privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?

மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?

-

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:  மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?

  • தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2011ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிராக 2,28,650 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் மட்டும் 24,260.
  • 1971-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2011 வரையிலான நாற்பதாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் 873 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதவீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.
  • இந்தியாவின் 53 பெருநகரங்களை ஒப்பிடும் போது தலைநகரான டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவு குற்றங்கள் நடக்கின்றன.
  • ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4-வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தாம்சன்-ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.
  • தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. இவற்றில் 834 பாலியல் வல்லுறவுக் குற்றங்களாகும்.
  • தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.
  • இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக பதிவாகியுள்ள 93,000 வழக்குகள் இன்னமும் விசாரணைக்கே வரவில்லை.

_____________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

  1. பாலியல் குற்றத்துக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என்று சொல்வதை எதிர்க்கிற உம்மை போன்ற மனிதாபிமானிகள் இருக்கிற வரை, இந்த படுபாதகச்செயல் தொடரத்தான் செய்யும்.

  2. பாண்டியன் ,

    தலைவரே கட்டுரையை படிச்சீங்களா

    ——–
    தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன
    ———

    கடுமையான தண்டனை கொடுத்தால் கூட இப்படி தான் வழக்குகள் முடங்கி போகும். மைனர் குஞ்சுகளும் வெளிய வந்து வேற வேலைய பக்க போய்டுவாங்க ….

    கொசுவ அடிச்சா ஒரு பயனுமில்லைமா அது எங்க இருந்து வருதோ அதா முதல்ல கவனிக்கணும் அதா உட்டுபுட்டு கொசுவ அடிக்க துப்பாக்கிய தூக்கனும்னு சொல்றீங்க …..

    நன்றி !!!

  3. 1971க்குப் பிறகு பாலியல் குற்றங்கள் இந்த அளவுக்குப் பெருகி இருப்பதற்கு ஆட்சி செய்த அரசுகளே பொறுப்பு என்பதை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் ஏற்பார்களா?

    பதிவு செய்யப் பட்ட வழக்குகளில் 14,545 முடக்கப்பட்டுள்ளன என்பது பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய அநீதி என்பதை ஒரு பெண் என்ற வகையில் இப்போதுள்ள தமிழக முதல்வர் ஏற்று உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?

    மேலும் எத்தனை முறைப்பாடுகள் காவல் துறையினரால் பதிவு செய்யாது விடப்பட்டன? காவல் துறைக்குப் போனால் எதுவும் நடக்காது என்ற பயம் காரணமாக றைட்டர் வரை போகாமல் விட்டவை எத்தனை? இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது எமது பெண்களின் நிலை மிக மோசமாகிவிட்டதையே காட்டுகின்றன.

  4. பெண்களை பாலுறவு நோக்கத்தில் பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ “பெண்களுக்கு எதிரான குற்றம்” என்று சட்டம் இயற்றி விட்டோம். பெண்கள் பொய் குற்றசாட்டு கொடுத்தால் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேல் கிடையாது என்பது நடைமுறை.. ஆதாரம் இல்லாமல் உள்நோக்கத்துடன் பெண்கள் கூறும் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு புள்ளி விவரமாக பதிவு செய்யபடுவது ஒப்புகொள்ளப்பட்ட நடைமுறை…..
    ஆண்களை சமுதாயத்தில் இருந்து அகற்ற சதியின் விளைவு இந்த கட்டுரை.

  5. நமது கலாச்சாரமே பெண்களை இழிவு படுத்தும் புராண இதிகாச குப்பைகளினால் விஷமாகி இருக்கிறது! ஆயிரம் கோபிகைகளுடன் சல்லாபிக்கும், அவர்களின் ஆடைகளை திருடி, நிர்வாணத்தை ரசிக்கும் கிருஷ்ணனின் லீலைகளை பக்தன் செய்தால் பாவமா? பிள்ளைக்கறியும், பெண்டாட்டியையும் சிவன் அடியார்கள்? கேட்டதும், பக்தன் கொடுப்பதும் இன்றும்நடக்கிறதோ? மேல்தட்டு மக்களுக்கு, அவர்களின் வக்கிரங்களை மறைக்க, மறக்க கலை கைகொடுக்கிறது! கீழ்தட்டு மக்களுக்கு வடிகாலின்மையினால் இது போன்ற மன வியாதிக்கு ஆளாகின்றனர்! சமூதாயம் சீரடைய உளவியலாளர்கள் தேவை! விருந்தினர் மாளிகைகள், ரிசார்ட்டுகளில் விலை மாதர்கள் சேவை பணம் படைத்தோரின் தேவை! பெரும்பாலும் வெளிமானில அழகிகளை வைத்தே பார்லர்கள் (ஆயுர்வேத முறையில்! ஆனாலும் அட்டை அவசியம்!) காவல் துறைக்கு கணிசமான வருமானமும் இருக்கும் போல! இளைங்கர்கள் கெட்டுப்போக கிளு கிளு பத்திரிகைகள் வேறு!

    • // ஆயிரம் கோபிகைகளுடன் சல்லாபிக்கும், அவர்களின் ஆடைகளை திருடி, நிர்வாணத்தை ரசிக்கும் கிருஷ்ணனின் லீலைகளை பக்தன் செய்தால் பாவமா? //

      கருத்துக் கருவூலமே,

      கோபிகைகள் கிருஷ்ணனுக்கு காட்சியளிப்பார்கள்.. நமக்கு எதை அளிப்பார்களோ..?

Leave a Reply to பாண்டியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க