privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவைரல் மார்க்கெட்டிங் - சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரம் !

வைரல் மார்க்கெட்டிங் – சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரம் !

-

வைரல் மார்க்கெட்டிங் 3
வைரல் மார்க்கெட்டிங்

மூக வலைத்தளங்கள் அனைவரும் தத்தமது கருத்துகளை வெளிடுவதற்கான, கருத்து சுதந்திரத்திற்கான வெளியை ஏற்படுத்தியிருக்கும் மாற்று ஊடகமாக வியந்தோந்தப்படுகின்றன. சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டிவிட்டரில் ஒரு குறிப்பிட்ட பொருளை, பிரச்சனையை பற்றி பேசி விவாதிப்பதுடன் அதை ஒருங்கிணைக்க # முத்திரை (#Discover – hash tag) பயன்படுத்தப்படுகிறது. அதாவது விவாதிக்கும் விடயத்திற்கு ஒரு பொதுவான பெயர் வைத்து அதன் முன் ’#’ சேர்த்து அனைவரும் அதன் கீழ் விவாதம் நடத்துவார்கள். இதன் உதாரணம் #tnfisherman.

இதே முறையில் மைக்ரோ சாப்ட் #DroidRage என்ற பெயரில் அதாவது Android மீது உங்களின் கட்டுப் படுத்த முடியாத கோபம் என்ற பொருளில் ஒரு விவாதத்தை தொடக்கி வைத்து அதில் ஆன்ராய்டு மென்பொருள் போன்கள் வைரஸினால் பாதிக்கபட்ட கதைகளை எங்களிடம் சொல்லுங்கள், உங்களுக்கு ஆச்சரியமான பரிசுகளை தருகிறோம் என்று சொல்லியிருந்தது. விண்டோசின் காதலர்களும், நலம் விரும்பிகளும் (?) உடனே களத்தில் குதித்து ஆண்ட்ராய்டு மொன்பொருளின் குற்றங்குறைகளை தோண்டியெடுத்து பதிவிட ஆரம்பித்தனர்.

வைரல் மார்கெட்டிங் 1இது Amway போன்ற MLM நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்ளிடம் ஆசையைக் காட்டி அவர்களையே தனக்கு விளம்பரம் செய்பவர்களாக பயன்படுத்தும் மலிவான உத்தி தான் என்றாலும், தனது பொருட்களின் நிறையை நம்பி அதன் அனுகூலங்களை விளம்பரப்படுத்துவது என்பது போய் போட்டியாளரின் குறைகளை நம்பி அதை விளம்பரப்படுத்தி ஆதாயமடைவது என்ற கட்டத்தை அடைந்திருக்கிறது.

இதைப் பார்த்த Android விரும்பிகள் Microsoft-ன் குறைகள் குறித்து #WindowsRage என்ற பெயரில் எதிர் பதிவு செய்ததும், விண்டோஸ் தான் வைத்த ஆப்பில் தானே சிக்கிக்கொண்டது.

விண்டோசுக்கு ஆதரவான, எதிரான இருவகைப் பதிவர்களும் இதன் மூலம் நவீன ஸ்மார்ட் போன் கம்பெனிகளுக்கு இலவச விளம்பரம் செய்திருக்கிறார்கள். இதில் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இருசாரரையும் பலியாக்கி லாபமீட்டும் வேலையைப் பார்க்கின்றன. சந்தையில் இதெல்லாம் சாதாரணம், போட்டியின் அறம் இதுதானென்று என்று சந்தைப் பொருளாதார ஆதரவாளர்கள் வாதிடலாம். இவ்விடயத்தின் பரிணாமம் இத்துடன் முடிவடைந்து விடவில்லை.

ஒவ்வொரு நிறுவனமும் சந்தை போட்டியில் வகை வகையான விளம்பரங்களை கையாண்டு வருகின்றன. விளம்பரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு புறம் வெகுஜன ஊடகங்கள் மக்களிடையே கருத்து திணைப்பை செய்து வருகின்றன. மறுபுறம் மாற்று ஊடகமாக சொல்லப்படும் சமூக வளைத்தளங்களிலோ, அவர்களுடைய கருத்துக்கள் நம்முடைய வாயால் சொல்லவைக்கப்படுகின்றன. இந்த புதிய விளம்பர முறைக்கு ’வைரல் மர்கெட்டிங்’ (Viral Marketting) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் மார்கெட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது விடயம் பரபரப்பாக பேசவைக்கப்படும். அந்த பரபரப்பில் அந்த விடயம் உலகெங்கும் பல லட்சக்கணகானோரின் பொதுக் கருத்தாக்கப்படும். இந்த வகையில் நிறுவனங்களின், விளம்பரப்படுத்துவோரின் MouthPeice ஆக நம்மை மாற்றி அதன் மூலம் இலவச விளம்பரத்தில் அந்நிறுவனங்கள் கொள்ளை லாபமடிக்கின்றன.

பீற்றிக்கொள்ளக்கூடிய ‘சமூக வலைத்தளங்களின் கருத்து சுதந்திரம்’ என்பது இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. இது தான் கருத்து சுதந்திரம் என்றால், தனது லாபத்திற்க்காக எதையும் செய்யலாம் என்பது தான் சந்தை போட்டியின் அறம் என்றால், அது நிலவும் சமூக அமைப்பின் விழுமியங்களில் பிரதிபலிக்காமல் இருப்பதில்லை. அது தனி மனித நுகர்வே இறுதி மகிழ்ச்சி, கருத்து சுதந்திரம், விழுமியம், நுகர்விற்காக எதையும் செய்யலாம் என்றாகியிருக்கிறது.

உலகமே நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள் என்பது ஷேக்ஸ்பியர் காலத்து வழக்கு. இன்றைய உலகமயமாக்கல் சகாப்த்தத்தில் உலகமே சந்தை, நாமெல்லாம் சந்தையின் பரிவர்த்தனை பண்டங்கள், சந்தை போட்டியே அறம் என்றாகிவிட்டது. கருத்து சுதந்திரத்தையும், சமூக பற்றையும் மீட்டெடுக்க வேண்டுமென்றால், இந்த சந்தைப் பொருளாதாரத்தையும், அதன் உயிரையும் வீழ்த்த வேண்டும்.

படிக்க: