privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்"தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை"-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது!

“தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை”-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது!

-

ந்தியாவின் பொதுவாழ்வில் இந்துமதவெறி பாசிசம் இரண்டறக் கலந்துள்ளது என்பதை பாசிஸ்ட் தாக்கரேவின் மரணத்தை ஒட்டி அனைவரும் அஞ்சலி செலுத்தியது நீருபிக்கின்றது. இதில் பிரதமர், குடியரசுத் தலைவர், பல கட்சித் தலைவர்கள், ஏன் – பார்ப்பனியத்தை எதிர்க்கும் தி.க வீரமணி உட்பட சகலமானவர்களும் உண்டு. பொதுவில் இறந்தோருக்கு மரியாதை செலுத்துவதில் என்ன தவறு என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சிவசேனாவால் கொல்லப்பட்ட பலநூறு முசூலீம் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால் தாக்கரேவின் இந்த இயற்கையான மரணத்தைக்கூட கொண்டாட வேண்டும். அதுதான் அந்த மக்களுக்கு செய்யப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

1960களில் உலகெங்கும் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு மாற்றாக ஆங்காங்கே மேடையேறுகின்றன. இக்காலகட்டத்தில்தான் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால்தாக்கரே சிவசேனாவை ஆரம்பிக்கிறார்.

1970களில் மும்பை ஜவுளி ஆலைகளில் பலமாக இருந்த கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த நினைத்த முதலாளிகளும், காங்கிரசுக் கட்சியும் சிவசேனாவின் இனவெறிக்கு புரவலர்களாக ஸ்பான்சர் செய்தனர். இனபேதம் கடந்து வர்க்க ஒற்றுமையால் இயங்கிய தொழிற்சங்கங்களின் பொருளாதார வாதத்தால் சிவசேனா தொழிற்சங்கம் ஆரம்பித்த ஆலைகளில் கம்யூனிஸ்டு சங்கங்கள் பலவீனமடைந்தன. முதலாளிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது. பிற்பாடு இந்த ஆலைகள் மூடப்பட்டு அந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் வணிகத்தில் பெரும் பணத்துடன் விற்கப்படுவத்ற்கும் சிவசேனா துணை நின்றது.

பிறகு”மாராட்டியம் மராட்டியருக்கே” என்ற முழக்கத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியருக்கு எதிரான கலவரத்தில் அதன் இடம் உறுதி செய்யப்பட்டது. மராத்திய இனவெறியோடு விநாயகர் பூசை, சிவாஜி விழா என வளர்ந்த சிவசேனா 1992-93 பாபர் மசூதி இடிப்பை ஒட்டிய கலவரங்களில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. நூற்றுக்கணக்கான முசுலீம்கள் சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்டனர். அப்போதைய சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் தாக்கரேவின் கொலைவெறி எழுத்துக்கள் தொடர்ந்து கலவரத்தை ஆணை போட்டு நடத்தி வந்தன. இது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷனில் சிவசேனா மற்றும் தாக்கரேவின் பங்கு ஆதாரங்களோடு அடையாளம் காட்டப்பட்டாலும் அந்தக் கிரிமினல் மீது யாரும் கைவக்க துணியவில்லை.

இதன் முடிவில் பா.ஜ.கவின் துணையுடன் மராட்டியத்தில் ஆட்சியைப் பிடித்தது சிவசேனா. கொஞ்ச நாட்களிலேயே இவர்களது மராத்திய வேடம் கலைந்து முதலாளிகளின் கைக்கூலிகள்தான் என்பதை நிரூபித்தனர். அப்படித்தான் அமெரிக்க என்ரானை முதலில் எதிர்த்து விட்டு பின்னர் ஆதரித்தனர். மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சியை பால்தாக்கரே நின்றவாரே களித்தார். பாலிவுட்டும் பால்தாக்கரவின் மிரட்டலில் சினிமாக்களை தயாரித்தது. மணிரத்தினம் கூட தனது “பம்பாய்” திரைப்படத்தில் சிவசேனாவின் பாத்திரத்தை மறைத்து எடுத்திருந்தாலும் அதை தாக்கரேவுக்கு போட்டுக்காட்டி அனுமதி வாங்கி ரீலீஸ் செய்தார். டெண்டுல்கரின் திருமணத்தில் கூட தாக்கரேவின் குடும்பமே பிராதானமாக கலந்து கொண்டது.

இறுதியில் சிவசேனா என்பது மும்பையில் லும்பன்களது கட்சியாகவும், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், முதலாளிக்கு ஆதரவான கைக்கூலி தொழிற்சங்கங்கள், மாமூல் என்று ஒரு பிரிவு தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கியது. அதே நேரம் சிவசேனாவின் மராத்திய மற்றும் இந்துத்வ பாசத்தின் உண்மை முகத்தை அறிந்து கொண்ட மாராத்திய மக்கள் அதை புறக்கணித்த ஆரம்பித்தனர். கூடவே தாக்கரவின் மகனானா உத்தவ் தாக்கரேவுக்கும், மருமகனான ராஜ் தாக்கரேவுக்கும் வாரிசு சண்டை நடந்தது. மருமகன் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா என்றொரு தனிக்கட்சி கடையை ஆரம்பித்தார்.

கடைசியாக பீகாரிகள் உள்ளிட்ட வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக சிவசேனா நடத்திய தாக்குதல் முன்பு போல வரவேற்பை பெறவில்லை. இப்படி இனவெறி, மதவெறி, முதலாளிகளின் கைக்கூலியாக விளங்கிய சிவசேனா இன்று பியூஸ் பிடுங்கப்பட்ட பாம்பாக ஒடுங்கி விட்டது.

எனினும் மும்பை கலவரத்தில் பலநூறு முசுலீம் மக்களை கொன்றதற்கு தாக்கரேவை தூக்கில் போட்டிருக்க வேண்டும். அப்படி அவரைத் தண்டிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்தான் பின்னர் மும்பை தொடர் குண்டு வெடிப்பாக முசுலீம் தீவிரவாதிகளிடமிருந்து வந்தது. தாக்கரே போன்ற பச்சையான கிரிமினல்களைக் கூட தண்டிக்க முடியவில்லை என்றால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு இல்லை, சர்வாதிகார நாடு என்றே அழைக்க முடியும்.

இத்தகைய கிரிமினல் பாசிஸ்டை தண்டிக்க முடியவில்லை என்றாலும் அவரது மரணத்தை பொதுவான தலைவரது மரணமாக ஆளும் வர்க்கம் அங்கீகரித்து இரங்கல் தெரிவிப்பதைத்தான் இந்தியா ஒரு இந்துநாடு என்று பறைசாற்றுகின்றது என்கிறோம்.

மாணவிகள் கைது
ஷாகின் தாதா, ரேணு இருவரும் போலீசால் கைது செய்யப்ப்பட்டனர்.

தாக்கரே மறைவுக்கு பிறகு மராட்டியத்தில் அறிவிக்கப்படாத பந்த் நடைபெற்ற போது, தானே நகரில் வசிக்கும் ஷஹீன் ததா, தனது பேஸ்புக் பக்கத்தில், ” தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை. தற்போது நடைபெறும் பந்த் பயத்திற்காக மட்டுமே, பகத்சிங், சுகதேவ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட நாட்களில் நாம் என்ன செய்தோம் என்பதை நினைவு கூர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதை அவரது தோழி ரேணு ‘லைக்’ செய்திருந்தார்.

உடனே சிவசேனா வெறியர்கள் இதை புகாராக பதிவு செய்ய போலீசும் இந்த இரண்டு இளம் பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. விரோத மனப்பான்மையை ஏற்படுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலைத் துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். ஷஹீன் தாதாவின் உறவினர் மருத்துவமனையை சிவசேனா குண்டர்கள் சூறையாடியிருக்கின்றனர்.

பலரும் இந்தக் கைதை கண்டித்திருக்கின்றனர். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான மார்க்கண்டேய கட்ஜூ கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மதவெறியையும், இனவெறியையும் வளர்த்து கலவரங்கள் பல நடத்திய தாக்கரே எனும் கிரிமினலை தண்டிக்க முடியாத போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது என்றால் இந்தியாவின் யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

  1. தில் இருந்தா மும்பைல ஒரு மேடை போட்டு இந்த கட்டுரைய வாசி பார்போம்… உங்க ஆளு ஒருத்தன் கூட உயிரோடு அந்த தெருவ விட்டு வர முடியாது…. உன்னோட கட்டுரை இந்த வினவு வெப்சைட் உள்ளய வச்சிக்கோ ……

    • வினோத் உங்கள் பின்னுட்டம் “நகரம்” படத்தில் வரும் வடிவேலு காமெடி மாதிரி இருக்கு………!!!!!!!!!!!!!!!

      • ஏன் போப்பின் கை கூலி மிஷிநரிகளின் எடுபிடி தெரெசாவுக்கு பரத் ரத்னா குடுக்கலாம், தேசிய கோடி போத்தலாம், திரு தாக்கரே அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் பொத்துகிட்டு கொட்டுது? திராவிடம் பக்தி பிறந்த மண், பெரியாரியம் எனப்படும் ஈவேராவியத்தின் இடுகாடு என்று விரைவில் மிக தெளிவான முறையில் மீண்டும் நிரூபிக்கபடும்! வாயில்லா பாப்பானை பிடித்து கொண்டு தொங்கும் வினவும் அதை போல உள்ள பிற அயிந்தாம் படைகளும் இந்து(த) தேசத்தின் பீடைகள்!

        • என்ன சத்யன், உண்மையிலேயே அவர்கள் இருவரின் செயல்பாடுகள் பற்றித் தெரியவில்லையா? அல்லது தாக்கரேயின் காலித்தனத்தை மறைக்க முயற்சிக்கிறீர்களா?

    • தாக்கரே செத்துப்போய்விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் பாயாசம் குடித்தது போல் இருந்தது.

      • எனக்கு ஊர்ல ஒரு வெறிநாய் செத்தா எப்படி சந்தோசமா இருக்குமோ ? அப்படி இருந்தது !

    • சிவ செனா வால் மரனித்தவர்ககல் எஅத்தனை பெருநு தெரிஉமா தக்கரெ மனிதனெ எல்ல
      அட மனிதா உனக்கு புத்தி எருந்தா யொசிது பார் எதுநேர் என்ரு தெரியும்.

    • மரணத்திற்கு பயந்து வாழ்ந்து என்ன பயன். அமைப்பு/புஜ பலமோ இல்லாத சாதாரண பெண்களையே ஒன்னும் செய்ய முடியவில்லை என்பதற்காக இது.

    • Vinodh,

      I can still remember when i went to mumbai to participate in the RSYF conference, even 10 yrs, 12 yrs kids shouted slogans against Bal Thackarey exposing as equally vinavu in Mumbai streets in presence of thousands of people..No one in streets has raised their voice..every one returned safely. Actually these shivsaink hooligans are cowards and they will target only innocent ppl and indulge violence in groups as directed by their leadership..Can these goonda can raise a voice against Markandeya Katju?

  2. பால் தாக்கரே யாரு…? தேசத்திற்கு தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரா…? அல்லது தேச பக்தி, ஒற்றுமை, ஒருமைப்பாடு – இவைகளை உயர்த்திப் பிடித்த உத்தமத் தலைவரா….? அல்லது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக – பெண்விடுதலைக்காக போராடிய போராளியா…? அல்லது மும்பையிலுள்ள ஏழை – எளிய மக்களின் தோழனா…? இதுல எதுவுமே இல்ல… இதற்கு எதற்கு இத்தனைக் கூப்பாடு…?

    • He has done all that you are saying for the maharashtrian people.he has helped poor,lower middle class maharashtrian people not get sideliens in mumbai and above all,saved the lives of hindus during 1993 riots.

    • Dஎஅர் Jஅஜின்
      பால் தாக்கரே யாரா? இந்தியாவின் கலவர மன்னன், இந்திய முச்லிம்களை கொல்ல துடித்த ட்ராகுலா, மகாராட்டிரா அல்லத மானிலங்கலு எதிராக வன்முரையை தூன்டியவர், பாக்கை சார்ந்த கிரிக்கெட் வீரர்கலுக்கு எதிராக விசம் கக்குபவர், இதுபோல் இன்னும் பல செயல்கலுக்கு சொந்தக்கரர்…

  3. ஒரு தாதாவை ஹிட்லரின் மறு உருவமாய் வாழ்ந்து மடிந்த ஒருவரைத் தான் இன்றைக்கு பத்திரிகை உலகமும், தொலைக்காட்சிகளும், ஆட்சியாளர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஒரு தேசத்தலைவர் அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது கோபம் வருகிறது.

  4. இது எல்லாவற்றிலும் கேவலமான விஷயம் என்னவென்றால்…? மறைந்த அந்த மாபெரும் மனிதரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவது தான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பால் தாக்கரேவின் உடலின் மீது காவல் துறையினர் முழு அரசு மரியாதையுடன் தேசியக்கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒரு தாதா என்கிற பெருமையைத் தவிர அவர் இந்நாள் – முன்னாள் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ – எம். பி யோ அல்லது கவுன்சிலரோ கூட இல்லை. ஒரு சாதாரண மனித உடலுக்கு மூவர்ணக்கொடியை போர்த்தலாமா….? அது தேசியக்கொடியை அவமரியாதை செய்தது போல் ஆகாதா….? அதற்கென்று கட்டுப்பாடுகள் கிடையாதா…?

    • உங்கள் கருத்துகளோடு நூறு விழுக்காடு நான் ஒத்துப்போகிறேன். தொலைக்காட்சியில் பார்த்தபோது அந்த அபத்தத்தை என்னால் சீரணிக்கமுடியவில்லை.

      • dear patriates, i salute your respect for the nation, but please remember, this cloth (flag as u call it) has been used for such ‘leaders’ only: remember rajiw gandhi and so many others. the flag is coloured by the principles and sacrifices it evokes. this is the real colour of this cloth. its very much expected of this hindu nation to do.

  5. வெளியூர்காரர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டனர். வெளியே சென்றிருந்தவர்கள் வீடு திரும்ப முடியவில்லை. பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டன. இதனால் மும்பை மக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
    இதை பேஸ்புக் சமூக இணையதளத்தில் ஷாஹீன் தத்தா என்ற இளம் பெண் விமர்சித்திருந்தார். ‘‘பால்தாக்கரே மாதிரி தினமும் எத்தனையோ பேர் பிறக்கி றார்கள், இறக்கிறார்கள். இதற்கெல்லாம் பந்த் நடத்துவது நியாயமா?’’ என கேட்டிருந்தார். இந்த கருத்தை தத்தாவின் தோழி ரேணு என்பவரும் ஆமோதித்திருந்தார்.

    இதனால் ஆவேசம் அடைந்த சிவசேனா தொண்டர்கள், மும்பை பால்கரில் உள்ள தத்தாவின் மாமனார் கிளினிக்கை அடித்து நொறுக்கினர். இச்சம்பவத்தை யடுத்து தத்தா, ரேணுவை மும்பை போலீசார் கைது செய்தனர். சமூகத்தில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளம் பெண்கள், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையை பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு வன்மையாக கண்டித்துள்ளார். அவர் மகாராஷ்டிர முதல் வர் பிருத்திவிராஜ் சவா னுக்கு அனுப்பியுள்ள இ,மெயிலில், ‘‘பந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை மத உணர்வை புண்படுத்துவதாக இருந்தது என கூறுவது அபத்தம். ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இரு பெண்களை சட்ட விரோதமாக கைது செய்த போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்

    • ஷாஹீன் தத்தா முகநூலில் அந்த கருத்தை எனக்கு அனுப்பி விடுங்கள் நானும் லைக் செய்கிறேன்.
      என்னையும் அரசு கைது செய்யட்டும் என்னுடைய முகநூல் முகவரி
      http://www.facebook.com/paraiyan

      ஒழிக இந்துத்துவ இந்தியா

      இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவே அல்ல

  6. பால் தாக்ரே என்ற வெறிநாய் செத்துப்போனதை தமிழ் நாட்டில் உள்ள ஆக பெரும்பான்மையான facebook கணக்குதாரர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்!
    அவனை பற்றி அம்பலப்படுத்தி எழுதி பதிவிட்டு இருக்கிறார்கள்!
    வினோத் நங்கள் ஏன் மும்பைக்கு வரவேண்டும்?
    தில் இருந்தால் தமிழ்நாட்டு போலிசை வைத்து எங்கள் மீது வழக்கு போடேன் பார்ப்போம்!
    இது பெரியார் பிறந்த நாடா? அல்லது பார்ப்பனீயத்தின் சுடுகாடா?
    என்பதை எங்களால் எளிமையாய் புரியவைக்கமுடியும் !

  7. யப்பா வினோத்து முடியல. மும்பையில தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது என்ன புடிங்கினார்கள்? அவிங்க தில் எல்லாம் ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக வாழும் மக்களை வேட்டையாடுவதில் மட்டும்தானா? தூ மானங்கெட்டவர்கள்.

  8. பெண் புத்தி பின் புத்தி…. ஏன்டீ லேடிஸ்ங்களா… அவிங்க தான் சும்மாவே உருவி உட்டுட்டு ஓட விடுவானுங்களே… அவனுங்க கிட்ட போயி எனக்கு ஒரு ஆப்பு வெய்யினு ஏன் எழுதனும்…. இவளூங்கள திருத்தவே முடியாது மாப்ளே…

    • நீயும் அந்தக் குரூப் தானா? (அந்த நாய்ங்க வெறி வந்துச்சுன்னா அக்கா தங்கையினு பாக்கமா உருவி ஆப்பு வைப்பானுங்க. அப்படிப்பட்ட நாய்களைப் பத்தி ஏன் எழுதனும்? என்று சொல்லுங்கள் சிவசேனா குரூப் இந்தியனே!!!)

        • சரியாச் சொன்னீங்க ஹரி அண்ணே. அசிங்கமா பேசணும்னா அதுக்கு உங்க பேருதான் பொருத்தமா இருக்கும். உங்களுக்கு புரியணும்னா சில நேரம் உங்க பாஷையதான் பயன்படுத்த வேண்டியிருக்கு. தமிழ் அவர்களுக்கு உங்க நன்னியைச் சொல்லிருங்க.

        • வாய்யா வெங்காயம். இந்தியன் (?) சொன்னது உமக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஆனால் நான் அதற்கு பதில் சொன்னால் அசிங்கமாகத் தெரிகிறதா? என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர் அசிங்கத்திற்கு?

    • இந்தியாவை பெண் உருவமாக சித்தரித்து போலி வேசம் போடும் காவிகள், பெண்களைப் பற்றி கொண்டிருக்கும் மதிப்பை இந்தியனின் (?) பின்னூட்டம் பிரதிபலிக்கிறது. அவர்கள் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.

  9. ஒரு ரவுடிக்கு அரசு மரியாதைனா, அது மக்களை மதிக்காத,மக்களைப்பற்றி கவலைப்படாத ஒரு மானங்கெட்ட அரசாலதான் சாத்தியம். மத்தபடி அங்க நடந்ததுல ஆச்சரியப்படரதுக்கு ஒன்னும் இல்ல, மக்கள் தான் யோசிக்கனும்.

  10. பால் தாக்கரே இனவெறியை ஊட்டி வளர்க்கிறார் என்றால், வினவு கம்யூனிஸ வெறியை வளர்க்கிறீர்கள். ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை…

    • ஆனால் சீனு அமெரிக்காவை,இஸ்ரேலை,போலீசை,பார்ப்பனீயத்தை,முதலாளித்துவத்தை,தாக்கரேவை எல்லாம் வெறித்தனமாக ஆதரிப்பார்.

    • அரைவேக்காடு தனமா இருக்கு உங்க கருத்து. தன மதத்தின் மீது வெறியோடு இருப்பது தப்பில்லை. அடுத்த மதத்தினர் மீது ஏன் வெறியோடு இருக்கவேண்னும்? அதான் தப்பு அப்புறம் கம்யூனிசத்தை தெரிந்துவிட்டு கருத்து போடவும்

      • எந்த மதத்தை தன் மதம் என்கிறீர்கள், இந்து மதத்தையா ? பார்ப்பனர்கள் கருப்பு பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிவருடிகளுக்கு தான் அது மதமாக இருக்க முடியும். சரி அதை விடுவோம் நீங்கள் கூறிய கருத்திற்கு வருவோம்.தன்னுடைய மத்தின் மீது வெறித்தனமாக இருக்கும் ஒருவன் பிற மதங்களையும், மதத்தினரையும் எப்படி பார்ப்பான் ?

        ஆர்.எஸ்.எஸ் காரன் மாதிரி தான் இருப்பான்.

        தன் மதத்தின் மீது வெறியோடு இருக்கும் ஒரு மதவெறியனிடம் அடுத்த மதத்தினர் மீது அன்போடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முரண்பாடாக இல்லையா ?

        உதாரணம். சீனு மேற்கூறியவற்றையெல்லாம் வெறித்தனமாக ஆதரிப்பதால் வினவையும் குருட்டுத்தனமாக எதிர்க்கிறார்.

    • அப்படியேத் தான் இருந்துவிட்டு போகட்டுமே. எல்லோருக்கும் அனைத்தும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்பதற்கும், ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் என்று சொல்லி துவேஷத்தை ஊட்டி தன் வயிறையும் வளர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா? மிஸ்டர் சீனு.

  11. “ஆதங்கம்தான் பின்னர் மும்பை தொடர் குண்டு வெடிப்பாக முசுலீம் தீவிரவாதிகளிடமிருந்து வந்தது.” Vinavu only can justify anything or everything in this world…

  12. பால் தாககரேவுக்கு அரசு மரியாதை கொடுத்து தேசிய கொடியைப்போர்த்தி அடக்கம் செய்ததை யாராலும் நியாயப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. முடிந்தால் யராவது முயற்சிக்கவும். பெரியார் கூட அரசு மரியாதையொடு அடக்கம் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்.

  13. ஒரு இனத்திற்காக அவர்களின் உரிமைக்காக நிறைய தலைவர்கள் போராடலாம். போராடுகிறார்கள். ஆனால் மற்றொரு இனத்தின் மீது துவேசத்தை கூறி பொய் பிரசாரங்கள் செய்து மிக எளிதாக வளர்கிற தலைவர்கள் சமீபகாலமாக அதிகரித்துவிட்டார்கள். இந்த யுக்தி 1980 களில் தான் எடுபட ஆரம்பித்தது. இதன் பலனாக அந்த தலைவர்களும் பதவி அதிகாரம் பவுசு என்று சொகுசாக வாழ்கின்றனர். இவர்களின் மூலதனமே மக்களின் மத பற்றும், பாமரத்தனமும் தான். இவர்களில் முக்கியமானவர் பால்தாக்கரே.மக்கள் நியா அநியாயங்களை பற்றி சிந்தித்து இவர்கள் போன்றவர்களை ஒதுக்கணும். இந்தியாவின் முன்னேற்றமே மக்களின் ஒற்றுமையில்தான்.

  14. பம்பாயில் இருந்தே ஒளிபரப்பப்படும் டைம்ஸ் நவ் இந்த விஷயத்தில் கருத்து சதந்திரத்தை வலியுறுத்தி, அரசையும், சேனாவையும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத் தக்கது. செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி சேனா ஆள் ஒருவரை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். இது பாராட்டத் தக்கது.

  15. இந்திய வரலாற்றிலேயே ______ ஒன்று செத்து போனதற்கு அரசு மரியாதை கொடுத்தது பால் தாக்கரே இறப்பின் போதுதான்….நண்பர் வினோத் சிவா சேனா பரிவாரங்களோடு தமிழ்நாட்டில் வந்து ஒரு கூட்டம் போடட்டுமே பாப்போம்…என்ன நடக்கிறது என்று..

  16. தேசிய விடுமுறை அறிவித்து அந்த தினத்தை அடுத்து தீபாவளியாக கொண்டாட வேண்டுவோமா?

    • யப்பா வினோத்து, மும்பையில தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது என்ன புடிங்கினார்கள்? அவிங்க தில் எல்லாம் ஆயுதம் ஏந்தாமல் அமைதியாக வாழும் மக்களை வேட்டையாடுவதில் மட்டும்தானா? தூ மானங்கெட்டவர்கள்.

    • வினோத், இதே வினவு தளத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், வளைகுடா நாடுகளில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலையும், இஸ்லாமிய நாடுகளில் மதத்தின் பெயரால் பெண்களின் மீது நடைபெறும் தாக்குதலைப் பற்றியும் கட்டுரை வந்துள்ளது. இதையெல்லாம் அந்த நாடுகளில் போய்தான் பேச வேண்டும் என்று உங்கள் அறிவு சொல்லுமா? அந்த மட்டில் தான் உங்கள் மூளை சிந்திக்குமா? சரி… இந்து முன்னணி, சங்பரிவார், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் & கம்பெனி பற்றி இதை விடக்கேவலமாக தனக்கே உரிய எள்ளல் தொனியில் வினவு கட்டுரை வெளியிட்டிருந்தது. உங்களால் என்ன புடுங்க முடிந்தது? சர்… இந்த வெறி நாய் செத்துப்போனதிற்கு பந்த் தேவையில்லை என திருமதி.ஷகீன் எழுதியது சட்டப்படி குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்ண்டேய கட்ஜீ சொன்னதும், “ கைது செய்த காவல் துறை மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ”பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.விடுவிக்கப்படவில்லை எனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாநில அரசை எச்சரித்ததும் மும்பையில் உள்ள சிவசேனா வெறிநாய்களுக்கும் தெரியும்தானே ? அவர்கள் என்ன புடுங்குகிறார்கள் இப்போது ???? ஒரு தலைவன் செத்துப்போய் அவனுக்கு துக்கம் அனுஷ்டிப்பதே இவ்வளவு கேலியான விசயமாக மாறி இருப்பது பால்தாக்கரேவோட சாவுலதான். இவனுக்கே இப்படினா … மோடி, ராம கோபாலன், அத்வானி,…. அடேயப்பா இன்னும் எவ்வளவு பேரு இருக்கானுங்க. “ஸ்வீட் எடு.கொண்டாடு”

      • மோகி சார், இப்படி அருமையான பின்னூட்டமிட்டதற்கே “ஸ்வீட் எடு கொண்டாடு” – ங்கள்

      • அட அறிவிலி, மும்பைக்காரனுங்க பந்த பண்ணுனது தப்புத்தான்.

        இங்க தமிழகத்தில் சாதாரண மனுஷன் செத்தாக்கூட பிணம் தூக்கிகிட்டு போறப்ப பண்ணுற அலம்பல் சொல்லி மாளாது. போற வர்ர வணடிகளை தட்டி மிரட்டுரதும்

        இந்த கொடுமையா என்னைக்காவது கண்டிச்சு எழுதி இருப்பியா?

        போய்ட்டான் மும்பைக்கு

        • //இங்க தமிழகத்தில் சாதாரண மனுஷன் செத்தாக்கூட பிணம் தூக்கிகிட்டு போறப்ப பண்ணுற அலம்பல் சொல்லி மாளாது. போற வர்ர வணடிகளை தட்டி மிரட்டுரதும்//

          விநாயகர் ஊர்வலம் மூலமா நீங்க கத்துக்கொடுத்தது அதானே. அதான் அந்த அலம்பல்.

  17. ok.Let it be. i posted some comments when mkek members died. But vinavu is not publishing those comments. if anyone makkal kalai ilaykiya kazakam members died, then i will enjoy the day like you are enjoying the day when thakre died.

    • எதிர்க்க வேண்டும் என்பதற்காக பீயைக்கூட சந்தனமாக நீங்கள் பூசித் திரியலாம். ஆச்சரியப்படுவதற்கில்லை.

  18. வெளி நாட்டு தீவிரவாதிக்கு தூக்கு, உள்நாட்டு தீவிரவாதிக்கு அரசு மரியாதை! இதுதான் இந்தியா!

    • வெளி நாட்டு தீவிரவாதிக்கு தூக்கு, உள்நாட்டு “காவி” தீவிரவதிக்கு அரசு மரியாதை! இதுதான் இந்தியா!

      • அயோக்கியர்களுக்கு அரசு மரியாதையளிக்கும் கேவலமான நாடு இந்தியா. பெரியார் சரியாகவே சொன்னார் ” உன் தேசியக்கொடி என் கோமணத் துணி “.

        • // அயோக்கியர்களுக்கு அரசு மரியாதையளிக்கும் கேவலமான நாடு இந்தியா. //

          நாடு என்ன செய்யும்..

          // பெரியார் சரியாகவே சொன்னார் ” உன் தேசியக்கொடி என் கோமணத் துணி “. //

          மாணவன், ஏனிந்த கோமணக் கொலை வெறி..?!!!!

          காற்றில் படபடத்து உயரே பறக்கும் மூவர்ணக்கொடி, இந்த நாட்டுக்குழைத்த தியாகிகளின் நினைவுகளையும், லட்சியக் கனவுகளையும் சுமந்திருக்கும், நாட்டின் உயிர்த்துடிப்பு..

          மூவர்ணக் கொடியை ஏற்றுவது எந்தச் சனியனாயிருந்தாலும், அந்தக் கொடி அது பறப்பதைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் உளப் பாங்குக்கேற்ற உணர்வுகளைத்தான் தரும் என்பது தெரியுமல்லவா..

          இந்தக் கொடிக்காக தடியடி, குண்டடிபட்டு மடிந்த திருப்பூர்க் குமரனும் அவர் போன்ற லட்சக்கணக்கான விடுதலைப் போராட்டதியாகிகளும், எல்லைகாக்கும் போரில் வீரமரணமடைந்த/ஊனமடைந்த வீரர்களும்,கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த காவலர்களும் நினைவுக்கு வருவது நாட்டுப் பற்றுள்ளவர்களுக்கு இயல்பானது..

          தாங்களும் இந்தக் கொடியேற்றும் அதிகார உரிமையை,பதவிகளை அடையும் நாளைப் பற்றி கனவு காண்பது இன்றைய பெருவாரியான அரசியல்வாதிகளின் இயல்பாகிப் போனது..

          ஆனால் பெரியாருக்கு இந்தக் கொடியை இப்படி புதுவிதமான, புரட்சிகரப் பயன்பாட்டுக்கு உள்ளாக்கும் சிந்தனை தோன்றியதாலேதான் அவர் பெரியார்.. மற்றெல்லோரும் சிறியார்…

          பகல் கனவாகிப் போன திராவிட்ஸ்தானில், பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி பட்டோளி வீசி பறக்க வேண்டிய இடத்தில், மூவர்ணக்கொடி பறப்பது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது வியப்பில்லை.. ஆனால் பிடிக்காத கொடியை பிறர் செய்வது போல் எரித்து வீணாக்காமல், கோமணமாக்கும் சிந்தனை வெறும் பகுத்தறிவு பொங்கி வழியும் மூளையில் உதிக்குமா.. கூடுதலாக அதற்குக் கவித்துவமான சிந்தனையும் வேண்டும்..

          மூவர்ணக்கொடியின் பச்சைப் பட்டியையும், தருமச் சக்கரத்துடன் கூடிய வெள்ளைப் பட்டியையும் உஷாராகப் பகுத்தறிவுடன் பகுத்து அறுத்துவிட்டால் எஞ்சுவது என்ன..? காவிப் பட்டி.. காசி மாநகரத்திலே அதே வண்ணத் துணியில் கோமணம் கட்டிக் கொண்டு சுதந்திரமாக உலா வந்த இனிமை நினைவுகள் ஏக்கத்துடன் வார்த்தைகளாகும் போது “உன் தேசியக் கொடி என் கோமணம்“ என்பது போன்ற காவிய வரிகள் தோன்றுகின்றன..

          • Who got freedom from whom? First of all what is freedom? Here I am not humiliating freedom fighters. They fought for getting independence from Europeans. But are you sure everyone in India got freedom? If not then it is not really a freedom or independence. You so called high class people still feel low class people are slaves to you and need to serve you always. You put so many jargons for that like “quality”, “literacy”, “neatness” etc., if you have such an offensive thinking in you and you celebrate your freedom and Independence with some small piece of cloth flying on a pole and you expect every other to enjoy it. How is that possible? Don’t tell now everything is open anyone can study and come up in status and all. Even if one from low class comes to a dignified position, you people see him as a low class guy (the caste, which was assigned by birth). If these thinking are not erased from so called high class people and all caste system not eradicated, WE or I will not agree this as independence. You people got freedom from Europeans, but people under you (your thinking) still need to get freedom so they are fighting for their freedom. Even Periyar’s view is also same about current freedom and independence. And still it is true.
            PS: ‘You’ in above para is not only you. There are many uuuuuuuuuuuuuuus

            You should be ashamed on the current caste system. Even if you are in high class caste, there also so many sub classes and one group will not accept other group equal to them. What is this? How such mentality comes to us? Do you think all these are good? Instead of questioning these you are asking people to enjoy these. Hmmm if you have self thinking and self respect ……………rest is yours 🙂

  19. i am giving respect only because he is a one and only strong hindu politician. i wont care about his love to mumbai, or his hatred towards other state people. Today lot of muslim political parties are there. but for hindu, you can count in fingers.

  20. தன்னுடைய ஆதாயத்திர்க்காக அன்று தென்னிந்தியர்களை விரட்டினார் .அந்த ஆதாயத்தில் கட்சியை வளர்த்தார்.அதன் பிறகு பாபரி மஸ்ஜித் இடிக்கப்படட்பிறகு ஹிந்து மக்களை கவர முஸ்லிம்களை கொன்றார்.ஆதாயம் அடைந்தார் மகாராஸ்ட்ராவில் பிஜேபியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கக் முடிந்தது.பின்னதே செல்வாக்கி இழந்துவிடக் கூடாது என்பதற்காக பிஹாரி பிரச்னையை கையிலெடுத்தார் ,தோல்வியில் முடிந்தது.
    கிருஸ்ணா கமிசன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நபரை ,அந்த நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அரசை மிரட்டக் கூடிய ரவுடி பட்டாளத்தை கையில் வைத்திருக்கக் கூடிய,இந்திய சட்டத்தை குப்பை கூடைக்கு அனுப்பிய ஒருவரை ஆதரிக்கிறார் ஹரிகுமார் என்றால் ,இவர் பாகிஸ்தானியர்களை விட கொடியவர்களா? ஒசாமா வின் சடலத்தை மக்கள் கையில் கூட கொடுக்கவில்லையே ! அங்கெ பந்த் நடக்கவில்லையே

    • Which politician’s hands are not filled with blood?

      which political party doesn’t have a number of strength or rowdyism on the streets?

      He did things openly and admitted to what he did unlike many secular leaders who ll do all the violence and then act innocent.

      I want to know why Dawood Ibrahim and Tiger Memom did riots in Mumbai to counter the violence in Ayodhya,why didn;t they do it in UP/Bihar.They tried killing stock brokers and innocent people in Dalaal street and thats why Thackeray responded.

      People like Bal Thackeray have done a whole lot of good for Lower middle class youth in Maharashtra much,much more than what the whole dravidian revolution did in Tamizhnadu.

      • Sorry Mr.Harikumar, I couldn’t able to reply for your comment on my comment before. Now I got a chance and am replying for that as well as this comment. You like this fellow thac’grey’, even a local rowdy is be liked by many. Now media is giving hypes like that. No wonder that you like this ‘grey’ guy.

        If you are common man you should condemn both Ayodhya and Dawood’s Mumbai. Also the after effect of Dawood’s Mumbai blasts which was created by this thac’grey’. If you are simply supporting one then we cannot avoid continuation of this sort of violence. From your word, it tells clearly riots in Mumbai were counter of Ayodhya. Why Ayodhya? Who was the initiator? Who suffered in all these? Initiator of the Ayodhya not suffered, initiator of the Mumbai riots not suffered, thac’grey’ after effect also not affected him. Rather, with Ayodhya BJP came to power (not your RAM temple), also thac’grey’ came to power. So their intension was something different and they achieved it at the cost of poor people. This is the reality, that what this vinavu kind of people trying to explain. (but I agree sometime they are very much negative).

        If you like thac’grey’, then India will be divided into 100’s of pieces of small countries. That’s what Katju’s article also tells.

        • I dont condemn Ayodhya mosque destruction but i dont like normal muslims on the street,especially women and children killed in riots.

          But the muslim community in UP is also not all that innocent and they have the same issues as Hindus.

          But Dawood did these riots in Mumbai just to push his mafiadom and Mumbai is a different society than the Up countryside,here everyone lives side by side,i dont see any harm in Thackeray protecting the people from such mafia people who were all encouraged by secular governments of the congress.

          • If you don’t condemn then keep continue your fighting 🙁 if you or your family lose something then only you will feel the pain. Unrest caused by you people, keeps this in mind.

  21. தாக்கரே ஒரு இனவெறியன். ஒன்றுபட்ட இந்தியா, நாமனைவரும் இந்தியர்கள் என பாவ்லா காட்டுபவர்களின் கோவணம் தாக்கரே விடயத்தில் அவிழ்ந்து தொங்குகிறது.

  22. Nothing like that,we have a federal set up and it needs to be respected.

    A city like Mumbai or any other place should not be a free for all facility used to make money by corrupt secular politicians.

  23. // போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது //

    கைது செய்த போலீசாரும்,இதையெல்லாம் ஒரு வழக்காக அனுமதித்த மாஜிஸ்ட்ரேட்டும் முறையே பணியிடை நீக்கமும், இடமாற்றமும் செய்யப்பட்டதை எதிர்த்து பல்கர் நகரில் மீண்டும் ஒரு பந்த்..

Leave a Reply to JAJIN பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க