privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பாலியல் வன்புணர்ச்சி - டெல்லி மட்டுமல்ல....

பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….

-

பாலியல் வன்முறை‌டந்த ஞாயிறன்று டெல்லியில் நடந்த பேருந்து கும்பல் பாலியல் வன்முறைக்காக ஒட்டுமொத்த தேசமுமே வீதியில் இறங்கிப் போராட வேண்டுமென்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மறுநாள் திங்களன்று மாலை ஆறு மணிக்கு பாட்னா அருகிலுள்ள சகார்ஸா மாவட்டத்திலுள்ள பெல்வாரா புனர்வாஸ் என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குழந்தை கோழிக்கறிக் கடையில் வேலை செய்யும் தனது அண்ணனை அழைக்க வெளியே செல்கிறாள். அரை கி.மீ தூரத்தில் உள்ள அந்த கடையை அடைந்து சகோதரனை அழைக்கிறாள். நீ முன்னால் போ, நான் கடையை அடைத்து விட்டு வருகிறேன் என்கிறார் சகோதரன். சகோதரன் வீடு திரும்பிய பிறகும் பெண் குழந்தை வந்தபாடாக இல்லை. இரவு 9 மணிக்கு தேடத் துவங்குகின்றனர். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

காலையில் 250 மீட்டர் தூரத்தில் உள்ள கால்வாய்க்கருகில் செருப்பும் துப்பட்டாவும் கிடைக்கிறது. கால்வாயில் சிறுமியின் பிணத்தை கண்டுபிடிக்கின்றனர். பிரேதப் பரிசோதனையில் அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகே கொல்லப்பட்டிருக்கிறாள் என தெரிய வருகிறது. அவளது மாமா சொல்வது போல யாரும் காவல்துறை உயரதிகாரிகள் இங்கு வந்து விசாரித்ததாகவே தெரியவில்லை. ஒரு கண்காணிப்பாளர் மட்டும் தான் வந்தாராம். டெல்லியில் நடந்தால் அவர்களுக்கு அது முக்கியம், இங்கு நடந்தால் யாருக்குமே தெரிவதில்லை என்கிறார் அக்குழந்தையின் மாமா.

டெல்லி சம்பவத்திற்காக மாணவர்கள் ஊர்வலம் போகிறார்கள். நடுத்தர வர்க்கம் ஊர்வலம் போகிறது. சீக்கிய பெண்மணிகள் அமிர்தசரசில் உடனடியாக ஆறு பேரையும் தூக்கில் போடு எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறை உயர்த்திப் பிடிக்கிறார்கள். சுஷ்மா சுவராஜ் 30 நாளில் வழக்கை நடத்தி முடித்து தூக்கில் போடுங்கள் என அப்சல் குருவுக்கு கேட்டது போல உத்திரவிடுகிறார். டெல்லி முதல்வர் காங்கிரசின் ஷீலா தீட்சித் அப்பெண்ணின் குடும்ப விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதி கூறுகிறார். மகிந்திரா நிறுவனம் பாதிக்கப்பட்ட பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு வேலை தருவதாக உறுதி அளித்துள்ளது.

டெல்லியில் கும்பலாக நடத்திய பாலியல் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து அப்பெண் மற்றும் அவரது நண்பரை தாக்கியதும் மிகவும் கொடூரமான நிகழ்ச்சிதான். கட்டாயம் அனைவரும் அதனை கண்டிப்பது சரியானதுதான். ஆனால் சத்திய ஆவேசம் உண்மையானது என்றால் கேட்கப்படாத வன்முறைகள் ஆயிரம் இருக்கின்றனவே!

வாச்சாத்தியின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமே கிடைக்காத போதிலும் மொன்னைத் தீர்ப்பை பெறவே 20 ஆண்டுகள் ஆனதையும், சிதம்பரம் பத்மினி வழக்கையும் கொஞ்ச‌ம் ஒப்பிட்டுப் பார்க்க‌ வேண்டியுள்ள‌து. வ‌ட‌ கிழ‌க்கின் போராளிப் பெண்க‌ளை இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் கொன்று குவிப்ப‌தும், க‌ஞ்ச‌ம் ம‌னோர‌மா போன்ற‌ போராளிப் பெண்க‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குள்ளாக்கியும், அவ‌ர்க‌ள‌து பிற‌ப்புறுப்பில் ல‌த்தியை திணித்திருந்த‌ செய‌லையும் செய்த‌  ராணுவ‌த்தை இன்று போராடும் யாரும் எதிர்த்த‌தாக‌ தெரிய‌வில்லை.

விழுப்புரத்தில் இருளர் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய காவல்துறை மீது வழக்கு தொடுக்கப்பட்ட போது, பணம் பிடுங்க இந்தப் பெண்கள் நாடகமாடுகிறார்கள் என்றார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் சுஷ்மா சுவராஜ்கள் எங்கிருந்தார்கள்? ஊடகங்கள் இதை பரபரப்பாக காட்டி நடுத்தர வர்க்கத்திடம் பிரச்சாரம் செய்வதால் அரசியல்வாதிகள் அனைவரும் பாராளுமன்றத்திலேயே குமுறியிருக்கின்றனர். ஏழைப் பெண்களுக்கோ, இராணுவம், போலீசால் குதறப்படும் பெண்களுக்கோ இத்தகைய ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை.

ச‌மீப‌த்தில் டிச‌ம்ப‌ர் 14 அன்று மேற்கு வ‌ங்க‌ மாநில‌ம் சிலிகுரி வ‌ட்ட‌த்தில் உள்ள‌ ராம‌ஜோதா என்ற‌ கிராம‌த்தில் 24 வ‌ய‌துப் பெண் ஒருவ‌ரை அக்கிராம‌த்தை சேர்ந்த‌ பாருய் என்ப‌வர் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இணைந்து கும்ப‌லாக‌ பாலிய‌ல்                         வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தி, க‌டையில் ம‌ண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றிருக்கிறார். இப்போது அந்த‌ப் பெண்ணும் ம‌ருத்துவ‌ம‌னையில் தான் இருக்கிறார். அவ‌ரைப் ப‌ற்றி சிஎன்என்-ஐபிஎன் டிவி பேசுகிற‌தா? 2 மாத‌ங்க‌ளுக்கு முன் மேற்கு வ‌ங்க‌த்தில் இப்ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் தான் வாழ்க்கையில் அன்றே தோற்று விட்ட‌தாக‌ கூறுவ‌தை கேட்கையில் ஊடகங்களுடைய போலித்தனம் குறித்து ஆத்திரம் வருகிறது.  இந்த‌ குற்ற‌ங்க‌ளில் இதுவ‌ரை யாரும் கைது கூட‌ செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

ச‌மீப‌த்தில் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளில் ஈடுப‌டுவோரில் ச‌த‌வீத‌ம் பேர் அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள் தான் என்கிற‌து மாந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆய்வு. பாலிய‌ல் வ‌ன்முறைக‌ள் ந‌ட‌க்கும்  மாந‌க‌ர‌ங்க‌ளில் டெல்லி, மும்பை, பெங்க‌ளூரு போன்ற‌ த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌, நிதிமூல‌த‌ன‌ சூதாட்ட‌ம், ரிய‌ல் எஸ்டேட் தொழில்க‌ள் அதிக‌மாக‌ ந‌ட‌க்கும் ஊர்க‌ள் தான் முன்ன‌ணியில் இருக்கின்ற‌ன. இந்ந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌க்கும்  இவ்வ‌ன்முறைக‌ளில் வெறும் மோக‌ம், காம‌ம் போன்ற‌ விச‌ய‌ங்க‌ளை விட‌     பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ரை உட‌ல்ரீதியாக‌ தாக்குவ‌து, அவ‌மான‌ப்ப‌டுத்துவ‌து போன்ற‌ செய‌ல்க‌ள் அதிக‌மாக‌ இருக்கின்றன‌.

குறிப்பாக‌ இங்கு தாக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலோர் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌,     உய‌ர்ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ பிரிவினைச் சேர்ந்த‌ பெண்க‌ளாக‌வே உள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ வார‌ம் பெங்க‌ளூருவில் டிராபிக் போலீசு ஒருவ‌ரே காரில் வ‌ந்த‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ பெண் சாலையில் இறங்கி ஆங்கில‌த்தில் பேசிய‌தால் க‌ன்ன‌ட‌ம் தெரியாதா என‌க்  கோப‌மாகி அவ‌ரை க‌ன்ன‌த்தில் அடித்திருக்கிறார்.

டெல்லி ச‌ம்ப‌வ‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நினைவு திரும்பிய‌து, ம‌ற்றும் அவ‌ருக்கு புத‌ன‌ன்று ந‌ட‌ந்த‌ அறுவைச் சிகிச்சை என‌ சீன் பை சீனாக‌ தொலைக்காட்சி ம‌ற்றும் ப‌த்திரிகைக‌ள் ப‌திவுசெய்கின்ற‌ன. அது தொட‌ர்பாக‌ விவாத‌ங்க‌ளை ஆங்கில‌ தொலைக்காட்சிக‌ள் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌த்தி   வ‌ருகின்ற‌ன. இச்ச‌ம்ப‌வ‌த்தில் ஈடுப‌ட்ட‌ 6 பேருமே உதிரித் தொழிலாளிக‌ள் தான். டிரைவ‌ர், கிளீன‌ர் போன்றோரிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டியிருக்குமோ என‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம்பெண்க‌ளுக்கு ஒருவித‌ அச்ச‌த்தை இப்போராட்ட‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌து தோற்றுவிக்கிற‌து. க‌டைசியில் பொதுவான‌ ஆணாதிக்க‌ மொழியில் அவ‌ள் ஒழுங்கா இருந்திருந்தா த‌ப்பு ந‌ட‌ந்திருக்காது என்ற‌ மொழியும், க‌டைநிலை சாதிக‌ள் ம‌ற்றும் தொழிலாளிக‌ள் போன்ற‌ சாமான்ய‌ர்க‌ள் தான் இது போன்ற‌ இழிசெய‌ல்க‌ளில் ஈடுப‌டுவார்க‌ள் என்றும் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌மும் பார்ப்பனிய ஊடகங்களும் பேசுகின்றனர்.

பெரு ந‌க‌ர‌ங்க‌ளின் நுக‌ர்வுக் க‌லாச்சார‌த்தை அணு அணுவாக‌ ருசித்து ம‌கிழும்     உய‌ர் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ ம‌ற்றும் ந‌டுத்த‌ வ‌ர்க்க‌த்தின‌ருக்கும், அடிப்ப‌டை   வ‌ர்க்க‌ங்க‌ளுக்குமான‌ ச‌மூக‌, பொருளாதார‌, ப‌ண்பாட்டு வேறுபாடுக‌ள் க‌ட‌ந்த‌ 20  ஆண்டுக‌ளில் க‌ணிச‌மாக‌ அதிக‌ரித்த‌ப‌டியே உள்ள‌து.  நுகர்வு கலாச்சாரம் தோற்றுவித்திருக்கும் ஆடம்பரங்கள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்பது ஒரு வெறியாகவே ஊட்டப்பட்டிருக்கிறது. கூடவே இந்த நுகர்வு உலகில் பெண்கள் குறித்த போகப்பொருள் என்ற சித்திரமும் அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இதே ஊடகங்களும், சினிமாவும்தான் அத்தகைய காமவெறியை பாலியல் சுதந்திரம், மருத்துவம், கட்டுப்பெட்டித்தனத்தை உடைத்தல் என்று பல்வேறு விதங்களில் ஊட்டி வருகின்றன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதன் பின்னணி இதுதான்.

இதில் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற வேறுபாடு இல்லாமல் வன்முறைகள் நடக்கின்றன. செல்பேசி, இணையம் எல்லாம் பெண்களை மறைந்திருந்து படம்பிடிக்கும் அபாயங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனாலேயே பல நூறு பெண்கள் இங்கே தற்கொலை செய்திருக்கின்றனர். முடியாதவர்கள் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.

தினமணி போன்ற பார்ப்பன ஊடகங்கள் இத்தகைய பண்பாட்டு சூழலைக் கண்டிக்காமல் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஆணாதிக்க மொழியில் உபதேசம் செய்கின்றன. விடலைக் காதலை புரிய வைப்பது, மேலோட்டமான காதலை உணர வைப்பதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் தோன்றும் பின்னணியும் ஒன்றல்ல. ‘நல்ல’ உடை உடுத்தி அடுக்குமாடிக் கட்டிடங்களில் பாதுகாப்பாக வாழும் பெண்கள் கூட தெரிந்தவர்களாலேயே குதறப்பட்டிருக்கின்றனர்.

சீரழிவுக் கலாச்சாரத்தால் வழிநடத்தப்படும் பொறுக்கி ஆண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் எதையும் ஏற்படுத்தி விடாது. நியாயமாக இத்தகைய பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தையும் வழிமுறையையும்தான் பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்தான். இதே ஆணாதிக்கம்தான் பொறுக்கிகளின் மனதிலும் சற்று தீவிரமாக இருக்கிறது. இவையிரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள்!

எனவே ஊடகங்களால் பேசப்படும் டெல்லி சம்பவத்தைத் தாண்டி பாலியல் வன்முறை என்பது அதே ஊடகங்களை உள்ளிட்ட ஆளும் வர்க்க கலாச்சார நிறுவனங்களால் மறைமுகமாக தூண்டிவிடப்படுகின்றன. அதை முறியடிக்காத வரை டெல்லி மட்டுமல்ல, உசிலம்பட்டியும் பெண்களுக்கு பாதுகாப்பானதில்லை.

  1. //ச‌மீப‌த்தில் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளில் ஈடுப‌டுவோரில் ச‌த‌வீத‌ம் பேர் அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள் தான் என்கிற‌து மாந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆய்வு//
    ச‌த‌வீத‌ம் விடுபட்டுள்ளது.

  2. சேய்…இதுலயும் உங்க ஜாதி அரசியலா??

    பெல்வாரா புனர்வாஸில் நடந்த செயலுக்கும் கடுமையான தண்டனை தரவேண்டும்…

    எந்தப்பெண்ணுக்கு இதுநடந்தாலும் இது மன்னிக்க முடியாத கொடுமையே??

    • capital punishment for rape-let us start with vachaathi case followed by padmini case.

      what is your view on //விழுப்புரத்தில் இருளர் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய காவல்துறை மீது வழக்கு தொடுக்கப்பட்ட போது, பணம் பிடுங்க இந்தப் பெண்கள் நாடகமாடுகிறார்கள் என்றார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் சுஷ்மா சுவராஜ்கள் எங்கிருந்தார்கள்? //

      • nagaraj…visit delhi once…
        if women can’t be safe in the capital of a country, they can’t be safe anywhere else; be it usilampatti or imphal…either a government servant being the opressor or a normal person…

        regarding tamil nadu, people like thiru. pazha nedumaaran have always been fighting for such issues..(e.g. vachaathi victims)…

        i agree that media is over-sensationalising the current issue…
        we are also to blame; delhiites are fighting for a fellow delhiite…what did we (tamils) do?

        • this fight should become an iconic protest against all type of gender discrimination,

          ////we are also to blame; delhiites are fighting for a fellow delhiite…what did we (tamils) do?////

          we are already in the fighting platform (see for padmini issue.)

          what about all rapes done by bureaucrats(police or army).

          • //we are already in the fighting platform (see for padmini issue.)//

            see the intensity @ delhi…

            //what about all rapes done by bureaucrats(police or army).//

            no option but to fight; however, thanks to black shirts, we are still worried about who will perform puja and who will eat pongal first…

  3. உசிலம்பட்டியும் பெண்களுக்கு பாதுகாப்பானதில்லை. உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடக்கிறது.

  4. The government has to close all liqueur bars, beer pub and discotheque. There should be strict dress code and censorship on cinema and real life. While the ‘modern society’ allow male to male marriage (homosexuals)and it can be consider as psychotic need, why not the male tempted towards female for rape/free sex/paid sex. We the orthodox people feel to ban all kinds of ‘disorder’ created by the modern society.

    Keeping the car open (removal of sun film) is ridiculous. It attract thieves, high way robbers and other gangsters to identify the cars occupied by unprotected family peoples. They can watch and catch the victims.

  5. I too felt for tat delhi incident..but read tat women M.Ps cried for that gal in parliment..same thing nd even more worst things happened to srilankan tamilians..no single M.P questioned tat and not even drop a tear nd fight for it til now..y tat partiality?delhi ponuku vantha athu ratham athe thamizachiku vantha thakali chutney a?

  6. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துகொண்டு என்ன பண்பாட்டை தமிழகத்தில் ஏதிர் பார்க்க முடியும். பாலியல் சம்பவங்கள் எல்லாம் குடித்தவன் நடத்தியதை ஏன் ஒருவரும் கருத்தில் கொள்வதில்லை?

    • சூப்பரா சொன்னீங்க! குடிக்க வேண்டியது பொறுக்கித்தனம் பண்ண வேண்டியது! பக்கத்துல ஒரு போலீஸ் நிக்க மாட்டான்!

  7. உடனே, டெல்லி தமிழ்னு உணர்ச்சி வசபடாதீங்க! இங்க எவ்வளவு பேரு நியாயம் கேட்டு தெருவுல இறங்கறான்?

  8. தாய் வழி சமூகத்தோன்றளான மனித இனம் வார்க்க பிரிவுகளின் விளைவாகவும் முதலாளித்துவ தனிநபர் நுகர்வு வெரி காரணமாகவும் பெண்களை ஆண்களின் நுகர்வுப் பொருளாக்கி சாதனை படைத்துள்ளது.
    இந்திய அல்லது தமிழ் கலாச்சாரம் என வாய்கிழியப்பேசும் கூட்டம் சினிமா மற்றும் விளம்பர ஆபாச வக்கிர கூத்துக்களையோ,இணையத்தில் வெளியிடப்படும் பல ஆயிரம் செக்ஸ் தளங்களை தடை செய்யசொல்லியோ வாய்திறப்பதில்லை.
    ஆணாதிக்க சமூக ஒழிப்பும் வார்கப்போராட்டமும் வேறல்ல!
    சமூக மாற்றமே சிந்தனை மாற்றத்தின் அடிப்படை
    விலங்குகளும்,பறவைகளும் தாய் வழி சமூகமாக வாழ்வதால் மனிதர்களை போல இழிவான வாழ்க்கை வாழ்வதில்லை.

  9. டில்லியில் இறங்கி போராடுற மாதிரி போராட வேண்டியதுதானே. ஒரு நாள் போராடுனா சாயங்காலம் தண்ணியப்போட்டுகிட்டு மல்லாந்தா ஒரு வாரம் கழிச்சுதான் கண்ணு முழிப்பீங்க. எவன் உங்க பேச்ச மதிப்பான்.

    • well said sir, We are insensitive and not bothers about others problem. we only talk (now in blog and facebook) and wont act. Delhi people wont protest for Tamil,s problem. Tamils are busy in watching TV serials and TASMARK drink

  10. 2011-ல் மட்டும் 2.28 லட்சம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய குற்றப்பதிவேட்டுப்பிரிவு கூறுகிறது. அவ்வாண்டில் பதிவான 24 ஆயிரம் பாலியல் வழக்குகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது 10 சதவிகிதம் வரை உள்ளது என மேற்கண்ட நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு வயது குழந்தை கூட இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்ப முடிவதில்லை என்கிற செய்தி நமது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. ஆனால், 75 சதவிகித பாலியல் வன்புணர்ச்சி குற்றவாளிகள் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பித்து விடுவதாக புள்ளிவிபரம் கூறுகின்றன.
    இதற்கேல்லாம் கரணம் மீடியாக்களின் இரட்டைமுகமும், நீதிமன்றங்களின் மந்தமான போக்கே காரணம்.
    இந்த சம்பவத்தில் விரைந்து தீர்பளிப்பது போல் இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் செயல்பட்டால் பாலியல்ரீதியான சம்பவங்கள் குறையும்.
    மிகவிரைவில் மகாத்தமாகாந்தி சொன்ன சுதந்திரம் இந்தியாவில் நிலவும்….

  11. அரியானாவில்நடக்கும் பாலியல் அத்துமீறல், டெல்லி சீக்கியர்கள் படுகொலை, குஜராத் முசுலிம்கள் படுகொலை, இது போல பலனூறு அக்கிரம்ங்களைப் இப்போது போராடும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது உண்மைதான். இன்றைய அவர்கள் கோபம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கானது ம்ட்டும் அல்ல, டெல்லியில் அன்றாடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரானது. எனவே இப்போராட்டம் பாரபட்சமானது என்றோ, அதிகப்படியானது, என்றோ கருதவேண்டியதில்லை. கொடுமைகளுக்கெதிரான ஆவேசம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

  12. Sir, People is delhi are protesting for their justice. Nobody stopped the Tamils/ other state people from protesting. We are insensitive and not bothers about others problem. we only talk (now in blog and facebook) and wont act. Delhi people wont protest for Tamil,s problem. Tamils are busy in watching TV serials and TASMARK drinks

    • டில்லியில் நடைபெறுவது போராட்டமே இல்லை. தொலைக்காட்சிகள் ஒருங்கிணைத்த காட்சி விருந்து. தம்மீது அதிகப்படியாக தண்ணீர் அபிஷேகம் மட்டுமே நடக்கும் என்று எதிர்பார்த்து நடந்திருக்கும் கேலிக்கூத்து. அந்த போராட்டம் 22 ந்தேதி காலையில் தொடங்கிய போது வெகு சிலரே இருந்தனர். தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பையும், களவருணனையும் பார்த்த உடன் மத்தியதர வர்க்கம் கண்காட்சிக்கு செல்வது போன்று குவியத் தொடங்கியது. அவர்கள் ஏக்கம் ஓன்று மட்டுமாகவே இருந்தது. தங்கள் முகமும் க்ளோசப்பில் காட்டப்பட்டு சில வார்த்தைகள் உரைக்க வேண்டும் என்பதே. சி.என்.என் ஐ.பின் இல் உடைந்த குரலில் கத்திக் கொண்டிருக்கும் ராஜ்தீப் சர்தேசி தனது மகளுடன் டூரிஸ்ட் விசிட் போல வந்திருந்தார். அப்படியே மகளிடம் மைக் கொடுத்து சில வார்த்தைகள் பேசவும் வைத்தார். அக்குழந்தை மிரட்சியுடன் உளறிக் கொண்டிருந்தது. பயிற்சி பத்தவில்லை என்று தனது மனைவி சங்கரிகா கோஷ் ஐ அவர் மனதுக்குள் திட்டிஇருக்க வேண்டும்.

      இப்பிரச்சினை அதிகம் முரண்பாடு தோற்றுவிக்காத ஓன்று. தமது முகப்பூச்சுக்கு கூட சேதம் வராத பிரச்சினை. ஆகையால் லிப்ஸ்டிக் மங்கைகள் மிக உற்சாகமாக காணப்பட்டார்கள். யோகேந்திர வர்மா என்ற தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் நேற்றைய லத்தி சார்ஜ் சம்பவத்தை விளக்கும் போது, மக்கள் அமைதியாக பாட்டுப்பாடிக் கொண்டும், அளவளாவிக் கொண்டிருந்த போதும் போலிஸ் தடியுடன் பாய்ந்ததாக குறிப்பிட்டார். போலிசின் கோர முகத்தை அறிய டில்லி சம்பவத்தை உதாரணம் காட்டுவது போலிஸ் துறையை இழிவுபடுத்தும் செயல். வழக்கறிஞர் போராட்டம், கூடங்குளம் போராட்டம் போன்ற எண்ணற்ற போலிஸ் அத்துமீறல்களை பார்க்கும் நமக்கு இது அருவருப்பாக இருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் வன்புணர்ச்சிக்கு ஆளாகிய அந்த மாணவியின் அவல நிலையை கொச்சைப்படுத்துகிறார்கள் இவர்கள்.

  13. இக் குறிப்பு-பின்னூட்டங்களைப் பேராசிரியர் திரு.அ.மார்க்ஸ் அவர்களது குறிப்புகாக எழுதினேன்.அது இதலும் பொருந்தக் கூடியது.ஒரு சமூகவுளவியலது உருவாகத்தை எனது உணர்விலிருந்து குறிக்கிறேன்.இதற்குப் பரிகாரத்தைச் செய்வது யாரென்று தீர்மானியுங்கள்!

    சார்,எனக்கு இக்கட்டுரை பேசும் விடையங்களில் உடன்பாடுகளிருப்பினுங்கூட இதன் உள் பேசு பொருள் மிகேல் பூவ்காவின் “கண்காணிப்பும் தண்டனையையும்” ஒத்து வருகிறது.தண்டனையென்பது பௌதிக வலிக்கேற்றிருப்பினும் அது பௌதிகவுடலைத்தாண்டிய தண்டனையாகவிருப்பதன் உள்ளர்த்தம் ஒரு பொறி முறையின் இயலாமையானது “பெண்-ஆண்” எதிர்ப்பால் வினையுள் நுகர்வுக் கலாச்சரத்தின் கருத்தியல் மனதானது எப்படித் தண்டனைக்குட்பட முடியுமென்பதில் சிக்கலெழுகிறது!ஒரு நுகர்வாண்மைக்குட்பட்ட எதிரெதிர் பால்விலையானது தான்சார் நினைவிலி மனதைக்கடந்து,அந்த நிறுவனப்பட்ட சட்டவாத அமைப்புள் ஒரு பண்டமாக இருக்கும்போது அதுசார்ந்து பிறழ்வு கொள்ளும் உறவைத் தண்டிக்க முடியுமா சார்?

    இந்த நிலையுள், கடந்த காலச் சட்ட வரலாற்றுக் கட்டமானது பௌதிக அதிர்வைச் சில தகவமைப்புக்கிட்டுக்”குற்றமும்-தண்டனையும்” ஆகிப் போன வரலாறு தனது சமூகவசையியக்கப் போக்குள் நிலைபெற்ற அக-புறச் சூழலுள் மனிதர்களைத் தாண்டிய புவிப்பரப்புயிரியின் பௌதிக இருத்தலைக் கேள்விக்குட்படுத்தும் “கண்காணிப்பும்-தண்டனையுமாக”காலத்தைச் சுருக்க முனையும்போது, அந்தக் காலத்துள் கலகப்படுத்தும் இந்த நிகழ்வுக்குக்கான காரணம் இன்றைய காட்சி வடிவமில்லையா-வர்த்தகவுலகமில்லையா சார்?

    இதுவொரு முக்கியமான புள்ளி.

    பழமைவாய்த இந்தியாவில் தண்டனையென்பது பௌதிக இருத்தலையும் அதன் குருதியையும் வழியவிட்டு இட்டுக்கட்டும் சமூகப் பலம் என்பது அதன் தளராத நிலைக்கிட்டுச் செல்வதென்பதுள் மீளத் தகவமைக்கும் ஏதிர்ப்பால் விளையைத் தூண்டும் நுகர்வினது சட்ட எல்லையில் “நான்-நீங்கள்” பட்டுப்போன அகத்தோடு பரதவிக்கிறோமில்லையா?அது,எங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது? இங்கே, ஒரு துன்பியலைத் தூக்கித் தூக்குத் தண்டயையெனப் புணரும் சட்ட அமைப்பானது நகைப்புக்கிடமான நிழலுருவில் இந்த வர்த்தகவமைப்பின் சுமையைக் காவி வந்து எனது வீட்டுக்குள் காட்சியுருவில் கொட்டும்போது எனது நோக்கத்தை யார் சார் தகவமைக்கின்றனர்?

    நிறுவனப்பட்ட நீதிசபை உடலற்ற வெறும் ஆன்மாவுக்குத் தண்டனையைக் கொடுப்பதில் பெண்ணை மட்டும் ஒரு கவர்ச்சிக்குரிய உடலைத் தகவமைத்து இப்படித் தண்டனையைச் சாத்தியமாக்க முடியுமா சார்?

    2:

    மீளவும், ஒரு குறிப்பை எழுதுவது பயன்மிக்கது சார்.

    நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொண்டாலுங்கூட இந்த நிகழ்வைத் தடுப்பது சாத்தியாமாகாது.காரணம், அடிப்படையில் பிரச்சனை வேறு கோணத்தால் உந்தப்படுகிறது!

    உதாரணத்துக்கு: நீங்கள் குறிப்பிடும் சட்டம்,கண்காணிப்புக் கமராக்கள்,அதி நவீன பொலிஸ் கண்காணிப்பு,ஒரு போன்போட்டாற் போதும், சில விநாடிகளுக்குள் தரை-வான் வழிகளுடாக நகர்ர்த்தப்படும் தேடுதலெனப் பின்னப்பட்ட ஜேர்மனியச் சமுதாயத்தைப் பாருங்கள்சார்.

    ஒன்றா-இரண்டா?

    மாதமொன்றுக்கு நான்கு,ஐந்து சம்பவங்கள் நடக்கின்றது.

    5 வயதுப் பாலகி முதல் பருவ மங்கைகள்வரைக் காணாமற் போகிறார்கள்.அவர்களைப் பலாயிற்பலாதகாரஞ் செய்துவிட்டுக் காட்டிற்குள் கொலை செய்து வீசிவிடும் நிலை இங்கே!

    “குற்றவாளிகளைத் தேடுதலும்-பிடிபடலும்”தொடர்ந்து நடைபெறுகிறது.ஆயுட் தண்டனை வழங்கப்படுகிறது.எனினும்,இந் நிகழ்வைத் தடுக்க முடியவில்லை!

    இது,தனியே பொதுவெளியில் நடைபெறுவதுமட்டுமல்ல.சமீபத்தில் கந்தோலிக்கப் பாடசாலைகள்(இதன் குறியீடு சமூகப் பாதுகாப்பான பாடசாலை-பெண்களுக்குப் பாதுகாப்பு நிறைந்த பாடசாலைகள் என்பதால் பெற்றோர்கள் தமது பெண் குழந்தைகளை இங்கே படிப்பதற்கு அனுப்புவது என்றாக),முதல் பெரும் மடாலயங்கள்வரை ஆயிரக்கணக்கான பாலியற் துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்திருக்கிறது.
    வல்டோர்ப் சூல [Waldorfschule] நல்லவொரு உதாரணம்:
    [Prävention gegen sexuellen Missbrauch beim Kind ] http://waldorfseminar.de/resources/Missbrauch.pdf

    பல மாணவிகள்,வாய் திறந்து உரையாடுகிறார்கள்.இதைக் கண்ட பழைய மாணவிகள்(இன்று 50 ஐக் கடந்தவர்கள்)தமக்கு நேர்ந்த சோகத்தைப் பேசுகிறார்கள்.அரசு அதற்கான நஷ்ட் ஈட்டை பெற்றுக்கொடுக்கிறது.ஆனால் குற்றங்கள் பெரும் பகுதி ஓரங்கட்டப்படுகிறது.அங்கே பெருந் தலைகள் காப்பாற்றப்படும்போது சராசரியானவன்மீது சட்டம் பாய்ந்தாலும் [http://rechtsanwalt-sexualstrafrecht.de/strafverteidiger/hamburg/sexuelle-noetigung-vergewaltigung-177stgb/ ]நாளாந்தம் அதிகரிக்கும் இந்தப் பிறழ்வுக்கு ஆய்வுகள் வழிகாணத் துடித்திட்டபோதும் அதன் சரியான தெரிவைப் புரிதலை மறுத்தொதுக்கின்றனர்.

    பாலியலுனர்வு, வக்கிரமாக-விகாரமாக தூண்டப்பட்டு மனித விழுமியங்கள் அனைத்தும் தொலைக்கப்பட்டு “பெண்ணுடல்”காட்சியப் படுத்தப்படும் இன்றைய ஆயத்தவுடை நிறுவனங்களது”நாகரீக” பெண் ஒரு தளத்தில் தனது உடலைத் தொடர்ந்து இந்தச் சமூகத்துக்கு-வர்த்தகவுலகுக்குத் தீனியாக்கிறார்.அத்தகைய பெண்ணுடலைத் தகவமைத்த இன்றையவுடையலங்காரம் எந்த மறைப்புமேயற்றுப் பெண்ணுடலைக் காட்சி வைக்கும்போதும்,சிறுவர்முதல் வயதானவர்கள்வரை “பொக்குள்,தொடை,இடுப்பு-மார்பு”வெனத் திறந்து பிடிக்கும் உடை தரித்து உளவியல் வதைக்குள் ஒரு கூட்டத்தை மாற்றும்போது அவர்கள் அந்த நிலையுள் “சட்டத்தை மீறுவது ” இயல்பாகிறது.

    காட்சி வடிவத்துள்,பாலிவூட் கூட்டம் திரையில் பெண்ணைத்துரத்திப் பிழியும் காட்சிகளும்,அரை குறைச் சமாச்சாரமும் ஒரு சமுதாயத்தையே விகாரப்படுத்தியுள்ளது!அந்தவுளவியலாது நிசத்தில் தனது கனவைத் தரிசிக்க முனைகிறது.அது,எங்கே-எப்படியென்பதுதாம் பிரச்சனையாகிறது.

    ஒன்று,உண்மையாகப் பேசப்படவேண்டும்.90 களின் மத்தியில் பெண்”உடல்”எப்படிப் பொது வெளியில் காட்சிப்பட்டது.2010 இல் எப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறது (உடு பிடவைகளுடாக…).ஒரு பெரும் உளவியற்றாக்கத்தை மெல்லச் செய்தவிந்த “நாகரீக” உலகமானது தேசங்கடந்தது.அது உலகு தழுவிய அறுவடைக்குள் இப்போது இருக்கிறது.

    பாரிய சமூகப் பண்பாட்டு மாற்றமென்பது”தெரிவுகளிலிருந்து”,வர்த்தகவுலகினது வெறித்தனமான ஆண்மனதினது தெரிவுக்குட்ட டிசைன்களைப் பெண்கள் காவுவதுவரை மாற்றப்பட்டாகவேண்டும்.

    இன்றுள்ள “பெண்-மாதிரி” பாலியலைத் தூண்டிக் “கண்டவிடத்தில் ஒன்றவளை நுகரவேண்டும்-இல்லைக் கையிற் போடவேண்டும்”எனும் நிலையையே எனக்குணர்த்துகிறது!

    ஒரு வேடிக்கை என்னவென்றால்,பாலியற் பலாத்தகாரத்துக்கு அரபிய முறை-இஸ்லாத்தின் “ஷரியா”ச் சட்டத்தைப் பிரயோகிக்கக் கோரும் நபர்கள்,அரேபிய “பர்த்தாவை”க் கோரவில்லை!இங்கு இது அவசியமில்லை!என்றபோதும் இன்றைய இளைய தலைமுறைப் பெண்கள் தமது உடலை “ஆண்விருப்புக்கேற்ப” உடை தரித்து வெறியைத் தூண்டுவதுவரை இதற்கான காரணங்கள் மலிந்துகொண்டேயிருக்கு.

    மாற்றம் எப்படியுருவாக வேண்டும்.சட்டங்களால் மட்டுமா?

    இன்றைய தலைமுறை தமது நுகர்வுகள் குறித்துச் சிந்தித்தாகவேண்டும்.

    கோடம் பாக்கம்,பம்பாய் இது குறித்து அலட்டிக்குமா?

    அவர்களது எச்சில் தனத்தை-இரக்கமற்ற சமுதாயச் சீர்கேட்டை எவன்-எவள் தட்டிக் கேட்க?

    அவர்கள் ஆயிரம் கோடி கண்களில்”காம விசத்தை”த் தூவிவிட்டுக் கமலகாசனது மடியில் கலையைத் தேடும் குமரியை வைத்துக் காசு பண்ணும்போது அதன் பலன் காட்டுக்கள்-பஸ்சுக்குள் ஒருத்தி மட்டுமல்ல பல “ஒருத்தன்களும்”பலியாகின்றனர்.கிழட்டு ரஜனிகாந்தின் சிவாஜி படத்தில் வாஜீ-வாஜி பாடலைப் பாருங்கள்.திரையில் பாடலோடும்போது மனம் மட்டும் நாட்டியமாடவில்லை குறியும் தான்!

    சமூகவிஞ்ஞானிகள் நீங்கள்.உங்கள் கைகளிற்றாம் அனைத்தும் உண்டு.இதை எப்படியெதிர்கொள்வதென்பதைக் குறித்து ஜேர்மனியச் சிந்தனைமட்டமே சிந்தித்த போது பலர் சேர்ந்து ஆய்வுகளைக் கொணர்ந்தனர்: Strategien der Verdummung-Infantilisierung in der Fun-Gesellschaft.-ISBN: 3406459633 இதுதாம் அவ் வாய்வு.

    ப.வி.ஸ்ரீரங்கன்
    24.12.2012

    • தமிழை இவ்வளவு கடுமையாகவும் புரிந்துகொள்ள முடியாமலும் எழுத முடியுமா? பின்னோட்டமிட்டவர் தயவு செய்து டெக்னிகல் ரைட்டிங் படிக்கவும்.

  14. யாரை குறை சொன்னாலும், குறை கூறினாலும் பெண்கள் தங்களை பெண்களுக்கென்று வகுத்த கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத வரை இது போன்ற சம்பவங்கள் நிகழும் என்பதில் ஐயமில்லை.
    இதற்காகவே இஸ்லாம் வகுத்த ஹிஜாப் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் முக்கியமான ஒன்று என்பதை இது போன்ற சம்பவங்கள் மேலும் மேலும் வலியுறுத்துகிறது. உண்மையை சொல்ல வேண்டும் எனில் எத்தனையோ பேர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்பது ஓர் அடக்குமுறை, அடிமைத்தனம், சுதந்திரமற்றவை என்று கூச்சல் போடுகின்றனர். உண்மையில் ஹிஜாப் என்ற ஆபாசம் அற்ற கவசத்தை உடையாகவும் வாழ்வியல் நெறியாகவும் அணிந்து, அடக்கத்தை கையாண்ட எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு பரிதாபம் ஏற்பட்டதில்லை என்பதே உண்மை.
    மேலும் காண…..http://www.islamiyapenmani.com/2012/12/delhi-gang-rape.html

    • if provoking dress is the only reason for rape .why child abuse are happening?

      https://www.vinavu.com/2012/11/28/child-sexual-abuse/
      பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

      இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

      அப்ப சிறுவர்களுக்கும் பர்தாவா?? –

    • நான் சிறுவனாக இருந்தபொழுது எங்கள் ஊரில் (கிராமம்), பல பெண்கள் ரவிக்கை அனியாதிருந்தனர்…அவர்கள் மத்தியிலேயே வளர்ந்ததால் எனக்கு அது ஆபாசமாகத்தோனியதில்லை…
      அவர்களில் பலரை நினைவிருக்கும் வரை அம்மா என்றே அழைத்துள்ளேன்..
      அவர்களை யாரும் கேலியோ / மானபங்கப்படுத்தவோ முயன்றதாக எனக்கு நினைவில்லை…

      காரணம் ஒன்று தான்:
      அவர்களை ஒரு சக மனிதராகக்கருதியதால்…பெண்ணை ஒரு போகப்பொருளாகவும் / அடிமை என்றென்னுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம்…பல வெறியர்களைத்தூண்டுவது ஆடையில்லை…

    • அக்பர் ,சும்மா கதை விடாதிங்க. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய நாடுகளில் அதிகம். ஏழை நாட்டு முஸ்லிம் பெண்கள் பணக்கார அரபுகளுக்கு விற்கப்படுவது உங்களுக்கு தெரியுமா.? ஹைதிராபாத் ஏழை முஸ்லிம் பெண்களை முட்டா(தற்காலிக, ஆனா இஸ்லாமில் விபச்சாரம் தடுக்கபட்டதாம் ! ) திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம் பணக்காரங்களை தெரியுமா.

      ஹிஜாபும் ,கடுமையான சட்டங்களாலும் வன்கொடுமைகளை தடுக்க முடியவில்லை. ஆணாதிக்க ஒழிப்பும் அதனால் ஏற்ப்படும் சமூக மாற்றமும் தான் இதற்க்குக் தீர்வு. ஆணாதிக்கம் ஒழியனும்னா அதை கட்டி காக்கும் மதங்களும் ஒழிய வேண்டும். உங்க இஸ்லாமும் சேர்த்து. அப்போதுதான் மனித உரிமை என்றால் என்னவென்றாவது விளங்கும். ஆனா நீங்க என்னான்னா மதத்துல தீர்வு இருக்குங்குறீங்க.

  15. வீரன் அவர்களே!

    டெல்லியில் நடந்தது போராட்டமா
    தன் வர்க்கம் பாதிக்கப்பட்டவுடன் கொதித்தெழும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் என்றைக்காவது சமூக அக்கறையோடு போராடியதுண்டா?
    வாச்சாத்தி கிராமமே வன்புணர்ச்சிக்கும் வன்கொடுமைக்கும் ஆளான போது எங்கே போனது ௨ங்கள் தொலைக்காட்சிகள்?
    இந்திய பிரதமர்,உள்துறை அமைச்சர், சோனியா இவர்கள் எல்லாம் சமாதானப்படுத்தியும் கேட்காமல் இன்ஸ்டண்ட் தண்டனை கேட்கிறீர்களே சட்டம், போலிசு,நீதிமன்றங்களும் சிறைக்கவா உள்ளது?
    தொழிலாளி கூலி உயர்வு கேட்டு போராட்டமோ ஊர்வலமோ நடத்தினால் பப்ளிக் நியுஸன்ஸ் என்று எரிச்சலடையும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளை எதால் அடிப்பது?
    கல்வி தனியார் மயம் பற்றியோ கோடிக்கணக்கான வனிகர்களின் வாழ்வில் மண்னல்லடிப்போடவரும் வால்மார்ட் பற்றியோ வறுமை வேலையில்லாத்திண்டாட்டம் பற்றியோ என்றைக்காவது போராடுவது குறித்து மேட்டுக்குடி சுயநல ஜென்மங்கள் யோசித்ததுண்டா?
    ரோட்டில் போராடாமல் உங்களைப்போல் மீடியாக்காரன் வரும்போது கும்மியடித்தும் கூத்தடித்தும் பம்மாத்து செய்ய சமூக அக்கறையோடு போராடும் உழைக்கும் மக்களுக்கு தெரியாது.

    • தயவு செய்து வாச்சாத்தியை இத்துடன் சமன் படுத்த வேண்டாம்…வாச்சாத்தி ஒரு பயங்கரவாதச்செயல்…

      // தன் வர்க்கம் பாதிக்கப்பட்டவுடன் கொதித்தெழும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் என்றைக்காவது சமூக அக்கறையோடு போராடியதுண்டா?//
      மெட்டுக்குடி மக்கள் தான் பேருந்தில் பயனம் செய்கிறார்களா??
      தயவுசெய்து டெல்லியில் வசித்த சராசரி பெண்னைக்கேட்டுப்பாருங்கள்…உங்களுக்கு கோபத்தின் காரணம் புரியும்…

      // வாச்சாத்தி கிராமமே வன்புணர்ச்சிக்கும் வன்கொடுமைக்கும் ஆளான போது எங்கே போனது ௨ங்கள் தொலைக்காட்சிகள்?//
      மீடியாக்காரனுக்கு சமூக அக்கறை எல்லாம் இல்லை…அவனுக்கு டீ ஆர் பீ ரேட்டிங் தான் குறிக்கோள்…

      எல்லாரும் எல்லா காரணங்களுக்காகவும் போராட முடியாது…

      சென்னையை எடுத்துக்கொள்ளுங்கள்: ஒரு பெண் கூட்டமானப்பேருந்தில் ஈவ் டீசிங் பயம் இல்லாமல் பயனிக்க முடியுமா?

      நீங்கள் யாரை மேட்டுக்குடி என்கிறீர்கள்? அப்போ எல்லாரும் போய் உடலுழைப்பில் ஈடுபட்டால் சரியகிவிடுமா?

      நாற்று நட்டு களை அறுத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் எத்தனை?

      • மேட்டுக்குடி என்பதை அம்பானி வீட்டுப் பிள்ளைகள் என்று புரிந்து கொள்ள வேண்டாம். உத்தரவாதமான வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்ட உயர் மத்தியதரவர்க்கம் பற்றியே இங்கு விவாதம். டில்லி ரேப் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி பிரதிநித்துவப்படுத்தும் உயர் மத்தியதர வர்க்கம் மிக அரிதாகவே பாதிக்கப்படுகிறது. ம.பி மற்றும் உ.பியில் உழைக்கும் பெண்கள் மீது ஏவி விடப்படும் பாலியல் வன்முறைகள் மிக அதிகம். தமிழ்நாட்டின் புனிதா, வினோதினி மேலும் தருமபுரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் அடித்தட்டு மக்களே. இவர்கள் பாதிக்கப்படும் போது ஊடகங்கள் ஊட்டி வளர்க்கும் மத்தியதர வர்க்க மனசாட்சி திறக்காமல் இருப்பதன் காரணம் என்ன?

        எல்லோரும் எல்லா காரணங்களுக்காகவும் போராட முடியாது என்று பஞ்ச் டயலாக் பேசுகிறீர்கள். ஆனால், எல்லா பிரச்சினையிலும் குறைந்தபட்ச அக்கறை செலுத்தலாம் அல்லவா? அது இங்கு இல்லை என்பது தான் பிரச்சினை. தொலைக்காட்சி கேமிராக்கள் அங்கு இல்லை என்றால் ஒரு ஈ, கக்கா கூட இந்தியா கேட்டில் இருக்காது. ஒரு பெண் தூக்கி வீசப்பட்ட பின்னரும் போய் காவலரின் கழுத்தில் கையைப் போட்டு இழுக்கிறார். இது தமிழ்ப் பட காட்சியை நினைவுபடுத்துவதாக இருந்ததே தவிர, போராட்ட உணர்வு போன்று இல்லை.

        இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஆங்கில செய்தி ஊடகங்களின் மக்கள் தொகுதி. விவசாயிகள் தற்கொலை, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதன பிரச்சினை, சாதிய ஒடுக்குமுறைகள், இந்து மத வெறி பாசிசம் போன்ற ஆளும் வர்க்கத்துடன் கூர்மையான முரண்பாடு தோற்றுவிக்கும் பிரச்சினைகள் ஒன்றிற்கு கூட பயன்படாத கூட்டம்.

        • நண்பர் சுகதேவ்,

          இந்தப் போராட்டத்தின் மீது இவ்வளவு அலட்சியமும், அவநம்பிக்கையும் தேவையா..?!

          டெல்லியின் இளைஞர்கள், இளைஞியர்கள் கல்லூரி, அலுவலகம், வீட்டின் வரவேற்பறைகளில் அராஜகத்தைப் பற்றி பேசி கலைந்துவிடாமல் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருப்பது அரசை அதிர வைத்திருக்கிறது.. சரியான, தெளிவான வழிநடத்தல் இருந்தால் இவர்களில் பெரும்பாலான நடுத்தர, உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்காகவும், அரசின் ‘கொள்கை(ளை)’ முடிவுகளுக்கு எதிராகவும் கூட வீதியில் இறங்கி போராடவரும் போர்குணத்தை இது போன்ற போராட்டப் படிப்பினைகள் ஊட்டுவதில்லையா..?!

        • //அது இங்கு இல்லை என்பது தான் பிரச்சினை.//
          பிரச்சினையைத்தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆக்கபூர்வமாக யோசியுங்கள்…

          //தொலைக்காட்சி கேமிராக்கள் அங்கு இல்லை என்றால் ஒரு ஈ, கக்கா கூட இந்தியா கேட்டில் இருக்காது. ஒரு பெண் தூக்கி வீசப்பட்ட பின்னரும் போய் காவலரின் கழுத்தில் கையைப் போட்டு இழுக்கிறார்.//

          அப்படியா? அப்போ ஏன் மெட்ரோ சேவையை நிறுத்துகிறார்கள்?
          சப்பை போராட்டம் என்றால் ஏன் இவ்வளவு போலீஸ்?
          சாலைகள் ஏன் அடைக்கப்படுகின்றன?

  16. பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களை பெண்கள் மட்டுமே நடத்தி வெற்றி பெற்றுவிடவும் முடியாது. முதலில் பெண்கள் ஒவ்வொருவரும் புரட்சிப் போராளிகளாக மாறவேண்டும். அமைப்பாய் அணிதிரள வேண்டும். அப்பாவி பெண்களிடம்தான் காமாதி காம சூரர்களின் ‘வீரம்’ எடுபடும். அஜிதாக்களைக் கண்டால் அஞ்சி நடுங்குவார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை என பெருகிவரும் மக்கள் பிரச்சனைகளுக்குக் காரணமான தனியார் மயம் – தாராள மயம் – உலக மயத்தை எதிர்த்த போராட்டங்களோடு பாலியல் வெறியைத் தூண்டுகிற சமூக வெறியர்களுக்கு எதிராகவும் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் போது பாலியில் வன்மங்களும் வெறியாட்டங்களும் இச்சமூகத்திலிருந்து துடைத்தெறியப்படும்.

    பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?
    http://hooraan.blogspot.com/2012/12/blog-post_26.html

  17. டில்லியில் நடப்பது ஆட்சிக்கு எதிரான மேட்டுக்குடி போராட்டம்! சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்களா அல்ல்து உருவாக்கினார்களா என்பது கேள்விக்குறி! அசாம் முதல் உ பி, பிகார் என வட மானிலஙகளில் கேங் ரேப் செய்திகள் சமீப காலமாக நிறைய வருகின்றன! பின்னனியில் சங் பரிவார் இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது! மற்றபடி ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு எப்போதுமே துன்பம்தான்! மனதளவிலும், உடலளவிலும் பெண்கள் உரம் பெற வேண்டும்! பெரியார் சொன்னது போல பெண் கல்வி மட்டுமே இப்போதைய தேவை!

  18. விரைவில் தீர்ப்பு கிடைக்கும் எனபது மட்டுமே குற்றங்களை குறைக்கும். மற்றபடி கோர்ட் கேஸ் எனபது பத்து வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்தால் , குற்றவாளிகள் அதிகரிப்பார்கள். என்னுடைய நண்பன் மீது குடும்ப வன்முறை வழக்கு போட்டுள்ளார்கள். அவன் இந்தியாவிலேயே இல்லாத நாட்களில் எல்லாம் கொடுமை செய்ததாக ஜோடனை செய்துள்ளார்கள். பாஸ்போர்ட் விசா என்று எல்லா தகவல்களும் அளிக்கப்பட்டு , வலக்கை விரைவு படுத்த கேட்டுக்கொண்ட பின்னரும் , இரண்டு வருடங்களுக்கு மேலாக விசாரணை நடந்து வருகிறது …இந்தியாவில் நியாயம் எனபது வலியவர்களுக்கும் பொருள் படைத்தவர்களுக்கும் என்றாகி விட்டது

  19. //விரைவில் தீர்ப்பு கிடைக்கும் எனபது மட்டுமே குற்றங்களை குறைக்கும். //

    இதே இதே. பாபர் மசூதியை இடித்தவர்களை தண்டித்து இருந்தால்……தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியுமாம். இன்னொன்றும் சொல்வார்கள் எங்கள் ஊரில் தனக்கு தனக்குன்னா நெஞ்சு படக்குபடக்குமாம்.

Leave a Reply to ranjith பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க