதியான சூரஜ்குண்டில் நடக்கிறது.

நீதி: விலைவாசி உயர்வு, எரிபொருள் கட்டண உயர்வு, அனைத்திலும் அந்நிய முதலீடு என்று போட்டுத் தாக்கிய காங்கிரசு அறிவு ஜீவிகள் இப்போது கூடி என்ன படையெடுப்பை மேற்கொள்வார்கள்?

_____

செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, இம்மாதம் 30ம் தேதி சட்டசபையின் வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இசைவு தெரிவித்துள்ளார். அவரது வருகை தமிழக அரசியலில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீதி: அந்த வகையிலாவது புரட்சித் தலைவிக்கு இந்த ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுகிறதே என்று அமைதி கொள்ளுங்கள்.

_____

செய்தி: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க‌ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நீதி: பரமக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்றோ, இரண்டோ இலட்சம் வழங்கிய பு.தலைவி இங்கு வாரி வழங்குவது ஏன்? தலித் உயிரை விட தேவரின உயிர் மேலென்றா? சாவிலேயே சமத்துவம் இல்லையெனில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சை நிறுத்த முடியுமா?

______

செய்தி: மின் பற்றாக்குறை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் 10 கேள்விகளை பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பியுள்ளார்.

நீதி: இப்போது மட்டுமல்ல இனியும் சும்மதான் இருக்கப் போகிறீர்கள். இது கூட கேட்கவில்லை என்றால் எப்படி?

______

செய்தி: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஜாதிக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பல்வேறு துவேசப் பிரச்சாரங்களை செய்து வரும் திராவிடர் கழகங்களை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உண்ணாவிதரம் இருந்தனர்.

நீதி: சாத்தான் வேதம் ஓதக் கூடாது என்று சட்டமா இருக்கிறது?

______

செய்தி: திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க நகைகள் கொள்ளை போயின.

நீதி: காஞ்சியில் சங்கரராமன் கொலையை வேடிக்கை பார்த்த வர்தா பாய் திண்டுக்கல்லில் நகைகள் களவு போவதை வேடிக்கை பார்த்திருக்கிறார்.

_______

செய்தி: தேவர் ஜெயந்தியையொட்டி நடந்த பிரச்சினையால் ஐந்து நாட்கள் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பரமக்குடி டிப்போவுக்கு 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

நீதி: இந்த இழப்பை தேவர் சாதி சங்கங்களிடம் வசூலிப்பதுதான் முறை!

______

செய்தி: மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதி: சொத்துக் குவிப்பு வழக்கிலேயே புரட்சித் தலைவி பார்க்காத நோட்டீஸ்களா! இல்லை கேட்டுத் தீராத வாய்தாக்களா! உச்சநீதி மன்றம் ஒன்றும் பிடுங்க முடியாது!

______

செய்தி: இலங்கை பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு அரசு இலவச “லேப்-டாப்’பும், வட்டியில்லா கடனும் வழங்கி வருகிறது.

நீதி: எதிர்த்து எழுதினால் கொலை.. எதிர்க்காமல் இருக்க பரிசு… இதுதான் பத்திரிகையாளர்களை இலங்கை அரசு ‘கவர்’ செய்யும் இரகசியம்!

______

செய்தி: ஆண்களை விட பெண்களுக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கை குறைவாக இருப்பது, பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக, திருமண பந்தத்தில் பெண்களுக்கு தான் அதிக நம்பிக்கை இருக்கும் என்றாலும், தற்போது அந்த நிலைமை மாறி வருகிறது.

நீதி: முதலாளித்துவ பொருளாதாரத்திலும், ஜனநாயகத்திலும் மேற்கத்திய நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்படும் போது முதலாளித்துவம் உருவாக்கிய திருமண பந்தம் மட்டும் உறுதிப்படுமா என்ன?

  1. Correction – பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் 1 லட்சம் மட்டுமே வழங்கியது உண்மை தான். ஆனால் பரமக்குடி விசாரணை ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் கூடுதலாக 4 லட்சம் மற்றும் அரசு வேலைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
    http://news.outlookindia.com/items.aspx?artid=742872

  2. செய்தி: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஜாதிக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பல்வேறு துவேசப் பிரச்சாரங்களை செய்து வரும், திராவிடர் கழகங்களை கண்டித்து, ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உண்ணாவிதரம் இருந்தனர்.

    நீதி: சாத்தான் வேதம் ஓதக்கூடாது என்று சட்டமா இருக்கிறது?//

    SUPERB !!

  3. //தேவர் ஜெயந்தியையொட்டி நடந்த பிரச்னையால், ஐந்து நாட்கள் பஸ்கள் ஓடவில்லை. இதனால், பரமக்குடி டிப்போவுக்கு, 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது.//
    இந்த பயலுக பூச நடத்துறதே ரவுடித்தனம் பண்றதுக்குதாணு தெரியுதுல பின்ன எந்த ‘முடி’க்கு பர்மிசன் குடுக்குரிங்க…

    • அப்டியே இந்த இமானுவேல் சேகரன் குரு பூஜை பேர்ல நடக்குர அடாவடியையும் நிறுத்திபுடனும்…என்ன???

  4. // காஞ்சியில் சங்கரராமன் கொலையை வேடிக்கை பார்த்த வர்தா பாய் திண்டுக்கல்லில் நகைகள் களவு போவதை வேடிக்கை பார்த்திருக்கிறார்.

    பக்தர்கள் நம்பும் வரதராஜ பெருமாள் கொலை, கொள்ளை எதையும் தடுக்க முடியாமல் கோவிலில் கல்லாய் நிற்கிறார். வினவு நம்பும் ராமசாமி கடவுள் ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு எதையும் அடைய முடியாமல் முச்சந்தியில் சிலையாய் நிற்கிறார்.

    • அப்ப நீங்க “பக்தர்கள் நம்பும் வரதராஜ பெருமாள் கொலை, கொள்ளை எதையும் தடுக்க முடியாமல் கோவிலில் கல்லாய் நிற்கிறார்.” என்பதை ஏற்று கொள்கிறீர்

  5. ஆம், ஏற்றுக் கொள்கிறேன்.

    நூறு கோடி galaxies, ஒவ்வொன்றிலும் நூறு கோடி நட்சத்திரங்கள் என விரிந்து கிடக்கும் இப் பிரபஞ்ச சக்தியின் உருவகமாகவே கடவுள் சிலையை பார்க்கிறேன். “அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்கமா நகரமர்ந்தானே”, என்ற திருமங்கை மன்னனின் வாக்கில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மற்றபடி கடவுள் சிலை என் பிரச்சனைகளை தீர்க்கும் என்று நான் நம்பவில்லை. வினவு சொன்னது போல் கடவுள் சிலையால் தன் பிரச்சனைகளையே தீர்த்துக்கொள்ள முடியாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். வினவின் கருத்தை ஆமோதித்தாலும் “வர்தா பாய்” என்ற நையாண்டியை நான் ஏற்கவில்லை. அந்த கோபத்தில் பிறந்ததே பெரியார் பற்றிய எதிர் கேள்வி.

    என் கொள்கையை சொல்ல வினவு தளத்தை hijack செய்ததற்கு மன்னிக்கவும்.

    • சரி “கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!” என்ற பதிவிற்க்கு வரவும் விவாதிக்க.

  6. நீங்க குறிப்பிடும் பதிவை இப்போதுதான் கவனித்தேன். யப்பா, இருநூறு கமண்ட்டுகளா? கண்ண கட்டுதே சாமி. அங்க போயி ஏதாவது சொன்னா மறுமொழி அடிச்சே என் காலம் போயிடும் போல இருக்கே. சரி. பரவாயில்லை. அங்கே சந்திப்போம்.

  7. செய்தி: தேவர் ஜெயந்தியையொட்டி நடந்த பிரச்சினையால் ஐந்து நாட்கள் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பரமக்குடி டிப்போவுக்கு 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    நீதி: இந்த இழப்பை தேவர் சாதி சங்கங்களிடம் வசூலிப்பதுதான் முறை!

    இதே கருத்தில் கொல்லப்பட உயிர்களுக்கு பழிக்குபழியா பள்ளர்களை போட்டு தள்ளுவதுதானே முறை … !

Leave a Reply to venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க