privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 07/01/2013

ஒரு வரிச் செய்திகள் – 07/01/2013

-

செய்தி: பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைக்கும் போது தலைவர் பதவிக்கு ஸ்டாலினை நானே முன்மொழிவேன் என்று கருணாநிதி உறுதிபடக் கூறினார்.

நீதி: வால் கார்ப்பரேட்டுகளுக்காக ஆடும் போது தலையாக யார் வந்தால் என்ன?

_______

செய்தி: குறைந்தபட்ச இடவசதி இல்லாது போன்ற காரணங்களால் அங்கீகாரம் இல்லாமல் உள்ள 1000 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதி: மாணவர்களுக்கு கருணை என்ற பெயரில் இந்த தனியார் பள்ளி கொள்ளை தொடரலாம் என்பதையே சட்டபூர்வமாக கூறுகிறது அரசு.

______

செய்தி: மாணவர்களின் பாடத்திட்டத்தில் பெண்களை மதித்து நடந்து கொள்வதற்கான போதனைகளைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.

நீதி: பெண்களை மிதித்து குதறுவதை ரசனையாக கற்பிக்கும் ஊடக, சினிமா துறைகளை திருத்தாத வரை பரிதாபமான பாடத்திட்டம் என்ன செய்து விடும்  அமைச்சர் ஐயா?

______

செய்தி: விஸ்வரூபம் படத்தை டீ.டி.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடுவது தொடர்பாக தமக்கு மிரட்டல் வருகிறது என சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நடிகர் கமலஹாசன் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.

நீதி: அமெரிக்கா துணையுடன் இசுலாமிய தீவிரவாதிகளை பந்தாடும் கலைஞானி இதிலும் சி.ஐ.ஏவையோ அல்லது அவர்களின் உள்ளூர் கிளையான சி.பி.ஐயையோ நாடுவதை விட்டு விட்டு ஏட்டையாவை பார்த்து என்ன பயன்?

______

செய்தி: இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். தல்வார் போர்க்கப்பலில் பணியில் இருந்த தமிழக வீரர் மெல்வின் ராஜ் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

நீதி: தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் இதை ஐ.எஸ்.ஐ சதி என்று மூடிவிட முடியாது.

______

செய்தி: தில்லி மாணவி பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி: செருப்பால் அடித்து சிறையில் அடைக்க வேண்டிய வெறி நாயை இப்படி சுதந்திரமாக உலவவிட்டால் இந்தியாவில் ரேப்பிஸ் நோய் எப்படி குறையும்?

______

செய்தி: தெற்காசிய (சார்க்) நாடுகளின் செய்தியாளர்களுக்கு பலமுறை வந்து அனுமதிக்கும் விசா வங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

நீதி: இதனால் தமிழக பத்திரிகையாளர்களை கொழும்புவுக்கு அழைத்து குளிப்பாட்டும் வேலையை இலங்கை அரசு அடிக்கடி செய்யலாம்.

______

செய்தி: கணவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு மனைவி கட்டுப்பட வேண்டியுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

நீதி: இதனால்தான் அமெரிக்க ஆம்படையானுக்கு கட்டுப்பட்டு பாரதா மாதா குடும்பம் நடத்துவதற்கு சங்க பரிவாரங்கள் மாமா வேலை பார்க்கின்றன போலும்!

_______

செய்தி: ஒருவர் புகார் அளிக்க வரும்போது அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீசார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

நீதி: பதிவு செய்ய மறுக்கும் போலீசார் மீது புகார் கொடுக்க வேண்டுமென்றாலும் கூட அது போலீசிடம்தானே அளிக்க வேண்டும்? நாட்டு நடப்பு  தெரியாததெல்லாம் உள்துறை செயலர் என்றால்?

_______

செய்தி: திமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலர்களும் தலைவர் கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நீதி: புலிக்கு பசித்தால் புல்லைத் தின்னும் என்பதோடு பெருச்சாளியோடு சேர்ந்து வேட்டைக்கும் போகிறதாம்!

_______

செய்தி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நீதி: விபத்துக்களை ஏற்படுத்தும் மது போதை போல, விபரீதங்களை உற்பத்தி செய்யும் சாதி போதையை தடுக்கும் வண்ணம் வன்னியர் சங்கத்தை மூட தமிழக அரசு முடிவு செய்தால், நாமும் பாராட்டு தெரிவிப்போம் அல்லவா?

_______

செய்தி: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய கட்சியைத் தொடங்கியதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

நீதி: குடும்பத்திற்கு சொத்து சேர்த்த ஊழலால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஸ்வயம்சேவக் எடியூரப்பா கர்நாடக மாநில வளர்ச்சி என்று குறிப்பிடுவது குடும்பத்தைத்தானே? “குடும்பத்தை பார்த்துக் கொள்பவன்தான் நாட்டையும் பார்த்துக் கொள்வான்” என்று கூறுவது இதைத்தானோ?

  1. // செய்தி: கணவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு மனைவி கட்டுப்பட வேண்டியுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

    நீதி: இதனால்தான் அமெரிக்க ஆம்படையானுக்கு கட்டுப்பட்டு பாரதா மாதா குடும்பம் நடத்துவதற்கு சங்க பரிவாரங்கள் மாமா வேலை பார்க்கின்றன போலும்! //

    ஆம்படையானுக்கு கட்டுப்படாமல் குடும்பம் நடத்தினால் சித்தப்பா சீனா சில்மிசம் பண்றாரே ஓய்..

  2. “செருப்பால் அடித்து சிறையில் அடைக்க வேண்டிய வெறி நாயை இப்படி சுதந்திரமாக உலவவிட்டால் இந்தியாவில் ரேப்பிஸ் நோய் எப்படி குறையும்?”

    இப்படி பிடித்த வரிகள் ஏராளம்.

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க