privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஇசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!

இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!

-

டந்த 4 வாரங்களாக இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வங்கதேசத்தில் (பங்களாதேஷ்) நடந்து வருகிறது.

1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்திருந்த அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பங்களாதேச மக்கள் வங்காள தேசியத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடினர்.

அந்த போராட்டங்களை அடக்குவதற்கு பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்களுடன் உள்ளூர் மத வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். ரஜாக்கர்கள் என்று அழைக்கப்படும் உருது பேசும் பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய மத வெறியர்கள் விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்காக நாடெங்கிலும் வன்முறையை அவிழ்த்து விட்டனர். ரஜாக்கர்கள் என்ற சொல் பங்களாதேஷில் துரோகிகள் என்ற பொருள் உடையதாக மாறி விட்டது.

சுமார் 10 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தனர். இதை சாக்காக வைத்து இந்திய அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்தி இராணுவ நடவடிக்கை மூலம் பங்களேதேஷ் தனி நாடாக வழி வகுத்தது. வங்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஷேக் முஜிபூர் ரஹ்மானின் தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டது.

ராணுவ தளபதிகளால் ஷேக் முஜிபூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு ராணுவ ஆட்சி, ராணுவ தளபதி ஜியா உர் ரஹ்மான் பொறுப்பேற்று பங்களாதேஷ் தேசியக் கட்சியை உருவாக்குதல், ராணுவத தளபதிகளால் ஜியா உர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு 1982ல் ஹூசைன் முகமது எர்ஷாத் என்ற இராணுவ தளபதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்துதல் என்று வன்முறை நிறைந்த வரலாறு தொடர்ந்தது.

1991ல் இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டு முஜிபூர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையில் அவாமி லீகும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீடா ஜியா தலைமையில் பங்களாதேஷ் தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகின்றனர்.

2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான சிறப்பு விசாரணை ஆணையம் நியமிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தார் ஹசீனா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம், 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.

1971 போர்க் குற்றவாளிகளான ரஜாக்கர்களில் பலர் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இசுலாமிய மதவாத கட்சியின் மூலம் அரசியலில் வளர்ந்தனர். 2001ம் ஆண்டு தேசியக் கட்சி கூட்டணி ஆட்சியில் ஜமாத்-இ-இஸ்லாமியும் பங்கு பெற்றிருந்தது. ‘மீர்பூரின் கசாப்பு கடைக்காரர்’ என்று அழைக்கப்படும் அப்துல் காதர் முல்லா இப்போது ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவராக உள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு ஓடிப் போய் விட்ட அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஷாபாக் சதுக்கம்

பிப்ரவரி 5ம் தேதி அப்துல் காதர் முல்லாவின் குற்றங்களை உறுதி செய்து மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது போர்க்குற்ற நீதிமன்றம். அப்துல் காதர் நீதிமன்றத்திலிருந்து வெளி வரும் போது ஆணவமாக சிரித்துக் கொண்டே வெற்றிக் குறியீடாக இரண்டு விரல்களை காட்டினார். ‘அவர் செய்த குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மிகவும் குறைவானது’ என்று பெரும்பான்மை மக்கள் கொதித்தனர்.

பங்களாதேஷின் ஒவ்வொரு குடும்பமும் 1971 போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்துல் காதரின் வெற்றிக் களிப்பைக் கண்டு கோபமடைந்த லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், பொது மக்களும் அவருக்கும், போர் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 11 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக் கோரி தலைநகர் டாக்காவில் உள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பட்டம் நடத்தினர்.

போர்க்குற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஷாபாக் சதுக்கத்தில் தொடர்ந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத்-எ-இஸ்லாமி கட்சி குண்டர்கள் பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

ரஜீப் ஹைதர்
ரஜீப் ஹைதர்

 

பிப்ரவரி 28ம் தேதி 2வது குற்றவாளியான டெல்வார் உசைன் சய்யீதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜமாத்-இ-இஸ்லாமி குண்டர்கள் நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். மார்ச் 3,4ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றாலும் ஜமாத்-இ-இஸ்லாமி மதவெறியர்கள் கலவரம் செய்ய முயன்றனர். இந்த கலவரங்களில் 6 போலீஸ் உட்பட 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டோர் அதிகம். அதிலும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்காரர்கள் அதிகம்.

மேலும் எப்படியாவது இசுலாமிய மதவெறியை கிளப்புவதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி குண்டர்கள் வங்க தேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்களை தாக்கியும், இந்துக் கோவில்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். தமது தலைவருக்கு எதிரான மக்கள் போராட்டம் இந்தியாவின் சதி, நாத்திக சதி, காஃபிர்கள் சதி என்றெல்லாம் அவர்கள் பேசினாலும் முழு வங்க தேச மக்களும் இசுலாமிய மதவெறியர்களை தண்டிப்பதில் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். ஒரு சிறுபான்மை குழுவினர் அதிலும் உதிரியான நபர்கள்தான் ஜமாத் எ இஸ்லாமி கட்சிக்காக போராடி வருகின்றனர். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் 71-ம் ஆண்டு நடந்த போர்க்குற்றங்களை மறக்க வங்கதேச மக்கள் தயாரில்லை.

வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளை இஸ்லாமிய மதபிற்போக்குத் தனத்திலேயே வைத்திருக்க விரும்பும் ஏகாதிபத்தியங்களும் அவற்றின் ஊடகங்களும் மத வெறிக்கு எதிரான வங்க தேச மக்கள் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன.

‘போர்க்குற்றவாளிகளை தூக்கில் போடு’, ‘மதவாத ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்’ என்ற முழக்கங்களோடு வங்கதேச மக்களின் ஜனநாயக போராட்டம் தொடர்கிறது. இறுதியில், பெரும்பான்மை மக்கள் இசுலாத்தையும், இசுலாமிய மதவெறியையும் விட ஜனநாயகத்தையும், நீதியையும் பெரிதாக கருதுகிறார்கள் என்பது வங்க தேசத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டதைப் போல இந்தியாவிலும் இந்துத்துவ வெறியை தூண்டி விடும் சங்க பரிவாரங்கள் வரலாற்றின் கல்லறைக்கு போவது உறுதி.

மதவெறியர்களை தண்டிக்க போராடும் வங்க தேச மக்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.

மேலும் படிக்க
India sleep through a revolution in Bangladesh
Bangladesh deaths rise as Jamaat protest strike begins

  1. இஸ்லாமிய மதவெறியர்களான போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடும் வங்கதேச மக்களுக்கு வாழ்த்துக்கள்!இந்தியாவிலும் இந்துமதவெறிக் கும்பல்கள் அனைத்தும் அமெரிக்க மற்றும் பல ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள்,எடுபிடிகள்,எனவே தான் உலக வர்த்தகக் கழகத்தின் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தை ஆதரித்து காங்கிரஸுடன் கள்ளக்கூட்டணி கொண்டுள்ளனர் என்பதை நாம் அம்பலப்படுத்தினால் இந்திய இந்துக்களும் இந்த ஆர்.எஸ்.எஸ்.,பி.ஜே.பி.,பஜ்ரங் தள்,விஸ்வ இந்து பரிஷத் ஆகிய கும்பல்களை ஒழித்து விடுவார்கள்.

  2. அடஅட… என்னங்க நீங்க… அங்க மத வெறியர்களை எதிர்த்து போராடிய கையோடு பேசாம இருக்கணும்..ஆர்பாட்டத்தோட நிக்கணும்.. அதுவும் ஏன் போராடறாங்கன்னா அவங்க அரசு ஆள காலி பண்ணுது.. அதனால….. அவங்க நாட்ட நம்ம நாட்ட ஒப்பிடாதிங்க.. எந்த உலகத்தில இருக்கிங்க… இங்க இந்து மதத்தை பத்தி கன்னா பின்னான்னு பேசினாலும் யாரும் ஒண்ணையும் செய்யமாட்டாங்க.. பத்தாததுக்கு ஒமக்கு முற்போக்குன்னு பட்டம் வேற கொடுப்பாங்க… கொஞ்சம் கண்ண மூடி நீங்க வங்க தேசத்தில இருந்தா என்ன நடக்கும்னு கற்பனை பண்ணிப் பாத்தேங்க… அய்யோ… வேண்டா இட்லர் போல முள்ளி வாய்க்கால் போல உங்க எல்லாத்தையும் கூறு போட்டுத் தள்ளிருப்பாங்க.. நீங்க செஞ்ச புண்ணியம் இந்தியாவுல இருக்கிங்க… கொஞ்சமாவது நியாய உணர்வு இருந்தா ஒத்துகிடுங்க….

    • //இங்க இந்து மதத்தை பத்தி கன்னா பின்னான்னு பேசினாலும் யாரும் ஒண்ணையும் செய்யமாட்டாங்க//

      நீங்க வடமாநிலங்கள் பக்கம் போனதில்லை போல

    • தலித் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக நாயை வீட்டைவிட்டு விரட்ட சொல்லும் மதத்தை அன்றைய பெரியார்கள் கன்னாபின்னாவென்று பேசினார்கள் இப்போது பேசினால் மங்களம் பொங்கும் மஞ்சள் துண்டு போட வைத்துவிடுவார்கள்

        • ராமன் ,நல்ல வாதங்கள் மூலம் விவாதம் நடத்தி செயல்பட வேண்டிய அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக வன்முறையில் செயல்படுகிறார்கள் .அத்துடன் இதில் அரசியலும் புகாமல் இல்லை.
          அடுத்து ஷியா அந்த கொள்கையிலிருந்து விலகி சன்னியாக மாற முடியும் சன்னி ஷியாவாக மாறுவார்கள் .பிறப்பால்இஸ்லாத்தில் உயர்வு தாழ்வு இல்லை. .

          • இபுராகிம், அறிவு நாணயம் என்று ஒன்று உங்களிடம் இருந்தால் இந்த போராட்டங்கள் பற்றி மொட்டையாக இல்லாமல் கருத்தை கூறவும். சும்மா இந்திகளின் மீது விமர்சனங்களை மட்டும் எழுதித் தள்ளாதேயும். கேட்டு கேட்டு புளித்துவிட்டது.

    • கொஞ்சம் கூட லாஜிக்கே தெரியாம இருக்குரீங்களே!

      நெருக்கடி அதிகமா உள்ள இடத்தில் தான் எளிதில் / வேகமாக போராட்டம் வெடிக்கும்.

      கொஞ்சம் வரலாற்றை தெரிஞ்சுக்க கண்ணு…

      ஸ்பார்ட்டகஸும் அவனது தோழர்களுக்கும் இருந்ததை விட அதிகமான அடக்குமுறை யாருக்கும் இருந்திருக்காது, அதே அடக்குமுறைதான் அவர்களை கிளர்ந்து எழ செய்தது, மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து வெற்றியடைய முடிந்தது,

      இந்த போராட்டம் கடைசி அடக்குமுறையை வீழ்த்தும் வரை தொடரும்………..

  3. வாழ்த்துக்கள் வங்கதேச மக்களே! 1940களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரமுடன் போராடிய உங்களுடைய இந்தப் போரட்டமும் வெல்லட்டும்!இன்னுமொரு போரட்டத்தில் நாம் சந்திப்போம்.சேர்ந்து நிற்போம்!

  4. Shahbag movement is the prime reason why the current trials are initiated. They started as a pressure group started by atheist and secular fundamentalists. They are ultra nationalistic and they demand the war crimes being punished. They have big support as any average Bengali will want this to happen. Even Jamaat said that it would support an internationals war crimes tribunal if it is impartial and hold international standards.
    The problem is deep down, they are not really wanting the process of trial but the end of political Islam. They are wanting a secular state in the likeness of post 1971 war that Mujib formed. It is more about crushing the Islamist power in every way possible. They are successful in portraying that BJI is involved in war crimes. Awami League government uses it as a pretext to clamp down on Islamist opposition breaking their leaders, establishments, and goodwill among ppl by their media. Opposition media are severely restricted. The opposition can also bring huge numbers and they are bringing whom are brutally attacked by the security establishment. It is more like a lot of mad nationalists trying to weed out Islamists.
    This video is not about any history but the kind of political tension in Bangladesh that exists today.

  5. மதத்தின் பழைமைவாதங்களால் ஜனநாயக சிந்தனையை தடுக்க முடியாது என்பதை இவர்களின் போராட்ங்கள் உணர்த்துகின்றன. வெற்றி ஜனநாயவதிகளுக்கே கிடைக்கும்.

  6. 1971 ல் நடந்த போர்க் குற்றத்தில் இப்போது குற்றம் சுமத்தப்பட்ட ஜமாத் தலைவர்கள் உண்மையில் இடுப்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்ப்டுபவர்களே. ஒரு முஸ்லிமாக அதை நான் வரவேற்கிறேன். ஆனால் உண்மையில் அப்போது என்ன நடந்தது என்ற தெளிவான ஆதாரங்கள் கட்டுரையில் தரப்படவில்லை. 1971 ல் கிழக்கு பாகிஸ்தான் பிரச்சனையில் ஷேக் முஜிபூர் ரஹ்மானும் ஜமாஅத் தலைவர்களும் வேறு வேறு பார்வைகள் கொண்டிருந்துள்ளார்கள் என்பதால், அதை போர்க் குற்றும் என கூறமுடியாது. அப்படிப் பார்த்தல் சுதந்திரதிற்க்கு பின் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில் தலைவர்கள் அனைவரும் வெவ்வேறு கருத்து கொண்டிருந்தார்கள். அதற்காக பிரிவினையின் பொது நடந்த கலவரத்திற்கு அவர்களை தண்டிக்க வேண்டும் என சொல்வது முட்டாள் தனம் அதுப் போல தான் இதுவும். அவர்களும் தேசப் பற்றுக் கொன்டவர்கள் தான். வெறும் கருத்து வேறுப்பட்டின் அடிபப்படையில் மட்டும் நீதி மறுப்பதையும், தண்டிப்பதையும் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. உலக விவகாரங்களையும் அரசியலையும் நன்கு அறிந்தவர்கள், பங்களாதேஷ் நாட்டில் அரசியல், ஆன்மிகம், பொருளாதார, சமுக நல வளர்ச்சியில் ஜமாஅத் இஸ்லாமி பெரும் சேவை புரிந்துள்ளதை அறிவார்கள். அதுவும் மக்கள் ஆதரவுடன் அரசாங்கத்தில் பங்கு வகித்துத்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

  7. மேலும் ஷேக் முஜிபூர் ரஹ்மான் தன்னுடைய எதிரியாக குறிப்பிட்டவர்களில் ஒருவர் கூட ஜாமத் தலைவர்கள் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் வேறுபாடின் காரணத்தால், ஜமாஅத் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, மரண தண்டனை வழங்குவது தான் ஜனநாயக மரபா? ஆனால் இதற்கு ஜனநாயக முறையில் எதிர்ப்புகளை தெருவித்து நடந்த பேரணியில் அரசு அடக்குமுறையையும் கொலை வெறித் தாக்குதலையும் நடத்தியுள்ளது. போர்க் குற்றத்தில் தொடர்பே இல்லாத தலைவர்கள் அந்நியாயமாக தண்டிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது மத வெறியா? நல்ல இருக்கு உங்க ஜனநாயக தத்துவம்.
    இறுதியாக அவாமி கட்சியின் பழிவாங்கும், அரசியல் ஆதாயம் அடையும் காய் நகர்த்தலாக மட்டும் தான் இது உலகமெங்கும் பார்க்கப்படுகிறது.

  8. India = Congress
    Bangladesh = Awami League
    India = BJP and Hindutva
    Bangladesh = Jamaat-e-Islami
    India = Fanatic secular, atheist against Hindutva with Congress getting advantage
    Bangladesh = Fanatic secular, atheist against Jamaat with Awami getting advantage
    In long term there will be both extreme right and extreme left. What is the need of the hour will be chosen by people in democracy, which will make parties like congress and Awami to take a stand that is politically right or left leaning. But in long term only these less extreme ones survive

  9. இரான் நாட்டின் இஸ்லாமியப் பெண்கள் வெளிநாட்டிற்குத் தப்பி வந்தபிறகு ஈரானை எடிர்த்தும் இஸ்லாமைக் கண்டித்தும் இஸ்லாமின் பர்தா அணிவது போன்ற பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்தும் போராட்டம் செய்கிறார்கள்.

    • சகோதரரே! இந்த கேவலமான போராட்டத்தை நீங்கள் ஆதரிப்பீர் என்றால் இதே மாதிரி உங்கள் வீட்டு பெண்களையும் வைத்து முயற்சி செய்யலாமே. ஏனென்றால் இங்கயும் பெண்கள் பர்தா போட்டு தான் செல்கிறார்கள்.உங்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும்.

  10. இந்த சுட்டியிலுள்ள வீடியோவை பார்த்தேன் பல நீதிமன்றங்களே பணத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் அடிபணிகின்றன.அவ்வாறிருக்க சில ஜமாத்துக்கள் அங்ஙனம் நீதி தவறி நடக்கவே செய்கின்றன.அதை மறுப்பதற்கில்லை .பெரும்பாலான ஜமாத்துக்கள் பெண்கள் பக்கம் தவறு இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்க படுகிறது .இப்போது தவ்ஹித் ஜமாத்துக்கு வரும் குடும்ப வழக்கில் இரு தரப்பிலும் பெண்களும் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள் பெண்களிடம் கருத்து கேட்டே பிரச்னைகளுக்கு தீர்வு காணுகிறார்கள் .
    தலாக் என்று 3 தடவை மெயிலிலோ தபாலிலோ எழுதி அனுப்பினால் அது தலாக் ஆகாது என்று டிஎன்டிஜே மறுத்து பத்வா கொடுத்து வருகிறது .அது போன்றட வழக்கில் பாதிகக்ப்பட்ட்வர்கள் டிஎன்டிஜே வை அணுகலாம்
    மூன்று தடவை ஒரே சமயத்தில் தலாக் சொன்னால் அது 3தலாக் ஆகாது .அது ஒரு தலாக்கே ஆகும்http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/386/
    குர் ஆன் வசனங்கள் 226 முதல் 232 வரை உள்ளவைகள் .
    http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

    • இப்ராஹிம் அய்யா உங்க டிஎன்டிஜே பெண்களை விசாரித்து நடத்தும் கட்டப் பஞ்சாயத்து இலட்சணம்தான் பொறுக்கி பாசித் மரைக்காயர் விவகாரத்தில் அம்பலப்பட்டுப் போனதே!

      • ஆண்கள் தலைமையில் பெண்களையும் உறுப்பினர்களாக சேர்த்து ஜமாஅத் அமைப்பதை ஏற்றுக் கொள்ளலாம் .பெண்களுக்கென்று தனி ஜமாத்தின் அவசியம் இல்லை .பெண்கள் தங்களுக்குள் உரிமைகளை மீட்க வழக்கு தொடர்நது போராடி வெல்ல வேண்டும் .ஒரே சமயத்தில் முத்தலாக் ]3 முறை தலாக் என்று சொன்னாலும் ஒரு முறையாகவே கருதப்படும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் நபி வழி செய்திகளில் [ஹதிதிலும் ]உள்ளது குர்ஆனும் அவ்வாறு கற்பித்து தரவில்லைஅவ்வாறு இருக்க இனி இது போன்று தபாலிலோ மெயிலோ ,போனிலோ முத்தலாக் சொன்னால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து குர் ஆன் ஹதிது துணையுடன் வெற்றி பெற முடியும் .மலேசியாவில்ம் இவ்வாறு வழக்கு தொடுத்து முத்தலாகை ஒழித்துள்ளார்கள் .

  11. வினவு அய்யா வார்த்தைகளை பலப்படுத்தாதீர்கள் .பொய்யை உண்மையாக்க முயற்சிக்காதீர்கள் .பொறுக்கி பாசித்தாக இருந்தாலும் செருக்கியாக இருந்தாலும் அந்த பஞ்சாயத்தில் தவ்ஹித் ஜமாஅத் தலையிடவில்லை பொருக்கி பாசித்தும் நீக்கப்பட்டுவிட்டார் எனது சொந்த வியாபர சம்பந்தமா 5 நாட்கள் நடந்த விவகாரத்தில் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டும் எதிரி தனக்கு சாதகம் இல்லை என்றதும் கட்ட பஞ்சாயத்துத்தான் என்றார்கள் நீதியை தனது பக்கமே வளைத்து தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கின்ற்றனர் .நீதி வளையவில்லை என்றால் கட்ட பஞ்சாயத்து என்ற கட்டபஞ்சாயத்துத் தனமாக பேசுகின்றனர்

Leave a Reply to குருசாமிமயில்வாகனன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க