privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !

ஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !

-

ரசு மருத்துவமனைகளுக்கு நிதிக் குறைப்பு செய்யாதே”
“அரசு மருத்துமனைகளை தனியாருக்கு தாரை வார்க்காதே”
“நாங்கள் எங்கள் மருத்துவ சேவையை விற்க மாட்டோம்”

மாட்ரிட் தனியார் மயம்என்ற கூரிய முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான வெள்ளுடையணிந்த ஸ்பானிய மருத்துவ ஊழியர்களும் மக்களும் வெண்கடலென தலைநகர் மாட்ரிட் வீதிகளில் திரண்டனர். அரசுக்கெதிரான அவர்களது போராட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தை மீண்டுமொரு முறை உலுக்கி இருக்கிறது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் இயங்கி வரும் அரசு பொது மருத்துமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கவும், பொது மருத்துவச் செலவுகளை குறைக்கவும், பங்குகளை தனியாருக்கு விற்கவுமான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு. அந்த மசோதாவை எதிர்த்து “மருத்துவச் சேவையை விற்கக் கூடாது, பாதுகாக்க வேண்டும்” என்ற முழக்கத்துடனான  பேரணி மாட்ரிடின் பிளாசா டி கோலனிலிருந்து தொடங்கியது.

தனியாருக்கு விடப்பட்டால் “மருத்துவச் சேவையின் தரம் தாழ்ந்து விடும். பொது ஆரோக்கியத்தை லாபத்துக்காக விற்கக் கூடாது. மருத்துவத் துறையை லாப நாட்டம் பார்த்து நடத்தக் கூடாது” என்றார் அரசு மருத்துவமனை செவிலியரான மரியா ஹோஸ்.

“மாட்ரிடில்பொதுமருத்துவத்துறைவீழ்ச்சியடைந்தால், ஸ்பெயின்முழுவதும்மருத்துவத்துறைவீழ்ச்சியடையும்” என்கிறார் மாட்ரிட் சோசலிசக்கட்சியின் தலைவர் தொமாஸ் கோமெஸ். ‘குடிமக்களின் ஆரோக்கியத்தை விற்கும் இந்த முயற்சியை கைவிடவேண்டும்’ என்று அவர் கோரினார்.

பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சுமையை மக்கள்மீது ஏற்ற முனைகிறது அரசு. ‘இந்த  வெட்டுகளின் மூலம்தான் ஸ்பெயினின் தேசிய பற்றாக்குறையை சமாளிக்க முடியும். 2013 பட்ஜெட்டில் 2.7 பில்லியன் யூரோ (சுமார் ரூ 20,000 கோடி) வெட்டினால்தான் பன்னாட்டு நிதிநிறுவனங்கள் வேண்டுவது போல பொதுக்கடனை மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதமாகக் குறைக்க முடியும்’ என்கிறது அரசு.மேட்ரிட் ஊழியர்கள் கையை உயர்த்தும் படம்

அரசின் முடிவுகளை எதிர்த்து மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிக்கு வந்து போராடும்போது, ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபெர்னான்டஸ்  ”மருத்துவ ஊழியர்களுக்கு மக்கள்மேல் அக்கறை இல்லை, அக்கறை இருந்தால் இந்த வெட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று போராட்டக்காரர்களை கடிந்துள்ளார்.

ஸ்பெயினின் மருத்துவத்துறை சங்கம் ‘பொதுத்துறை மருத்துவமனைகளை நடத்துவதற்கான செலவு தனியார் மருத்துவமனைகளுக்கான செலவை விட அதிகமில்லை’ என்பதையும் ‘தனியார் மருத்துவமனைகள், அதிக லாபம் சம்பாதிக்க உதவும் குறுகிய கால முக்கியமில்லாத நோய்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்துகின்றன’ என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

மருத்துவச்சேவைகளை தனியார்மயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் மேட்ரிட் மருத்துவமையங்களுக்கான நிர்வாக அமைப்பிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதவி விலகினர். மருத்துவத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அழைப்புகள் விடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு, நெருக்கடியில் சிக்கிய நாடுகளுக்கு நச்சு நிபந்தனைகளுடன் பன்னாட்டு நிதி அமைப்புகளின் கடன் உதவி என எத்தனை ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்தினாலும், கிரேக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி என்று ஒன்றன் பின் ஒன்றாக பொருளாதார பெருமந்தத்துக்குள் சிக்கி முக்கி முனகிக் கொண்டிருக்கிறது ஐரோப்பா.

ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலை நேரடியாக எதிர் கொள்ளும் ஸ்பெயின் நாட்டு மக்கள், உலகெங்கிலும் உள்ள  மக்களுக்கு முன் உதாரணமாக ஒன்று திரண்டு வீதிகளில் போராடுகிறார்கள். நாமும் அதைக் கற்றுக் கொண்டு உரிமைகளுக்காக போராட வேண்டாமா? அல்லது ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதை தொடர விட்டு சுரணையற்று காத்திருக்கப் போகிறோமா?

மேலும் படிக்க