privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!

வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!

-

பங்களாதேஷ் விபத்து
விபத்து நடந்த தொழிற்சாலையில் வால்மார்ட் முத்திரை உள்ள ஆடைகள் இருப்பதை வங்கதேச தொழிற்சங்கங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கின்றன.

டந்த சனிக்கிழமை இரவு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள தஸ்ரின் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 112க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

கீழ்த்தளத்தில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ  ஒவ்வொரு மாடியாக பரவியுள்ளது. மாடிப்படிகள் தீயினால் சூழப்பட்டதால் தொழிலாளர்கள் வெளியேறி முடியாமல் சிக்கியிருக்கின்றனர். அபாய நிலையில் வெளியேறுவதற்கான பாதுகாப்பு வழிகள் எதுவும் அந்தக் கட்டிடத்தில் இல்லை. சுதாரித்த தொழிலாளர்களில் பலர் ஜன்னல் கம்பிகளை உடைத்து மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

தீயணைப்புப் படை வீரர்கள் 100 உடல்களை மீட்டிருக்கின்றனர். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 தொழிலாளர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றனர். அந்த 8 மாடிக் கட்டிடத்தின் கூரையிலிருந்து பல தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தஸ்ரின் பேஷன்ஸ் என்ற நிறுவனம் வால்மார்ட், கேர்ரபோர், ஐக்கியா போன்ற ஐரோப்பா, அமெரிக்காவின் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ஆடைகளை தயாரித்து அனுப்பும் தூபா குழுமத்தின் கிளை நிறுவனமாகும். 2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தஸ்ரின் தொழிற்சாலையில் 1,700 பேர் வேலை செய்கின்றனர். நிறுவனம் போலோ சட்டைகள், ்பிளீஸ் ஜாக்கெட்டுகள், டி-ஷர்ட்டுகள் உற்பத்தி செய்கிறது.

பங்களாதேஷில் 4,000 ஆயத்த உடை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவற்றில் பல போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. ஆனால் ஆண்டுக்கு $20 பில்லியன் (சுமார் ரூ 1 லட்சம் கோடி) வருமானத்தை ஈட்டும் இந்தத் துறையை பங்களாதேஷ் அரசு நெறிப்படுத்துவதில்லை. பங்களாதேஷின் மொத்த ஏற்றுமதியில் 80 சதவீத மதிப்பு ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கிடைக்கிறது. இந்தத் துறையில் 30 லட்சத்துக்கும் அதிகமான பேர் வேலை செய்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பெண்கள்.

இந்த தீவிபத்தால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் இயங்கும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுத்தையும் ஆயுதப் படைகளையும் அரசு அனுப்பியிருக்கிறது.

இந்த கொடூரமான நிகழ்வு பற்றிய செய்தி வெளியானதும் தனது பிம்பத்தை காத்துக் கொள்வதற்காக அந்த தொழிற்சாலையில் தனது பொருட்கள் உற்பத்தியாவது இல்லை என்று வால்மார்ட் மறுத்தது. வால்மார்ட்டின் ்பேடட் குளோரி பிராண்டுடனான ஆடைகள் தீக்கிரையான கட்டிடத்தில் கிடப்பதை காட்டும் புகைப்படங்கள் வெளியானவுடன், தான் தூபா குழுமத்துக்கு ஆர்டர் கொடுத்ததாகவும் அந்த நிறுவனம் சட்ட விரோதமாக இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்திருக்கிறது என்றும் மழுப்பியிருக்கிறது வால்மார்ட். இந்தத் தொழிற்சாலையில் தனது பொருட்கள் உற்பத்தி ஆவது தனக்கு தெரியவே தெரியாது என்று பசப்பியிருக்கிறது.

தூபா குழுமத்துடன் தன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் உலகில் தன் நிறுவனத்திற்காக இயங்கும் தொழிற்சாலைகளில் தீயணைப்பு வசதிகளை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மே 2011-ல் வால்மார்ட்டின் தணிக்கை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் தஸ்ரின் தொழிற்சாலை உயர் ஆபத்து உடையது என்பதை குறிப்பிடும் ஆரஞ்சு மதிப்பீடு பெற்றிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இன்னொரு கண் துடைப்பு தணிக்கையை நடத்தி நடுத்தர ஆபத்து என்று சான்றிதழ் அளித்திருக்கிறது தணிக்கை நிறுவனம். அடுத்த ஒரு ஆண்டில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதையும் அதிலிருந்து பொருட்களை வாங்குவதையும் வால்மார்ட் தொடர்ந்திருக்கிறது.

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டும் அம்மாஞ்சியாக வால்மார்ட் நம்மை ஏமாற்ற முனைகிறது. குறைந்த விலைக்கு பொருட்களை விற்று உலகின் சந்தைகளை தனது பகாசுர கரங்களுக்குள் கொண்டு வந்து எண்ணற்ற சிறு தொழில்களை அழிக்கும் கலையை கடைப்பிடிக்கும் வால்மார்ட் தன் லாபத்திற்காக பொருட்களை குறைவான கூலிக்கு செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறது.

வால்மார்ட் கொடுக்கும் விலையில், மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பு வசதிகள் இல்லாத கட்டிடங்கள், பாதுகாப்பற்ற பணிச்சூழல் என்று வியர்வைக் கூடங்களில் உற்பத்தி நடக்கிறது.  தொழிலாளிகளின் சம்பளத்தை குறைப்பதில் இருந்து அவர்களுக்கு வசதிகளை குறைப்பது (மறுப்பது), அதிக நேரம் வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவது, மிக மோசமான பணிச்சூழலில் வேலை வாங்குவது, பாதுகாப்பிற்காக செலவு செய்யாமல் மிச்சம் பிடிப்பது என வியர்வைக் கூடங்களை உருவாக்கி வால்மார்ட்டுக்கு சேவை செய்கின்றனர் பங்களாதேஷ் முதலாளிகள்.

தமது ஊதியத்தையும் பணிச் சூழல்களையும் மேம்படுத்துவதற்கு ஒன்று சேர்ந்து போராட முனையும் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறை அவிழ்த்து விடப் படுகிறது. வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருப்பதாகவும் சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு என்றும் தொழிலாளர் நலனுக்கான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஸ்காட் நோவா குற்றம் சாட்டியிருக்கிறார்.

தொழிலாளர் நலனையும் அது தொடர்பான சட்டங்களையும் நிறுவனங்களும் மதிப்பதில்லை அரசும் கண்டு கொள்வதில்லை.

இதுவரை தஸ்ரின் நிறுவன முதலாளிகளோ தூபா குழுமத்தின் அதிகாரிகளோ இந்த விபத்தைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  போபால விஷவாயு விபத்திற்குப் பின் அந்நிறுவனத்தின் முதலாளியான ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பியதை போல் நஸிரின் முதலாளி உல்லாச சுற்றுலாவை அனுபவித்துக்கொண்டிருப்பார். தீ விபத்தில் மகனையும் மருமகளையும் பறிகொடுத்துவிட்டு அவர்களின் பிணத்தை அடையாளம் காண முடியாமல் அழுது கொண்டிருக்கும் சபினா யாஸ்மின், ‘இந்தத் தொழிற்சாலை உரிமையாளர்களை தூக்கில் போட வேண்டும்’ என்று அழுது கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நுகர்வோர் மலிவு விலை ஆடைகளை வாங்க போட்டி போடுகிறார்கள். இந்தியாவில் மேட்டுக்குடியினர் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்கிறார்கள்.

படிக்க: