privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தொடர்கிறது மாருதி தொழிலாளர் போராட்டம்!

தொடர்கிறது மாருதி தொழிலாளர் போராட்டம்!

-

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டதால் முடக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக செயற்குழுவை உருவாக்கி மானேசர் மாருதி தொழிலாளர்கள் அடுத்தக் கட்ட போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜூலை 18-ம் தேதி நிர்வாகமும், அரசும் தொழிற்சாலைக்குள் கட்டவிழ்த்து விட்ட வன்முறைச் செயல்களைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரையும் அரியானா அரசின் துணையுடன் தந்திரமாக சிறையில் அடைத்தது மாருதி நிர்வாகம்.  அதன் மூலம் தனது கைப்பாவை யூனியனை நிராகரித்து கடும் போராட்டங்களுக்குப் பிறகு  தொழிலாளர்கள் உருவாக்கிய தொழிற்சங்கத்தை அழித்து விட்டதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தது.

ஜூலை மாதம் நடந்த வன்முறை நிகழ்வுகளை சாக்காக வைத்து 548 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து 2,000 நிரந்தரத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களை மாற்றி விட்டு உற்பத்தியைத் தொடங்கினர் முதலாளிகள். அக்டோபர் மாதத்தில் கார்களின் விற்பனை சென்ற ஆண்டை விட 85 சதவீதம் அதிகரிப்பு, இரண்டு மானேசர் தொழிற்சாலைகளில் தினமும் 1,600 கார்கள் உற்பத்தி என்று தனது லாப வேட்டையை தொடர ஆரம்பித்துள்ளனர். நவம்பர் மத்தியில் ஒரு நாளைக்கு 1,800 கார்கள் என்ற முழு உற்பத்தி எண்ணிக்கையை எட்டி விடப் போவதாக மாருதி திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கும் தற்காலிக செயற்குழுவினர் புரட்சி தினமான நவம்பர் 7ம் தேதி குர்கான் துணை ஆணையர் அலுவலகத்துக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் வியாழக் கிழமை பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இமான் கான், ராம் நிவாஸ், ஓம் பிரகாஷ் ஜாட், கத்தார் சிங் ஆகியோர் உள்ளிட்ட குழு அரியானா தொழிலாளர் அமைச்சர் ஷிவ் சரண் லால் ஷர்மாவை சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வற்புறுத்த உள்ளனர்.

‘எந்த அடிப்படையும் இல்லாமல் தன் விருப்பம் போல தொழிலாளர்களை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது’ என்று சுட்டிக் காட்டுகிறார் தற்காலிக செயற்குழுவின் உறுப்பினர் ஓம் பிரகாஷ். ‘ஜூலை வன்முறையைத் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்றும் புதிய செயற்குழுவினர் வலியுறுத்துகின்றனர். ஜூலை 18 வன்முறையைப் பற்றி விசாரணை செய்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு அந்த நிகழ்வுகளுக்கு நிர்வாகத்துக்கும் தொழிலாளருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள்தான் காரணம் என்று கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மானேசர்-குர்கான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள மற்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடுமையான அடக்குமுறைகளைத் தொடர்ந்து 4 மாதங்களுக்குப் பிறகும் தம் மீது  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தொழிலாளர்கள் உறுதியுடன் தொடர்கின்றனர். நாமும் ஆதரவைத் தெரிவிப்போம்.

படிக்க: