privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதங்கம் - கொள்ளையும் சூதாட்டமும்!

தங்கம் – கொள்ளையும் சூதாட்டமும்!

-

ங்கம் இதுதான் வீடு நிலத்திற்கு அடுத்தபடியாக நடுத்தர வர்க்கத்தினரது முதலீடுகள் அதிகம் விழும் இடம். இந்த தங்கத்தின் விலை மாதமொன்றுக்கு தோராயமாக கிராமுக்கு ரூ.100 ஏறிக் கொண்டே இருக்கிறது. தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் தங்கமும் இருப்பதால் முதலீட்டாளர்கள் பலரும் வந்து போகும் இடமாக இது உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் சவரன் ரூ. 4000 என இருந்த தங்கத்தின் தற்போதைய விலை தோராயமாக ரூ.24,000 என ஆறு மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் அந்த தங்கத்தை வெட்டியெடுக்கும் சுரங்கத் தொழிலாளியின் கூலி மட்டும் இன்னும் இரு மடங்காக கூட மாறவில்லை என்பது தான் உண்மை.

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கும் பழக்கத்தை ஆடித் தள்ளுபடி போல விற்க முனைகிறார்கள் வியாபாரிகள். தங்கத்தின் விலை நாளொன்றுக்கு மூன்று முறை மாறுகிறது. நகைக் கடைகளில் இப்போது எல்லாம் 22 காரட் தங்கத்தை வெறும் கட்டியாக வாங்கி ஒரு ஆசாரியிடம் கொடுத்து நகை செய்வது எல்லாம் இப்போது அருகி வருகிறது. ரெடிமேடு சட்டையைப் போல ரெடிமேடு நகைகள் வலம் வரத் துவங்கி விட்டன• சாதாரண நகைகளுக்கு 6 சதவீதம் முதல் வேலைப்பாடு மிக்க நகைகளுக்கு 30 சதவீதம் வரை எல்லாம் சேதாரம் போட்டு வாடிக்கையாளரிடம் காசு வசூலிக்கிறார்கள் நகைக்கடை முதலாளிகள். முக்கியமாக சாதாரண மக்கள் அணியும் தாலி, கம்மல், வளையல், மூக்குத்தி போன்றவற்றில் சேதாரத்தை ஆயிரக்கணக்கில் சேர்த்துக் கொள்கின்றனர். போணியாகாத டிசைனுடு நகைகளுக்கு சேதாரத்தில் 20 சதவீதம் தள்ளுபடி செய்யவும் செய்கின்றனர்.

பெரிய நகைக் கடைகளாக ஜாய் ஆலுக்காஸ், ஜிஆர்டி, தானிஷ்க், நாதெள்ள சம்பத்து, லலிதா, கேரளா, மலபார் என பல இருக்கின்றன• தற்போது தங்க விலை அதிகரித்து விட்டதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதில்லை. கல்லா கட்ட நினைக்கும் ஜூவல்லரி கடைகள் சீட்டுக் கட்டி நகை வாங்க வைக்கிறார்கள். அதாவது நீங்கள் கையில் வைத்திருக்கும் காசுக்கு அன்றைய சந்தை விலைக்கு நகைகை உங்கள் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். முதிர்வு மாதத்தில் நகை உங்கள் கையில் இருக்கும். சேதாரத்தில் ஏதாவது சலுகை இருக்கும். குறைவான எடையில் ஒரே மாடலுக்கு அதிக சேதாரமும், அதே மாடலில் அதிக எடைக்கு குறைவான சேதாரமும் எல்லாக் கடைகளிலும் காணப்படும். இந்த உத்திதான் பலரையும் அதிக எடை நகையை நோக்கி ஓடச் செய்யும் என்பதே வியாபார தந்திரம்.

போலி நகைகள் நிறைய வருவதால் ரிசர்வ் வங்கி பத்திரிகைகளில் நகை வாங்கும் போது பார்க்க வேண்டிய விசயங்கள் என சிலவற்றை விளம்பரம் செய்கிறது. வங்கிகளுக்கு தங்க நகை வாங்க கடன் தர வேண்டாம் என அறிவுறுத்துகிறது. ஏனென்றால் ஆன்லைன் சூதாட்டத்தை அது வளர்த்து விடுமாம். இது நமது சேமநல நிதிக்கு பொருந்தாதா என்றெல்லாம் கேட்க முடியாது. போலி நகைகள் மாத்திரமல்ல சில நிறுவனங்கள் தங்க இறக்குமதியில் அரசை ஏமாற்றி உள்ளனராம். இது தொடர்பாக மத்திய கனிம மற்றும் உலோக வணிக கழக‌த்தில் பொது மேலாளராக இருந்த குருமூர்த்தி என்பவரை சென்னையில் கைது செய்துள்ளனர். இந்நிறுவனம் தான் உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்து இங்குள்ள வியாபாரிகளுக்கு அளிக்கும். 2007-09 இல் அதிகாரிகள் துணையுடன் ஒரு தங்க வியாபாரி 18 கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் ஏமாற்றி இருக்கிறார். இது பற்றிய புகாரை கடந்த ஜூலையிலிருந்து விசாரித்து வரும் சிபிஐ அந்த வியாபாரியிடம் சோதனையிட்ட போது ரூ.130 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பெருமளவிலான ரொக்க கையிருப்பும் பிடிபட்டுள்ளது.

இதில் சிவசகாய் என்ற நிறுவனமும் சிக்கி உள்ளது. அவர்கள் ரூ.89 கோடி வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. 2007-10 காலகட்டத்தில் இந்த ஏமாற்று வேலை நடைபெற்றுள்ளது. திங்களன்று குருமூர்த்தியை சிபிஐ கைது செய்துள்ளது. அவர் செய்த மோசடி இதுதான். அதாவது எவ்வளவு தங்கம் வேண்டும் என்பதை வியாபாரி முதலில் பதிவு செய்வார். அவர் அதனை பல மாதம் கழித்து தான் பணத்தை கொடுத்து பெற்றுக் கொள்வார். ஆனால் தங்க விலை கூடிக் கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புக் செய்த போது இருந்த விலைக்கே தங்கத்தை கனிம உலோக வணிக கழகம் அளித்ததாம்.

மக்கள் வறுமையின் கொடுமை தாங்காமல் நகையை விற்கப் போனால் அன்றைய விலையில் இருந்து 3 முதல் 5 சதவீதம் வரை கழித்துக் கொண்டுதான் பணம் தருவார்கள் நகைக்கடை முதலாளிகள். அதுவும் பழைய தங்கம் என்றால் என்னவோ பழைய துணி போல இன்னும் பணத்தை குறைப்பார்கள். ஆனால் அவர்கள் வாங்கும்போது மட்டும் அரசை ஏமாற்றி கோடிக் கணக்கில் இப்படி சுருட்டுவார்கள்.