privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !

இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !

-

it-act-goondas-tamilnaduமாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா சில, பல முடிவுகளை பாசிச ரசனையோடு அறிவித்திருக்கிறார்.

போலீசாருக்கான ரொக்கப்பரிசு உயர்த்தப்படுதல், போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் ஏற்படுத்துதல், சிறை கைதிகளை அழைத்து வரும் போலீசாருக்கான செலவுத் தொகையை உயர்த்துதல், மத்திய சிறைச்சாலைகளில் ஸ்கேன் கருவிகள் வாங்குதல், போலீசுக்கு உதவும் பொருட்டு மாவட்டம் தோறும் சட்ட அதிகாரி நியமித்தல் என்று போலிசாருக்கு ஏராளம் சலுகைகள் வசதிகளை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றில் முக்கியமானது குண்டர் சட்டம் குறித்த அறிவிப்பு!

ஏற்கனவே இருக்கும் குண்டர் சட்டத்தில் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதை பொருள் கடத்துபவர்கள், திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் – விற்பவர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள் குறிப்பாக தி.மு.க தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர். எங்கள் தோழர்கள் கூட முன்னரும் இப்போதும் இப்படி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சட்டப்படி கைது செய்யப்படுபவர்கள் யாரும் ஒரு வருடம் வரை சிறையில் இருந்தாக வேண்டும், பிணை கிடையாது. வழக்கு, விசாரணை தாமதம் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

தற்போது இந்த குண்டர் சட்டத்தின் வரம்புகளை அகற்றிவிட்டு இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதன் படி, “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்”. அதாவது இனி கைது செய்யப்படுபவர்கள் யாரும் தொழில்முறைத் திருடர்களாகவோ, ரவுடிகளாகவோ இருக்க வேண்டியதில்லை. ஒரு குற்றம் புரிந்திருந்தாலே போதும். முதல் குற்றம் புரிபவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்பவர்களாக போலிசால் கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

முக்கியமாக இந்த விதி கிரிமனல்களை மட்டும் குறிவைக்கவில்லை. மக்களுக்காக போராடுபவர்களை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்று தீர்மானித்து கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைப்பதற்கு வழிவகுக்கிறது. இதன்படி இனி கல்வியில் தனியார்மயத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை குண்டர்கள் சட்டத்தில் அடைக்க முடியும். போலிசாரின் லாக்கப் கொலையை எதிர்த்து போராடும் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களையும் ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும்.

சரி இது ஏதோ வெளியே போராட்டம் நடத்துபவர்களுக்கு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். பாசிச ஜெயாவின் குண்டர்கள் சட்ட அறிவிப்பில் அடுத்து வரும் அணுகுண்டு அறிவிப்பு என்னவென்றால் “சைபர் கிரைம் குற்றம் செய்தவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாகும். சைபர் கிரைம் என்றால் ஏதோ நைஜீரியன் மோசடி மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். அரசியல் ரீதியாக எழுதுபவர்கள், அரசுகள், கட்சிகள், மதவெறி, சாதிவெறிகளைக் கண்டித்து எழுதுபவர்களும் கூட பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என்ற முகாந்திரத்தில் கைது செய்யப்படலாம்.

வினவு தளம் இந்து மதத்தை தாக்கி எழுதுகிறது, சாதிய சமூக ‘இணக்கத்தை’ குலைக்கும் வகையில் எழுதுகிறது என்று யாராவது ஒரு புகார் கொடுத்தால் அல்லது போலீசே அப்படி ஒரு வழக்கு பதிவு செய்தால் எங்களையும் கேட்பார் கேள்வியின்றி ஒரு வருடம் உள்ளே தள்ள முடியும். ஜெயலலிதாவை கண்டித்து யாராவது ஒரு ஓவியர் கார்ட்டூன் வரைந்தால் கூட குண்டர்கள் சட்டம் பாயலாம். அந்த ஓவியத்தை விரும்பி லைக் செய்தவர்களும் கூட கைது செய்யப்படலாம். இப்படி ஓரிரு முறை நடந்து விட்டால் மற்றவர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள்.

இதன்போக்கில் இணையப்பரப்பில் அரசியல் ரீதியாக பேசுபவர்களும், வினையாற்றுபவர்களும் இல்லாமல் போய்விடுவார்கள். இதற்கு தோதாக “பள்ளி படிப்பிலேயே சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்” என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதாவது முகநூலிலோ, பதிவுகளிலோ அரசியல் பிரச்சினைகளை எழுதாமல் கடி ஜோக், சினிமா, முதலியவற்றை மட்டும் மாணவர்கள் எழுதலாம், இல்லையெனில் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது என்று மிரட்டப்படுவார்கள்.

அடுத்து போலீசு இந்த குண்டர் சட்டத்தை சுறுசுறுப்பாகவும் அதிகமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று உற்சாகப்படுத்தும் வகையில் “குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8ஆயிரமாக உயர்த்தப்படும்” என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இனி ஏட்டையாவுக்கு ஏதாவது பாக்கெட் மணி வேண்டுமென்றால் கூட கடைதெருவில் புதிய ஜனநாயகம் இதழை படித்துக் கொண்டிருக்கும் ஒருவரை கைது செய்து குண்டாசில் போடலாம். பணத்துக்கு பணம், பாசிசத்துக்கு பாசிசம் இரண்டும் நிறைவேறும்.

இப்படி மெய்யுலகிலும், மெய் நிகர் உலகிலும் பாசிச ஜெயாவின் போலீஸ் ராஜ்ஜியம்தான் நடக்கப் போகிறது. அப்படி நடக்கக் கூடாது என்றால் நாம் இணையத்திலும், இணையத்திற்கு வெளியிலும் போராட வேண்டும். பாசிச ஜெயாவின் இந்த அடக்குமுறை தர்பாரை வாசகர்களும், பதிவர்களும், முகநூல் – ட்விட்டர் நண்பர்களும் கடுமையாக கண்டிப்பதோடு இந்த பிரச்சாரத்தை பரந்து பட்ட அளவில் கொண்டு செல்லுமாறும் தோழமையோடு கோருகிறோம்.

  1. /பாசிச ஜெயாவின் இந்த அடக்குமுறை தர்பாரை வாசகர்களும், பதிவர்களும், முகநூல் – ட்விட்டர் நண்பர்களும் கடுமையாக கண்டிப்பதோடு இந்த பிரச்சாரத்தை பரந்து பட்ட அளவில் கொண்டு செல்லுமாறும் தோழமையோடு கோருகிறோம்./

    பதிவராக ஜெயலலிதாவின் இந்த அடக்குமுறையை நான் வன்மையாக கடுமையாக கண்டிப்பதோடு, எனது நட்பு வட்டங்களில் உள்ள அனைவருக்கும் இந்த இணைய அடக்குமுறையை முறியடிக்க வெவ்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்வேன்.

    இந்த கட்டுரையில் காரமும் சாரமும் குறைவாகவே இருப்பது போன்றே தோன்றுகிறது. இன்னும் விரிவான அலசலோடு இப்பதிவை போட்டிருந்திருக்கலாம்.

  2. பிரச்சனைகளை மூடி மறைத்து தமிழகத்தை அமைதி பூங்காவாக்குவதற்கு சதித்திட்டவழி தான் இது.ஓட்டு போட்ட மக்களுக்கு அவர்கள் விரல்களாலே கண்ணை நோண்டும் வழி, மாயன் காலண்டர்படி தமிழகம் அழிய ஆரம்பித்து விட்டது.

  3. சாலை மறியலுக்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டுமாம். சாலை மறியல் செய்பவர்கள் விமானத்திற்கு முன்பதிவு செய்ய சாலையில் நிற்கிறார்கள் என்று புரிந்துகொண்டார் போலும் அம்மணி.

    நீங்கள் ஒரு பாசிஸ்டா என யாராவது செயாவிடம் கேள்வி கேட்டால் ஆமாம் நான் ஒரு பாசிஸ்ட்தான் என்று சட்டசபையில் கூட பெருமையாக அறிவிப்பார். அந்த அளவிற்கு அவாள் ஒரு பாசிஸ்ட்.

    • ஹி ஹி சாலை மறியலுக்கு அனுமதி பெறலாம் என்று அரசு சொன்னால் ஏன் கொடுத்தீர்கள் என்று நீதிமன்றம் கேட்குமே.. நீதிமன்றம் பாசிஸ்ட்டா..?! இந்த பாசிஸ்ட்டுகள் தொல்லை தாங்க முடியல்லப்பா..

  4. இனிமேல் தான் வினவுவின் ஆண்மை தன்மை தெரிய வரும் …ஒவ்வொரு பதிவுகளும் ஆராயப்பட்டு வருவதாக அங்கிருந்து (!!!!!!!) வரும் செய்திகள் தெரிவிக்கின்றன …

  5. இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம், காவலர்களுக்கு இன்னும் வருவாய் வருவதற்கு வழி கொடுத்து இருக்கிறார், ஏற்கனவே காவலர்களின் அநியாயம் தாங்க முடியவில்லை இந்த சட்டங்கள் அமுலுக்கு வந்தால் காவல்துறை காட்டில் நல்ல மழை. அயல் நாட்டில் பணிபுரியும் தமிழ்கள் வலை தளங்களில் அரசை கண்டித்து எழுதினால் எந்த குண்டர் சட்டம் பாயும். யாரவது விளக்கவும்

  6. பின் குறிப்பு : கலைஞரை திட்டி எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுமாம் ….

  7. பாசிசப் பேயின் ஆட்டம் எப்படியானானும் அது யதார்த்தத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்டமுறையில் எதிர்கொள்ளும்போது மக்கள் சரியாக செயலாற்றுவார்கள், ஆனாலும் பிறர் படும் பாடு நம்மை அறியவைத்தாலே இன்னும் சிறப்பாகும்.

    • ஹா ஹா ஹா காமெடி பீஸ் வினோத் (and Harikumar ) சிந்திக்கவே தெரியாதாட்டுக்கு…

      ஒன்னு புரிஞ்சுக்க ”ஒரு அரசாங்கத்தின் சட்டம் கடுமையாக, கடுமையாக அந்த அரசாங்கம் நிறைய நெருக்கடிக்கு ஆளாகிறது என்று அர்த்தம். அதாவது அரசு மக்களை பார்த்து பயப்படுகிறது, இந்த போலி ஜனநாயகம் கேலி கூத்தாகி அம்பலப்பட்டு போய்விட்டது என்று அர்த்தம்”, இது தெரியாம இப்படி குழந்தை தனமா பேசுரியே!

      • unai ellam naanga madhikirathu kedayathu,irunthalum badhila kelu

        Sattangal kadumayavathu unna maadhiri dubakoor ellam over scene podurathu naala thaan, makkal adhuvum kurippaa maidhiya kulaikka virumbum sila makkal irunthale pothum,sattam kadumai aagidum.

        Democracy means people’s wish,but it also means the right people’s right wish and not necessarily all the wishes of all people.

        In a classroom 4-5 naughty, mischievous children are enough for a teacher to impose strict rules.

        The whole class need not suffer for the deeds of 4-5 people.

        • /unai ellam naanga madhikirathu kedayathu/

          நீங்கள் means?

          ஒருவேளை நிறையபேர் கேங்கா இருந்து கமென்ட் போடுரீங்களா?
          (அதற்கு வாய்ப்பு குறைவு)

          ஒருவேளை நீங்க ஒரே ஆள் பல பெயர்களில் கமென்ட்
          போடுரீங்களா?

          அதனாலத்தான் உங்களால ‘நாங்கள்’ என்று சொல்லிக்கொள்ள முடிகிறது.

          Ha ha ha…

          பின்பு மக்களாட்சியைப் பற்றி என்னமா விளக்கம் தர்ரீங்க, முடியல…

          அரசு என்பது ஒரு வர்கத்தின் ஒடுக்கும் கருவியாகத்தான் இருக்கும், அது
          சோசலிசத்தில் பெருபான்மை மக்களின் நலனுக்கான பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்
          என்ற உண்மையை சொல்லித்தான் ஆட்சி இருக்கும்.

          ஆனால் இந்த முதலாளித்துவம் பணக்கார வர்க்கத்துக்கான அரசு, அதனால் ஜனநாயகம், Democracy
          போன்ற பொய்யான வார்த்தைகளை பேச வேண்டியிருக்கு.

          இந்த பொய்யான ஜனநாயகமுறை உங்களுக்கு ஏன் பெரிதாக தெரிகிறது என்றால்?

          உங்கள் மனம் முடியாட்சி/நிலப்பிரப்புத்துவ நிலைமையிலேயே இருக்கிறது. அதனால் தான் இந்த ஒரே ஒரு ‘ஓட்டுப்போடும் உரிமை’யே உங்களுக்கு பெரியவிடயமாக இருக்கிறது!

          ஒருமுறை நீங்கள் சொன்னது, ”என்னால் எனது சாதி, மதம், குலம், கோத்திரம், சடங்கு, etc., இதையெல்லாம் விட்டு வெளியே வரமுடியாது” என்று பரிதாபமாக பதில் சொன்னிங்க… ஏன் உங்கள் மனம் அப்படி இருக்கிறது?

          சிந்தித்து பார்த்தீர்களா?

          காரணம் நிலப்பிரப்புத்துவ அடிமை மனோபாவம்.

          இது மக்களாட்சி என்று சொல்லுரீங்களே அப்புறம் எதற்கு Article 365, 356. ??
          அதாவது மக்களுக்கு
          இந்த சனநாயகமுறை ‘தமக்கு எதிரானது என்று’ makkal therinthukondu போராட வந்தால் உடனே இந்த சட்டம் தன் வேலையை காண்பிக்கும். இந்த அரசின் உண்மையான சனநாயகம் என்ன? அரசு யாருக்காக இருக்கிறது, என்ற உண்மை உங்களுக்குப் புரிய வரும்.
          நீங்கள் சொன்ன மக்களாட்சி விளக்கம் உங்களை பார்த்து சிரிப்பா சிரிக்கும்.

          சரி இந்தியாவின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்சி இருக்க வேண்டுமென்ற
          முடிவை எடுத்தது யாரு தெரியுமா?

          சோனியாகாந்தி!

          120 கோடி மக்களின் தலைவரை
          தேர்ந்தெடுப்பது ஒரே ஒரு ஆள்!

          பாவம் நீங்கள்….

          மக்களாட்சி என்று சொல்லுரீங்க ஆனால் சட்டசபையில் ஜெயலலிதா சொன்னத கேட்டிங்களா…..

          ”என்னுடைய ஆட்சியில் தமிழகத்தை…..”

          ‘என்னுடைய’ என்று பேசுவதை வைத்து தெரிந்துக்கொள்ள வேண்டாம்,
          உங்கள் மக்களாட்சியின் மகிமையை!!

          ( தேர்தலில் தோற்றவன் உள்துறை அமைச்சராக முடியும்!

          எங்கோ தூங்கி கொண்டிருந்தவனை கொண்டுவந்து பிரதமர் ஆக்க முடியும்!

          உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!

          அப்படியிருக்கும்போது இந்த தேர்தலை பார்த்து சந்தோஷம் அடைபவன் சூடு, சொரணை இல்லாதவன்!

          இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா?

          ராகுல் காந்தி!!!

          ராகுல் காந்திக்கு என்ன தகுதியிருக்கிறது?

          ராஜிவ் காந்தியின் விந்தணுவிலிருந்து பிறந்தவன்! அவ்வளவுதான்!!

          எனவே இந்த போலி ஜனநாயகத்தை நினைத்து பெருமையடையும் ‘வெங்காயங்களே”

          நீங்கள் வரலாற்று சாதனையாக கருதி பெருமையடைய வேண்டியது—

          ”’உங்கள் தலைவர்களின் உடலுறவு நிகழ்சிகளை”’

          நாம் இந்தியர் என்பதில் பெருமையடைவோம்!!!

          ஜெய்ஹிந்த்!!!)

          • Excellent,
            நீங்கள் வரலாற்று சாதனையாக கருதி பெருமையடைய வேண்டியது—

            ”’உங்கள் தலைவர்களின் உடலுறவு நிகழ்சிகளை”’
            no one can give any reply against for this. If they put any reply then ……

        • என்னங்க Harikumar, சத்தத்தையே காணோம், இதுக்குத்தான் பிரச்சனைக்கே வருவதில்லைனு சொல்லுரீங்களா.

          சரி இந்த போலி ஜனநாயகத்தை இனியும் தலையில் தூக்கிவைத்து திரிய போரீங்களா? இல்லை உங்க எண்ணத்தை மறுபரிசீலனை செய்யப்போரீங்களா?

  8. அடக்குமுறை சட்டங்கள் அரசுக்கு எதிராக திரும்பும் என்பது வரலாறு. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த கருப்புச் சட்டம் செல்லாது.

  9. ஒவ்வொரு விசைக்கும் அதற்கு இணையான எதிர் விசை ஒன்று உண்டு என்பது அறிவியல் விதி. அதாவது நியூட்டன் விதிகளில் ஒன்று. அப்படி இருக்கும் போது இவ்விதியை சட்டத்தால் மாற்ற முடியும் என்பது எவ்வகை அறிவு?

  10. பாசிஸ்டுகளின் கோரதாண்டவம் ,அடக்குமுறைகளும்,கருப்பு சட்டங்களும் தான்.
    படிக்காத மக்களின் அம்மா அம்மா என்ற அரசியலை விடுத்து,படித்தவர்கள் வளைதலங்களில் விவதித்து அரசியல் பேசுவது அவர்களால் பொருத்து கொள்ள முடியுமா என்ன?
    மக்களின் அன்றாட பிரச்சனைகளை உலகறிய செய்து,அதற்கான காரணங்களை அம்பலப்படுத்துவது ,அதை வளைதலங்களின் மூலம் வெளிக்கொணர்வது பாசிஸ்டுகளால் சகித்துகொள்ளமுடியாதுதான்.
    சட்டத்தையும் நீதிமன்றத்தையும் செருப்பாக நினைப்பவர்கள் சட்டம் போடும்போது ஒருமுறை நினைவூட்டிக்கொள்ளட்டும்.மக்களும் ,சட்டத்தோடு அவர்களையும் சேர்த்து அவ்வாறு நினைக்ககூடும்.

  11. Why are the people of Tamilnadu buy in to the fact that Jayalalitha will save all of them. Can anybody save anybody else? We have to save ourselves by not electing these kind of people as Cheif ministers. Please save yourselves People of Tamilnadu

  12. இம் என்றால் சிறை வாசம், அம் என்றால் வனவாசம் என அந்தக்கால கொடும்கோல் அரசுகளின் சட்டம்! மக்களை நம்பாத தாழ்வு மனநோய் கொன்டவர்களின், தற்காப்பு பம்மாத்து!

Leave a Reply to murugan subburam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க